• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

ஜோக்

 

மகள் காயத்ரியின் குரல் போனில் உற்சாகமாய் ஒலித்தது.‘‘அம்மா... நான் எழுதுன ஜோக் ஒண்ணு பத்திரிகையில வந்துருக்கும்மா. படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லேன்!’’ - போனை வைத்துவிட்டாள்.
4.jpg
கமலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘‘இது எவ்வளவு பெரிய பெருமை. இதுக்காகவே அவ புகுந்த வீட்டுல அவளைக் கொண்டாடுவாங்க. எனக்குத்தான் மருமகளா ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே... ஒண்ணும் தெரியாது!’’ - எரிச்சலாய் சொல்லிக்கொண்டே சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள்.

மருமகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லி, தெருமுனைக் கடையில் அந்தப் பத்திரிகையை வாங்கி வரச் செய்தாள். ‘‘என் மகளைப் பார்த்து நீயும் இது மாதிரி விஷயத்தை எல்லாம் கத்துக்க. புரியுதா? எங்கே அந்த ஜோக்கை சட்டுன்னு உரக்கப் படி பார்க்கலாம். காதாரக் கேப்போம்!’’ - பரபரத்தாள் கமலாம்மாள்.பக்கம் புரட்டி தேடி கண்டுபிடித்துப் படித்தாள்.

‘‘என்ன கலா திடீர்னு ஸ்வீட் தர்றே?’’‘‘என் மாமியார் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க!’’‘‘நீ அதிர்ஷ்டக்காரிடி!’’ேஜாக் முடிந்து பத்து ரூபா பரிசு என்றிருந்தது.பத்திரிகையை மாமியார் கையில் திணித்துவிட்டு, நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தாள் மருமகள். மீண்டும் காயத்ரியிடமிருந்து போன்... எடுத்தாள்.‘‘ஜோக் எப்படிம்மா?’’‘‘நல்லாயில்லே’’ - போனை வைத்து விட்டாள் கமலா.                    

kungumam.co.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    

   ஒரு நிமிடக் கதைகள்     பேரம்
   காரிலிருந்தபடியே நடமாடும் காய்கறிக்காரியிடம் பேரம் பேசினார் அந்தத் தொழிலதிபர். “இந்தாம்மா, தக்காளி ஒரு கிலோ பன்னிரண்டு ரூபாய்னு கொடுத்தாக் கொடு. அதுக்கு மேல ஒரு பைசா தரமாட்டேன். கோயம்பேடுக்குப் போனா பத்து ரூபாய்க்கு சீப்படுது, தெரியுமில்லே!” என்று சளைக்காமல் பேசி, குறைவான விலைக்கு வாங்கினார். அது போலவே பழக் கடைக்காரன், பூக்காரி இவர்களிடமும் விலையை அடித்துப் பேசி குறைவான விலைக்கே வாங்கினார்.
   அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பிய டிரைவர் கணேசன், தன் மனைவியிடம் முதலாளியின் கஞ்சத்தனத்தைப் பற்றிச் சொல்லி, “அவருக்குக் காசு பணமா இல்லே? நேத்துகூட தன் வொய்ஃப் பர்த்டேக்கு அறுபதாயிரம் ரூபாய்க்கு தங்க நெக்லஸ் வாங்கி பிரசென்ட் பண்ணாரு. சின்ன வியாபாரிங்க கிட்டே இப்படி அடாவடி பண்றதா ஒரு பெரிய மனுஷனுக்கு அழகு?” என்றான்.
   “நீங்க பேசாம இருங்க. யாரும் நஷ்டத்துக்கு ஒரு பொருளை விக்க மாட்டாங்க. உங்க முதலாளி மாதிரி பணக்காரங்க பேரம் பேசாம சொன்ன விலையைக் கொடுத்து வாங்கிட்டுப் போனா, அப்புறம் நமக்கும் அதே விலை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. நாம பேரம் பேசினா, சாவு கிராக்கி பட்டம்தான் கிடைக்கும் நமக்கு!” என்று ஒரே போடாகப் போட்டாள் கணேசனின் மனைவி.
   - எஸ்.நடராஜ்
    
    
    
