Sign in to follow this  
நவீனன்

தேக வலை - சிறுகதை

Recommended Posts

தேக வலை - சிறுகதை

சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

ம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும்  திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்த லாட்ஜ் பில். அடுத்தது அம்மாவின் கைப்பேசியில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டிருந்த ஆண் பெயர், எண். அந்த எண்ணில் இருந்து அடிக்கடி வரும் போன்கால்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள்...

p68a.jpg

மகள் தன்னிடம் ஏதோ வித்தியாசமாகப் பழகுவதை ஜானகியும் உணர்ந்திருந்தாள். அனிதா பிறந்த அடுத்த ஆண்டே ஜானகி விவாகரத்து வாங்கிக்கொண்டு தனியாக வந்துவிட்டாள். ஜானகியின் உலகத்தில் அனிதா மட்டும்தான். உயிரே அவள்தான். வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றால், அதற்கு அனிதா நன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டிய காரணம் எதுவும் இல்லை. படிப்பு, உணவு, உடை... எல்லாவற்றிலும் மகள் விஷயத்தில் கவனமாக இருந்தாள். சோப்பு வாங்குவதில், செருப்பு வாங்குவதில், வேலை வாங்குவதில்... எல்லாவற்றிலும் அக்கறை காட்டுபவள். ஆனால், சில நாட்களாக ஜானகியை அனிதா பார்க்கும் பார்வையிலேயே ஒரு பிழை தெரிந்தது. தாயைப் பழிக்கும் பிழை.  ‘நாமாக முயன்று அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்துவைக்கலாம். அல்லது அவளாகக் கேட்பது வரைக் காத்திருக்கலாம். இது என்ன தர்மசங்கடம்? மனதுக்குள்ளேயே விபரீதமாகக் கற்பனை செய்து கொண்டிருப்பவளை என்ன செய்வது?'

காலையில் வாக்கிங் போகும்போது, ‘‘அம்மா நீ ஏற்காட்டுக்கு எதுக்குப் போனே?’’ என்றாள்.
ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘ஏற்காடா? நான் அங்கு போனதே இல்லை. இளநீர் சொல்லட்டுமா, அருகம்புல் ஜூஸா?’’

அம்மாவால் எப்படிச் சரளமாகப் பொய் சொல்ல முடிகிறது? அவசரமாக இளநீர், அருகம்புல் எனப் பேச்சை மாற்றுகிறாள். காரில் டேஷ் போர்டில் ஏற்காடு லேக் வியூ ஹோட்டலின் லாட்ஜ் பில் இருந்ததைச் சொன்னால், என்ன சொல்வாள்? ரவி என்பவரின் பெயரில் புக் செய்யப்பட்ட டபுள் பெட்ரூம் ஏ.சி. டீலக்ஸ் அறை. அவசரமாக இன்னொரு பொய்யைத் தயாரிக்கவைத்து அவளைச் சங்கடப்படுத்த வேண்டியிருக்கும் என விட்டுவிட்டாள்.

அதுவும் தான் பெங்களூருவுக்கு இன்டர்வியூ போன நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது இந்த மலைப் பயணம். மகளைத் தாய் கண்காணிக்க வேண்டிய தருணத்தில், அம்மாவை மகள் போட்டு வாங்குவதில் ஒரு குரூரமான சுவை இருந்தது அனிதாவுக்கு. குரூரம் என்பது பெரிய வார்த்தை... குறுகுறுப்பு இருந்தது.

இந்த வயதில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ ஹம்மிங் செய்தபடி மீன் பொறித்துக்கொண்டிருந்தது மகளுக்குக் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது. அம்மாவைக் காயப்படுத்தாமல் அவளுடைய ரகசியங்களை அவிழ்க்க வேண்டும் எனவும் அனிதா நினைத்தாள். அம்மாவுக்கென பிரத்யேகமாகக் கொஞ்சம் ரகசியம் இருந்தால்தான் என்ன எனவும் நினைத்தாள்.

ஜானகி லஞ்ச் பிரேக்கில் சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் மகள் கேட்டது நினைவுக்கு வந்தது. ‘ஏற்காடு...’ அதைப்பற்றி மேற்கொண்டு அவளிடம் கேட்காமல் விட்டுவிட்டோமே? ஏற்காடு போயிருக்கிறாயா என அவள் கேட்கவில்லை. போகலாமா எனவும் இல்லை. எதுக்குப் போனே? இப்படித்தானே கேட்டாள். அவளை விட்டுவிட்டு தனியாக நான் ஏன் போகப் போகிறேன். அதுவும் அவளிடம் சொல்லாமல்? அனிதாவுக்கு போன் போட்டுக் கேட்டாள்.

‘‘ஏன் அப்படி கேட்டே?’’

சட்டென்று, ‘‘உன் கார் டேஷ் போர்டில் ஏற்காடு லாட்ஜ் பில் பார்த்தேன். அதான் கேட்டேன்’’ என்றாள். ஜானகிக்கு அது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. நான் இதைப் பற்றித்தான் கேட்கிறேன் என அவள் எப்படி அத்தனை சுருக்காகப் பேச முடியும்? ஜானகிக்கு கோபமாகவும்கூட இருந்தது. எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் நேரடியாகக் கேட்க வேண்டியதுதானே? அதில் ஏதோ உள் அர்த்தம் வைத்துக்கொண்டு யாரையோ கேட்பது மாதிரி ஏன் கேட்க வேண்டும்?

‘‘லாட்ஜ் பில்லா? என்ன அனிதா... பார்த்தவுடன் உடனே கேட்க வேண்டியதுதானே? யார் அதை என் டேஷ் போர்டில் வைத்தது எனத் தெரியவில்லையே? யாரையாவது ட்ராப் பண்ணும்போது மறந்து வைத்துவிட்டுப் போயிருக்கலாம்... அதை அப்படியா கேட்பே?’’

‘‘ஸாரிம்மா... ஏதோ ஆபீஸ் டூரா இருக்குமோன்னு கேட்டேன். நான் அப்ப பெங்களூர் இன்டர்வியூவுக்குப் போயிருந்தேன். அதான்!’’

‘‘நீ அப்படிக் கேட்ட மாதிரித் தெரியலை.’’

‘‘ஸாரிம்மான்னு சொன்னேன்ல? விளையாட்டாத்தான் அப்படி கேட்டேன். நீ ஏன் சீரியஸா எடுத்துக்கிற?’’

‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். சே... அம்மாவைப் பற்றி தொடர்ந்து அப்படியான நினைவை வளர்ப்பது சரியல்ல. யாரோ லாட்ஜ் பில்லை மறந்து வைத்துவிட்டார்களாம். இருக்கட்டும் அம்மா.  இருபத்தாறு வயதில் கணவரைவிட்டுப் பிரிந்தாய்... எனக்காகவே வாழ்ந்தாய். யாருடனோ நெருங்கிப் பழகுகிறாய் என்பதால், என் நேசம் குறைந்துவிடாது அம்மா. என் மீது இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் அம்மா, உன் மீதும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கருத்தடை மாத்திரை எல்லாம் எதற்கு? முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாமே? நானே எப்படி உனக்குச் சொல்ல முடியும்?’

அனிதாவுக்கு 22 வயது. ரமேஷுக்கும் அவளுக்கும் பெங்களூருவிலேயே வேலை கிடைத்துவிடும். பிறகு அம்மாவிடம் அறிமுகப்படுத்திவிட்டுக் கல்யாணத்துக்குத் தேதி குறிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்குள் அம்மாவே இப்படிக் குறுக்குசால் ஓட்டுவாள் என நினைக்கவில்லை.

‘ஓ!’ ஜானகிக்கு நினைவு வந்துவிட்டது. ‘ரவி ஒருநாள் தன் காரை வாங்கிக்கொண்டு வெளியூர் போனார். அது ஏற்காடாக இருக்கலாம். ஏதோ கான்ஃபரன்ஸ் என்றார். அந்த பில்தான். காரிலேயே வைத்துவிட்டார். யெஸ். அனிதா பெங்களூர் போயிருந்த சமயம். அதற்குள் என்ன கேள்வி கேட்டுவிட்டாள்? இந்தக் காலத்துப் பசங்களுக்கு தைரியம் அதிகம்தான். அம்மாவையே போட்டுப் பார்க்கிறார்கள்.’

அனிதாவின் செல்பேசி எண்ணை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். தன்னுடன் வேலை பார்க்கும் ரவி என்பவர் ஏற்காட்டுக்கு கார் எடுத்துக்கொண்டு போய் வந்ததைச் சொன்னாள். எதற்காக அத்தனை அவசரமாக இப்படி விளக்கம் கொடுக்கிறோம் என ஜானகிக்கே குழப்பமாகத்தான் இருந்தது.

இரவு சாப்பிட உட்கார்ந்தபோது ஜானகியிடம் அந்த மருந்து ரசீதைக் காட்டினாள் அனிதா. ‘‘இது என்ன மாத்திரை அம்மா?’’

‘‘இதெல்லாம் உனக்கு எதற்கு?... எங்கிருந்து எடுத்த இதை?’’

‘அம்மாவிடம் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. இந்த மருந்து ரசீது என்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்திருந்தால், வேறு நியாயம் பேசுவாள்’ அதற்குள் ரவி என்ற நபரிடம் இருந்து ஜானகிக்கு போன் வந்துவிட்டது. பாதிச் சாப்பாட்டில் அப்படியே செல்போனை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் போய் நின்றுகொண்டு அரைமணி நேரம் பேசினாள். அனிதா சாப்பிட்டுவிட்டு டி.வி-யின் முன்வந்து அமர்ந்தாள். சிவாஜிகணேசனும் கே.ஆர்.விஜயாவும் பாடுவதாகக் காட்சி. ‘ஐம்பதிலும் ஆசை வரும்... ஆசையுடன் பாசம் வரும்’ வேண்டுமென்றே கொஞ்சம் சத்தமாக வைத்தாள். ஜானகியும் தன் நிலைக்கு வந்ததுபோல போனை முடித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

‘‘யாரும்மா அது ரவி?’’

‘‘அதான் சொன்னேனே... என் ஆபீஸ் ஃப்ரெண்ட். உனக்கு இன்ட்ரடியூஸ் பண்றேன். வெரி நைஸ் ஜென்டில்மென்.’’

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லோன் சேங்க்‌ஷன் செய்தது ரவியின் தவறு. 45 லட்ச ரூபாய். கடன் வாங்கிய மனிதர் இரண்டு டியூகூட ஒழுங்காகக் கட்டவில்லை. இன்னும் நான்கு மாதங்கள் கட்டவில்லை என்றால்,  ஏல நோட்டீஸ் அனுப்ப வேண்டியதுதான். பிசினஸில் ஏகப்பட்ட வருவாய் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருந்தான் லோன் வாங்கியவன். இரண்டு வருட இன்காம்டாக்ஸ் ஃபைலிங் ரிப்போர்ட் எல்லாம் இருந்தது. ஆனால், இரண்டு வருடமாகத் திட்டமிட்டு அத்தனை பேப்பர்களையும் தயார் செய்திருக்கிறான். இப்போது லாஸ் கணக்குக் காட்டுகிறான். வேறு சோர்ஸ் இல்லை. ஊரில் தன் பெயரில் நிலம் இருப்பதாகவும் விற்று லோனை அடைத்துவிடுவதாகவும் சொல்கிறான். ஊரில் உள்ள நிலத்துப் பத்திரத்தை அடமானமாக வைக்குமாறு சொன்னால், இன்னும் பங்கு பிரிக்கவில்லை என ஜகா வாங்குகிறான். யாரோ நம்பிக்கையான ஆள் சொன்னதால், ரவி நம்பிவிட்டார். ஜானகிதான் அவ்வப்போது ரவிக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தாள்.

பேப்பர்களைவிட மனிதர்கள் நம்பகமானவர்கள் இல்லை. ரவிக்குத் தெரியவில்லை. மனிதர்கள் மீது நம்பிக்கை. படிக்கும் வயதில் தொடங்கி மூன்று தங்கைகளையும் கரைசேர்க்கும் பொறுப்பு. அவருடைய அம்மாவும் அப்பாவும் ரயில்விபத்தில் இறந்துபோனார்கள். தன் 42-வது வயதில்தான் அவருக்குக் கடமை முடிந்தது. நேர்மையான, பண்பான மனிதர். தனக்கு ஓர் உறவைத் தேடிக்கொள்ளலாமா, இப்படியே இருந்துவிடலாமா என மேலும்  ஐந்து வருடங்கள் ஊசலாடி, இப்போது திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவர் முடிவெடுப்பது அவ்வளவு முக்கியமா? அவருக்கு முன்பே சமூகம் எடுத்துவிட்டது.


அனிதா ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு போனை எடுத்தாள். அம்மாதான். ‘‘என் ஹாண்ட் பேக்ல ஒரு மருந்து சீட்டு இருந்ததே அதை எங்க வெச்சேன்னு தெரியலை. நீ எங்கயாவது பார்த்தாயா?’’

‘‘அம்மா ட்ராஃபிக்ல நிக்கிறேன். வீட்டுக்கு வந்து சொல்றேன்.’’

‘‘கொஞ்சம் அவசரம்மா.’’

‘‘ரசீது எங்க இருக்குன்னு தெரியாது. அந்த ரசீதை செல்போன்ல எடுத்து வெச்சிருக்கேன். இப்ப வாட்ஸ்அப்ல அனுப்பறேன்.’’

‘‘போட்டோ எடுத்து வெச்சிருக்கியா? அதை எதுக்குடீ போட்டோ எடுத்த?’’

‘‘சும்மாத்தான்...’’

‘‘என்னது சும்மாத்தான்?’’

அனிதா சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு, வாட்ஸ்அப்பில் அந்த ரசீதை அனுப்பினாள்.

வீட்டுக்கு வந்ததும் ஜானகி கேட்ட முதல் கேள்வியில் அனிதாவுக்கு ஆத்திரம்தான் வந்தது.

‘‘ஏம்மா... எதுக்கு அதை போட்டோ எடுத்தேன்னு வந்ததும் வராததுமா கேட்கறீயே... உனக்கு எதுக்கு அந்த மருந்துன்னு நான் கேட்கட்டுமா?’’

ஜானகி தீர்மானத்தன்மை மிகுந்த முகத்தோடு, ‘‘கேளுடீ... எங்க பேங்க் அட்டெண்டர் ராஜலட்சுமிக்கு ஏற்கெனவே மூணு பொம்பளைப் பசங்க. இப்ப மறுபடி கன்சீவ் ஆகிட்டா. இதுதான் முதல் மாசம்... கலைக்கணும்னு சொன்னா. டாக்டரிடம் கூட்டிக்கிட்டுப் போனேன். மருந்துச்சீட்டு என் பேக்ல மாட்டிக்கிச்சு. நேத்து நீ வேற அது என்ன மருந்துன்னு கேட்டே... இப்ப அவளுக்கு போன் பண்ணி அந்த மருந்து பேரைச் சொல்லிட்டேன். போதுமா?’’

லாஜிக்காக சரியாகத்தான் இருந்தது. ஜானகி இப்படி பொருத்தமாக ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டதால், அனிதாவுக்கும் சற்றே இயல்பாக மாற முடிந்தது. அம்மாவால் சமாளிக்க முடியாமல் போயிருந்தால், இருவருக்கும் அல்லவா தர்மசங்கடமாக இருந்திருக்கும்? காரில் லாட்ஜ் பில்லை ஒருவர் மறந்து வைத்துவிட்டுப் போகிறார். இன்னொருத்தர் மருந்து சீட்டை மறந்துவிட்டுப் போகிறார். அனிதா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

ஆனால், சில நிமிடங்களிலேயே தன் அபத்தக் கற்பனையை அவள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவசர அவசரமாக அந்த மருந்துச் சீட்டின் தேதியைப் பார்த்தாள். அவள் பெங்களூருக்கு இன்டர்வியூ போன தேதி. அந்த மருந்து ரசீதில் இருந்த தேதியும் அம்மா ஏற்காட்டில் இருந்ததாக, தான் நினைத்த தேதியும் ஒன்றுதான். ஒரே நாளில் அம்மா இரண்டு இடங்களில் இருக்க முடியாது. சே... அம்மாவை சந்தேகப்பட்டதன் ஆரம்பமே தப்பு எனத் தெரிந்தது. அம்மா எந்தத் திட்டமும் போட்டு சமாளிக்கவும் இல்லை. பொய் சொல்லவும் இல்லை. மகளுக்கு ஒருவேளை சந்தேகம் ஏற்பட்டிருக்குமோ என்ற கவலையில் சில விளக்கங்களை மெனக்கெட்டு சொன்னாள். ‘ஸாரி அம்மா.’ ஒருத்தரிடம் குறை காண்பதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு வேகம்? மனசுக்குள்ளாகவே கன்னத்தில் போட்டுக்கொண்டாள் அனிதா.

மீபகாலமாக அனிதா தன்னைச் சந்தேகிப்பதை ஜானகியால் உணர முடிந்தது.  ‘அந்த மருந்து உனக்கு எதற்கு?' எனக் கேட்டாளே... அது சந்தேகமா, கோபமா? குற்றச்சாட்டா? ரவியை ஒருமுறை வீட்டுக்கு அழைத்துவந்து இவர்தான் அவர் என்பதை விளக்கிவிட்டால், ஒருவேளை அனிதாவுக்கு சந்தேகங்கள் நொறுங்கிவிடும் என நினைத்தாள். அனிதாவின் மனதிலிருக்கும் தீப்பொறியை உடனே அணைப்பது நல்லது. மகளுக்குத் தேவைப்படும் விளக்கம் அவளுக்கேகூட தேவைப்படும் நிலைமை சில நாள்களுக்கு முன் நிகழ்ந்தது.

வங்கியில் மேனேஜர் அறைக்குப் பறவையின் சிறகுகள் போல மார்பளவு உயரத்தில் ஓர் ஊஞ்சல் கதவு உண்டு. போவோரும் வருவோம் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் தள்ளிவிட்டபடி ஓடிக்கொண்டிருப்பார்கள். ஒருமுறை ரவி தன் இரண்டு கைகளாலும் அந்தக் கதவை வெளிப்பக்கம் இருந்து தள்ள முயற்சிப்பதற்குள், ஜானகி உள்பக்கம் இருந்தபடி அதை இழுத்தாள். இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிட்டது. ரவியின் உள்ளங்கை இரண்டும் ஜானகியின் மார்பகத்தில் அழுந்திவிட்டன. இருவருக்கும் திகைப்பு. ரவி சற்றும் எதிர்பாராதவிதமாக ஜானகியின் காலைத் தொட்டு ‘‘ஸாரி’’ என்றார். ‘‘அய்யோ என்ன சார் நீங்க... பரவாயில்லை’’ என ஜானகியும் உடனே திகைப்பில் இருந்து பெருந்தன்மைக்குத் திரும்பிவிட்டாள். இது நடந்து சில நாட்களாக ரவி எதிர்ப்படவில்லை. எதிர்ப்பட்ட ஒரு நேரத்தில் ஜானகியை ரவி ஏறெடுத்துப் பார்க்கவே சங்கடப்படுவது தெரிந்தது.

‘‘ஏன் ரவி என்கிட்ட பேசாம போறீங்க?’’ என ஜானகிதான் கூப்பிட்டுக் கேட்டாள். அப்போது கேபினில் யாருமில்லை.

‘‘உங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தான் வருது’’ ரவிக்கு மறைத்துப் பேசவும் தெரியாது. ஜானகிக்குச் சிரிப்புதான் வந்தது.

‘‘தெரியாம நடந்ததுதானே... அதுக்காகப் பேசாமலே இருப்பீங்களா?’’

அதன்பிறகு ரவி சொன்னதுதான் பரிதாபமாக இருந்தது. ‘‘எனக்கு அந்த ஷாக்ல இருந்து மீளவே முடியலை.’’

‘‘சரி ரவி... நான் கிளம்பறேன்.’’ ஜானகி விருட்டெனக் கிளம்பிவிட்டாள்.

ரண்டு பேரும் ஒரே புள்ளியில் சிந்தித்தனர். ரவியை ஒருமுறை பார்க்க வேண்டும் என அனிதாவும் நினைத்தாள். அவரைப் பார்த்தால், எல்லா மேகமும் விலகிவிடும் என்பது ஜானகியின் எண்ணமாகவும் இருந்தது. அனிதாவுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டதைத் தீர்த்துவைப்பது நமக்கு ஒரு வேலையா என நினைக்கும்போதே, மகள் இந்த வயதில் தன்னைச் சந்தேகிப்பதும்கூட ரசனைக்குரிய நினைவாகத்தான் ஜானகிக்கு இருந்தது.

p68b.jpg

ரவி வீட்டுக்கு வந்த நேரத்தில் அனிதாதான் முதலில் பேசினாள்.

‘‘அங்கிள், நீங்கள்தான் ரவியா?’’

‘‘ஆமாம் அனிதா’’ எனக்கும் உன் பெயரைத் தெரியும் என்பதாகக் கண்களைச் சிமிட்டினார். மிருதுவான கைகுலுக்கலில் ஒளி பொருந்திய உண்மையான அந்தக் கண்களில் அனிதா குற்ற உணர்வுக்கு ஆளானாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘‘காலைல கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்ஃபர். அங்கே போய் சார்ஜ் எடுக்க வேண்டும். எல்லாமே தப்பாகிவிட்டது. வீட்டை ஏலம் விட்டுத்தான் கடனைத் திருப்ப முடியும் என்று முடிவாகிவிட்டது. எனக்கு ஒரு ப்ளாக் மார்க் இந்த விஷயத்தில்’’ என்று அனிதாவுக்கும் எல்லாமே தெரிந்திருக்கும்போலச் சொன்னார் ரவி.

ஜானகி, ‘‘பேங்க் விவகாரம் எல்லாம் அவளுக்குத் தெரியாது’’ என அவசரமாக முன்வந்தாள். வீட்டில் ஓர் ஆணின் குரலும் வாசனையும் ஜானகிக்கு அந்த நேரத்தில் வினோதமாகத்தான் இருந்தது.
சாப்பிடுவாரா, வெறும் டீயோடு கிளம்பிவிடுவாரா என மனதுக்குள் நினைத்துக்கொண்டே சப்பாத்தி, கோழிக் குருமா, கேசரி அல்வா என ஜானகி விதம்விதமாகச் சமைத்திருந்தாள். இரவு மூவரும் சாப்பிட்டபோது, அறையைக் காலிசெய்துகொண்டு வந்துவிட்டதைச் சொன்னார்.

‘‘எல்லா மெட்டீரியலையும் வேன்ல ஏத்தி கோயமுத்தூர் அனுப்பிட்டேன். இதோ இந்த ஒரு பெட்டி மட்டும்தான்.’’

‘‘அய்யோ அங்கிள். அப்ப நைட் எங்கே ஸ்டே பண்றீங்க?’’

‘‘எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. இந்த ஒரு நைட் தங்கிக்க முடியாதா?’’

‘‘காலையில எத்தனை மணிக்கு ட்ரெய்ன்?’’

‘‘ஆறரை.’’

‘‘அதுவரைக்கும் தங்குறதுக்கு ஓர் அறை தேடுவீங்களா? இந்த ரூம் சும்மாத்தான் இருக்கு. நீங்க இங்கயே தங்கலாம்... என்னம்மா சொல்றே?’’

இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு யோசனை சொல்லிவிட்டு அதற்குச் சம்மதம் கேட்கும் மகளை ஒரு கண்டிப்பு கலந்த பார்வை பார்த்த ஜானகியை ரவியும் கவனிக்கத் தவறவில்லை. ‘‘அது சரியா இருக்காது. நான் கிளம்பறேன்.’’

‘‘நோ ப்ராப்ளம் ரவி சார்... அதனால் என்ன? இப்பவே மணி 9 ஆகிடுச்சு. இனிமே போய் எங்க தங்கிட்டு, காலையில போய் ட்ரெயினைப் பிடிப்பீங்க?’’ மகள் அத்தனை அழுத்தமாகவும் பெருந்தன்மையாகவும் அழைப்பு விடுத்தபின்பு ஜானகி மட்டும் என்ன செய்வாள்?

‘‘பயப்படாதீங்க அங்கிள்...’’ அந்த அறையின் விளக்கையும் ஃபேனையும் இயங்கவைத்து, ‘‘ரொம்ப மோசமாக இருக்காது. வந்து பாருங்க’’ என்றாள் அனிதா.

அவன் இத்தனை நாள் தங்கியிருந்த அறையைவிட அது அழகாகவே இருந்தது. ரவி சிரித்துக்கொண்டே சொன்னார். ‘‘இது எனக்கு அரண்மனை’’ ஒரு வழியாக அனிதாவின் அன்புக்காகவும் பிடிவாதத்துக்காகவும்தான் அன்று ரவி அங்கே தங்குவதற்குச் சம்மதித்தார்.

டி.வி ஓடிக்கொண்டிருந்தது.

‘‘அம்மாவுக்கு முரசு சேனல், சன் லைஃப் இந்த மாதிரிதான் பார்க்கப் பிடிக்கும் அங்கிள். சிவகார்த்திகேயனை விஜய்சேதுபதிம்பாங்க. விக்ரம் பிரபுவை கார்த்திக் பையனாம்பாங்க...’’

‘‘சிவகார்த்திகேயன்னா யாரு?’’ என்றார் ரவி.

‘‘அங்கிள் நிஜமாத்தான் சொல்றீங்களா?’’

‘‘கிரிக்கெட் பிளேயரா?’’

p68c.jpg

‘‘போதும் அங்கிள். நீங்க ரெண்டு பேரும் சன் லைஃப் பாருங்க’’ சேனலை மாற்றிவைத்துவிட்டு, அனிதா வாட்ஸ்அப்பில் எதையோ பார்க்க ஆரம்பித்தாள். அனிதாவுக்கு ரவியை முழுதுமாகப் புரிந்துபோயிருக்கும் என்பதே ஜானகிக்கு சந்தோஷமாக இருந்தது. சோபாவிலேயே சாய்ந்து உறங்க முயற்சி செய்த அனிதாவை, ‘‘உள்ளே போய் படு’’ என அதட்டினாள்.

ரவி வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். புதிய இடம் தூக்கம் வரவில்லை. நினைவுகளின் துரத்தலும் ஒரு காரணம். ‘தற்செயல் என ஏதாவது உண்டா? செயல் மட்டும்தான் உண்டு. தானாக எதுவும் நடப்பதே இல்லை. ஜானகியின் மீது மோதியது தற்செயலா? இல்லை... நற்செயல்... ஹா... ஹா! சே! தற்செயல் இல்லை. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்ததா? எதிர்பாராமல் எதிர்பார்த்தது.’

ரவிக்கு இந்த இரவை எப்படியாவது முடித்துவிட்டுக் கிளம்ப வேண்டும்போல இருந்தது. அவர் கையில் எதுவும் இல்லைபோல தோன்றியது. ரவி அறையைவிட்டு வெளியே வந்தபோது, ஹாலில் ஊதா நிறத்தில் மெல்லொளி பாய்ச்சிய ஒரு விளக்குமட்டும் எரிந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் ஜானகி அவள் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். தற்செயல்தான்! உள்ளே மகள் இருக்கிற அவதானிப்பில் மெல்ல கதவைச் சாத்தி வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ‘‘என்ன ரவி?’’ என்றாள்.

``தாகமா இருந்தது'' என்றார் ரவி.

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   பொம்மை - சிறுகதை
     பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில்  
   மழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை.

   ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை.

   ``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார்.
   அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன். ஸ்ரீனிவாசன் எழுதிய சிறுகதைகளைப் படித்துவிட்டுப் பாராட்டி அஞ்சல் அட்டையில் எழுத, அதற்கு அதே விதமான அஞ்சல் அட்டையில் ஸ்ரீனிவாசன் நன்றி சொல்ல, `எங்கள் ஊர்ப் பக்கம் வாருங்களேன். நல்ல இயற்கைக் காட்சிகள் இருக்கின்றன’ என்று சொல்ல, `வேறு என்ன விசேஷம்?’ என்று இவன் அஞ்சல் அட்டையில் கேட்க, `அதர்வண வேதம்’ என அவர் விளக்கியிருந்தார்.

   படாரென ஒரு துள்ளலுடன் அங்கு போகத் தயாரானான். இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். சனியும் ஞாயிறும் அவனுக்கு விடுப்பான நாள்கள். மொத்தம் நான்கு நாள்கள் அவன் கையிலிருக்க, தகுந்த காசு சௌகரியங்களோடு அவன் ரயில்வண்டியில் ஏறி ஓர் ஊரில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்துச் சந்திரமோகனுடைய ஊருக்குப் போனான். அவரது வீட்டில் குளித்துச் சாப்பிட்டுவிட்டு உட்கார...

   ``என் உறவுக்காரரே அதர்வண வேதத்தில் நல்ல பயிற்சி உடையவர். மாந்திரீகர்.  இதை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கு வந்திருக் கிறீர்கள்?” என்று சந்திரமோகன் ஆவலுடன் கேட்டார்.

   ஸ்ரீனிவாசன் மௌனமாக இருந்தான்.

   ``கதை எழுத வேண்டும் எனப் பார்க்கிறீர்களா?” என்று அவர் வினவ,

   ``அதுவும் ஒரு காரணம்” என்றான்.

   ``அதுவும் என்றால்...”

   ``வேறு சில தொந்தரவுகள் இருக்கின்றன. அதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.”

   ``என்ன மாதிரி?”

   ஸ்ரீனிவாசன், அவரிடம் சொல்வதா, வேண்டாமா என யோசித்தான். அவனின் தயக்கத்தை அவர் புரிந்து கொண்டார்.

   ``இந்த மாதிரி விஷயங்கள் எல்லோரிடமும் சொல்லத் தகுந்ததாக இருக்காதுதான். எனக்குப் புரிகிறது. என் உறவினரிடம் நான் அழைத்துப் போகிறேன். அவரிடம் பேசுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். மிகுந்த உயர்ந்த குணம்கொண்டவர்; கம்பீர மானவர். ஐம்பத்தைந்து வயது, போன மாதம்தான் நிறைந்தது. பார்த்தால் அப்படித் தெரியாது. தன்னுடைய இளமைக்குக் காரணம் அதர்வண வேதம்தான் என்று சொல்பவர். உங்கள் குறை களை அவரிடம் சொல்லுங்கள்” என்று பெருந் தன்மையோடு அழைத்துப் போனார்.

   மலையாளிகள் அடுத்தவர் விஷயங்களில் தலையிடு வதில்லை. தானாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள். `என்ன... என்ன..?’ என மூக்கு நுழைப்ப தில்லை. ஒருபோதும் தானாக நடப்பதில்லை என மனதில் நினைத்துக்கொண்டான்.

   நல்ல உணவுக்குப் பிறகு, அவருடன் மண் சாலை ஒன்றில் நடந்தான். எல்லா இடங்களுக்கும் ஸ்கூட்டரில் போய் பழக்கமான அவனுக்கு, இந்தத் தூரம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. தோளில் பை மாட்டி, கையில் அவருடைய குடையை எடுத்துக்கொண்டு நடக்க, திடீரென மழைத்தூறலும் பிறகு வெய்யிலுமாக வானம் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.

   கேரளத்தில் பசுமை, மனதை நிறைத்தது. குட்டைத் தென்னையும், காட்டுச் செடிகளும் பச்சை வாசனையைப்  பெருக்கின. கேரளத்து மக்கள் அந்த மண் சாலையில் குதிகால் படாமல் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஸ்ரீனிவாசனுக்குத்தான் `வழுக்கிவிடுமோ’ என பயமாக இருந்தது.

   அவர் வீட்டை அடைந்ததும் குடைகளைத் திண்ணையில் சாய்த்துவைத்துவிட்டு கீழே இருந்த நார் மிதியடியில் கால்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு உள்ளே போய், அங்கு வேலையாள் கொடுத்த சிறிய துணி ஒன்றில் முழங்கால்களைத் துடைத்துக்கொண்டு விரித்திருந்த பெரிய பாயில் அமர்ந்து கொண்டான்.

   பெரிய கூடம், எதிரே முற்றம். முற்றத்தில் துளசிச்செடி. கூடத்தில் சின்ன மஸ்தானின் உருவம். நிர்வாணமாக நின்று ஓர் ஆணின் தலையை வெட்டி ரத்தம் குடிக்கும் சின்ன மஸ்தான். பலகையில் கட்டங்கள் எழுதப்பட்டிருக்க, ஒரு கொத்து சோழி அருகே வைக்கப்பட்டிருந்தது. கணக்குப்பிள்ளை ஸ்டூல்போல ஒன்று இருந்தது. அதன்மீது மூக்குக்கண்ணாடி இருந்தது. கொஞ்சம் முதுகு மெத்தையாய் ஓர் இடமும் கீழே தர்ப்பைப் பாயும் இருந்தன. காலையில் குங்கிலியமும் சாம்பிராணியும் போட்டிருக்க வேண்டும். அந்த வாசனை வீசிற்று. வெள்ளைத்துண்டு மடித்து வைக்கப்பட்டிருந்தது.

   உட்கார்ந்தவுடனேயே கட்டங்காபி வந்தது. சாரல் மிகுந்த அந்தச் சூழலுக்கு, அந்த காபி இதமாக இருந்தது. கொடுத்து முடித்த சிறிது நேரத்தில் சந்திரமோகன் உறவுக்காரர் வந்தார்.

   ஈஸ்வரன் ஸ்வாமி என்ற பெயர்ப் பலகை, வாசலில் தொங்கியிருந்தது அவரைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. நல்ல உயரம், கொஞ்சம் கறுப்பு, முன் வழுக்கை, கூர்மையான மூக்கு, தடித்த கண்ணாடி, வெற்றிலை போட்டுச் சிவந்த இதழ்கள், அகலமான மார்பு. வெள்ளை வேட்டியும் காலர் இல்லாத சட்டையுமாகப் பெரிய வரவேற்புக் குரலோடு வந்து உட்கார்ந்தார். சந்திரமோகனோடு மிக வேகமாக மலையாளத்தில் பேசினார்.
   ஸ்ரீனிவாசனுக்குப் புரியவில்லை. தாய், தந்தை, தமக்கை, குழந்தைகள் எனச் சகலரையும் விசாரிக்கிறார் எனத் தெரிந்தது. `வேறு என்ன?’ என்றபோது, சந்திரமோகன் அவனைச் சுட்டிக் காட்டினார்.

   ``ஓ... இப்பதான் ஞாபகம் வருது. சினேகிதம் இல்லையா” என்று சொல்ல,

   ``ஆமாம்.”

   ``எழுத்து அல்லவா” என்று கேட்க, மறுபடியும் சந்திரமோகன் ``ஆமாம்’’ என்று சொல்ல,

   ``என்னிடத்தில் இவருக்கு என்ன வேணும்?” சட்டென மலையாளம் பேசப்பட்டது.

   ``இவர் மாந்திரீகம் பிரயோகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதற்காக வந்திருக்கிறார்.”

   ஈஸ்வரன் ஸ்வாமி திரும்பி இவனைப் பார்த்தார்.

   ``எதற்காக அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?”

   ஸ்ரீனிவாசன்  பதில் சொல்ல சற்று தாமதித்தான்.

   ``எதிரிகள் இருக்கிறார்களோ?” ஈஸ்வரன் ஸ்வாமி ஆரம்பித்தார்.

   ``ஆமாம்.”

   ``கடுமையாக இருக்கிறார்களோ..?”

   ``ஆமாம்.”

   ``தாங்கமுடியாமல் இங்கு வந்திருக்கிறீரோ..?”

   ``ஆமாம்.”

   ``இதை என்னிடம் சொன்னால் போதுமே. நான் பரிகாரம் செய்துவிடுவேனே. துன்பங்கள் குறையுமே. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என ஏன் வந்தீர்கள்?”

   ``வாழ்க்கை முழுவதும் எதிரிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.”

   ``ஓ... ஒவ்வொரு முறையும் ஓர் ஆசானைத் தேடி வர முடியாது.”

   ``அதே. அதை நானே கற்றுக்கொண்டால், எனக்கே அந்த வித்தை தெரிந்தால், மனிதர்களைக் கையாள்வது எளிதாக இருக்குமல்லவா.”

   ``அப்படியா!”

   அவர் புருவங்களை உயர்த்திப் பார்த்தார். சந்திரமோகனை மெள்ளப் பார்த்துச் சிரித்தார். சந்திரமோகன் சிரிக்கவில்லை. அப்படி என்ன வேதனை என்பதுபோல ஸ்ரீனிவாசனைப் பார்த்தார். ஈஸ்வர ஸ்வாமி சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

   ``காபி குடிச்சுதோ?”

   ``ஆச்சு.”

   ``இன்னொரு டம்ளர்...’’ எனக் கேட்க,

   அவன் ``சரி’’ என்றான்.

   உள்ளே குரல் கொடுத்தார். காபி வரும்வரை அமைதியாக இருந்தார்கள். கண்ணாடி டம்ளர் காபியை அவன் மறுபடியும் விரும்பிக் குடித்தான்.

   அந்த இடத்தில் அவரோடு பேசும்போது தொண்டை வறண்டும், வயிறு கொஞ்சம் குழைந்தும் இருந்ததுதான் காபி விரும்பியதற்குக் காரணம். அந்த காபி, அந்த விஷயத்தைச் சரி செய்தது; உற்சாகம் கொடுத்தது. `தொண்டை வறண்டு போயிருக்கிறது எனத் தெரிந்தே இவர் காபி வரவழைத்திருக்கிறார்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. நன்றியுடன் அவரை நோக்கி கைக்கூப்பினான். அவர் மறுபடியும் அழகாகச் சிரித்தார்.

   ``உங்க காபி வேற... எங்க காபி வேற”

   ``ஆமாம். ஆனால், இது சுவையாக இருந்தது” என்று பதில் சொன்னான்.

   ``எத்தனை நாவல் எழுதியிருப்பீர்?”

   ``முப்பது நாவல் எழுதியிருக்கிறேன். சிறுகதை தொண்ணூறு எழுதியிருக்கிறேன்.”

   ``அடிசக்கை! அப்போ பெரிய எழுத்தாளர்தான்.”

   ``இல்லை. இது போதாது. இன்னும் அதிகம் எழுத வேண்டும். இருநூறு, இருநூற்றைம்பது நாவல்களாவது எழுத வேண்டும்.’’

   ``அடிசக்கை. சினிமா உண்டோ?”

   ``இல்லை. அதற்குள்ளும் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதுவரை இல்லை.”

   ``நிச்சயம் போகலாம்.”

   அவர் சோழி எடுத்து உள்ளங்கைகளில் தேய்த்துப் பலகையில் போட்டார். மூன்று மல்லாந்தன... மற்றவை குவிந்தன. நிமிர்ந்து ஸ்ரீனிவாசனைப் பார்த்தார்.

   அவன் ``குரு’’ என்றான்.

   ``ஓ... இது தெரியுமோ?”

   ``கொஞ்சம்.”

   ``இன்னும் கத்துக்கணுமோ?”

   ``ஆமாம்.”

   ``மூன்று விழுந்தால் குரு. ஆறு விழுந்தால் சுக்கிரன். இது எளிது. அது ஜோசியம். என்னுடையது மாந்திரீகம்; மந்திரப்பிரயோகம். சாஸ்தா பூஜை, சாம்பவி பூஜை, சின்ன மஸ்தான், தூமாவதி எனப் பல்வேறுவிதமாக நான் ஈடுபடுவேன். மிகுந்த மனவடக்கமும் அமைதியும் தேவைப்படும். சென்னை போன்ற நகரங்களில் இவற்றைச் செய்ய இயலாது. நான் நகரத்திலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறேன் பார்த்தீர்களா? நகரத்திலிருந்து சந்திரமோகனே தள்ளித்தான் இருக்கிறான். சந்திரமோகன் இருக்கும் இடத்திலிருந்து இது இன்னும் உள்ளடங்க, இன்னும் சற்றுப் போனீர்கள் என்றால் காடுதான். இது ஒரு சிறிய கிராமம்.

   எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது தெய்வம். அந்த இடத்தில் வந்து உட்கார்ந்து பூஜிக்கிறேன் என்றால், அது அமைதியாக அந்த இடத்தில் வந்து அமர்ந்துகொள்கிறது. அதர்வண வேதத்தில் பாலபாடம், தெய்வத்தை அழைப்பதே. அழைப்பவன் மரியாதையாக அழைத்தால் எவரும் வந்து அமர்வார். என் வீடு சுத்தமாக இருந்தால் உங்களால் நெடுநேரம் அமர முடியும். துர்நாற்றம் வீசினால் உட்கார முடியாது. கிளம்பிப் போய்விடுவீர்கள். திரும்பக் கூப்பிட்டால் வர முடியாது. அதுபோலத்தான் தெய்வமும். இந்த இடத்தில் குங்கிலியமும் சாம்பிராணியும் காலையும் மாலையும் போட்டு மிகச் சுத்தமாக வைத்திருப்போம். துர்வாசனை வராது. மனம் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும்; உடல் சுத்தமாக இருந்தால் மனம் சுத்தமாக இருக்கும். மனமும் உடலும் சுத்தமாக இருந்தால், சூழ்நிலை சுத்தமாக இருக்கும். சூழ்நிலை சுத்தமாக இருந்தால், ஒரு வீடு சுத்தமாக இருந்தால், ஒரு கிராமம் சுத்தமாக இருக்கும்.

   ஒரு கிராமம் முழுவதுமே தேவதைகள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், இந்தக் கிராமத்தில் உள்ள அனைவருமே முழு நம்பிக்கையோடு தங்களையும் சுத்தப்படுத்தி, தங்கள் இல்லத்தையும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இது சென்னை போன்ற பட்டினத்தில் இயலாது. அதனால்தான் பட்டணத்துக்கார்களுக்கு இது சொல்லித்தருவதில்லை அல்லது இதைக் கற்றுக்கொள்பவர் பட்டினத்தில் இருப்பதில்லை. இந்தப் பக்கம் வந்துவிடுகிறார்கள். உங்களால் இந்தப் பக்கம் வர முடியுமா?”

   ``இயலாது.”

   ``எனக்குப் புரிகிறது. என்ன செய்கிறீர்கள்?”

   ``ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்.”

   ``பெரிய கம்பெனியோ..?”

   ``ஆமாம். மிகப்பெரிய கம்பெனி.”

   ``உங்கள் துக்கம் என்ன?”

   ``என்னை அலுவலகத்தில் ஒருவர் அவமானப்படுத்துகிறார்; தொடர்ந்து அவமானப்படுத்துகிறார். மன உளைச்சல் தருகிறார்.”

   ``வன்முறையா?”

