Jump to content

சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?


Recommended Posts

சி.விக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
 

-எம்.றொசாந்த்

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும்  தற்போது பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், 20 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்து இட்டுள்ளனர்.

இப்பிரேரணையை, நாளைய தினம் வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சி-விக்கு-எதிராக-நம்பிக்கையில்லா-பிரேரணை/71-198660

Link to comment
Share on other sites

முதலமைச்சரை மாற்றும் கோரிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

 
முதலமைச்சரை மாற்றும் கோரிக்கை ஆளுநரிடம் கையளிப்பு
 

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றும் கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.19238700_1317584798291526_1233723886_o-7

http://uthayandaily.com/story/6759.html

 

Link to comment
Share on other sites

 

வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு.

Link to comment
Share on other sites

முதலமைச்சரை மாற்றும் கோரிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

 
முதலமைச்சரை மாற்றும் கோரிக்கை ஆளுநரிடம் கையளிப்பு
 

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மாற்றும் கோரிக்கைக் கடிதம், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர். வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

19238700_1317584798291526_1233723886_o-7

1-5-750x400.jpg

2-3-750x400.jpg

http://uthayandaily.com/story/6759.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.வி மந்திரிசபையை முற்றிலும் கலைத்து  தங்கள் பதவி பறிபோகுமுன் நாங்கள் முந்திவிடுவோம் என்று சி.வியையே மாற்றும் நகர்வு.
தன் தலையிலை தானே மண்அள்ளி போடுறதுக்கு தமிழனைக் கேட்டுத்தான். ஆளுநரிடம் இந்த விடையத்தை கொண்டு சென்றதே
இந்த கழிமண் தலைகள்.

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் கையளிப்பு (நேரலை)

 

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/20888

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருசத்துக்கு முந்தியே சிங்களம் புத்தியாக யோசிச்சிருந்தால் ஒரு சேதாரமுமில்லாமல் ஒட்டு மொத்த ஈழத்தமிழினமும் தங்களுக்கை அடிபட்டு குத்துப்பட்டு அழிஞ்சிருக்கும். நாடும் தனிச்சிங்களமாயிருக்கும்......இன்னும் பிந்தேல்லை கண்டியளோ.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகண சபையை கலைச்சுப் போட்டு புதிசாய் ஆட்களை எடுக்கோனும்...படிக்காத,சேவை மனப்பானமை உள்ளவர்களை தேர்ந்தெடுக்கோனும்...படிச்சுக் கிழிச்சவர்கள் செய்தது போதும்

Link to comment
Share on other sites

வலிய வந்த தலைவனை அழிச்சுப்போட்டு வைக்கும் ஒப்பாரியே இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் வலிந்து அழைத்த தலைவனையும் அழிச்சுப்போட்டுக் கூடவே, மாரடிச்சு ஒப்பாரிவைக்க மோட்டுக்குடித் தமிழினம் ரெடி. :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

வடக்கு மாகண சபையை கலைச்சுப் போட்டு புதிசாய் ஆட்களை எடுக்கோனும்...படிக்காத,சேவை மனப்பானமை உள்ளவர்களை தேர்ந்தெடுக்கோனும்...படிச்சுக் கிழிச்சவர்கள் செய்தது போதும்

எங்கடை இளைஞர் படையணி திரளும்...பிரளும் புடுங்கும் எண்டு உசுப்பேத்தி சும்மா கிடந்தவங்களை சாகடிச்ச கூட்டம் அது தங்கச்சி!!!!! உசுப்பேத்திப்போட்டு தம்பிமாருக்கு ஒண்டும் தெரியாது எண்டு உலகத்துக்கு சொல்லி  ஒட்டு மொத்த தமிழினத்தையே நாறடிச்ச கும்பல் / கோஷ்டி தங்கச்சி.... கவனமாய் இருக்க வேணும் கண்டியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் நல்ல கருத்தை பேசினால் யாருக்கும் விளங்காது 
அதுவே ஒரு 9MM பிஸ்டல் பேசினால் எல்லோருக்கும் இலகுவாக புரியுது. 
தமிழனின் மூளை அப்படி இருக்கும்போது 

