Jump to content

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்

Recommended Posts

நாம் சில குறிபிட்ட பொருட்களின்  தீவிர வாடிக்கையாளர்களாக (நுகர்வோர்களாக) இருப்போம், அப்பொருட்களின் பயண் எம்மை மிகவும் கவர்ந்து இருக்கும், அவை உணவுப் பொருட்களாகவோ , நொறுக்குத்தீனிகளாகவோ, வீட்டுப் பாவனைப் பொருட்களாகவோ .... எவையாகவும் இருக்கலாம் அவற்றினை பகிர்வதன் மூலம் நாமும் சில நல்ல பொருட்களை மற்றவர்கள் மூலம் அறிந்து அதன் பலனை நாமும் அனுபவிக்கலாம், நாம் பெற்ற பயனை மற்றவர்களும் பெறச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

Lindt Hauchdünn Milch & Orange

Hauchdünne Täfelchen Orange 125g

எனக்கு சுவிசில் மிகவும் பிடித்த சொக்கிலேட்டில் இதுவும் ஒன்று , மிகவும் மெல்லியதாக இருக்கும் ஒரு இரண்டு தாள்களின் மொத்தம் தான் இருக்கும், அத்துடன் அதன் தோடம்பழ சுவை மிகவும் இனிமையாக இருக்கும் , வாயில் போட்டவுடன் அதன் மிக மெல்லிய தண்மை காரணமாக நாவில் உடணடியாகக் கரைந்து  தோடம்பழ சுவை + சொக்கிலேற் சுவை இரண்டையும் ஒருசேரக் கலந்து ஒரு ரம்மியமான சுவையைத்தரும். 
ஒரு முறை கனடா உறவினர்களுக்கு இதனை கொடுத்து அனுப்பியிருந்தேன்  அவர்கள் ஒவ்வொரு முறையும்  இந்த சொக்கிலேட்டினைத் தான் கேட்பார்கள்  அதனாலோ என்னவோ இப்போது இது எனக்கு இன்னும் பிடித்து போனது

விலை  8.50 (180g) ; கடை  coop (Swiss)

Denner  இல் இடையிடையே 3 பக்கற் 17.00 chf இற்கு போடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில், விமான பயண டிக்கெட்கள்

ரயில் பயண டிக்கெட்கள், பிரித்தானியாவில் மிகவும் அதிகம்.

அதேவேளை இந்த பயண பாதைகள், தொடர்பில், சரியான கணக்கீடுகள், முறைமைகள், ரயில் நிர்வாகத்தினால் செய்ய முடியாமல் இருப்பதால், விடயம் தெரிந்தவர்களுக்கு சட்ட  பூர்வமாக, மலிவாக டிக்கெட் எடுக்க தெரிந்திருக்கும்.

உதாரணமாக வடமேல் லண்டனில் இருந்து காட்விக் விமான நிலையம் போக, மத்திய லண்டன் விக்டோரியா நிலையம் போய் ( £7) காட்விக் எக்ஸ்பிரஸ் பிடித்தால் (£20)..... குறைந்தது £27... ஒரு வழி மட்டும். அதேயே, ஹாரோ வீல்ட்ஸ்டான் நிலையத்தில் இருந்து மத்திய லண்டன் போகாமல் நேரே காட்விக் விமான நிலையம் போக £12 மட்டுமே.

முக்கியமாக, லண்டனில் இருந்து வேல்ஸ் தலைநகர் கார்டிப்ப் செல்ல உதாரணமாக £120. அதேயே நடுவில் இருக்கும் பிரிஸ்டல் நகரத்துக்கு ஒரு டிக்கெட், பிரிஸ்டல் இருந்து கார்டிப்ப் என பிரித்து வாங்கினால் £70 ஆகும். ஒரே ரயில்.... தொடர்ந்து பயணிக்க முடியும்.... 

இது எப்படி சாத்தியம் என பார்த்தால், அவர்களது 'very complicated pricing method' என்கிறார்கள். அதை சரி செய்தால் வேறு எங்கோ உதைக்குமாம்.

இதை புரிந்து டபக்கெண்டு டிக்கெட் வாங்காமல், நன்றாக மேய்ந்து வாங்குங்கள்.

