Sign in to follow this  
Followers 0
நவீனன்

வெளிநடப்பு செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏ! சட்டசபையில் பரபரப்பு

1 post in this topic

வெளிநடப்பு செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏ! சட்டசபையில் பரபரப்பு

 
 

ஆளுங்கட்சி எம்எல்ஏ-வான தங்கதமிழ்செல்வன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

andi4_19449_11366.jpg

அ.தி.மு.க தற்போது மூன்று அணிகளாக  இயங்கி வருகிறது. இதில் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 32 பேர் டி.டி.வி தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடந்த வாரம் கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து, தங்கதமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தங்கதமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்ததற்கு, தி.மு.க எம்எல்ஏ-க்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அவர் வெளிநடப்பு செய்தததையடுத்து, சட்டசபையில் மேஜையைத் தட்டி தி.மு.க எம்எல்ஏ-க்கள் வரவேற்பு தெரிவித்தனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/92727-thanga-tamil-selvan-walkouts-from-assembly.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0