நவீனன் 9,243 Report post Posted June 18, 2017 அரசின் செயற்பாட்டுத் தாமதத்தால் அரசுக்கே ஆபத்து இன்றைய நல்லாட்சி அரசு பதவியேற்ற ஆரம்ப காலகட்டத்தில், தேர்தல் வேளையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுக்க முயன்றதை அவதானிக்க முடிந்தது. பொதுமக்கள் தமது எத்தகைய கருத்தை வெளிப்படுத்தவும், அச்சம் எதுவுமின்றி அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கவும் வாய்ப்புக்கிட்டியதோடு அத்தகைய சுதந்திரம் தற்போதும் தொடர்கிறது என்பது முக்கி யத்துவம் மிக்கதாகும். அத்தகைய பின்னணியில் கருத்து வௌிப்படுத்தும் சுதந்திர கலாசாரமொன்று நாட்டில் உருவானது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் ஆட்சியைக் கைப்பற்றுமுன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பலவும் ஆட்சியைப் பொறுப்பேற்ற அரசால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அல்லது காலம் தாழ்த்தப்படுவதாகவும் கொள்ளலாம். மாதுளுவேவ சோபித தேரரது, நியாயமான சமூதாயத்தை உருவாக்குவதற்கான, தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழித்தல், மற்றும் தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தல் என்ற கொள்கைத் திட்டங்கள் முன்னிலைப்ப டுத்தப்பட்டன. புதிய அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சரை நியமிப்பது மட்டுமே நாட்டு மக்களது விருப்பமாக அமைந்திருக்கவில்ல. அவர்கள் நிர்வாக நடைமுறையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர். சில விடயங்களில்முன்னேற்றம் ஏற்படாது இவற்றில் ஒரு சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டதென்னமோ உண்மைதான், அரசமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அரச தலைவருக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை இதற்குப் பொருத்தமானதொரு உதாரணமாகும். நல்லாட்சி அரசின் இரண்டரை ஆண்டுகள் கால நிர்வாகத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமை மற்றும் தகவல் அறியும் சட்டம் நிறைவேற்றப்பட்டமை சிறப்பான செயற்பாடுகளேயாயினும், நிறைவேற்று அரசதலைவர் பதவியை ஒழித்துவிடும் செயற்பாட்டில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஜனநாயக அடிப்படையில் அரசமைப்பில் மாற்றம் ஏற்படுத்துதல் என்பது இலேசானதொரு விடயமல்ல. இதற்குப் பொது மக்களது அபிப்பிராயம் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் ஏதோவொரு வகையில் பொதுமக்களது அபிப்பிராயம் பெறப்பட்டதாயினும் இவற்றின் முடிவு தாமதிக்கப்பட்டது. எனவே அத்தகைய செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டாக வேண்டும். இந்த ஆண்டின் இறுதிக்குள் அது முன்னெடுக்கப்ப டாவிட்டால், பொது மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. ஏனெனில் புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதில் பொது மக்களது ஆதரவும் அவசியமாகிறது. பொது வாக்கெடுப்பொன்றுஅவசியம் அந்த வகையில் பொது மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டாக வேண்டும். அவ்வேளை பொது மக்கள் தமது ஏனைய பிரச்சினைக ளுக்கும் இந்த மாற்றத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா என அறிய ஆவல் கொள்வர் .கால தாமதங்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பங்களுக்கு வழி சமைப்பது வழமையானதே. பொது வாக்கெடுப்பு விடயத்திலும் இத்தகைய குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்படுமானால் , அதிகார மாற்றத்தால் எதிர்பார்க்கப்பட்ட பயன் ஏற்படப் போவதில்லை எனவே இப்போதாவது அரசு இது விடயத்தில் கவனம் செலுத்தி எதிர்ப்பார்க்கப்பட்ட மாற்றத்தை எற்படுத்த வேண்டியது அவசியம். நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழிக்குமாறு மகிந்தவிடம் கூட முன்னர் கோரப்பட்டது. பின்னர் ஐ.