   ```இல்லை. பேச்சினாலும் செய்கையினாலும்.”

   ``இன்னும் கொஞ்சம் வலித்துச் சொல்ல முடியுமா?”

   ``எனக்கு மனைவியாகப்போகிறவர், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பத்து பக்கக் கடிதம்.”

   ``ஓ...”

   ``அதில் என்னோடு சந்தோஷமாக இருந்த தருணங்களை விளக்கியிருக்கிறார். `உங்கள் கை என்மீது இன்னும் இருக்கிறது’ என்று வர்ணித்திருக்கிறார்.”

   ``சொல்லுங்கள்.”

   ``அந்தக் கடிதத்தை எனக்குத் தெரியாமல் எடுத்து, என் அலுவலக நண்பர்களிடம் அதைப் படிக்கக் கொடுத்து, சகலரும் சிரிக்கச் செய்துவிட்டார்.”

   ``இவருக்குத் திருமணமாகிவிட்டது. இவருக்குக் கடிதம் எழுதியது வேறொரு பெண். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய வேண்டும் என்று இவர் விரும்புகிறார்.”

   ``சரி.”

   சந்திரமோகன் போட்டுக்கொடுக்க, அவர் நிதானமாக ``சரி’’ என்ற வார்த்தையைச் சொன்னார். `இது தேவையில்லாமல் பேசியிருக்கிறாரோ!’ என்று மெல்லிய கோபம் வந்தது. ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. ஈஸ்வரன் ஸ்வாமி அமைதியாக இருந்தார்.

   ``சந்திரமோகன்... முதல், இரண்டாவது, மூன்று, நான்காவது அது விஷயமில்லை. ஒரு பெண்மணி அந்தரங்கமாக ஒருவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து அதை மற்ற எல்லோருக்கும் படிக்கக் கொடுப்பது என்பது அந்த ஆளுக்குச் செய்த துரோகம் அல்ல; அந்தப் பெண்ணுக்குச் செய்த துரோகம். ஒரு பெண்ணை அவமானப்படுத்தியிருக்கிறார்;   கேவலப்படுத்தி யிருக்கிறார். இவரைக் கேலிசெய்வதைவிட அதிகமாக அந்தப் பெண்மணியை அவர்கள் பேசுவார்கள். இழிவாகச் சொல்வார்கள். அது தவறு. அடுத்தவருடைய கடிதத்தைப் படிப்பதே தவறு. இந்த மாதிரிக் கடிதத்தைப் படிப்பது மிகவும் தவறு. இதைப் பல பேருக்குக் கொடுப்பது தவறு. அவர் பேர் என்ன?”

   ``வரதராகவன்.”

   ``ஓ... அவர் வேறு என்ன செய்கிறார்?”

   ``என்னை எப்படியேனும் வேறு இடத்துக்கு மாற்றிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்.”

   ``ஏன்?”

   ``நான் அவருக்கு அருகே இருப்பதால், லஞ்சங்களில் அவரை ஈடுபட முடியாமல் தடுக்கிறது. என்னிடம் இருக்கும் பொறுப்புகளையும் அவர் எடுத்துக்கொண்டு விட்டால், அவருக்கு அதில் மிகப்பெரிய பணவசதி இருக்கிறது.”

   ``ம்... நீங்கள் அவரைவிட்டு நகர முடியாதா?”

   ``நகரலாம். அது ஒரு தோல்வி என்பதாகப்படும். அவர் வெற்றிபெற்றதாக ஆகும்.”

   ``வேறு என்ன செய்கிறார்?’’

   ``நான் கதைகள் எழுதுகிறேன்.”

   ``சரி.”

   ``அதைச் சொல்லி `இந்தப் பொறுப்புக்கு வந்துவிட்டு  இந்தக் கதைகளெல்லாம் எழுதுவது சரியில்லை. இது பொறுப்பின் கவனத்தைக் குறைக்கும்’ என்று சொல்கிறார். நான் சிறு தவறு செய்தாலும் என் இலக்கியப் பணிதான் காரணம் எனப் பெரிதாகப் பேசுகிறார்.”

   ``இலக்கியம் அறியாதவரா?”

   ``காசுதான் முக்கியம் என்பவர்.”

   ``ஆமாம். மனிதர்கள் அப்படியும் இருக்கிறார்கள். சந்திரமோகன், ஒரு மனிதனுடைய நல்ல சக்தி இலக்கியம். உன்னதமான நிலை இலக்கியம். என்ன தொழில் செய்தாலும் இலக்கியவாதியாக ஒருவன் இருப்பாரேயானால், அவன் மனிதருள் சிறந்தவன். ஒருவேளை இவர் இலக்கியமேகூட அந்த இரண்டாவது பெண்மணியினுடைய அன்புக்குக் காரணமாக இருக்கலாம். அந்தப் பாராட்டு இவர்களுக்குள் நட்பு ஏற்படுத்தியிருக்கலாம். அது என்னவாகும் என்பது வேறு விஷயம். இந்த இரண்டையும் ஒருவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்றால், அது மிகப்பெரிய தவறு. அவரை உங்களால் மன்னிக்க முடியாதா?” ஈஸ்வரன் ஸ்வாமி மீண்டும் கேட்டார்.

   ``இல்லை. மன்னிக்க இயலாது. என்னுடைய வாசகியும் சினேகிதியுமான அந்தப் பெண்மணியை `ஒரு கேஸ்’ எனச் சொன்னது, என்னைக் குமுறவைத்துவிட்டது. அந்தப் பெண்மணி, மிக உயர்ந்தவர்; மிகச்சிறந்த பண்பாளி; அறிவுக்கூர்மைமிக்கவர். அவரின் கால் தூசுக்கு வரதராகவன் இணையாக மாட்டார்.”

   ``புரிகிறது. மனைவியை அல்லது மனைவியைப் போன்றவரை அவமானப் படுத்துவது என்பது போர் தூண்டுகின்ற விஷயமாகவே இருக்கிறது. பல போர்களுக்குக் காரணம் இதுவாகவே இருக்கிறது. இதை ஏன் மாந்திரீகத்தால் எதிர்க்க வேண்டும் என வந்தீர்கள்? நேரே போய் அடித்து நொறுக்கலாமே!”

   ``எனக்கு வேலை போகும். என் செயல்கள் யாவும் இலக்கியப் பணிகள் முதற்கொண்டு தடைபட்டுப்போகும்.”

   ``அடிசக்கை. நல்லது. முன்னமே சொன்னதுபோல மாந்திரீகம் என்பது தேவதைகளை வரவழைப்பது. தேவதைகளை எதிரே வரவழைத்துவிட்டு, அவர்களைப் பற்றிய மந்திர உச்சாடணங்களைச் செய்துவிட்டு நாம் பிரயோகத்தைத் தொடங்க வேண்டும். நாம் பிரயோகத்தைத் தொடங்க வேண்டும். நீங்கள் அந்தணர்தானே!”

   ``ஆமாம்.”

   ``போய் கைகால்களைச் சுத்தம் செய்து வாருங்கள்.”

   அவன் முற்றத்துக்குப் போய் கைகால்களைச் சுத்தம் செய்து வந்தான். அங்கு இருந்த துண்டில் முகம் துடைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். பையிலிருந்து பஞ்ச பாத்திரம் எடுத்துவைத்தான். தர்ப்பை பூக்களையும் தர்ப்பை மோதிரத்தையும் கீழே வைத்தான். அவர் வியந்தார்.
   ``கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தெளிவோடே இதை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களா?”

   ``ஆமாம்.”

   ``நல்லது. கற்றுத்தருகிறேன்.”

   அவர் சொம்பிலிருந்து பஞ்ச பாத்திரத்தில் போட, அவன் சட்டையைக் கழற்றிவிட்டு பையிலிருந்த மேல் துண்டை இடுப்பில் சுற்றி வேகமாக மூன்று உளுந்து அளவு ஜலம் குடித்துக் கணபதியை வேண்டி, பரமேஸ்வரரைப் பிரார்த்தித்துக் கைக்கூப்பி குரு வணக்கம் சொல்லி, ``என்ன தட்சணை?’’ என்று கேட்டான்.

   ``பிறகு பார்ப்போம். உங்கள் வேகம் உங்கள் காயத்தை எனக்குக் காட்டுகிறது. நல்லது. எப்போது தேவதைகளை வரவழைத்து விட்டோமோ, பிறகு பிரயோகம் தொடங்கும். தேவதைகளை இப்போது வரவழைப்போம்.”

   குறிப்பிட்ட ஒரு தேவதைக்கான மந்திரத்தைச் சொன்னார். ஸ்ரீனிவாசனைச் சொல்லச் சொன்னார். ஸ்ரீனிவாசனுக்கு அந்த மந்திரம் தெரிந்திருந்தது. அட்சரம் பிசகாமல் அழகாகச் சொன்னான்.

   ``ஏன் இந்த மந்திரத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?”

   ``இது சொன்னால் தடுக்கப்படும் என நினைத்தேன்.”

   ``தடுக்கப்படவில்லையோ?”

   ``இல்லை. கொஞ்சம் குறைந்தது, அவ்வளவுதான். அழியவில்லை. அழிக்கவே உங்களை நாடி வந்திருக்கிறேன்.”

   ``புரிகிறது. மந்திர ஜபம் செய்து தேவதைகளை இங்கு வரவழைக்கும் வித்தையை இப்படிச் செய்யலாம்.’’

   ``ஒரு கொத்து புஷ்பங்களை வைத்திருக்கிறேன். வந்து உட்காரும்படிச் சொல்கிறேன். நாம் சொன்ன நேரம் அவர் வந்து உட்கார்ந்தால் இந்தப் பூக்கள் சற்று சரியும். ஓர் ஆள் வந்து உட்கார்ந்ததற்கான விஷயம் நமக்குப் புரியும்.”

   அவர் கொத்துப்பூவை வைத்துவிட்டு, மறுபடியும் அவனோடு சேர்ந்து மந்திரம் சொன்னார். சட்டென பூக்கள் காற்றில் கலைந்ததுபோல் கலைந்தன. ஆனால், காற்று வீசவில்லை. அவர் உயர்த்தி கைகாட்டி அவனை அமைதிப்படுத்தினார்.

   ``இப்போது கோதுமை மாவில் ஒரு மனித உருவம் செய்ய வேண்டும்.”

   அவர் மரப்பெட்டியைத் திறந்து, உள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் குப்பியை எடுத்து அதில் இருந்த உருண்டையை எடுத்துக் காண்பித்தார்.

   ``இது இன்று காலை செய்தது. கோதுமை மாவு உருண்டை. இதில் மனித உருவம் செய்வோம்.”

   வெகு விரைவாக இரண்டு கை, இரண்டு கால், தலை, உடம்பு என அந்தப் பலகையில் மனித உருவம் செய்தார்.

   ``இப்போது இது வெறும் மனித உடம்பு; உன் எதிரி அல்ல. அந்த எதிரியின் உடம்பை இங்கு வரவழைப்பதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது.”

   அவர் வேறுவிதமான சத்தங்கள் எழுப்பும் மந்திரத்தைச் சொன்னார். அவனும் சொன்னான். அது அவன் அறியாதது.

   ``மெள்ள இதில் இப்போது உங்கள் விரல்களை வைத்தீர்கள் என்றால், தொட்டுத் தொட்டு எடுத்தீர்கள் என்றால் அந்த இடத்தில் அவருடைய உருவம் தெரியும்.’’

   அந்தக் கோதுமை மாவை வலது உள்ளங்கை விரல்களால் மெள்ள மெள்ளத் தொட்டுத் தொட்டு ஐந்து முறை எடுத்தான்.

   ``போதும் உற்றுப்பாருங்கள்” என்று சொல்ல, அங்கு மூக்கு, கண், தலை, முடி, கழுத்து, சட்டை என்றெல்லாம் பதிந்திருந்தன. கொஞ்சம் தொப்பையுடன் கூடிய வரதராகவனின் உடல் இருந்தது. அவன் பெரும் வியப்போடும் சிரிப்போடும் அவரைப் பார்த்தான்.

   ``வந்துவிட்டதா.”

   ``வந்துவிட்டது.”

   ``இப்போது இந்த மனிதரைத் தண்டிக்க, ஆயுதம் எடுக்க வேண்டும். இதோ இந்த மாதிரியான குச்சி.”

   அவர் பல் குத்தும் குச்சியைப்போல சற்று நீளமான குச்சியை அவனுக்குக் காட்டினார். மிக அழகாகச் சீவப்பட்டிருந்தது. முனை கூர்மையாக இருந்தது.

   ``இது குச்சி அல்ல. இது ஓர் ஆயுதமாக வேண்டும். அந்த ஆயுதத்துக்கான மந்திரம் இருக்கிறது. அது இப்படிச் செய்யப்பட வேண்டும்.”

   அவர் ``ஹ்ரீம் ஹும்’’ என்று மந்திரம்  சொல்ல ஆரம்பித்தார். மெள்ள மெள்ள அந்தக் குச்சியைத் தடவச் சொன்னார்.

   அந்தக் குச்சியைத் தடவினான்.

   ``இது எப்போது ஆயுதமாகிறது என்பது, உங்கள் கைகளுக்குத் தெரியும். இதைச் சொல்லிக்கொண்டே தடவுங்கள்.”

   ஸ்ரீனிவாசன்  ஏழு   நிமிடங்களுக்கும் மேலாக அந்தக் குச்சியைத் தடவிக்கொண்டிருக்கும் போது, சுளீரெனக் கை வலித்தது. ரத்தம் வந்துவிட்டதோ எனப் பார்த்தான். ரத்தம் வரவில்லை. ஆனால், ஒரு பிளேடு கிழித்ததுபோல எரிச்சல் இருந்தது.

   ``கத்தி கூர்மையாகிவிட்டது என அர்த்தம். உங்கள் கையைப் பதம் பார்த்து விட்டது. இதில் ரத்தம் வராது. ஏனெனில், இது உண்மையான கத்தி அல்ல. கத்தியின் வலிமையைக் கொண்டது. இது கத்தியாகிவிட்டது என்பதை உங்கள் வலி சொல்கிறது. இப்போது இதை எடுத்து அந்த வயிற்றிலோ அல்லது காலிலோ குத்தினால், சம்பந்தப்பட்ட வரதராகவன் அடிபடுவார். குத்திவிடலாமா?”

   ``குத்திவிடலாம்.”

   ``எவ்வளவு வலிக்கும் என நினைக்கிறீர்கள்?”

   ``அதிகம் வலிக்கும் என்றுதான் தோன்றுகிறது.”

   ``ஒருவேளை அவர் இறந்துவிட்டால்...”

   ``அவ்வளவு வலிக்குமா?”

   ``ஓ... எவ்வளவு வலிக்கும் எனத் தெரியவில்லை அல்லவா. இப்போது நாம் வேறுவிதம் செய்வோம். இதே பொம்மையை மெள்ள மெள்ள அதே மந்திரம் சொல்லித் தட்டுங்கள்.”

   ``எதற்கு?”

   ``சரி, நான் தட்டுகிறேன். உங்களை நினைத்துத் தட்டுகிறேன்.”

   அவர் அழகாக மேலும் கீழுமாய் அந்தக் கோதுமை மாவைத் தட்டினார். குனிந்து பார்த்தான். அவனுடைய முகம் இருந்தது. கறுப்பு தாடி இருந்தது. பெரிய நெற்றி இருந்தது. அவன் சாயல் பலமாகத் தெரிந்தது. அவன் வியப்போடும் பயத்தோடும் அவரைப் பார்த்தான்.

   ``இந்தக் குச்சி வேண்டாம். இப்போது எதிரே இருப்பது ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசனுக்கு வலி என்ன எனத் தெரிய வேண்டும் அல்லவா? எனவே, இந்தத் தர்ப்பைப் புல் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் புல்லின் தாள்களைக் கிழித்துவிடுகிறேன். இப்போது எஞ்சி இருப்பது இந்தக் குச்சி மட்டுமே. மிக மெல்லிய குச்சி. இந்த மெல்லிய குச்சியை நீவி நீவிச் செய்யலாம். நீங்களே நீவிக் கொடுங்கள்.”

   அவனிடம் குச்சியைக் கொடுத்தார். அவன் மந்திரம் சொல்லிக் குச்சியை நீவினான். ஒரு நுனியில் சுள்ளென வலித்தது. ஓர் ஊசியை க்ஷண நேரம் குத்தி எடுத்ததுபோல வலி அது. ரத்தம் வருகிறதோ எனப் பார்க்கவைத்தது. ஆனால், வலி இருந்தது.

   ``குத்துகிறது’’ என்று அறுகம்புல் தண்டை நீட்டினான். அதை அவர் வாங்கிக்கொண்டார்.

   ``உங்களுக்கு இந்த மெல்லிய குச்சியால் குத்தினால் எப்படி வலிக்கும் என்பதைக் காட்டுகிறேன்.”

   சரக்கென வயிற்றில் குத்தினார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பிறகு, ஆறாவது எண்ணிக்கை வரும்போது சுள்ளென மேல் வயிறு வலித்தது.

   ``வலிக்கிறது” என்று அங்கு பொத்திக் கொண்டான். போட்டு மெள்ளத் திருகினார்.

   ``ஜாஸ்தியாகிறது” என அவன் கத்தினான். இடதுபக்கம் திருப்பினார்.

   ``நல்ல வலி”  அவன் நடுங்கினான். இன்னொரு முறை எடுத்துக் குத்தினார்.

   ``கடுமையான வலி” என்று அவன் கத்தினான். இன்னும் திருகினார்.

   ``போதும். இது வயிற்றுக்கோளாற்றை ஏற்படுத்திவிடும்” என்று அவன் அவரைத் தடுத்தான்.

   ``மெல்லிய அறுகம்புல் தண்டு. மிக அமைதியான பிரயோகம். எனக்கு உங்கள்மீது எந்தக் கோபமும் இல்லை. ஒரு பரிசோதனைக்கான கோபம்; பிரயோகம். இதுவே இவ்வளவு வலிக்கிறது அல்லவா? ஒரு கோபத்தோடு, இவ்வளவு பெரிய குச்சியை எடுத்துக் குத்தினால், வரதராகவன் செத்துப்போவான். நீங்கள் வேறு யாரையேனும் இப்படி எடுத்துக் கோபத்தோடு செய்தீர்கள் என்றால், மிக மோசமான பாதிப்பைக் கொடுத்துவிடுவீர்கள். ஒரு விளைவுக்கு எதிர் விளைவு உண்டல்லவா. நீங்கள் பிரயோகம் செய்து சாய்த்துவிட்டால் அந்தப் பக்கத்திலிருந்தும் ஒரு வினை வருமல்லவா? ஒரு செய்கை தவறென்றால், அது பாவமல்லவா? பாவத்துக்குப் பதில் உண்டல்லவா? எனவே, கோபம் உள்ளவர்கள், ஆத்திரம் உள்ளவர்கள், அசூயை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.`நீங்கள் செய்துகொடுங்கள்’ என்று என்னைக் கேட்டிருக்கலாம். தானே செய்வேன் என்று நீங்கள் ஆரம்பித்தீர்களே... அது தவறு.

   ஸ்ரீனிவாசன், நீங்கள் நல்ல இலக்கியவாதி. ஓர் இலக்கியம் ஓர் ஆளுக்குப் பொறுமையைத் தான் தர வேண்டுமே தவிர, கோபமும் வேகமும் கொடுத்துவிடக் கூடாது. கோபமும் வேகமும் சாதாரண மனிதர்களுக்கு உண்டான வெளிப்பாடுகள். இலக்கியவாதிகள் பொறுமையை அறிந்துகொண்டவர்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல ஸ்ரீனிவாசன். பொறுமை என்பது கம்பீரம். ஒரு வினைக்கு எதிர்வினை உண்டல்லவா? உங்களையும் உங்கள் துணைவியையும் இழிவுபடுத்தியவன், இழிவுபடுவான். வாழ்வு மோசமாகும். இதைத் தூண்டிவிட்டவர் ஒருவர் இருக்கிறார். அவர் குழந்தைகளும் பாதிக்கப் படும். உங்களைப் பார்த்து நகைத்தவர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர் மனைவிக்கு மரணம் ஏற்படும். உங்களுக்கு இடதுபக்கம் இருப்பவரும், உங்களுக்குப் பின்பக்கம் இருப்பவரும் உங்களை அவமானப்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள். மிக அழகிய பெண்ணை, துணைவியாக ஏற்கப்போகிறீர்கள். இதைக் கேலிசெய்தவனுக்கு, பல்லும் பனங்காயுமாக மனைவி அமைவாள். நான் ஆரூடம் சொல்லவில்லை. ஒரு வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. அப்படி இருப்பின், நாம் அமைதியாக இருந்துவிட வேண்டும். உங்களைப் போன்றோரின் கண்களில் நீர் வரவழைத்தால், அது அமிலமாகும். பொறுமையைக் கைக்கொண்டு இன்னும் உயர்ந்த நிலைக்கு வாருங்கள். இந்த வித்தை உங்களுக்குத் தெரிந்துவிட்டது.

   அதைப் பிரயோகிக்கும் விதமும் தெரிந்துவிட்டது. இவை அனைத்தும் கோபமின்றியே செய்யப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய இந்த வித்தை செய்யக் கூடாது. உங்களிடம் கத்தியை உறையிலிட்டுக் கொடுத்துவிட்டேன். கத்தியை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், யுத்தத்துக்குப் போகாதீர்கள். உங்களுக்கு எதிரி என யாரும் இல்லை. எதிரி என்று வந்த அத்தனை பேரும் அடிபடுவார்கள்; சுருண்டு விழுவார்கள்; காலில் விழுவார்கள்.

   பெரிய இடத்துக்குப் போகிறீர்கள். அமைதி காக்க, அமைதி காக்க, நீங்கள் உச்சியைத் தொடுவீர்கள். எவன் பதற்றப்படுகிறானோ, எவன் ஆவேசப்படுகிறானோ அவர்கள் அத்தனை பேரும் தாழ்ந்து போவார்கள்.

   அவன்  வினையே அவனை அங்கஹீனமாக்கும். எனவே, ஸ்ரீனிவாசன் வித்தையைக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். நீங்கள் போகலாம். விடை கொடுக்கிறேன்”  கைக் கூப்பினார்.

   அவன் பையிலிருந்து அவன் எழுதிய மூன்று புத்தகங்களை அவருக்குக் கொடுத்தான்.

   ``அட...”

   மூன்று புத்தகங்கள். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

   ``இது ஒரு லட்சம் ரூபாய்க்குச் சமானம். எனக்குத் தமிழ் வேகமாகப் படிக்க வராது. என் மகன், மகள் இரண்டு பேரும் படிப்பார்கள். அவர்களிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்டுக்கொள்கிறேன். ஓர் எழுத்தாளன் புத்தகம் கொடுப்பதைவிட பெரிய பரிசு வேறு என்ன இருக்க முடியும்?”
   அவன் எழுந்து நின்றான். கைக் கூப்பினான். காது குவித்து அபிவாதயே சொன்னான். நீண்ட நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான். மண்டியிட்டான். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

   ``கத்தியை மட்டும் கொடுக்கவில்லை. உள்ளே ஒரு சாத்வீகத்தைக் கொடுத்துவிட்டீர்கள். சாந்தத்தைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி... நன்றி. உங்களை மறக்க மாட்டேன்’’ அவன் எழுந்து நின்று குனிந்து பாத்திரங்களை உள்ளே போட்டுக்கொண்டு பையை மாட்டிக்கொண்டு மெள்ளப் பின்னடைந்து வெளியேறினான். மழை பெய்துகொண்டிருந்தது. சந்திரமோகனோடு கவலையில்லாமல் அந்த மண் தரையில் அழுத்தி மிதித்தவாறு மழையில் சிரித்தபடி ஸ்ரீனிவாசன் நடந்து வந்தான்.

   அந்த ஸ்ரீனிவாசனுக்கு இன்று 71 வயது. அந்தக் கத்தி, உறையிலிடப்பட்டு அவர் இடுப்பில் இருக்கிறது. 41 வருடங்களாக அந்தக் கத்தியை அவர் எடுக்கவேயில்லை.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஆனைக்கிணறு தெரு - சிறுகதை
   உதயசங்கர் - ஓவியங்கள்: ரமணன்
    
   பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும்.  நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்துடனே டீ ஆத்துவார்; வடை போடுவார், பேசுவார், காசு வாங்கிக் கல்லாவில் போடுவார். சுந்தருக்கும் அவனுடைய சேக்காளி களான மணி, மாரியப்பன்,  இவர்களுக்கு மட்டும் எப்போதும் டீ கடன்தான். ஒரு சமயம் கூட காசு கொடுத்துக் குடித்த தில்லை. கரீம் பாய் எப்போது காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். கணக்குப் பார்த்த மாதிரியே தெரியாது. அவர்கள் தான் கணக்கு நோட்டில் எழுதுவார்கள். கொடுக்கும்போது கழித்து எழுதுவார்கள். கரீம் பாயின் ஏலக்காய் டீயும், செய்யது பீடியும், தகிக்கும் அந்தத் தகரக்கொட்டாயும் அருகிலேயே இருந்த கட்டைமண் சுவரும், அவர்களுடைய வாழ்க்கையில் எத்தனையெத்தனை கனவுகளை சிருஷ்டித்திருக்கும்.

   இப்போது தெருவின் துவக்கத்தில் ஆனைக்கிணறு தெரு என்று நீலநிறப் பலகை அம்புக்குறிபோல விரலை நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது எந்தப் பலகையும் கிடையாது. ஆனால், ஊருக்கே தெரியும்; ஆனைக்கிணறு தெரு. சுந்தர் பிறந்து வளர்ந்தது இந்தத் தெருவில்தான். இந்தத் தெருவின் ஒவ்வொரு அடியிலும் அவனுடைய பால்யகால வாழ்வின் ரேகைகள் அடர்த்தியாய் அப்பிக்கிடந்தன. வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராவது கணித்துச் சொல்லிவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா என்ன?

   அப்பாச்சியின் மரணம்தான் சுந்தரின்மனதில் விழுந்த முதல் அடி. அதற்குப்பின் மிகக் குறுகிய காலத்துக்குள் சுந்தரின் அப்பா திடீரென இறந்து குடும்பத்துக்கு அதிர்ச்சி யளித்தார். அவர் குடும்பத்துக்காகவும், அவருக்காகவும் வாங்கி வளர்த்துவந்த கடன்கள் பெரும்பாறைகளென உருண்டுவந்து குடும்பத்தின் முன்னால் உட்கார்ந்துகொண்டன. மூச்சுவிடவும் நேரம் இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் கொத்திக் கொண்டிருந்தார்கள்.  சுந்தரும், அம்மாவும், கல்யாணத்துக்குக் காத்திருந்த அக்கா செம்பாவும் ஓர் ஐந்தாம்பிறை இரவில் ஆனைக் கிணறுத்தெருவைவிட்டுத் தலைமறைவானார்கள். அவர்களது குச்சுவீட்டை ஒட்டி ஓடிய வாய்க்கால் முடியும் இடத்தில் இருந்தது ஆனைக்கிணறு. அந்த ஆனைக்கிணறு சாட்சியாகத்தான் ஓடிப் போனார்கள். அதில் தான் அம்மா, அக்கா, ஏன் அப்பாச்சிகூட அவளுடைய சிறுவயதில் குடிதண்ணீர் எடுத்தார்கள்.
   நல்ல உயரமான சுற்றுச்சுவருடன் உயரமான மேடை கட்டி ஆனைக்கிணறு கம்பீரமாக இருக்கும். சுற்றிலுமிருந்த பத்துத் தெருக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்தது ஆனைக்கிணறுதான். எப்போதும் பெண்கள் கூட்டம் மொய்த்துக்கிடக்கும். கிணற்றின் இரண்டு பக்கமும் இரண்டு உருளிகளில் நல்ல வடக்கயிறு தகரவாளியுடன் கிடக்கும். அதுபோக ஏராளமான பேர் சொந்தமாகக் கயிறும் வாளியும் போட்டு இறைத்துக் கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் இறைப்பு நடந்துகொண்டேயிருக்கும். பத்துத் தெரு பெண்களையும் ஆனைக்கிணற்றில் பார்க்கலாம். அதனால் அந்தப் பத்துத் தெருவிலிருக்கும் ஆண்களையும் அங்கே பார்க்கலாம். அநேகமாக வீட்டிலிருக்கும் அத்தனை பேருமே தண்ணீர் சுமந்தார்கள். குழந்தைகள் நடைபழகியதுமே சின்னச் செப்புக்குடங்களை அல்லது சொம்புகளை அல்லது  தகரக்குடங்களை இடுப்பில் வைத்து தண்ணீர் எடுத்து விளையாடினார்கள். கொஞ்சநாள்களில் அந்தக் குடங்களோடு ஆனைக்கிணற்றுக்கு வந்துவிட்டார்கள்.  வீட்டில் இருக்கும் நாலைந்து சிமென்ட் தண்ணீர்த்தொட்டிகளில் நிறைந்திருக்கும் தண்ணீரில் குழந்தைகள் எடுத்துவரும் ஒரு சொம்புத்தண்ணீரும் தன் பங்காக விழுந்திருக்கும்.

   சுந்தர் பள்ளிக்கூடம் படிக்கும்போது அம்மாவிடம் கேட்டிருக்கிறான். “ ஏம்மா அந்தக் கிணறுக்கு ஆனைக்கிணறுன்னு பேரு வந்தது.”

   “சித்திரைத்திருளா வரும்போது தென்காசியிலிருந்து யானை வரும். அந்த யானை நம்மூருக்கு வந்தா எப்பவும் இங்கதான் தண்ணி குடிக்கும். அதனால ஆனைக்கிணறுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...” என்று சொன்னாள். ஆனால், தன்னுடைய பாம்படக் காதுகளை ஆட்டிக்கொண்டே வேறு ஒரு கதை சொன்னாள் அப்பாச்சி.

   ``செண்பகக்கோட்டை ராஜாவுக்கு தெய்வானை என்று ஒரு மகள் இருந்தாள். அழகும் அறிவும் நிறைந்த அவளுக்குக் கல்யாணம் முடிக்க எட்டுத்திசையும் பொருத்தமான இளவரசனைத் தேடி ஆள் அம்பு பரிவாரங்களை அனுப்பி வைத்தான் ராஜா. ஆனால், பாவி மகள் இளவரசிக்கு ராஜாவின் படையில் ஒற்றுவேலை பார்த்துக்கொண்டிருந்த வீரன் என்ற பகடைமீது ஆசை. பகடைக்கும் இது தெரியும். அவனும் அப்படியிப்படி இளவரசி கூட பழகினான். ரகசியம் வெளியாகிவிட்டது. இளவரசிதான் காட்டிக்கொடுத்துவிட்டாள். அவள் வீரனோடு பழகியதில் சூலியாகி விட்டாள். அவ்வளவுதான் ராஜாவுக்குத் தனது பரம்பரை இழிவுபட்டதாக நினைத்தான். அப்போது எல்லாம் புரோகிதர்கள் வெச்சதுதான் சட்டம். உடனே அவர்கள் பரம்பரை இழிவைப் போக்க வழி சொன்னார்கள். வீரனைப் பிடிக்க முடியவில்லை. அவன் தப்பித்துவிட்டான். இதுவரை அவன் போக்கிடம் எதுவெனத் தெரியாது. ஆனால், பாவம் இளவரசி.

   வறண்ட பொட்டலாகக் கிடந்த இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்டச்சொன்னான் செண்பகக்கோட்டை ராஜா. அந்தக் கிணற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் ஊறவில்லை. புழுதி பறந்தது. வறண்ட அந்தக் கிணற்றில் ஒரு குடம் புனிதநீரை ஊற்றச் சொன்னார்கள் புரோகிதர்கள். இளவரசி தெய்வானையும் அவர்கள் சொன்னபடியே புனிதநீர்க் குடத்தைச் சுமந்து கொண்டு கிணற்றருகில் சென்றாள். அவள் குனிந்து ஊற்றிக்கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து யாரோ தள்ளிவிட்ட மாதிரி இருந்தது. அவள் `வீரா’ என்று அலறியபடி உள்ளே விழுந்தாள். அவளுடைய அலறல் சத்தம் அடங்குவதற்குள் கிணற்றின் தூரில் அடைபட்டிருந்த ஊற்றுகளின் கண்கள் திறந்தன. அருவியிலிருந்து சோவென நீர் பாய்ந்து விழுவதைப்போல ஊற்றுகளிலிருந்து நீர் மேல்நோக்கி எழுந்தது. கிணற்றின் விளிம்புவரை நீர் ததும்பியது.  ஆனால்,  உள்ளே தள்ளிவிடப்பட்ட இளவரசி தெய்வானையைக் காணவில்லை. எப்படி மாயமாய் மறைந்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் பார்த்த புரோகிதர்கள் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள். முதலில் தெய்வானைக்கிணறாக இருந்தது நாளாவட்டத்தில் ஆனைக்கிணறாகி விட்டது’’ என்று சொன்ன அப்பாச்சி இடுப்பிலிருந்து பொடிமட்டையை எடுத்துப் பிரித்து ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து ஒரு சிட்டிகைப் பொடியை அள்ளியெடுத்து மூக்கில் திணித்தாள். சுந்தருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். அவன் எழுந்து பையன்களிடம் இந்தக் கதையைச் சொல்லத் தெருவுக்கு ஓடினான்.
   ஆண்டு முழுவதும் இரவும் பகலும் இறவையாகிக் கொண்டிருக்கும் ஆனைக்கிணறு. இரவும் பகலும் பெண்களின் பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, சண்டை, காதல் என்று ஒரு மனிதச்சந்தையின் அத்தனை குணாதிசயங்களையும் ஆனைக்கிணற்று மேடையில் பார்க்கலாம். ஆனால், அத்தனை சத்தமும் இல்லாமல் மயானமாக சில நாள்கள் ஆனைக்கிணறு மாறிவிடும். ஆளரவம் இல்லாமல் சின்னச்சத்தம்கூட பெருங்கூப்பாடாகக் கேட்கும் நாள் வந்தது என்றால், ஆனைக்கிணற்றில் யாரோ ஒரு பெண் மிதக்கிறாள் என்று அர்த்தம். அவன் பலதடவை பார்த்திருக்கிறான். தண்ணீரில் தலைமுடி மிதந்தலைய, புடவையின் முந்தானை விழுந்த பெண்ணின் துயரைச்சொல்வதைப்போல மேலும் கீழும் முங்கி எழுந்துகொண்டிருக்கும். அந்தக் காட்சி அவன் கண்களைவிட்டு அகல  நிறைய நாள்களாகும். அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த ராணியக்கா ஒருநாள் காலையில் ஆனைக்கிணற்றுக்குள் கிடந்தாள். கால்களைக் கயிற்றால் கட்டியிருந்தாள். புடவையை நன்றாகக் கழுத்துவரை இறுக்கியிருந்தாள். உடலை வெளியே எடுத்துப்போட்டிருந்தார்கள். அவளுடைய புருஷன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.ராணியக்கா வேலை பார்க்கிற தீப்பெட்டி கம்பெனியில், கூட வேலைபார்க்கிற ஓர் ஆணோடு தொடர்புபடுத்திப் பேசியிருக்கிறான் அவளுடைய புருஷன். அவளால் தாங்க முடியவில்லை. 

   பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த பேச்சியம்மாள் தன் கைகுழந்தையோடு ஆனைக்கிணற்றில் விழுந்து இறந்துபோனாள். பக்கத்து வீட்டுக்காரி தன்னுடைய பிள்ளையைத் திட்டிவிட்டாள் என்ற கோபம் அவளுக்கு. மேட்டுத்தெருவில் இரவில் தனியாக வந்த பெண்ணைப் பலவந்தப்படுத்தி, கையையும் காலையும் கட்டிக்கொண்டுவந்து ஆனைக்கிணற்றில் போட்டுவிட்டார்கள். யார் என்றே தெரியவில்லை. தெப்பக்குளத் தெருவில் இருந்துவந்து அக்கா, தங்கை இரண்டுபேரும் ஒருவரையொருவர் சேர்த்துக் கட்டிக்கொண்டு விழுந்து இறந்துபோனார்கள். ஆனைக்கிணறு மரணக்கிணறாக மாறிக்கொண்டிருந்தது. மாசம் ஒருத்தர் இறந்து போனார்கள்.  கணவனுடன் சண்டை, பக்கத்து வீட்டுக்காரியின் ஏச்சு, கள்ளக்காதல், குழந்தைகள் சண்டை, கடன் தொல்லை இப்படியே ஆயிரம் காரணங்கள் இருந்தன. எல்லா காரணங்களின் முடிவில் ஒரு பெண் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். ஊரில் பத்துக் கிணறுகள் இருந்தன. ஆனால், எல்லா தெருப்பெண்களும் ஆனைக்கிணற்றிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.

   நிறைய வீடுகளில் பெண்கள் சாமியாடினார்கள். தெய்வானை வந்திருப்பதாகச் சொன்னார்கள். ராணி வந்திருப்பதாகச் சொன்னார்கள். பேச்சியம்மாள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதைச்செய் இதைச்செய் என்று ஆணையிட்டார்கள். என்ன செய்தும் ஆனைக்கிணற்றின் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் உடல்களைக் காவு வாங்கிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சிக்கும் சாமி வந்தது. தலையை விரித்துப்போட்டு உட்கார்ந்த நிலையிலேயே ஆடினாள். `ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...  ஊஊஊஊஊ... ஆஆஆஆஆ’ என்று வாயால் காற்றை ஊதினாள். அம்மா பயபக்தியுடன் அப்பாச்சி முன்னால் நின்று கும்பிடுவதை முதல்முறையாகப் பார்த்தான் சுந்தர். ஒருநாளும் அம்மா, அப்பாச்சியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. எப்போது அவளைப் பார்த்துவிட்டாலும் வெளியில் யாருக்கும் கேட்காதபடிக்கு வைவாள். அவள் வைவது அப்பாச்சிக்குத் தெரியும். ஆனால், ஏதாவது விஷேச நாட்கள் என்றால் அப்பாச்சிக்கு சாமி வந்துவிடும். அப்போது அம்மா உண்மையான பக்தியுடன் அப்பாச்சியின் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொள்வாள். இப்போது தெய்வானை பழிவாங்குகிறாள் என்று அப்பாச்சி சொன்னாள். நூத்தியெட்டு தேங்காயை உடைத்து சேலை எடுத்துவைத்துக் கும்பிட வேண்டும் என்று சொன்னாள். தெருக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து காசு பிரித்து அதையும் செய்து பார்த்தார்கள். சுந்தர் ஒருநாள் சாதாரணமாக அப்பாச்சியிடம் கேட்டான்.

   “ஏன் அப்பாச்சி பொம்பளைங்க மட்டும் ஆனைக்கிணத்துல விழுந்து சாகறாங்க. அவங்க செத்தா எல்லாம் சரியாயிருமா?”

   அதைக் கேட்டதும் அப்பாச்சி கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்கள் கலங்கின.கண்களைத் துடைத்துக் கொண்டே, “பொம்பளங்கள படைச்ச கடவுளும் ஆம்பளதானே... பிறகு என்ன செய்ய முடியும். பொம்பிளங்க தலைவிதி அவ்வளவுதான்… செத்தா எல்லாம் சரியாயிரும். பிரச்னையும்  தீந்திரும்.  திருடியும் நல்லவளாயிருவா. ஏன்... தெய்வங்கூட ஆயிருவா” என்று சொன்னாள். ஆச்சியின் தழுதழுத்த அந்தக் குரல் சுந்தரின் மனதை ஏதோ செய்தது. ஆனால், ஆனைக்கிணற்றின் துயரம் தீரவில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆனைக்கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வருகிற கூட்டம் குறைந்தது.
   காலம் இருண்டது. அப்பாச்சியும் ஒருநாள் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். எப்போதும் அம்மாவின் அலட்சியத்தையும், சுடுசொற்களையும் கேட்டுப்பழகியவள்தான் அப்பாச்சி. அதைப்பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. ஆனால், அன்று என்னவோ தெரியவில்லை. அப்பா ஏதோ பேசியிருக்கிறார். கேவலம் மூக்குப்பொடி மட்டை விவகாரம். மூக்குப்பொடி வாங்கக் காசு கேட்ட அப்பாச்சியைப் பார்த்து அப்பா, “நீயெல்லாம் இருந்து ஏன் கழுத்தறுக்கே… இந்த வயசில மூக்குப்பொடி ஒரு கேடா? மனுசந்தன்னால கண்ணுமுழிப் பிதுங்கிக்கிட்டு வாரேன்… என்னமோ இனிமேத்தான் சாதிக்கப்போற மாதிரி…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

   அன்று முழுவதும் மோட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அப்பாச்சி. தரையில் எதையோ தேடுவதைப்போல விரல்களால் பரசிக் கொண்டேயிருந்தாள். சில சமயம் இடுங்கிய கண்களில் கசிந்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். அம்மா அன்று அப்பாவைக் கடிந்தாள். அப்பாச்சியிடம் வாஞ்சையாய் பேசவும் செய்தாள். அவளே சுந்தரிடம் காசு கொடுத்து எஸ்.ஆர்.பட்டணம் பொடி மட்டையை வாங்கிவரச்சொல்லி அப்பாச்சியிடம் கொடுத்தாள். அப்பாச்சி அதைக் கையில் வாங்கி அருகில் வைத்துக்கொண்டாள். ஆனால், அன்று முழுவதும் பொடிமட்டையைப் பிரிக்கவில்லை. இதையெல்லாம் அம்மாதான் அப்பாச்சி இறந்த வீட்டில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் இதை எதையும் கவனிக்கவில்லை. அவன் பாப்புலர் டைப் இன்ஸ்டிடியூட்டில் டைப் முடிந்துவரும் வனஜாவின் ஞாபகமாகவே இருந்தான். மணியின் யோசனைப்படி இன்று வனஜாவிடம் எப்படியும் காதல் கடிதத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டும்தான் அன்று இருந்தது. அதனால் அப்பாச்சியை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. மறுநாள் காலையில் அம்மாவின் வார்த்தைகளற்ற அலறல்சத்தம் கேட்டபிறகு தான் சுந்தருக்கு உணர்வு வந்தது.

   சுந்தர் எதற்கும் அழுதோ கலங்கியோ பழக்கமில்லாதவன். எல்லாவற்றையும் உள்ளேயே அமுக்கிவைத்துக்கொள்வான். முகம் மட்டுமே அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று காட்டும். ஆனால், அப்பாச்சியின் தற்கொலை அவனை உலுக்கிவிட்டது. அவளுக்குக் குறைந்தது எழுபத்தைந்து வயதாவது இருக்கும். இந்த வயதில் ஆனைக்கிணற்றின் மேடையில் ஏறி  ஓர் ஆள் நெஞ்சுயரம் இருக்கும் சுவரில் ஏறி உள்ளே விழுவதென்றால் எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும். அவன் உடைந்து அழுதான். கண்கள் ஈரமாகிக்கொண்டேயிருந்தன. அப்பாச்சியின் மடியில் உட்கார்ந்து புரண்டு வளர்ந்தவன் அவன். அவள் சொல்லும் கதைகளில் வரும் இளவரசிகளையும், இளவரசர்களையும், பேய்களையும், பூதங்களையும் அவன் அப்படி நேசித்தான். அப்பாச்சியின் பல்லில்லாத வழுவழுப்பான குரலில் வழுக்கி உறக்கத்தின் மௌனக்குளத்தில் மெல்ல மூழ்குவான் சுந்தர். அவளிடமிருந்து வரும் மூக்குப்பொடியின் மணம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சில சமயங்களில் தடுமம் பிடித்திருக்கும்போது அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு மூக்குப்பொடி உறிஞ்சக்கொடுப்பாள்.

   அவனைவிட அப்பாதான் நொறுங்கிப் போய்விட்டார். வெகுநாள்களுக்கு அவருடைய முகம் குராவிப்போய் இருந்தது. உள்ளுக்குள் அவருடைய ஆவி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக்கொண்டிருந்தது. அப்பாச்சி இறந்த ஒரு வருடத்துக்குள் ஏகப்பட்ட காரியங்கள் சடுதியில் நடந்தேறின. வாடகை கொடுக்க முடியாமல் நான்கு வீடுகள் மாறினார்கள். அப்பா வேலை பார்த்துவந்த ராஜகுமாரி ஜவுளிக்கடை வற்றிப்போனது. இனி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வழியில்லை என்று முதலாளி வாசலைக் காட்டினார். விசுவாசம், நீண்டநாள் என்ற இரண்டு கயிறுகளில் கட்டிய ஊஞ்சலில் இப்பவோ பிறகோ என்று ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், முதலாளி சுந்தரின் அப்பாவுக்கும் வாசல் இருக்கும் திசையைக் காட்டும் முன்னாடியே அப்பா பெரிய வாசல் வழியே உலகத்தை விட்டுப்போய் விட்டார்.
   சுந்தர், கரீம்பாய் கடை இருந்த இடத்தில் புதிதாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரேயா தேநீரகம் முன்னால் நின்றான். ஒரு கணம் கரீம்பாய் கண்முன்னே தோன்றினார். ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்தான். டீ மாஸ்டரிடம், “ ஒரு டீ ஸ்ட்ராங்கா… மலாய் போட்டு.” என்று சொன்னான். அவர் அவனை ஊருக்குப் புதிது என்று கண்டுகொண்டார். கரீம்பாய் டீக்குத் தனிச்சுவையே மலாய்தான் என்று சுந்தர் சொல்வான். வேறு யாரும் கேட்க மாட்டார்கள். அவனைப் பார்த்ததுமே மலாய் போட்டு ஸ்டிராங் டீ கொடுத்துவிடுவார் கரீம்பாய்.

   டீக்கடை தாண்டி வலதுபுறம் திரும்பினால் ஆனைக்கிணறு இருக்கும்.  அவன் எதிர்பார்த்த மாதிரியே ஆனைக்கிணறு இல்லை. அப்படி ஒரு கிணறு இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் அங்கே ஓர் அழகான அடுக்குமாடிக் குடியிருப்பு எழுந்து நின்றது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