    
     யாரோ நினைச்சுக்கிறாங்க!
   ஆபீஸில் லன்ச் நேரம். சாப்பிட்டுக்கொண்டு இருந்த கமலாவுக்கு திடீரென்று புரைக்கேறியது. அவள் தலையில் தட்டி, குடிக்கத் தண்ணீர் கொடுத்த தோழி கல்பனா, “இந்த நேரத்துல யாருடி உன்னை நினைச்சுக்கறது? உன் வீட்டுக்காரரா?” என்றாள்.
   “ஆபீசுக்குப் போயிட்டா அவருக்கு உலகமே மறந்துடும். என் பிள்ளை ரமேஷ் பெங்களூருல தங்கிப் படிச்சுட்டிருக்கான். ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்திருக்கும் பாவம், அவன்தான் நினைக்கிறான்!” என்றாள் கமலா.
   பெங்களூருவில்... சாப்பிட்டுக்கொண்டு இருந்த ரமேஷ§க்குப் புரைக்கேறியது.
   “டேய் ரமேஷ், ஊர்ல உன்னை யாரோ நினைச்சுக்கறாங்கடா! அதான், இப்படிப் புரைக்கேறுது உனக்கு!” என்றான் அருகில் இருந்த நண்பன்.
   “ஊர்ல இல்லடா! இங்கே நம்ம க்ளாஸ்ல ரெண்டாவது பெஞ்ச்ல உட்கார்ந்திருப்பாளே தீபிகா, அவதான் நினைக்கிறா!” என்றான் ரமேஷ்.
   - கருப்பசாமி பாண்டியன்
    
    
     டேஸ்ட்
   “நாளைக்கு என்ன சமையல் பண்ணட்டுங்க?” என்று ஆவலோடு கேட்டாள் திலகா.
   “நீயும்தான் தினம் தினம் இந்தக் கேள்வியைக் கேட்கறே. நான் என்னிக்காவது மத்தவங்களை மாதிரி எனக்கு இது பண்ணிப் போடு, அது பண்ணிப் போடுன்னு கேட்டிருக்கேனா? நீ எது செஞ்சு போட்டாலும், மறுக்காம சந்தோஷமா சாப்பிட்டுட்டுப் போறேனா, இல்லையா? அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி?” என்ற சுரேஷ் சாப்பிட்டு முடித்துக் கை கழுவிவிட்டு, தன் அறையில் போய் உட்கார்ந்துகொண்டு, மும்முரமாக ஏதோ எழுதத் தொடங்கினான்.
   “என்ன அப்படி எழுதறீங்க?” என்றபடி அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் திலகா.
   “அதுவா... இன்னிக்குக் காலையில ‘மல்லிகை’ பத்திரிகைலேர்ந்து பேசினாங்க. அடுத்த வாரம் சினிமா ஸ்பெஷலாம்! அதுக்குப் பொருத்தமா சினிமாவை மையமா வெச்சு அர்ஜென்ட்டா ஒரு சிறுகதை வேணும்னு கேட்டாங்க. என்னதான் நானே எழுதி அனுப்புற கதைகளைப் பாராட்டி பப்ளிஷ் பண்ணினாலும், அவங்க தேவைக்கேற்ப எழுதி அனுப்புறதுல கிடைக்கிற சந்தோஷமே தனி! என்ன சொல்றே..?” என்றவன் திலகா வின் பார்வையில் இருந்த ஆழத்தைப் புரிந்துகொண்டவனாக, “சரி, நாளை வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு பொரியலும் பண்ணி ஜமாய்! என்ன...” என்று அவள் கன்னத்தைத் தட்டினான்!
   - ஆர்.உஷா
    
    
    
    
    
     வழிப்பறி!
   மாதத்தின் முதல் தேதி. சுளையாக சம்பளம் ரூ.25,000 என் பேன்ட் பாக்கெட்டில்! ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தும், எவனோ ஒரு ராஸ்கல், பஸ்ஸின் குலுக்கலைப் பயன்படுத்தி, சட்டென்று என் பேன்ட்டிலிருந்து பர்ஸை உருவிவிட்டான். சுதாரித்து எவன் என்று திரும்பிப் பார்ப்பதற்குள், பஸ் ஒரு திருப்பத்தில் மெதுவாகச் செல்ல, சட்டென்று ஒரு தடியன் குதித்து ஓடத் தொடங்கினான்.
   நான் ஒன்றும் பெரிய தைரியசாலி இல்லை என்றாலும், பெரிய தொகை இழப்பு என்பது என்னுள் ஒரு வேகத்தை உண்டுபண்ண, நானும் சட்டென்று குதித்து அவன் பின்னாலேயே துரத்திப்போய் மடக்கி, “எடுடா பர்ஸை! எவன்கிட்ட... மவனே, கொன்னுடுவேன்!” என்றேன். அவன் தயக்கத்தோடு தன் சட்டைப் பையி லிருந்து ஒரு பர்ஸை எடுத்து என்னிடம் நீட்டினான்.
   சட்டென அதைப் பிடுங்கிக்கொண்டு விறுவிறுவெனத் திரும்பி நடந்து, அந்த வழியாக வந்த அடுத்த பஸ்ஸில் தாவி ஏறினேன். உள்ளே சென்று, என் பணம் சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பதற்காக பர்ஸைத் திறந்தேன். ரூ.12,000 பணமும், கூடவே அவனுடைய போட்டோவும், ஐடென்டிடி கார்டும் இருந்தன!
   - ரவி இன்பஉதயன்
    
