Jump to content

தமிழ் கலியாணம் - மாப்பிளை; வெள்ளையர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப உது இஞ்சை ஜேர்மனியிலை நோர்மல் எண்டு வந்துட்டுது.......  போன வெள்ளிக்கிழமையும் நான் உப்புடியான கலியாண வீடு ஒண்டுக்கு போய் மொய் போட்டுட்டு வந்தனான். tw_blush:
என்னதான் வெள்ளையளை கட்டினாலும் மரக்கறி சாப்பாட்டோடைதான் நிக்கிறாங்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலைகளுக்கே... 15 ஆயிரம் ஐரோவுக்கு மேல் வந்திருக்கும் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெள்ளை வந்து உவை சேர்த்ததை எல்லாம் செலவழிக்கேக்கே.. ஒதுங்கி இருந்து மனசுக்க புளுங்கி புளுங்கி வாழுவினம்.. பாருங்க.. என்ன ஒரு அருமையான காட்சி.

ரெம்ப அதிகமா ஆடக் கூடாது. நமக்கு ஏதுவா ஆடனும். எங்களுக்கு ஏதுவான சிந்தனையோட வெள்ளை என்ன கறுப்பு..பிறவுன் எது இருந்தாலும்.. அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ்த்திருமணமா? கிந்தித்திருமணமாகவே தெரிகிறது. இன்று தமிழினத்திடையேஆரோக்கியமற்ற  பாரியதொரு பண்பாட்டுமாற்றம் நுளைந்து எமது அடையாளங்களை அழித்து வருகிறது. இது திருமணம் கலை பண்பாட்டு நிகழ்வுகள் என்று எங்கும் ஊடுருவிச்செல்கிறது.  இங்கு பலர் தமிழ் என்று சொல்லிவாறு மேடைகளில் பொலிவூட்டைக் காட்சிப்படுத்தும்  நிகழ்வுகளும் நடைபெறுகின்றது. தமிழனே மதிக்காத தமிழரது பண்பாடாக ஓரம்கட்டப்படுவதும் நிகழ்கிறது. குமுகாய ஆர்வலர்கள் ஊ டகங்கள் போன்றன இவைதொடர்பிலும் உரையாடவும் எழுதவும் முன்வரவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

இப்ப உது இஞ்சை ஜேர்மனியிலை நோர்மல் எண்டு வந்துட்டுது.......  போன வெள்ளிக்கிழமையும் நான் உப்புடியான கலியாண வீடு ஒண்டுக்கு போய் மொய் போட்டுட்டு வந்தனான். tw_blush:
என்னதான் வெள்ளையளை கட்டினாலும் மரக்கறி சாப்பாட்டோடைதான் நிக்கிறாங்கள்.:cool:

இந்த மனிசனுக்கு சாப்பாடு பிரச்சினை  நல்ல குவாலிட்டியான வீடியோ வாழ்த்துவோம் மனம் இணைந்தால் திருமணம்  ஆனால் என்ன நாளைக்கு வெள்ளை விட்டுட்டு போனால் அனுதாபங்கள் tw_blush:

8 hours ago, nedukkalapoovan said:

அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

நீங்கள் சொன்னால் சரிதான் சிங்கம் சிக்கினத சிம்பொலிக்கா சொல்லுது  நமக்கேன் வ் அம்பு உங்களுக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்கள்  சொல்லிக்கிறன் நெடுக்கரே:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

நீங்கள் சொன்னால் சரிதான் சிங்கம் சிக்கினத சிம்பொலிக்கா சொல்லுது  நமக்கேன் வ் அம்பு உங்களுக்கு இந்த இடத்தில் வாழ்த்துக்கள்  சொல்லிக்கிறன் நெடுக்கரே:10_wink:

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியன் காலில விழுந்து கும்பிடேக்குள்ள தாயும்,தகப்பனும் உதென்னடா :rolleyes: என்டு விறைச்சுப் போய் நிற்கின்ற எஸ்பிரசன் சுப்பர்:mellow:

On ‎17‎/‎06‎/‎2017 at 8:31 AM, nedukkalapoovan said:

வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். வெள்ளை வந்து உவை சேர்த்ததை எல்லாம் செலவழிக்கேக்கே.. ஒதுங்கி இருந்து மனசுக்க புளுங்கி புளுங்கி வாழுவினம்.. பாருங்க.. என்ன ஒரு அருமையான காட்சி.