   சித்தி சொன்ன அடையாளங்களை வைத்து வீட்டைக் கண்டுபிடித்தான். சித்தப்பா இறந்து மூன்று மாதங்களாகிவிட்டன. இப்போது எப்படி அந்தத் துக்கத்தை அனுஷ்டிப்பது என்று புரியாமல் குழம்பிப்போய்த்தான் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்தான். வருத்தமான முகத்தை அணியச்செய்த முயற்சி தோல்வியடைந்து கொண்டிருப்பதைச் சில நொடிகளிலேயே அவன் உணர்ந்துகொண்டான். ஆனால், சித்தி சில நிமிடங்கள்கூட அந்தச் சூழ்நிலையின் தர்மசங்கடத்தில் அவனை மாட்டிவிடவில்லை. சித்தி பெரிய பேச்சுக்காரி. அவளால் காலாவதியான அந்தச் சோகத்தைத் தொடர முடியவில்லை.

   வீட்டின் குசலங்களை விசாரித்துவிட்டு ரகசியம் பேசுகிற தொனியில், “சுந்தா... ஆனைக்கிணறு இருந்த இடத்தைப் பார்த்தியா… ஏழுமாடிக் கட்டடம்”என்றாள்.  சுந்தரும் அவளை மாதிரியே தாழ்ந்த குரலில், “ஆமா… சூப்பரா இருக்கு சித்தி... யாரு ஓனரு?” என்று கேட்டான்.
   “ யாரு... நம்ம சம்முகம் கவுன்சிலர் அவந்தான் அந்த இடத்தை வளைச்சி கட்டடம் கட்டிட்டான். ம்ஹூம்.. கட்டி என்ன பிரயோசனம்?’’

   ``ஏன் சித்தி?’’

   “இப்பயும் அந்த மாடிக்கட்டடத்திலே திடீர் திடீர்னு பொம்பிளக செத்துப்போறாளுக… போனமாசம் அஞ்சாவது மாடியில ஒரு பொம்பிள தீக்குளிச்சி செத்தா…நேத்திக்கிக்கூட மூணாவது மாடியிலேர்ந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சிட்டா… புருசங்கூட சண்டையாம். அந்தத் தெய்வானை சாமியான இடமாச்சே… சும்மா விடுவாளா?’’ என்று மிக முக்கியமான ரகசியத்தைச் சொல்வதைப்போல சொல்லிக் கொண்டிருந்தாள் சித்தி. சுந்தர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. மனம் கசந்தது. பின்னர் ஒருவித வெறுப்பு கவிய மெல்ல வாயைத்திறந்து, “இது ஆண்களின் உலகம் சித்தி” என்றான்.அவனை மலங்க மலங்க பார்த்தபடியே  ``என்ன சொல்றே நீ...” என்றாள் சித்தி.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   அடையாளம் - சிறுகதை
   சிறுகதை: சிவபாலன், ஓவியங்கள்: செந்தில்
   `Let me explain’

   அந்தக் குறுஞ்செய்தி பாரதியின் செல்போனில் வந்து விழும்போது மணி ஆறு இருக்கலாம். அந்த அரங்கத்தில் அவ்வளவு ஒன்றும் பெரிதான கூட்டம் இல்லை. அதை அந்த இளம் எழுத்தாளன் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ரசித்து ரசித்து தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். பாரதி எந்த சுவாரசியமும் அற்று அமர்ந்திருந்தான். அந்த அரங்கில் இருபதிலிருந்து முப்பது பேர் வரை இருக்கலாம்; யாருக்கும் அந்த நிகழ்வில் எந்த ஓர் ஈர்ப்பும் இருப்பதாய் தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் வந்திருப்பதாய் பட்டது. பாரதி அரங்கிலிருந்து மெதுவாய் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே நடந்தான்.

   அந்த அரங்கத்தின் வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மழை பெய்து கொண்டிருந்தது. அந்த அரங்கத்தின் எதிரே இருந்த அகலமான சாலை மழையில் வெறுமையாய் இருந்தது. சாலையின் இருமங்கிலும் பெரும்பாலான மக்கள் மழைக்கு பயந்து ஒதுங்கியிருந்தனர். அந்த மழையில் திருச்சி நகரம் ஒருவித ரம்மியத்தோடு இருப்பதாய் அவனுக்குப் பட்டது. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கழித்துத் திருச்சிக்கு வருகிறான். அவனால் அத்தனை இயல்பாய் இங்கு இருக்க முடியவில்லை. இந்த நகரத்தைச் சார்ந்து எத்தனையோ நினைவுகள் அவனுக்குள் இருக்கின்றன; அவனுக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. முடிந்தவரை அவன் கடந்தகால நினைவுகளையும் அதனைச் சார்ந்த அடையாளங்களையும் மறக்கவே நினைத்திருந்தான். ஆனால், இந்த நகரத்தைச் சார்ந்த நினைவுகள் அத்தனை சுலபமாய் மறக்கக்கூடியவை அல்ல, அதுவும் மழை பெய்யும் இந்த நகரத்தின் மையத்தில் நின்றுகொண்டு.

   திருச்சி நிறைய மாறியிருந்தது. அகலமான சாலைகள், நிறைய மேம்பாலங்கள், பெரிய பெரிய கட்டடங்கள், பன்னாட்டு உணவகங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என இன்னும் நிறைய நிறைய. ஆனாலும் இவை அனைத்தையும் மீறி பாரதியால் இந்தத் திருச்சியின் ஆன்மாவை உணர முடிந்தது. எல்லா நேரமும், எல்லா இடங்களிலும் அவனால் இந்த நகரத்தின் அந்தரங்கத்தைக் காண முடிந்தது. அவனுக்கு இந்தப் புற மாற்றங்கள் எதுவும் தடையாய் இல்லை. ஏனென்றால், ஒரு நகரத்தின் அடையாளம் என்பது எந்தப் புறத்தோற்றங்களிலும் இல்லை; அது அந்த நகரத்தின் ஆன்மாவில் ஒரு காற்றைப்போல கலந்திருக்கிறது என அவனுக்குத் தெரியும்.

   மழை கொஞ்சம் கொஞ்சமாய் குறையத் தொடங்கியது. அந்த வெறுமையான சாலை இப்போது போக்குவரத்தால் நிறையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் ஒரு பெருளான ஜனத்திரளில் அந்தச் சாலை தனது அடையாளத்தை இழந்துவிடும். அது மற்றுமொரு போக்குவரத்து நெரிசலான சாலையாகப் பார்க்கப்படும். நிறைய நேரங்களில் புறச்சூழல்களும், புறக்காரணிகளும் ஓர் அடையாளத்தை நிர்ணயிப்பதாய் அமைந்துவிடுகிறது; சூழலுக்கு ஏற்ப தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு பச்சோந்தியைப்போல. ஆனால், மனிதன் என்பவன் தனது அகச்சூழலைப் பொறுத்தே தனது அடையாளத்தை வெளிப்படுத்துகிறான். அவனது அடையாளம்தான் அவனது மெய். அதனைச் சார்ந்துதான் அவன் அவனது வாழ்வைக் கட்டமைக்கிறான். ஒருவனது அடையாளம் என்பது எப்போதும் அவனது அகத்தைச் சார்ந்தே அமைந்துவிடுகிறது.

   பாரதி தன்னளவில் ஓர் ஆண். அதுதான் அவனது அடையாளம்; அவனது அக அடையாளம். பிறக்கும்போது பாரதி பெண்ணாய் பிறந்தவள்; அவனது புற அமைப்பு ஒரு பெண்ணின் அடையாளமாய் இருந்தது. இந்த இரு வேறு அடையாளச் சிக்கல்கள் கொடுத்த எல்லா வலிகளையும் கடந்துதான் வந்திருக்கிறான். இன்று கூடுமானவரை தனது புற அடையாளங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறான். இந்த அடையாளத்திற்காக, தனது அக அடையாளத்தை மீட்டெப்பதற்காக அவன் தன்னைச் சார்ந்த அத்தனையும் இழந்திருக்கிறான்.

   இதோ, இதே திருச்சியில்தான் பாரதியின் வாழ்க்கைத் தொடங்கியது ஒரு பெண்ணாக, ஒரு மகளாக, நான்கு அக்காக்களுக்கு ஒரே தங்கையாக. நான்கு பெண் பிள்ளைகளுக்குப் பிறகாவது ஓர் ஆண் பிள்ளை வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பைப் பொய்த்து பாரதி பிறந்தாள். பாரதி என்ற பெயர்கூட அவள் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்ட பெயர்தான்; ஓர் ஆண் பிள்ளைக்காக. ஆனால், அந்தப் பெயர் பாலினங்களைக் கடந்து எல்லா வகையிலும் பாரதிக்குப் பொருந்திப் போனது.

   சிறிது ஏமாற்றம் இருந்தாலும் அப்பாவுக்குப் பாரதியை மிக எளிதில் பிடித்துப் போனது. அப்பாவின் நடுத்தர வயதும் அதில் எழும் இயல்பான வெற்றிடமும்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பாரதி அந்த வெற்றிடத்தை இயல்பாக, முழுமையாக நிரப்பிக்கொண்டாள். அம்மாவுக்குப் பாரதி நாலோடு ஒண்ணு,  அவ்வளவுதான். பாரதியும் ஒரு முழு அப்பா பிள்ளை. பெரும்பாலான நேரங்கள் பாரதி அப்பாவுடன்தான் இருப்பாள். அப்பாவின் அருகாமையும் அப்பாவின்மேல் வீசும் அந்த வாசமும் பாரதிக்கு எப்போதும் தேவையாக இருந்தது. எல்லாவற்றுக்கும்மேல் அப்பாவின் உள்ளங்கை, அவ்வளவு மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் ஒரு பெண்ணின் உள்ளங்கைபோல.  அப்பாவின் முன்கைகள்கூட ரோமங்கள் ஏதுமற்று மென்மையாக இருக்கும். பாரதிக்கு எப்போதும் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்பாவின் விரல்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்; நடக்கும்போது,  தூங்கும்போது, சாப்பிடும்போது என எப்போதும் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேயிருப்பாள். அப்பா மாலை நேரங்களில் இப்ராகிம் பார்க்குக்கு அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் விளையாடக்கூடத் தோணாமல் அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பாள். அம்மாவுக்குதான் பிடிக்காது. “என்னடி பொம்பளைப் பிள்ளை. எப்ப பார்த்தாலும் அப்பா கைய பிடிச்சிக்கிட்டே இருக்கிற, போடி... போய் பிள்ளைங்களோட சேர்ந்து விளையாடு. போடி” என்பாள்.

   ஆரம்பகாலத்தில் இருந்தே பாரதிக்குப் பெண்களோடு விளையாடப் பிடிக்காது. பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகள்கூடத்தான் விளையாடிக்கொண்டிருப்பாள். உடைகள் கூட ஆண் பிள்ளைகளுக்கான உடைகளைத் தான் கேட்டு வாங்கிக்கொள்வாள்.  அப்பாவுக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆண் குழந்தை இல்லாததால், அவரும் அவள் கேட்கும் உடையையே வாங்கிக் கொடுப்பார். ஆனால், பள்ளிக்குப் போகும்போது யூனிஃபார்ம் போட வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் அம்மாவுக்குப் போராட்டம் தான். இறுதியில் அப்பா வந்து ஏதாவது சமாதானம் செய்து போட்டு விடுவார். பாரதிக்கு ஏனோ பெண் பிள்ளைகளுக்கான உடையில் அவ்வளவு இயல்பாய் இருக்க முடிவதில்லை. மிக அந்நியமாய் உணர்வாள். பள்ளி விட்டு வந்தவுடன் அவள் செய்யும் முதல் வேலை, அந்த உடையை மாற்றுவது தான்.

   நாளாக நாளாக  பாரதியின் நடவடிக்கைகளில் நிறைய ஆண்தன்மை தெரியத் தொடங்கின. முடியமைப்பு உட்பட பாரதி அத்தனையும் ஓர் ஆண்போலவே இருக்குமாறு மெனக்கெட்டாள். பள்ளியில் இருந்து நிறைய புகார்கள் வரத் தொடங்கின. `பாரதி எப்போதும் ஆண் நண்பர்கள்கூடவே பேசிக்கொண்டிருக்கிறாள், அவர்கள் விளையாடும் விளையாட்டைத்தான் விரும்பி விளையாடுகிறாள், மதிய உணவைக்கூட அவள் ஆண் பிள்ளைகள்கூடவே அமர்ந்து சாப்பிடுகிறாள்’ என நிறைய புகார்கள். அப்பாவுக்கு ஆரம்பத்தில் இது பெரிய விஷயமாகப்படவில்லையென்றாலும் பள்ளி நிர்வாகத்தின் தொடர்ச்சியான புகார்களால், கொஞ்சம் கொஞ்சமாக அவர் வருத்தப்படத் தொடங்கினார். அம்மாவுக்குக் கோபப்படுவதைத் தவிர, வேறு எதுவும் தெரியவில்லை. அப்பா, பெண் என இரண்டுபேர்மீதும் கோபம். ``உங்களால்தான் இந்தப் பொண்ணு இப்படி இருக்கா, ஒரு பொம்பளப் புள்ளையை வளர்க்கிற மாதிரியா வளர்த்தீங்க. அதனால்தான், இவ இப்படி டவுசரைப் போட்டுக்கிட்டு சுத்திட்டு இருக்கா” என்று கத்திக் கொண்டிருப்பாள்.

   பாரதி, தனது வளர் இளம் பருவத்தை நெருங்க நெருங்கத் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவள் உடலைப் புரிந்து கொள்ள முற்பட்டாள். அவளது உடல் முன்னெப்போதும்விட அவளுக்கு மிகப்பெரிய சுமையாய் இருந்தது. அவளால் சுமக்க முடியாத பாரமாய் இருந்தது. அவள் உடல்மீது அவளுக்கு இயல்பாய் வரக்கூடிய எந்த ஓர் ஈர்ப்போ,ஆசையோ,கர்வமோ அவளுக்கு ஏற்படவில்லை. மாறாக வெறுப்பாக இருந்தது. அவளது மனம் உடலுடன் இசையவில்லை. உடலும் மனமும் வேறு வேறு திசைகளில் இயங்கின. அவள் உடலில் நிகழும் பருவரீதியான மாற்றங்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு அருவருப்பாய் இருந்தன. ரணமாய் இருந்தன. தீர்க்க முடியாத ரணம். அவள் மட்டுமே அறிந்த ரணம். இந்த ரணத்தில் இருந்து, வலியில் இருந்து, அருவருப்பில் இருந்து மீள நினைத்தாள். இந்தப் புற அடையாளங்கள் ஒரு தடிமனான கம்பளியைப்போலத் தன்னை முழுதுமாய் போர்த்திக்கொண்டுள்ளதாய் நினைத்தாள். `எல்லோரும் இந்தக் கம்பளியைத் தான், நான் என நினைத்து விடுகிறார்கள். ஏனென்றால், அதுதான் சுலபமானது. நான் என நான் நினைப்பது இந்தக் கம்பளியை அல்ல; அதற்குள் இருக்கும் என்னைத்தான். நான் யாரென்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம், அது எனது மனதைச் சார்ந்த ரகசியம். எனது மனதை, எனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த அடையாளச் சிக்கல்களை, எனது கம்பளிக்குள் மறைந்திருக்கும் என்னை, எனது ரகசியத்தை அப்பாவுக்கு மட்டும் சொல்லிவிட வேண்டும்’ என்று பாரதி நினைத்தாள். அப்பா புரிந்து கொள்வார், அப்பாவிடம் ஒரு தீர்வுகூட இருக்கலாம் என நினைக்கத் தொடங்கினாள். ஆனால், அப்பா இப்போதெல்லாம் முன்பு போல பேசுவதில்லை. வீட்டுக்கு லேட்டாகத்தான் வருகிறார், வந்தவுடன் சாப்பிட்டுத் தூங்கப் போய்விடுகிறார். பாரதி, அப்பாவுடன் தூங்கி நிறைய நாள் ஆயிற்று. பாரதிக்கு அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அப்படியே அப்பாவின்  மிருதுவான மென்மையான கைகளைப் பிடித்துக் கொண்டே அப்பாவுடன் தூங்க வேண்டும் போல் இருந்தது.

   பாரதிக்கு இந்தத் துயரம் சார்ந்த அடையாளத்தைக் களைவதும், அது நிமித்தமான இந்தச் சமூகத்தின் பார்வையை எதிர்கொள்வதும் அத்தனை எளிதாக இல்லை. ஓர் இருள் சூழ்ந்த உலகத்தில் அகப்பட்டுக் கொண்டதைப் போலிருந்தது. அப்பாவைத் தவிர வேறு யாராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. அப்பாவும் இதைக் கேட்கத் தயாராக இல்லை. நாளுக்கு நாள் அவள் மீதான பார்வையும், வெற்று கேலிப் பேச்சுகளும் அதிகமாகிக்கொண்டேயிருந்தன. இந்த வயதின், இந்தப் பருவத்தைச் சார்ந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணமோ, தீர்வோ எதுவும் பாரதியிடம் இல்லை. அவள் மனம் காற்றில் அலையும் ஒரு காற்றாடிபோல இலக்கின்றி அலைந்து கொண்டிருந்தது.

   பாரதிக்கு அப்போது இருந்த ஒரே ஒரு ஆறுதல் வாசு மட்டுமே. வாசு, பாரதியைவிட இரண்டு வயது பெரியவன், ஒரே பள்ளியில்தான் இருவரும் படிக்கிறார்கள். வாசுவால், பாரதியை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதிக்கு வாசுவுடன் பேசும்போதெல்லாம் அப்பாவிடம் பேசுவதுபோல இயல்பாக இருக்க முடிந்தது. வாசுவின் பேச்சில் பாரதிக்கு ஒரு முதிர்ச்சி தெரியும். அந்த முதிர்ச்சியான அணுகுமுறை தான் அவளுக்குத் தேவையானதாக இருந்தது. `இதே முதிர்ச்சியுடனும், பக்குவத்துடனும்தான் இந்தப் பள்ளியும், இதன் ஆசிரியர்களும் என்னை அணுகியிருக்க வேண்டும்.ஆனால், யாரும் இதுவரை என்னை அப்படி அணுகவில்லை’ என்பது பாரதிக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்பாவே இதற்குத் தயாராக இல்லாதபோது இந்தப் பள்ளியையோ, இதன் ஆசிரியர்களையோ நான் எப்படிக் குறை சொல்ல முடியும் என்று நினைத்துக்கொள்வாள்.

   வாசு மட்டும் அடிக்கடிச் சொல்வான். “ இங்கு யாரும் உன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அதை எப்போதும் நீ எதிர்பார்க்காமல் இரு. நீ நீயாக வாழ வேண்டும். உனது அடையாளத்தோடு வாழ வேண்டும் என்று விரும்பினால், இங்கிருந்து போய்விடு. எங்க மாமா சென்னையில் இருக்கிறார். ஒரு பத்திரிகையில் சீனியர் எடிட்டராக இருக்கிறார். அங்கு போய்விடு. அவர் உன்னைப் புரிந்துகொள்வார். நான் அவரிடம் பேசுகிறேன்” என்பான். ஆனால், பாரதிக்குதான் அப்பாவை விட்டுவிட்டு எப்படிப் போவது என்று தயக்கம். என்றாவது அப்பா தன்னை நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்பினாள்.

   பாரதி தன்னை முழுமையாக உணர்ந்து கொண்ட நாள் ஒன்று வந்தது. தனது மனதோடு எந்தச் சமரசமும் தன்னால் செய்துகொள்ள முடியாது என்று பாரதி புரிந்துகொண்ட நாள் அது. பாரதி, தன் வாழ்க்கையை இந்த உடல் சார்ந்து தனது மனம் சார்ந்து மீள் கட்டுமானம் செய்வது அவசியமானது என்று தெரிந்து கொண்ட நாள் அது. ஆனால், அந்த நாளும் அது சார்ந்த நினைவுப் படிமங்களும் அத்தனை ஒன்றும் சந்தோஷமானதாக இல்லை.

   எப்போதும்போலத்தான் அன்றும் விடிந்தது எந்த சுவாரசியங்களும் அற்று. பாரதி அன்று பள்ளிக்கு முன்னதாகவே சென்றுவிட்டாள். வகுப்பில் காவியா மட்டும்தான் இருந்தாள். பாரதியைப் பார்த்துச் சிரித்தாள். வந்து அருகில் அமரச் சொன்னாள். பாரதிக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. முடியாது என்று சொன்னால் ஏதாவது கேலியாகச் சொல்வாள் என்று நினைத்து அவள் அருகில் சென்று கொஞ்சம் தள்ளியே அமர்ந்தாள். காவியா நெருங்கிவந்து பாரதியின் மிக அருகில் அமர்ந்து கொண்டாள். “ ஏன் எப்போதும் பசங்ககூடவே இருக்க, உனக்கு ஒரு மாதிரி இல்லையா” என்றாள்.

   “இல்லை, உன் பக்கத்தில் இப்படி உட்கார்ந்து இருக்கும்போதுதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு.”

   “நம்ம ரெண்டு பேரும் பொண்ணுங்கதானே, என்ன ஒரு மாதிரி இருக்கு” என்று பாரதியின் கையைப் பிடித்தாள்.

   பாரதிக்குப் படபடப்பாக இருந்தது. அவளது நெருக்கம் அவளுக்குள் ஏதோ செய்தது. பசங்க கூட கட்டிப் புரண்டு எல்லாம் சண்டை போட்டு விளையாடியிருக்கிறாள். ஒருமுறைகூட அவளுக்குள் இப்படி நிகழ்ந்தது இல்லை. ஒரு பெண்ணின் நெருக்கமும் தொடுதலும் அவளுக்குள் இத்தனை கிளர்ச்சியை உண்டு பண்ணும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் அமர்ந்தாள்.

   “கேட்டுக்கிட்டே இருக்கேன், என்ன அப்படி யோசிக்கிற” என்று கேட்டுக்கொண்டே காவியா, பாரதியின் கையை எடுத்துத் தனது மடிமேல் வைத்துக்கொண்டாள்.

   பாரதிக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. தனது கையைக் கொஞ்சம் அழுத்தமாக அவளின் தொடையில் பரவ விட்டாள்.

   “ஏன் இப்படி பாய்ஸ் மாதிரி முடி வெட்டியிருக்க” என்று காவியா, பாரதியின் கேசத்தைக் கலைத்துவிட்டாள்.

   “இது உனக்குப் பிடிச்சிருக்கா?” என்றாள் பாரதி.

   “நீ பையன் மாதிரி இருக்க.”

   “நான் பையன்தான்.”

   “எப்படி நம்பறது? நீ சும்மா சொல்ற.”

   “நிஜம்தான்.”

   “அப்படின்னா, எனக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்.”

   பாரதி காவியாவின் மிருதுவான கரங்களைப் பற்றிக்கொண்டாள், இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போய் அவளை முத்தமிட்டாள். மென்மையாக, பின் அழுத்தமாக, பின் மூர்க்கமாக, காவியாவும் முத்தமிட்டாள். அவர்கள் தங்களை மறந்தார்கள். பாரதியின் அடையாளத்தையும் அதன் ரகசியத்தையும் காவியா ஒரு சாவியைக் கொண்டு திறந்து விட்டாள். அது உணர்ச்சிப் பிழம்பாய் கொஞ்சம் கொஞ்சமாகப் பாரதியின் சுயம் முழுதும் நிறையத் தொடங்கியது.

   வெளியே யாரோ சிரிப்பது கேட்டது. இருவரும் தங்களின் நிலையை உணர்ந்து திரும்பிப் பார்த்தபோது அந்த வகுப்பில் உள்ள எல்லோரும் வந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
   அந்தச் சம்பவம் அவ்வளவு வேகமாக எல்லா இடமும் பரவியது. அதன் நீட்சியாக பாரதி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். காவியா ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டாள். பாரதியின் அப்பா நிலைகுலைந்துபோனார். எங்கு போனாலும் இதே கேள்வி, கிண்டல், கேலிப் பேச்சு, அறிவுறை... அப்பாவால் எங்கும் போக முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். அம்மா எப்போதும் அழுதுகொண்டே இருந்தாள். “நாலோட நிப்பாட்டிக்கலாம்னு சொன்னேனே... இந்த மனுசன்தான் பையன் பையன்னு அலைஞ்சார், அதுக்குத்தான் இப்படி வந்து பொறந்திருக்குது, எல்லாத்தோட உயிரையும் வாங்க” என்று அழுது புலம்பித் திட்டிக் கொண்டிருந்தாள்.

   பாரதியைப் பொறுத்தவரை அவளுக்கு இது பெரிதாய் தெரியவில்லை. இதைவிட மோசமான தருணங்களை எல்லாம் அவள் கடந்து வந்திருக்கிறாள். “போயும் போயும் ஒரு பொண்ணோட” என்று அம்மா அழுது கொண்டிருந்தாள். பாரதிக்கு நன்றாகத் தெரியும், இதே அவள் ஓர் ஆணுக்கு முத்தம் கொடுத்திருந்தால், அது இத்தனை அசிங்கமாய் பார்க்கப்பட்டிருக்காது.ஒரு ஹோமோசெக்ஸுவலாக, ஒரு லெஸ்பியனாக இது புரிந்துகொள்ளப்பட்டதால்தான், இத்தனை அசிங்கமாகவும் ஒழுங்கீனமாகவும் அணுகப்படுகிறது. பாரதியைப் பொறுத்தவரை இது ஹோமோசெக்ஸுவல் கிடையாது. அவளைப் பொறுத்தவரை அவள் ஓர் ஆண். ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணின் மீதுதான் இயல்பாக ஈர்ப்பு வரும். பாரதிக்கும் ஒரு பெண்ணின் மீதுதான் ஈர்ப்பு வந்தது. அது எப்படி ஹோமோசெக்ஸுவல் ஆகும், இந்தச் சமூகம் என்னைப் பெண்ணாய் பார்த்தால், அது என் தவறு எப்படியாகும், நான் யாரென்பது எனக்குத் தான் தெரியும். இதை யாரிடமும் நிறுவ வேண்டிய அவசியம் தனக்கில்லை என உறுதியாக நம்பினாள்.

   பாரதியின் கவலையெல்லாம் அப்பாவைப் பற்றியதுதான். அப்பா ஒரு வார்த்தைகூட இதைப் பற்றிக் கேட்கவில்லை.அவர் கேட்டிருந்தி ருக்கலாம். அவருக்குத் தன்னால் புரிய வைக்க முடியும். அப்பா தன்னைப் புரிந்து கொள்வார் என்று நம்பினாள். ஆனால், அப்பாவின் மெளனம் கவலையூட்டக் கூடியதாய் இருந்தது. ஒருவேளை அப்பா புரிந்துகொள்ளத் தயாராய் இல்லையோ என்று நினைத்தாள்.  நடந்த செயலுக்கு நான் ஒருபோதும் வருந்தப் போவதில்லை. இத்தனை காலம் எனக்குள் அவிழ்க்கப்படாமல் கிடந்த ஏராளமான புதிர்களை அந்தத் தருணம்தான் விடுவித்தது. உடல்ரீதியாக எனது அத்தனை குழப்பங்களுக்கும் அந்தத் தருணத்தில்தான் விடையிருந்தது. நான் என்னைத் தெரிந்து கொண்டேன். நான் யாரென தெரிந்துகொண்டேன். எனது உடல் அத்தனை இயல்பாய் எனது மனதோடு இசைந்துபோனது அந்தத் தருணத்தில்தான். அதற்காக நான் ஒரு போதும் வருந்தப்போவதில்லை. அப்பா பேசினால் புரியவைக்க முயல்வேன். அப்பாவால் அது முடியாது, அவர் இந்தச் சமூகம் வரையறை செய்த நியாயங்களின் பின்னால் மறைந்துகொள்வார். அப்பாவால் அதனை அவ்வளவு எளிதாக உதறிவிட முடியாது. ஏனென்றால், அவர் அப்பா. நான்கு பெண்களுக்கு அப்பா.

   பாரதி கிளம்புவது என முடிவு செய்து விட்டாள். வாசு அதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டான். யாரிடமும் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவின் அந்த மென்மையான கைகளுக்குள் தனது கைகளை இறுதியாய் ஒருமுறை கோத்துக் கொள்ள நினைத்தாள். அப்பாவின் அறைக்குச் சென்றாள். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். அந்தத் தொடுதலின் வழியாக எல்லாமும் பேசிவிட முடிந்தால், எத்தனை சுலபமாக இருக்கும் என்று நினைத்தாள். இந்த ஸ்பரிசமும் அதன் வழியே கடத்தப்படும் இந்த அன்பும் இதுவே கடைசியாக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டு வந்தது. அது அப்பாவின் பஞ்சு போன்ற கைகளில் பட்டுத் தெறித்தது. அப்பா ஒருவேளை விழித்துக்கொள்ளலாம் இல்லை விழித்துக்கொண்டுதான் இருக்கலாம் என்று நினைத்தவளாய் அங்கிருந்து கிளம்பினாள்.

   பதினாறு வயதில் இந்த நகரத்தைவிட்டுக் கொட்டும் மழையில் கிளம்பிய பாரதி என்பவள், பதினாறு வருடம் கழித்து அதே மழை பெய்யும் ஒருநாளில் இந்த நகரத்துக்குப் பாரதி என்பவனாய் திரும்பி வந்திருக்கிறான். தனது அடையாளத்தை அகம் சார்ந்த அடையாளத்தை இத்தனை வருடங்களில் மீட்டெடுத்திருக்கிறான். அதன் வலிகளும் ரணமும் இன்னும் பாரதியின் மன அடுக்குகளில் ஒளிந்திருக்கிறது என்பதற்கு இந்த நகரத்தைத் தவிர வேறு எதுவும் சாட்சியாக இருக்க முடியாது.

   “என்னடா பாதியில் வந்துட்ட, உன் பொறுமைய ரொம்பவே சோதிச்சிட்டாங்களா?” வாசுவின் குரல் கேட்டு பழைய நினைவோட்டங்களில் இருந்து மீண்டு பாரதி வெளியே வந்தான்.

   “நான் கிளம்புறேன், நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு ஏர்போர்ட் வந்துடு” என்று சொல்லிவிட்டு இன்னொரு சிகரட்டைப் பற்றவைத்தான் பாரதி.

   “என்னடா அதுக்குள்ள? நாளைக்குப் போகலாம் இரு. உனக்குக் கொஞ்சம் மாறுதலா இருக்கும்னுதான் இங்க வரச் சொன்னேன். ரெண்டுநாள் இருடா, கோபம்லாம் முதலில் குறையட்டும். மீதியெல்லாம் நிதானமாகப் பேசிக்கலாம்.”

   “என்ன பேசுறது? பேசறதுக்கு எதுவும் இல்லை.”

   “அப்படியெல்லாம் இல்லடா, காவியா இல்லாம நீயே இல்லை, உன்னைவிட உனக்காக அதிக இழப்புகளையும் அதிக வலிகளையும் அவள்தான் கடந்து வந்திருகிறாள். ஒரு சீனியர் ரிப்போர்ட்டராக உனது இந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காவியாவைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. நீ காவியாகிட்ட பேசு. அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுடா. நீயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா எப்படி?காலையிலிருந்து நிறைய மெசேஜ் அனுப்பியிருக்காளாமே... நீ பேசுடா எல்லாம் சரியாகிடும்.”

   “ஒவ்வொருத்தருக்கும் அவங்க செயலுக்குப் பின்னாடி ஒரு நியாயம் இருக்கும். அவளுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அது எனக்கு முக்கியம் இல்லை. காதலுக்கும் அன்புக்கும் எந்த நியாயமோ அநியாயமோ கிடையாது. இதைக் காவியாவே நிறைய முறை சொல்லியிருக்கா. ‘love does not need explanation, you just understand’ னு எத்தனையோ முறை சொல்லியிருக்கா. இன்னைக்கு ‘let me explain’ னு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கா. இது முடிஞ்சு போச்சுடா. இழப்பு எனக்கு ஒண்ணும் புதுசு இல்லை. எல்லா இழப்பையும் கடந்துதான் இங்க வந்திருக்கேன்.”

   “பாரதி, நீயா இப்படிப் பேசுற. காவியாவை உன்னால் எப்போதும் இழக்க முடியாது. அவள்தாண்டா நீ, நீதான் அவள். காவியா எங்கிட்ட பேசுனா, எல்லாத்தையும் சொன்னா, என்ன பெரிசா நடந்துடுச்சு... அந்தக் கணநேரத்தில் நிகழ்ந்த அவள் உடல் சார்ந்த ஒரு பலவீனம், சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் எல்லோருடைய பலவீனங்களையும் வெளியே கொண்டு வரும். குறைந்தபட்சம் அது உடல். அவ்வளவுதான், உடலுக்குத் தேவையானதெல்லாம் உணர்ச்சிகளைக் கொட்ட ஒரு வடிகால், ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான். உடல் சார்ந்து இந்தச் சமூகம் நிர்ணயித்திருக்கிற ஒழுக்கவியல் விழுமியங்கள் எல்லாம் எவ்வளவு முட்டாள்தனமானது என்று உன்னைவிட யாருக்குத் தெரியும். ஒருவரின் அடையாளம் அவரது உடல் அல்ல மனம். உடல்ரீதியான வாதைகளும் ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒருவரின் ஆளுமையை நிர்மாணிக்க முடியாது என்று சொல்லித்தான் நீ இன்று நீயாய் இருக்கிறாய். காவியாவின் உடல்தான் காவியாவின் அந்தக் கணத்தைக் கட்டமைத்திருக்கும். அவள் மனம் கிடையாது. அது எப்போதும் உன்னைச் சுற்றியேதான் இருக்கும். அதனால்தான், நடந்த சம்பவத்தை அவளால் உடனடியாக உன்னிடம் சொல்ல முடிந்தது. இதை அவள் எப்போதும் மறைத்திருக்கலாம். ஆனால், அவள் மனம் அதற்கு ஒப்பாது. இதையெல்லாம் நீயே புரிந்துகொள்வாய் என்றுகூட அவள் எதிர்பார்த்திருக்கலாம்.”

   “சரி, நான் கிளம்புறேன், நீ நேராக ஏர்போர்ட் வந்துடு” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென காரை நோக்கிக் கிளம்பினான் பாரதி.

   வாசுவுக்குத் தெரியும். இதற்குமேல் பாரதியிடம் பேச முடியாது. அவன் பேசுவதையோ மற்றவர்களின் தர்க்க ரீதியான விளக்கங்களையோ எப்போதுமே ஒரு பொருட்டாய் எடுத்துக்கொள்ள மாட்டான். அவனைப் பொறுத்தவரை அவனது நியாயம்தான். தனி மனித உணர்வையும் அது சார்ந்த மதிப்பீடுகளையும் பற்றி எப்போதும் பாரதிக்கு எந்த ஒரு கரிசனமும் இருந்தது இல்லை. அது இயல்பாகவே அவனுக்கு வந்ததா இல்லை இந்தக் கடினமான வாழ்க்கை அவனை இப்படி மாற்றியதா என்பது வாசுவுக்குக்கூடத் தெரியாது. வாசு, பாரதியிடம் அப்பாவைப் பார்க்கப் போகலாமா என்றுகூட கேட்க நினைத்தான். ஆனால், பாரதி அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தான்.

   “ஹோட்டல் போயிட்டு ஏர்போர்ட் போகணும்” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்தான் பாரதி. தனது செல்போனை எடுத்து உயிர்ப்பித்தான். அடுக்கடுக்காய் மெசேஜ் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமே காவியா அனுப்பியது தான். `Let me explain’ என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. திரும்பவும் செல்லை அணைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். காரின் அந்தச் செவ்வகக் கண்ணாடி வழியே இன்னும் தூறல். கார் இப்ராஹிம் பார்க்கைக் கடந்து சென்று கொண்டிருந்தது. ஒரு நிமிடம் மழையில் நனைந்த அந்த பார்க்கைப் பார்த்தான். ஒன்றும் பெரிய மாற்றமில்லை. பதினாறு வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரியேதான் இருக்கிறது. அதன் சுவர்கள் மட்டும் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது, அதில் சில ஒவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மற்றபடி இது அவன் நடை பயின்ற அப்பாவின் விரல் பிடித்து நடந்த அதே இப்ராஹிம் பார்க்தான். கடந்த காலத்தில் தான் சந்தோஷமாகக்கூட இருந்திருக்கிறேன் என்பதற்கு இந்த பார்க் மட்டும்தான் சாட்சி என நினைத்துக் கொண்டான்.

   பாரதிக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அப்பா இப்போது எப்படி இருப்பார் என மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அப்பா என்னைக் கண்டிப்பாகத் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பார்த்திருப்பார். அது நான்தான் எனத் தெரியுமா? இத்தனை வருடத்தில் என்னைப் பார்க்க வேண்டும் என ஒருமுறைகூடவா நினைத்திருக்க மாட்டார்,  அப்படி நினைத்திருந்தால் கட்டாயம் தேடிவந்து என்னைப் பார்த்திருப்பாரே, ஒரு வேளை காவியா விஷயம் தெரிந்து இன்னும் அதிகமாகக் கோபப்பட்டிருப்பாரோ, ஒரு வேளை அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ, அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா? வரிசையான கேள்விகளுக்குப் பின் பாரதிக்குக் கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. காரை நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொண்டான். ஓர் ஓரமாகச் சென்று இன்னுமொரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான். இனி அப்பாவைப் பார்க்காமல் இங்கிருந்து போகக் கூடாது என முடிவெடுத்தவனாய், உடனடியாக வாசுவுக்கு போனைப் போட்டு, “அப்பாவைப் பார்க்கலாம். நேரா கல்லுக்குழி ரயில்வே கிரவுண்ட் வந்துடு. அங்கிருந்து ரெண்டுபேரும் ஒண்ணாப் போகலாம்’’ எனச் சொல்லி வைத்துவிட்டான். வாசுவுக்கு இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அவனால் முதலில் அதனை நம்ப முடியவில்லை. ஆனால், எதிர்பார்த்திருந்தான். ஏனென்றால், பாரதியின் அப்போதைய மனநிலை நம்ப முடியாத முடிவுகளை எடுக்கக் கூடியதாய் இருந்தது.

   கல்லுக்குழி ரயில்வே காலனியில் அந்த வீடு பூட்டியிருந்தது. இந்தப் பதினாறு வருடங்களுக்கான மாற்றம் என ஒன்றும் அங்கு இல்லை. பழமை மாறாத அதே ரயில்வே குவாட்டர்ஸ், பாரதியின் வீடு மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது. பராமரிக்காமல் விட்ட குரோட்டன்ஸ் செடிகள்,சிதிலமடைந்த சுவர்கள், கரையான் அரித்த மரச்சட்டங்கள் எனச் சில மாற்றங்கள். மொத்தத்தில் அந்த வீடு பொலிவற்றதாய் இருந்தது.
   “என்னடா வீடு பூட்டியிருக்கு. இரு... நான் பக்கத்து வீட்டில் போய் விசாரித்துவிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான் வாசு. பாரதி அங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். வாசு கொஞ்சம் பதட்டமாக வந்தான். அவன் நடையில் வேகத்தைக் கவனித்தான் பாரதி.

   “பாரதி, சீக்கிரம் கிளம்பு. ரயில்வே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.”

   “என்னடா, என்னாச்சு?”

   “அப்பாவுக்கு நேத்து நைட் திடீர்னு நெஞ்சு வலியாம். எல்லோரும் ஆஸ்பத்திரியில்தான் இருக்காங்களாம்.”

   பாரதியின் கண்களில் இருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவன் அழுது பல வருடங்கள் ஆயிற்று. கண்ணீர் எல்லாம் வற்றிப் போய் விட்டது என நினைத்துக் கொண்டிருந்தான். கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “வாசு அப்பாவைப் பார்க்கணும்டா, பேசக்கூட வேண்டாம். பார்த்தால் போதும்டா” என்றான்.

   “சீக்கிரம் வா பாரதி. ரயில்வே ஆஸ்பத்திரிக்கு தான் முதலில் கூட்டிட்டுப் போனாங்களாம். ஆனால், இன்னும் அங்குதான் இருப்பார்களா என்று தெரியவில்லையாம், நம்ம போய்தான்  விசரிக்கணும். வா.”
   ரயில்வே ஆஸ்பத்திரியில் விசாரித்ததில் நேற்று இரவே கே.எம்.சி-க்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்.

   பாரதிக்கு இன்னும் படபடப்பாய் இருந்தது. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அப்பாவைப் பற்றியோ அவரது உடல் நிலையைப் பற்றியோ தோன்றியது இல்லை. இப்போது மட்டும் ஏன் தோன்ற வேண்டும், திருச்சி வந்ததுதான் காரணமா? அப்படியென்றால் இந்த பதினாறு வருடங்களில் திடீரென எப்படி இன்று  வந்தேன், இது எல்லாம் யாருடைய கணிப்பு? இவை அனைத்தும் ஒரு தற்செயல் நிகழ்வு என்பதை பாரதியால் அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

   கார் கே.எம்.சி வந்து சேர்ந்தது. பாரதி வேக வேகமாக உள்ளே சென்றான். மருத்துவமனை வெளியே நாலைந்து பேர் அழுதுகொண்டிருந்தார்கள். அதில் யாரும் தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கக் கூடாது என்று பார்த்தான். யாரையும் தெரியவில்லை. தெரிந்தவர் யாரேனும் இருந்தால்கூட அவனுக்கு அடையாளம் தெரியப்போவதில்லை. வாசு அதற்குள் விசாரித்துக்கொண்டு வந்தான். “ஐ.சி.யூ-வில இருக்காராம். வா போகலாம்.”

   இரண்டு பேரும் லிப்ட்டுக்குக்கூடக் காத்திருக்க முடியாமல், அத்தனை விரைவாகப் படியேறினர். ஐ.சி.யூ-விற்கு வெளியே பத்து பதினைந்து பேர் நின்றிருந்தனர். பாரதி எல்லோரையும் பார்த்தான். அந்தக் காத்திருக்கும் இடம் அவ்வளவு அமைதியாக இருந்தது.எல்லோரும் ஏதோ யோசனையில் இருப்பதுபோல் பட்டது. வாழ்வுக்கும் இறப்புக்கும் மத்தியில் இந்த ஐ.சி.யூ- வின் கதவுதான் இருப்பதைப்போல, எல்லோரும் அந்தக் கதவையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் சொல்ல அந்தக் கதவின் உள்ளே ஒரு செய்தி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்தக் கதவு திறக்கும் முறை ஒன்றுதான். ஆனால், அதன் வழியாக எல்லோருக்கும் ஒரே விதமான செய்தி அனுப்பப்படுவதில்லை.

   அந்தக் கூட்டத்தில் பாரதி, அம்மாவைக் கண்டுகொண்டான். அம்மா சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள். அம்மாவைச் சுற்றிலும் குழந்தைகள் உட்பட நிறைய பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லாம் பாரதியின் அக்கா மற்றும் அவர்களது குழந்தைகளாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அம்மா இவனைப் பார்த்தாள். பிறகு, தலையைக் குனிந்து கொண்டாள். அவளுக்கு அடையாளம் தெரிந்திருக்காது. திரும்பவும் ஒருமுறை நிமிர்ந்து வாசுவைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கத் தொடங்கின. தனது கண்ணை அசைத்து அவள்தானா என்று கேட்பதுபோல வாசுவைப் பார்த்து ஜாடை செய்தாள். வாசு ஆம் என்பது போல மெள்ளத் தனது தலையை ஆட்டினான். அம்மா சத்தமாகக் குரலெடுத்து அழத் தொடங்கினாள். அதன் அர்த்தம் என்னவென்று பாரதிக்குப் புரியவில்லை. இத்தனை வருடம் கழித்து என்னைப் பார்ப்பதால் அழுகிறாளா,  எப்படி மாறி வந்திருக்கா பாரு என்று அழுகிறாளா, ஏன் வந்தாள் என அழுகிறாளா? பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு உள்ள யாருக்கும் கூட இவள் ஏன் இப்படித் திடீரென அழுகிறாள் எனப் புரியவில்லை. எல்லோரும் திரும்பி பாரதியைப் பார்த்தார்கள். பாரதி யாரையும் பார்ப்பதைத் தவிர்த்து விறுவிறுவென ஐ.சி.யு-வின் உள்ளே நுழைந்தான்.

