Jump to content

பூத்துச் சிரிக்கின்றது வறட்சி


Recommended Posts

பூத்துச் சிரிக்கின்றது வறட்சி

 
 
பூத்துச் சிரிக்கின்றது வறட்சி
 

காலமை ஆறு மணிக்குத் தண்ணி வரும். எட்டு மணி வரைக்கும் ஓடும். அதுக்குள்ள இந்த பைப்புக்குரிய அம்பது, அறுவது குடும்பங்களும் தங்களுக்குத் தங்களுக்குத் தண்ணி எடுத்திர வேணும்.

ஆளாளுக்கு நம்பர் படிதான் தண்ணி. ஒண்டிரெண்டு பெரிய குடும்பகாரர், கூட்டுக்குடும்பகாரருக்கு ரெண்டு, நம்பர் இருக்கு. மிச்ச முழுப் பேருக்கும் ஒரு நம்பர்தான்… இண்டைக்கு இரு பத்தஞ்சாம் நம்பர்காரர் வரைக்கும் தண்ணி ஓடிச்சென்டால், நாளைக்கு இருபத்தாறாம் நம்பரிலயிருந்து எடுப்பினம். மழை பெய்ஞ்ச கொஞ்சக் காலத்துக்கு எல்லாரும் எடுக்கிற அளவுக்கு வேகமா ஓடுற தண்ணி, வெயில் காலம் வந்தால் குறையுறது வழமைதான்… ஆனா இந்த முறை என்னடா எண்டால் தண்ணிக்குச் சரியான தட்டுப்பாடாக் கிடக்கு…’’

யாழ்ப்பாணம் – தீவுப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையில் வறட்சி தாண்டவமாடுவது வழமைதான். ஆனாலும் இந்த வருடம் அது கொஞ்சம் அதிகமாகவே அங்கு தலைவிரித்தாடுகின்றது.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து தென்­மேற்­கா­கக் கடல் –– உவர் சூழ்ந்­தி­ ருக்­கும் சிறிய சிறிய தீவு­க­ளுள்­ளன. அவற்­றில் மண்­டை­தீவு, வேல­ணைத் தீவு, புங்­கு­டு­தீவு உள்­ள­டங்­கிய ஒரு தொகு­தி­யும் காரை­ந­க­ரும் மாத்­தி­ரமே யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டு­டன் தரை­வ­ழி­யாக இணைக்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய தீவு­க­ளான நயி­னா­தீவு, நெடுந்­தீவு, அன­லை­தீவு, எழு­வை­தீவு போன்­றன கடல் நீரால் பிரிக்­கப்­பட்­டே­யி­ருக்­கின்­றன. தரைக்­கீழ் நீர் வளத்­தை­யு­டைய யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், இவை கட­லால் சூழப்­பட்ட குறைந்த தரைப் பரப்­புக்­கள் ஆத­லால் இந்­தத் தீவு­க­ளில் இயல்­பா­கவே தரைக்­கீழ் நீர் உவர் கொண்டு காணப்­ப­டும். அதைக் குடிக்­கவோ, குளிக்­கவோ, சமைக்­கவோ வேறு தேவைக்கோ பயன்­ப­டுத்த முடி­யாது. கடல் நீருக்­குச் சற்­றும் சளைக்­கா­மல் அது இருக்­கும்.

மாரி காலங்­க­ளில் ஓர­ள­வா­வது அத் தன்மை குறைந்­தி­ருக்­கும் நீர் நிலை­கள் அதன்­பின்­னர் உவ­ராகி விடு­கின்­றன. உள்­நாட்டு நீர் நிலை­கள் இவ்­வா­றி­ருப்­ப­தால் வரு­டம் முழு­வ­து­மான தமது நீர்த்­தே­வை­யைப் பூர்த்­தி­செய்­வ­தற்கு இவர்­கள் அன்­றா­டம் அல்­லல்­பட்­டுக் கொண்டே இருக்­கின்­றார்­கள். இந்த நிலை­யில் தான் இப்­போது தீவி­ரம் பெற்­றி­ருக்­கும் வறட்­சி­யும் அவர்­க­ளின் வாழ்வை அழித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.