    
    
    
     ராசி
   ராசி, சகுனம், சென்டிமென்ட் இதிலெல்லாம் அதிகம் நம்பிக்கை உள்ளவன் வாசு. குறிப்பாக, நியூமராலஜியில் ரொம்ப நம்பிக்கை. வாடகைக்கு வீடு பார்ப்பதாக இருந்தால் கூட தன் பிறந்த நாள் எண், பெயர் எண் இவற்றோடு பொருந்திப் போகும்படியான கதவு எண்ணாகத் தேர்ந் தெடுத்துதான் குடி போவான்.
   எட்டாம் எண் என்றால், வாசுவுக்கு அப்படியரு அலர்ஜி! பெண் பார்க்கும்போதுகூட எட்டாவதாக வந்த ஜாதகத்தை பெண் எப்படி, என்ன, ஏது என எதுவும் விசாரிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு மறுத்துவிட்டான். அவ்வளவு ஏன்... அவன் ஆபீஸுக்குப் போவதற்கு 8-ஏ, 7-ஜி என இரண்டு பஸ்கள் உண்டு. என்னதான் காலியாக இருந்தாலும், 8-ம் நம்பர் பஸ்ஸில் ஏறவே மாட்டானே!
   நம்பர் பொருத்தம் எல்லாம் பார்த்து, வாசு ஒரு டூ-வீலர் வாங்கினான். ஆனால், பாவம்... அதை ஓட்டிச் செல்லும் கொடுப்பினைதான் அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. பின்னே... ‘எட்டு’ போட்டுக் காட்டினால்தான் டிரைவிங் லைசென்ஸ் தருவோம் என்று படுத்தினால்..?
   - ரஜ்னீஷ்
    
    
    
     கல்யாணம் எப்போது?
   23 வயதில்...
   “முதல்ல எம்.காம்., முடிக்கிற வழியைப் பாருடா! அப்புறம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கலாம்!”
   30 வயதில்...
   “உத்தியோகம்புருஷ லட்சணம். கல்யாணம் எப்ப வேணா பண் ணிக்கலாம்! முதல்ல உருப்படியா ஒரு வேலை தேடிக்கிற வழியைப் பாரு!”
   35 வயதில்...
   “பத்தாயிரம் ரூபா சம்பளம் இந்தக் காலத்துல நாக்கு வழிக்கக்கூடக் காணாதேடா! சம்பளம் கொஞ்சம் உசரட்டும்... ஜாம் ஜாம்னு பண்ணிட லாம்!”
   40 வயதில்...
   “குடும்பம், குழந்தை குட்டின்னு ஆயாச்சுன்னா அப்புறம் சேமிக்கவே முடியாது. முதல்ல ஒரு வீடு... அட் லீஸ்ட் ஒரு ஃப்ளாட்டாவது வாங்குற வழியப் பாரு! ஆயிரம் பொண்ணுங்க ஜாதகம் தன்னால தேடி வரும்!”
    
   45 வயதில்...
   “கிட்டத்தட்ட அரைக் கிழவன் ஆயாச்சு! இனிமே எவடா உனக்குக் கழுத்தை நீட்டுவா? அதது அந்தந்தக் காலத்துல நடக்க வேணாமா? உனக்கே கல்யாணத்துல அக்கறை இல்லாதப்ப, நான் என்ன பண்ணட்டும், சொல்லு?”
   - ஆர்.நரசிம்மன்
    
    
    
    
    
     நல்ல துணை!
   “சிவா! வீணா அந்த விஜியையே நினைச்சு ஏங்கிட்டு இருக்காதே! அவ என்ன பெரிய கிளியோபாட்ராவா? உன்னையே நினைச்சு உருகிட்டிருக்கா சுமதி. அவளையே லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்க! அதான் நல்லது! ‘வசந்தமாளிகை’ படம் பார்த்திருக்கியா, அதுல சிவாஜி சார் ஒரு வசனம் சொல்வார்... நாம விரும்புற பெண்ணைவிட, நம்மை விரும்புற பெண்தான் மேல்னு! அதான் நிஜம்!”
   நண்பன் குமார் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை மாற்றினான்.
   மறுநாள்... சுமதியிடம் என் காதலைச் சொல்லிவிட்டுப் பரவசமாக நின்றேன்.
   “ஸாரி சிவா! நாம விரும்புறவரைவிட நம்மை விரும்புற வர்தான் மேல்னு குமார் சொல்லிட்டிருந்ததை நானும் கேட்டேன். அதனால, நான் என் மனசை மாத்திக்கிட்டு, என்னை விரும்புற கணேஷையே கணவனா ஏத்துக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்!” - சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் சுமதி!
   - ஆர்.ஷைலஜா
   https://www.vikatan.com
  • By நவீனன்
   மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."
    