ரெம்ப அதிகமா ஆடக் கூடாது. நமக்கு ஏதுவா ஆடனும். எங்களுக்கு ஏதுவான சிந்தனையோட வெள்ளை என்ன கறுப்பு..பிறவுன் எது இருந்தாலும்.. அன்பும் இருக்கும் என்றால் கட்டிக்கலாம். அதில் தப்பே இல்லை. tw_blush:

கதையைப் பார்த்தால் இந்தத் தம்பியும் வேற நாட்டுப் பொண்ணைத் தான் கட்டியிருக்கார் போல:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

tw_blush:

ஏன் பாஸ் எனக்கு இங்கிலீசு பாட்டு போட்டு  ஏசுறீங்க  நான் என்ன தப்பா பேசிட்டன் ஆங்:10_wink:

1 hour ago, ரதி said:

கதையைப் பார்த்தால் இந்தத் தம்பியும் வேற நாட்டுப் பொண்ணைத் தான் கட்டியிருக்கார் போல:unsure:

ஒரே குழப்பமா கிடக்கு நெடுக்கர கூப்பிட்டு கேளுங்கோவன் உன்மை தெரிஞ்சுடும்  :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

On 2017-6-17 at 0:03 AM, தமிழ் சிறி said:

மாலைகளுக்கே... 15 ஆயிரம் ஐரோவுக்கு மேல் வந்திருக்கும் போலுள்ளது.

ம்... உந்த மாலைக்காசு இன்னொரு கலியாணம் செய்யக்காணும். பேசாமல் ஒரு மாலை பிசினஸ் தொடங்கலாமோ?

Link to comment
Share on other sites

 முதலில் கல்யாணம் கட்ட இந்த தமிழ் பிள்ளை ஒத்துக்கொண்டதுக்கு பெருமைப்படவேண்டும்.
இரண்டாவது எங்கள் தமிழ் கலாசாரத்தில் செய்ய முன் வந்ததிற்கு வாழ்த்தவேனும்.
பார்க்க பெருமையாகவும் இருக்கு. ஏன் இந்த தூற்றல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாதிரி விசயங்கள் கண்ணுக்குமுன்னாலை நடக்கேக்கை முடியை பிச்சுக்கறவங்கள்ளை நானும் ஒருவனண்ணை. சரியா பிழையா இல்லை எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா ஒண்ணும் புரியிதில்லை. என் சொந்த தெரிவா மொழி-சமயம்-நிறம்-இனம்-நாடு இதிலை எது சரி மாறியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியா எதுவித காழ்ப்புணர்ச்சியோ விரோதமோ அல்லது துவேசமோ அவங்க மேல கிடையாது. வாரிசுகள் தெரிவு செய்தால் தடைசெய்ய மாட்டேன் ஊக்கிவிக்கவும் மாட்டேன். வினை விதைச்சிட்டம் அறுவடை செய்துதானே ஆகணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vanangaamudi said:

அப்படிச் சொல்லமுடியாது வணங்காமுடி.

மேலுலகம் ஒரு வித்தியாசமான மனவியல் கொண்டது. வாழ்க்கை குறுகியது... ஒருமுறை மட்டுமே. கண்ணதாசன் சொன்னது போல், 'இறப்புக்கு பின்னே, நடப்பது என்ன, எவருக்கும் தெரியாது' என்பதை நிதர்சனமாக வாழும் கூட்டம்.

அங்கே உறவு என்பது கன்ராக்ட் போல்... எப்படா பிள்ளைக்கு 16 முடியும், வீட்டை விட்டுக் கிளப்பலாம் என்பதே அவர்கள் வாழ்வு. தமது உழைப்பு, தமது எஞ்ஜாய்மென்ற்...

தாங்கள் இருக்கும் வரை சொத்தை கொடுக்க மாட்டார்கள். இறந்தபின் கிடைப்பதில், அரசு 40% ஆட்டயைப் போடும். 

ஆகவே வேலை செய்தாக வேண்டும். பணப்பற்றாக் குறையால், பிள்ளைகளின் தகப்பன் எஸ் ஆக, சிங்கிள் மதர் அவலம். 

இடையே உண்மையான உறவு கிடைக்கும் போது, அது முன்னரே கிடைக்காதவர்கள், நிஜமாக வாழ்கின்றனர்.

நான் பார்த்த கலப்பு மணங்களில், உறுதி கூடுதலாக இருப்பதை கவனித்தேன்.