மண்டை தீவு – வேல­ணை­யூ­டான பய­ணம்
கடந்த வாரங்­க­ளில், தற்­போ­தைய வறட்சி பற்­றி­யும், வறட்சி நிவா­ர­ணம் பற்­றி­யு­மான செய்­தி­கள் பல­வும் பத்­தி­ரி­கை­க­ளில் பிர­பல்­ய­மா­கின. அத்­த­கைய செய்­தி­க­ளில் ஒன்று தந்த ஈர்ப்பே அது பற்றி ஆரய்ந்­த­றிய என்­னை­யும் உந்­தி­யது. யாழ்ப்­பாண நக­ரி­லி­ருந்து மேற்­குப் புற­மா­கக் கடலை ஊட­றுத்து அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் காப்­பெற் வீதி­யூ­டா­கத் தீவு­க­ளில் மிகப் பெரிய தீவு என்று அறி­யப்­பட்ட வேல­ணைத் தீவு ஊடா­கப் புங்கு­டு­தீவை அடை­யும் எனது பய­ணம் ஆரம்­ப­மா­யிற்று. வீதி­யின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் கடல் ஆர்ப்­ப­ரித்­துக் கொண்­டி­ருக்க காற்­றைக் கிழித்­த­வாறு எனது மோட்­டார் சைக்­கிள் விரைந்­தது. ஐந்­தாறு கிலோ­மீற்­றர்­கள் வரை சென்­ற­தும் பிர­தான வீதி­யி­லி­ருந்து இடது புற­மா­கக் கிளை வீதி ஒன்று பிரிந்து சென்­றது. அவ்­வி­டத்­தில் குறிக்­கப்­பட்­டி­ருந்­த­படி இன்­னும் ஐந்­தாறு கிலோ மீற்­றர்­க­ளில் மண்­டை­தீவு அமைந்­தி­ருக்­கின்­றது என்று புரிந்­தது. தீவு­க­ளில் யாழ்ப்­பா­ணத்­துக்கு மிக­வும் அண்­மை­யா­க­வுள்ள தீவு அது. இங்கே உள்­ளூர் நீர் நிலை­கள் வற்றி மூச்­சி­ழுத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒன்­றி­ரண்டு டிரக்­ரர்­கள் நீர்தாங்­கிய கொள்­க­லன்­க­ளு­டன் அப்­ப­கு­தி­யில் உருண்டு திரி­கின்­றன. வேலணை – சாட்­டிப் பகு­தி­யி­லுள்ள கிண­று­க­ளில் இருந்­தும், சில வேளை­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்­தும் குடி­நீர் தரு­விக்­கப்­ப­டு­வ­தா­கத் தக­வல்­கள்.

அல்­லல்­ப­டும் அல்­லைப்­பிட்டி
மண்­டை­தீ­வுக்கு அடுத்­த­தாக வேலணை எனும் பெரிய தீவு­டன் ஒட்­டி­ய­தா­கக் காணப்­ப­டு­கின்­றது அல்­லைப்­பிட்டி. அல்­லைப்­பிட்­டியை அண்­மித்­தி­ருக்­கும் மண்­கும்­பான் மற்­றும் சாட்­டிப் பகு­தி­க­ளில் மாத்­தி­ரமே தீவு­க­ளில் நன்­னீர் வளம் காணப்­ப­டு­கின்­றது. அந்த வளம் அரு­கி­லி­ருந்­தும் அல்­லைப்­பிட்டி வாழ் மக்­க­ளுக்கு அது எட்­டு­வ­தா­யில்லை. குழாய் நீர் வச­தி­கள் இல்லை. இருக்­கும் கிண­று­க­ளும் வற்­றிக் கொண்­டி­ருக்­கின்­றன. குடிக்­கத் தண்­ணீர் இன்­றித் தவிக்­கின்­றன குடி­கள். அத்­து­டன் முருங்கை உட்­பட சில மரக்­க­றிப் பயிர்­க­ளின் விளை நில­மா­க­வுள்ள அங்கு இப்­போது தரிசு பூக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

வீதிக்கு வந்த
வேல­ணைப் பெண்­கள்
அல்­லைப்­பிட்­டி­யை­யும் தாண்டி வேல­ணைப் பகு­திக்­குச் சென்­றா­யிற்று. வீதி ஓரங்­க­ளில், இடைப்­பட்ட சில தூரங்­க­ளில் குழாய் நீர் எடுப்­ப­தற்­கா­கக் குவிந்து நிற்­கின்­ற­னர் பெண்­கள். அதி­கா­லைத் தூக்­கம் கலைந்த முகங்­க­ளு­டன். அவர்­க­ளி­டம் ஒரு அவ­ச­ர­மி­ருந்­தது. ஒரு­வ­ரு­டன் பேசி­ய­தில் அது பற்­றிய தெளி­வும் பிறந்­தது.