    
   ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
   அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.
   வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....
   ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
   நடந்து சென்றே...
   ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்
   முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
   அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
   ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!
   இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
   சம்பாதித்து விடுவார்!
   பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;
   ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!
   காரணம்
   ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
   ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
   சிறிது நேரத்தில்
   பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
   எடைபோட... அதில் ஒன்பது கிலோ
   மட்டுமே இருந்தது!....
   அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை!   ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
   இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!
   இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
   அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!
   நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!
   நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!
   "கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..
   அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.
   வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!
   இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?  கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,
   இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.
   அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..
   ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.
   "இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
   மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....
   "தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
   இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
   அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!
   இது தான் உலகநியதி!
   நாம் எதை தருகிறோமோ
   அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
   நல்லதை தந்தால் நல்லது வரும்,...
   தீமையை தந்தால் தீமை வரும்!
   வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
   ஆனா....
   நிச்சயம் வரும்!
   ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!
   மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."
   படித்ததில் பிடித்தது
    
     https://www.facebook.com/ibctamiljaffna
  • By நவீனன்
       பால்ய பொழுதொன்றில்
       - குலசிங்கம் வசீகரன்

   பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன்னை தாண்டிப்போவது சைக்கிளா, மோட்டார்சைக்கிளா அல்லது வேறு வாகனமா என்பது செழியனுக்கு நன்றாக விளங்கியது.

   யாராவது தெரிந்தவர்கள், தான் நடந்து போவதைப் பார்த்து, ‘‘வாடாப்பா... இறக்கிவிடுறன்...’’ என்று கேட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தில் தலையை நிமிர்த்தவேயில்லை. ‘எனக்கென்று சைக்கிள் இல்லை. அதனால் யாருடனும் டபிள்ஸ் போவதில்லை...’ மனசுக்குள் ஒரு வன்மம்.‘ஏன் கடவுள் எனக்கு மட்டும் இப்பிடி பண்ணிடறார்? கூடப்படிக்கிற கன பெடியள் சைக்கிள்ள வாறாங்கள். நான் மட்டும்தான் நடந்து போறன்...’ இதுதான் செழியனின் மனதிலுள்ள கோபம். செழியனின் தந்தை ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர். தாயாரும் ஓர் ஆங்கில ஆசிரியர்தான். செழியன் இரண்டாவது பிள்ளை. ஓர் அக்கா, ஒரு தங்கச்சி என அளவான குடும்பம்.

   இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இந்த வருமானத்தில் எவ்வாறு அவர்களைக் கரையேற்றுவது என்ற எண்ணத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு வெளிநாடு செல்ல தீர்மானித்தார் செழியனின் தந்தை. ஆனால், தாய்க்கு அதில் சம்மதமில்லை. தந்தையோ தன் நண்பர்கள் சிலர் அவ்வாறு சென்று நல்ல வருமானத்தை ஈட்டுவதாகக் கூறி, தான் நினைத்தபடியே வெளிநாடு சென்றார். அதற்காக சில லட்சங்கள் கடனும் பட்டார். வெளிநாட்டு வருமானத்தில் விரைவிலேயே கடனையும் திருப்பிக் கொடுத்து பிள்ளைகளுக்கும் பணம் சேர்க்கலாம் என நம்பினார்.

   ஆனால், போன நாட்டில் அவர் எண்ணியபடி வருமானத்தை ஈட்டமுடியவில்லை. கடனாக வாங்கிய பணத்திற்கான வட்டியும் முதலுமே அவரால் அனுப்பக் கூடியதாக இருந்தது. போதாததற்கு ஒருமுறை வங்கியில் போடுவதற்கென தபாலில் அனுப்பியிருந்த காசோலையை கொழும்பு தபாலகத்தில் வேலைபுரிந்தவர்கள் சிலர் எடுத்து காசாக்கியிருந்தார்கள். அதனால் ஒருமாதம் வட்டியும் முதலும் செலுத்த முடியவில்லை. கடந்தமுறை விடுமுறையில் வந்தபோது கொழும்பிலேயே நின்று பொலீசில் முறைப்பாடுகள் செய்து அலைந்து திரிந்து விட்டுத்தான் ஊருக்கு வந்திருந்தார். தாய்க்கு இவையெல்லாம் மிகவும் மன உளைச்சலையும் வேதனையையும் கொடுத்தது.
    
