Sign in to follow this  
நவீனன்

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி

Recommended Posts

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி

 
 

macron

பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். 

அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளாதாரத் திட்டங்கள், பிரிட்டன் உறவுக் கொள்கைகள் ஆகியவை பாராளுமன்றத்தில் எளிதாக நிறைவேறும் எனத் தெரிகிறது.

http://www.vikatan.com/news/world/92716-macrons-party-wins-clear-parliamentary-majority.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this