Jump to content

உழைப்பால் நிமிர்ந்த யாழ்ப்பாணத் தமிழன் குமார் யோகரட்ணம் – மே தின சிறப்பு பதிவு


Recommended Posts

திரு.குமார் யோகரட்ணம்
“ஒரு நல்ல தலைவன் தனக்கான பாதை எது என்பதை அறிந்து கொண்டு அந்த பாதை வழியே பயணிப்பான் அத்துடன் மற்றவர்களுக்கும் சரியான பாதையை காண்பிப்பான்”

யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனான திரு.குமார் யோகரட்ணம். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சில காலம் வாழ்ந்து பின்னர் கனடாவில் குடியேறியவர். கல்வி கற்கும் காலத்தில் பகுதி நேரத் தொழில் புரிவதற்காக Swiss Chalet உணவு விடுதியை தேர்வு செய்தார். செய்யும் எந்த தொழிலையும் மிக நேர்த்தியாகவும் நேசிப்புடனும் செய்தால் பல உயரங்களை தொட முடியும் என்பதை தனது அனுபவம் மூலம் உணர்த்தி நிற்கின்றார். பாத்திரங்கள் களுவும் பணியில் ஆரம்பித்த இவருடைய பயணம் இன்று வருடாந்தம் 100 மில்லியன் டொலர்களை; ஈட்டும் பெரு வணிகமாக வளர்ச்சி பெற்று நிற்கின்றது. சிறப்பான தலைமைத்துவ ஆற்றல் திட்டமிடல் முகாமைத்துவம் ஆகியவற்றால் இன்று 20 ற்கம் மேற்பட்ட முன்னணி உணவகக் கிளைகளின் உரிமையாளராக 2000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தொழில் வாய்பினை வழங்கும் தொழில் வழங்குனராக உயர்ந்து நிற்கின்றார். முகாமைத்துவ அனுபவங்களையும் வெற்றிக்கான படிமுறைகளையும் வாசிப்பின் மூலமாக வளர்த்துக் கொண்டுள்ள திரு குமார் யோகரட்ணம் தலைமைத்துவ பண்பிற்கான முன்னுதாரணமாக எம்மத்தியில் திகழ்கின்றார்.

 

http://www.fromjaffna.com/kumar_yogaratnam/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மில்லியன் ஐயாவுக்கு தமிழ் வராதோ இல்லை மறந்து போச்சுதோ???? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5  ரூபா...  தட்டில்,  போட்டால், 
5000   ரூபா....., கிடைக்கும் என்று சொல்லும்,
வீதியில், நடத்தும்... குரங்கு வித்தை  போலுள்ளது.
அவதானம்.... போலிகளை,  கண்டு ஏமாறாதீர்கள்.
நாங்கள்,  தான் ... ஒரிஜினல்.....
தொடர்புகளுக்கு......  0..  வயர், அறுந்து, போச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.6.2017 at 4:26 AM, தமிழ் சிறி said:

5  ரூபா...  தட்டில்,  போட்டால், 
5000   ரூபா....., கிடைக்கும் என்று சொல்லும்,
வீதியில், நடத்தும்... குரங்கு வித்தை  போலுள்ளது.
அவதானம்.... போலிகளை,  கண்டு ஏமாறாதீர்கள்.
நாங்கள்,  தான் ... ஒரிஜினல்.....
தொடர்புகளுக்கு......  0..  வயர், அறுந்து, போச்சுது.

சிறித்தம்பி!

ரஜனிகாந்த் ஏதோ ஒரு படத்திலை பால்வித்து பக்கெண்டு பணக்காரன் ஆகின படம் நீஙகள் பாக்கேல்லையோ? tw_rage:???

அது மாதிரித்தான் இதுவும்..... :grin:

ஐமீன் கோப்பை கழுவி த்திடீடீடீடீர்ர்ர்ர்ர்ர்ர் பணக்காரன் ஆகலாம்......tw_tounge_xd:

ஆகணும். tw_blush:

காலத்தின் சுழற்சி :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" அப்படிண்ணு மறந்திடாமை  உங்க விளம்பரத்திலை போட்டுக்கொள்ளுங்கப்பா !!! இல்லாட்டி "நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன்" எண்ணு சொல்லிக்கிட்டு தான் நான் ஜீப்பிலை ஏறணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.