Jump to content

வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வடமாகாண சபையின் நீதியான தலைமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கான மக்கள் சந்திப்பு: 
[Friday 2017-06-16 21:00]
இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON)  திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017  நேரம்: மாலை 5 மணி      வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பயணிப்பவராகவும் தன்னை வெளிக் கொணர்ந்தார்.

இடம்: கனடா கந்தசாமி கோவில் (1380 Birchmount Road, Scarborough ON) 
திகதி: ஞாயிற்று கிழமை ஜுன் 18 2017 
நேரம்: மாலை 5 மணி 

வடமாகாணத் தேர்தலில் மிகவும் அறுதிப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி.வி விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியலுக்குப் புதியவர் என்றாலும், முதன்மை நீதியமைச்சராக இருந்து இளைப்பாறிய பின் வடமாகாண முதலமைச்சராகி தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை உணர்ந்தவராகவும், அதனையும் தாண்டி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பயணிப்பவராகவும் தன்னை வெளிக் கொணர்ந்தார்.   

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்னரான காலத்தில், தமிழின அழிப்பிற்கான ஆதாரங்களை வடமாகாண சபையில் பிரேரணையாகக் கொணர்ந்து அதை நிறைவேற்றி ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் இனஅழிப்பை உலகிற்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை பலமாக இட்டார். வடமாகாண சபையின் முதல்வராக இருந்து கொண்டு மாகாண அரசு அதிகாரங்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு ஒரு தீர்வாகாது என்று தெளிவாக கூறியவர்.

வடமாகாண சபையில் ஊழலை அகற்றும் முயற்சியின் பின்னராக ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையென்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு ஒரு சவாலாக மாறக்கூடியதாகவும்இ அதே நேரம் இச் சூழில் என்பது ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் சரியான திருப்பு முனையாகவும் அமையும்.

இது சம்பந்தமான ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்கள் வழங்குவதற்கான ஒரு கலந்துரையாடலாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை (416.830.7703)http://www.seithy.com/breifNews.php?newsID=184609&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.