அதே போல் தான் கனடா - கொழும்பு டிக்கெட். ஒரு சராசரி குடும்பம் இலங்கை போக, பயண சீட்டு மட்டும் $10,000 என்கிறார்கள்.

ஆனாலும், Transat போன்ற விமான சேவைகள் மிக மலிவாக பயணிகளை பிரித்தானியாவின், கிளாஸ்கோ போன்ற நகரங்களுக்கு கொண்டு வரும். அங்கிருந்து esayjet, ryanair போன்ற மலிவு சேவைகளில், லண்டனுக்கோ, அல்லது ஐரோப்பிய விமான நிலையங்களுக்கு போய், மலிவாக இலங்கை கொண்டு போகும் விமானத்தில் பயணித்து, சேமிக்க முடியும். 

இந்த வகை மலிவு சேவை விமானங்கள், ஒரு வருடம் முன்பே பதிய முடியும். மிக குறைவான கடடணங்கள், (£5 தொடக்கம்). ஆகவே நன்கு திட்டமிட்டால் சேமிக்க முடியும்.

நண்பர் குடும்பத்துடன், கிளாஸ்க்கோவில் இருந்து டொரோண்டோ போனதால் £1200 சேமித்து, அதை அங்கே நன்கு செலவு செய்ய பயன் படுத்தியதாக சொன்னார்.. லண்டனில் இருந்து தான் போக வேணும், இங்க ஏறினா அங்க தான் இறங்க வேணும் என்று அடம் பிடியாமல் பார்த்தால், சேமிக்க முடியும்.

முக்கியமாக, நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்களோ, அதில் ஒரு பகுதி உங்கள் travel ஏஜென்ட் கமிசன் ஆக கிடைப்பதால், அவர் இந்த வழிகளை சொல்லித்தர மாட்டார். 

நாம் தான் வலையில் புகுந்து விளையாட வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் கோடைகால விடுமுறைக்கு கொழும்புக்கு airlanka 950 பவுண்ட் ஹீத்துரோ வில் இருந்து போய்திரும்புதல் நம்மாட்களும் அடைந்தால் மகாதேவன் கணக்காய் airlankaavai புக் பண்ணின்னம்.

பக்கத்து கெட் வீக் லிருந்து ஒருமணிநேரம் இடைத்தங்கல் கொழும்பு ரிக்கெட் விலை 550 பவுண்ட் மட்டுமே கட்டார் விமானம் போய்திரும்புதல் விலை .

48 minutes ago, Nathamuni said:

முக்கியமாக, நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்களோ, அதில் ஒரு பகுதி உங்கள் travel ஏஜென்ட் கமிசன் ஆக கிடைப்பதால், அவர் இந்த வழிகளை சொல்லித்தர மாட்டார். 

ஆங்கிலம் பெரிதாக தெரியாத  சிங்களம் மட்டும் தெரிந்த ஏஜென்ட்கள் airlankaaவை வலுக்கட்டாயமாக தலையில் கட்டும் சம்பவங்களும் நிறைய இங்கு கூட .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

போன வருடம் கோடைகால விடுமுறைக்கு கொழும்புக்கு airlanka 950 பவுண்ட் ஹீத்துரோ வில் இருந்து போய்திரும்புதல் நம்மாட்களும் அடைந்தால் மகாதேவன் கணக்காய் airlankaavai புக் பண்ணின்னம்.

பக்கத்து கெட் வீக் லிருந்து ஒருமணிநேரம் இடைத்தங்கல் கொழும்பு ரிக்கெட் விலை 550 பவுண்ட் மட்டுமே கட்டார் விமானம் போய்திரும்புதல் விலை .

ஆங்கிலம் பெரிதாக தெரியாத  சிங்களம் மட்டும் தெரிந்த ஏஜென்ட்கள் airlankaaவை வலுக்கட்டாயமாக தலையில் கட்டும் சம்பவங்களும் நிறைய இங்கு கூட .

Ebookers, Expedia.com வலையில் புகுந்து விளையாட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

Ebookers, Expedia.com வலையில் புகுந்து விளையாட வேண்டும்.

