• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை

Recommended Posts

கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை

 
பிரசாத் சோதிலிங்கம்படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionபிரசாத் சோதிலிங்கம்

லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

மோதலின்போது கோடாறி, பாட்டில் மற்றும் கத்தி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.படத்தின் காப்புரிமைமெர்டன் போலீஸ் Image captionகோஷ்டி மோதலில் ஈடுப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட மேலும் நான்கு இளைஞர்களுக்கும் நீதிமன்றத்தினால் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நீல் குரூஸின் நண்பர் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது விரல்கள் வெட்டப்பட்டாதாகவும் கூறப்பட்டுள்ளது.

லண்டனில் பல இடங்கள் தமிழ் கோஷ்டிகள் இயங்கிவந்த நிலையில், காவல்துறையின் முன்னெடுத்த நடவடிக்கைகளினால் அவை கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.bbc.com/tamil/global-40292992

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this