தே.கட்சியும் சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால தரப்பும் அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கியிருந்தன. மைத்திரிபாலவின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கொண்ட அமைச்சர்களும் அரசில் இருக்கின்றனர். அவர்கள் நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழுப்பதை எதிர்க்கின்றனர். அவர்களது எண்ணத்துக்கு இயைந்து மைத்திரிபால செயற்பட்டால் அது அவரது அரசியல் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இது விடயத்தில் தாம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியே ஆவேன் என அரச தலைவர் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். மைத்திரிபால அதில் உறுதியாக இருப்பினும், அவர் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவுக்கமை யவே செயற்பட்டாக வேண்டுமென அவருக்கு எதிரான அந்த அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னரெல்லாம் மகிந்தவின்முடிவே முடிந்த முடிவு முன்னரெல்லாம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவை மகிந்த கணக்கில் எடுக்காது மகிந்தவின் முடிவையே அந்தச் செயற்குழு ஏற்றுச் செயற்பட்டது. எது எவ்வாறாயினும் நிறைவேற்று அரச தலைவர் பதவியை ஒழித்து விடுவதாக மைத்திரிபால நாட்டு மக்களுக்கு உறுதிவழங்கியுள்ளதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது. அதனை எவராலும் புறந்தள்ளி விட இயலாதென்பதால் குறித்த அந்த செயற்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டாக வேண்டியுள்ளது. அரசின் எந்தச் செயற்பாட்டையும் சரி எதிர்த்து விமர்சிக்கும் கூட்டு எதிரணித் தரப்புக்கு உரிய பதிலளிக்கவல்ல வலுவான கட்டமைப்பொன்றை அரசு கொண்டிருக்கவில்லை. அரசின் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தும் யோசனை குறித்த கூட்டு எதிரணியின் விமர்சனங்க ளுக்குப் பதில் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக இல்லை. போர் காரணமாக இனங்கள் மத்தியிலான நல்லிணக்கம் அற்றுப்போய் இனங்கள் மத்தியில் சந்தேகம் விரிவு கண்டுள்ளது. அதனை வாய்ப்பாகக் கருதி கூட்டு எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் காலைவாரிவிட முயன்று வருகின்றனர். இருந்தபோதிலும் நாட்டின் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அரசு அக்கறை காட்டிச் செயற்பட்டு வருகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பாக இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படாத போதிலும் , அது குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை யும் சந்தேகத்தையும் தூண்டிவிட சில தரப்பினர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். புதிய அரசமைப்புச் சட்ட மூலத்தில், பௌத்த மதத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை எந்த விதத்திலும் குறைக்கப்படவில்லை என அரசு கூறி வரும் நிலையில், அதனை வைத்து சிங்கள மக்களுக்கு தவறான கருத்தை வழங்க கூட்டு எதிரணியினர் முயன்று வருகின்றனர். அதனை அரசு நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த முனைவதாகத் தோன்றவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர்பானமுக்கிய கட்டத்தில் நாம் அதிகாரப் பகிர்வு தொடர்பாக முக்கிய கட்டத்தை நாம் அடைந்திருக்கிறோம். முழு நாடுமே ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான தீர்வொன்றே அவசியமென எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு பெருமளவில் மாறுபட்ட ஒன்றாகும். புதிய அரசமைப்பு வரைவும் பெருமளவில் இத்தகைய நிலைப்பாட்டை நெருங்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய நிலைப்பாட்டைச் சாதகமானதொன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழர் தரப்புக்குச் சம்பந்தனின் தலைமைத்துவம் அமைந்திருக்கும்வரை புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியைக் குறுக்கீடின்றி முன்னெடுக்க இயலும். சம்பந்தனது தலைமைத்துவம் இல்லாது போகும் நிலையில் நிலைமை எவ்வாறு அமையும் என இப்போது கணிப்பிட இயலாது. தமிழர் தரப்பிலும் கடும் கோட்பாட்டுத் தரப்பினர்கள் இருப்பதே இதற்குக் காரணம். ஆதலால் புதிய அரசமைப்புக் குறித்த செயற்பாடுகள் முடிந்தவரை துரிதப்படுத்தப்படல் வேண்டும். இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்குதலும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகிறது. முஸ்லீம் இனத்தவர்களக்கு எதிரான செயற்பாடுகள் 2012 ஆம் ஆண்டளவில் தீவிரம் கண்டன. பொதுபலசேனா, ராவணபலய போன்ற அமைப்புக்கள் மீது இது விடயத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய முஸ்லீம் விரோதப் போக்குக் குறித்து மகிந்த அரசு அக்கறை காட்டிச் செயற்படவில்லை. மாறாக இத்தகைய போக்கை வளர்ப்பதற்கு மகிந்த அரசு தூண்டுதல் கொடுத்து வந்ததாகவும் நம்பப்பட்டது. இதனாலேயே நாட்டின் முஸ்லிம் இனத்தவர்கள் அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபாலவுக்கு ஆதரவளித்தனர். மேற்குறிப்பிட்ட இனவாதத் தரப்புக்களது செயற்பாடுகள் காரணமாகவே தாம் முஸ்லீம்களது ஆதரவை இழக்க நேர்ந்ததென்பதை மகிந்த காலந்தாழ்த்தி உணர்ந்து கொண்டார். நல்லாட்சி அரசு பதவி ஏற்ற பின்னர் இந்த நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டபோதிலும், அண்மைக்காலமாக குறித்த, இனவாதத் தரப்புக்கள் மீண்டும் முஸ்லீம் மக்களுக்கெதிரான நிலைப்பாட்டை தீவிரமாக்கியுள்ளதை காணமுடிகிறது. புதிது புதிதாக இனவாதக் குழுக்கள் தற்போதைய அரசின் மென்போக்கை வாய்ப்பாகக் கொண்டு குறித்த இனவாதத் தரப்புக்களுடன் மேலும் சில இனவதத்தரப்புக்கள் உருவாகியுள்ளன. இனக்குழுமமொன்றுக்குப் பிரச்சினை ஏதாவது இருக்குமானால், அது குறித்து அரசுடன் தொடர்பாடல் மேற்கொண்டு, பேச்சுக்கள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதே ஜனநாயக நடைமுறை. ஆனால் வீதியில் இறங்கி மற்றொரு இனத்தவர்களை நிந்தித்து, மதத் தலைவர்களைக் கேலிசெய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. இத்தகைய போக்கு இன நல்லிணக்க முயற்சிக்குப் பாதகமானதொன்று. அந்த வகையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தையும் அச்சத்தையும் போக்க அரசு நடவடிக்க மேற்கொள்ளல் அவசியமாகும். அரசின் அசமந்தமும் தாமதப் போக்கும் புதுப்புதுப் பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும். அது எதிர்காலத்து அரசின் இருப்புக்கும் பாதகம் ஏற்படுத்தவல்லது. எனவே இவற்றுக்கெல்லாம் விரைவான நடவடிக்கை அவசியமாகும். எனவே நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை மாற்றியமைத்து, புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பாக பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ள அரசு விரைந்து செயற்பட்டாக வேண்டும். இதில் தாம தமோ, தயக்கமோ இருத்தலாகாது. உண்மையில் இன்று சில அமைப்புக்கள் இதுவரை இல்லாத பிரச்சி னையை அல்லது பிரச்சினைகளைப் புதிதாக உருவாக்க முயல்கின்றன. இது இனவாத அரசியல் செயற்பாட்டின் விளைவாகும். இதனால் கடைசியில் நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகிவிடும் இருப்பு நலிவு நிலைககாண நேரிடும். அந்த வகையில் இன்று அரசுக்கு எதிரான பல தரப்புக்களும் அரசின் காலைவாரிவிடவே முனைகின்றன. அதேவேளை அரசின் செயற்பாடுகளில் நிலவும் தாமதம் கூட்டு எதிரணியின் முயற்சிகளுக்கு எழுச்சியை ஏற்படுத்தக் காரணமாகின்றது என்பது கவலை தருமொன்று. சிங்கள மூலம் – வழக்கறிஞர் ஜாவிட் யூசுப்தமிழில் – வீ .எஸ் .ரீ http://uthayandaily.com/story/7203.html Share this post Link to post Share on other sites