விளையாட தெரிந்தாலும் நம்பிக்கையின்மை கூட காசை சிலவளித்து போகுதுகள் உதாரணமாய் போனவருட கட்டாரின் மலிவு விலை நான் எத்தனையோ பேருக்கு சொல்ல நம்புதுகள் இல்லை இங்கு திரியும் தனித்தவில் ஒண்டை பிடிச்சு விசா இருக்கு ஊர் போய்வா என்று அதன் விசா காட்டில் புக் பண்ணி ஏத்தி அனுப்பி விட அது ஊருக்கு போய் விளம்பரம் செய்து முடிக்க கொலிடே முடிந்துவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை இலண்டன் நம்பர் விளம்பரத்தில்...

போன் அடித்தால், அப்படியே கடத்தி,  கொழும்பில... கோல் சென்றர்....

அவருக்கு கமிசன் கூடவரவேண்டும் என்றால், நம்மள கூட செலவழிக்க வைக்கவேண்டும்.

இன்ரநெற்ல பூந்து வெளாடி, டீல் பிடிக்க முடியாவிடில், Travel ஏஐன்ட் என்று போக முன், சொந்தகாரர், உறவினர் உதவி பெற்றால், சேமிக்க முடியும்.

இங்க பெருமாள் சொன்னபடி பார்தாலே, £400 சேமிப்பு. பொல்லால அடிச்ச காசு.

அநேகமா, கனடாக்காரர்... உந்த இடைத்தங்கள் (Transit) ஒழுங்குகள் என்று ஏஜன்றிடம் போய், அநியாயத்துக்கு காசைக் கொடுப்பினம்.

இன்றநெற்றுக்குள்ள போய் தனித்தனிய சகல பதிவுகளையும் செய்யலாம். உதாரணமா, லண்டன்கற்விக்  - கொழும்பு பதிவு கல்ப்ஏயர், கட்டார் ஏயர் எல்லாமே இணைய வழியே செய்யலாம். அதே கற்விக் விமான நிலையத்துக்கு, ரொரண்ரோவில் இருந்து Transat Air மூலம் வரலாம்.

தனித்தனிய பதிவு செய்கையில், இலண்டன் சிலநாள் தங்க யாரும் காசு பறிக்க ஏலாது. :cool:

ஆனால் ஒரேயடியான பதிவில் ஏஜன்ற், Journey break என்று, அதுக்கு வேற பிடுங்குவார். tw_cry:

சேமிப்பு பல ஆயிரம் CAD$.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2017 at 5:48 AM, பெருமாள் said:

போன வருடம் கோடைகால விடுமுறைக்கு கொழும்புக்கு airlanka 950 பவுண்ட் ஹீத்துரோ வில் இருந்து போய்திரும்புதல் நம்மாட்களும் அடைந்தால் மகாதேவன் கணக்காய் airlankaavai புக் பண்ணின்னம்.

பக்கத்து கெட் வீக் லிருந்து ஒருமணிநேரம் இடைத்தங்கல் கொழும்பு ரிக்கெட் விலை 550 பவுண்ட் மட்டுமே கட்டார் விமானம் போய்திரும்புதல் விலை .

ஆங்கிலம் பெரிதாக தெரியாத  சிங்களம் மட்டும் தெரிந்த ஏஜென்ட்கள் airlankaaவை வலுக்கட்டாயமாக தலையில் கட்டும் சம்பவங்களும் நிறைய இங்கு கூட .

Gatwick இல் இருந்து Qatar airways போகின்றதா???

On 6/19/2017 at 1:14 PM, Nathamuni said:

இங்கை இலண்டன் நம்பர் விளம்பரத்தில்...

போன் அடித்தால், அப்படியே கடத்தி,  கொழும்பில... கோல் சென்றர்....

அவருக்கு கமிசன் கூடவரவேண்டும் என்றால், நம்மள கூட செலவழிக்க வைக்கவேண்டும்.

இன்ரநெற்ல பூந்து வெளாடி, டீல் பிடிக்க முடியாவிடில், Travel ஏஐன்ட் என்று போக முன், சொந்தகாரர், உறவினர் உதவி பெற்றால், சேமிக்க முடியும்.

இங்க பெருமாள் சொன்னபடி பார்தாலே, £400 சேமிப்பு. பொல்லால அடிச்ச காசு.

அநேகமா, கனடாக்காரர்... உந்த இடைத்தங்கள் (Transit) ஒழுங்குகள் என்று ஏஜன்றிடம் போய், அநியாயத்துக்கு காசைக் கொடுப்பினம்.