    உள்ளே டாக்டரிடம் பேசிவிட்டு அப்பாவின் பெட் முன்னே சென்று நின்றான். அப்பா உறங்கிக்கொண்டிருந்தார். அவரது உடல் கழுத்து வரை போர்த்தப்பட்டிருந்தது. ஆக்ஸிஜன் மாஸ்க் முகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. போர்வைக்குள் இருந்து நிறைய வொயர்கள் இங்கும் அங்குமாக இணைக்கப்பட்டிருந்தது. அப்பாவின் இடது கையில் உள்ள நரம்பில் ஊசி செருகப்பட்டு  கலர்கலராய் மருந்து சென்று கொண்டிருந்தது. பாரதி, அப்பாவின் வலது கையைத் தொட்டான். அவரது உள்ளங்கையில் தனது கையை இணைத்துக்கொண்டான். அதே மென்மை, அதே பெண்மை தோய்ந்த மென்மை, பஞ்சு போன்ற மிருதுவான உள்ளங்கை, இதுதான் அப்பாவின் அடையாளம். இதுதான் எனக்கும் அப்பாவிற்கும் இடையே உள்ள சொல்லப்படாத அன்பின் அடையாளம். இந்த மென்மையும் கொஞ்சம் பெண்மை கலந்த பாவனையும்தான் என் அப்பா. நான் அப்பாவிடம் விரும்புவது இதைத்தான். ஏனென்றால், இதுதான் என் அப்பா.

   பாரதி அழத் தொடங்கினான். அப்பாவின் கண்களிலும் கண்ணீர் கசியத் தொடங்கியது. அவர் பாரதியை உணர்ந்துகொண்டார். அவன் வருகையைத் தெரிந்துகொண்டார். வெறும் தொடுதலை வைத்தே அவர் பாரதியை அடையாளம் கண்டுகொண்டார். பாரதியை உணர்ந்துகொள்ள அவருக்கு இந்தத் தொடுதல் போதுமானதாக இருந்தது. எந்தப் புறத்தோற்றமும் அவருக்குத் தேவைப்படவில்லை. பாரதிக்கும் அப்பாவுக்கும் இடையே இந்தத் தொடுதலையும் அதற்கு இடைப்பட்ட காலத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை. மெதுவாக அப்பா கண்ணைத் திறந்து பாரதியைப் பார்த்தார். பாரதியின் புற மாறுதல்கள் அவருக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. மாறாக பாரதியைப் பார்த்து நிதானமாகச் சிரித்தார். அதன்பின் எத்தனை அர்த்தங்கள், எத்தனை உண்மைகள், எத்தனை சொல்லப்படாத வார்த்தைகள் இருக்கின்றன என்பதை பாரதி சுலபமாகப் புரிந்து கொண்டான். அவனுக்கு எந்த வார்த்தையும் ஆறுதலும் அழுகையும் கதறலும் தேவைப்படவில்லை. பாரதி ஐ.சி.யு-வைவிட்டு அத்தனை நிம்மதியுடன் வெளியே வந்தான். யாரையும் பார்க்காமல் யாருடனும் பேசாமல் வேகமாக வந்து காரில் ஏறிக்கொண்டான். வாசு பின்னாடியே ஓடிவந்து ஏறிக்கொண்டான்.

   “என்ன பாரதி, யார்கிட்டவும் சொல்லாம வந்துட்ட? அப்பா என்ன சொன்னார்டா?”

   “அப்பா என்னைப் புரிஞ்சுக்கிட்டார்டா” என்று சொல்லிவிட்டு தனது செல்போனை ஆன் செய்தான். காவியா ஏராளமான மெசேஜ்களை அனுப்பியிருந்தாள். அதே `Let me explain’. பாரதி நிதானமாக ரிப்ளை செய்யத் தொடங்கினான்.  “Love doesn’t need explanation, it needs understanding. I understand”.

   கார் அந்த அகலமான சாலையில் அவ்வளவு நிதானமாக சென்று கொண்டிருந்தது, மழை இப்போது விட்டிருந்தது, திருச்சி மழையில் நனைந்து போய் அத்தனை ரம்மியமாய் இருந்தது.
   http://www.vikatan.com/
  • By நவீனன்
   ஷினுகாமி - சிறுகதை
     சிறுகதை: லதாமகன், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   ``ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’’ கொஞ்சல் ஜப்பானிய மொழியில் அந்தப் பெண் புன்னகைத்துக் கேட்டபோது புரியவில்லை.
   ``மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’’ என்றேன். ``ஹிரோஷிமா போறீங்களா?’’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாகத்  தட்டிவிட்டு ‘`ஆம்’’ என்றேன். `‘தனியாகவா’’ ஜப்பானியப் பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் `‘ஆம்’’ .
   ‘`ஏன் ஹிரோஷிமா?’’ 

    இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும் பாதைகளெல்லாம் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்தினன். வேடிக்கை பார்க்க வந்தவன். ஊர் சுற்ற வந்தவன். நம் ஊரில் எது இவனை ஈர்த்துக்கொண்டு வந்திருக்கும் என்றொரு ஆர்வம் அவர்களின் கேள்விகளில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் ஓர் ஆச்சர்ய முகபாவனை. பெரும்பாலானவர்கள் நான் இங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிந்தபின் அடங்கிவிடுவார்கள். வேலை செய்கிறவன் இடைவெளிகளில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். நாடுவிட்டு நாடு கடந்து சுற்றுகிறவன் மீதுதான் கரிசனம். இதுவரை என் நாட்டில் நான் காணாத எதைத் தேடி வந்திருக்கிறான் என்னும் ஆச்சர்யம்.
   “ஜப்பான் பயணம் என்று முடிவான கணத்தில் தோன்றிய உணர்வு. அங்கே ஒருநாள் அமர்ந்திருக்க வேண்டுமென்று.’’
   “எங்கே?”
   “அணுகுண்டு விழுந்த இடத்தில்.  உடலெல்லாம் எரிய பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இறந்து போன இடத்தில்” என்றேன். கொஞ்சம் அதிகமாகச் சென்றுவிட்டோம் என்று தோன்றியது. அவளிடம் அப்போதும் அதே புன்னகை.
   “ஏன்?”
   “மரணம் என்னை வசீகரிக்கிறது.”
   “கொலைகள். இல்லையா?’’
   நேரடியான கேள்வி. உண்மையானதும்கூட. அதை மறைக்க முயற்சிசெய்தேன். நடுங்கி விழவிருந்த சிகரெட்டை லாவகமாக மறைப்பவன் போலத் தொட்டியில் அமிழ்த்தி அடுத்த சிகரெட்டை எடுத்துப்  பற்றவைத்துக்கொண்டேன்.
   “ இருக்கலாம். உள்ளூர் சுடுகாட்டில், காசியில், எரியும் பிணங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.மரணம் வசீகீரமானதுதானே?” மெல்லப் பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், இழுத்து மூச்சு விட்டாள்.
   “இல்லை. மரணம்,  வெறும் சோம்பலான நாய்.கொலை, ஒரு வேட்டை நாய். சோம்பலில் எந்த வேடிக்கையும் இல்லை. வேட்டையில்தான் வேடிக்கை இருக்கிறது. வேட்டை நாய் சோம்பலாக இருக்கும்போது பார்த்திருக்கிறாயா? அது அழகுதான். ஆனால், உண்மையில்லை.”
   பேச்சை மாற்றலாம் என்று தோன்றியது. நடு முதுகில் பூச்சி ஊரும் எண்ணம். தலையசைத்து அதைக் கலைத்தேன். “நீங்கள் தனியாகச் செல்கிறீர்களா?” என்றேன். “ஆம். ஆனால், அங்கே எனது நண்பர் இணைந்து கொள்வார். எனது பிறப்பிடம் அதன் அருகேதான். அங்கிருந்து வருவார்” என்றாள். தொடர்ந்து, “உங்களுக்கு பிரச்னை இல்லை யெனில், எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” எளிமையான வார்த்தைதான். ஆனாலும், ஏதோ ஒன்று இயல்பான வெளியூர் பயம் உள்ளே உருட்டியது.
    “ இல்லை. அங்கே தனியே அமரவேண்டுமென விரும்புகிறேன். அந்த இடத்தில்” சொல்லிவிட்டு அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறதா என்று பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. “சரி. பரவாயில்லை. இந்த ட்ரெயினிலும் அடுத்த  நான்குமணி நேரம் தனியாகச் செல்வதாக எந்த வேண்டுதலும் இல்லாவிட்டால், என்னுடன் இணைந்துகொள்ளலாம். பயப்படாதீர்கள், தின்றுவிட மாட்டேன். ஜப்பானியர்களில் உங்கள் ஊரின் பிஸ்கட் கொள்ளையர்கள் இருக்க சாத்தியம் குறைவுதான்” என்றாள். இந்தியாவைப்பற்றி எங்கோ படித்திருக்கிறாள். குறிப்பாக ரயில்பயணத்தின் பிஸ்கட் கொள்ளையர்களைப் பற்றி. இவளிடம் எ ன் நாட்டுப்பெருமையை எதைச் சொல்லி உருவாக்குவேன் என்ற எண்ணம் ஓடியது. இரண்டாவது சிகரெட்டை அணைத்தேன். புகையறைவிட்டுக் கதவைத் தள்ளி அவளுக்கு வழிவிட்டேன்.புன்னகைத்தபடியே வெளியேறினாள்.தொடர்ந்து பின்னாலே வந்தேன். சிறுபிள்ளை போன்ற உடல். அதிகமும் பதினந்து வயதைத் தாண்டாதென மதிக்கலாம். ஆனால், இந்த ஊரில் குமரிகள் முதல் கிழவிகள் வரை இதே உருவம் என்பதால், சற்று இடறியது. என் இருக்கையைத் தாண்டி நடந்தாள்.
   “என் இருக்கை இங்கே இருக்கிறது” குரல் பலவீனமாக ஒலித்தது. “பையை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். ஜன்னலை ஒட்டி இடம் தருகிறேன்’’ என்றாள். நாங்கள் இருந்த பெட்டி, முன்பதிவு செய்யத் தேவையில்லாதது. யாரும் எங்கும் அமர்ந்துகொள்ளும்படியிலானது. பையை எடுத்துக்கொண்டு நாய்க்குட்டிபோல அவள் இருக்கையின் அருகில் சென்று அமர்ந்தேன். திடீரென ஞாபகம் வந்தது. “உங்கள் பெயர் சொல்லவில்லையே’’ என்றேன்.
   “ஷினு. ஷினு காமி. உங்களுக்கு?” என்று கை நீட்டினாள். “நந்து’’ என்றேன். கைகொடுக்கும் முன்னதாகச் சட்டையில் துடைக்கும் உணர்வெழுந்ததைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். அதற்கும் இந்தியாவை அவள் இழுக்கக்கூடும் என்று தோன்றியது.
   “கிட்டத்தட்ட உங்கள் பெயரைப்போலவே எங்கள் ஊரில் ஒரு கடவுள் பெயர் உண்டு. சிவகாமி.”
   “ஓ.”

   ”தெரிந்திருக்கும் என நினைத்தேன். எங்கள் ஊர் ரயில் திருட்டையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.”
   பெரிதாகச் சிரித்தாள். “மனதைப் புண்படுத்தி விட்டேனா. மன்னிக்கவும். நிஜமாகவே சிவகாமி தெரியாது. ஆனால், இந்தியாவில் ஒரு பயணியாகச் சுற்றித் திரியவேண்டும் என நினைத்திருக்கிறேன். அதைப்பற்றிப் படிக்கும்போதுதான் ரயில் திருட்டு பற்றியும் படித்தேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.”
   “புண்பட்டாலும் அது உண்மைதானே” சங்கடத்தை மறைத்துப் புன்னகைத்தேன்.
   “மரணம்போல.”
   “என்ன?”
   “மரணத்தைப்போல. எல்லோரையும் புண்படுத்தும். எல்லோருக்கும் வரும். சாஸ்வதமான உண்மை. சரிதானே.”
   “சரிதான்.”
   சாய்ந்து அமர்ந்துகொண்டேன். ஊர்கள் ஜன்னலில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.  அதிவேகத் தொடர்வண்டிகள்மீது ஆரம்ப நாள்களில் இருந்த ஆச்சர்யம் குறைந்து மற்றுமொரு பயணம் என்ற அளவில் மாறியிருந்தது. ஆனாலும், மரங்களுக்குப் பதிலாக ஊர்களே வருவதும் மறைவதுமாக இருப்பது இன்னும் ஆச்சர்யமூட்டு வதாகவே இருந்தது. “உறங்கப்போகிறீர்களா?” அருகிலிருந்தவள் கேட்டாள். திரும்பி அமர்ந்தேன். “அப்படியெல்லாம் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஏன் ஹிரோஷிமா போகிறீர்கள்?” நானும் பேசத் தயார் என்பதைப்போல மெல்ல சொற்களை நீட்டினேன்.
    “புத்தாண்டு கொண்டாட்டம். ஒவ்வொரு புத்தாண்டும் ஊருக்குப்போய் ஊர் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இப்போது அங்கே யாருமில்லை. எல்லோரும் டோக்கியோ வந்துவிட்டார்கள். அல்லது வெகு தொலைவில் ஏதாவது வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவன் மட்டும் அங்கே இருக்கிறான்.அவனை வரச்சொல்லியிருக்கிறேன், புத்தாண்டு நள்ளிரவுக்காக. இரவெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு, புத்தாண்டு பகல் முழுவதும் உறங்குவோம்.  மீண்டும்  எழுந்து டோக்கியோவிற்குத் திரும்பி வரவேண்டும்.’’
   சென்னையிலிருந்து திருச்சிக்கு வாராவாரம் துவைக்கவேண்டிய துணிகளுடன் போய்வந்துகொண்டிருந்த பழைய அறை நண்பன் ஞாபகம் வந்தது. அவள் பெட்டியில் அவளது ஆடைகள் ஒரு வார அழுக்குடன் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. சிரிப்பு வந்தது.
   “ஏன் சிரிக்கிறீர்கள்?’’
   “இல்லை. எங்கள் நாட்டிலும் இப்படித்தான். வாராவாரம் பெட்டிகட்டி ஊருக்குப்போகும் பழக்கம் உண்டு. ஊரில் குளத்தில் துவைப்பதற்காக ஆடைகள் சுருட்டிக் கொண்டுபோவோம். அது ஞாபகம் வந்தது.”
   ``நிச்சயமாக என் பெட்டியில் அழுக்குத் துணியில்லை. ஒரு நாய்க்குட்டி மட்டும் வைத்திருக்கிறேன். நேற்று இறந்தது.”

   தூக்கிவாரிப்போட்டது.  இறந்த நாய்க்குட்டியை பெட்டியில் வைத்துக்கொண்டு சிரித்தபடிவரும் ஒரு பெண்.

   அவள் வெடித்துச் சிரித்தாள். ``பதறாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்களின் வழக்கமான ஆடைகள்தான்” அவள் கண்ணடித்தாள். சிறிய கோடுபோன்ற கண்கள். தூண் சிற்பங்களில் இருக்கும் மூடிய கண்களைப்போல. டைல்ஸில் குறுக்கே ஓடும் கறுப்பு நாய்க்குட்டிபோன்ற கருவிழிகள். மஞ்சள்துணி போட்டு மூடிய, துணியை விடுவிப்பதற்காகப் பதறி ஓடும் கறுப்பு நாய்க்குட்டிகள்.

   ``ஆனால், உண்மையில் எனது குடியிருப்பில் மாடியில் ஒரு நாய்க்குட்டி இறந்துவிட்டது. அந்தப் பெண் இரவெல்லாம் அழுதுகொண்டே யிருந்தார். விளக்கு எரிந்துகொண்டேயிருந்தது. அவள் கணவர் சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டேயிருந்தார். என்னவோ திடீரென நினைவு வந்தது. அதைச் சொன்னேன். சிறிது நிமிடத்தில் முகமெல்லாம் வெளிறிவிட்டது பார்.”

   உண்மையிலேயே உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் அதிவேக ரயிலிலில் ஆள் குறைவாக இருக்கும் பெட்டியில், கைப்பையில் இறந்த நாயை வைத்திருக்கும் பெண் என்பதாகவே அவள் சித்திரம் உள்ளே மின்னிக்கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு தலையசைவுக்கும் ஒளி விடுபடப் பார்த்தேன். பிறகு, மீண்டும் மின்னலென வெட்டும் அந்தச் சித்திரம். இடையே அந்த டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகள். ஈரம் பொதிந்த திசுத்தாள்களைப் பையிலிருந்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தேன். டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகளை. பெட்டியில் இருக்கும் நாய்க்குட்டிகளை. இதுவரை பார்த்த அத்தனை நாய்க்குட்டிகளையும் அழுந்தத் துடைத்து எடுத்தேன். அவள் எந்தச் சலனமும் இன்றி எதிர்ப்புற ஜன்னல்களுக்கு வெளியே ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டேவந்தாள். இடையில் புகைவண்டி நிலையம் ஏதோ ஒன்று வேகமாக கடந்து சென்றது. நடைமேடையிலிருந்து ஒரு நாய்க்குட்டி ஓடிவந்து ஓடும் ரயிலின் கண்ணாடியில் பளீரென அறைந்ததுபோல இருந்தது. முகத்தை மீண்டும் அழுந்தத் துடைத்தேன். அவள் இயல்பாகத் திரும்பினாள்.
   “என்ன செய்யப்போகிறாய் குடித்தபின்?”

   “என்ன?”

   ``இல்லை. அந்த இடத்தில் அமர்ந்து இரவில் குடிக்கவேண்டும். பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?”

   “எதுவும் இல்லை. அவர்களில் யாராவது ஆவியாக வந்து காட்சி தந்தால், கொஞ்சம் பேசிக்கொண்டி ருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

   அதே சிறிய விலக்கமான புன்னகை. வெடித்துச் சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். அல்லது சீண்டப்பட்டிருக்க வேண்டுமென்று. ஏதோ கதை கேட்பவள் பாவனையில், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டாள். என்னை நோக்கிச் சாய்ந்து அமர்ந்தாள்.

   “என்ன பேசப்போகிறாய்? அவர்களிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

   “ஆம். மனிதர்களைப்பற்றி. அவர்களைக் கொல்வதாக முடிவெடுத்தவர்கள் பற்றி. அரசியல் காரணங்களுக்காக எங்கோ அமர்ந்து ஒரு பொத்தானை அழுத்தி அத்தனை பேரைக் கொன்ற ஒரு விரலைப்பற்றி.”
   “ஒருவேளை நீ அங்கு இறந்திருந்தால், உன்னிடம் யாராவது வந்து இதே கேள்வியைக் கேட்டால், உன் பதில் என்ன?”

   உண்மையில் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைச் சீண்டுவதற்காக, தூண்டிவிட்டு வாயைப் பிடுங்குவதற்காக எண்ணி எடுத்த ஒவ்வொரு சொல்லையும் அவள் எளிதாகக் கடந்து சென்றாள்; அதைவிட கூரிய ஆயுதங்களை என்னை நோக்கி எறிந்துவிட்டு.

   ”தெரியவில்லை. பெரும்பாலும் ஏற்கெனவே எதோ ஒரு விதத்தில் பழிவாங்கிவிட்டேன். அல்லது இறந்தபிறகு இது ஒரு விஷயமாகத் தெரியவில்லை. இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருந்திருக்கும். உன் பதில் என்ன?”

   “என்னிடம் பதில் இல்லை” வெடுக்கென சொன்னாள். கையில் வைத்து அழகு பார்த்த அழகிய பூந்தொட்டி விழுந்து நொறுங்கியதைப்போல என்னில் திடுக்கிடல் எழுந்தது. “என்னை மன்னித்துவிடு” என்றேன்.

   அவள் என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். பதில் சொல்லாமல் மறுபுறம் முகந்திருப்பி மீண்டும் ஓடும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   இலகுத்தன்மை ஏதோ ஒன்று உடைந்ததுபோல் இருந்தது. இழுத்துப் பெருமூச்சுவிட்டு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தேன். மரங்கள். சூரிய மின்சாரத்திற்கென புறம்போக்கு நிலங்களில் அரசாங்கத்தால் பதிக்கப்பட்ட தகடுகள். பழைய ஜப்பானிய பாணியிலான ஓட்டுவீடுகள். கடந்துசெல்லும் ரயில் நிலையங்கள். அங்கே அந்த நிறுத்தத்தில் நிற்கப்போகும் புகைவண்டிகளுக்காகக் காத்திருப்பவர்கள். தள்ளுவண்டிகளில் அமரவைக்கப்பட்டு உறங்கிவிட்டிருந்த குழந்தைகள். அவள் உறங்கியிருக்கக்கூடும் என்று தோன்றியது. பின்கழுத்தில் உறுத்தத் திரும்பினேன்.கூர்மையாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

   ``பெரியவர்கள் இறந்ததைவிட குழந்தைகள் தான் அதில் அதிகம். பேச முடியாத குழந்தைகள். உடல் எரிய,  நா வறண்டு, தண்ணீர் என வாய் திறந்து கேட்கத் தெரியாத குழந்தைகள். அவர்களிடம் பதில் கிடையாது. கேள்விகள் இருந்திருக்கலாம். யாருக்கும் தெரியாது. ஆனாலும், இறந்தார்கள். சிறிய பொத்தான். எங்கோ யாரோ அழுத்திய ஒரு பொத்தான். யாரோ யாரிடமோ சொல்லிய ஒரு வார்த்தை. மெல்ல ஊர்ந்து எழுந்து பறக்கிறவர்களிடம் வந்து சேர்ந்து, அவர்கள் திறந்த சிறிய கதவு. அங்கிருந்து விழுந்த ஓர் உலோகத்துண்டு. மொத்த பேரையும்  நா திறக்கவிடாமல் சாகடித்துவிட்டது. அத்தனை பேரையும் கொல்லவேண்டும்.

   அதற்குக் காரணமான அத்தனை பேரையும் ஒருத்தர் விடாமல்...” அவள் ஜப்பானிய வாசம் வீசும் ஓர் ஆங்கில உச்சரிப்பில் தடதடவென பொரிந்தாள். குரல் தழுதழுத்ததுபோல் இருந்தது. ஆனால், கண்களில் கோபம் இருந்தது. எச்சில் விழுங்கி எதுவும் சொல்ல முடியாமல் விழித்தேன். ``இன்னொரு சிகரெட்?” அவளது பதிலுக்குக் காத்திராமல் இருக்கையிலிருந்து எழுந்தேன். அவளைக் கடந்து போகவேண்டும். அவளை மீறிப் போக முடியாது. அவளும் அமர்ந்திருந்தாள். சில நொடிகளுக்குப் பிறகு, பெருமூச்சுவிட்டு கைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியையும்  நெருப்புக்குச்சியையும் எடுத்துக்கொண்டு எழுந்து வெளியேவந்து வழிவிட்டாள். நான் முன்னால் நடந்தேன். பின்கழுத்தில் அவள் பார்வை குறுகுறுத்து.

   பெட்டியோடு இணைந்திருந்த புகையறைக்குள் நுழைந்தேன். ஒதுங்கி அவளுக்கு வழிவிட்டேன்.  நுழைந்து கதவை அடைத்தாள். “மன்னித்துவிடு. உன்னைக் காயப்படுத்தும் நோக்கமில்லை. தோன்றியது, சொன்னேன்” என்றாள்.

   இலகுவானேன். சிகரெட்டைப் பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். பழைய உதட்டோரப் புன்னகையுடன் அதை வாங்கி தன் சிகரெட்டைப் பற்றவைத்து என்னிடம் தந்தாள். நான் கொடுத்த சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டாள்.

   “பிணங்கள் எரியும் ஊர் ஒன்று சொன்னாயே. காஜி. அதுவும் இப்படித்தானா? படித்ததில்லையே’’

   “இல்லை. இப்படியில்லை. அது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை. அங்கே இறந்தால், இறந்தவர்களை எரித்தால், கடவுளை அடைவதாக ஒரு நம்பிக்கை.”

   “அதற்காக எரிப்பார்களா... உயிரோடா?” அவள் கண்களில் பதற்றத்துடன் கூடிய ஆச்சர்யம்.

   “அய்யோ அப்படி இல்லை. இறந்தவர்களை; பிணங்களை. சிலர் வயதான காலத்தில் இறப்பதற்காக அங்கே போய்த் தங்கிக் காத்திருப்பார்கள். இறந்தபிறகு, யாராவது எரித்தால் நல்லது என்று. சில சமயங்களில் பாதி எரிந்த  பிணங்களை அந்த ஆற்றில் இழுத்து விட்டுவிடுவார்கள். அதைப்பற்றி நிறைய காணொளி இணையத்தில் கிடைக்கும்.’’

   “ஆக எதுவுமே அரசியலோ கொலையோ இல்லை.”

   “இல்லை.”

   “நீ பார்த்த மற்ற சுடுகாடுகள்?”

   ``எதுவுமே கொலையல்ல. எல்லாமே மரணங்கள்.”

   “நீ உயிர்களுக்காக அலையவில்லை. வெறும் நெருப்பிற்காக அலைகிறாய். இல்லையா?”

   “ஆம்” காற்று நீக்கிய பலூன்போல உள்ளுக்குள் சுருங்கினேன். தலையைக் குனிந்துகொண்டேன். ஏனென்று தெரியாத ஒரு சங்கடம் அடிவயிற்றில் குமிழென எழுந்தது.

   ``அதுதான் கையிலேயே வைத்திருக்கிறாயே” மிகச் சாதாரணமாகக் கேட்டாள். திடுக்கிட்டேன். சிகரெட்டைச் சுண்டினேன். மிகச் சரியாக அதற்கான தொட்டியில் போய் விழுந்தது.

   “நெருப்பு எல்லாபுறமும் இருப்பதுதான். அதைத் தேடும் உனது வேட்கையைப்போல. ஆனால், மரணம் என்று நீ சொல்லிக்கொள்வதில் ஒரு  நெருப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். உன் தனிமைப் பயத்தைப் போக்க, என்னுடன் இணைந்து கொண்டதுபோல.  இல்லையா...” சீண்டுவதற்கான வார்த்தைகளைப் பொறுக்கி அளிக்கிறாளா அல்லது அவள் சாதாரணமாகப் பேசுவதே சீண்டுகிறதா என்ற குழப்பம் வந்தது.

   “மன்னிக்கவும். நீதான் என்னுடன் இணைந்துகொண்டாய் என நினைத்தேன் ‘‘ முதலில் அவள்தான் வந்து பேசினாள் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன். “ஹா ஹா. நான் சிகரெட்டுக்காக வரும்போது நீ தனியே அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். பதற்றமாக இருந்தாய். நாங்கள் ஆறு வயதிலிருந்து தனியே நகரத்து ரயில்களில் குறுக்கும் நெடுக்குமாகப் போய் பழகியவர்கள். சந்திக்கும் முகத்தில் அவர்கள் தனியாக வந்தவரா, குடிபோதையில் இருக்கிறாரா, பதற்றத்தில் இருக்கிறாரா என்பதை எங்களால் உணர முடியும். நான் ஹிரோஷிமாவின் தெருக்களில் வளர்ந்தவள். சுற்றுலாப் பயணிகளின் முகக் குறிப்புகள் எனக்கு தலைப்பாடம்” என்றாள்.

   “நான் சுற்றுலாப் பயணியல்ல.”

   “வேலை செய்கிறாயா?”

   “ஆம். டோக்கியோவில். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக.”

   “ஆனால், ஹிரோஷிமா இதுதான் முதல்முறை.”

   “ஆம். ஆனால்...”

   “இதுவரை ஏன் வரவில்லை”

   “நேரம் வாய்க்கவில்லை” என் குரல் உள்ளடங்கியதுபோல் எனக்கே ஒலித்தது “என் வேலை அப்படி.”

   ``ஆனால், மற்ற இடங்களெல்லாம் சுற்றியிருக்கிறாய்.”

   “கொஞ்சம். பெரும்பாலும் டோக்கியோ. சில நேரங்களில் அருகிருக்கும் சிறப்புத்தீவுகள்.”

   “ஆனால், ஹிரோஷிமா இல்லை.”

   “ஆம். ஆனால்…”

   “நான் சொல்கிறேன். உனக்கு பயம். ஹிரோஷிமாமீது பயம். மரணத்தின்மீது பயம். இன்னும் சொல்லப்போனால் உன் ஊர்மீது பயம். அதற்கான சாக்கு ஜப்பான். ஹிரோஷிமா கொலைகள்மீது பயம். அதற்குச் சாக்கு வேலை. தனியாகப் போக முடிவெடுத்தாலும், இடம் நெருங்க நெருங்க அங்கே இறந்தவர்கள் நினைவுக்கு வந்து மீண்டும் பயம். அதற்குச் சாக்கு மரணம் வசீகரிக்கிறது. போய் அமர்ந்து குடிக்கப்போகிறாயா?”

   ஆழத்தைப் பிளந்து பிளந்து நுழைந்துகொண்டேயிருந்தாள். தொண்டைக் கமறியது. இருமினால் அல்லது அசைந்தால் அழப்போகிறேன் என்று முடிவெடுத்துவிடக்கூடும்.

   “ஊரில் என்ன பிரச்னை?ஏன் காசிக்குப் போனாய்?”

   திடுமென அந்தப் புள்ளியையும் தொட்டாள். “சும்மாதான். அந்த நதிக்கரையில் கோயில் இருக்கிறது. அங்கே பெளர்ணமி அழகாக இருக்குமென்றதால், பார்க்கப் போனேன்.”

   “பார்த்தாயா? பார்த்திருக்க மாட்டாயே?”

   “ஆம். நதியில் ஒரு பிணத்தைப் பார்த்தேன். ஒரு குழந்தை. திறந்திருந்த கண்கள். நீர்ப்பரப்பின் மீது, ஈயாடிக்கொண்டிருந்தது. அதற்குமேல் அந்த ஊரில்  இருக்க முடியவில்லை. திரும்பிவிட்டேன் வந்த வேகத்திலேயே.”

   “சரி. உண்மையைச் சொல். எதற்காக ஹிரோஷிமா போகிறாய்?”

   “தற்கொலை செய்துகொள்ள” என்றேன். ஏன் அவளிடம் இதைத் திறந்தேன் எனத் தயக்கம் எழுந்தது. ஒருவேளை அதுவும் தெரியும் என்று சொல்லிவிடுவாள் என்று பயந்தேன்.

   “ஏன்... ஏன் ஓடுகிறாய்?” என்றாள்.

   “ஒரு பெண்.”

   ``ஆண்கள்’’ முணுமுணுத்தாள். மறுபுறம் திரும்பிக்கொண்டாள். “விலக விரும்பியவளைத் திரும்பிப்பார்க்க வைக்கவேண்டும். குற்ற உணர்ச்சியைத் தூண்டவேண்டும். அவ்வளவுதானே? அதற்காகத்தானே இந்த நாடகம்?”

   “அப்படியில்லை. ஒருவேளை இது அவளுக்குத் தெரியாமலேகூட போகலாம் இல்லையா. இதில் என்ன குற்ற உணர்ச்சி? இது எனக்கு ஒரு தப்பித்தல்.”
   ``என் இனிய நண்பா...” அவள் வார்த்தையை இழுத்த வேகத்தில் கிண்டல் தொனியிருந்தது.

   “நீ எங்கும் இறக்கப்போவதில்லை. இறக்க விரும்புகிறவனுக்கு நாடு, ஊர் வித்தியாசங்கள் தேவையில்லை. நீ அதைச் சொல்லிச்சொல்லி ஊதிப்பெருக்கிப்பிறகு, காற்றுபோன பலூனைப்போல தென்றலில் அசைந்தாடி இறங்கப்போகிறாய். எதுவும் நிகழப்போவதில்லை. ஏன் உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய்.”

   “நான்...வந்து…” எனக்கு வார்த்தைகள் குழறியது. அவள் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது.

   “அங்கே அருகருகே அருமையான ஜப்பானிய பாணிக் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உங்களூர் பெண் தெய்வம் சாயல் என்றும் இந்தியக் கலாசார பாணியென்றும் சொல்கிறார்கள். சுற்றிப்பார். சில புகைப்படங்கள் எடுத்துக்கொள். திரும்பிப்போ. வேலையைக் கவனி. எண்ணம்வரும்போதெல்லாம் ஒரு முறை இந்த நாளை நினைத்துக்கொள். புரிகிறதா” என்றாள். அவள் குரலில் உத்தரவிடும் தோரணைக்கு எந்தக் கணத்தில் மாறினாள் என்று ஆச்சர்யமாக இருந்தது. எந்தத் தருணத்தில் நான் அவளிடம் அடங்கியவனாக மாறினேன் என்றும்.

   ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அதிகக் கூட்டமில்லை. மெல்ல குதிகால்களை உயர்த்தி விரல்களில் நின்றபடி நெற்றியில் முத்தமிட்டாள். பெட்டியைத் தள்ளிக்கொண்டு விறுவிறுவென இறங்கிப்போனாள். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்தப் பெட்டி சிவப்பு நிற நாய்க்குட்டி அவள் பின்னால் துள்ளி ஓடுவது போல் தோன்றியது.

   இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். சமீபத்தில் ஜப்பானிய மொழி கற்பதற்காக சிறப்பு வகுப்பில் இணைந்திருக்கிறேன். எழுத்துகளைத் தாண்டி வார்த்தைகள் வரை வந்திருக்கிறேன். ஷினு என்ற வார்த்தைக்கு மரணம் என்று அர்த்தம் என்றபோதுதான் இந்த நிகழ்வும் மொத்தமாக நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு வந்து காமி என்பதற்கான அர்த்தங்களைத் தேடினேன். கமி,காமி, பல எழுத்து வகைகள். மாற்றி மாற்றித் தேடி இறுதியாகத் தேடியதை அடைந்தேன். காமி என்றால் கடவுள். ஷினு காமி என்றால் மரணத்தின் கடவுள்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நண்பன் - சிறுகதை
     நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ்.
    
     ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!''
   அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்!
   ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்குப் போனபோது நான் அவருடன் இருந்தது எல்லாம் எப்படியோ தெரிந்துகொண்டு, 'இதோ பார், நீ அந்தப் போலீஸ்காரனுடன் சுத்தினே, உனக்கும் சீக்கு வந்து அவன் மாதிரி ஆஸ்பத்திரில சாவே' என்று சொன்னான்.
   செண்பகராமன், என் மீது எவ்வளவு அன்பு கொண் டிருந்தார் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? எப்படிப் புரியவைப்பது? அவர் அந்த மாடி வீட்டுப் பெண்ணிடம் கொண் டிருந்த அன்பும், அவள் அவர்மீது கொண்டிருந்த அன்பும் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது ஹோமி ஃபிரம்ரோஸுடன் நான் ஒருமுறை பேசியதை எப்படியெல்லாம் விமர்சிக்கிறான்?
   எனக்கு முதல் நாளிலிருந்தே ஹோமி பற்றி வியப்பு. நான், இன்டர்மீடியேட் முதல் வருடம். அவன், இரண்டாம் வருடம். என் உயரம்தான் இருப்பான். முகத்தில் லட்சிய வேகம் பளிச்சென்று தெரியும். அவனை நான் எந்த அசட்டுத்தனமான சூழ்நிலையிலும் பார்க்கவில்லை. அவனாக என்னிடம் பேச வந்தபோது, ஹரிகோபால் குறுக்கிடுகிறான்!

   இந்தியா, சுதந்திரம் அடைந்துவிடும் என்று தெரிந்துவிட்டது. ஆனால், மிகவும் கொண்டாடிவிட முடியாது. நாடெல்லாம் கலவரம். சாவுகள் ஆயிரக்கணக்கில். கொள்ளை, தீயிடுதல், பெண்களை நிர்மூலமாக்குதல். எங்கள் ஊரில் ஓரளவுக்குத்தான். ஆனால், வட இந்தியாவில், பஞ்சாபில், வங்காளத்தில், டெல்லியில் சொல்லி முடியாது. இதில் காந்தி வேறு உண்ணாவிரதம் இருக்கிறார்.
   எங்கள் ஊரில் வெளியூர் செய்திப் பத்திரிகைகளுக்குத் தடை. ஆனால் வானொலியைத் தடைசெய்ய முடியாதே? எங்கள் நிஜாம் அரசின் ரேடியோவைக் கேட்கக் கூடாதா? யார் என்ன சொன்னாலும் நிஜாம் ரேடியோவில் 'ஃபர்மாயிஷ்’ ஒலிபரப்பு மிகவும் நன்றாக இருக்கும். நூர்ஜஹான், சுரைய்யா, ஜோரா பேகம் பாட்டுகளாக ஒலிபரப்பும். எனக்கு அந்தப் பாடகர்களைப் பிடிக்கும். எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. ஆனால், பக்கத்தில் காஸிம் வீட்டில் நான்கு தெருக்களுக்குக் கேட்கும்படி ரேடியோ வைப்பார்கள். எனக்கு ஒரு சந்தேகம். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை யாரும் கேட்கக் கூடாது என்றுதான் ரேடியோவை உரக்கவைக்கிறார்களோ?
   சுதந்திரம் வந்துவிட்டது, எங்களுக்குத் தவிர. ஹோமி, இப்போது இன்னும் பரபரப்பானான். எவ்வளவு கூர்மையான புத்தி? எங்கள் கல்லூரியில் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய நான்கைந்து பேர்களில் அவன்தான் முதல் இடம். எங்கள் கல்லூரியில் நல்ல பேராசிரியர்கள், ஆங்கிலத் துக்கும் ஐரோப்பிய வரலாற்றுப் பாடங்களுக்கும்தான். இந்தக் காரணத்தினால் நிறைய விவாதங்கள், நிழல் பாராளுமன்றம், நிழல்
   ஐ.நா. சபை என வருடத்தில் ஐந்தாறு பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும். நானும் பங்குபெறுவேன். என்றாலும், ஹோமி அளவுக்கு நான் பங்காற்ற முடியாது. அவன் எப்படி இவ்வளவு பொதுவுடைமை நூல்களைப் படித்தான் என்று நான் வியப்பேன். எனக்கு காந்தி, அகிம்சை, சத்தியாகிரகம் இதற்கு மேல் ஒன்றும் தெரியாது.
   அன்று ஹரிகோபால் கல்லூரிக்கு வரவில்லை. நான் ஹோமியிடம், ''நீ படிக்கும் புத்தகங்களில் ஏதாவது எனக்குப் படிக்கக் கொடுப்பாயா? இரண்டே நாட்களில் படித்துவிட்டுத் தருகிறேன்'' என்றேன்.
   'உனக்குப் புரியாதே...' என்றான்.
   'நான் படிப்பேன்' என்றேன்.
   அவன் புன்முறுவல் செய்தான். அவனுக்குக் களையான முகம். அதில், அன்றுதான் முதல் முறை அவன் சிரித்து நான் பார்த்தேன். அவன் தணிந்த குரலில், 'அவற்றை இங்கு கொண்டுவர முடியாது' என்றான்.
   என் முகம் வாடிவிட்டது. 'நீ இதற்கெல்லாம் அழுதுவிடுகிறாயே... இன்னும் எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டிவரும், தெரியுமா?' என்று கேட்டான்.
   நாங்கள் எங்கள் வகுப்புகளுக்குப் போய்விட்டோம்.
   மறுநாள் மாலை பஸ் ஸ்டாப்பில் அவன் என்னைத் தனியாக அழைத்து, 'என் வீட்டுக்கு வருகிறாயா?' என்று கேட்டான்.
   'ராணி கஞ்ச்தானே?'
   'உனக்கு எப்படித் தெரியும்?'
   'எனக்குத் தெரியும்.'
   'நாளை காலை வருகிறாயா? இது ரொம்ப ரகசியம்.'
   'நான் யாருக்கும் தெரியாமல் படிக்கிறேன்.'
   இதைச் சொல்லித் திரும்பிப் பார்த்தேன். ஹரிகோபால் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தான்.
   ஹோமி ஃபிரம்ரோஸ் வீட்டுக்கு நேர் வழி, ஆக்ஸ்போர்டு தெரு வழியாகச் சென்று ஜேம்ஸ் தெருவில் திரும்பி நேராக ராணி கஞ்ச் அடைவது. நான் அன்று செகண்ட் பஜார் வழியாகச் சென்றேன். அது மிகவும் குறுகலான கடைத் தெரு. அது செகண்ட் பஜார் என்றால், எது முதல் பஜார்? தெரியாது. எனக்கு மட்டும் இல்லை, நான் விசாரித்த யாருக்குமே தெரியவில்லை.
   அது ஒரு பழைய மாடிக் கட்டடம். எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிச் சுவருக்கு நீல நிறம் அடித்திருந்தார்கள். அது மிகவும் மங்கிப்போயிருந்தது. கீழே ஏதோ மோட்டார் உதிரிப் பாகங்கள் கடை. அதை ஒன்பது, ஒன்பதரை மணிக்குத்தான் திறப்பார்கள். கட்டடத்தின் பக்கத்தில் ஒரு சிறு சந்து. அதன் வழியாகப் போனால், ஒரு சின்னக் கதவு. அங்கு மாடிப்படிகள் இருந்தன. காலையிலும் அங்கு இருட்டு. நான் தட்டுத்தடுமாறி மாடியை அடைந்தேன். கதவு மூடியிருந்தது. நான் மூன்று, நான்கு முறை ஹோமி பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். வயதான அம்மாள் கதவைத் திறந்தாள்.
   'ஹோமி ஃபிரம்ரோஸ் இருக்கிறானா?'
   ''நீ யார்?'
   'ஹோமியோடு நிஜாம் காலேஜில் படிப்பவன்.'
   'நீ சின்னப் பையனாக இருக்கிறாயே?'
   'அவனுக்கு ஒரு வருஷம் ஜூனியர்.'
   அந்த அம்மாள் உள்ளே போனாள். நான் கதவருகே நின்றுகொண்டிருந்தேன்.
   ஹோமி வந்தான். அவன் வெள்ளைச் சட்டை பைஜாமா அணிந்திருந்தான். என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனான். தடிப் புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்தான்.
   'பை ஏதாவது கொண்டுவந்திருக்கிறாயா?' என்று கேட்டான். அவன் மீண்டும் உள்ளே சென்று தடியானத் துணிப்பை ஒன்றைக் கொண்டுவந்தான். புத்தகத்தைப் பையில் போட்டு, தணிந்த குரலில், 'இதை யாரிடமும் காட்டாதே. உன் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?' என்றான்
   'எனக்கு இரண்டு அக்கா. அப்புறம் தம்பி தங்கை...'
   'ஒரு அக்கா பி.ஏ. மேத்ஸ்., சரியா?'
   'ஆமாம். உனக்கு எப்படித் தெரியும்?'
   'இதை யாரிடமும் காட்டாதே. திரும்பக் கொண்டுவரும்போதும் பையில் போட்டுக் கொண்டுவா.'
   'உன் வீட்டில் யார் யார்?'
   'அம்மா, அப்பா. அண்ணன் பம்பாயில் இருக்கிறான். அவன் எங்களோடு சண்டை.'
   'அம்மா, நல்லவங்களாக இருக்கிறாளே?'
   'அவன் 'வீட்டை விற்று பணம் கொடு’ என்கிறான். என் அப்பாவுக்கு பராலிசிஸ். இந்த வீடு மாதிரி எங்களுக்கு வேறே கிடைக்காது. சரி, நீ போ. புத்தகம் ஜாக்கிரதை. யாரிடமும் காட்டாதே.'
   நான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை. ஹோமி கொடுத்த புத்தகத்தைப் படிக்க முயற்சிசெய்தேன். அவன்   சொன்னது சரி. அதன் நடை, சொற்கள் புரியவில்லை. சியாங் கே ஷேக்கைத் திட்டுவது தெரிந்தது.
   நான் அடுத்த நாள் கல்லூரி போனபோது ஹரிகோபால் என்னை வெற்றிக் களிப்போடு பார்த்தான். 'நான் சொன்னேன்ல, உன் சிவப்பு நண்பனை போலீஸ் இழுத்துண்டுப் போயிட்டாங்க.'
   'ஐயய்யோ!'
   'இப்போ ஐயோ சொல்லி என்ன? அனந்தகிருஷ்ண ரெட்டி தெரியும்ல, அதான் மேட்ச்சல் ஜமீன்தார். அவன் மர்டர்லே இவனும் இருக்கான்.'
   'இவனுக்கு அவனைத் தெரியவே தெரியாதே!'
   'ஏன் தெரியணும்? இவன்தான் எல்லா ஜமீன்தாரையும் கொல்லணும்னு சொல்றானே...'
   எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஹோமி ஃபிரம்ரோஸ் கொலை செய்கிறவன் இல்லை. ஆனால், இதை யாரிடம் சொல்வது?
   நான் ஹோமி வீட்டுக்குப் போனேன். அவன் அம்மா என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அப்புறம் ரகசியமாக 'நீ இங்கே வராதே. உன்னையும் போலீஸ் பிடிச்சுண்டுப் போயிடும்' என்றாள்.
   நான் நேராக ஜேம்ஸ் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். செண்பகராமன் உயிரோடு இருந்தபோது அங்கு நிறையப் போயிருக்கிறேன். அவர் கீழ் வேலைசெய்த ஒரு சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்.
   'ஏமி பாபு?' என்று கேட்டார்.
   'என் நண்பனை போலீஸ் கொண்டுபோய்விட்டார்கள்.'
   'பேரு ஏமி?'
   நான் சொன்னேன்.
   'இங்கே யாரும் அப்படி இல்லையே? அது ஹைடராபாட் போலீஸாக இருக்கும்.'
   'உங்களுக்குத் தெரிந்தவங்க அங்கே இருக்காங்களா?'
   'ஹைடராபாட் போலீஸ், நாங்க இருக்கவே கூடாதுங்கிறாங்க. நான் சொன்னா கேட்பாங்களா?'
   நான் கல்லூரிக்குப் போனேன். ஆங்கில வகுப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்து 'பீம்! பீம்!’ என்று சத்தம் எழுப்பி என்னை வம்பில் மாட்டிவிடும் மஸ¨த்தின் அப்பா, ஒரு பெரிய அதிகாரி. நான் ஒருமுறை போலீஸ் தடியடியில் மாட்டிக்கொண்டபோது அந்த மனிதன்தான் தடியடி ஆர்டர் கொடுத்தார்.
