Archived

This topic is now archived and is closed to further replies.

Iraivan

பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல

Recommended Posts

பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது சொந்த ஊரான ஹொரகொல்லைக்கு செல்லக்கூடிய சூழல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமே ஏற்பட்டதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ரவிராஜ் நடுநிலையான கருத்துகளை கொண்டிருந்தார். 1956 இல் தமிழ் மக்கள் தனிநாட்டை கோரவில்லை. கலாசார, மொழி உரிமைகளையே கோரினர். அவ்வுரிமை வழங்கப்படாமை காரணமாகவே தமிழ் மக்களின் ஆயுதங்கள் பேச ஆரம்பித்தன.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 130 படுகொலைகளே நடைபெற்றுள்ளன. ஆனால், ஜனாதிபதித் தேர்தலின் பின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடைபெற்றுள்ளன.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, போர் நிறுத்த புரிந்துணர்வு காலத்தில் எத்தகைய படுகொலைகளும் நடைபெறவில்லை.

ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம் தெளிவாகவே கூறியிருந்தார். அதாவது, புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலிலுள்ள வேளை, அரசியல் படுகொலைகளை மேற்கொள்வார்களாயின்,தான் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிவிடுவதாக கூறியிருந்தார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இல்லாத சமயமே படுகொலைகள் மிக அதிகளவில் நடைபெற்றன.

முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது மாளிகைக்குள் ஒளிந்து கொண்டிருக்காது அவருடைய ஊரான ஹொரகொல்லைக்கு சென்று வாக்களிப்பதற்கு ஐ.தே.க. மேற்கொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமே காரணமாக அமைந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த செப்டம்பரில் நியமித்த ஆட்கள் காணாமல்போதல் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அதனை உடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கள- பௌத்த நாடு எனக் கூறிக்கொள்ளும் இலங்கையில் நாய்கள், பூனைகள் போன்று அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். துரும்புக்குக் கூட மனிதர்கள் மதிக்கப்படுவதில்லை. தினமும் படுகொலை கலாசாரம் தொடருகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்த மதிப்பு, தற்போது குறைந்துவிட்டது. ஐ.தே.க. தலைவர் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எவரும் கொலை செய்யப்படவில்லையென்பதை இச்சபைக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Share this post


Link to post
Share on other sites

பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல

சிங்கள- பௌத்த நாடு எனக் கூறிக்கொள்ளும் இலங்கையில் நாய்கள், பூனைகள் போன்று அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். துரும்புக்குக் கூட மனிதர்கள் மதிக்கப்படுவதில்லை. தினமும் படுகொலை கலாசாரம் தொடருகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்த மதிப்பு, தற்போது குறைந்துவிட்டது. ஐ.தே.க. தலைவர் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கை எவரும் கொலை செய்யப்படவில்லையென்பதை இச்சபைக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

ம்ம்.. அந்த புத்தன் மட்டும் இந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டும்...

அகிம்சையை போதித்த புத்தரின் வழித்தோன்றல்கள் இன்று இம்சையை போதிக்கின்றன...

Share this post


Link to post
Share on other sites