இன்றநெற்றுக்குள்ள போய் தனித்தனிய சகல பதிவுகளையும் செய்யலாம். உதாரணமா, லண்டன்கற்விக்  - கொழும்பு பதிவு கல்ப்ஏயர், கட்டார் ஏயர் எல்லாமே இணைய வழியே செய்யலாம். அதே கற்விக் விமான நிலையத்துக்கு, ரொரண்ரோவில் இருந்து Transat Air மூலம் வரலாம்.

தனித்தனிய பதிவு செய்கையில், இலண்டன் சிலநாள் தங்க யாரும் காசு பறிக்க ஏலாது. :cool:

ஆனால் ஒரேயடியான பதிவில் ஏஜன்ற், Journey break என்று, அதுக்கு வேற பிடுங்குவார். tw_cry:

சேமிப்பு பல ஆயிரம் CAD$.

எங்கட ஆட்களுக்கு Luggage ஓர் பெரிய பிரச்சனை.

Transit air 23 kg என்றே நினைக்கின்றேன். மற்றய airlines 46kg கனடாகாரர்களுக்கு.

ஆனால் இலங்கையிலிருந்து 23 kg வை கனடாவிற்கு அனுப்ப $ 100 - $ 150 வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மாலைதீவுக்கும் மட்டும் போட்டு எடுத்துடாதீங்க குளோன் போத்தலைகூட உருவி ட்டான் பாவிகள்  கைப்பையில் இருந்ததை என்ன  சட்டமோ தெரியலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனி ஒருவன் said:

ஆனால் மாலைதீவுக்கும் மட்டும் போட்டு எடுத்துடாதீங்க குளோன் போத்தலைகூட உருவி ட்டான் பாவிகள்  கைப்பையில் இருந்ததை என்ன  சட்டமோ தெரியலை 

100ml ற்கு மேலே கொண்டு செல்ல முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

100ml ற்கு மேலே கொண்டு செல்ல முடியாது.

ஆனால் சிறீலங்காவில் ஒரு தமிழர் எதிர் கட்சி தலைவராக உள்ள போது 

%5Burl=https://postimg.org/image/kvdhalp6d/%5D%5Bimg%5Dhttps://s2.postimg.org/batunpzuh/IMG_4641.png%5B/img%5D%5B/url%5D

ஆனால் த்ற்போது இலங்கையிலும் சட்டம் வந்துள்ளது நீங்கள் அறிந்துள்ளீர்களா ?? கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

Gatwick இல் இருந்து Qatar airways போகின்றதா???

எங்கட ஆட்களுக்கு Luggage ஓர் பெரிய பிரச்சனை.

Transit air 23 kg என்றே நினைக்கின்றேன். மற்றய airlines 46kg கனடாகாரர்களுக்கு.

ஆனால் இலங்கையிலிருந்து 23 kg வை கனடாவிற்கு அனுப்ப $ 100 - $ 150 வரும்.

எங்கட ஆட்களுக்கு Luggage ஓர் பெரிய பிரச்சனை.

Transit air 23 kg என்றே நினைக்கின்றேன். மற்றய airlines 46kg கனடாகாரர்களுக்கு.

ஆனால் இலங்கையிலிருந்து 23 kg வை கனடாவிற்கு அனுப்ப $ 100 - $ 150 வரும்.

The size of hand luggage cannot exceed 23 x 40 x 51 centimetres on Air Transat flights (sizes are approximate).

Hold Luggage Allowance: Economy: One piece of luggage weighing up to 23kg per paying passenger. ...

Club Class: Two pieces of luggage per paying passenger, with a combined weight of up to 40kg.

குடும்பமா போகேக்க 23 கிலோ ஆளுக்கு... 4 பேர் போனால், ஆகும்... கேபின் பாக் உடன் சேர்த்தா, 125 கிலோ தாண்டும். போதாதே?