    

   ‘‘அப்பவே நான் சொன்னனான். உந்த வெளிநாட்டு வேலை ஒண்டும் தேவையில்லை, கஞ்சியோ கூழோ எல்லாரும் ஒண்டா இருந்து குடிப்பமெண்டு...’’தந்தைக்கு அது இப்போது விளங்கியிருந்தாலும் காலம் கடந்த ஞானமாகவே இருந்தது. இடைநடுவில் வேலையை விட்டுவர முடியாத நிலை. அவர் விடுமுறை முடிந்து செல்லும் முன்னர் காசோலையை மாற்றி பணத்தை எடுத்தவர்களை கண்டுபிடித்த பொலீசார் பணத்தை மீளவும் தந்தைக்கு வழங்கினார்கள். அதோடு அந்த பிரச்னை ஓரளவு ஓய்ந்தாலும், வட்டிப்பணம், முதல் என்பவற்றையே அவரால் ஒவ்வொரு மாதமும் அனுப்ப முடிந்தது. இப்போது தாயின் வருமானம் மட்டுமே வீட்டுச் செலவுகளுக்கு.

   தந்தை வெளிநாட்டில் வேலை, தாய் அரச உத்தியோகம். ஆனாலும் வருமானம் அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு அத்தியாவசிய விடயங்களில், முக்கியமாக சாப்பாட்டில் எந்தவித குறையும் விடக்கூடாது என்பதில் தாய் கவனமாக இருப்பார். அப்படி இப்படி என்று கொஞ்சம் மிச்சம்பிடித்து சேமித்தாலும் அதுதான் வருடப்பிறப்பு, தீபாவளி, பிறந்தநாள் என்று மேலதிக செலவுகள் வரும்போது கைகொடுக்கும். இருந்தாலும் அந்தமாதிரியான விசேட தினங்களுக்காக அனைவருக்கும் புது ஆடைகள் வாங்குவதென்பது கூட சிலவேளைகளில் முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறான நிலையில் செழியனின் மனக்குமுறலை தாயால் எவ்வாறு உடனடியாகத் தீர்த்து வைக்க முடியும்?

   செழியன் இரவில் படுக்கையில் மற்றவர் அறியாவண்ணம் தன் நிலையை பெரிய சோகமாக நினைத்து வராத அழுகையை வலுக்கட்டாயமாக வரவைத்து அழுவான். அதேபோலத்தான் பாடசாலைக்கும் ட்யூஷனுக்கும் போகும்போதெல்லாம் யாரோடும் டபிள்ஸ் போக மாட்டான். எல்லாம் ஒருவித வீம்புதான். அக்காவிடம் மட்டும் தன் ஆசையைச் சொன்னான். தமக்கையாருக்கு தம்பி மீது பாசம் அதிகம். உருகி உருகி அன்பைப்பொழிவார். தம்பியார் படுக்கையில் அழுவதும் அதற்கான காரணமும் தமக்கைக்குத் தெரிந்தே இருந்தது. தம்பியுடன் கல்வி கற்கும் மற்றைய பெடியள் பலரும் சைக்கிளில் பாடசாலைக்கு, ட்யூஷனுக்கு எல்லாம் சென்று வரும் போது தன் தம்பி மட்டும் நடந்து போய் வருவது அவருக்கும் மிகப்பெரிய குறையாகவே தெரிந்தது.

   இறுதியில் தம்பியும் வாய்விட்டு தனது விருப்பத்தைக் கேட்டதும், தாயிடம் சென்று, “அம்மா, தம்பிக்கு உடன சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோ. அவனும் மற்ற பெடியள் மாதிரி சைக்கிள்ள போய்வரோணும்...” என்றார். தாய்க்கும் ஏற்கனவே ஓரளவு விஷயம் விளங்கியே இருந்தது. செழியன் நடந்தே எங்கும் போய்வருவதைப் பார்க்கும்போதெல்லாம் எப்படியாவது மகனுக்கு சைக்கிள் ஒன்று வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று  எண்ணியிருந்தார். மகள் வந்து சொன்னதும், ‘‘அவன் நடந்து திரியிறது எனக்கும் கவலைதான் பிள்ளை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளட்டும். அடுத்த மாதம் அரியேர்ஸ் வர இருக்கு. வாங்கிக் குடுக்கிறன்...” என்றார்.