நாம் யார் யாரையோ கைநீட்டுகிறோம் என்ற எண்ணம் எனக்கு 
1987இல் திலீபன் உண்ணாவிரதம் இருக்கும் காலத்தில்தான் 
கொஞ்சம் கொஞ்சமா புரிய தொடங்கிச்சு 

அதுக்கு முன்னம் நானும் மூளை சலவைக்கு ஆளாகி 
புலிக்கு செத்தவீடு செய்யவேணும் என்று திரிந்தவர்களில் நானும் ஒருவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

ஒரு மனிதன் நல்ல கருத்தை பேசினால் யாருக்கும் விளங்காது 
அதுவே ஒரு 9MM பிஸ்டல் பேசினால் எல்லோருக்கும் இலகுவாக புரியுது. 
தமிழனின் மூளை அப்படி இருக்கும்போது 

நாம் யார் யாரையோ கைநீட்டுகிறோம் என்ற எண்ணம் எனக்கு 
1987இல் திலீபன் உண்ணாவிரதம் இருக்கும் காலத்தில்தான் 
கொஞ்சம் கொஞ்சமா புரிய தொடங்கிச்சு 

அதுக்கு முன்னம் நானும் மூளை சலவைக்கு ஆளாகி 
புலிக்கு செத்தவீடு செய்யவேணும் என்று திரிந்தவர்களில் நானும் ஒருவன். 

அருமையான கருத்து.... மருதங்கேணி. 
இன்னும்... திருந்தாத, சனம், நம்ம சனம். 

ஒப்பாரி.... வைப்பதெற்கென்றால்.... முன்னுக்கு வந்து,  மூக்கு (சளி)  சிந்துவார்கள். tw_confounded:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வலிய வந்த தலைவனை அழிச்சுப்போட்டு வைக்கும் ஒப்பாரியே இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் வலிந்து அழைத்த தலைவனையும் அழிச்சுப்போட்டுக் கூடவே, மாரடிச்சு ஒப்பாரிவைக்க மோட்டுக்குடித் தமிழினம் ரெடி. :shocked:

இதற்குப் பின் புலத்தில்.... இயங்குவது,  மிக  அருகில் இருக்கும்,  அயல் நாடு என்றால்?
எம்மவர்களுக்கு... புத்தி எங்கே.. போனது? tw_warning:

படித்தும்.... பாடம், கற்காத.... மக்களையும், அரசியல் விபச்சாரிகளையும்... பார்க்க, 
மனது...  பொறுக்க முடியவில்லை. tw_cold_sweat:

Link to comment
Share on other sites

மிகவும் வெறுமையாக உள்ளது, 2009 களில் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கணங்களின் போது தவித்தது போன்ற ஒரு உணர்வு அப்போது கூட ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது அரசியல் ரீதியாக போராடிப் பார்க்கலாம் என்று, இன்று அதுவும் தகர்ந்த நிலையில் .....
 உங்களுக்கு முதல்வரை மாற்ற வேண்டும் என்றால் முதலில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்று கூடி கூட்டமைப்பின் தலைவரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கலாம்.....
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒன்றும் செய்ய முடியாது ஏனெனில் பிரபாகரன் உயிருடன் இல்லை என கொடூரமாக எக்காளமிட்ட ஒருத்தனிடம் சென்று , இனவழிப்பு தீர்மானம் கொண்டுவந்த , சோர்ந்து கிடந்த தமிழரை ஒன்று திரட்டி "எழுக தமிழ் " எழுச்சியை ஏற்படுத்திய ஒருவரை நீக்கும் படி கோரும் நீங்கள் எல்லாம்.....
 