‘‘தம்பி எங்­க­ளுக்கு ஆறு மணிக்­குத் தண்ணி வருது. எட்டு மணி வரைக்­கும் ஓடும். அந்த நேரத்­துக்க நாங்­கள் கால­மைச் சாப்­பாடு செய்­திர வேணும், பிள்­ளை­ய­ளைப் பள்­ளிக்­கு­டத்­துக்கு வெளிக்­கி­டுத்த வேணும், கூலி வேலைக்­குப்­போக வீட்­டுக்­கா­ர­ரும் அந்த நேரம் வெளிக்­கி­டு­வார். சாப்­பாடு செய்­யாட்­டி­யும் அது­க­ளுக்­குத் தண்ணி வென்­னி­யா­வது வைச்­சுக்­கு­டுக்க வேணாமா…? அந்த நேரம் பாத்­துத் தண்­ணி­யும் எடுக்க வர­வே­ணும்…. எங்­கட பகுதி மட்­டு­மில்ல எங்­க­ளுக்கு அங்­கால கண்­ண­பு­ரம், அம்­பிகை நகர் எண்­டும் இடங்­க­ளி­ருக்கு. அவைக்கு மத்­தி­யா­னம்… பன்­ரெண்டு மணி… அப்­பி­டித்­தான் தண்ணி. வேலைக்­குப் போனவை மத்­தி­யா­னச் சாப்­பாட்­டுக்கு வீட்­டுக்கு வரக்­கி­டை­யில தண்ணி எடுத்து முடிச்சு அவை சமைச்­சிர வேணும். இப்ப வர வரத் தண்­ணி­யும் வேகமா ஓடு­ற­தில்ல. அது ஓடுற வேகத்­துக்­குப் பாத்­துக் கொண்டு றோட்­டுக் கரை­யில காவல் கிடக்க வேண்­டி­யி­ருக்கு. இஞ்ச விவ­சா­யத்­துக்கோ, கட்­டி­டங்­கட்­டவோ, கால் நடை­ய­ளுக்கோ நாங்க இந்­தத் தண்­ணி­யப் பாவிக்­கி­றது இல்ல. குடிக்­கி­ற­துக்கு மட்­டும்­தான்’’
மரக்­க­றி­யும் கீரை வகை ஒன்­றும் வாங்­கிக் கொண்டு குடத்­துக்­குள் குழாய் நீர் பிடிக்க வந்­தி­ருந்த குமு­தம் அக்கா இவ்­வா­றா­கச் சொல்­லிக் கொண்டு வீடு நோக்கி விரை­கின்­றார்.

வறட்­சி­யின் உச்­சத்­தில் புங்­கு­டு­தீவு
வேல­ணை­யை­யும் தாண்­டிச் சென்­ற­தில் கடலை ஊட­றுத்து மறு­ப­டி­யும் நீண்ட வீதி. ஆனால் அது காபெற் வீதி அல்ல. மலை­யும் மடு­வும் போன்ற குன்­றும் குழி­யு­மான வீதி. வேகத்­தைத் தணித்­த­தில் ஊர்ந்து கொண்­டி­ருந்­தது மோட்­டார் சைக்­கிள்…

நீர் நிரப்­பி­ய­படி அடுத்­த­டுத்து வந்­து­கொண்­டி­ருக்­கும் டிரக்­ரர்­கள் சில­வும் என்­னைத் தாண்­டிச் சென்­றன வேக­மாக. எதிர்ப்­பு­ற­மி­ருந்து வெறு­மை­யான கலன்­க­ளு­ட­னும் அவற்­றில் சில இன்­னும் வேக­மாக. இந்­தக் கர­டு­மு­ர­டான வீதி­யில் எவ்­வா­று­தான் இவர்­க­ளால் பய­ணிக்க முடி­கின்­றதோ…?

புங்­கு­டு­தீவை அடைந்­தா­யிற்று. அடிக்­கும் காற்­றில் பயங்­கர வெம்மை. தரை­யெங்­கும் வெயி­லின் ஆல­கால ஆட்சி. ஒவ்­வொரு வீட்­டுக்­கும் முன்­பு­றத்­தில் நீர்த்­தாங்­கி­கள் காத்­துக்­கி­டக்­கின்­றன. வீதி ஓரங்­க­ளில் நீர் ஏந்­திக் கொள்­ளும் கலன்­க­ளு­டன் மக்­க­ளும் காத்து நிற்­கின்­ற­னர். ஓகோ… இதற்கு முதல் நான் கண்­டு­வந்த வேலணை போன்று இங்கு குழாய் நீர் வசதி இல்­லைப்­போ­லும்…! சரி­சரிதான். அத்­து­டன் தரைக்­கீழ் உவர்­நீ­ரும் மூச்­ச­டங்­கிக் கிடக்­கின்­றது. பிர­தேச சபை, சர்­வோ­த­யம், தனி­யார் எனப் பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளும் அங்­குள்ள மக்­க­ளுக்­குத் தண்­ணீர் தரு­வ­தில் அல்­லோல கல்­லோ­லப் படு­கின்­றார்­கள். அத்­தனை பேர்­க­ளின் டிரக்­ரர்­க­ளும் பத­றி­ய­டித்து ஓடித்­தி­ரி­கின்­றன.