   நான் மஸூத்திடம் 'ஹோமி ஃபிரம்ரோஸை போலீஸ் கொண்டுபோயிடுத்தாம்' என்றேன்.
   'யார்... அந்த கம்யூனிஸ்ட்தானே?'
   'அது தெரியாது. அவன் என் தோஸ்த்.'
   'நான் உன் தோஸ்த் இல்லையா?'
   'நீயும் தோஸ்த்தான். அதனால்தான் உன் உதவியைக் கேட்கிறேன்.'
   மஸ¨த் யோசித்தான். 'உனக்கு மஷீராபாத் ஜெயில் தெரியுமா?'
   'தெரியும்.'
   'உனக்கு எப்படித் தெரியும்?'
   'அதன் பக்கத்தில் இருக்கும் ஒரு தர்ஜிதான் எனக்கு பேன்ட் தைப்பார். அவர் என் அப்பாவுக்கு ரொம்பத் தெரியும்.'
   மஸ¨த், அவன் நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தான். அதில் உருதுவில் இரு சொற்கள் எழுதினான். 'இதைக் கொண்டுபோய்க் காண்பி. முடியுமானால் ஏற்பாடு செய்வார்கள்.'
   நான் கல்லூரியிலிருந்து நேராக மஷீராபாத் போனேன். அது ஒரு கோட்டை. மிகப் பெரிய கதவில் ஒரு சிறு கதவு. அதுவே பெரிதாக இருக்கும். அங்கு இருந்த காவலாளியிடம் அந்தச் சிறு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தேன்.
   அரை மணி கழித்து நீல நிற உடை அணிந்த ஒரு போலீஸ்காரன் என்னை உள்ளே அழைத்துப் போனான். அது மிகப் பெரிய சிறை. இருட்டில் ஓர் அறையில் ஹோமி கிடந்தான். நான் 'ஹோமி' என்று மெதுவாகக் கூப்பிட்டேன். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
   'போ போ! இங்கே வராதே!' என்றான். அவனால் நிற்க முடியவில்லை. முகம், உடல் எல்லாம் காயம்.
   'போ! வராதே இங்கே!' என்று மீண்டும் கத்தினான். நான் அழுதுகொண்டே திரும்பினேன். அவன் மெதுவாக 'உஸ்' என்றான். நான் திரும்பினேன்.
   அவன் மிகவும் மெதுவாக, 'நான் கொடுத்ததை எங்கேயாவது புதைத்துவை' என்றான்.
   நான் வீடு திரும்பி வீட்டுப் பப்பாளி மரத்தடியில் ஒரு பெரிய குழி தோண்டினேன்.
   'என்னடா?' என்று அம்மா கேட்டாள்.
   'ஒரு செடிக்காக...' என்றேன்.
   அன்று இரவு ஹோமி கொடுத்த புத்தகத்தைப் புதைத்துவைத்தேன்.
   ஹோமி, திரும்பி வரவே இல்லை. போலீஸ்காரர்கள் 'அவன் தப்பித்து ஓடிவிட்டான்’ என்றார்கள். அது இல்லை என்று எனக்குத் தெரியும். அவன் இரு கால்களையும் உடைத்துவிட்டிருந்தார்கள். அங்கே மஷீராபாத்திலேயே கொன்று புதைத்திருப்பார்கள். திடீரென்று எங்கள் அப்பா இறந்துவிட்டார். இரு மாதங்களில் நாங்கள் சென்னை வந்துவிட்டோம்.
   இது எல்லாம் நடந்து 65 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஹோமி ஃபிரம்ரோஸ் மஷீராபாத்தில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருப்பான். அவன் கொடுத்த புத்தகம், பப்பாளி மரத்தடியில் மக்கிப்போயிருக்கும். நான் மக்கிப்போகக் காத்திருக்கிறேன்!
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்
     சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு
    
   பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... 
   எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள்,
   'நெஞ்செல்லாம் சிதறுதே... நீ வேணும்னு கதறுதே...’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்).
   நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன்.
   ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது நம் ஊரில் ரொம்பக் கஷ்டம். வீட்டில் நம் நலன் கருதி செய்யச் சொல்லும் விஷயங்களை, நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் செய்தே ஆகவேண்டும். எனவே, இப்போது நான் என் அம்மா - அப்பாவுடன் ஜோசியர் முன்பு உட்கார்ந்திருக்கிறேன்.
   எனது ஜாதகக் கட்டங்களை உற்று நோக்கிய ஜோசியர், என் முகத்தைப் பார்த்துவிட்டு 'ஒண்ணும் தேறாது’ என்பதுபோல் உதடுகளைப் பிதுக்கினார். பிறகு, ஜாதகத்தில் விரல் வைத்து மேற்கு நோக்கி நகர்த்திக்கொண்டே சென்றவர், டக்கெனத் திரும்பி மேற்குத் திசையைப் பார்த்தார். கைவிரல்களை விரித்து ஏதோ கணக்குப் போட்டுவிட்டு, எங்களை உற்றுப் பார்த்தார்.
   'என்ன ஜோசியரே... பையனைப் பத்தி ஏதாச்சும் தெரியுதா?' என்றார் அப்பா.

   'ம்... பையன் பி.இ படிச்சிருக்கான். சரியா?' என்றவுடன் என் அம்மா-அப்பா இருவரும் ஜோசியரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள்.
   என் அப்பா, ஜோசியரின் கையை ஒருமுறை தொட்டுக் கும்பிட்டுக்கொண்டார். அம்மா என் காதில் கிசுகிசுப்பாக, 'நான் சொல்லல சரவணா... இவரு எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைப்பாரு!' என்றாள்.
   நான் எரிச்சலுடன், ''அம்மா... தமிழ்நாட்டுல  தடுக்கி ஒரு பையன் மேல் விழுந்தா, அவன் பி.இ முடிச்சிருப்பான். இல்லை பி.இ படிச்சிட்டு இருப்பான். இல்லைன்னா... கூடிய சீக்கிரம்
   பி.இ படிப்பான். இதைச் சொல்ல எதுக்கும்மா ஜோசியர்?' என்றேன் மெதுவாக.
   ஜோசியரிடம், 'சார்... பையன் பி.இ முடிச்சு ரெண்டு வருஷம் ஆவுது. இன்னும் வேலையே கிடைக்கலை. சும்மா கம்ப்யூட்டர் க்ளாஸ் போய்ட்டு வந்துட்டிருக்கான். அதான் வேலை எப்ப கிடைக்கும்னு கேட்கிறதுக்காக வந்தோம்' என்றார் அப்பா.
   'வேலையை விடுங்க... அதைவிட ஒரு பெரிய பிரச்னை இருக்கு.'
   'என்ன பிரச்னை?'
   'பையன் ஜாதகத்துல, இப்ப சுக்கிரன் தசா புத்தி நடந்துக்கிட்டிருக்கு. அதனால இப்ப கல்யாண யோகம்தான் உடனே தெரியுது.'
   'அப்படியா?' - சந்தோஷத்துடன் கூறிய என்னை, அம்மாவும் அப்பாவும் முறைத்தனர்.
   'இவர் ஜாதகப்படி, பொண்ணு இங்கே இருந்து மேற்கே 48 மைல் தூரம். அதாவது கேரளா பொண்ணு.'
   'கரெக்ட்டா கேரளா பொண்ணுனு எப்படிச் சொல்றீங்க?'
   'இங்கே இருந்து மேற்கே 48 மைல்னா தமிழ்நாடு தாண்டி, பாலக்காடு மாவட்டம் வருது. பையனுக்கு போன ஜென்மத்துல பாலக்காட்டுல ஏதோ லிங்க் இருக்கு' என்றார் ஜோசியர்.
   இதைக் கேட்ட அப்பா வேகமாக, 'போன ஜென்மத்துல என்ன... இந்த ஜென்மத்துலயே லிங்க் இருக்கு. இவ...' என, என் அம்மாவை நோக்கி கையைக் காண்பித்து, 'குருவாயூரப்பனோட தீவிர பக்தை. இவ நிறைமாசமா இருக்கிறப்ப, குடும்பத்தோடு குருவாயூர் போனோம். அப்ப திடீர்னு பிரசவ வலி வந்து, பாலக்காடு மாதவியம்மா ஆஸ்பத்திரியிலதான் இவன் பிறந்தான்' எனக் கூற, ஜோதிடர் முகத்தில் 'நான் சொல்லல...’ என்பதுபோல் ஒரு மலர்ச்சி.
   அப்பா, அம்மாவிடம் முணுமுணுப்பாக... 'நம்மூர்ல இவ்ளோ சாமி இருக்கிறப்ப கேரளா சாமியைக் கும்பிட்டல்ல... இப்பப் பாரு...' என்றார்.
   'இவரு காதலால பெரிய பிரச்னை வெடிச்சு... அடிதடி, தகராறுல போய் முடியும்' என்றார் ஜோசியர் அதிரடியாக.
   அம்மா, 'அதனால பையன் உயிருக்கு ஏதாச்சும் ஆபத்து...' என இழுத்தாள்.
   அப்பா கோபமாக, 'நீ ஏன்டி இதுக்கு பையன் உயிரை இழுக்குற? அவன் பச்ச மண்ணு...' என என்னைப் பாசத்துடன் நோக்க, என் மனம் நெகிழ்ந்துவிட்டது.
   ஜோசியர், 'சேச்சே... பையன் உயிருக்கு எல்லாம் ஒரு ஆபத்தும் இல்ல...' எனக் கூற, அப்பாவின் முகம் நிம்மதியானது. ஜோசியர் தொடர்ந்து 'பையனோட அப்பா உயிருக்குத்தான் ஆபத்து' எனக் கூற, 'ஆ..!' என அலறினார் அப்பா.
   ஆட்டோவில் நாங்கள் அனைவரும் மௌனமாக வந்துகொண்டிருந்தோம். அம்மா ஜன்னல் பக்கம் திரும்பி, கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
   'அம்மா... நீ ஏன் அழுவுற? நம்ம கேரளா பார்டர்ல இருக்கோம். ஊருல பாதி பொண்ணுங்க மலையாளப் பொண்ணுங்கதான். ஜோசியர் சும்மா குன்ஸா அடிச்சுவிடுறாரும்மா' என்றேன்.
   'லவ் பண்ணாக்கூட பரவாயில்லை. அதனால உங்க அப்பா உயிருக்கு ஆபத்துனு சொல்றாங்களே...' என்ற அம்மாவை, அப்பா காதலுடன் பார்த்தார்.
   தொடர்ந்து அம்மா, ''உங்க பேர்ல எடுத்திருக்கிற எல்.ஐ.சி பாலிசிக்கு, கடைசி ரெண்டு டியூ கட்டாமலே இருக்கு. முதல்ல நாளைக்கு அதைப் போயி கட்டுங்க. அப்புறம் 'பாலிசி செல்லாது’னு சொல்லிடப்போறான்' என்றபடி கண்ணீருடன் தாலியை எடுத்து, கண்களில் ஒற்றிக்கொள்ள, அப்பா 'அடிப்பாவி’ என்பதுபோல் பார்த்தார்.
   மறுநாள் காலை. வேகமாக வீட்டுக்குள் நுழைந்த அம்மா, 'ஏங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?' என்றாள்.
   'என்ன?' என்றார் அப்பா அசுவாரஸ்யமாக.

   'எதிர்வீட்டுல புதுசா ஒரு மலையாளி வந்திருக்காங்க. அவங்களுக்கு நல்ல அழகா, தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கு' என்றபோது என் அப்பாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்தேன். 'காந்தியைச் சுட்டுட்டாங்க’ என்ற தகவல் கேட்டவுடன், நேருவின் முகம் இப்படித்தான் அதிர்ச்சி அடைந்திருக்கும்.
   அப்போது எதிர்வீட்டுக்குள் இருந்து ஸ்பீக்கரில் செண்டை மேளம், கொம்பு ஊதும் வாத்திய ஒலி கேட்க... அப்பா முகத்தில் பீதியுடன், 'இது என்னடி சத்தம்... சாவு வீட்டுல சங்கு ஊதுற மாதிரி?' என்றார்.
   'அது சங்கு இல்லைங்க. கொம்பு...' என்றாள் அம்மா.
   அரை மணி நேரம் கழித்து காலிங் பெல் ஒலிக்க, அப்பா எழுந்துபோய் கதவைத் திறந்தார். வெளியே ஒல்லியாக, உயரமாக, வழுக்கைத் தலையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் அப்பா வைப் பார்த்து, 'நமஸ்காரம்.
   எதிர் வீட்டுக்குப் புதுசா குடிவந்திருக்கோம். என் பேரு கிருஷ்ணன் நாயர்' என்றவுடன் அப்பாவின் முகம் இருண்டது.
   கிருஷ்ணன் நாயர் வாசல் பக்கம் திரும்பி, 'உள்ளே வரூ...' என அழைக்க, அப்போதுதான் கவனித்தோம் படிகளுக்குக் கீழ், தெருவில் ஒரு பெண்மணி தலையில் லேசான நரைமுடியுடன், கேரள பாணி சந்தன நிறச் சேலை உடுத்தி நின்றிருப்பதை. அவர் அருகில் இருந்த இளம்பெண்ணை 'அருகில் ஓர் இளம்பெண்’ என மூன்றே வார்த்தைகளில் சொன்னால், அது அந்தப் பெண்ணின் அழகுக்கு இழைக்கப்படும் மகத்தான அநீதி.
   கடவுள், தான் இத்தனை யுகங்களில் கற்ற அத்தனை படைப்புத்திறனையும் அவளது முகத்தில் காட்டியிருந்தார்.
   சீஸ் மீது லேசாக சாஸை ஊற்றியதுபோல் பொன்னிற நெற்றியில் தீற்றலாகக் குங்குமம். மையிட்ட அ...க...ன்...ற விழிகள். அவளின் இடது கன்னமும் ஈர உதடுகளும் இணையும் புள்ளியில் ஒரு மச்சத்தை வைத்த கடவுள்தான் எவ்வளவு மகத்தான கலைஞன்!
   லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். அனைத்துக் காதலிலும் காதலுக்குப் பிறகுதான் பிரச்னை வரும். ஆனால் என் காதலில், காதலுக்கு முன்பே ஜோசியர் செக் வைத்திருக்கிறார். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், அப்பா நம்புவதுதான் பிரச்னை.
   படியேறி வந்த அவர்களை, 'இது என் மனைவி தேவிகா... இது என் பொண்ணு கார்த்திகா' என அறிமுகப்படுத்திவைத்தார் கிருஷ்ணன் நாயர்.
   என் தங்கை பூஜா, 'வாங்க... உள்ள வாங்க...' என அவர்களை அழைக்க... அம்மா, பூஜாவை முறைத்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், நான், 'உட்காருங்க...' எனக் கூற, அப்பா என் காலில் ஓங்கி மிதித்தார்.
   'நான் ரயில்வேஸ்ல வொர்க் பண்றேன். கோயம்புத்தூர்ல இருந்தேன். இப்ப இங்க மாத்திட்டாங்க' என்றார் அப்பாவை நோக்கி.
   'நான் தாலுக்கா ஆபீஸ்ல சூப்பரின்டெண்டன்ட்டா இருக்கேன்.'
   'சந்தோஷம். பையன் என்ன பண்றார்?' என்றார் என்னைப் பார்த்தபடி.
   'பி.இ படிச்சிட்டு, ஜாபுக்கு ட்ரை பண்ணிட்டிருக்கான்.'
   'என் பொண்ணு பி.இ ஃபைனல் இயர்' எனக் கூற, பூஜா 'தமிழ் நல்லா பேசுறீங்க?' என்றாள்.
   'இருபத்தஞ்சு வருஷமா தமிழ்நாட்டுலதான் வேலை செய்றேன். அதனால எங்க வீட்டுல எல்லோருக்கும் தமிழ் அத்துப்படி. சொந்த ஊரு பாலக்காடு பக்கத்துல ஒரு கிராமம்' என்றார்.
   உடனே நான் வேகமாக, 'சார்... நான் பிறந்ததுகூட பாலக்காடு மாதவியம்மா ஆஸ்பத்திரியிலதான்' என்றேன்.
   'அப்படியா? என் பொண்ணும் அதே ஆஸ்பத்திரியிலதான் பிறந்தா. என்ன ஒற்றுமை பாருங்க... இவ கார்த்திகை நட்சத்திரத்துல பிறந்தா. அதனாலதான் 'கார்த்திகா’னு பேர் வெச்சோம்.'
   'அய்யோ... நானும் கார்த்திகை நட்சத்திரத்துலதான் சார் பிறந்தேன்' என்றேன் உற்சாகமாக.
   'நீங்க ரொம்ப நெருங்கிட்டீங்க' என, என் கையைப் பிடித்துக் குலுக்கிய கிருஷ்ணன் நாயர், 'எப்படி எல்லாம் பொருந்திவருது பாருங்க...' என அப்பாவிடம் சொல்ல, அவர் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கிருஷ்ணன் நாயர் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பினார்.
   அவர்கள் படி இறங்கிச் செல்ல... பூஜா, கார்த்திகாவைப் பார்த்தபடி, 'அம்மா... சேட்டத்தி சூப்பரா இருக்காங்கள்ல?' என்றாள்.
   'ஆமாம். 'சேட்டத்தி’ன்னா?'
   'மலையாளத்துல அண்ணியை
   'சேட்டத்தி’னு சொல்வாங்க' என்ற பூஜாவை, அப்பா எரிப்பதுபோல் பார்த்தார்.
   தமிழ் வருடப்பிறப்பு.
   நாங்கள் குடும்பத்துடன் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது, அங்கே கிருஷ்ணன் நாயரும் குடும்பத்துடன் வந்திருந்தார். சந்நிதியில், எங்களுக்கு எதிர்வரிசையில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
   கார்த்திகா, லட்சம் கார்த்திகை தீபங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருப்பதுபோல் பளிச்சென இருந்தாள். கேரளா வயசுப் பெண்கள் அணிந்திருக்கும் நீண்ட சந்தன நிறச் சட்டையும் பட்டுப்பாவாடையும் அணிந்துகொண்டு, கோயிலில் இருந்த திருமணம் ஆகாத பக்தர்களைக் கவிஞர்களாக்கிக்கொண்டிருந்தாள். நெற்றியில் சந்தனம், சந்தனத்துக்குக் கீழ் அவள் சற்று முன் வைத்த குங்குமம் சிந்தி... அவள் பொன்னிற மூக்கில் லேசாகத் தெளித்தாற்போல் சிதறி இருந்தது. என்னைப் பார்த்தவுடன் அவள் கண்களில் ஒரு தனி வெளிச்சம். 'ஹாய்...’ என்பதுபோல் அவள் கையை ஆட்ட, நானும் பதிலுக்குக் கையைத் தூக்கியபோது, அப்பா என் கையைப் பிடித்துக் கீழே இறக்கிவிட்டார். அர்ச்சகரிடம் பூ வாங்கிக்கொண்டு நாங்கள் நகர்ந்தோம்.
   கிருஷ்ணன் நாயர் அப்பாவை நோக்கி வந்து, 'என்ன சார்...' எனப் பேச ஆரம்பிக்க, நாங்கள் சந்நிதியைச் சுற்றுவதற்காக முன்னால் நடந்தோம். எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கார்த்திகா, அர்ச்சகர் கொடுத்த பூவை தலையில் வைத்தபடி நடக்க,         பூ நழுவி கீழே விழுந்தது. நான் 'ஹலோ... எக்ஸ்கியூஸ் மீ' என கார்த்திகாவை அழைத்தேன்.
   'பூ கீழே விழுந்துருச்சு' என, நான் அந்தப் பூவை எடுத்து கார்த்திகாவிடம் நீட்டினேன்.
   'தேங்க்ஸ்' என்றபடி பூவை வாங்கியபோது அவளின் விரல் என் விரல்களில் தீண்ட, எனக்குச் சிலிர்த்துப்போனது. அப்போது என் அருகில் வந்த அப்பா, கார்த்திகா என்னிடம் இருந்து பூவை வாங்குவதைக் கண்டு அதிர்ச்சியுடன், 'என்ன நடக்குது இங்கே?' என்றார்.
   'ஒண்ணும் இல்லை அங்கிள். தலையில இருந்து பூ கீழே விழுந்துருச்சு. எடுத்துத் தந்தார்' என்றாள் கார்த்திகா.
   'இவ்ளோ பெருசா வளர்ந்திருக்க... அறிவு இல்லை உனக்கு? வயசுப் பையன் தர்ற பூவை தலையில வெச்சுக்கலாமா? அதை இங்க தா...' என அந்தப் பூவை வாங்கிய அப்பா, அம்மாவிடம் 'இந்தா... இதை நீ வெச்சுக்க. உன் பூவைத் தா...' என அம்மா கையில் இருந்த பூவை வாங்கி, கார்த்திகாவின் கையில் கொடுத்தார். கார்த்திகா ஒன்றும் புரியாமல் பூவை தலையில் வைத்தபடி நகர்ந்தாள்.
   நாங்கள் சந்நிதியைவிட்டு வெளியே வந்தோம். எங்கள் பின்னாலேயே வந்த கிருஷ்ணன் நாயர், 'எங்களுக்கு இன்னைக்குக் கல்யாண நாள். அதுக்காக வந்தோம். நாளைக்கும் வரணும். உங்களுக்கு இன்னைக்கு வருஷப் பிறப்பு; எங்களுக்கு நாளைக்கு வருஷப் பிறப்பு. தமிழுக்கும் மலையாளத் துக்கும் நெருங்கிய கனெக்‌ஷன் இருக்கு' என்றார்.
   'அதனால எல்லாம் தமிழனும் மலையாளியும் ஒண்ணாகிட முடியாதுங்க' என்றார் அப்பா.
   'என்னங்க இப்படிச் சொல்றீங்க? நீங்கதான் மலையாளினா வெறுப்பா பேசுறீங்க. நம்ம டைரக்டர் பாரதிராஜா மகன், ஒரு மலையாளிப் பெண்ணைத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?' என்றார்.
   இப்போது பூஜா, 'அவ்வளவு ஏன்... தமிழ் டைரக்டர் விஜய், மலையாளப் பொண்ணு அமலா பாலைத்தானே ரீஸன்ட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு' என்றாள்.
   அம்மாவும் தன்னை மறந்து, 'அங்கே எல்லாம் ஏன் போறீங்க? நம்ம முக்கு வீடு முருகேசன் மகனே மலையாளப் பெண்ணைத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டான்' எனக் கூற, பல்லைக் கடித்துக்கொண்டு அம்மாவை ஆத்திரத்துடன் பார்த்த அப்பாவின் முகத்தில் தீவிர சிந்தனை.
   நொடிப்பொழுதில் சடசடவென மழை பொழியத் தொடங்க, நான் வேகமாக அந்த குல்மொஹர் மரத்தடியில் ஒதுங்கினேன். சாலையை அலட்சியமாகப் பார்த்த எனக்கு, இன்ப அதிர்ச்சி. மழையில் நனைந்தபடி ஸ்கூட்டியில் வேகமாக அந்த மரத்தடியை நோக்கி வந்தாள் கார்த்திகா. அவள் வண்டியை நிறுத்திவிட்டு மரத்தடிக்கு வந்து நின்ற பிறகுதான், என்னைக் கவனித்துவிட்டு ''ஹாய்!' என்றாள்.
   அவள் கன்னங்களில் தங்கத் தகட்டில் விழுந்த வைரத் துகள்கள்போல் மழைத்துளிகள். ஜோசியரின் வார்த்தைகள், அவளின் அழகுக்கு முன்னால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பலத்தை இழந்தன. இதுபோல் தனியாகப் பேசும் வாய்ப்பு அரிது. அவளை நன்கு இம்ப்ரஸ் பண்ணும் முடிவோடு பேச்சைத் தொடங்கினேன்.
   'எனக்கு மலையாளின்னா ரொம்பப் பிடிக்கும்.'
   'மலையாளியைப் பிடிக்குமா... மலையாளப் பொண்ணுங்களைப் பிடிக்குமா?' என அவள் கேட்க, நான் 'என்னைப் பொறுத்தவரைக்கும் 'மலையாளி’ன்னாலே மலையாளப் பொண்ணுங்கதான்' எனக் கூற, உலகின் மிக அழகான சிரிப்பை அவள் உதிர்த்தாள். அது சிரிப்பு அல்ல... சிம்பொனி.
   'நீங்க பேசறப்ப, நடுநடுவுல 'அய்யே... ஓ... என்ட குருவாயூரப்பா...’ இந்த மாதிரி வார்த்தைங்களை போட்டுப் பேசுங்க. அப்பதான் ஒரு மலையாள எஃபெக்ட் கிடைக்கும்' என்றேன்.
   'அய்யே... எந்தா இது?' என கார்த்திகா கூற, நான் ''ஆஹா... கவிதை... கவிதை!' என்றேன். மீண்டும் சிம்பொனி.
   கையை நீட்டி மழை நீரை உள்ளங்கையில் பிடித்தபடி, 'அப்புறம், மலையாளப் பொண்ணு தவிர, வேற எந்த மாதிரி பொண்ணுங்களைப் பிடிக்கும்?' என்றாள் கார்த்திகா.
   நான், 'இந்த மாதிரி மழை நீரை கையில பிடிச்சு விளையாடுற பொண்ணுங்களைப் பிடிக்கும்' என்றவுடன் சட்டெனக் கையைப் பின்னுக்கு இழுத்த கார்த்திகா, புன்னகையை மறைத்தபடி என்னை முறைத்தாள்.
   'அப்புறம்... உதட்டுக்குள்ள சிரிப்பை அடக்கிக்கிட்டு முறைக்கிற பொண்ணுங்களையும் பிடிக்கும்.'
   'ஏய்!' என அவள் வெட்கத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள, நான் 'வெட்கத்தோடு முகத்தைத் திருப்பிக்கிற பெண்களைப் பிடிக்கும்' என்றேன்.
   'ஸ்டாப் இட்!' என்ற கார்த்திகாவின் முகம் நிறைய சிரிப்பு.
   'உங்களுக்கு ரொம்பத் தைரியம்' என்ற கார்த்திகா, கையை நீட்டிப் பார்த்துவிட்டு, 'மழை விட்டுருச்சு. நான் கிளம்புறேன்' என வண்டியில் ஏறினாள். அப்போது மரத்தில் இருந்து இரண்டு சிவப்பு பூக்கள், அவள் தலை மீது விழுந்து, அப்படியே அவள் கூந்தலில் தொற்றிக்கொண்டன.
   'எனக்கு 'இன்னும் கொஞ்ச நேரம் மழை                          
   பெஞ்சிருக்கலாம்’னு தோணுது' என்றேன்.
   அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்தாள். கிளம்பும்போது, 'எனக்கும் 'இன்னும் கொஞ்ச நேரம் மழை பெஞ்சிருக்கலாம்’னு தோணுது' என்றபடி சென்றாள்.
   நான் உற்சாகத்துடன் அவள் சென்ற திசையைப் பார்த்தேன். கார்த்திகா தெருமுனையில் திரும்பும்போது தமிழ் சினிமாவில் எல்லா கதாநாயகிகளும் செய்யும் அந்தக் காரியத்தைச் செய்தாள். ஆம்! திரும்புவதற்கு முன்பு என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.
   மறுநாள் மாலையும் நன்கு மழை பெய்துகொண்டிருந்தது. தம்மடித்துவிட்டு வரலாம் எனக் குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரம் சென்றதும் மனதில் சந்தோஷ மின்னல். கார்த்திகா, எனக்கு முன்னால் குடையுடன் சென்றுகொண்டிருந்தாள். சட்டென ஒரு முடிவெடுத்த நான், அருகில் இருந்த நாடார் கடைக்குச் சென்று, 'அண்ணாச்சி... இந்தக் குடையைக் கொஞ்சம் வெச்சுக்கங்க' எனக் கொடுத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நடந்தேன்.
   அவளை நெருங்கியவுடன் 'ஹலோ' என்றேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
   'நம்ம சந்திக்கிறப்ப எல்லாம் மழை பெய்யுது' என்றேன்.
   'இல்ல... மழை பெய்யிறப்ப எல்லாம் நாம சந்திக்கிறோம். ஏன் நனையுறீங்க... உள்ள வாங்க?' என்றாள் சுற்றிலும் பார்த்தபடி. நான் குடைக்குள் நுழைந்தேன். மழைச்சாரல் முகத்தில் விழ, குடைக்குள் நெருக்கமாகத் தெரிந்த கார்த்திகாவை ரசித்தபடி, 'மழையில எங்கே?' என்றேன்.
   'போன் ரீசார்ஜ் பண்ண. நீங்க எங்கே... தம்மடிக்கவா? அநாவசியமா பொய் சொல்லாதீங்க. நீங்க மொட்டைமாடியில தம்மடிக்கிறதைப் பார்த்திருக்கேன்' என்றபடி கார்த்திகா தன் கூந்தலை முன்னால் தூக்கிப் போட்டபோது, அவள் கூந்தல் நுனி ஈரம் என் கன்னத்தில் உரசிவிட்டுச் சென்றது.
   'மழை பெய்யிறப்ப உங்களுக்கு என்னங்க தோணும்?' என்றேன்.
   'ம்... மழை பெய்யிறப்ப 'டி.வி.டி-யில 'சிங்கம்’ படம் பார்ட் ஒண்ணும், பார்ட் டூ-வும் சேர்ந்த மாதிரி பார்க்கணும்’னு தோணும்' என்றவளின் முகத்தில் குறும்புச் சிரிப்பு.
   'என்னது!' என அதிர்ந்த நான், சற்று சமாளித்துக்கொண்டு, 'ஓ.கே... வேற என்ன தோணும்?' என்றேன்.
   'ம்... தெலுங்குல பாலகிருஷ்ணா நடிச்ச 'லயன்’ படம் பார்க்கலாம்னு தோணும்' என்றாள்.
   'நீங்க சொல்றப்பவே காதுக்குள்ள யாரோ 'டேய்...’னு அலர்ற மாதிரி இருக்குங்க. நீங்க ரொம்ப வயலென்ட்டான ஆளா இருக்கீங்க. கொஞ்சம் சாஃப்ட்டா ரொமான்டிக்கா எதுவும் உங்களுக்குத் தோணாதா?'
   'எனக்குத் தோண்றது இருக்கட்டும். உங்களுக்கு என்ன தோணும்?'
   'எனக்கு...' என அவளை உற்று நோக்கிய நான், 'இந்த மாதிரி அழகான பெண்ணோடு ஒரே குடைக்குள் நடந்துபோறது பிடிக்கும்' என்றவுடன் அவள் சட்டென நின்றாள். சில விநாடிகள் உற்றுப் பார்த்தவள், 'உங்க கடை வந்துருச்சு' என, கண்களால் காட்டினாள்.
   வேறு வழியின்றி நான் சிகரெட் கடையை நோக்கி நடந்தேன். 'ஒரு நிமிஷம்' எனப் பின்னால் இருந்து கார்த்திகாவின் குரல் கேட்க, திரும்பினேன். அவள் தன் முகத்தை, பயமுறுத்துவதுபோல் வைத்துக்கொண்டு, 'சட்டபூர்வமான எச்சரிக்கை: புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும். புகைப்பழக்கம் உயிரைக் கொல்லும்' என அழகாகக் கூற, எனக்குக் கொஞ்சம்கூட பயமே வரவில்லை.
   ஞாயிற்றுக்கிழமை. அம்மா துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் காயவைக்க செல்ல, அப்பா 'ஏய்... இன்னைக்கு துணியை எல்லாம் எதிர்வீட்டு வாசற்கொடியில காயப்போடுடி' என்றார்.
   'ஏங்க?' என்ற அம்மா, சட்டென விஷயத்தைப் புரிந்துகொண்டு துணிகளை எதிர்வீட்டு வாசலில் காயப்போட்டாள். நான் அப்பாவிடம், 'கொஞ்சமாச்சும் மனசாட்சியோடு நடந்துக்கங்க. நம்ம காயப்போட்டா அவங்க எங்க துணியைக் காயப்போடுவாங்க?' என்றேன்.
   'அதை அந்த நாயர் வந்து கேட்பான்ல? அப்ப வெச்சுக்கிறேன் கச்சேரியை' என்றார் அப்பா.
   அப்பா எதிர்பார்த்தபடியே ஒரு மணி நேரம் கழித்து காலிங் பெல் அடித்தது. வெளியே இரண்டு வாளிகளில் துணிகளுடன் கார்த்திகாவும் கிருஷ்ணன் நாயரும் நின்றிருந்தனர். கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்பதற்கு முன்பே அப்பா எடுத்தவுடனேயே எகிறி அடித்தார்.
   'அப்படித்தான்யா உங்க வீட்டு வாசல்ல காயப்போடுவோம். இப்ப என்னய்யா வேணும் உனக்கு?' என்றார்.
   நான் கிருஷ்ணன் நாயரை பரிதாபத்துடன் பார்த்தேன்.
   'சார்... நான் அதைப் பத்தி ஒண்ணும் கேட்கவே இல்லை. அங்கே காலை வெயில் அடிக்கும்னு போட்டிருப்பீங்க. 'நாங்க வேணும்னா உங்க வீட்டு வாசல்ல துணியைக் காயப்போட்டுக்கலாமா?’னு கேட்க வந்தேன். அவ்வளவுதான்.'
   'யோவ் நாயரே... நான் காயப்போட்டா,
   நீ பதிலுக்கு எங்க வீட்டுல காயப்போடுவியா? இந்த வேலை எல்லாம் இங்கே வேணாம்' என்றார் அப்பா.
   பதிலுக்கு கிருஷ்ணன் நாயர் கோபப்படுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ, 'பரவாயில்லைங்க... நாங்க அப்புறம் காயப் போட்டுக்கிறோம். கார்த்திகா நீ வாம்மா' என நகர்ந்தார்.
   இதை எதிர்பார்க்காத அப்பா, சண்டையை மேற்கொண்டு எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல், 'என்ன நான் பேசிக்கிட்டேயிருக்கேன். மரியாதை இல்லாம போய்கிட்டே இருக்க' என்றார்.
   இதற்கும் கிருஷ்ணன் நாயர் கோபப்படாமல், 'சரி நிக்கிறேன். சொல்லுங்க' என்றார்.
   அம்மாவிடம் அப்பா, 'என்னடி இவன்... எவ்ளோ அடாவடியா பேசினாலும் சண்டைக்கே வர மாட்டேங்கிறான்?' என்றவர், 'டேய்... கொஞ்சமாச்சும் சண்டை போடுடா' என முனகியபடி படிகளில் அவரை அடிப்பதுபோல் வேகமாக இறங்கினார்.
   நான் அப்பாவின் தோள்களைப் பிடித்து நிறுத்தினேன். அப்போது கண்களில் நீர் ததும்ப கார்த்திகா, 'சார்... எங்க அப்பா ஏதாச்சும் தெரியாமல் பேசியிருந்தா மன்னிச்சுடுங்க' எனக் கூற, அப்பா அமைதியானார்.
   அன்று மாலை. அர்ச்சனைக் கூடையுடன் கார்த்திகா கோயிலுக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, நான் வேகமாக அவள் பின்னாலேயே சென்றேன். என்னைப் பார்த்த கார்த்திகாவிடம், 'உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். பார்க்ல போய்ப் பேசலாமா?' என்றேன்.
   பார்க்கில் கார்த்திகா, 'உங்க அப்பாவுக்கு எங்களைக் கண்டாலே பிடிக்கலை. நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்க?' என்றாள்.
   'எங்க அப்பா பண்ணதுக்கு ஸாரி கேட்கத்தான் வந்தேன்.'
   'நாங்க என்ன தப்பு பண்ணோம்? ஏன் தேவையே இல்லாம உங்க அப்பா எங்க மேல வெறுப்பைக் கொட்டுறார்? இந்த மாதிரி எங்களை யாரும் அசிங்கப்படுத்தினது இல்லை' என்ற கார்த்திகா, மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.
   'கார்த்திகா... என்னங்க நீங்க?' என நான் அவள் கைகளைப் பிடித்து ஆறுதலாக அழுத்த, அவள் அப்படியே என் தோளில் சாய்ந்து சத்தமாக அழுதாள்.
   அதற்கு மேல் தாங்க முடியாத நான் அவள் தோளை அணைத்தபடி, 'கார்த்திகா...        ஐ லவ் யூ' என்றேன்.
   ஒரு விநாடி முகம் மலர்ந்த கார்த்திகா சட்டென முகம் மாறி, 'இப்பவே உங்க அப்பாவுக்கு எங்களைக் கண்டா ஆக மாட்டேங்குது. இதுல லவ் வேற பண்ணா அவ்ளோதான்' என, என்னிடம் இருந்து நகர்ந்துகொண்டாள்.
   'அய்யோ... உங்களைப் பிடிக்காம எல்லாம் இல்லைங்க, என்ன பிரச்னைன்னா...' என்ற நான் ஜோசியர் சொன்ன விவரத்தைச் சொல்லி முடித்தேன். சில நிமிடங்கள் அமைதியாக இருந்த கார்த்திகா சட்டென எழுந்தபடி, 'அப்படின்னா நிச்சயமா நான் உங்களை லவ் பண்ண முடியாது' என்றாள்.
   'ஏங்க... என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?'
   'உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கும் ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனா, உங்க அப்பா நம்புறார். அதான் முக்கியமான விஷயம். 'காதலால தன் உயிருக்கு ஆபத்து’னு நம்புறவர் எப்படி நம்ம காதலை ஏத்துக்குவார்? அதுவும் இல்லாம... அவர் அப்படிப் பயப்படுறார்னு தெரிஞ்சும் நம்ம காதலிச்சா, அதைவிட பெரிய சுயநலம் வேற இல்லை. என்னை மன்னிச்சிடுங்க!'' என்ற கார்த்திகா, வேகமாக நடந்து சென்றாள்.
   மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் கார்த்திகாவின் பின்னால் நடந்து வெளியே வந்த நான் அதிர்ந்தேன். அப்பா எதிர்கடையில் டீ குடித்தபடி எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
   வீட்டுக்கு வந்தவுடன் அப்பா முதலில் என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டுவிட்டுத்தான் பேச ஆரம்பித்தார்.
   'என் உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சும் எப்படிடா அவகூடப் பழக மனசு வருது?' என்றார்.
   'நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலைப்பா' என்றேன்.
   'அப்ப நீங்க லவ் பண்ணலையா?'
   'ரெண்டு பேருக்கும் பிடிச்சுத்தான்பா இருக்கு. ஆனா, நான் என் லவ்வ அவகிட்ட சொன்னப்ப, கார்த்திகா என்ன சொன்னா தெரியுமா?' என்ற நான் கார்த்திகா சொன்ன விஷயத்தைக் கூற, அப்பா மிகவும் ஆச்சர்யத்துடன் எதிர்வீட்டைப் பார்த்தார்.
   மூன்று வருடங்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்து, எங்கள் வீட்டாரின் சம்மதத்துடன் எனக்கும் கார்த்திகாவுக்கும் திருமணம் முடிந்து, ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. என் அப்பாவும் தன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் பேரக்குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்!
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ஆலமரத் துயில் - சிறுகதை
       சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   ஆகாயத்தை விடவும் பரந்து விரிந்த அல்லிகுண்டம் கண்மாய், இப்படி ஒட்டுமொத்தமாய் வறண்டு போகுமென ஊரில் ஒருவரும் நினைத்திருக்கவில்லை. கோடை, மனித உடலின் கடைசி துளிக் குருதியையும் வியர்வையாய்க் குடித்துக்கொண்டிருந்தாலும் இந்த ஒற்றைக் கண்மாயை நம்பி இருக்கும் பதின்மூன்று கிராமங்களின் வயல்களில், சம்சாரிகள் காய்ந்த பயிர்களை இன்னும் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு மழை பெய்தாலும் மிச்சம் மீதி இருக்கும் பயிர்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால், இறங்கிவர மனமின்றி இயற்கை இறுக்கமாகவே தான் இருந்தது. சதுரகிரி மலையில் துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த அடிவார கிராமங்களெங்கும் குட்டை குட்டையாய் நாட்டுக் கருவ மரங்கள் மட்டுமே இப்பொழுது மிஞ்சியிருக்கும் நிலையில் பல வருடங்கள் தாக்குப் பிடித்த பனங்காடுகள்கூட காய்ந்து போய் விட்டன. வெக்கையில் நஞ்சேறிய பாம்புகள் நீரற்ற கண்மாயின் கடைசி ஈரத்தைத் தேடி வெறியோடு அலைய, சம்சாரிகள் ஆடு மாடுகளுக்குப் பசியாறப் புல் கிடைக்காமல் தவித்தார்கள். கோடை தாகத்தோடு சேர்த்து எரிச்சல், கோபம், தவிப்பு, துரோகமென எல்லா விபரீத உணர்வுகளையும் மனிதர் களிடத்தில் கொண்டுவந்துவிடுகிறது.

   நிலம் விவசாயத்திற்கானதில்லை என்றாகிப்போன இந்தச் சில வருடங்களில் அக்கம்பக்கத்து கிராமத்து இளவட்டங்கள் எல்லாம் திருப்பூர் மில்களுக்குப் பஞ்சம் பிழைக்கச் சென்றுவிட்டார்கள். நெல்லுக்கஞ்சி ஐயாவின் குடும்பத்திலும் அதுதான் நிலமை. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு பண்டிகை நாட்களில் மட்டுமே நெல்லுக்கஞ்சியைச் சாப்பிடும் ஊர்மக்கள் மற்ற நாள்களில் சாப்பிடுவதெல்லாம் குதிரைவாலியையும்  சோளத்தையும் தான். எல்லா நாளும் ஒருவேளை உணவு நெல்லுக்கஞ்சி இருக்க வேண்டும் என்று வாழ்ந்த குடும்பம் அது. அதனாலேயேதான் அந்தப் பட்டப் பெயர். ஒவ்வொரு பத்து வருடத்திலும் குடும்பச் சூழல் அவரது நிலத்தில் கொஞ்சத்தைக் காவு வாங்கியதில், இப்போது மிச்சமிருப்பதெல்லாம் மலையடி வாரத்தை ஒட்டிய நாலு ஏக்கர் வயல்தான். கடைசித் துண்டு காணி இருக்கும்வரை ஒரு விவசாயிக்குப் பயிர்களைத் தவிர, எதன் மீது காதல் வந்துவிடும். மண்ணில் தன் ஆயுளில் பாதியைச் செலவழித்த அந்த மனிதன் ஒவ்வொரு முறையும் தனது பால்யத்தில் உழுத செழிப்பான அந்தப் பூமி திரும்பக் கிடைக்குமென்கிற நம்பிக்கையில்தான் இருக்கிறார். வயல் முடிந்து மலைக்குச் செல்லும் பாதையில் இவரது நிலத்திற்குக் காவலாக இருப்பதுபோல் நிற்கும் ஆலமரம் மட்டும் பல கோடைகளின் வெக்கையை உள்வாங்கி இறுகிப் போய் நிற்கிறது. பரந்து விரிந்த அந்த மரத்தின் கீழ் அமர்ந்தபடி வெறுமனே தனது நிலத்தைப் பார்ப்பதுதான் இப்போது நெல்லுக்கஞ்சியின் வழக்கமான அலுவல்.

   நாற்பது வயதைத் தாண்டிய அவரின் துணைவி மயிலுத்தாய் இத்தனை காலம் சொந்த நிலத்தில் மட்டுமே உழைத்து இப்பொழுது கூலிக்கு வேலைக்குப் போகிறாள். சதுரகிரி மலையின் அடிவாரத்திலிருந்து மலையில் இருக்கும் மகாலிங்கம் கோயிலில் சமைப்பதற்குத் தேவைப்படும் கியாஸ் சிலிண்டர்களைத் தூக்கிச் செல்லும் வேலை. சாதாரணமாக நடப்பதற்கே மூச்சு வாங்கும் அந்த மலைப்பாதையில் ஒடிசலான அந்தப் பெண் இருபது கிலோ சிலிண்டர்களைத் தூக்கியபடி மலையேறுவதைக் கண்டு, கல்லும் கண்ணீர் சிந்தும். பத்து கிலோ மீட்டர்கள் கரடுமுரடான அடர்ந்த வனப்பாதையில் சிலிண்டர் களோடு நடக்கும்போது உடலின் ஒவ்வொரு செல்லும் ஓய்வு கேட்டுத் துடிக்கும். நிலத்தில் விழும் வெயிலுக்கும் மலையின் மீது விழும் வெயிலுக்கும் வித்தியாசம் உண்டு. மலையேறும்போது உடலைத் துளைக்கும் வெயில் நரம்புகளைச் சுருட்டி இழுக்கக் கூடிய அளவிற்குத் தீவிரமானது. அத்தனை வலிகளைத் தாக்குப் பிடித்தால், ஒரு நடைக்கு 300 ரூபாய் கூலி. அதிலும் சிலர் இரண்டு நடைகள் போவதுண்டு. உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியுமென்கிற நெருக்கடி உள்ள மனிதனின் பசி எத்தனை மலைகளைத் தாண்டி வேண்டுமானாலும் நடக்கச் செய்யும்போல. சதையும், எலும்பும், நரம்பும் மட்டுமல்லாமல் வேறென்ன அவர்களின் சொத்து. ``இப்பிடிக் கஷ்டப்பட்டுத்தான் நாம கஞ்சி குடிக்கணுமா?” முதல் சில நாள்கள் நெல்லுக்கஞ்சி அலுத்துக் கொண்டார். ஆனாலும், வேலைக்குப் போக வேண்டாமென சொல்லக்கூடிய துணிச்சல் அவருக்கில்லை. எது இருக்கோ இல்லையோ ஒவ்வொரு வருசமும் ஊரிலிருக்கும் காளியம்மன் கோயில், கருப்பசாமி கோயில், அழகர்சாமி கோயிலென எல்லா சாமிகளுக்கும் திருவிழா நடத்திப் பூசை கட்ட சனம் தவறுவதில்லை. இந்த ஊரைச் சுற்றிலும் சரி, பக்கத்தில் இருந்த அத்தனை ஊர்களிலும் சரி எத்தனையோ சாமிகள் இருந்தன. ஆனால், எந்தச் சாமியும் மழை தரும் வழியைக் காணோம். இந்த வருஷம் முனகியபடியே ஊர் ஆட்கள் திருவிழாவிற்கான வேலையைப் பார்த்தார்கள். பெருசுகள் சிலர், ``மனுஷனுக்குக் கொற வெச்சாலும் சாமிக்கிக் கொற வெய்க்கக் கூடாதுரா. மனம்போல செய்வோம். மாரித்தாயி மழய குடுக்கட்டும்’’ என உற்சாகப்படுத்த நெல்லுக்கஞ்சி மட்டும், “அது ஒண்ணுதான்யா கொற நம்மளுக்கு. குடிக்கக் கூழு இல்ல. கொப்பளிக்கப் பன்னீர் கேக்குதாம்... நீங்களும் உங்க  திருவிழாவும்” எரிச்சலோடு கூட்டத்திலிருந்து விலகிப் போனார்.