இன்ரநெற் போய், I am marrying a Tamil / Indian / Sri Lankan என்று போட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணும் பெண்ணும் மனம் விரும்பி மணம் செய்யும்போது இனம், மொழி, மதம் கலாச்சாரம் என்று நாம் பிடிவாதமாக மறுக்க, அல்லது விலத்தி வைக்க முனைகிறோம். காதல் என்பது இத்தனை விடயங்களையும் எடுத்தாய்ந்து வருவதில்லை. எப்போது எங்கே யாரிடம் மனம் பறிபோகும் என்று யாருமே விரல் மடிக்கமுடியாது. மனம் ஒருமித்ததுதானே வாழ்க்கை. இன்றைய நாட்களும் இனிவரும் காலங்களும் திருமணங்கள் என்பதையே கேள்விக்குரியாக்கிச் செல்வதை நாம் அறியாதவர்களா? ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் துணைகளாகும் உறவுகளின் புரள்வு நிலையை நோக்கி உலகம் பயணிக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பிறப்பால் சிலருக்கு இருக்கும் பால்சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இயற்றப்பட்ட சட்டங்கள் இயற்கையின் படைப்புக்கு அப்பால் பலரிடம் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் போக்கு இப்படி இருக்க...நாமோ ஐயோ வெள்ளையை கட்டிட்டான், ஐயோ கறுப்பனைக்கட்டிட்டாள் என்று திருமண பந்தத்தை உருவாக்கி வாழத்தலைப்படும் பிள்ளைகளை நோகலாமா? திருமணம் கட்டாமல் லிவிங் டூகெதராக வாழ்வது நாகரீகமாக இளையவர்கள் மத்தியில் கருதப்படுவதும் அவர்கள் அவ்வழியில் இணைந்திருந்தும் பிரிந்தும் திருமணங்களை எட்டாமல் விலகியும் இலக்கற்ற வெளியில் இருக்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். நான் பார்த்தவரையில் வெள்ளையைக்கட்டி விவாகரத்தாம், கறுப்பியைக்கட்டி விலகி விட்டானாம் என்று கேள்விப்பட்டதைக்காட்டிலும் நம்மவர்களைக்கட்டி விவாகரத்து பெற்றவர்களும், பிரிந்தவர்களும்தான் அதிகம்.

Link to comment
Share on other sites

11 minutes ago, வல்வை சகாறா said:

பிள்ளைகளின் உணர்வுக்கும் காதலுக்கும் சார்பாக அழகாக எழுதிவிட்டு ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை உறவுகளின் புரள்வு நிலை என்று குறிப்பிடுகின்றீர்கள். மதங்கள் விலக்கி வைத்த ஒன்று என்பதற்கு அப்பால் அவையும் மனித உணர்வுகள் தானே? அத்துடன் living together  இனையும் எட்டாடமல் இருக்கும் இலக்கற்ற வெளி என்கின்றீர்கள்.  இவ்வாறு வாழ்கின்றவர்கள் பல வருடங்களாக இணைந்தே வாழும் உதாரணங்கள் எங்கள் அயலிலேயே இருக்கின்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

நிழலி பிறப்பால் சிலருக்கு ஏற்படும் பால் நிலை மாற்றங்களை ஒரு காலமும் தாழ்வு படுத்தவில்லை ஆனால் தற்காலத்தில் அதன் வளர்ச்சி என்பது திடுக்கிடவைப்பதாகவே இருக்கிறது. இயற்கையின் இயல்பால் பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்டுள்ள போதையால் அல்லது ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்களால் அத்தகைய நிலைக்குள் உட்பட்டோர்தான் அதிகமாகிச் செல்கிறார்கள். அதிகரித்துச்செல்லும் இந்நிலையை இயற்கை என்று பார்த்தால் ஆண் பெண் பிம்பங்களுக்குள் மாறுபட்ட பாலியல் கொண்டவர்கள் அதிகமா? அடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றிணைந்து வாழ்வது இன்றைய நிலையில் பலரால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் இந்தத் தலைப்பில் தமிழ் கல்யாணம், வெள்ளை என்றதன் பின்னால் பதியப்பட்டகருத்துகளை தொடர்ந்தே எனது கருத்தும். விரும்பினால் சேர்ந்திருக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதில் அத்தகைய வசதி உண்டு. இத்தகைய சூழலுக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. திருமணம் என்ற பந்தம் எம்மைப் பொருத்தவரையில் சமூகவெளியில் அடையாளப்படுத்தும் ஒரு குடும்பநிலை கொண்டது. திரு திருமதி என்ற வரைவிலக்கணத்திற்குரியது. எதிர்காலத்தில் திருமதிகள் குறைவாகவும் செல்விகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இங்கு நான் ஓரினச்சேர்க்கையாளர்களையோ, திருமணம் இன்றி சேர்ந்து வாழ்பவர்களையோ காயப்படுத்த எண்ணவில்லை அதே நேரம் திருமணம் என்ற பந்தத்தில் இனம் , மொழி,பண்பாடு, நிறம் கடந்து இணைகின்றவர்களைவாழ்த்தி வரவேற்போமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் கலியானம் என்பது வெறும் சடங்குதான்.அதற்க்கு அப்பால் பரவலாக இன மத நிற வேறுபாடின்றி உறவு(உடல்)கொடி கட்டி பறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனம் மதம் பழக்கவழங்கள் எல்லாவற்றையும் தாண்டி காமத்திற்காக இணைந்ததை.....

