Jump to content

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!


Recommended Posts

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

 
 

வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்­கும் சபை­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான குழப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி குழம்­பிய குட்­டை­யில் மீன்­பி­டிப்­ப­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கடும் முயற்சி செய்­வது தெளி­வா­கவே தெரி­கின்­றது.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஊடா­கச் செய்ய முயன்று முடி­யா­மல்­போ­னதை இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நிறை­வேற்­றி­வி­ட­லாம் என்று தலை­கீ­ழாக நிற்­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லங்­கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் அவர்­களே பெரு­ம­ள­வில் இருந்­தார்­கள். அதற்­கான கார­ணத்தை முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் நேர­டி­யா­கவே நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தமது அணிக்­குத் தலைமை தாங்க வர­வேண்­டும் என்று அவர் அழைப்பு விடுத்­தி­ருந்­தார். முத­ல­மைச்­சரை ஆத­ரித்து அவர்­கள் நடத்­தும் போராட்­டங்­க­ளின் பின்­னா­லும், எழுப்­பும் முழக்­கங்­க­ளின் பின்­னா­லும் அவ­ரைத் தமது பக்­கம் இழுத்து, எப்­ப­டி­யா­வது ஒரு நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தித்­து­ வத்­தைப் பெற்­று­வி­டு­வதே அவர்­க­ளின் ஆசை, அவா எல்­லாமே.

அதற்­கா­கவே முத­ல­மைச்­ச­ருக்­கும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடையே எந்­த­வோர் இணக்­க­மும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தில் கவ­ன­மாக இருக்­கி­றார்­கள். அதற்­கான கருத்­துக்­க­ளைத் தெரிந்­தெ­டுத்து வெளிப்­ப­டுத்­து­வ­தில் மும்­மு­ர­மாக இருக்­கி­றார்­கள். ஆனால், இந்த அவ­ச­ரத்­தில் அவர்­கள் சில தர்க்க நியா­யங்­களை மறந்­து­வி­டு­கி­றார்­கள் என்­ப­து­தான் வேடிக்கை.

நேற்­றைய தினம் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், ‘‘திரு­டர்­க­ளின் குகை­யா­கத் தமிழ் அர­சுக் கட்சி மாறி­விட்­டது‘‘ என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார். வடக்கு மாகாண சபை­யில் திரு­டர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­காக தமிழ் அர­சுக் கட்சி செயற்­பட்டு வரு­கின்­றது என்­றும் குற்­றஞ்­சாட்­டி­ னார். அதே­ச­ம­யம், தான் அங்­கம் வகிக்­கும் தமிழ் மக்­கள் பேர­வை­யில் சிலர் நிதி மோச­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்று உள்­ளக விசா­ர­ணை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­போது பேரவை ஒரு திரு­டர்­க­ளின் குகை என்று அவர் கூற­வில்லை. ஏன், அப்­ப­டி­யொரு திருட்டு இடம்­பெற்­றது என்­ப­தைக்­கூட அவர்­கள் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்­க­வே­யில்லை. மூடி மறைத்து உண்­மை­யைப் புதைத்­து­விட்­டார்­கள்.

ஆக, அவர்­க­ளு­டைய உண்­மை­யான நோக்­கம் அர­சி­ய­லுக்­காக விமர்­ச­னம் செய்­வ­தும் குட்­டையை மேலும் குழப்பி விக்­னேஸ்­வ­ரன் என்­கிற மீனைப் பிடிக்க முடி­யுமா என்று பார்ப்­ப­துமே தவிர, மக்­கள் மீதான அக்­க­றை­யல்ல.
அது­போன்றே விக்­னேஸ்­வ­ர­னைத் தோற்­க­டிப்­ப­தற்­காக தமிழ் அர­சுக் கட்சி அர­சு­ட­னும், ஈபி­டி­பி­யு­ட­னும், தமிழ் மக்­க­ளைக் காட்­டிக்­கொ­டு்த்த தரப்­பு­க­ளு­ட­னும் சேர்ந்­து­கொண்­டுள்­ள­தா­கக் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

இப்­ப­டித்­தான் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போது முன்­னாள் ஒட்­டுக் குழுக்­க­ளும், தமிழ் மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்த அமைப்­பு­க­ளு­மான ஈபி­ஆர்­எல்­எவ், புளொட், ரெலோ போன்­ற­வற்­று­டன் தமிழ் அர­சுக் கட்சி வைத்­துக்­கொண்­டுள்ள கூட்­டுத்­தான் கூட்­ட­மைப்பு என்று மேடை மேடை­யாக முழங்­கி­னார்­கள். ஆனால், தேர்­த­லில் தோற்ற கையோடு அதே புளொட், ஈபி­ஆர்­எல்­எவ் என்­ப­வற்­று­டன் கைகோர்த்­துக்­கொண்டு தமிழ் மக்­கள் பேர­வையை உரு­வாக்­கி­னார்­கள்.

தாங்­கள் அணி சேர்ந்­த­போது ,முன்­னாள் ஒட்­டுக் குழுக்­க­ளா­க­ வும் தமிழ் மக்­க­ளுக்­குத் துரோ­கம் செய்த அமைப்­பு­க­ளா­க­வும் புளொட், ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பு­கள் அவர்­க­ளுக்­குத் தெரி­ய­ வில்லை. இப்­போது மீண்­டும் அதே­போன்று ஈபி­டிபி, அரசு, மக்­க­ளைக் காட்­டிக்­கொ­டுத்த தரப்­பு­க­ளு­டன் தமிழ் அர­சுக் கட்சி கூட்­டுச் சேர்ந்­து­விட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட்­டு­ கி­றார்­கள்.

அதே­நே­ரத்­தில் முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் தாம் ஆத­ரவு என்ற ரீதி­யில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் (கொழும்பு அர­சின் முக்­கிய பங்­காளி) யாழ். மாவட்ட அமைப்­பா­ளர் இ.அங்­க­ஜன் விடுத்த அறிக்­கை­யைப் பற்றி அவர் மூச்­சும் விட­வில்லை. அரை­வா­சிக் கொழும்பு அர­சான சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ரவு தனக்­குத் தேவை­யில்லை என்று முத­ல­மைச்­சர் அறிக்­கை­யே­தும் விட்டு அதனை நிரா­க­ரிக்­கா­தது குறித்­தும் அவர் அக்­க­றை­கொள்­ள­வில்லை.

ஆக, தத்­தம் கட்சி நலன்­க­ளுக்­காக , சுய நலன்­க­ளுக்­காக – ஏதா­வது விமர்­ச­னங்­களை வைத்து ஆதா­யம் அடை­வ­து­தான் இவர்­க­ளின் நோக்­கம். ‘‘அர­சி­ய­லில் இதெல்­லாம் சாதா­ர­ண­மப்பா‘‘ என்­பது மக்­க­ளுக்­கும் புரி­யா­தது அல்­லவே!

http://uthayandaily.com/story/7200.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.