   தாய் சைக்கிள் வாங்கித்தர சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதை அறிந்த நேரத்தில் இருந்து செழியனின் கால் நிலத்தில் படவில்லை. அடிக்கடி மருதடியில் இருந்த ராஜன் சைக்கிள் கடைக்கு போய் அங்கு நிற்கின்ற சைக்கிள்களைப் பார்ப்பதும், என்ன என்ன சோடனை செய்யலாம், ஒவ்வொன்றும் என்ன விலை என்று விசாரிப்பதிலுமே கூடிய நேரத்தை செலவிட்டான். அடுத்த மாத இறுதியில் அம்மாவின் சம்பள அரியர்ஸ் கிடைத்து சைக்கிள் வாங்கும் நாளும் வந்தது. மாலையில் செழியனையும் கூட்டிக்கொண்டு தாயார் கடைக்கு புறப்பட்டார்கள். தமக்கைக்கு கைகாட்டிவிட்டு துள்ளல் நடை நடந்தபடி தாயோடு புறப்பட்டான் செழியன். சைக்கிள் கடைக்கு இருவரும் சென்றார்கள்.

   இவர்களைக் கண்டதும் முதலாளி, “என்ன டீச்சர், மகன் ஒவ்வொரு நாளும் கடைக்கு வந்து சைக்கிள்களை சுத்தி சுத்தி பாத்திட்டு போறார், சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோவன்...” என்றார், “ஓம், அதுக்குதான் வந்தனாங்கள். நல்ல சைக்கிளா ஒண்டு தம்பி கேக்கிற மாதிரி வடிவா பூட்டிக் குடுங்கோ...’’ “அவற்ற விருப்பப்படியே நல்லதா ஒரு சைக்கிள் பூட்டிக் குடுக்கிறன் டீச்சர்...” என்று கூறியபடி கடையின் உள்ளே திரும்பி வேலைக்கு நின்ற பெடியனைப் பார்த்து, “தம்பியை உள்ள கூட்டிப்போய் எந்த சைக்கிள் வேணும் எண்டு கேட்டு, அதுக்குத் தேவையான சாமான்களையும் எடுத்துக்கொண்டு வா...’’ என்றார்.

   செழியன் கடைப்பெடியனுடன் உள்ளே சென்று, தான் பார்த்துவைத்திருந்த லுமாலா சைக்கிளைக் காட்டினான். அதை கொண்டு வந்து கடைவாசலில் விட்டுவிட்டு உள்ளே சென்று சொக்கன்சோர், ரோலிங் பெல், ஒரிஜினல் லுமாலா சீட், பார் கவர், சில்லுக்குரிய பூக்கள், அழகிய மட்காட் லைட் என செழியன் கற்பனைசெய்து வைத்திருந்த சைக்கிளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து கரியரில் வைத்தான்.
   ‘‘சேர்விஸ் பண்ணி எல்லாம் பூட்ட ஒன்பதினாயிரத்தி அறுநூறு வருது டீச்சர்...’’ என்றார் முதலாளி. அம்மா காசை எண்ணிக்கொடுத்து சீட்டை வாங்கினார்.

   செழியன் சைக்கிளை பொருட்களுடன் சேர்த்து மெதுவாக உருட்டிக்கொண்டு கடையைச் சுற்றி பின்புறம் சென்றான். அங்குதான் சேகரம் அண்ணாவின் சைக்கிள் திருத்தும் கடை இருக்கிறது. ராஜன் சைக்கிள் கடைக்கு தேவையான சைக்கிள்களை பூட்டிக் கொடுப்பதும், தனியாக திருத்த வேலைகளும் செய்து கொடுப்பார்.

   சேகரம் அண்ணா சைக்கிள் திருத்துவதை வகுப்பு முடிந்து வரும் வழியில் சில வேளைகளில் பாத்துக்கொண்டு நிற்பது செழியனின் பொழுதுபோக்கு. அதனால் ஏற்கனவே சேகரம் அண்ணாவுடன் செழியனுக்கு அறிமுகம் இருந்தது. அண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சிபொங்க, ‘‘சேகரம் அண்ணை, இது என்ர சைக்கிள். அம்மா வாங்கித்தந்தவ. வடிவா கழுவிப்பூட்டித் தாங்கோ. முதலாளி கழுவிப்பூட்டவும் சேர்த்து காசு எடுத்திட்டார்!’’ என்றான்.
    