காதல் என்கிறார்கள்.

கலியாணம் என்கிறார்கள்.

உலக புதுமை என்கிறார்கள்.

மனிதம் முதுமை அடைய அடைய.........

முரண்பட்ட சிந்தனைகள் வர.....?

என்னவாகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வல்வை சகாறா said:

நிழலி பிறப்பால் சிலருக்கு ஏற்படும் பால் நிலை மாற்றங்களை ஒரு காலமும் தாழ்வு படுத்தவில்லை ஆனால் தற்காலத்தில் அதன் வளர்ச்சி என்பது திடுக்கிடவைப்பதாகவே இருக்கிறது. இயற்கையின் இயல்பால் பாதிக்கப்பட்டவர்களைக்காட்டிலும் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்டுள்ள போதையால் அல்லது ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரிசல்களால் அத்தகைய நிலைக்குள் உட்பட்டோர்தான் அதிகமாகிச் செல்கிறார்கள். அதிகரித்துச்செல்லும் இந்நிலையை இயற்கை என்று பார்த்தால் ஆண் பெண் பிம்பங்களுக்குள் மாறுபட்ட பாலியல் கொண்டவர்கள் அதிகமா? அடுத்து திருமணம் செய்யாமல் ஒன்றிணைந்து வாழ்வது இன்றைய நிலையில் பலரால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் இந்தத் தலைப்பில் தமிழ் கல்யாணம், வெள்ளை என்றதன் பின்னால் பதியப்பட்டகருத்துகளை தொடர்ந்தே எனது கருத்தும். விரும்பினால் சேர்ந்திருக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதில் அத்தகைய வசதி உண்டு. இத்தகைய சூழலுக்கு எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. திருமணம் என்ற பந்தம் எம்மைப் பொருத்தவரையில் சமூகவெளியில் அடையாளப்படுத்தும் ஒரு குடும்பநிலை கொண்டது. திரு திருமதி என்ற வரைவிலக்கணத்திற்குரியது. எதிர்காலத்தில் திருமதிகள் குறைவாகவும் செல்விகள் அதிகமாகவும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இங்கு நான் ஓரினச்சேர்க்கையாளர்களையோ, திருமணம் இன்றி சேர்ந்து வாழ்பவர்களையோ காயப்படுத்த எண்ணவில்லை அதே நேரம் திருமணம் என்ற பந்தத்தில் இனம் , மொழி,பண்பாடு, நிறம் கடந்து இணைகின்றவர்களைவாழ்த்தி வரவேற்போமே.

கனம் கோட்டார் அவர்கள் !
இந்த தீர்ப்பை கொஞ்சம் கூடுதலான ஆய்வின் பின் வழங்கி இருக்கலாம் 
என்று எண்ணுகிறேன்.

கொஞ்சம் சிக்கலான விடயம் என்பதால் மரியாதைக்கு உரிய நீதிமன்ற வளாகத்தில் 
எப்படி பேசுவது என்று புரியவில்லை....

தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம் ............. (எமது மதம் இதை முன்கூட்டியே சொல்லி இருக்கிறதாம் 
என்றும் எங்கோ வாசித்தேன் .... சைவ கோவில்களின் வெளி சுவர் ஏன் சிவப்பு வெள்ளை வர்ணத்தில் இருக்கிறது? உள்ளே கருவறை இருப்பதால்தான் அப்படி இருப்பதாக சொல்கிறார்கள். எமது கோவில் வடிவைப்பு  பூசை முறைமைகள் எல்லாம் நிறையவே காமத்துடன் கலந்து இருக்கிறது. நந்தியும் லிங்க வழிபாடு இப்போதும்  உண்டு. முன்னைய கோவில் சிலைகளில் நிறையவே ஓரின சேர்க்கை சம்மந்தமான சிற்பங்கள் நிறைய உண்டு) 