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

இதற்குப் பின் புலத்தில்.... இயங்குவது,  மிக  அருகில் இருக்கும்,  அயல் நாடு என்றால்?
எம்மவர்களுக்கு... புத்தி எங்கே.. போனது? tw_warning:

சதி முயற்சியில் உள்ளவர்களின் குடும்பங்கள் உல்லாசமாக வாழ்வது அந்த அயல்நாட்டிலதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Rajesh said:

சதி முயற்சியில் உள்ளவர்களின் குடும்பங்கள் உல்லாசமாக வாழ்வது அந்த அயல்நாட்டிலதான். 

உண்மை.... சகோதரம். 

Link to comment
Share on other sites

 

என்ன ஒரு அவசரம் இன்னொருவருக்கு குழி பறிப்பதற்கு. அண்ணை எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் எனும் கூட்டத்திலொருவர்.

1-5-750x400.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

 

என்ன ஒரு அவசரம் இன்னொருவருக்கு குழி பறிப்பதற்கு. அண்ணை எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் எனும் கூட்டத்திலொருவர்.

1-5-750x400.jpg

இவை..... ஆர்..., எவர்,?
என்ற , கேள்விகளுப்பால்......
கொடுக்கும் முகத்திலும்,  வாங்கும்  முகத்திலிலும்,
பிரேத..... வாசனை  அடிக்குது, (டெட் பாடி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லஞ்சம் வாங்கத்தான் அரசியலுக்கு வந்தனான் ....உவர் யார் என்னை தடுக்க....

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

 

என்ன ஒரு அவசரம் இன்னொருவருக்கு குழி பறிப்பதற்கு. அண்ணை எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் எனும் கூட்டத்திலொருவர்.

1-5-750x400.jpg

ஒரு முறை இவர் சிவஞானம் தலமையில் ஜப்பானிய அரசின் தூதுக்குழுவினரை மாகாணசபை உறுப்பினர்கள் சந்தித்தார்கள் , அப்போது அவர்கள் ஜப்பான் அரசாங்கத்திடம் இருந்து என்ன உதவி எதிர்பார்க்கின்றீர்கள் என வினவ  , இவர்கள் அணைவரும் தங்களுக்கு வாகனம் கேட்டு உள்ளார்கள்  மர மண்டைகள் ......., நிலத்தடி நீர் மாசு படுதலால் பாரிய சவாலை எதிர் நோக்கும் குடாநாட்டுக்கு ஒரு சில கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தரும் படி கேட்டிருக்கலாம் ...! ஆனால் இவர்கள் தங்களுக்கு ஜப்பான்  வாகனம் கேட்டிருக்கிரார்கள்.....
சுவிஸ் தூதுக் குழு முதல்வரிடம்  அதே கேள்வியைக் கேட்க... அவரோ மக்களுக்கு 25 ஆயிரம் வீடுகள் கேட்டுள்ளார், அவ்வீடுகளை மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில் விடாமல் சுவிஸ் அரசையே நேரடியாக கட்டித் தரும் படி கேட்டுள்ளார்....

எவ்வளவு பெரிய வித்தியாசம்

அண்மையில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் தெரிவின் போது தனது உறவினருக்கு அதனை வழங்கும் படி வற்புறுத்தியவர் சிவஞானம், ஆனால் அதனையும் மீறி தகுதியானவர் தெரிவு செய்யப்பட , தனது உறவினருக்கு பதிவி கிடைக்காத கோபத்தில் புதிய அதிபர் பதவியேற்பதற்கு தடை போட்டு , தனது உறவினருக்காக மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவர் ..... கல்லூரியின் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் பேச்சு வார்த்தை நடாத்தி நீதியாக செயற்படும் படி கோரிய போதும் , அதனை புறம் தள்ளி தனது அராஜகத்தை தொடர்ந்தவர் இவர்.....! இறுதியில் கல்லூரியின் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் வடமாகண சபையின் முன்னால் போராட்டம் நடாத்த முனைந்த பின்னர் தான் இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
 