இன்னொரு பிரச்சனை: குளிருக்கு உங்க போடுற உடுத்துணி சுமக்கிறது. இரண்டு நாளுக்கு மட்டும் கொண்டு போய், அங்க வாங்கி பாவிச்சிட்டு, வரும்போது வீதியில் இருப்பவர்களிடம் கொடுத்து வரலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

ஆனால் த்ற்போது இலங்கையிலும் சட்டம் வந்துள்ளது நீங்கள் அறிந்துள்ளீர்களா ?? கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது 

ஆம் அந்த கன்றாவியை இணைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை

தமிழர் ஒருவரை எதிர்கட்சி தலைவராக வைத்துக் கொண்டு

IMG_4641.png

IMG_4640.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

ஆம் அந்த கன்றாவியை இணைக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை

அது ஏற்கனவே  செய்தியாக வந்துள்ள இணையத்தளத்தில் ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது பிறகு வந்து விட்டு சிங்களவன் முழுவதையும் புங்கிட்ட்டான் என்று சொல்லி அழுவாங்களே அதை தெரியப்படுத்த வேண்டும் முதலில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனி ஒருவன் said:

அது ஏற்கனவே  செய்தியாக வந்துள்ள இணையத்தளத்தில் ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியாது பிறகு வந்து விட்டு சிங்களவன் முழுவதையும் புங்கிட்ட்டான் என்று சொல்லி அழுவாங்களே அதை தெரியப்படுத்த வேண்டும் முதலில் 

தமிழை கொன்றிருக்கிறார்கள் இணையத்தளத்தில்,

உள் வரும் போது பிரச்சனையில்லை வெளியேறும் போதுதான் பிரச்சனை

13 minutes ago, Nathamuni said:

The size of hand luggage cannot exceed 23 x 40 x 51 centimetres on Air Transat flights (sizes are approximate).

Hold Luggage Allowance: Economy: One piece of luggage weighing up to 23kg per paying passenger. ...

Club Class: Two pieces of luggage per paying passenger, with a combined weight of up to 40kg.

குடும்பமா போகேக்க 23 கிலோ ஆளுக்கு... 4 பேர் போனால், ஆகும்... கேபின் பாக் உடன் சேர்த்தா, 125 கிலோ தாண்டும். போதாதே?

இன்னொரு பிரச்சனை: குளிருக்கு உங்க போடுற உடுத்துணி சுமக்கிறது. இரண்டு நாளுக்கு மட்டும் கொண்டு போய், அங்க வாங்கி பாவிச்சிட்டு, வரும்போது வீதியில் இருப்பவர்களிடம் கொடுத்து வரலாமே.

எங்கட சனத்திற்கு 1000 கிலோவும் போதாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STANSTED ஏர்போட் போய் வர எதாவது சீப்பான வழி இருந்தால் சொல்லுங்கள் கோச்சை தவிர்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

STANSTED ஏர்போட் போய் வர எதாவது சீப்பான வழி இருந்தால் சொல்லுங்கள் கோச்சை தவிர்த்து

பொடி நடை தான். ஹி, ஹி..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

Gatwick இல் இருந்து Qatar airways போகின்றதா???

மன்னிக்கவும் எமிரேட்ஸ் தான் எல்லாம் அரபு உலகம் கட்டாரை வதைக்க  அதுதான் எடுத்தவுடன் நினைவில் வந்து துளைக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, பிரயோசனமான.... தலைப்பு  ஆதவன்.
நாதமுனி, பெருமாள், மீரா... ஆகியோரின் அனுபவங்கள், இப் பதிவுக்கு வலு சேர்க்கின்றது.
அவற்றை வாசிக்கும் போது.... விமான சீட்டு வாங்கும் போது,  
நாம்  அவசரப் படாமல் கணனியில் தேடும் போதே... 
பெரும் தொகை பணத்தை சேமிக்க முடியும் என்பது நல்ல தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்துக்கு பாரிசுக்கும் லண்டனுக்கும் 10 தடவைகளுக்கு மேல் ஐரோ சட்டில் மூலம் ஆங்கில கால்வாயை கடப்பவர்களுக்கு இந்த முறை லாபகரமானது  45 பவுன் ஒருமறை போய் திரும்புதல் இந்த லிங்கில் https://www.eurotunnel.com/uk/tickets/types/frequent-traveller/ கணக்கை திறந்து முற்பணம் கொடுத்தபின் விலைகுறைவான டிக்கெட் தனி வரிசை என்பது போன்ற வசதிகள் .குறைந்தது 500   பவுன் சேமிக்லாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை மொன்றியல் விசிட் அடித்தபோது போன் மொபைல் போன் ரோமிங் நிறுத்த மறந்து விட்டன் திரும்பவும் லண்டன் வந்தபோது வந்து விழுந்த பில் 1200 பவுண்ட்ஸ் இவ்வளவுக்கும் நெட் பாவிக்கவில்லை வேறு என்ன அப்ப Tமொபைல் என்றபெயரில் மணித்தியால கணக்கில் கொள்ளுபட்டு பலனில்லை நெட்டில் தேடியபோது ஒம்புச்ட்மன் மனு குடுப்பது பற்றி இருந்தது கடிதம் போட்டு நான்காம் நாள் அந்த ஓவரா அடித்த 1200 கான்செல் பண்ணி விட்டம் என்று பதில் வந்தது . மொபைல் போன் குழப்படி நெட்வொர்க் பற்றி முறையிட இந்த லிங்கில் சாம்பிள் கடிதமும் உண்டு http://www.which.co.uk/consumer-rights/advice/how-to-complain-to-the-ombudsman-about-a-mobile-phone-provider#find-the-correct-ombudsman இங்கிலாந்து  வாசிகளுக்கு மட்டும் மற்றயவர்கள் மன்னிக்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