இதை எமது மதம் சார்ந்தும் எமது பூசை முறைமைகள் சார்ந்தும் சிந்தித்துக்கொண்டு தொடர்ந்து  வாசியுங்கள்   ............
(சிவன் + சக்தி) கருவில் ஆண் பெண் இல்லை அது ஒரு முழுமை நிலையில் இருக்கிறது பின் 60 நாட்கள் கழிந்து அது ஒரு ஆண் ஆகிறது ஆரம்பத்தில் பிறப்பு உறுப்பு ஒரே மாதிரியே இருக்கிறது 7-8 வாரங்கள் 
பின்பு ஆண்கரு  மேல் நோக்கி வளர்கிறது ... அதுவே பெண் கருவிட்கு அப்படியே இருந்து விடுகிறது. இப்போதான் சிக்கல் வருகிறது ........ ஒரு முழுமை பாதியாக பிரிகிறது. ஆண் கரு தன்னோடு இருந்த பெண் நிலையை பிரிகிறது ........ பெண் கரு தன்னோடு இருந்த ஆண் நிலையை  பிரிகிறது. ஒரு ஆண் முழுமை இல்லை ... ஒரு பெண்ணும் முழுமை இல்லை........ தான் இழந்த பாதியை தானகவே தேடுவதால்தான் பால் மயக்கம்  வருகிறது. 
இப்போதான் இங்கே ஒரு சிக்கல் வருகிறது மருத்துவ ரீதியாக பார்க்கும்போது (இதை தலைவர் நெடுக்கு அவர்கள் விரிவாக கூறுவார்) 
க்ஸ் வை க்ரோஸொம்தான் ஆண்  பெண்ணை நிர்ணயிக்கறது இப்போ சொல்கிறார்கள் 
சரியான சம அளவு க்ஸ் வை க்ரோசம் என்பது அரிதாகவே நடப்பதாக. 
ஒரே மாதிரியான இரட்டை பிள்ளைகளும்  ....... வேறு வேறு மாதிரி இரட்டை பிள்ளைகளையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் இந்த க்ரோசோம் கோன்பியூஷன்தான் இவற்றுக்கு காரணம்.
இப்போ உங்கள் கருத்து நோக்கி வருவோம் ...... ஆய்வாளர்கள் கொஞ்சம் அதிர்ச்சியான 
தகவல் ஒன்றரை சொல்கிறார்கள் ... 80 வீதமான பெண்களுக்கு பெண்களுடன் உறவு கொள்ள பிடிக்குமாம்.
சமூகம் சார்ந்தும் இன்ன பிற மைண்ட் செட் காரணமாகவே அதை கண்டும் காணாமலும் வாழ்கிறார்களாம்.
அதுக்கு காரணம்  ஆண்களுக்கு ஒரு வை க்ரோசமும் ஒரு க்ஸ் க்ரோசமும் உண்டு. ஆனால் பெண்ணை நிர்ணயிப்பது  இரண்டு க்ஸ் க்ரோஸம்களே. ஆண்களுக்கு பெண் சார்ந்த உணர்வும் கூடவே உண்டு ஆதலால் 
பின்னாளில் சமூகம் சார்ந்தும் சிந்திக்கிறார்கள் இல்லையா? பெண்கருவை இரண்டு க்ஸ் க்ரோஸம்களே உருவாக்குகிறது. 
இந்த காலத்தில் வரும் சிறிய தவறால்தான் .... சில ஆண்களுக்கு ஆண்களையும் ... பல பெண்களுக்கு பெண்களையும்  பிடிக்கிறது. இது ஒரு உள் உணர்வு ... வெளி தோற்றம் ஆணாக இருந்தாலும் அவர்கள் உள் 
எண்ணபாடுகள் பெண்ணாகவே கருவிலேயே அமைந்துவிடுகிறது.

இப்போதைய காலத்தில் நீங்கள் அதிகம் கான்பதட்கும் ... பெருகி வருவதுபோல் 
உணர்வதட்கும் காரணம் ........... இப்போ ஒளிவு மறைவின்றி ... சமூகம் சார்ந்த அச்சம் இன்றி 
அவர்களால் வெளி வர முடிவதால்தான். முன்பு இருட்டில் இருந்ததை இப்போ வெளிச்சத்தில் பார்க்கிறோம் 
அதன் பொருள் முன்பு இருக்கவில்லை என்பது அல்ல. 

(சிவன் வேறு சக்தி வேறு இரண்டும் இணைவதே ஒரு ஒரு செயல்பாடு ஆகும்) 

YChromShowingSRY2.png

Alternative text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.