   பெரியவன் திருப்பூருக்கு வேலைக்குப் போன இடத்தில் புதுக்கோட்டைக்காரப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான் எனச் சில மாதங்களுக்கு முன்பு வந்த செய்தியோடு, அவன் அனுப்பிய கொஞ்சம் பணமும் வந்தது. பதறிப்போய் அவனுக்கு போன் செய்தார். “எத்தன காலத்துக்குத்தான் நான் குடும்பத்துக்கு உழச்சுக் கொட்டுவேன். என் வாழ்க்கையவும் பாக்கணும்ல… என்னால இவ்ளோதான் முடியும். பேசாம காடு கரைய வித்துட்டு இங்க வந்திருங்க. நான் உக்கார வெச்சு கஞ்சி ஊத்தறேன். ஆனா, இனிமே என்னால பத்து பைசா அனுப்ப முடியாது...” என சடவாய்ப் பேசினான். “எங்க தாத்தன் காலத்துல இருந்து எல்லாருக்கும் சோறு போட்ட நெலம்யா. எங்காலம் வரைக்குமாச்சும் இருக்கட்டும். நீ துட்டு அனுப்பிச் செரமப்பட வேணாம். நாங்க பாத்துக்கறோம்” கோபப்படக்கூட முடியாமல் இணைப்பைத் துண்டித்தவர், சடாரெனத் தன் மகன் யாரோ ஒருவனாகிப் போனதைப்போல் உணர்ந்தார். தனக்காக மட்டுமே சிந்திக்கத் துவங்கும் நொடியிலிருந்து மனிதன் உறவுகளற்ற தனியனாகிறான். மயிலுத்தாயிடம் சொல்லும் போதுகூட, “இந்தப் பய ஊர் உறவு எதுவும் வேணாம்னு சொல்றானே, எப்பிடித்தா நல்லது கெட்டதுக்கு அவனுக்கு நாலு பேர் நிப்பாங்க?” கவலையாகத்தான் வெளிப்படுத்தினார். “விடுங்க, நம்மளுக்குந்தான் சுத்தி சொந்தம் பந்தம்னு எல்லாம் இருக்கு, ஆனா, நம்ம வயித்துக்கு நாம தான உழைக்கிறோம். பசியெடுத்து சாகக் கெடந்தாலும் எள்ளுன்னு எடுத்துப் பாக்க நாதியில்ல, உமின்னு ஊதிப்பாக்க நாதியில்ல. அவனாச்சும் குடும்பம் குட்டின்னு சந்தோசமா இருக்கட்டும்” ஒரு வயதிற்குப்பிறகு, எல்லா இழப்புகளையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு அந்தம்மா சொன்னது. மனிதன் தன் கவலைகளுக்காக வருத்தப்படுவதென்றால் ஓர் ஆயுசு போதுமா? ஐயாவும் அம்மாவும் அண்ணன்பொருட்டுக் கலங்கி இருப்பதைப் பார்த்து தெய்வானை தானும் வேலைக்குப் போவதாகச் சொன்னாள். ஏற்கெனவே மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டோமே எனக் குற்றவுணர்ச்சியிலிருந்த நெல்லுக்கஞ்சிக்கு மகளும் வேலைக்குப் போகிறேனென்று சொன்னதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஏந்தாயி இனி எங்காலத்துல உனக்கு எதுவும் செய்ய முடியாதுன்னு நெனைக்கிறியா? உன்னயவும் வேலைக்கு அனுப்பினா, ஊர்ல யாராச்சும் என்னய மதிப்பாங்களா? வருசத்துக்கு அறுவது கோட்ட நெல்லு அறுப்பு பாத்த குடும்பம் நம்ம குடும்பம்” மகளின் முகத்தைப் பார்க்க முடியாமல் கேட்டார். “சும்மா இருப்பா… வேலைக்குப் போறதுனால ஒண்ணும் கொறஞ்சு போயிராது. சோத்துக்கு நீயும் அம்மாவும் வழி பண்ணிருவீங்க சரி. நாளைக்கு எனக்கு ஒரு கல்யாணம் காட்சி செய்யணும்னா, யார்கிட்டப் போயி நிப்பீங்க? அதுக்காகவாச்சும் கொஞ்ச காலத்துக்கு வேலைக்குப் போறேன்” அவள் சொன்னதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

   பதினைந்து நாள்களுக்கு முன்பாகத்தான் தெய்வானை, சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கென கிளம்பினாள். பேரையூர் ஏஜென்ட் மூலமாகப் பேசி வீட்டுப் பத்திரத்தை அடமானத்தில் வைத்துதான் எல்லா செலவுகளையும் பார்த்தார்கள். ‘‘கண்காணாத ஊருல போயி பத்திரமா இருந்திருவியாத்தா…” அனுப்ப மனசில்லாமல் புருஷனும் பொண்டாட்டியும் மருக, “நா என்ன சின்னப்புள்ளையா? அதெல்லாம் பாத்துக்குவேன். என்ன ஒண்ணு, வீட்டு வேலைக்குப் போறேன்னு தெரிஞ்சா ஊர்ல ஒரு மாதிரியா நெனச்சுக்குவாங்க. யாரு கேட்டாலும் ஏதாச்சும் கடைல வேல பாக்கறேன்னு சொல்லிருப்பா…” தவிர்க்க வியலாமல் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நிலை குறித்தான கவலை அவளின் குரலில். பிள்ளைகள் இல்லாத வீடு சூன்யம். சேர்த்து வைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டிய வயதில், தங்களுக்காகத் திருமண வயது வந்துவிட்ட மகள் வேலைக்குப்போன துக்கம் இருவருக்கும். பேசினால் வெடித்து அழுதுவிடுவோமே என்கிற அச்சத்தில் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். விமானம் ஏற்றிவிட்டு வந்த ஏஜென்ட், முதல் மூன்று மாத சம்பளம் அவளுக்குத் தாமதமாகத்தான் வரும் என்று சொன்னதில் முன்னைவிடவும் கவலை அதிகமானது. கடனை முழுதாக அடைக்கமுடியாவிட்டாலும் வட்டியை மட்டுமாவது கட்டலாமென தெம்பாய் இருந்தவருக்கு அதற்கும் வழியில்லை. இப்போதைக்கு பிள்ளை சந்தோசமாயிருந்தால் சரி என மனதைத் தேற்றிக்கொண்டார்.

   கிராமப்பஞ்சாயத்தில் கூடி பஞ்சகால நடவடிக்கைகள் குறித்துப் பேசும்போது ஓரமாக நின்றுகொண்டிருந்த நெல்லுக்கஞ்சியும் இன்னும் சில பெரியவர்களும்,  ``என்னத்த பேசி என்னய்யா செய்றது? காஞ்சு கெடக்கற நெலத்துக்கு தண்ணி வேணுமே அதுக்கு என்ன வழி? போதாக்குறைக்கு வாங்குன காசு எப்ப கட்டுவன்னு பேங்க்காரன் கழுத்துல துண்ட போட்டுக் கேக்கிறான். ஊர் உலகத்துல எல்லாம் கோடி கோடியா வாங்கி ஏப்பம் விட்டுட்டு ஓடிர்றானுக. இவனுக நம்ம கிட்ட குடுத்த காலணா கடன வாங்கறதுக்கு படாதபாடுபடுத்துறான்க” என தவதாயப்பட்டார்கள். பஞ்சாயத்துக் கூட்டம் காரசாரமாக இருந்ததே ஒழிய, தீர்வை நோக்கி நகர்வதாய்த் தெரியவில்லை. “நாமளும் காகமா கத்திக் கிட்டுத்தான் இருக்கோம், அதிகாரியும் சரி அரசாங்கமும் சரி மதிக்கிறதா இல்ல. போன வெள்ளாமதான் ஒண்ணும் இல்லாம போச்சேன்னு கடன் வாங்குனோம், இந்த வெள்ளாமைல நாத்து நல்லா வளந்து வர்ற நேரத்துல தண்ணி இல்லாம கருகிப்போச்சு. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா, கடன தள்ளுபடி பண்ண மாட்றாய்ங்களே. சும்மா மனு குடுத்தெல்லாம் இந்தப் பிரச்னையை முடிக்க முடியாது. எல்லாரும் மொத்தமா கிளம்பி மெட்ராசுக்குப் போவோம். போராட்டம் பண்ணுவோம்… கலகம் பண்ணாத்தானய்யா விடிவு பொறக்கும்” பிரசிடென்ட் எல்லோருக்கும் பொதுவாய் சொன்னதைச் சிலர் ஏற்றுக் கொண்டார்கள்;சிலர் அங்கேயே ஆட்சேபித்தார்கள். ``ஏப்பா துட்டு வெச்சிருக்க ஆளுக போவீங்க… இல்லாதப்பட்ட ஆளுங்க என்ன செய்றது? இது சுத்தப்படாது” என ஒரு பெரியவர் சொல்ல,  ``வார விருப்பம் இருக்கவங்க வாங்க… இதுல கட்டாயம் ஒண்ணுமில்ல” என பிரசிடென்ட்டும் வேறு சிலரும் முடித்துக் கொண்டார்கள். நெல்லுக்கஞ்சி ஐயாவுக்கு இந்தக் கூட்டத்திலோ பேச்சிலோ பெரிதாக நம்பிக்கை இல்லை. பசித்தவர்களின் குரலையோ வலியையோ உணர்ந்த அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பாக்கியம் சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரனுக்கு இருந்திருக்கிறது. சம்சாரி எல்லா ஊரிலும் எல்லோராலும் கைவிடப்பட்டவன் என்பதையே இத்தனை வருடங்களில், தான் கண்ட வாழ்க்கைப் பாடமாய் நினைக்கிறார். 

   காடு கரையென எப்போதும் காலில் வயக்காட்டு மண்ணோடு புழங்கிய மனிதனுக்கு எந்த வேலையுமில்லாமல் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. மனம் போனபோக்கில் தினம் ஒரு  திசையிலிருக்கும் ஊர்களுக்குப் போய்வந்தார். எங்காவது நாலு மழை பெய்து பச்சை தழைத்திருக் கிறதா என்கிற ஆசை. பேரையூரிலிருந்து கல்லுப்பட்டிப் போகிற வழியில் தரிசாகிப்போன நிலத்தில் ஒன்றுக்கு மூன்றாக க்ரஷர்கள் வந்து விட்டிருந்தன. சாப்டூர் செல்லும் வழியில் பழையூர் கண்மாய் இன்னும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருந்ததில் ஆச்சர்யம். ஒன்றுமே இல்லாமல் போனாலும், மொத்த ஊருக்கும் சோறு போடக்கூடிய அளவிற்கு இப்போதும் புளியந்தோப்பு அடர்த்தியாய் இருந்தது. மற்ற பக்கங்களில் நிலமை மோசந்தான். அன்று விடிகாலமே நீச்சத் தண்ணியை மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பியவர் பெருங்காமநல்லூர் பக்கமாய்க் கிளம்பினார். அங்கிருந்து செக்கானூரணி செல்லும் வழியில் இருக்கும் கிராமங்களில் துவரையும் எள்ளும் போட்டிருப்பார்கள். துளி ஈரம் இல்லாதபோதும், பயிருக்குத் தாக்குப்பிடிக்கும் வளமான கரிசல் நிலம். ஆனால், அங்கும் சொல்லிக் கொள்ளும்படியாய் ஒன்றுமில்லை. சில ஊர்களில் மட்டுமே துவரை தாக்குப் பிடித்திருந்தது. ஒரு சம்சாரி இன்னொரு சம்சாரிக்கு உதவ முடியாத இந்த நாள்கள் சகிக்க வியலாதவை. பெரும்பாலான ஊர்களிலும் விதை நெல்லுக்குக்கூட வழியில்லாமல் கடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நிலம் எரிந்து பயிர்கள் கருகிப்போயிருந்தன. கடன் கொடுத்த எவனும் வாங்கியவனின் கஷ்டம் பார்ப்பதில்லை. தன் பணத்தைத் திரும்ப வாங்குவதற்கான உத்திகளை மட்டுமே யோசிக்கிறான்.

   பிற்பகல் நேரமாக வீட்டிற்குத் திரும்பிய போது ஊர் மந்தையில் இரண்டு ஜீப்கள் நிற்பதைக் கவனித்தார். வங்கி ஆட்கள் வந்திருக்க வேண்டும். அவருக்கு இனம் புரியாத ஓர் அச்சமும் தயக்கமும் எழ, வந்த வழியிலேயே வேகமாகத் திரும்பி நடந்தார். காலில் அணிந்திருந்த தோல் செருப்புகள் ஈரமாகி நீராய் வழியும் அளவிற்கு வியர்த்துக் கொட்டியது. தேர்ந்த உடைகளோடு எதிரில் வந்த ஒருவன் ஓங்கி அவரின் காதில் ஓர் அறைவிட்டான்.  இத்தனை வருடத்தில் எந்தவொரு சண்டைக்கும் போயிராத அந்த மனிதன் தனது அறுபத்து மூன்றாவது வயதில் யாரோ முகம் தெரியாத ஒருவனிடம் அடிபட்டுவிட்டோமே என்கிற அவமான உணர்வில் கூனிக் குறுகிப் போனார். “ஏப்பு எங்க ஓட்றீரு… கை நீட்டி துட்டு வாங்கும் போது இனிச்சதுல்ல…  திரும்பக் கொடுக்கணும்னா மட்டும் வலிக்கிதோ…” அவரது கழுத்தை இறுகப் பிடித்து இழுத்தபடி மந்தைக்குத் தள்ளினான். மந்தையில் அதிகாரிகளின் குரல் சத்தமாகவும் பதிலுக்கு சம்சாரிகள் கெஞ்சுவதுமாக இருக்க, இவரை இழுத்துவந்த ஆள் விடாமல் அடித்தபடியே வந்தான். ``தாயலி தப்பிச்சா ஓட்ற… வா” அவர்கள் மந்தையை நெருங்கும் போதும், அடித்ததைக் கண்ட சம்சாரிகள் கொதித்துப்போய் கத்தினார்கள். ``யேய்.. மொதல்ல கைய எடுய்யா… உங்கிட்ட கடன் வாங்கிட்டா, அவர என்ன பிச்சக்காரன்னு நெனச்சிட்டியா..? கைய எடுய்யா...” ஆளாளுக்குக் கத்தியும்கூட அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வங்கி அதிகாரிகளுடன் வந்த போலீஸ்காரர்கள் இரு பக்கமும் சமாதானப்படுத்த முயன்றார்கள்.

   நெல்லுக்கஞ்சியை அடித்த அதிகாரி, ``யோவ் சும்மா வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல... இங்க நிக்கிற அத்தன பேருந்தான் கடன் வாங்கி இருக்கீங்க. ஒருத்தனுக்கும் திருப்பிக் குடுக்க வக்கில்ல. அப்பறம் எதுக்கு வீராப்பு?” அந்தக் குரலுக்கு பதில் சொல்லும் துணிவற்றவர்களாய் எழுந்த கோபத்தையெல்லாம் முனகலாய் வெளிப்படுத்தியது அந்தக் கூட்டம். ஆறடிக்கும் பக்கமான நெல்லுக்கஞ்சி அத்தனை காலத்தில் தலைபோகும் கஷ்டத்தில் இருந்தபோதுகூட இத்தனை அவமானப்பட்டதில்லை. தன்னைச் சுற்றி இருந்த யாரையும் பார்க்கும் துணிவின்றி தலையைக் குனிந்தபடியே நின்றார்.

   இரண்டு வார அவகாசத்திற்குள் பணத்தைக் கட்டாவிட்டால், நிலத்தையோ வீட்டையோ வங்கி எடுத்துக்கொள்ளலாம் என்பதாக முடிவாகி, வங்கி ஆள்கள் கிளம்பும்போது அன்றைய தினத்தின் பகல் கருணையின்றி அந்த ஊரிலிருந்து விலகத் துவங்கி இருந்தது. நெல்லுக்கஞ்சிக்கு யார் யாரோ வந்து சமாதானம் சொன்னார்கள். அவர் மந்தையிலிருந்து நகர்வதாய் இல்லை. காலுக்குக் கீழிருந்த பூமியும் தலைக்கு மேலிருந்த ஆகாசமும் நாம் ஜீவித்திருக்கும் நாளிலேயே நம்மைவிட்டு அகன்று போகும்போது தோன்றும் கைவிடப்பட்ட உணர்வு அவரிடம். அழுது அரற்றி வலி தீர்த்துக் கொள்ள ஏங்கிய மனம் முதுமை காரணமாய் குமுறலை அடக்கிக்கொண்டிருந்தது. யார் யாரின் பசிக்கோ விதைத்த அவரின் கைகளும் கால்களும் கடும் பசியில் இப்போது சுருங்கிப் போயிருந்தன. வாழ்வின் தீர்க்க முடியாத புதிர் ஒன்றிற்குள் அகப்பட்டுவிட்ட குழப்பத்தில் நேரங்காலம் தெரியாமல் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தவரை வேலை முடிந்துவந்த மயிலுத்தாய்தான் நினைவுக்குக் கொண்டுவந்தாள். மந்தையில் நடந்ததை யாரும் அவளிடம் சொல்லி இருக்கவில்லை. சகலமும் கைவிடப்பட்ட வலியில் மந்தையின் வேப்பமரத்தில் சாய்ந்து கிடந்தவரைத் தட்டிக் கூப்பிட்டவள், ``காச்சுன கஞ்சி அப்பிடியே கெடக்கு, காலைல இருந்து எங்க போன நீயி..?” பதற்றத்தோடு கேட்டாள். ஒன்றுமே பேசாமல் எங்கோ பார்த்தபடி கிடந்தவரை, “இந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஏன் இப்பிடிப் பேயறஞ்ச மாதிரி கெடக்கே... இந்தா உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்…” எனப் பகலின் எரிச்சலும் மலையேறின அலுப்பிலும் அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஊர் பேருந்து நிறுத்தத்தில் டீக்கடை வைத்திருந்த சுந்தரி அக்காதான் ஓடி வந்து கட்டிக்கொண்டாள். “மயிலு.. உன் புருஷன அடிச்சுப்புட்டாய்ங்கடி அந்த பேங்க்காரனுக… கொஞ்ச நஞ்ச அடின்னு இல்ல” எனக் கவலையும் கதறலுமாய் சொன்னதை முதலில் நம்பமுடியாமல் தான் நின்றாள். விடாப்பிடியாய் அவரை மந்தையிலிருந்து இழுத்துக்கொண்டுவந்து தெருவிளக்கில் நிறுத்திப் பார்க்கும்போதுதான் முதுகிலும் கழுத்திலும் தடித்த விரல்களின் தடங்களைப் பார்க்க முடிந்தது. இந்த மனிதன் எதற்காகக் கடன் வாங்கினான்? பொண்டாட்டி பிள்ளைக்கு நகை நட்டு எடுத்துப் போடவா? வீடு வாசல் வாங்கவா? சாராயம் குடிக்கவா? எதுவுமில்லை. கடந்தமுறை நடவு விளையும் முன்னயே கருகிப்போனது. நல்ல சம்சாரி எவனும் தன் நிலம் மலடாய்ப் போவதை விரும்ப மாட்டான். அதற்காக வாங்கிய கடன்தானே... பிறகு ஏன் அடித்தார்கள்? அவளுக்குள் எழுந்த எந்தக் கேள்விக்கும் அந்த இரவில் பதில் சொல்ல எவருமில்லை. ஊரே கேட்கும்படி கதறி அழுதவளுக்கு ஆறுதல் சொல்ல இன்னும் சிலர் அங்கு வந்தபோது, நெல்லுக்கஞ்சி மெதுவாக வீட்டை நோக்கி நடந்தார்.

   ஊர்க்காரர்களின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டதாலேயே எங்கும் போகாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தார். தென்னரசுதான் காலையில் வந்து, ``அப்புச்சி எதுக்கு இப்டியே கெடக்க, மெட்ராசுக்குப் போன விவசாயிங்க எல்லாம் தீவிரமா போராடிட்டு இருக்காங்க, எப்படியும் நமக்கு இந்த வாட்டி ஒரு விடிவு வந்துரும்... எந்திரிச்சு வா...” என நம்பிக்கையாக அழைத்தான். அந்த நாளின் சூரிய வெளிச்சம் கலக்கமே இல்லாமல் எத்தனை தீவிரமாய் இருந்ததோ, அத்தனை தீவிரமாய் தங்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடுமென எல்லா சம்சாரிகளையும்போல் அவரும் நம்பினார். தென்னரசு வீட்டு டி.வி-யில் நிமிசத்துக்கு ஒருமுறை விவசாயிகளின் போராட்டத்தை தான் முக்கிய செய்தியாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ வந்து படமெடுத்தார்கள், யார் யாரோ அவர்களோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்கள். எல்லா ஊர்ப்பக்கமிருந்தும் கூடியிருந்த விவசாயிகளின் முகத்தில் பசியின் ரேகைகளும் அதைத் தீர்த்துக்கொள்ள முடிந்த வரை தீவிரமாய் அவர்கள் போராடுவதும் தெரிந்தது. தங்களது இறுதி யுத்தமாய் கோவணத்தோடு முழக்கமிடும் அளவிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது அவர்களோடு கலந்து கொள்ளாமல்போனதில், சின்னதொரு குற்றவுணர்ச்சி வந்தது அவருக்கு. ``எலேய் தென்னரசு... கூடிய சீக்கிரம் ஒரு நல்ல வழி பொறக்கும்டா...” எனச் சந்தோசமாகச் சொல்லிக் கொண்டார். ஊரில் யார்தான் நம்பவில்லை. அடுத்த வெள்ளாமையிலாவது விவசாயம் பிழைத்துக்கொள்ளும் என்கிற சந்தோசத்தில் பருவமழை வந்தால் போதுமென ஒவ்வொருவரும் வேண்டாத சாமியில்லை.

   தன்னைத் தொந்தரவு செய்யாதவரை மட்டுமே எந்தப் போராட்டத்தையும் நடத்த அனுமதிக்கும் அதிகாரிகள், போராட்டம் தேசிய அளவிலான செய்தியான மூன்றாவது நாளில், கருணையின்றி அடித்துத் துரத்தினார்கள். பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததாகவும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொத்துக்கொத்தாக நிறைய விவசாயிகளைக் கோவணத்தோடு அள்ளிக் கொண்டுபோன காவல்துறை, அடைத்துவைத்த இடத்தையும் அடித்துத் துவைத்த செய்தியையும் எந்த டி.வி-யும் அவர்களுக்குக் காட்டியிருக்க வில்லை. நம்பிக்கை உடைந்துபோன துக்கத்தை யார்தான் யாரிடம்தான் பகிர்ந்து கொள்ள முடியும். நெல்லுக்கஞ்சி கடைசி முயற்சியாகத் தன் மகனிடம் கொஞ்சம் பணம் கேட்டுப் பார்க்கலாமாவென யோசித்தார். அவரின் மனைவிதான் விடாப் பிடியாய் மறுத்துவிட்டாள். வீட்டுப் பத்திரத்தையும் வைத்துக் கடன் வாங்க முடியாது. ஏதோவொன்று நிரந்தரமாகப் பறிபோய்விடுமோ என்னும் தவிப்பு வயிற்றில் நெருப்பாய் எரிந்து அடங்க மறுத்தது. யாரிடம் யார் கடன் கேட்பதென ஊரே தவித்துக் கொண்டிருந்தது. சிலர் வீட்டை விற்றார்கள், இன்னும் சிலர் ஆடுமாடுகளை விற்றார்கள். வங்கிக்காரர்கள் இன்னொரு முறை ஊருக்குள் வந்து காசு கேட்கும்போது யார்மீது வேண்டுமானாலும், கை நீளக்கூடுமென்கிற அச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தது. வேறு யாரையும்விட நெல்லுக்கஞ்சிக்கு அதிகமாக இருந்தது. மயிலுத்தாயிக்கு மலையேறி மலையேறி உடம்பு நோவு கண்டதுதான் மிச்சம். இரவுகளில் அலுப்பின் வேதனையை முனகலாய் அரற்றினாள். இரண்டு நாட்களுக்கு முன் தூக்கத்தில் எழுந்து கொள்ளக்கூட முடியாத வேதனையில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட்டதைப் பார்த்தபோதுதான் அவள் உடல் எத்தனை சிதைந்து போயிருக்கிற தென புரிந்துகொண்டார். அந்த ராத்திரி முழுக்க அவர் அழுகுரல் சலனமற்றிருந்த ஊரின் மரங்களையும் கிளைகளையு மெல்லாம் அசைத்துப் பார்த்தது. அடுத்த நாள், ``பேசாம வீட்ல இருத்தா... சாப்பாட்டுக்கு நான் ஏதாச்சும் வழி பாக்கறேன், நீ வேலைக்குப் போகாத” எனக் கண்ணீரோடு சொன்னார். மயிலுத்தாயிக்கு உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஊர்ப்பக்கம் இப்போதைக்கு வேறு வேலையும் இல்லை. ``இருக்கட்டும். இன்னும் ஒரு நாலு நா போறேன். முடியலைன்னா பாத்துக்கலாம்” என சமாதானத்திற்குச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

   கடன் வசூலிக்க ஆட்கள் வர, நாள்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. நிலத்தைப் பார்த்து பத்து நாள்கள் பக்கமாய் ஆகிப்போனதை நினைத்துச் சங்கடம் கொண்டவர், வெயிலோடு வெயிலாக வயக்காட்டிற்குச்  செல்லும் பாதையில் இறங்கி நடந்தார். மாடுகள் சரியான தீவனமில்லாமல் மெலிந்துபோய் சுற்றிக் கொண்டிருந்தன. சிறுவர்கள் சிலர் கொடிக்கா மரத்திலிருந்து கொடிக்கா பறித்துக் கொண்டிருந்தார்கள். இவரைப் பார்த்த சிறுவன் ஒருவன், “அப்புச்சி கொடிக்கா திங்கறியா?” என உரிமையாய்க் கேட்டான்.  ``சும்மா ஒரு அஞ்சாறு குட்றா...” எனக் கேட்டவரின் துண்டில் இரண்டு கை நிறைய அள்ளிப் போட்டான். வெயிலுக்குக் கொடிக்காயின் துவர்ப்பு சேரச் சேர தண்ணீர் தாகம் எடுத்தது. மொட்டப்பாறையை ஒட்டிய குட்டையில் மிச்சம் மீதி தண்ணீர் இருந்தால், வாரிக் குடிக்கலாமென நினைத்தபடியே நடந்தார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பயிர்களே இல்லாமல், கொஞ்சமே கொஞ்சமான தென்னை மரங்களும் அவர் நிலத்திற்கு அப்பாலிருந்த ஆலமரமும் மட்டுமே மிஞ்சியிருந்தன. கொடிக்காயை ஒரு அளவுக்கு மேல் தின்ன முடியாமல் துண்டில் முடிந்து கொண்டவர், குட்டையில் பாதம் அளவிற்கே இருந்த நீரில் கலங்கல் வராமல் அள்ளிக் குடித்தார். வயிற்றுக்கு ஆறுதலாய் இருந்தது.

   மயிலுத்தாய் வீடு திரும்பியபோது, இரவுக்கான சாப்பாட்டை பேரையூர் முக்குக்கடையில் வாங்கி வந்திருந்தாள். இன்னும் மூன்று நாள்களில் பெளர்ணமி. மகாலிங்கம் கோயிலுக்கு வரும் கூட்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு நாளைக்கு சர்பத் கடை, தேங்கா கடை போட்டாலும் அஞ்சாயிரம் ஆறாயிரம் பார்த்துவிடலாம். போதாக்குறைக்கு கோயில் மடத்தில் சமைக்கப் போனால், கூடுதலாகக் கொஞ்சம் பணம் கிடைக்கும். மிச்சத்திற்குக் கழுத்திலிருக்கும் தாலியையும் வைத்தால், ஒரு தவணையைக் கட்டிவிட முடியும். வேலை  தந்த களைப்பையும் மீறி வந்தவளை ஆளற்ற இருண்ட வீடு எரிச்சலூட்டியது. ``வேல இல்லாட்டியும் இந்த மனுஷன் வீடு அண்ட மாட்டேங்கறானே...” எனப் புலம்பியபடியே மந்தைப் பக்கமாக விசாரிக்கப் போனாள். அன்றைய தினம் முழுக்கவே யாரும் அவரைப் பார்த்திருக்கவில்லை என்பது அவள் விசாரித்த எல்லோருக்குள்ளும் கலவரமான ஒரு சந்தேகத்தை வரவைத்திருக்க, அவர்களும் அவளோடு சேர்ந்து தேடினார்கள். காலையில் கொடிக்கா பறித்துக்கொண்டிருந்த சிறுவர்கள்தான், இறுதியாய் வயக்காட்டுப் பக்கமாய் அவர் போனதைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.

   ஊர்க்காரர்கள் பேட்டரி லைட்டுகளோடு சைக்கிளிலும் பைக்குகளிலும் வயக்காட்டிற்கு விரைந்தபோது, தூரத்தில் காற்றே இல்லாத ஆலமரத்தில் சலனமின்றி ஏதோ ஒரு கனத்த வேர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். வெளிச்சம் மரத்தை நெருங்க நெருங்கத்தான் அந்த வேர் அத்தனை காலம் அந்த நிலத்தோடு வாழ்ந்த நெல்லுக்கஞ்சி என்பது தெரிந்தது. சரியாகச் சாப்பிடாமல் ஒட்டிப்போயிருந்த அவரது வயிற்றில் கோவணம் கூட இப்பொழுது இறுக்கம் இல்லாமல் போயிருக்க, மிச்சமிருந்த ஒற்றை வேட்டியில் தான் கொண்டிருந்த கடைசி நம்பிக்கையும் தொலைந்துபோன வலியில் அவரின் தலை தொங்கிக்கொண்டிருந்தது. உயிரையே வேரோடு பிடுங்கி எடுத்துவிட்ட வேதனையில் ஊரே கதறியழுதது.

   தாதுப் பஞ்சகாலத்தில்கூட எந்தத் தனி மனிதனும் தற்கொலை செய்துகொள்ளாத ஊரது. கைவிடப்பட்ட அநாதைகளாய் தாங்கள் மாறிப்போனோம் என்னும் வேதனையில் அந்த ஊர் சனம் தங்களைப் போன்ற எல்லோருக்காகவும் கதறியழுதது. அக்கம்பக்கத்தில் கிடந்த கட்டைகளை வைத்து சின்னதாகப் பாடைகட்டி அவரைத் தூக்கி ஊரை நோக்கி நடந்தபோது மலைக்கு அப்பாலிருந்து லேசாக இடி இடித்தது. அவர்கள் ஊரை நெருங்கும் நேரத்திற்கெல்லாம் சின்ன சின்னதாய் தூறல்கள் விழுந்தன. இந்த மழை அவரை வழியனுப்பி வைக்கட்டுமென நெல்லுக்கஞ்சியின் வீட்டு வாசலில் கூடியிருந்தோரின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி அந்தத் தூறல் மழையாக வலுக்கும் முன்னரே நின்றுபோனது.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை
   நரன்   சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில்
    
   பழனி,  சிறு வயது முதலே பெரியாண்டவர்  சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன்  கொஞ்சம்  கெந்திக் கெந்தி  நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின்  சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல்  கடை முன் இருக்கும் மண்ணைச்  சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும்  வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிரப்பிக்கொள்ளச்  சொல்வான். பெண் பிள்ளைகளின் சைக்கிள்களுக்கு அவனே முன்வந்து காற்று நிரப்புவான். பதினோரு  வயதிலிருந்து வேலை செய்கிறான். வந்ததுமே பழைய டிரவுசரையும் பனியனையும் அணிந்துகொள்ள வேண்டும். அது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. காலை 8 மணிக்குமேல்தான் சாலைகளில் பெண் பிள்ளைகளின் நடமாட்டம் இருக்கும். இரவு கடை முடிய 10 மணி ஆகிவிடும். சாலை, பெண்கள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறிவிடும். எப்போதும் அவனை அதே அழுக்கு டிரவுசரோடும் பனியனோடும்தான் எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். பெண்பிள்ளைகள் கல்லூரிக்கோ, பள்ளிக்கோ செல்லும்போது, நல்ல உடைகள் உடுத்தி அவர்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என அவனுக்கு ஏக்கமாக இருக்கும். பழனிக்கு 27 வயது. வீட்டில் யாரும் அவன் திருமணத்தைப்பற்றிக் குறைப்பட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. காலில் குறைபாடு இருந்தாலும், வயதுக்குரிய அத்தனை விஷயங்களும் தேவையாகத்தான் இருக்கின்றன.

   அன்று இரவு கடை மூட கொஞ்சநேரம்தான் இருக்கும். அப்போது மரிய புஷ்பம் தன் சைக்கிளுக்குக் காற்று நிரப்ப வந்தாள். அந்த சைக்கிள், முரட்டு ஆண்கள் ஓட்டும் படியான, அகலமான கேரியரும் குறுக்குக் கம்பி போட்டதுமான வலுவான சைக்கிள்.  அது அவளுக்குப் பொருத்த மற்றதுபோலத் தெரிந்தது. மரிய புஷ்பத்தை,  இந்தக் கடைக்கு வேலைக்கு வந்ததிலிருந்தே அவனுக்குத் தெரியும். அவள் அப்போது உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். வாரத்தின் இறுதிநாளில் பெரிதாக வேலை ஒன்றும் இருக்காது.அன்று பழனிக்கு சந்தோஷமாக இருக்கும். அன்று முழுக்க வெளுத்த லுங்கியும் கட்டம்போட்ட சட்டையும் போட முதலாளி அனுமதிப்பார். 

    பெண்கள் பிரத்யேகமாக ஓட்டும் அழகும் நளினமுமான வொயர் பிரேக் சைக்கிளின் மெலிந்த கேரியரில் கறுப்பு உறையும், ஓரங்களில் சிவப்பு நிறமும் விரவிய மொந்தையான விவிலியத்தைக் கவ்வ வைத்துக்கொண்டு காற்று நிரப்ப வாரம் தவறாமல் வந்துவிடுவாள். பழனியின்  வயதிருக்கும் அவளின் தம்பி விமல்சனும் உடன் வருவான். பழனிக்கு, அவனின் பெயர் பிடிக்கும். அவள் எப்போதாவது கடைக்கு வரும்போது அவனைக் கூப்பிட வேண்டுமென்றால், அந்தப் பெயரை உச்சரிப்பாள். `நமக்கு மட்டும் ஏன் இப்படி பெயர் வைத்துவிட்டார்கள்?’ என்பதுபோல நினைப்பான். அவன் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெரும்பாலும் உடலை சரிபாதியாகத் திறப்பது மாதிரி இருக்கும் பொத்தான்கள் அணிந்த சட்டைகளை உடுத்த மாட்டான். சிறிது நேரம் தலையை மட்டும் காணாமல்போகச் செய்து தலை வழியாகச் செருகி, தலை வழியாக  உரித்து எடுக்கும் நிறமான கைவைத்த பனியன்களை அணிந்திருப்பான். மரிய புஷ்பத்தை `அக்கா’ என அழைப்பதைத் தவிர்ப்பான். ஆனால், மரிய புஷ்பம் அவனை `தம்பி’ என அழைத்து  ``காத்து பிடிக்கணும்’’ எனச் சொல்வாள். முதலாளி இருக்கும் வேளை தவிர, காற்று நிரப்ப எல்லோரிடமும் வாங்கும் பத்து பைசாவை மரிய புஷ்பத்திடம் வாங்க மாட்டான். ‘இருக்கட்டும்’ எனச் சொல்லிவிடுவான்.
   சில நேரம் அந்தப் பிதுக்கு எண்ணெய் டப்பாவை எடுத்துவந்து செயின் பிரேக் இணைப்புகளுக்கு எண்ணெய் விடுவான். கேட்காமலேயே கட்டைவிரலால் பெல்லை அழுத்திப்பார்த்து அதன் ஒலியைப் பெருக்குவான். மரிய புஷ்பத்துக்கு இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்.  எப்போதும்  சிரித்தமுகமாக இருப்பாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் ஒளியே  இல்லை.

   அவள் ஹாண்ட் பாரில் கால் முட்டி தட்டுவதாகச் சொல்லியிருக்க வேண்டும். ஒரு சித்திரை மாத அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கடைக்கு வந்தவள், திடுமென வளர்ந்துவிட்ட பிள்ளைபோல் தெரிந்தாள். கடை முதலாளி, புதிய சைக்கிள் வாங்கிக்கொள்ளும்படி யோசனை சொன்னார்.

    மரிய  புஷ்பத்தின் அப்பாவும் அதையேதான் யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆண்கள் சைக்கிள்போல பெரிதாகக் குறுக்குக் கம்பி இல்லாது, முன் கம்பி வளைவாய் இருக்கும் கரும்பச்சை நிற  அட்லஸ் சைக்கிள். அவளின் அப்பா மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இன்னும் அவளைச் சிறுபிள்ளையாகப் பாவித்து `இவ்வளவு பெரிய சைக்கிளை எப்படி ஓட்டுவாள்?’ என்பதுபோல கவலைப்பட்டார்.

   கடை முதலாளி சொன்னார், ``ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்க.’’ சைக்கிளை சந்தோஷமாக எடுத்து ஓட்டினாள் மரிய புஷ்பம். ஓட்டும்போது இன்னும் பெரிய பிள்ளையைப்போல தெரிந்தாள். கடை முதலாளியும் கல்லாவைவிட்டு அவளின் அப்பாவோடு சாலையில் வந்து பார்த்தார். பழனியும் கெந்திக் கெந்தி வந்து சாலையைப்  பார்த்தான். துளிப் பிசகு இல்லாமல் நன்றாக ஓட்டினாள். பந்தைய நடுவரைப்போல், முதலாளி சொன்னார், ``அபாரம்.’’ அதன்பிறகே, முழு திருப்தியுடன் மரிய புஷ்பத்தின் அப்பா வாங்கிக் கொடுத்தார். முதலாளி பழைய சைக்கிளைப் பெற்றுக்கொண்டு புதியதன் விலையில் நான்கில் ஒரு பாகம் விலையைக் குறைத்தார். இப்போதும் புதியது போலவே இருக்கும் அந்த சைக்கிளை, முதலாளி இன்னும் ஒரு மடங்கு லாபத்துக்கு விற்றுவிடுவார் என்பது பழனிக்குத் தெரியும். ஆனால், மரியத்தின் அப்பா, அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

   முதலாளி, இரண்டு நாள்களில் வந்து புதிய சைக்கிளைப் பெற்றுக் கொள்ளச் சொன்னார். இரண்டு நாள் கழித்து ஒரு மாலை நேரத்தில், புதிய சைக்கிளை எடுப்பதற்காக மரியத்தின் அப்பா, தம்பி, மரியம் மூவரும் வந்திருந்தனர். ஏதோ வெளியூருக்குச் செல்பவர்களைப்போல் நல்ல துணி உடுத்தியிருந்தனர். முதலாளியிடம் மீதித்தொகையைக் கொடுத்துவிட்டு  சாவியை வாங்கினார்கள். அந்தச் சாவிக்குப் புதிய கீ செயின்  ஒன்றை இலவசமாகக் கோத்துக் கொடுக்கச் சொன்னார் முதலாளி. அந்தச் சலுகையை மரியம் பெரிதும் விரும்பினாள். கொத்திலிருந்து அவளே ஒன்றைத் தெரிவுசெய்து கொடுத்தாள். பழனி, தன் பங்காக சைக்கிளின் முன் பின் சக்கரங்களின் அச்சில் நான்கோ ஐந்தோ அடர்த்தியான நிறத்திலிருக்கும் பூவாக நினைக்கத் தோன்றும் குச்சிக் குச்சி பிளாஸ்டிக் நார்களின்  தொகுப்பைக் கோத்துவிட்டிருந்தான். சக்கரத்தைக் கவனிக்கும்போது அவள் அதையும் பார்த்துப் பூப்போல முகத்தை விரித்தாள். பழனிக்கு மனக்கிளர்ச்சியாக இருந்தது. கிளம்பும் போது மரியம், அவள் அப்பாவிடம் ஏதோ சொன்னாள். அவள் அப்பா, உடனே தன் சட்டைப் பையிலிருந்து  பத்து ரூபாயை எடுத்து  ``டீ செலவுக்கு  வெச்சுக் கோப்பா’’ என்று பழனியின் கையில் திணித்தார். அவனுக்குச் சங்கடமாகயிருந்தது. ஏதோ ஒன்று உடனே அணைந்துவிட்டதுபோல் உணர்ந்தான். அவர்கள் மூவரும் தேவாலயம் இருக்கும் திசை நோக்கிச் சென்றார்கள்.

    மரிய புஷ்பம், கல்லூரியில் சேர்ந்துவிட்டதை அறிந்தான். நெடுநாளுக்குப்பிறகு, ஒருநாள் மரிய புஷ்பம் அரை சேலை அணிந்த வேறொரு பெண்ணின் உதவியோடு சைக்கிளின் பின்பக்கத்தைக் கொஞ்சமும் தரையில்  தோயாதவாறு உயர்த்திப் பிடித்தபடி  கடைக்கு வந்தாள். இவன் உள்பக்கமாகத் திரும்பி வேறொரு சைக்கிளுக்கு  பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தான். திரும்பிப் பார்க்கையில், கணேசன், மரியத்தின் சைக்கிளைக் குனிந்து கவனித்து, அவளின் பாவாடை சைக்கிள் செயினில்  கறுப்பு கிரீஸ் கரையோடு சிக்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். பஞ்சரை அப்படியே போட்டு விட்டு  வேகவேகமாக அங்கே போனான்.  தான் முனைந்து யோசனை சொல்ல நினைப்ப தற்குள்,  கணேசன்  செயினைப் பின்னகர்த்தி அந்தப் பாவாடையை மெள்ள  தொட்டு வெளியே எடுத்துக்கொண்டிருந்தான். கெரண்டைக்குமேல் சிறு அரும்பு முடிகளோடு  இரண்டு விரல்களுக்கு இடையே கால் தெரிந்தது. கணேசன், இவனிலும் ஒரு வயது இளையவன். வேலைக்குச் சேர்ந்து  ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. துறுதுறுவென இருப்பதாக, அவன்  இல்லாதபோது கடையின் மூத்த ஊழியரான ராசு அண்ணனிடம் சொல்லியிருக்கிறார் முதலாளி. அவனுக்குக் கொஞ்சநாள்களாக பீடி குடிக்கும் பழக்கம் இருப்பதும், செக்ஸ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருப்பதும் பழனிக்குத் தெரியும். பழனிக்கு வேகவேகமாக ஏதோ அடித்துக்கொள்வதுபோல் இருந்தது. தானும் கையைக் கொண்டுபோனான். ``இல்லை... எடுத்துட்டேன். இன்னும் கொஞ்சம்தான்’’ என்று  கணேசன் சொன்னான். `எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு’  என்று சொல்வதுபோல் இருந்தது பழனிக்கு.

   அதே நேரம், பழனியை அழைத்து டீ குடித்த காலி டம்ளர்களைக் கொண்டுபோய் மாரியப்பன் கடையில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் முதலாளி. வேறு வழியில்லாமல், அங்கு இருக்கும் காலி கண்ணாடி டம்ளர்களை  எடுத்து  வட்டவட்டமாகத் துளை இருக்கும் இரும்புக்கம்பி தூக்குக்குள் செருகி எடுத்துக்கொண்டு கெந்திக் கெந்திப் போனான். உடல், அவமானத்தால் ஒரு நிமிடத்துக்குள் வெடித்துக் கிழிந்துவிடுவதுபோல் இருந்தது. வளைவு திரும்பியதும் முதலாளியும் கணேசனும் டீ குடித்த கண்ணாடி டம்ளர்களைத் தேடி எடுத்து சுவரில் கோபமாக அறைந்தான். சுக்கல் சுக்கலாக உடைந்தன.

   வெகுநேரம் கழித்து வந்தான். திரும்பி வந்தபோது கடையில் முதலாளி இல்லை. ராசு அண்ணனிடம் ``மேலுக்குச் சரியில்லை’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான். அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை.  இரண்டாம் நாள் காலையிலேயே ராசு அண்ணன் வீட்டுக்குத் தேடி வந்தார். கணேசன், கல்லாவிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்துவிட்டான் என்றும், முதலாளி கணக்கு முடித்து அனுப்பிவிட்டதாகவும், கணவன்  இல்லாத அவனின் அம்மா கடை வாசலில் வந்து அழுதபடி மன்னித்துச் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டபோதும், முதலாளி சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் உடனே உன்னை வரச்சொல்லி முதலாளி சொன்னதாக ராசு அண்ணன் சொன்னதும் பழனியின் மனசுக்குள் சட்டென ஆயிரம் திரிநாவிட்ட எண்ணெய் விளக்குகள் எரிந்தன. கூச்சமாக இருப்பதுபோல உணரத்  தொடங்கினான். ``போங்க, கிளம்பி வர்றேன்’’ என்று சொன்னான். முதலாளி அன்று டீயோடு வடையும் கடைக் கணக்கில் வாங்கிக் கொடுத்தார். வேலை முடிந்து கிளம்பும்போது இந்த மாதத்திலிருந்து சம்பளத்தில் நூறு ரூபாய் உயர்த்திக் கொடுப்பதாகச் சொன்னார்.

    அதன் பிறகு, நெடுநாள்களாக மரிய புஷ்பத்தை அவன் சாலை களில் பார்க்கவில்லை. கடைக்கும் வருவதில்லை. உத்தேசமாக அவளின் வீடு இருக்கும் திசையை நோக்கிப் பல நாள்கள் யதார்த்த மாகக் கண்ணில் படுவாள் என்று நினைத்து, கடையில் இருப்பதி லேயே நல்ல சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றியிருக்கிறான். அவள் கல்லூரி முடிந்து செல்லும் வழிகளில், ஞாயிற்றுக் கிழமைகளில்  செல்லும் தேவாலய சாலைகளிலும் தேடினான். ஒரு பகல் பொழுதில் அந்தத் தேவாலயத்தைக் கடந்து செல்கையில் உள்ளே போய்ப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. திறந்து கிடந்த தேவாலயத்தில், தேவாலய அமைதி தவிர யாருமே இல்லை. கன்னி மேரி மட்டும் தன் சிறு மகனைக் கையில் சுமந்தபடி, உள்ளே நுழைபவர் களை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். `இண்டாயிரம் வருடங்களாக  இந்தக் குழந்தையை இறக்கிவிடாமல் சுமந்துகொண்டே இருக்கிறாளே... பாவம், கை நோகாதா இந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு?’ என்பதுபோல நினைத்துக் கொண் டான். சொரூபத்தின் முன்னால், சில பிரார்த்தனைகள் மெழுகுக் குச்சிகளில் சுடர் பந்தமாக எரிந்தன.  இரண்டாயிரம் வருடங்களாகக் கொண்டாடப்படும்  இந்தக் குழந்தையின் பிறந்த தினத்துக்கு இந்த வருடமாவது வரவேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆலய மையத்தில் பாவமன்னிப்புக் கூண்டு இருந்தது. `கூண்டின் வெளிப்புறம் இருந்து பாதிரியாரிடம் ஒப்புக்கொடுக்க அந்தப் பூஞ்சையான பெண்  என்ன பாவம் செய்திருப்பாள்?’ என்று யோசிக்கத்  தொடங்கினான்.

   ஒரு மூலையில், சிறு துண்டு கல்தூணின் மீது கல்லால் ஆன தீர்த்தத்தொட்டி இருந்தது. தீர்த்தத் தொட்டியில் ஞான முழுக்கிட்டு `இன்று முதல் உன்னை  `ஜானி’  என்று அழைப்பார்கள்’ என்று யாரோ சொல்வதுபோல் இருந்தது. பழனி திடுக்கிட்டு வெளியே வந்துவிட்டான்.