எவ்வளவு பெரிய வித்தியாசம்

அம்மணங்கள் வாழும் ஊரில் கோமணம் கட்டியவன் முட்டாள் என்பது போல் இப்படியான இனத்தை விற்று பிழைப்பு நடாத்தும் கோவேறுகள் மத்தியில்  , தனது இனத்துக்காக நீதியாக நின்ற ஒருவர் முட்டாளாக்த்தான் தெரிவார்

Link to comment
Share on other sites

சுயவிருப்பின் பேரில் இடப்பட்டவையா? வடமாகாண ஆளுனர்

 

 

நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ள கையொப்பங்கள் சுயவிருப்பின் பேரில் இடப்பட்டவையா? வடமாகாண ஆளுனர்
 

தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளவர்கள், சுய விருப்பின் பேரில் கையெழுத்திட்டுள்ளனரா என்பது குறித்து ஆராயவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டது.

தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உண்மையில் அவர்களுடைய சுய விருப்பின் பேரில் கையெழுத்திட்டுள்ளார்களா என்பது தொடர்பில் தாம் ஆராய வேண்டும் எனவும் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சத்தியக்கடதாசியை தாம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வடமாகாண ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியக்கடதாசியின் பிரகாரம் மாகாண சபையின் பெரும்பான்மையினர் அதில் கையொப்பம் இட்டிருந்தால், அதற்கமைய மாகாண சபையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான பலம் முதலமைச்சருக்கு இல்லை என தான் நினைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முதலமைச்சருக்கு அறிவித்து, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு அறிவிக்கப்படும் என ஆளுனர் தெரிவித்தார்.

தனக்கு பெரும்பான்மை ஆதரவு காணப்படுவதாக முதலமைச்சர் நிரூபிக்கும் பட்சத்தில் அவரால் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியும் எனவும் பெரும்பான்மையை நிரூபிக்காவிடின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் தெரிவித்த ஆளுனர் அதன் பின்னர் அடுத்த முதலமைச்சர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இந்த விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் அரசியல் அமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை இந்த பிரேரணையில் வட மாகாண சபையின் 18 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 17 பேர் நேற்றிரவு ஆளுனர் அலுவலகத்திற்கு சென்று, ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர்.

வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் எனவும், விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர் விடுமுறையில் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் நேற்று சபையில் அறிவித்த பின்னரே, முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://newsfirst.lk/tamil/2017/06/முதலமைச்சருக்கு-எதிரான-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அரசியலை விட மோசமான அரசியலாக மாறுதே மிக மிக கேவலம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரோடு   மல்லுக்கட்டுவதிலும், அவரின் செயற்பாடுகளில் பிழை பிடிப்பதிலும், பெயரை நாறடிப்பதிலும், அவரை ஓரம் கட்டுவதிலும் காலத்தைக் கழித்தார்களே ஒழிய நல்ல காரியம் எதுவும் செய்தாரில்லை. யாரும் செயல் வீரரை கண்டால்  அவர்களை ஒழித்துக்கட்டி வெறும் சொல்வீரராய் வலம் வருவதில் அவ்வளவு இன்பம். ஆனால் முதல்வர்   கதிரையில் இருந்து அவரை ஒன்றும் செய்ய விடாமல் அவமானப் படுத்துவதே இவர்களின் வேலை. அதை விட்டு மக்களுக்கு தன்னால் இயன்ற வேறு வழியில்  அவரால் உதவலாம். அதுக்கும் முட்டுக்கடடை  போடும் உந்த உதவாக்கரைக் கூட்டம். பூண்டோடு வீட்டுக்கு அனுப்ப மக்கள்  முடிவு எடுக்க வேண்டும். கள்ள வோட்டு போடுறதை பகிரங்கப்  படுத்தி வெளியேற்ற வேண்டும். 