   (அடுத்த இதழில் முடியும்) http://www.kungumam.co.in
  • By நவீனன்
   தீர்ப்பு!  ஒரு நிமிடக் கதை
    

           தீர்ப்பு!
   அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் டென்ஷன்படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மைதான் வேண்டும் என்று அடம்பிடித்து அழுதுகொண்டு இருந்தான் அவன். ‘‘தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?’’ என்று தன் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர்.
   ‘‘அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சிடும்னுதான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல... கோர்ட்டிலேயும் இதுமாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்துடாதீங்க!’’ என்று விசும்பினாள் அவள். தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் கணேசன்!
   - கலா
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    

   ஒரு நிமிடக் கதைகள்     ஜடம்!
   காலையில் ஆபீஸுக்குக் கிளம்பும் அவசரத்தில்கூட மனைவி கீதாவை, ‘‘பன்னாட... பன்னாட... அறிவு இருக்கா உனக்கு? ஒழுங்கா ஒரு வேலை செய்றியா? அறிவு கெட்ட முண்டம்’’ என்று சரமாரியாகத் திட்டிவிட்டுத்தான் கிளம்பினான் ரகு.
   காரணம் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. வழக்கமாகச் சாப்பிடும் அளவைவிட அவன் தட்டில் ஒரு இட்லி அதிகம் வைத் திருப்பாள். அதற்கு ஒரு திட்டு! கேட்டால்,
   ‘‘எதிர்த்துப் பேசாதே! நான் கத்தினா அமைதியா கேட்டுக்க. ஆபீஸ்ல ஏகப்பட்ட டென்ஷன். நான் திட்டறது, கோபப்படறது எல்லாம் உன்கிட்டதான் முடியும். அதனால உணர்ச்சியற்ற ஜடமா இரு!’’ என்பான்.
   அன்று இரவு... படுக்கை அறையில், அவன் அவளை ஆசையுடன் அணைத்த போது, ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
   ‘‘என்னடி இது... உணர்ச்சியற்ற மரக்கட்டை மாதிரி படுத்துக் கிடக்கிறியே... இப்படி இருந்தா எப்படி உன்கிட்ட ஆசை வரும்?’’ என்றான் எரிச்சலாக.
   ‘‘நீங்கதானே என்னை உணர்ச்சியற்ற ஜடமா இருன்னு சொன்னீங்க!’’ என்றாள் கீதா பட்டென்று. அவளுடைய பதில் அவன் மனதில் சுரீர் என்று தைத்தது!
   - மங்களம் ரவீந்திரன்
    
       நல்ல செய்தி, கெட்ட செய்தி!
   ‘‘அம்மா... ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! எந்தச் செய்தியை முதல்ல சொல்ல?’’ என்று கேட்டான் ரமேஷ்.
   ‘‘நல்ல செய்தியை முதல்ல சொல்லு!’’
   ‘‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லி அனுப்புவியே, மாப்பிள்ளையை கைக்குள்ள போட்டுகிட்டு எப்படியாவது தனிக்குடித்தனம் போயிடுன்னு... அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்!’’
   ‘‘அப்பாடா! இப்பத்தான் நிம்மதி ஆச்சு. ஆமா, ஏதோ கெட்ட செய்தின்னியே, அது என்ன?’’
   ‘‘என் பொண்டாட்டியும் தனியா போயிடலாம்னு ரொம்ப நாளா நச்சரிச்சுட்டே இருக்கா. அதான், நாளைக்கே நாங்களும் தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கோம்!’’
   அதிர்ச்சியில் மௌனமானாள் அம்மா.
   - ராகுல் வெங்கட்
    
       தங்கச்சி இருக்கும்போதே...
   ‘‘சு தா... இன்னிக்குக் காலேஜ் முடிஞ்சதும் அப்படியே சித்தி வீட்டுக்குப் போயிடு. ராத்திரி அப்பா வந்து உன்னை அழைச் சுட்டு வருவார்!’’
   சுதா சரி சொல்லக் காத்திருந்த நிமிஷத்தில், ’’வேணாம் சுதா! நேரே நீ நம்ம வீட்டுக்கே வா!’’ என்றாள் அக்கா ரமா.
   ‘‘சும்மா இருடி! இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க, போன தடவை மாதிரி இப்ப வரப் போறவனும், உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதுக்கா?’’ அம்மா பொரிந்தாள்.
   ‘‘அம்மா! ஒருத்தரைப் பெண் பார்க்க வந்துட்டு, இன்னொரு பெண்ணை ஓ.கே. பண்றவன் நிலையான மனசு இல்லாத வன்.இதுபோன்ற ஆம்பிளைகளை, ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! தங்கச்சிகூட இருக்கிறப்ப யார் என்னை ஓ.கே. பண்றாரோ, அவர்தான் திட புத்தியுள்ள ஆண். அவரைக் கல்யாணம் செய்துக்கத்தான் நான் விரும்பறேன்!’’ - உறுதியாகச் சொன்னாள் ரமா.
   - ஆர்.பிருந்தா
  • By நவீனன்
    ஒரு நிமிடக் கதை செல்லினம்!
   பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல... அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள் எல்லோரும்!   சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர், அப்படியே முடிந்து போனார். ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம் தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல, ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே ரமணாவைத் தேடி பிள்ளையார் கோயிலுக்கு வந்தார்.