    பல மாதங்கள் கழிந்து, ஒருநாள் அவளின் தம்பியை தேநீர்க் கடை ஒன்றில் பார்த்துவிட்டான். மிக உயரமாக வளர்ந்திருந்தான். மீசை தாடியெல்லாம்கூட வளர்ந்திருந்தன.  அமைதியான முகத்தோடு, அவனிலும் சிறிய பையனைப்போல்  இருந்தான். இப்போது எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், கடைக்கு வெளியே நின்று ஒரு கையில் தேநீரும், மறுகையில் சிகரெட்டையும் வைத்து இரண்டு புகையையும் அருந்தியபடி இருந்தான். இவனுக்கு ஆர்வமும் கோபமுமாக அவனை நோக்கிக் கெந்திக் கெந்திப் போனான். யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதுபோல போனதும் சத்தமாக  ``முத்து அண்ணே... ஒரு டீ’’ என்றான். கையில் சூடான கண்ணாடி டம்ளரைப் பிடித்துக்கொண்டு வேண்டுமென்றே அவன் பக்கத்தில் போய் நின்றான். அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவன் கையிலிருந்த நேரம், தேநீர், சிகரெட் எல்லாமே கரைந்துகொண்டே இருந்தன. `மரிய புஷ்பத்தை எங்கே என்று கேட்டுவிடலாமா?’ என நினைத்தான். இப்படி ஆரம்பித்தான்,  ``தம்பி... என்ன கடைப்பக்கம் ஆளயே காணோம்?’’ இவனின் தயக்கமும் மெலிந்ததுமான குரலும் அவனுக்குப் போய்ச் சேரவில்லை. அதற்குள் அவன் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான். அப்போதுதான் பார்த்தான், அவன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பதை.

   ஒருநாள் புழுக்கமான மதிய வெயிலில்  பஜார்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, `முன்னே செல்லும் சைக்கிளில் பின்னே அமர்ந்து செல்வது  மரிய புஷ்பமோ?’ என்பதுபோலத் தோன்றியது.

   ஒற்றைக்காலால் பெடலை விரைந்து உந்தினான். சூம்பிய இடதுகால் இடதுபுறத்தில் வெறுமனே தொங்கிக்கொண்டிருந்தது. மரிய புஷ்பம்தான், யாரோ ஒருவனின் முதுகின் பின்னால் துருவேறிய  அகன்ற கேரியர் இருக்கும் சைக்கிளில் பின்னால், அமர்ந்து இடதுபுறம் இருக்கும் கடைவீதியை வெறித்துப் பார்த்தபடி சுரத்தே இல்லாமல் போய்க்கொண்டிருந்தாள். கழுத்தில் மஞ்சள் சரடு மட்டும் தொங்கியது. மெலிந்து ஒளி குன்றிய முகம். யதார்த்தமாகப் பின்னால் திருப்பிப் பார்த்தவள், பழனியைப் பார்த்துவிட்டாள். இறுக்கமான முகத்தைக் கொஞ்சம் தளர்த்தி, மிக மிகச் சிறியதாகப் புன்முறுவல் செய்தாள். பிறகு, மீண்டும் இடதுபக்கக் கடைவீதியைப் பார்க்கத் தொடங்கி விட்டாள். கொஞ்ச நேரம் பெடலை மிதிப்பதை நிறுத்திவைத்தான் பழனி. சைக்கிள்,  வேகத்தைக் குறைந்துத் தளர்ந்தது.
   அதன் பிறகு, பல வருடங்கள் மரிய புஷ்பத்தின் நினைப்பே இல்லாமல் இருந்தான். அங்கொன்றும்  இங்கொன்றுமாக வீடுகள் முளைத்திருக்கும் ஊரின் வடக்குத் திசை வெளிப்புறப்பகுதியில் ஒருநாள் துஷ்டி வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் கணேசனைப் பார்த்தான்.

   ``தனியாகக் கடை வைத்திருக்கிறேன்’’  என்று சொல்லி, கடைக்கு அழைத்தான். கடையில் வேலைக்குப் பையன் ஒருவன் இருந்தான். அவனை அனுப்பி டீ வாங்கி வரச் சொன்னான். ரிப்பேருக்கு ஏழெட்டு சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .

   இப்போதுதான் வளர்ந்துகொண்டிருக்கும் பகுதி என்பதால், இங்கே வேறு கடைகள் இல்லை. கருவேலம் முள்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், தினமும் பத்து பஞ்சருக்குமேல் வரும். கணேசன் இப்போது முதலாளி  என்பதால், நல்ல வெளுத்த உடை அணிந்திருந்தான்.  `தனக்கு மட்டும் ஏன் இப்படித் தாட்டியமில்லை? தன்னிலும் வயதில் இளையவன். சொந்தமாகக் கடை வைத்து எப்படிப் பிழைக்கிறான்?’ ஏக்கமாக இருந்தது பழனிக்கு.

   கணேசன் ஒரு சைக்கிளைக் காட்டிக்  கேட்டான், ``இது யாரு சைக்கிள் தெரியுமா?’’ மறுத்து தலையாட்டினான்.  ``புஷ்பம் சைக்கிள்.’’ நெற்றியைச் சுருக்கி யார் என்பதுபோல பார்த்தான் பழனி. ``அதான்... ஒரு வேதக்கார பிள்ளை வருமே, எல்லா ஞாயித்துக்கிழமையும் காத்துப் பிடிக்க.’’ மரிய புஷ்பத்தைத்தான் சொல்கிறான் என்பது புரிந்துவிட்டது. ஆமாம்,  சந்தேகமில்லாமல் அதே சைக்கிள்தான். இந்த அகன்ற கேரியரில்தான் அன்று அவள் தன்னை இருத்தியிருந்தாள். அவனிலும் மூத்த பெண்ணை  ‘அக்கா’ என அழைக்காமல் பெயர் சொல்லி அழைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. என்றாலும், மரியத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தான்.

   பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இருக்கப்  பிடிக்காமல், சாக்கு சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான். வழி முழுவதும் யோசித்தபடியே வந்தான். காதல் திருமணம் செய்துகொண்டவளை வீடே ஒதுக்கியிருக்கிறது. அவள் திருமணம் செய்துகொண்டதும் ஒரு வேதக்கார பையனைத்தான் என்றாலும், மரியத்தின் அம்மா சாதி விசுவாசியாக இருந்தாள். அந்தப் பையனைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் `மீன்காரியின் மகன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறாள். குடும்பமே கைவிட்டிருக்கிறது. திருமணமாகி நான்கு ஆண்டுகள்தான் வாழ்ந்திருக்கிறாள். அவளின் கணவன் காலையில் இந்த சைக்கிளில் வைத்து  உப்பு வியாபாரம் செய்யும் உப்பு வியாபாரியாகவும், மற்ற நேரங்களில் சைக்கிளில் அரிசி மூட்டை களைச் சுமந்து செல்லும் லோடுமேனாகவும் இருந்திருக்கிறான்.

   ஒருமுறை லாரியில் லோடாக வந்திருந்த அரிசி மூட்டைகள் சரிந்ததில், கழுத்து ஒடிந்து மூன்று நாள்கள் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இறந்துவிட்டான். அப்போதும் மரியத்தின் வீட்டிலிருந்து யாரும் உதவிக்கோ, வந்து பார்க்கவோ இல்லை. இப்போது அவள் வீட்டின் சிறு பகுதியில் வைத்து மளிகைப் பொருள்களையும் காய்கறி களையும் விற்றுக் கொண்டி ருக்கிறாள். அதன் பிறகு, கணேசன் சொன்னதுதான் பழனியை அங்கிருந்து உடனே கிளம்பத் தூண்டியது.``இரவில் அரவமில்லாமல் நிறைய ஆண்கள் அவள் வீட்டுக்கு வந்து போவதுண்டு. சமயங்களில் மதிய நேரங்களில் கடையைச் சாத்தி விட்டுக்கூட இருந்திருக்கிறாள். நானே நாலைந்து தடவைப் போயிருக்கிறேன்.’’ ‘ஒரு பொம்பள பிள்ளையை வெச்சுக் கிட்டு வேற என்ன பண்ண முடியும்? அந்த சைக்கிளைப்போல இவளும் துருப்பிடித்து விட்டாளா?’ என நினைத்துச் சலித்துக் கொண்டான். தேவையில்லாமல் அவள்மேல் ஒரு வெறுப்பு படிந்துவிட்டது.

   அதன் பிறகு, இன்றுதான் இந்தக் கடைக்கு வருகிறாள். குனிந்து முன் டயரை அழுத்திப் பார்த்தான். காற்றுப் பிடிக்க அவசியமற்று நிறைந்திருந்தது. பின் டயரை அழுத்த முற்படும் போது மெதுவாகச் சொன்னாள், ``உன்கிட்ட பேசணும். டீக்கடையில நிக்குறேன் வா.’’ கிளம்பிவிட்டாள்.  பழனிக்கு மனசுக்குள் பரபரவென இருந்தது. உள்ளங்கை வியர்த்தது. விறுவிறுவென டீக்கடை இருக்கும் திசை நோக்கிக் கெந்தினான். ``என்னோடு வர்றியா... உன் கையில முன்னூறு ரூபா இருக்கா?’’ என்று மட்டும் கேட்டாள்.  கடைக்கு மீண்டும் திரும்பி வந்தவன், சம்பளத்தில் பிடித்துக்கொள்ளச் சொல்லி முதலாளியிடம் முன்னூறு ரூபாய் கேட்டு வாங்கிக்கொண்டு கைலியையும் சட்டையையும் அணிந்துகொண்டு, டீக்கடை இருக்கும் திசை நோக்கி மீண்டும் போனான். நெடுநாள் ஏக்கம் தீரவிருக்கும் நாளாக இந்த நாள் அமையும் என்பதை முப்பது நிமிடத்துக்கு முன்புவரைகூட  நினைத்துப்பார்க்கவில்லை. பதினைந்து வருடங்களாக மனசுக்குள் நினைத்துக் கொண்டிருந்த பெண். கணேசன் பலமுறை பொய் சொல்லியிருக்கிறான் என்றாலும், இந்த முறை சொன்னது உண்மைதான். வேகமாகச் சென்றான். மரியம்,தயாராக நின்று கொண்டிருந்தாள். ``பரவாயில்லை. நானே ஓட்டுறேன்’’ என்று அவளே சைக்கிளை  ஓட்டினாள். பழனி வேகமாகக் கெந்திக் கெந்தி ஓடித் தாவி அந்த அகல கேரியரில் அமர்ந்தான்.

   அவனுக்கு சங்கோஜமாக இருந்தது. ஒரு பெண் தன்னை அமர்த்தி ஓட்டிச்செல்வதை எண்ணி தன் கால்களை நொந்துகொண்டான். எல்லா கடைகளையும் மூடிக் கொண்டிருந்தார்கள். ஊரின் பெரிய ஸ்வீட் ஸ்டாலின் முன்னால், சைக்கிளை நிறுத்தினாள். உள்ளே போய் பூந்தியும் சேவும்  கால் கிலோ வாங்கிக்கொள்ளச் சொன்னாள். அவன் வீட்டிலிருக்கும் குழந்தைக்கு, மலிவுவிலையில் பிஸ்கட் பாக்கெட் ஒன்றையும் சேர்த்து வாங்கிக் கொண்டான். நேரம் ஆகிவிட்டது என்பதுபோல வேகமாக அழுத்தினாள்.  கமலம் பூக்கடையின் வாசலில் நின்றது சைக்கிள். ஏற்கெனவே சொல்லி வைத்திருப்பாள் போல, பெரிய மொந்தையான பூ  வாசமடிக்கும் காய்ந்த வாழைநாரால் முடைந்த பார்சல் ஒன்றை அளித்தார். பணத்தைக் கொடுத்துப் பெற்றுக் கொண்டாள்.  `இவ்வளவு பூவை வைத்து என்ன செய்வாள்?’ எனத் தனக்குள் கேட்டுக்கொண்டான்  பழனி. நகரின் இருள் படிந்திருந்த அரவமற்ற மேற்கு மூலைக்கு சைக்கிளை  விரைந்து அழுத்தினாள். பெட்ரோமாக்ஸ் வெளிச்சமிருக்கும் ஒரு பெட்டிக்கடையின் முன்னால் நின்றது. அங்கே ஊதுவத்தி, மெழுகுவத்தி, தீப்பெட்டி வாங்கிக் கொண்டாள் .

   கடைக்காரரிடம் ஏதோ பேசினாள். அவர் உள்ளே இருந்து ஒரு மண்வெட்டி, ஒரு வாளி இன்னும் சில பொருள்களை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி பழனியிடம் கொடுத்தாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை. சிறிது தூரத்தில் எதிரே முக்காடிட்ட சில பெண்கள் துண்டு துண்டாகத் தன் குடும்பத்துடன் நன்றாக உடுத்தி வந்துகொண்டி ருந்தார்கள். அவள் கிறிஸ்தவர்களைப் புதைக்கும் கல்லறை நோக்கி சைக்கிளைச் செலுத்தினாள். தூரத்தில் இருந்தே ஒவ்வொரு கல்லறை மேட்டிலும்  வெளிச்சமாக மெழுகுத் திரிகள் உருகிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. உள்ளே விறுவிறுவெனப் போனாள். பழனி அவளைத் தொடர்ந்தான். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. `நம்மைப் பயன்படுத்திக்கொண்டாள்’ என நினைத்தான். மணி பத்துக்குமேல் ஆகியிருக்கும். எல்லா கல்லறைகளின் மீதும் பூக்கள், பண்டங்கள் பரப்பப்பட்டிருந்தன. மெழுகுவத்திகள், ஊதுவத்திகள், புதிய சிலுவைகள் ஊன்றப்பட்டிருந்தன. அவள் வளைந்து வளைந்து போய் கொஞ்சம் மட்டும் உப்பலாக இருக்கும் ஒரு கல்லறையின் முன் நின்றாள். அதன்மீது பெயர் தெரியாத புல் போன்ற சிறு புதர்களும், சிறு முள்செடிகளும் வளர்ந்திருந்தன.  சிலுவை, பெயர்த்து எடுக்கப்பட்டு அருகில் கிடந்தது. கடைசியாக ஒரு பெரிய கல்லறையின் முன் நின்றிருந்த  நிறைய உறுப்பினர்கள்கொண்ட குடும்பம், அங்கிருந்து அகன்று சென்றது. எல்லா கல்லறைகளும் தனிமையில் விடப்பட்டிருந்தன. இவர்கள் இருவர் மட்டுமே எரியும் ஆயிரம் மெழுகுத் திரிகள் நடுவே, ஊதுவத்தியின் நறுமணப் புகையின் நடுவே, விதவிதமான லட்சம் பூக்களின் வாசத்தின் நடுவே... நின்றுகொண்டிருந்தார்கள். அந்த இடம் பிரமாண்டமான திருவிழா நடந்து முடிந்த இடம்போல் இருந்தது.

   மரியம், பழனியிடம் உரிமையாக ``மேலே இருக்கும் புல்லையும் செடியையும் புடுங்கிப்போட்டு, மண்ண மேடேத்து வந்திடுறேன்’’ என்று  சொல்லிவிட்டு வாளியை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். சிறிது நேரத்தில் வாளி நிரம்பத் தண்ணீருடன் வந்தாள். மேடேற்றி சிலுவையைக் கல்லறையின் தலையில் ஊன்றினார்கள். கொண்டுவந்திருந்த சுண்ணக்கல்லை நீரில் ஆத்தினாள். கொஞ்ச நேரம் கொதித்து அடங்கியது. ஈச்சமாரால் தொட்டுத் தொட்டுத் தடவிக்கொடுத்தாள். நேரம் நள்ளிரவை நெருங்கியிருக்கும். எல்லா கல்லறைகளின் மீதும் மெழுகுகள் அணைந்து அடங்கின. மரியம், குச்சியைக் கீச்சினாள். கல்லறையின் மீது வெண்மை யாக சுண்ணத்தின் ஈரம் தெரிந்தது. இரவுப் பூச்சிகளின் சத்தம் கேட்கத் தொங்கிவிட்டது. கல்லறையின் மடியில், மரியம் பண்டங்களைப் பரப்பிவைத்தாள். வாழைநார் மொந்தையைப் பிரித்து, நீளமான ரோஜாமாலையை நீட்டி சிலுவையின் தலைவழியே தொங்கவிட்டாள். மெழுகுவத்தியையும் ஊதுவத்தியையும் கொளுத்தினாள். ஏற்கெனவே கையில் வைத்திருந்த  அந்த நோட்டையும் பேனாவையும் மைக்கூட்டையும் கல்லறையின் வயிற்றில் வைத்தாள். முழங்காலிட்டு முக்காடிட்டாள். கண்களை மூடிக்கொண்டு இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள். வேறு வழியில்லாமல் அவனும் கண்களை மெள்ள அணைத்துக்கொண்டான்.

   மரியம் எழுந்து பூந்தியைக் கைகொள்ளுமளவு அள்ளிக்கொண்டாள். பழனியை நோக்கிக் கையை நீட்டினாள். அவன் வாங்கிக்கொள்ளும் முன் அவனை `ஆ காட்டு’ என்று சொல்லியபடியே கொஞ்சம் பூந்தியை வாயில் சிந்தினாள். `அவர் பேர் என்ன?’ என்று கேட்டான். `டேவிட்’ என்று சொன்னாள். ஏதாவது சொல்ல வேண்டுமென்பதற்காக ‘`ரொம்ப நல்ல பெயர்’’ என்று சொன்னான். ``ஏன்? நோட்டு, பேனால்லாம் வைக்கிறீங்க?’’. ‘`அவர் ரொம்ப நல்லா படிப்பாரு. ஒரே வகுப்பில்தான் படிச்சோம். அவங்க அப்பா   இறந்ததுக்கு அப்புறம் வசதி இல்லாம படிப்ப நிறுத்திட்டாங்க.  இவர் வேலைக்குப் போகணும்னு ஆகிடுச்சு. படிக்க ரொம்ப பிரயாசை கொண்ட மனுஷன். அதான், நான்தான் அவர விரும்பிக் கட்டிக் கிட்டேன். என் அம்மா பிரச்னை பண்ணமா இருந்திருந்தா, படிப்ப முடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணிருப்பேன்’’ என்றாள்.
    மழை வரும் போலிருந்தது. கல்லறைத்  தோட்டத்திலிருந்து கிளம்பினார்கள். மரியம் வீட்டிற்கு வந்து சேரும்போது ஒரு மணிக்கு மேலாகி இருந்தது. வெளியே நூல் கம்பிபோல மழைபெய்யத்  துவங்கியது. குறைவாய் மஞ்சள் வெளிச்சத்தை  வழங்கும் ஒரே ஒரு குண்டு பல்ப் எரிந்துகொண்டிருந்தது. பழனியை வீட்டிற்குள் அழைத்தாள்.

   வீட்டில் அநாவசியமாய்  எந்தச்  சாமான்களும் இல்லை.  ஆக்கப் பொங்க இரண்டு பாத்திரங்களும், மேற்படி ஓரிரு சில்வர் உருப்படிகளும்  மட்டும்தான். அங்கிருந்த அத்தனை பொருள்களின் மீதும் துயரம் படிந்திருப்பதை உணர முடிந்தது. விதிவிலக்காய் ஒரே ஒரு பொருள் அங்கிருந்தது. கலைநயத்தோடு வேலைப்பாடுகள் மிகுந்த மர மேசையொன்று.

   அதை பார்த்துக்கொண்டேயிருந்தவனிடம்   ``அது டேவிட்டோடது’’ என்றாள். அவள்  கல்லறைக்கு  எடுத்து வந்திருந்த நிறையப் பக்கங்கள் கொண்ட தடிமனான  நோட்டும், பேனாவும், காலி  மைக்கூடும்  அதன் மேலிருந்தது. மெல்ல நோட்டைத் திறந்து பார்த்தான். முழுக்க கறுப்பு மை எழுத்துகள். அகன்ற  கறுப்பு எறும்பு புற்றைப்போல முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கொஞ்சமும் இடைவெளி  இல்லாமல் அவ்வளவு எழுத்துகள்.  ``அது அவர் எனக்கு எழுதுன ஒரே ஒரு காதல் கடிதம். கிட்டத்தட்ட ஒரு வருஷத்தப் போல முன்னூத்தி அறுபது பக்கம். ஒன்பது  வருஷம் முந்தி, விடாம ஒரு  மூணு நாளு மழை பெய்ஞ்சதுல்ல... அந்த மூணு நாளா அவர் உக்கார்ந்து எழுதினது.’’ 

   பழனிக்கு நாவறட்சி போலிருந்தது.குடத்திற்குள்ளிருந்து தண்ணீர்  மொண்டு கொடுத்தாள். ``குழந்தை எங்கே?’’ என்று கேட்டான். வீட்டின் வலது மூலையைக் காட்டினாள். துணி குவியலுக்குள் ஒரு சிறு பொம்மைபோல உறங்கிக் கொண்டிருந்தது. ``சளி மருந்து கொடுத்திருந்தேன். அதான், தூங்குறா. நாலு வயசாகுது’’ என்றாள்.

    கொஞ்சம்  நகர்ந்து போய் சேலைத் தலைப்பை விரித்துப் படுத்துக்கொண்டாள். ``வா’’ என்று சொல்லி முந்தானையை விலக்கினாள். பழனிக்கு நடுக்கமாயிருந்தது. ‘`வா தம்பி’’ என்றாள். ‘`தம்பி காத்துப் பிடிக்கணும்’’ அதே பதினைந்து வயது குரல். குரலில் வாஞ்சையும், அமைதியும்  இன்னும் அப்படியே இருந்தது. ``உச்’’ என்றபடியே ‘`அய்யோ... பழக்கத்துல வந்துருச்சி.  நீ வா’’ என்று அருகில் அழைத்தாள்.
    ‘`நான் கிளம்புறேன்’’ என்றான். ``எனக்குத் தெரியும். என்கிட்ட உனக்கு என்ன வேணும்னு. பரவாயில்ல... வா. ஏதும் நினைக்காத. கணேசன் சொல்லிருப்பானே, நான் யாருன்னு. நீயும் என்ன அப்படித்தான நினைச்ச.’’ ``அதெல்லாம் இல்ல’’ பழனி தடுமாறினான். ``நீ மட்டும் என்ன ஊரே  அப்படித்தான நினைக்குது. பொம்பள தனியா இருந்தா, அந்த மாதிரி தொழில் பண்ணுவான்னு... துணியையும் மானத்தையும் அவுத்துட்டுதான் வாழணும்னு முடிவு பண்ணிட்டா, நான் ஏன் கடை வெச்சிப் பொழைக்கிறேன்’’ வியர்க்க வியர்க்க சரிவாய் நின்றுகொண்டிருந்தான்.

   தயக்கதோடு மெலிந்த குரலில் ``கிளம்புறேன்’’ என்று சொன்னான். அக்கறையான குரலில் ‘`தங்கிட்டுக் காலைல போ’’ என்றாள். குழந்தை மூத்திரத்தைப்போல அவ்வளவு சிறிய மழை தான். உடனே நின்றுவிட்டது.

   மரியம் அவளின் சைக்கிளை எடுத்துக் கொண்டுப்போகச்சொல்லிக் காலையில் கடையில் வந்து எடுத்துக் கொள்கிறேன்  என்றாள். மறுக்காமல் எடுத்துக்கொண்டான். வீட்டிற்கு வரும் வழியெல்லாம் யோசித்தான். நாளை சைக்கிள் எடுக்க வரும்போது கேட்டுவிட வேண்டும், ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு.

   அடுத்த நாள் முழுக்க மரியம் வரவே இல்லை. அதன் மறுநாள் அவன் மரியத்தைத் தேடி வீட்டிற்குப் போனான். வீட்டை நேற்றே காலி  செய்துவிட்டதாகச் சொன்னார்கள். பத்து நிமிடத்திற்குள் காலி செய்துவிடக்கூடிய வீடு தான் அது. கடைக்கு வந்தான். அந்த அகல கேரியர் சைக்கிளைப் பார்த்து ராசு அண்ணன் கேட்டார். ``யார் சைக்கிள் பழனி இது?’’ ``முன்னூறு ரூபாய்க்கு வாங்கினேன்’’ என்றான்.
   பிதுக்கு எண்ணெய் டப்பாவை எடுத்துவந்து எல்லா இணைப்புக்கும் எண்ணெய் பிதுக்கி விட்டான். கேட்காமலேயே  பெல்லை அடித்துப் பார்த்து ஒலியைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.
   http://www.vikatan.com
  • By நவீனன்
   வெண்டி மாப்பிள்ளை
   சிறுகதை:எஸ்.செந்தில்குமார்ஓவியங்கள்: செந்தில்
    
   வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. இத்தனைக்கும் வெண்டியை நேற்று இரவு ஞானம் சலூனில் பார்த்திருந்தார் செல்லையா. வெண்டியைப் பார்த்ததும், செல்லையாவுக்கு வெட்கம் வந்தது. நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டார். வெண்டி மாப்பிள்ளை, தன் பெயருக்கு ஏற்றதுபோல கிராப்பு வெட்டி, சவரம்செய்து, கிருதாவை மேல் தூக்கிவைத்து...பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தான். வெண்டி, சலூன் கடையை விட்டுக் கீழே இறங்கிப்போனது இன்னும் அவர் கண்களில் இருந்தது.  
   வெண்டி கடையைவிட்டுப் போனதும் 'செல்லம் அப்பச்சி... நீங்க உங்க மாப்ளயைப் பார்த்து வெட்கப்படுறதும், மாப்ள உங்களைப் பார்த்து வெட்கப்படுறதும்... போங்க அப்பச்சி. காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சு சாப்பாட்டைப் போடுங்க' எனச் சவரக்கத்தியை டயர் தோலில் தடவிக்கொடுத்துக்கொண்டே சொன்னார் ஞானம். அதே ஞானம்தான் விடிந்தும் விடியாததுமாக வீடு தேடிவந்து, கதவைத் தட்டி, வெண்டி பூச்சிமருந்தைக் குடித்துவிட்டான் எனத் தகவல் சொன்னது.
   'நிசந்தானா ஞானம்?' என அவரது காதுக்குப் பக்கத்தில் ஜாடையும் பேச்சுமாகக் கேட்டார் செல்லையா. ஞானத்துக்கு இரண்டு காதுகளும் கேட்காது. 'எதையோ கேட்டு, எதையோ சொல்லிக்கொண்டிருப்பான்’ என்ற பதற்றம் செல்லையாவுக்கு.
   'உங்ககிட்டே நான் ஏன் அப்பச்சி பொய் பேசப்போறேன்? பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறதா சொல்றாங்க. பயபுள்ள பூச்சிமருந்தைக் குடிச்சிருக்கான். வெண்டி அப்பச்சி சாகிறதுக்காகவா, நான் நேத்து கிராப்பு வெட்டி, சவரம்செஞ்சி அனுப்புனேன்?' எனப் புலம்பிக்கொண்டே கடையைத் திறக்கப் போனார் ஞானம். வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை செல்லையா. சட்டையைப் போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்தார்.
   வெண்டியைத் தூக்கி வளர்த்தவர் செல்லையா ஆசாரிதான். பார்ப்பதற்கு 'வெள்ளைவெளேர்’ என இருந்ததால், செல்லையாதான் அவனுக்கு 'வெண்டி’ எனப் பட்டப்பெயர் வைத்தார். போனூர் ஆசாரிமார்களிடம் வெண்டி என்ற பட்டப்பெயர் பிரபல்யம். வெண்டிக்கு   'சண்முகம்’ எனப் பெயர் வைத்திருந்தார் அவனது அப்பா. செல்லையாவின் தங்கை சுப்பம்மா, தன் மகன் சண்முகத்தைத் தூக்கிக்கொண்டு பெரியரேவூபட்டியில் இருந்து ஒருநாள் ராத்திரி போனூருக்கு வந்தாள். அப்போது சண்முகம் இரண்டு வயது முடிந்து, பால்குடி மறக்காமல் இருந்தான்.

   'அவரு மலையாளத்துக்காரியைச் சேர்த்துக்கிட்டு, மூணாறுலயே இருக்காரு. ஊருக்கு வர மாட்டேங்கிறாரு. செலவுக்கு வாராவாரம் அனுப்புற பணத்தைக்கூட இப்போ அனுப்புறது இல்லைண்ணே. ரெண்டு தடவை கடுதாசி எழுதிக் குடுத்துவிட்டேன். பதிலே வரலை. நேரா ஒரு தடவை போயிட்டு வாங்க. கூட நானும் வர்றேன்' என செல்லையாவின் முன்பாக அழுதபடி நின்றாள் சுப்பம்மா.
   முதலில் தான் மட்டும் மூணாறுக்குப் போய் விசாரித்துவிட்டு வருவதாக, காலைப் பேருந்தில் செல்லையா புறப்பட்டுச் சென்றார். சுப்பம்மாவின் புருஷன் மலையைவிட்டும் மலையாளத்துக்காரியை விட்டும் வருவதாக இல்லை. அந்தப் பெண் வயிற்றைத் தள்ளிக்கொண்டு, கண்ணாடித் தம்ளரில்   டீ கொண்டுவந்து தந்தாள்.
   'மாப்ள... சுப்பம்மா யாருக்கு என்ன பாவம் செஞ்சா? கைப்புள்ளயை வெச்சுக்கிட்டு அவ என்னா செய்வா? மலையைவிட்டுக் கீழே வாங்க. ஊர்ல போய்ப் பிழைச்சுக்கிடலாம். இந்த ஊர் உங்களுக்கு வேணாம்' என்றார் செல்லையா.
   'நான் ஊருக்கு வந்தா இந்தப் புள்ளயோட அண்ணன் - தம்பிங்க என்னை வெட்டிப் போட்டுருவானுங்க. நான் சாகணும்னு நீங்க நினைச்சா வர்றேன்' என்றார்.
   அவருக்கு முன்பாக உமியோட்டு சட்டி புகைந்துகொண்டிருந்தது. ஓலைப் பெட்டியில் இருந்த கப்பங்கிழங்கை எடுத்து ஒரு வாய் சாப்பிட்டார். வெந்திருந்த கப்பங்கிழங்கு, பூவாக விரிந்துகிடந்தது. அதில் இருந்து வந்த அவித்த வாசத்தால், செல்லையாவுக்கு நாவில் எச்சில் ஊறியது. உள் அறையில் நின்றிருந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் மாறி மாறிப் பார்த்தார். டீ தம்ளரைக் காட்டி அந்தப் பெண், 'அண்ணே... டீ சூடு ஆறிடப்போவுது குடிங்க' என்றாள். அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும், செல்லையாவுக்கு ஆச்சர்யம். மாப்பிள்ளையைப் பார்த்தார்.
   'நம்ம அணைக்கரைப்பட்டிக்காரங்க பாவா. தோட்டத்து வேலைக்கு வந்து இங்கேயே குடியாளு ஆகிட்டாங்க. வெட்டருவாளும் கத்தியும் வெச்சுட்டுத்தான் சுத்திட்டு இருக்காங்க. அங்க வந்து சாகிறதுக்கு இங்கேயே இவகூட இருந்துட்டுப் போறேன்' என வெறுத்துப்போய் பேசினார். செல்லையாவுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. மலை இறங்கி வந்துவிட்டார். மூணாறில் அப்போது நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. பேருந்து மலைப்பாதையில் நகர்ந்து வந்தபோது, சற்றுத் தொலைவில் அந்தப் பூக்களைப் பார்த்தார். செல்லையா அப்போதுதான் குறிஞ்சிப் பூக்களைப் பார்க்கிறார். வளைந்த பாதையில் பேருந்து இறங்கிக்கொண்டிருந்தது.
   ஊரின் வாசமோ, இல்லை பூத்திருந்த பூவின் வாசமோ, பேருந்து முழுக்க கம்மென இருந்தது. ஊர் வந்து சேர்கிறவரை அந்தப் பூக்களோடு, மலையாளத்துப் பெண்ணின் முகமும் மனதில் இருந்து மறையாமல் இருந்தது. போனூரில் விளக்குகள் எரியத் தொடங்கியதை, குனிந்து ஜன்னலின் வழியாகப் பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் சுப்பம்மாவுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அழுதார். அவர் அழுவதைப் பார்த்து வீட்டுப் பெண்களும் அழுதனர். தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த வெண்டியைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டார்.
   வீட்டுக்கு வெண்டி வந்த யோகத்தில் செல்லையா ஆசாரிக்கு பட்டறையில் வேலைகள் தொடர்ந்து இருந்தன. செல்லையாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதில் இருந்து அவருக்கு வெண்டியின் மேல் பிரியம் ஜாஸ்தி ஆனது. தன் மகள் ஜமுனாவை அவனுக்குக் கல்யாணம் செய்து தரவேண்டும் என நினைத்தார்.
   வெண்டி பூச்சிமருந்து குடித்ததை செல்லையாவால் நம்பவே முடியவில்லை. 'வேறு யாரோ மருந்தைக் குடித்துவிட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதை, செவிட்டுப்பயல் ஞானம் தவறுதலாக வெண்டி எனச் சொல்கிறான்’ என்று தவிதாயப்பட்டார். இருந்தபோதிலும் சேதியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள சுப்பம்மா வீட்டுக்கு நடந்தார். செல்லையாவால் தெருவில் நடக்க முடியவில்லை. கிறுகிறுப்பும் படபடப்புமாக வியர்த்துக்கொட்டத் தொடங்கியது. கழுதை மார்க்கெட்டைக் கடந்து அன்னகாமு காபி கடைப்பக்கமாக வந்தார். பட்டறைக்காரர்கள் யாரும் இல்லை. இந்நேரத்துக்கு எல்லாம் இரண்டு மூன்று பேராவது நின்று, காபி குடித்துக்கொண்டிருப்பார்கள். இன்று பார்த்து கடையில் யாரும் இல்லை.
   நேற்று ராத்திரிகூட வெண்டிப்பயலைப் பார்த்தேனே. என்னைப் பார்த்து புளிச்சச் சிரிப்பு சிரித்து, தலையைக் குனிந்தபடி ஞானம் கடையைவிட்டு இறங்கிப்போனானே. ராத்திரியோட ராத்திரியாக இப்படியா ஆகும்?   விஷயம் மட்டும் தப்பிதமாகப் போகட்டும், இந்த ஞானம் மங்கிலியை செவிட்டிலே அறையணும் என முனகிக்கொண்டார். செல்லையாவுக்கு மனம் அலைந்தது. தாங்க முடியவில்லை. தானாகவே கண்ணீர் வடியத் தொடங்கியது.
   சண்முகம் போன வருஷம் காமாட்சியம்மன் கோயில் விசேஷத்துக்கு, பால் குடம் எடுத்தான். 10 நாட்கள் விரதம். கையில் காப்பு கட்டி       மஞ்சள் வேட்டி கட்டிக்கொண்டு தெருவுக்குள் வரும்போது, செல்லையாவுக்கு உடம்பு புல்லரித்துவிட்டது. செல்லையா வீட்டுக்குள்ளே பட்டறைபோட்டு வேலைசெய்கிறார். 'தண்டட்டி ஸ்பெஷலிஸ்ட்’. சண்முகம் தனக்கு வரும் வேலைகளுக்கு ஏதாவது தோது கேட்கவும் சாமான்கள் எடுக்கவும் வீட்டுக்கு வருவான். அவன் வருவது ஜமுனாவுக்கு உடனே தெரிந்துவிடும். மோரைக் கலக்கி உப்பு போட்டு ஆற்றிக்கொண்டு, மேஜைப் பெட்டியில் வைத்துவிட்டுப் போவாள். வெறுமனே வைத்துவிட்டுப் போகாமல், 'டொக்’ என்ற சத்தத்துடன் தம்ளரை வைப்பாள். அது அவனுக்கு, அவள் காட்டும் அடையாளம். அப்படி வைக்கும்போது, தம்ளரில் இருந்து நீர்மோர் அலம்பிச் சிந்த வேண்டுமே... ஒரு பொட்டுக்கூடச் சிந்தாது. தம்ளர் சத்தம் அவர்களுக்கு இடையே ஒரு பரிபாஷை. இதெல்லாம் செல்லையாவுக்குத் தெரியும். வேலையில் மும்முரமாக இருப்பவர்போல பாவலா காட்டிக்கொண்டு எதையாவது தேடுவார். ஜமுனாவை நினைத்தபோது அவருக்கு உயிர் போய்த் திரும்பியது. அவளுக்கு என்ன பதில் சொல்வது?
   சுப்பம்மா வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்ததும் அவர் வீட்டைப் பார்த்தார். வீடு பூட்டியிருந்தது. சுப்பம்மா காலையில் எட்டு மணிக்கு எல்லாம் ஏலக்காய் கடை வேலைக்குப் போய்விடுவாள். மதியம் ஒரு மணிக்குப் பிறகுதான் சாப்பாட்டுக்கு வருவாள். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்டார் செல்லையா. அவர்களுக்கு எந்த விஷயமும் தெரியவில்லை.

   'வெண்டி ரெண்டு மூணு நாளா வீட்டுக்கு வரலை நைனா. சுப்பம்மா மட்டும்தான் தனியா இருக்கு. ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருந்துச்சு' எனப் புகார் சொன்னார்கள். சுப்பம்மா தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே என, பட்டறை வீதிக்கு வேகுவேகுவென நடந்தார் செல்லையா.  
   பட்டறை வீதியில் கடைகள் திறந்திருக்க வில்லை. யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தார். தெரு முக்கில் இருந்து நாய் ஒன்று ஓடி வந்தது. யாரிடம் கேட்பது? கண்களில் யாரும் தட்டுப்படாதது செல்லையாவுக்கு  நெஞ்சு நின்றுவிடும்போல் இருந்தது. வண்ணாத்தியும் அவளது கழுதையும் வழிமறித்து பாதையில் நின்றிருந்தனர்.
   ''வெண்டி விஷத்தைக் குடிச்சிட்டு ஆஸ்பத்திரியில இருக்கான்’னு சொல்றாங்க. நிசம்தானா?' என அவளிடம் கேட்டார்.
   வண்ணாத்தி பொதிமூட்டையை கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு, 'வெண்டியை போலீஸ்ல பிடிச்சிட்டுப் போயிட்டதாப் பேசிக்கிட்டாங்க நைனா' எனப் புதிதாக ஒன்றைச் சொன்னாள்.
   'ஆளாளுக்கு ஒண்ணு சொல்லுதே. யார் பேச்சை நம்புறது?' என நினைத்து செல்லையா தலையில் அடித்துக்கொண்டு சண்முகத்தின் பட்டறைக்கு முன்பு போய் நின்றார். அவனது பட்டறையின் கதவு இரண்டு பூட்டுகள் போட்டுப் பூட்டியிருந்தது. எதிரே இருந்த செட்டியார் வீட்டை ஒரு நோட்டம்விட்டார். வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. வீட்டுக்குள் யாரும் இல்லை.
   பட்டறை வீதியில் இருந்து பாதி தூரம் வரை வந்துவிட்டார். சீனி ஆசாரி பட்டறையைப் பார்த்தார். ராத்திரி வேலைசெய்துவிட்டுக் கதவை 'பப்பரப்பா’ எனத் திறந்துபோட்டுத் தூங்குகிறவன் சீனி. அவனும் பெரிய பூட்டுப் போட்டு கதவைப் பூட்டியிருந்தான். தெரு முக்கு வரை போய்விட்டு வந்தார் செல்லையா. 'பெரியாஸ்பத்திரிக்குப் போவதா... இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவதா?’- குழப்பத்தில் நடுரோட்டில் நின்றார். கிழக்கு பக்கம் போலீஸ் ஸ்டேஷன்; மேற்கு பக்கம் பெரியாஸ்பத்திரி.
   இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜமுனாவின் ஜாதகத்தையும் சண்முகத்தின் ஜாதகத்தையும் பொருத்தம் பார்க்க போ.தர்மத்துப்பட்டி ஜோசியரிடம் காட்டினார். அவர் நல்லவிதமாகத்தான் சொன்னார். ஏதாவது கோட்டம் இருந்தால் உடனே சொல்லிவிட்டு, பரிகாரம் பண்ண அழைத்துப் போய்விடுவார்.
   வெண்டிக்கு ஏழு வயதில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சோழி உருட்டி சொன்னது, இப்போது அவருக்கு ஞாபகம் வந்தது. ஏழு வயது கண்டத்தைத் தாண்டிவிட்டால், அப்புறம் 18 வயதில் ஒரு கண்டம். அதையும் தாண்டிவிட்டால் 98 வயசு வரை ஒன்றும் இல்லை எனச் சொல்லியிருந்தார். 'பரிகாரம் செய்துவிட்டால், அந்தக் கண்டமும்  காத்திலே சாம்பலா கரைஞ்சுப்போயிடும்’ என,  சுருளித்தீர்த்தத்துக்கு அழைத்துப்போனார். இப்போது வெண்டிக்கு 19 வயது ஆரம்பம்.              18 வயது முடிந்ததற்காக சங்கராபுரம் கருப்பசாமிக்கு போன வருஷம் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்தார்கள். அதோடு கஷ்டகாலம் தீர்ந்துவிட்டது என நினைத்தால், துரத்திவருகிறதே என செல்லையா நினைத்துக்கொண்டார்.
   ஏழு வயது கண்டம் இது மாதிரிதான். பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது கீழே தவறி விழுந்துவிட்டான் வெண்டி. விழுந்தவனுக்கு பேச்சுமூச்சு இல்லை. பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். ரெண்டு நாட்கள் கழித்து கண் விழித்துப் பார்த்த பிறகுதான் செல்லையாவுக்கு மூச்சு வந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டு மூணாறில் இருந்து வெண்டியின் அப்பாவும் மலையாளத்துக்காரியும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளையும் வந்துவிட்டார்கள். மூன்று நாட்கள் வீட்டில் இருந்து விருந்து சாப்பிட்டுவிட்டு, ராத்திரி ஆட்டமும் பகல் ஆட்டமுமாக இரண்டு சினிமா படங்களைப் பார்த்துவிட்டு மலைக்குப் புறப்பட்டார்கள். போகும்போது சுப்பம்மாவிடம், 'நீ வேணா சண்முகத்தை அனுப்பி வை. என்கூட வேலை பார்த்துக்கிட்டு இருக்கட்டும்' எனச் சொன்னான் அவள் கணவன். அவள் விடுவதாக இல்லை.

   'உன் பட்டறைக்கு ஆள் வேணும்னா, போனூர் மந்தையிலே வேற ஆளைக் கூட்டிட்டுப் போ. உனக்கும் உன் அவளுக்கும் சேவகம் செய்யத்தான் நான் புள்ளபெத்து வெச்சிருக்கேனா?' என ஆங்காரமாகக் கேட்டாள்.
   சுப்பம்மாவின் ஆங்காரத்தில்தான் வெண்டி வேகவேகமாக வளர்ந்தான். வெண்டியைப்போல ஜமுனாவும் வளர்ந்தாள். ஜமுனா அந்தத் தெருவிலேயே உயரமான பெண். அவள் அம்மா அங்கம்மாவைப்போல நீளமான மூக்கு; நீளநீள விரல்கள். இரட்டை ஜடை போட்டுத் தலையில் பூ வைத்து நடந்துபோனால், அவ்வளவு அழகு.
   மதுரைக்குப் போய்த் திரும்பும்போது இரண்டு பொட்டலங்கள் அல்வாவும், இரண்டு டப்பா தாழம்பூ குங்குமமும் வாங்கிவருவான் வெண்டி. செல்லையாவுக்குக் கடவாய்பற்களும், முன்பற்களும் விழுந்து பாதி பொக்கையாகிவிட்டது. மனுஷனுக்குப் பல் போன பிறகும், ருசி போகவில்லை. அல்வாவை அப்படியே 'குளுக், குளுக்’ என முழுங்குவார். முழுங்கிவிட்டு கண்களை மூடி சப்புக்கொட்டி, 'வெண்டி மாப்ள நீயும் என் மகளும் நூறு வருஷம் இருந்து, பிள்ளைகளோட சந்தோஷமா வாழணும்' என வாழ்த்துவார்.
   வெண்டி சிரித்துக்கொண்டு ஒரு டப்பாவைக் கொடுத்துவிட்டு, 'தாழம்பூ குங்குமம்...' என ஜமுனாவிடம் நக்கலாகச் சொல்வான். அவளும் 'தெரியும்... தெரியும்...' எனப் பொய்யாகக் கோபம் காட்டுவாள். இன்னொரு டப்பா குங்குமத்தையும், இன்னொரு பொட்டலத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு பட்டறை பக்கமாக நடந்துபோவான். அவன் தெருவின் முக்கு திரும்புகிற வரை, ஜமுனா வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பாள்.
   'வெண்டி மாப்ள வாங்கிவந்த குங்குமம்கூட இன்னமும் தீரலியே. மாடக்குழியில் டப்பா நிறைஞ்சு இருக்கே. அதுக்குள்ள பாவிப்பய இப்படிப் பண்ணிட்டானே. விஷத்தைக் குடிச்சு சாவுற அளவுக்கு என்ன வந்துச்சு? பூச்சிமருந்தைக் குடிச்சுட்டான்கிறாங்க... போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டுப் போயிருக்கிறாங்கன்னும் சொல்றாங்க. எது நிசம்? இதெல்லாம் சுப்பம்மாவுக்குத் தெரியுமா? அவ ஆஸ்பத்திரியிலதான் இருக்காளா... இல்லை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காளா? ஆஸ்பத்திரியில வேற யார் யார் இருப்பாங்க, இல்லை போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங்களா? ஒண்ணும் தெரியலியே’ - மனசுக்குள் புலம்பியபடியே கண்களைத் துடைத்துக்கொண்டு நடந்தார் செல்லையா.    
   வெண்டிமாப்பிள்ளையைப் பார்க்கும்போது செல்லையாவுக்கு வெட்கம் வந்துவிடும். பெண்பிள்ளையைப்போல வெட்கப்பட்டு ஒதுங்கி, முகம் திருப்பிக்கொள்வார். தான் தூக்கி வளர்த்த பிள்ளை என்றபோதிலும் அவருக்கு வெட்கம் வந்துவிடும். ஜமுனாவைப் பார்க்கும்போது அவரது மனதில் வெண்டியோடு அவள் நிற்பது தெரியும். ஜோடிப்பொருத்தத்தை மனதிலேயே கண்டு பூரித்துப்போய்விடுவார். தன் மகளுக்கும் வெண்டிமாப்பிள்ளைக்கும் கல்யாணம் நடந்துவிட்டால், நிம்மதியாக மயானம் போய்சேர்ந்துவிடலாம் என சவரம் செய்யும்போது ஞானத்திடம் புலம்புவார். ஞானமும் அவரைத் தேற்றி, 'பேரன் - பேத்திகளைப் பார்த்துட்டுத்தான் அப்பச்சி நீங்க போவீங்க. விஜயா லாட்ஜ்ல உளுந்தவடையும் காபியும் உங்க பேரனுக்கும் பேத்திக்கு வாங்கித் தருவீங்க' எனச் சமாதானப்படுத்துவார். இப்போது யார் தன்னைச் சமாதானப்படுத்துவது என ஏங்கினார். அந்த ஏக்கத்தோடு நடந்தார். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரிப்பது என முடிவுசெய்தார்.
   போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் நின்றபோது அவருக்கு வியர்த்துக்கொட்டியது. வியர்வையில் முதுகும் வயிறும் சட்டையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. மூச்சு வாங்கியவர், சற்று நேரம் மரத்தின் கீழ் நின்றுகொண்டார். ஸ்டேஷனுக்குள் இருட்டாக இருந்தது. யார் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அசோகமரத்தில் இருந்த இலைகள் உதிர்ந்து தரையில் கிடந்தன. துருப்பிடித்த சைக்கிள்கள் கீழே விழப்போவதுபோல வரிசையாக நின்றிருந்தன. ஒரு மிருகத்தின் எலும்புக்கூடுபோல புல்லட் வண்டி நின்றிருந்தது. செல்லையா தனது முகத்தைத் துடைத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். இன்னமும் கூடுதலாக வியர்த்தது. அவர் அறியாமல் வேட்டி முழங்காலில் இருந்து பாதத்துக்கு இறங்கி, தரையைத் தொட்டது. உள்ளே நடக்க நடக்க ஓர் அறை, அந்த அறையில் இருந்து மற்றோர் அறை என ஏதோ குகைபோல நீண்டுகொண்டே சென்றது. அறையில் யாரும் இல்லை. இரண்டு அறைகளைத் தாண்டியதும் வெளிச்சம் தெரிந்தது. சற்றுத் தள்ளியிருந்த வராண்டாவில் ஜனங்கள் நின்றிருந்தனர்.