Link to comment
Share on other sites

முதலமைச்சருக்கு நீங்கள் செய்தது தர்மமாகுமோ? நீதியாகுமோ?

 
14920.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததால் தமிழ் மக்களின் இதயங்கள் தணலாய் எரிகின்றன.
 
எங்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு தலைவனைப் பெற்றோம் என்ற ஆறுதல் ஒன்றுதான் எங்களிடம் இருந்தது.
 
அதற்கும் உலை வைக்கும் துரோகத்தனத்தை என்னவென்று சொல்வதென மக்கள் நெக்குருக; குரல் அடைக்கக்  கருத்துரைப்பதைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.
 
ஒரு புறத்தில் தலைவன் என்றால் விக்னேஸ்வரன் போன்றல்லவா இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அட! நாம் தமிழர் என நெஞ்சு நிமிர்ந்து கொள்கிறது.
 
அதேவேளை மிகப்பெரும் தலைவனுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்  கொண்டு வந்து உலகம் சிரிக்கும் வண்ணம்  கூத்தாடும் குப்பைத்தனத்தை நினைக்கும் போது,
 
இறைவா! ஏன்தான் இந்தத் தமிழினத்தில் எங்களைப் படைத்தாய் என்று மனம் ஏங்கிக் கொள்கிறது.
 
ஆம், வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தயாரித்து;
 
அதில் சிலர் கையயாப்பமிட்டு; வடக்கின் ஆளுநரிடம் கையளிப்பதற்கு முன்னர் பல தடவைகள் சிந்தித்திருக்க வேண்டாமோ!
 
அதிலும் நடுநிலை காக்க வேண்டிய  உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநர் கூரேயிடம் கையளித்தார் எனும் போது, வள்ளுவத்தின் நீதி புதைக்கப்பட்டதல்லவா?
 
காலைப்பொழுதில் முதலமைச்சருக்கு வாழ்த்து, இரவுப் பொழுதில் முதலமைச்சருக்கு எதி ராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைய ளிப்பு. இது அவைத் தலைவரின் நடுவு நிலைக்கு அழகா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.
 
ஐயா! ஆரை நம்புவது? தர்மம் அந்தளவுக்கு விலை போய்விட்டதா? பதவி ஒன்றுதான் இந்த உலகில் பெயர் தரக்கூடியதா? பதவி கிடைத்ததால் அழிவைச் சந்தித்தவர்களின் வரலாறு இல்லையா? ஏன்தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள்.
 
அடுத்த தேர்தல் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? அல்லது சிந்திக்க யாராவது தடை போடுகிறார்களா? சபை உறுப்பினர் ஒருவர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி... என்று பாடுகிறார். 
 
ஐயா! பாட்டின் பொருள் யார்க்குரியது. நீங்கள் பாடிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
 
இறுதியாக ஒன்று,  கெளரவ மாகாண சபை உறுப்பினர்களே! உங்கள் மனச்சாட்சிப்படி முடிவு எடுங்கள்.
 
மக்களின் மனநிலை அறிந்து அதற்கு மதிப்புக் கொடுங்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கரத்தைப் பலப்படுத்துங்கள். நிச்சயம் தமிழ் மக்கள் உங்களைப் போற்றுவர்.
 
தென்னிலங்கை அரசுடன் - பேரினவாதத்துடன் சேர்ந்து அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்களின் சதித்திட்டத்துக்கு உங்கள் எதிர் காலத்தைப் பாழாக்கி விடாதீர்கள். உண்மையை உணர்ந்து; தமிழ் மக்களின் அவலம் அறிந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பக்கபலமாக இருங்கள்.
 
போர் தந்த பெருந்துயர் போக்க நெஞ்சுக்கு நீதியாக முடிவெடுங்கள். இது இந்த மண்ணில்  நிகழ்ந்த தியாகத்தின் பெயரால் கேட்கப்படுகிறது.

http://valampurii.lk/valampurii/content.php?id=14920&ctype=news

 

 

vikneshwaran

கொழும்பிலேயே தீட்டப்பட்டது சதி! மக்கள் மத்தியல் அம்பலப்படுத்தினார் சி.வி.விக்னேஸ்வரன்!

முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்குவதற்கான திட்டம் கொழும்பிலேயே வகுக்கப்பட்டதையும் அதனை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறியவைத்ததையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்,

வடக்கு முதல்வருக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுத்துவருகின்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று முழு அடைப்புப் போராட்டமும் பேரணிகளும் நடைபெற்றுவருகின்றன.

முன்னதாக யாழ்ப்பாணம் நல்லூரில் ஒன்றுதிரண்ட பல்லாயிரம் மக்கள் முதலமைச்சர் அலுவலத்தில் முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

அதன் போது மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன்,

தமிழரசுக்கட்சி எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும், அதன் பின்னான திட்டங்கள் தொடர்பிலும் மக்களுக்கு அம்பலப்படுத்தினார்.
தொடர்ந்தும் மக்கள் பணி ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

http://tamilleader.org/?p=2300

Link to comment
Share on other sites

’நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் சு.கவுக்கும் தொடர்பில்லை’
 

 

"வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர்  முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை" என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமனாதனால் இன்று (16) வெளியிடப்பட்ட  ஊடக அறிக்கையிலேயே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிரான கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகும். இதன் தலைவரே இந்நாட்டின் ஜனாதிபதியாகவும் இருக்கிறார்.

எமது ஜனாதிபதியின் கொள்கையே இன்று இலஞ்ச ஊழல் அற்ற நாட்டினை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது. மட்டுமன்றி இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுத்து வருகின்றார்.

இப்படியிருக்க, வடக்கு மாகாண சபையின் முதல்வர் இலஞ்ச, ஊழல்   தொடர்பாக எடுத்த எந்த ஒரு முடிவுக்கும் நாம் எதிர் செல்லவில்லை. அவ்வாறான பணிப்புரைகள் எதையும் ஜனாதிபதி எமக்குத் தெரிவிக்கவும் இல்லை.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, வடக்கு முதலமைச்சருக்கு எதிராக செயல்படுவதென்பது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவே ஆகும்.

இவர்களால் வெளியிடப்பட்ட முடிவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்போ பொறுப்போ கிடையாது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து வடக்கு வாழ் தமிழ் உறவுகளுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கு முதலமைச்சர் இலஞ்ச ஊழலுக்கு எதிராக முடிவெடுக்கும் போது  அதை தவறு என இன்னொரு கட்சியினரே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவி நீக்க செயல்படுகின்றனர் என செய்திகள் குறிப்பிடும் இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயரை இதில் பயன்படுத்தி கொள்வது ஆரோக்கியமானதல்ல.

வடக்கு முதலமைச்சரின், மக்கள் நலன் சார்ந்த நல்ல விடயங்களையும் செயல்பாடுகளையும் முதன் முதலில் வரவேற்றவர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்வடைகின்றேன்.

எல்லா விதத்திலும் துன்ப துயரங்களை அனுபவித்த எம்மக்களின் வலிகளை நாம் உணரவேண்டும். இதை உணராத சில அரசியல்வாதிகள் எதற்கும் கட்டுப்படாமல் மற்றவர்களின் அறிவுரைகளை பெறாமலும் எடுக்கும் முடிவுகள் வடக்கு  மக்களுக்கு எதிராக எடுக்கும் முடிவுகளாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாட்டின் அனைத்து மக்களினாலும் இலஞ்ச, ஊழலற்ற நல்லாட்சி  அரசாங்கம் என, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனாதிபதியை தலைவராக  பிரதிபலிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்குமான இவ்வாறான செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நம்பிக்கையில்லாப்-பிரேரணைக்கும்-சு-கவுக்கும்-தொடர்பில்லை/71-198777

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.