தனியார்மய கம்பனிகள் , கார்ப்பரேட் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் இவற்றுக்கெல்லாம் "ombudsman office " இது ஒரு சிம்மசொப்பன வார்த்தை.
ஒரு நுகர்வாளனாக, வாடிக்கையாளராக உங்கள் பிரச்சினைகளை சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் கவனம்  எடுக்காதவறினால் அல்லது நீங்கள் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தாலோ, அல்லது உங்கள் முறைப்பாடுகள் சரியாக தீர்க்கப்படாவிட்டாலோ நீங்கள் அடுத்த கட்டமாக அணுகவேண்டிய நிர்வாக அமைப்பு தான் இந்த "ombudsman office".
பொதுவாக நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் "ombudsman office" ஐ அணுகுவதை சற்றும் விரும்ப மாட்டார்கள்.
தீர்க்கப்படாத பிணக்குகளை கூட அலறி அடித்துக்கொண்டு தீர்த்து தருவார்கள்.
இப்படி தீர்க்கப்பட்ட கதைகள் ஏராளம். காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள், விமான சேவைகள், அணைத்து அரச சேவைகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

8 hours ago, Sasi_varnam said:

ஆகா.. அருமையான தகவல்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஈஸிஜெட் விமானத்தில் ஐரோப்பிய நாடு சென்று வந்தேன்.

வரும்போது விமானம் 5.10 மணி நேர தாமதம். 

ஒரு விமான சிப்பந்தி சிக் ஆனதால், ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி விட்டார்கள்.

விமானத்தில் board பண்ணிய 20 பேர் வரையான வயதானவர்களை, சிறுகுழந்தைகளுடனான தம்பதிகளையும் திருப்பி கேட் அனுப்பி விட்டார்கள்.

முதலில் வேறு சிப்பந்திக்கு காத்திருக்கிறோம் என்றார்கள். பின்னர், சிப்பந்திக்கு காயம், காரணம் விமானம் மின்னல் தாக்கியதால் அவருக்கு காயம், விமானம் பறக்க முடியாது, வேறு விமானம் காட்விக்கில் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இதென்னடா கதை மாத்துகிறார்கள் என்றால், இயறகை சமபந்தமா இடையூறாயின் நஷட ஈடு கொடுக்க தேவையில்லையாம். வேறுவகையில் ஆயின் கொடுக்க வேண்டுமாம். 5 மணித்தியாலத்துக்கு மேலேயின் அதிகம் கொடுக்க வேண்டும்.

வந்தபின், 4.33 மணித்தியால தாமதத்துக்கு வருந்துவதாக சொன்னார்கள். 

பழுதான விமானத்தில், எப்படி பயணிகளை board பண்ணுனீர்கள் என்றால், பதில் சொல்லாமல் மழுப்புகிறார்கள்.

இப்ப கதை விடுகிறார்கள் என்று புரிகிறது. இதுக்கு அலுவல் பார்க்க வேண்டும். நேரம் இல்லையே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.