   செல்லையா வராண்டாவை நோக்கி நடந்தார். நின்றிருந்த ஜனங்கள் அனைவரும் பட்டறைவீதிக்காரர்கள். செல்லையாவைப் பார்த்ததும் முகம் திருப்பிக்கொண்டனர்.
   கூட்டத்தில் இருந்தவனிடம், 'வெண்டி எங்கப்பா?' எனக் கேட்டார் செல்லையா.
   'உள்ளே விசாரிச்சிட்டு இருக்காங்க' எனச் சொன்னான். எதுக்கு விசாரிக்கிறார்கள். ஏன் இவ்வளவு ஜனங்கள் கும்பலாக கூடியிருக்கிறார்கள் என அவருக்குத் தெரியவில்லை. வீட்டோடு பட்டறைவைத்து வேலை செய்தால் பஜாரில் நடக்கிற விஷயம் எதுவும் காதுகளுக்கு வந்து சேராது. போன மாதம் நடந்த விஷயம் இப்போது காதுக்கு வருகிறது. சுப்பம்மாவாவது தன்னிடம் சொல்லியிருக்கலாம் என நினைத்தார்.
   அங்கு நின்றிருந்தவர்கள் யாரும் எதுவும் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. அனைவரும் பயந்துபோயிருந்தனர். கூட்டத்தில் இருந்து மூக்கப்பன் விலகி வந்தான். அவனைப் பார்த்ததும் செல்லையாவுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அவனிடம் விசாரிக்கலாம் என மறித்தார்.
   'மூக்கப்பா... என்னடா பிரச்னை... என்ன விஷயம்?' எனக் கேட்டார்.
   அவன் பதறியவனாக 'வாயைப் பொத்து’ என்பதுபோல ஜாடை காட்டிவிட்டு, அவரது கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான். நடந்தவன் ஓர் இருட்டு அறைக்குள் நின்றான்.
   'வெண்டியைத் திருட்டு கேஸ்ல பிடிச்சுட்டு வந்துட்டாங்க. வெண்டி எதுவும் வாங்கலை. நாங்க சங்கத்தில் இருந்து பேசி வெளியே கொண்டுவரணும்னு வந்து நிக்கிறோம். நீங்க சங்கத்திலே இருக்கிற ஆளுதானே. கூட்டத்துக்கு எதுவும் வர்றது இல்லையா?' எனக் கேட்டான். 'சங்கம்’, 'கூட்டம்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவர் உடம்பு நடுங்கியது. வெண்டிமாப்பிள்ளையை ஒரு தடவை பார்க்க வேண்டும் என தவிப்பாக இருந்தது.
   'நான் ஒரு தடவை வெண்டியைப் பார்த்துக்கிறேன். என்னை அவன் இருக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போப்பா' எனக் கண்கள் கலங்கினார். மூக்கப்பன் அவரை இழுத்துக்கொண்டு பின்பக்கமாக நடந்தான்.
   மூத்திரவாடையும் குப்பையுமாகக் கிடந்த மண்ரோட்டில் அவர்கள் நடந்தார்கள். பழைய காகிதங்களின் மேல் மூக்கப்பன் வேகுவேகுவென நடந்தான். அவனது வேகத்துக்கு செல்லையாவால் நடக்க முடியவில்லை. மூக்கப்பன் நின்ற இடத்தில் ஒரு பெரிய கருங்கல் ஒன்று கிடந்தது. அதன் மேல் ஏறி எட்டிப் பார்த்துவிட்டு, செல்லையாவை ஜாடையில் அழைத்தான். அவர் தனது வயதையும் மீறி தன்னை மறந்தவராக ஓடிவந்தார். தனது மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆவல்.  
   செல்லையாவும் அந்தக் கருங்கல்லின் மீது ஏறி எட்டிப் பார்த்தார். எக்கி எக்கி பெருவிரலை ஊன்றி எட்டிப் பார்த்தார். ஒரே இருட்டு. வேறு எதுவும் தெரியவில்லை.
   'மூக்கப்பா... ஒண்ணும் தெரியலையேடா' என்றார்.
   'சத்தம் போடாதீங்க. மண்பானை ஒண்ணு தெரியுதா?'
   'ஆமாம்.'
   'அதுக்குப் பக்கத்திலே புத்தகம் அடுக்கி வெச்சிருக்கிற பீரோ தெரியுதா?'
   'ஆமாம்.'
   'அந்தப் புத்தக இடுக்கு வழியா பாருங்க. வெண்டி உட்கார்ந்திருக்கிறது தெரியும்.'
   மூக்கப்பன் சொன்னதுபோல எட்டிப்பார்த்தார். ஓர் ஆள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. நன்றாகப் பார்த்தார். அது சண்முகம் இல்லை. வேறு யாரோ. கால் வலி தாங்க முடியாமல், கல்லைவிட்டு கீழே இறங்கி, மூக்கப்பனிடம் வந்தார்.
   'வெண்டிப்பயல் இல்லையேப்பா...'
   'வெண்டிதான் கையைக் கட்டி தரையில் உட்கார்ந்திருக்கான். நீங்க நல்லா பார்க்கலையா?'
   'ஒரு ஆள் தரையிலே உட்கார்ந்திருக்கிறது தெரிஞ்சது. ஆனா, சண்முகம் மாதிரி இல்லையே.'
   'நீங்க எந்த வெண்டியைக் கேட்கிறீங்க நைனா?' என மூக்கப்பன் குழப்பத்துடன் கேட்டான்.
   'என் தங்கச்சி மகன் சண்முகத்தைக் கேட்கிறேன் மூக்கப்பா...'
   'இவன் காமு மகன் துரைராஜ். அவனையும் பட்டறைவீதியிலே வெண்டினுதான் கூப்பிடுவோம்.'
   செல்லையா அந்தக் கருங்கல்லின் மீது உட்கார்ந்தார். தலையில் கை வைத்துக்கொண்டு மூக்கப்பனின் முகத்தைப் பார்த்தார். அவருக்கு வண்ணாத்தியின் முகமும், அவள் ஓட்டிச் சென்ற கழுதையின் முகமும் ஞாபகத்துக்கு வந்தது.
   'சண்முகத்தைப் பார்த்தியா மூக்கப்பா?' என அவனிடம் கேட்டார்.
   'சண்முகத்தைப் பார்த்து ரெண்டு வாரம் ஆகுது. தியேட்டர்ல ரெண்டு ஐஸ் வாங்கிட்டுப் போனதைப் பார்த்தேன். எப்போனு ஞாபகத்திலே இல்லை. பட்டறைவீதியிலகூட முன்ன மாதிரி அவனைப் பார்க்க முடியலை. எப்போ வர்றான். எப்போ போறான்னு சொல்ல முடியலை. ஒண்ணு சொல்றேன். உங்க மனசிலேயே வெச்சுக்கங்க. அவன் பட்டறைக்கு எதிர்ல இருக்கிற செட்டியார் வீட்டுப் பொண்ணுக்கும் அவனுக்கும் பழக்கம்னு பேசிக்கிறாங்க' என்றவன், 'என்ன நைனா... வேற ஏதாவது விஷயமா?' எனக் கேட்டான்.
   'வெண்டி, பூச்சிமருந்தைக் குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே இருக்கிறதா ஞானம் சொன்னான். பட்டறைவீதிக்கு வந்தா,  போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துப்போயிட்டதா வண்ணாத்தி சொன்னா. நான் எங்கே போய்த் தேடுவேன், யார்கிட்டே போய் கேட்பேன்? ஒத்தை பொம்பளைப் புள்ளையை அவனை நம்பி வளர்த்துவெச்சுருக்கேன். படுபாவி கண்கலங்கவைக்கிறான்' என அழுதார். அவருக்கு வாயில் இருந்து வார்த்தைகள் தெளிவாக வரவில்லை. பதற்றத்தில் அவரது விரல்கள் நடுங்கின.
   'காமு மகனுக்கும் வெண்டினுதான் பேர் நைனா. பஜார்ல அஞ்சாறு பயல்களுக்கு வெண்டினு பட்டப் பேரு. சமயத்திலே யாருக்கு என்னன்னு தெரியாமப்போயிருது. நீங்க கவலைப்படாமப் போங்க. அவன் இங்கனக்குள்ளதான் சுத்திக்கிட்டு இருப்பான்' என்றான்.
   'மூக்கப்பா அவன் பட்டறைக்கு எதிர்த்த வீட்டுப்புள்ளகூடச் சுத்திக்கிட்டு இருக்கிறது எனக்கும் தெரியும். ஒரு தடவை கண்டிச்சுவெச்சேன். திரும்பவும் பேச ஆரம்பிச்சுட்டானா. அவனைத் திருத்திக் கொண்டுவரணும்.'  
   மூக்கப்பன் அவரைப் பார்த்து, 'அய்யோ அதை ஏன் கேட்கிறீங்க. தினமும் பாட்டும் கூத்துமா தெருவே நாறிப்போகுதாம். அந்தப் புள்ள அவனுக்குத் தோசை சுட்டுத் தருதாம். கோழிக்குழம்பு வெச்சுத் தருதாம். நான் எதைப் பார்த்தேன். நான் இருக்கிறது இந்தக் கடைசி; அவன் பட்டறை அந்தக் கடைசி. எல்லாம் பேச்சுவாக்குலயே வந்துட்டு இருக்கு. கேள்விப்பட்டதைச் சொல்றேன்' என்றான்.
   செல்லையா எழுந்து நடக்கத் தொடங்கினார். தான் எவ்வளவு சொல்லியும் தன் பேச்சைக் கேட்காமல் இருக்கிறான் என்ற வருத்தம் வெண்டியின் மேல் உண்டானது அவருக்கு. 18 வயது முடிந்துவிட்டது. எந்தக் கண்டமும் இல்லை. இனிமேற்பட்டு நிம்மதியாக இருக்கலாம் என இருந்தபோதுதான் அவனுக்கும் எதிர்த்த வீட்டுப்பிள்ளைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
   சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்குப் போய்விட்டு வந்த மறுநாள், பெரிய கொறடு வாங்க வேண்டும் என வெண்டியின்  பட்டறைக்குப் போயிருந்தார் செல்லையா. பட்டறை திறந்திருந்தது. அவனைக் காணவில்லை. மதிய சாப்பாட்டு வேளை. பட்டறை வீதியில் யாரும் இல்லை. ஆலமரத்தின் இலைகள்கூட அசையாமல் இருந்தன. வெண்டிமாப்பிள்ளை எங்கேயாவது  சென்றிருப்பான் எனப் பட்டறை திண்ணையில் அமர்ந்தார். காத்திருந்தவருக்குப் பொறுமை இல்லை. வேலை அவசரம். பட்டறைக்குள் சென்று பெரியகொறடை எடுத்துக்கொண்டு வந்தார்.
   பட்டறைக்கு எதிர்த்த வீட்டு செட்டியாரிடம் சொல்லிவிட்டுப் போய்விடலாம் எனத் திறந்திருந்த வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் யாரும் இல்லை. திரும்பிப் போவதற்கும் மனம் இல்லை. பட்டறைக்காரனுக்குத் தெரியாமல் சாமான் எடுப்பது தவறு. அப்படியே, அவசரத்துக்கு எடுத்தாலும் யாரிடமாவது சொல்லிவிட்டு வர வேண்டும். எட்டிப் பார்த்தார் முன் அறையில் ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. உள் அறையில் சிணுங்கலும் முனகலுமாகச் சத்தம் கேட்டது. உள்ளே சென்றார். படுக்கையில் செட்டியாரின் மகளும் வெண்டியும் இருந்தார்கள். அவரது காலில் செருப்பு இல்லை. இருந்திருந்தால் அப்போதே கழற்றி அடித்திருப்பார். தன் கை வலிக்க வெண்டியை அடித்தார். வலி பொறுக்காதவன் அழுதபடி வீட்டைவிட்டு, வேட்டியைத் தூக்கிக்கட்டிக்கொண்டு பட்டறை வீதியைத் தாண்டி ஓடினான். அவனைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு ஒருநாள் கண்ணில் பட்டபோது புத்திமதி சொன்னார்.
   'இதுக்குத்தான் நீ மதுரையில் இருந்து ரெண்டு குங்குமம் டப்பாவும், ரெண்டு அல்வா பொட்டலமும் வாங்கிட்டு வந்தியா? உனக்கு ரெண்டு பொம்பளைங்க வேணுமா. உன் அப்பன் புத்திதான் உனக்குமாடா?’ என நாக்கைப் பிடுங்கிக்கொள்வதுபோல நடுரோட்டில் வைத்துத் திட்டினார். போகிறவர்களும் வருகிறவர்களும் விசாரித்தார்கள். அசிங்கமாக இருந்தது. அதற்குப் பிறகு அவனை ஆள்வைத்துக் கவனித்தார். சிறிது நாட்கள் அமைதியாக இருந்தான். சரி திருந்தி நல்லபடியாக இருக்கிறான். பட்டறை இருக்கிற இடத்தை மாற்றிவைத்துவிட்டால் பழக்கம் இருக்காது என, இடத்தை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தார். அப்படி ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போதுதான் இப்படி பூச்சிமருந்தைக் குடித்துத் தொலைத்திருக்கிறான்.
   செல்லையா பெரியாஸ்பத்திரிக்குப் போய் சேர்ந்தபோது மதிய சாப்பாட்டு நேரம். ஆஸ்பத்திரியில் கூட்டம் இல்லை. எந்த வார்டில் படுத்திருக்கிறான் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே இறந்துபோயிருந்தால் ஜனங்கள் காக்கா கூட்டம்போல கூடியிருப்பார்கள் என நினைத்தவர், அங்கு நின்றிருந்த கம்பவுண்டரிடம் விசாரித்தார்.
   'நகைப்பட்டறை வீதில இருந்து யாரையாவது இங்க வந்து சேர்த்திருக்காங்களா ஐயா?'
   'ஒரு செவத்த பயளா. வெள்ளரிப்பழம் பழுத்த மாதிரி கலரு. இளந்தாரி வயசு. விஷம் குடிச்சிட்டு வந்தவன்தானே?'
   'ஆமாப்பா... ஆமாம்.'
   'நேரா போயி, இடது கை பக்கமாத் திரும்பி, அப்புறம் நேராப் போங்க. குளுக்கோஸ் ஏத்திப் படுக்கவெச்சுருக்கோம்' என்றார்.
   'உசுரைக் காப்பாத்திட்டீங்களா?'
   'காப்பாத்தியாச்சு... காப்பாத்தியாச்சு...'
   கம்பவுண்டர் சொல்லியபடி சென்றார். தூரத்தில் ஜனங்கள் கூட்டமாக நின்றிருப்பது தெரிந்தது. ஜனங்களை நோக்கி நடந்தார். பட்டறைவீதிக்காரர்கள் சிலர் நின்றிருந்தார்கள். செல்லையாவைப் பார்த்ததும் அங்குசம் கூட்டத்தில் இருந்து விலகி வந்தார். அங்குசமும் செல்லையாவும் ஒரு வயசுக்காரர்கள். ஒன்றாக பட்டறை வேலை பழகியவர்கள். அங்குசம், செல்லையாவைப் பார்த்தார்.
   'வாப்பா... வா. நீகூட நடக்க முடியாம நடந்துவந்து என் மகனைப் பார்க்க வந்திருக்க. என் மூத்த மகன் இந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கலை. யாருக்கோ வந்த விதினு அவன் பொண்டாட்டி புள்ளைகளோட கறிச்சோறு தின்னுக்கிட்டு இருக்கான். 'வாடா’னு மூணு தடவை ஆள் விட்டுச் சொல்லிட்டேன். இன்னும் வரலை' என்றார்.
   செல்லையாவுக்கு எதுவும் புரியவில்லை. தலை கிறுகிறுப்பு கூடியது. அங்குசத்தின் மகனை எதுக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் எனக் கேட்டார்.
   'அவன் பூச்சிமருந்தைக் குடிச்சிட்டான் செல்லையா' எனச் சொன்னார்.
   'அப்போ வெண்டிமாப்ள மருந்தைக் குடிக்கலையா. சண்முகத்தை ஆஸ்பத்திரியில சேர்க்கலையா?' என அவராகப் பேசினார்.
   'என் மகனுக்கும் வெண்டினுதான் பட்டப்பேரு. வெள்ளைவெளேர்னு இருக்கான்னு அப்படிப் பேரு. எனக்கு மொதத் தாக்கல் வந்தப்போ, உன் தங்கச்சி மகன்தான் பூச்சிமருந்தைக் குடிச்சிட்டான்னு நினைச்சேன். பிறகுதான் கணேசன் குடிச்சிட்டான்னு என் மகன் பெயரைச் சொன்னாங்க.'
   'எதுக்குக் குடிச்சான்?'
   'கந்துவட்டிக்கு பணம் வாங்கிட்டுத் திரும்பத் தரலை. சண்டை வந்துருச்சு. அசிங்கத்துக்குப் பயந்துட்டு இப்படிப் பண்ணிட்டான்.'
   'போன மாசம் முத்துசாமி மகன் கந்துவட்டிக் காரனுக்குப் பயந்து திராவகத்தைச் குடிச்சிட்டு இன்னவரைக்கும் மதுரை ஆஸ்பத்திரியில இழுத்துட்டுக்கெடக்கான்.'
   'அதை ஞாபகப்படுத்தாதே செல்லையா. எனக்கு ரெண்டும் ஆம்பளைப் புள்ளையா பொறந்திருக்குனு கடைசிக் காலத்துக்கு எதுவும் சேர்த்துவைக்கலை. மூத்தவன் அவன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு வீட்டைவிட்டுப் போயிட்டான். ரெண்டாவது புள்ளையும் இப்படிப் பண்ணிட்டான். பொம்பளைப் புள்ளை ஒண்ணு இருந்தா, திட்டிக்கிட்டாவது சோத்தைப் போடுவா. என் கடைசிக் காலத்துக்கு யார்கிட்டே போய் நிப்பேன்' எனச் சொன்னவர் ஓவென அழுதார். அங்கு இருந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள்.
   அங்குசம் அழுவதைப் பார்க்க முடியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார் செல்லையா. வழியெல்லாம் வெண்டியைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு வந்தார். அவருக்கு மூச்சுவாங்கியது.
   'அடுத்த முகூர்த்தத்திலேயே என் மகளுக்கும் அவனுக்கும் கல்யாணம் செஞ்சுவெச்சாதான், எனக்கு நிம்மதி. அதுவரைக்கும் நான் சாப்பிடுறது செல்லாது’ என அவராகப் பேசிக்கொண்டு கிறுக்கனைப்போல தெருவில் நடந்தார்.
   விஜயா ஹோட்டலைத் தாண்டும்போது சுப்பம்மா ஆங்காரமாக அழுதபடி வருவது தெரிந்தது. அவள் கோலத்தைப் பார்த்ததும் செல்லையாவுக்கு நெஞ்சு அடைத்தது.
   செல்லையாவைப் பார்த்து, 'அப்பனைப்போல மகனும் இருக்கானே. வெண்டி எவளையோ இழுத்துட்டுப் போயி ரெண்டு நாளுக்கு முன்னாடி கல்யாணம் செஞ்சுக்கிட்டானாம்' என நடுரோட்டில் ஒப்பாரி வைத்தாள்.
   செல்லையா அவள் பேசிய பேச்சை ஏற்கெனவே கேட்டவர்போல நடுரோட்டில் அமைதியாக நின்றார். அதற்குப் பிறகு அவருக்கு யார் பேசுவதும் காதில் கேட்காமல்போனது. செல்லையாவுக்கு போனூர் இளந்தாரிகள் 'செவிட்டு செல்லையா’ எனப் பட்டப்பெயர் வைத்தார்கள். ஆனால் என்றாவது ஒருநாள் ஞானத்திடம் செல்லையா சொல்வார், 'ஜமுனா அழுறது மட்டும் காதுல கேட்டுட்டே இருக்கு’ என்று. அப்போது அவர் சொல்வது ஞானம் காதில் விழுந்திருக்குமா எனத் தெரியாது. ஆனால், செல்லையா வடிக்கும் கண்ணீருக்கு என்ன அர்த்தம் எனத் தெரிந்திருக்கும். ஏனென்றால், ஞானத்துக்கு இரண்டு பெண்பிள்ளைகள்!
   http://www.vikatan.com
  • By நவீனன்
   மம்மூதன் - சிறுகதை
       வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன்.

   ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.

   வெள்ளிப்பூண் போட்ட சாய்வு நாற்காலியில் படுத்திருந்த நாயக்கர், நெடிதுயர்ந்த மஹாலின் உத்திரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் வலது கண் ரத்தினச் சிவப்பாக இருந்தது. அருகில் நின்ற வைத்தியர் இவர்களை விடுத்து, பின்னால் வந்த பெண்ணை விரைந்து வருமாறு அவசரமாக சைகை காட்டிக் கொண்டிருந்தார்.

   ``சாமி... ரெங்கமலைக்கு வடக்கே ராசமங்கலத்துலருந்து தலையாரி வந்திருக்கேங்க’’ என்றபடி தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார் பொன்னன்.

   ``என்ன அலுவல்... தலையாரியை எல்லாம் ராசாவைப் பார்க்க அனுப்பிட்டு ஊர் நாயக்கர் என்ன பண்ணுறாரு?’’ உத்திரத்தைப் பார்த்தவாறே நாயக்கர் கேட்டார்.

   ``சாமீ... நல்லது நடந்துருக்குங்க. ஊர்க்குளம் பெரிசு பண்ணிக்க உத்தரவு போட்டுருந்தீங்க இல்லியா? அதுக்கு வெங்கம்பாறையைக் கீதாரி அம்மையப்பனும் ஊர் இளந்தாரிகளும் சேர்ந்து ஒடைக்கும்போது, பொறந்த குழவி தண்டிக்கி மரகதக்கல்லு கெடைச்சதுங்க. இதுவரைக்கும் இல்லாத அதிசயமா அதுகூடவே தீட்டின மாதிரி, சோவி அளவுக்கு ஒரு ரத்தினக்கல்லும் கெடச்சிருக்குங்கய்யா. ஊர் நாயக்கர் இம்புட்டு தூரம் எடுத்துட்டு வர்றதுக்கு, காவல் துணைக்கு ஆளே இல்லீங்க. ஆண்டிப்பட்டி கணவாயைத் தாண்டணுமில்லையா... அதுக்குத்தான் சாமி நல்லது சொல்லிட்டு, காவலுக்கு ஆள் கேக்க தலையாரி வந்திருக்கேன்...’’

   அப்போது இவர்களுக்குப் பின்னால் வந்த பெண், தன் தனங்களில் இருந்து வெள்ளிச்சங்கில் பால் எடுத்து வைத்தியரிடம் கொடுத்தாள்.

   மன்னர் சிரித்தபடியே, ``நேத்திக்கிதான் கால் வழுக்கிக் கழிசலில் விழுந்த மாதிரி கனவு கண்டேன், யோகத்தைப் பாரேன்’’ எனத் தானாகச் சொல்லிக்கொண்டார்.
    
   ``சரி... நானே வர்றேன். இன்னிக்கு குதிரையோட வால் மயிர் கண்ணில் பட்டுருச்சு. ரெண்டு நாளைக்குத் தாய்ப்பால் ஊத்தணும். நாளைக்கும், மக்யா நாளும் செவ்வாய், புதன் வடக்க சூலம். `குருவாரம் ராசா வர்றாரு’னு சொல்லிடு’’ என்றவர், தலையாரிக்கு ஒரு மூட்டை சம்பா நெல்லும், குட்டியுடன் உள்ள ஆடுகளாகப் பார்த்து நான்கும் கொடுத்துத் துணைக்கு ஆட்களையும் அனுப்ப உத்தரவிட்டார்.

   குளத்துக்கரையில் கூடி நின்றது ராசமங்கலம். சட்டியிலிருந்து வெந்தயக்களியை இரண்டு அகப்பை எடுத்து இலையில் வைத்தான் அம்மையப்பன். அதில் கையால் குழி வைத்து நல்லெண்ணெய் ஊற்றினார். இன்னொரு அகப்பை நிறையச் சூடான வெள்ளாட்டுக்கறியை குழம்புடன் அள்ளி, களி மீது ஊற்ற, அரசன் அள்ளியள்ளிச் சாப்பிட்டதை ஊர் மக்கள் சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். 
    
   கைகழுவி நின்ற மன்னரிடம்  மரகதக்கல்லை அம்மையப்பன் எடுத்து வந்து கொடுத்தார். ``ஹா...’’ என்கிற சத்தம் வர, அதிசயமாகப் பார்த்தார். உடன் வந்திருந்த மஹால் விஸ்வகர்மா அதை வாங்கி, நான்கைந்து முறை திருப்பிப் பார்த்து ``என் ஆயுசுக்கும் இப்பத்தான் இவ்வளவு பெருசைப் பார்க்கிறேன் சாமி...’’ எனக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

   பழம்பட்டுத் துணியில் சுருட்டி வைத்திருந்த ரத்தினத்தையும் கொடுத்தான் அம்மையப்பன். வாங்கி அப்படியும் இப்படியுமாகப் பார்த்த அரண்மனை விஸ்வகர்மா, ``நயம்... நயம்’’ என்றபடியே அரசனிடம் கொடுத்தார். மனசுக்குள் அவ்வளவு சந்தோஷம் பொங்கியது நாயக்கருக்கு. ஊர்க் கணக்கரை அழைத்து, உடனே அம்மையப்பனுக்கு 300 குழி நிலம் தானம் கொடுக்க உத்தரவு போட்டார். ராசமங்கலத்தைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களில் வரி வசூலித்து, மதுரைக்கு அனுப்பும் உரிமையையும் கொடுத்தார். கல் கிடைத்த சந்தோஷத்துக்கு ஐந்து திங்கள்கிழமைகளில் ஊர் முழுசுக்கும் கெடாக்கறியும், உப்புக்கண்ட வத்தலும் போட்டுக் கேப்பைக் கூழ் ஊற்றவும் சொன்னார்.

   அம்மையப்பன், குடும்பத்தை அழைத்துவந்து வணங்கினான். அவனைத் தனியாகக் கூப்பிட்ட நாயக்கர் ``நான் ரெங்கமலைக்குப் போயி சேவிக்கப் போறேன்.  நாளைக்குக் காலையில வர்றேன். உன் அக்காவைக் கட்டிக்கிட முடிவு பண்ணிட்டேன். உன் அப்பன் உயிரோட இல்லைனு சொன்னாங்க, அதான் உன்கிட்ட சொல்றேன்’’ என்றார். 

   அம்மையப்பனுக்கு வெல்லப்பாகில் குளித்த மாதிரி உடம்பே இனித்தது. ``உத்தரவு ராசா’’ என்றான்.

   ராசா மேற்கே நடக்கத் தொடங்கினார். விஸ்வகர்மா, அரசனின் காதருகே போய், ``சாமி... ரெண்டுமே மரகதம்தான். அத்தனை சாமுத்திரிகா லட்சணமும் இருக்கு. யோகம் அள்ளி வரப்போகுது’’ என்றார்.
   மறுநாள் காலை அம்மையப்பன் குளித்துவிட்டு, குளத்தின் கரையில் புங்கமரத்தின் கீழ் நின்றபோது, தன் தாய் ஓடி வருவதைக் கண்டான். ``தீயை வாரிப் போட்டுட்டு உன் அக்கா போயிட்டாடா... விடியறதுக்கு முன்ன எப்பவோ வெளியே போனவ, இன்னமும் காணாம். ராத்திரி முழுக்க தூங்காம அழுதுக்கிட்டே இருந்தா. அய்யோ... என் புள்ளை மானமே போச்சே, இனி ராசா முன்னாடி எப்படிக் கொண்டையை அள்ளி முடிவான்...’’ என ஒப்பாரியை ஆரம்பித்தாள்.

   அரசனின் உத்தரவுக்குப் பிறகு, முதல்நாள் மாலைதான் அம்மையப்பனின் கைகளில் சூரிக்கத்தியும் தடியும் கொடுக்கப்பட்டிருந்தன. குதிரை பிடிக்கவென ஊருக்குக் கிழக்கிலிருந்த சக்கிலியக் குடியிலிருந்து ஓர் ஆளை அனுப்ப உத்தரவிட்டனர். சுப்பு என்கிற இளைஞனை அனுப்பியிருந்தனர். அம்மையப்பனுக்குக் குதிரையில் ஏறிப் பழக்கமில்லை. அதைச் சொல்லிக் கொடுக்க, சூலநாயக்கன் பாளையத்திலிருந்து ஒரு குடியானவ வீட்டு ஆளை, சுப்பு கூட்டி வந்திருந்தான். அம்மையப்பனின் தாய் போட்ட சத்தத்தைக் கேட்டு குதிரை ஏறச் சொல்லிக்கொடுக்க வந்தவன், நமுட்டுச் சிரிப்பை அடக்க மாட்டாமல் நின்றான். சுப்பு, சிரித்தவனைப் பார்த்து முறைத்தபடியிருந்தான்.

   அக்காவுக்குப் பிடித்தமில்லை என்று தெரிந்தவுடன் அவளைத் தனியாக அழைத்துப் பேசினான். `ராசா வாக்கை மீற முடியாது’ என்று தம்பி சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டாள். அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து `சரி’ என்றாள். அவளைச் சமாதானப்படுத்திவிட்ட நிம்மதியில்தான் அன்று நன்கு உறங்கினான். ஆனால், அவளே காலையில் இப்படிச் செய்வாள் என ஒரு கணம்கூட அம்மையப்பன் எதிர்பார்த்திருக்க வில்லை. தூரத்தில் ராசாவும் ஆட்களும் வருவது தெரிந்தது. மரத்தின் கீழ் வைத்திருந்த சூரியை எடுத்து, கழுத்தின் வலது அள்ளையில் சொருகி உச்சக்கட்ட வலுவைக் கொடுத்து முன்நோக்கி இழுத்தான் அம்மையப்பன். அவ்வளவு தொலைவில் வந்த அரசருக்கே தெரிந்தது, பீய்ச்சி அடித்த ரத்தம்.

   கறட்டு கறட்டு என இழுத்துக்கொண்டிருந்த அம்மையப்பனின் உடலருகே வந்தான் சுப்பு. நாயக்கர் உத்தரவுக்குப் பணிந்து, ஊர் வேலைக்காகத் தன்னைத் தன் குடியில் இருந்து அனுப்பிய இரண்டாம் நாள் இது. தன் தலைவனின் முடிவைக் கண்டு கீழே கிடந்த சூரியை எடுத்து, ஒருகணம்கூட யோசிக்காமல் தானும் அதுபோலவே அறுத்துக்கொண்டான். குளித்துக்கொண்டிருந்த பெண்களின் சத்தத்தில் ஊர் கூடிவிட்டது. குளத்தின் மேற்குக் கரையில் இழுத்துக்கொண்டிருந்த சுப்பனை மடியில் போட்டு, தலைதலையாக அடித்தபடி அம்மையப்பனின் தாய் `கீதாரி’ அழுது கொண்டிருந்தாள்.

   ஊரின் முன்பு கலங்கிப்போய் நின்ற நாயக்க மன்னர், உடனடியாக அங்கு நடுகல்லும், பட்டவன் கோயிலும் கட்டி வருடா வருடம் பொங்கல் வைக்கச் சொல்லி ஒரு குடும்பத்துக்கு உத்தரவு போட்டார். சிற்பம் புடைக்கும்போது, ஒரே கல்லில் அம்மையப்பனும் சுப்பனும் இருக்கும்படி அமைக்கவும் உத்தரவிட்டார். அப்போது ஒர் இளம்பெண்ணுக்கு மாரியாயி வந்து இறங்கியது. ``மீனாட்சி கோபம் பொல்லாதது’’ என்று சொல்லி மலையேறினாள். உடனடியாகக் கொஞ்சமும் தயங்காமல், காடை முட்டை போலிருந்த ரத்தினத்தை மீனாட்சி கோயிலுக்குக் கொடுத்தார். மரகதக் குழவியை சிவலிங்கம் செய்து கோயிலில் வைப்பதாக அறிவித்துவிட்டுக் கிளம்பினார் - என்று கதையை முடித்தார் கோபாலு மகன் சாமியாடி மோகன்.

   நான் ஒருமுறை திரும்பி, பட்டவன் கோயிலைப் பார்த்தேன். சின்னஞ்சிறியதாக கேரளா ஓடு வேய்ந்த கூரையும், நான்கு தூண்களுமாக தனக்கென அமைதியும் எளிமையுமாக இருந்தது. 

   ``பட்டவனுக்கு நாயக்கர் பூசை போடச் சொன்ன குடும்பம் எங்களுடையதுதான். அதுக்குதான் இருவத்தஞ்சு குழி குளத்துக்கரையில் ராசா கொடுத்திருந்தார். இன்னிக்கு வரைக்கும் அதுல பிட்டு விக்கலையே...’’ என்றார் சாமியாடி மோகன். ஆனால், இந்தக் கதையைச் சொல்வதற்கு இல்லாத பிகு செய்து, பின்னர் ஃபீஸாக `ஒரு 1848 குவாட்டர்’ கேட்டார். அதை வாங்கி, முதல் ரவுண்டை முடித்த பின்னர்தான், தலையாரி பொன்னன் வேல்கம்பை எடுத்துக்கொண்டு மதுரைக்குக் கிளம்பினார்.

   ஒவ்வொரு பங்குனியின்போதும் ஏதோ ஒரு மச்சினன் மாத்துக் கட்டில் நேர்ந்துகொள்ளும் கிடா வெட்டுகளில் ஒன்றுக்கு வந்திருந்தேன். மரகதக்குளத்தின் நடுநாயகமான புங்கமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தேன். எதிரே பட்டவன் கோயிலில் பொங்கலுக்கு அடுப்பு பற்றவைக்கப்பட்டிருந்தது. பொங்கியவுடன் கெடா வெட்டப்படும். அடுப்பைப் பற்றவைத்துவிட்டு, என்னை நோக்கி வெற்றுக்குளத்தில் டி.வி.எஸ் 50 வண்டிகள் ஓடி ஓடி உருவாகியிருந்த ஒத்தையடிப் பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தார் வீராயி கிழவி; என் மனைவியின் அத்தை; எனக்குப் பெரியம்மா முறை. 87 வயதிலும் தடி கிடையாது, நடுக்கம் இல்லை. ஐந்தாறு பிள்ளைகள் இருந்தும், யாருடனும் இல்லாமல் தனியே வசிக்கிறார்.

   ``இந்த புங்கம் இருக்கில்ல... கெட்ட கழுதை. அவுகளுக்கு புடிச்ச எடத்துலதான் வளருவாக. ஆடு, மாடு மேய்க்கிறவகளுக்குத்தான் வேப்பமரம் நெனலுக்கும், புங்க மரத்து நெனலுக்கும் நல்லா வித்தியாசம் தெரியும். வேப்ப மரத்தைத் தாய் கணக்கா சொன்னோம்னா, புங்கமரம் பொண்டாட்டி மாதிரி. அந்த அணைப்பே காட்டிக் கொடுத்திரும். குளத்துல தண்ணி நிக்கிதோ, இல்லையோ... இங்கே இவ மட்டும் சிலுப்பிக்கிட்டே இருப்பா. இதுல இருந்து கிளை வெட்டி ஊருக்குள்ள நாலு மரம் கொண்டு போயி நட்டு வெச்சாங்க... தழைப்பனாங்குது. இங்கனதான் குத்தவைக்க இஷ்டம் போலருக்கு...’’ என நான் அமர்ந்திருந்த புங்கமரத்தை ஆளாகக் கருதிப் பேசியபடியே, எனக்குப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் கீழே இருந்த பட்டியக் கல்லில் உட்கார்ந்தார்.

   ``ஏன் சாமி, உன்கிட்ட கோபால் மகன் வந்தானே... குவாட்டரு வாங்கிக் குடுத்தியா?’’ என்று கேட்டார்.

   வீராயி கிழவியும் குடிக்கும். இதுவும் ஒரு காலத்தில் சாராயம் விற்றதுதான். 15 வருஷத்துக்கு முன்பு வரைக்கும் ஊறல் போடுபவர்களுக்குப் பதம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். 2003-ம் வருட ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒருநாள் தாசில்தார் வந்து, ``இனிமே காய்ச்ச மாட்டோம் என எழுதிக்கொடுத்தால், அரசு புதுப் பிழைப்புக்கு பசுமாடு தரும். மேற்கொண்டு பழைய சாராய கேஸ்கள் எல்லாம் வாபஸ் வாங்கப்படும்’’ என்று சொல்லவும், அவரிடம் இனி சாராயத் தொழில் செய்வதில்லை எனப் பாலில் சத்தியம் செய்துவிட்டார்.

   அன்றைக்கு இருந்து சாராய சங்காத்தமே இல்லை. ஆனால், எப்போதாவது லேசாகத் தொண்டையில் சளி கட்டுவதுபோலத் தெரிந்தாலும், சட்டென கோழி அடித்துச் சமைத்துவிடுவார். பக்கத்து ஊருக்குப் போகும் இளந்தாரிகளிடம் ``எம்சி இருந்தா வாங்கு. இல்லைன்னா, கறுப்பு ரம்மு எதையாவது வாங்கிட்டு வா’’’ எனக் காசு கொடுத்து சொல்லியனுப்பி, வாங்கிக்கொள்வார். 

   ``அவரு ஏன் பரம்பரைப் பூசாரியா இருக்காருனு கேட்டேன். அதுக்கு சரக்கு வாங்கித் தந்தாதான் சொல்வேன்னு சொன்னாரு. சாப்பிட்டுட்டுப் போகட்டும். என்னைக்கோ ஒரு நாதானே...’’ என்றேன்.

   ``சரி, என்ன கதை சொன்னான்?’’

   சொன்னேன்.

   சீலை மடிப்புக்குள்ளிருந்து கோயிலுக்கு வந்த யாரோ படைத்த 'ராயல் அக்கார்டு' குவார்ட்டர் பாட்டிலை எடுத்து, எனக்குக் குடிக்கத் தண்ணீர் வைத்திருந்த செம்பில் ஊற்றி, ஒரே மடக்கில் குடித்தார்.

   ``பட்டவன் கதை கேட்டல்ல... மம்மூதன் கதை சொல்றேன் கேளு...’’  எனச் சொல்லத் தொடங்கினார்.

   ``காலையில கொல்லைக்குப் போன இடத்துல, பகல்ல பருத்திக்கொட்டை அரைக்கையில, இறுங்குச் சோளம் புடைக்கையில, கேப்பையை சாலையில கொட்டி பரப்பையிலனு, பொண்டு புள்ளைக தனியா எந்த வேலை செஞ்சாலும், பேச்சுக்குள்ள மம்மூதன் வந்திருவான். சூலநாயக்கன் பாளையத்துல இருந்த சாயபுதான் அவனைக் கூட்டியாந்தது. அந்தச் சாயபுதான் இந்தப் பக்கம் இருந்து மொத மொத வடநாட்டுக்கு வட்டிக்கு விடப்போனது. டெல்லிக்கெல்லாம் அந்தப் பக்கம் போய் வட்டி யாவாரம் பார்த்தாப்ல. அங்கே இவரு தங்கியிருந்த வீட்டுல ஊடமாட ஒத்தாசைக்குத்தான் மம்மூதன் இருந்திருக்கான். பத்து மாசத்துக்கு ஒருக்க ஊருக்கு வருவாரு. பதினஞ்சு நாளு இருந்துட்டு திரும்பிப் போவாரு. ஊருக்கு வரும்போதும், துணைக்கு மம்மூதனைக் கூட்டிக்கிட்டு வந்தாரு. ஏதோ டான்ஸ் குதிரையை வேடிக்கை பார்க்குறது கணக்கா, அவனை ஊரே சுத்திச் சுத்தி பார்த்தாங்க. அப்படி ஒரு நிறத்துல இருந்தான். சாயபு வீட்டு மாமிமாருகூட அப்படி ஒரு நிறத்துல இருந்ததில்லை.

   அவன் இங்கே வந்து நாலஞ்சு நாளிலேயே சாயபு கேணியில் தொப்பரை மேட்டில் நின்னு எட்டிப் பார்த்திருக்காரு. காலு வழுக்கி விழுந்து, குறுக்கொடிஞ்சுப்போச்சு. `ஆறு மாசத்துக்கு நகரவே கூடாது’ன்னுட்டாரு வைத்தியரு. கோழி ரசம் மட்டும்தான் சாயபுக்கு இறங்கிச்சு. அவங்க ஊருல இருந்து வெடக்கோழி வாங்க ஒவ்வொரு ஊரா போக ஆரம்பிச்சவன் அப்படியே ஊர்சுத்திப் பயலா போயிட்டான். மூணே மாசத்துல தெலுங்கும், தமிழும் உருட்டி உருட்டிப் பேச ஆரம்பிச்சுட்டான். வெவசாய வேலையெல்லாம் ஒண்ணும் தெரியாது. எப்பப் போய் பாய் திண்ணையில அடைஞ்சாலும், சோறு போட்டுருவாங்க. அவன் புத்தி அப்படியா... இல்லே, இங்கே உள்ளவளுக கெட்டவளுகளான்னு தெரியலை. `அவனை அந்தக் காட்டுல அவகூட பார்த்தேன்’, `இந்தக் காட்டுல பார்த்தேன்’னு பேச்சு வர ஆரம்பிச்சுது...’’ என்று நிறுத்தினார்.

   வானம் இருட்டுக் கட்டியது. குளத்தின் பரப்பில் காய்ந்து, மஞ்சள் நிறமாக இருந்த அடிப் புற்களைப் பெரிதாகக் காதுகள் வளர்ந்த ஜமுனாபாரி ஆடுகள் மண்டியிட்டு கரம்பிக்கொண்டிருந்தன.

   ``ஊர் இளந்தாரிகளுக்கு எதிரியாகிப் போனான் மம்மூதன். ஆனா, கை வெக்க முடியாது. சாயபுக்கு அன்னைக்கே நூறு ஏக்கராவுக்கு மேல நிலம் இருந்துச்சு. சுத்துப்பட்டியில ஒருத்தர் பாக்கியில்லாம அந்தாளுகிட்ட கடன் வாங்கியிருந்தாங்க. அந்தத் திமிருல மம்மூதனும் கூச்ச நாச்சம் பார்க்காம எல்லாப் பக்கமும் புகுந்து வந்தான். `ஒரு நா வசமா மாட்டுவான். அன்னைக்கு இருக்கு பச்சைக் கண்ணனுக்குத் தீவாளி'ன்னு கருவிக்கிட்டுத் திரிஞ்சாங்க ஊருக்குள்ள. ஆம்பளைப் பயக இப்படிப் பேசினா, பொம்பளைப் புள்ளைகளுக்கோ `அவனைப் பார்த்தே ஆகணும்’னு அப்படி ஒரு இதுவாகிப் போச்சு. நான் சும்மானாச்சுக்கும், `அவனை அங்கே பார்த்தேன்... இங்கே பார்த்தேன்’னு அள்ளிவிடுவேன். ஒருநா காலையில எங்க அப்பா வாசலில் நின்னுக்கிட்டு தண்ணி கொண்டாரச் சத்தம் கொடுத்தாரு. எடுத்துட்டுப் போனேன். வாங்கி, அங்கே நின்ன ஆளுகிட்ட கொடுத்தார். அவன் அப்படி ஒரு அம்சமான அழகு. கண்ணு அப்படியே பச்சை நிறத்துல மின்னுது. `மம்மூதன்லாம் இவன் பக்கத்துலகூட வர முடியாது’னு நெனைச்சுக்கிட்டேன். `இவன் பேரு மொகமது. இவனைத்தான் நம்ம பயலுக மம்மூதனாக்கிப்புட்டாங்க'னு என் அண்ணன்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார் அப்பா. அவ்ளோதான்... சொம்பையும் வாங்கலை, ஒண்ணையும் வாங்கலை... உள்ளார ஓடி வந்துட்டேன். அப்புறம் ஊர்ல இருக்குற குமரிக பூராம் என்னைய கேலி பேசிக்கிட்டுத் திரிஞ்சாளுக. செல்வி ஒருத்திதான் அவளுகளை `அப்படியெல்லாம் பேசாதீங்கடி'னு சத்தம் போடுவா...’’
    
   ``நானும் எருமை மேய்க்கிறப்போ வேணும்னே அவங்க ஊருகிட்ட போய் மேய்ப்பேன். நாலைஞ்சு தடவை அவனைப் பார்த்திருக்கேன். இவளுக சொன்னதாலயா... இல்லே, அவனைப் புடிச்சுப் போயிடுச்சானு தெரியலை. ஆனா, அவன் கூப்பிட்டிருந்தா, எப்போ வேணும்னாலும் ஓடிப்போயிருந்திருப்பேன். அவ்வளவு ஆசையாகிப் போச்சு. ஆளும் நெகுநெகுனு சாட்டையாட்டம் இருப்பான். நெத்தியில கன்னங்கரேல்னு முடி விழும். சின்னக் காத்து அடிச்சாக்கூட அப்படிப் பறக்கும். `என்னா... எர்ம மேய்றியா'னு ஒரு தடவை என்னையப் பார்த்துக் கேட்டான். அன்னைக்கு எனக்கு இருந்த சந்தோஷம், மொதப்புள்ளை பொறந்தப்பதான் மறுபடி வாய்ச்சுது...’’ எனக் கிழவி சொல்லிக்கொண்டிருந்தபோது, சோளம் வெடித்ததுபோல் தூறல் ஒன்றிரண்டாக விழுந்துகொண்டிருந்தது. மழை வரலாம்... வராமலும் போகலாம் என்பதுபோல் இருந்தது. சமையல் ஆரம்பித்திருந்தது. மழை பெய்தாலும், வேலை கெடாமல் இருக்க பழைய ஃப்ளெக்ஸ்களை மறைப்பாகக் கட்டினர்.

   ``ஒரு நா காலையில, `அம்மையப்பன் கோயில்ல யாரோ தொங்குறாங்க’னு யாரோ சொல்லிவிட, ஊரே ஒடிப்போய் பார்த்துச்சு. நான் போறதுக்குள்ள இறக்கிட்டாங்க. கும்பலை விலக்கிட்டுப் போய்ப் பார்த்தா, மம்மூதன் செத்துக் கிடக்கான். எனக்கு உசுரே இல்லை. பால் ஊத்தப் போயிட்டு வந்துகிட்டு இருந்த சின்னப்புள்ளதான் தூக்கு மாட்டி குதிக்கிறதைப் பாத்திருக்கா. 'ரெண்டு பேரு பட்டவன் சிலை மேல ஏறி நின்னாங்க. ஒருத்தரு அதுல பொம்பளையாளு'னு சொல்லவும் ஓடிப்போய் கொட்டகை மேலே மூங்கில் உத்திரத்தைப் பார்த்தாங்க. ரெண்டு கயிறு கட்டியிருந்தது. ஒண்ணு பாதி அறுந்து மம்மூதனின் கழுத்துல கெடந்தது. இன்னொண்ணு, உத்திரத்துல தொங்கிட்டுருந்துச்சு...’’

   `பட்டவன் அடிச்சிட்டாரு’ என்றுதான் இந்தக் கிழவி கதையை முடிப்பாள் எனத் தெரிந்துவிட்டது. அசுவாரஸ்யமாக `ஊம்...’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

   ``அந்த இன்னொரு தூக்குக் கயிறு செல்விக்குப் போட்டது. மம்மூதனுக்கும் செல்விக்கும் தொடுப்பாகிப் போச்சு. அவன் அன்னைக்கு எங்க வூட்டுக்கு வந்ததே அவளை நோட்டம்விடத்தான். நான்தான் அவனைப் பார்த்துப் பார்த்து மருகிக்கிட்டு இருந்தேன். அப்ப ஓடிப்போனவளை அப்புறம் ஒரு மாசம் கழிச்சு  நாகலாபுரத்துக்கிட்ட இருந்து கூட்டியாந்தாங்க. குடியான ஆளுக மட்டும் சேர்ந்து, நடுக்காட்டுல பஞ்சாயத்துப் பேசினாங்க. அந்தப் பஞ்சாயத்துல `செய்யுறது தப்புனு தெரிஞ்சுது. ஓடிப்போலாம்னு அவன் கூப்பிட்டான். ஆனா, அவன் எந்த ஊருனு தெரியலை. கூடப் போயி எங்கியாவது விட்டுட்டுப்  போயிட்டா என்னா பண்றதுனுதான், நாண்டுக்கிடலாம்னு சொன்னேன். மொதல்ல அவன் குதிச்சுட்டான். அவன் துள்ளுனதைப் பார்த்து எனக்கு பயம் ஆகிப்போச்சு. செலையில இருந்து எறங்கிட்டேன். `அவனே போயிட்டான்... இனிமே நாம செத்து ஆகப்போறது என்னா?’னு வூட்டுக்குப் போகப் போனேன். அப்பத்தான் கோனாரு வூட்டுப் புள்ளை தூரத்துல இருந்து வந்துருச்சு. நான் மானத்துக்குப் பயந்து சின்னம்மா வீட்டுக்குப் போயிட்டேன்'னு சொன்னா. பஞ்சாயத்துல அவ தலையை சிரைச்சு, வீட்டுக்குள்ளயே பூட்டிவைக்கச் சொல்லிட்டாங்க. அடுத்த மூணாம் நாளு ஒரு சமைஞ்ச புள்ளைக்கு சாமி வந்து `செல்வி மகன்ல ஆரம்பிச்சு யாரெல்லாம் அந்தத் தலைமுறையில முதல் ஆம்பளையா பொறக்குறாங்களோ... அவங்கதான் பட்டவன் கோயில் பூசாரி’னு சொல்லிடுச்சு. `பொம்பளைப் புள்ளை பொறந்தா, அப்பலருந்து நிறுத்திக்கலாம்’னும் சொல்லிடுச்சு. கோபாலு மகனோட இது மூணாவது தலைமுறை. இன்னிய வரைக்கும் பொம்பளைப் புள்ளை கிடையாது. பொம்பளைப் புள்ளையே பொறக்காத வூடு நரகம். ஆனா விதிச்சிருச்சு...’’
    
   எனக்கு வியர்த்துவிட்டது. கிழவி வெற்றிலையைக் கடித்துக்கொண்டிருந்தார். நான் கட்டிலைவிட்டு இறங்கிக் கோயிலை நோக்கிப் போனேன். கோபால் மகன், வெட்டிய ஆட்டின் தலையைத் தனியாக எடுத்து அதன் வாயைப் பிளந்து, அதில் ஆட்டின் கால் ஒன்றினைக் கவ்வக் கொடுத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் பெரிதாகச் சிரித்துக்கொண்டே ``மழையெல்லாம் வராதுங்க. சும்மா சீன் காட்டுது...’’ என்றபடி, கால் கவ்வக் கொடுத்திருந்த ஆட்டுத் தலையை எடுத்து இலையில் வைத்து பட்டவன் முன்னால் படைத்தார்.

   திறந்தபடி இருந்த அந்த வெள்ளாட்டின் கண்கள் மரகதப்பச்சை நிறத்தில் இருந்தன.
   http://www.vikatan.com