ஒழுங்­கைக்­குள் ஒரு பெண்­மணி. இரண்டு பிளாஸ்­ரிக் கலன்­களை வீதிக்கு அப்­பால் தெரி­யும் வண்­ணம் வைத்­த­படி காத்­தி­ருக்­கின்­றார்…

‘‘நான் யாழ்ப்­பா­ணம் வெளிக்­கிட்டு நிற்­கி­றன் தம்பி. தண்ணி டிரக்ரரை இன்னும் காணவில்லை. இஞ்ச ஒரு லீற்­றர் தண்ணி ரெண்­டு­ருபா அம்­பே­சம். இந்த மஞ்­சள் பைவ­ருக்க(தான் வைத்­தி­ருக்­கும் கலன்­க­ளைக் காட்­டு­கி­றார்) அடிக்­கி­ற­துக்கு 20 ரூபா­யும் இந்த நீல பைவ­ருக்க அடிக்­கி­ற­துக்கு 60 ரூபா­யும் எடுப்­பி­னம் ஒவ்­வொரு நாளும் இந்­த­ளவு தண்ணி எங்­கட குடும்­பத்­துக்­குக் குடிக்­கி­ற­துக்­குத் தேவை. ஆயி­ரம் லீற்­றர் கான் வைச்­சி­ருக்­கி­ற­வ­யும் இருக்­கி­னம். அதுக்க அடிக்­கி­ற­துக்கு அறு­நூறு ரூபா எடுக்­கி­னம். உள்­ளூ­ருக்க இருக்­கிற கோவில் கிணத்­துத் தண்­ணி­யள் ஓர­ள­வுக்­குப் பரு­வா­யில்லை. குளிக்­கக் கழு­வப் பாவிக்­க­லாம். உவர் எண்­டா­லும் இப்ப அது­க­ளும் வத்­திக்­கி­டக்கு. உவர்த் தண்­ணீல குளிச்­சா­லும் உடுப்­புத் தோய்ச்­சா­லும் கடை­சியா இந்த நல்ல தண்­ணீல கொஞ்­சம் எடுத்­துக் கழு­விக் கொள்­ளு­வம். தண்­ணிக்­குத் தவம் கிடக்­கி­றது எண்­டது வரு­சம் முழுக்க எங்­க­ளுக்கு வேலை­தான். அன்­றா­டச் சாப்­பாட்­டுக்­குக் காசி­ருக்கோ, இல்­லையோ ஒவ்­வொரு நாளும் தண்­ணிக்­குக் காசு வைச்­சி­ருக்க வேணும். காசி­ருந்­தா­லும், இந்த முறை தண்­ணிக்­குத் தட்­டுப்­பா­டாய்க் கிடக்­குது’’ ஆதங்­கப்­பட்­டுக் கொள்­கின்­றார் அவர். இவ்­வி­டம் புங்­கு­டு­தீவு பத்­தாம் வட்­டா­ர­மாக இருக்க வேண்­டும்…!

அதை­யும் தாண்­டி­னால் நிலமை ஏதோ…?
புங்­கு­டு­தீவு நீளம் சென்­ற­தில் குறி­காட்­டு­வான் துறை வந்­த­டைந்­தது. அது­வ­ரைக்­கும் அவ்­வூர் மக்­க­ளும் கால்­ந­டை­க­ளும் பயிர்­க­ளும் பட்டு நின்ற பரி­த­விப்­புக்­களை மாத்­தி­ரமே பார்த்­துச் செல்ல முடிந்­தது. இந்த வறட்சி இவ்­வாறே நீண்டு சென்­றால், இவை தாண்டி அமைந்­தி­ருக்­கும் நயி­னா­தீவு, நெடுந்­தீவு, அன­லை­தீவு, எழுவை தீவு போன்­ற­வற்­றின் நிலை எவ்வாறா­க­வி­ருக்­குமோ…? அவை­கூட நன்­னீ­ரற்ற நிலங்­கள்­தானே? இவ்­வாறு நீரின்­றித் தவிக்­கும் மக்­க­ளின் நிரந்­த­ர­மான தாகத்­துக்கு என்­ன­தான் தீர்வு…? இல்­லை­யேல் இது தொடர்­க­தை­யாக நீளத்­தான் போகின்­றதா…? பதில் தரு வதற்குப்பொறுப்­பா­ளி­கள் இனி­யா­வது விழிப்­பார்­களா…?

http://uthayandaily.com/story/7206.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.