   இளைஞர்கள் தனித்தனியே ஆளுக்கொரு செல்லை தடவித் தடவிப் பார்த்து, அதன் திரையில் மூழ்கியபடி அமைதியாக இருந்தார்கள். அவர் வந்ததைக்கூட யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

   ‘‘ரமணா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   ‘‘தாத்தா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   ‘‘தாத்தா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   கணேசன் ஒரு முடிவுக்கு வந்தவராக தன் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் பகிர்ந்தார்.
   ‘‘ஐயோ தாத்தா... போயிட்டீங்களா!’’ - கதறி அழுதான் ரமணா. அழுது..?           
   http://kungumam.co.in/
  • By நவீனன்
     செயல்!
   அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான்.
   வீடு வந்து சேரும் வரை ஒன்றும் பேசவில்லை கீதா. ‘‘அந்த பிஸ்கட் பாக்கெட் டைப் பிரிக்காமல் கொடுத்தால்தான் என்ன? இரண்டு பிஸ் கட்டில் உங்களுக்கு என்ன வந்துவிடப் போகி றது?’’ சற்று கோபமாகக் கேட்டாள்.‘‘நாம் பிஸ்கட் பாக்கெட்டைப்பிரிக்கா மல் கொடுத்தால் என்ன வாகும் தெரியுமா? நாம அங்கிருந்து நகர்ந்த உடனே, அந்தாளுங்க, பிஸ்கட் பாக்கெட்டைத் திரும்பவும் கடையிலேயே கொடுத்து, பணத்தை வாங்க முயற்சி செய்வாங்க. பாக்கெட்டைப் பிரிச்சுட்டா, கடைக்காரன் திருப்பி எடுத்துக்க மாட்டான். அந்தப் பிஞ்சுக்கு இரண்டு பிஸ்கட்டாவது கிடைக்குமே, அதனாலதான்!’’
   -எம்.காஞ்சனாகரண்
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   பார்வை
   தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!’’ - கணவனிடம் சொன்னாள்.

   ‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?’’ என்றான்.‘‘இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும்! இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்!’’ - வாதாடினாள் கமலா.

   அடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற்றும் குறையவில்லை. பரஸ்பர நலம் விசாரித்துவிட்டு, ‘‘என்ன கமலா இது? கணவனை இழந்த நானே நல்லா டிரஸ் பண்ணி, அவரு என் கூடவே இருக்கிற ஃபீலிங்ல ஊரைச் சுத்தறேன். நீ குத்துக் கல்லாட்டம் புருஷனை வச்சுக்கிட்டு ரொம்ப ஆர்டினரியா டிரஸ் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையை அடமானம் வச்சுட்ட மாதிரி வருத்தமா இருந்தியே! உனக்கும், உன் ஹஸ்பெண்டுக்கும் ஏதாவது பிரச்னையா?’’ என அக்கறையாக விசாரித்தாள்.கமலாவுக்கு மண்டை காய்ந்தது.              
    
   kungumam.co.
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை

             கடவுள் ஒரு கணக்கன்!
   கிழித்த நாராக ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தாள் உமா. இந்தப் பதினைந்து நாட்களாக நாராயணனுக்கு உலகமே இருண்டதாகத் தெரிந்தது.
   அவள் அவனது அன்புக்குரிய மனைவி மட்டுமல்ல; அவனது உயிரே அவள்தான்! யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், ஓடிப் போய் உதவுகிற பரோபகாரி அவள். அவளுக்கா இந்த நிலை!
   நியாயமாக அந்த வியாதி தனக்கு வந்திருக்க வேண்டியது. நம்பிய நண்பனுக்குத் துரோகம், வேலை பார்த்த அலுவலகத்துக்குத் துரோகம்... சே!
   ‘‘கடவுளே! நீ என்னைத்தானே தண்டித்திருக்க வேண்டும். என் மனைவிக்கு ஏன் கஷ்டம் கொடுக்கிறாய்?’’ என்று சாமி படத்தின் முன் அழுதான்.
   ‘‘உனக்கும் கஷ்டம் தந்தேன். ஆனால், அவற்றை உதாசீனப்படுத்தினாய். தொடர்ந்து தவறு செய்தாய். உன் மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும், துடிக்கிறாய் அல்லவா! இனியாகிலும் திருந்து!’’
   கடவுள் சொன்னது, அவன் காதில் மட்டும் விழுந்தது.
   - ஜே.வி.நாதன்
   http://www.vikatan.com