Jump to content

வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை


Recommended Posts

வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை

 
வடக்கு அமைச்சர்கள் மீதான  விசாரணைக்குழுவின் அறிக்கை
 

அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்

1. வவுனியா மாவட்­டத்­தில் மூங்­கில், மல்­லிகை வளர்ப்­புத் திட்­டங்­கள், எள்ளு விநி­யோ­கித்து சுய­தொ­ழிலை முன்­னெ­டுக்­க­வைக்­கும் திட்­டம் ஆகி­ய­வற்றை கையூட்டுப் பெறும் நோக்­கத்துக்காக நிரா­க­ரித்­தமை.

2. கண்­காட்­சி­கள், பொங்­கல் விழா, உழ­வர் விழா எனப் பல விழாக்­களை பெருந்­தொ­கைப் பணத்­தைச் செல­வ­ழித்து நடத்­தி­ய­தன் மூலம் மாகா­ண­ ச­பை­யின் பெருமள­வி­லான நிதியை வீண்­ வி­ர­யம் செய்­தமை.

3. மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­ன­தும், மாகா­ண­ சபை ஆலோ­ச­னைக் குழுக்­க­ளி­ன­ தும் ஆலோ­ச­னை­க­ளைப் பெறா­மல் திட்­டங்­களை முன்­னெ­டுத்­தமை.

4.Beta Power (Pvt)Ltd Joule power (Pvt) ltd. நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து 2015ஆம் ஆண்டு முதல் வரு­டம் ஒன்றுக்கு ரூபா 20 மில்­லி­யன் வீதம் 2016 வரை பெறப்­பட்ட ரூபா 40 மில்­லியன் பணத்தை மோசடி செய்­தமை.

5.பாத்­தீ­னி­யம் ஒழிப்பு நட­வ­டிக்கை என்ற பெய­ரில் மாகா­ண­ சபை நி­தியை மோசடி செய்­தமை.

6. i) Northern Power என்ற மின் உற்­பத்தி நிலை ­யம் சுன்­னா­கத்­தில் தொழிற்­பட்ட வேளை­யில் அத­னது கழிவு எண்­ணெய் குடிதண்ணீரில் கலந்த விட­ய­த்துக்கு, ஆய்­வுக்­குழு ஒன்றை நிய­மித்து அந்­தக் குழு­வின் அறிக்கை மூலம் நிறு­வ­னத்­துக்குச் சாத­க­மாக அறிக்­கையை வெளிப்­ப­டுத்தி உண்­மை­களை மறைத்­தமை.

ii) நிலத்­தடி நீர் விட­யம் தொட­ரில் எது­வித அதி­கா­ர­முமற்ற நிலை­யில் நிலத்­தடி நீரில் எண்­ணெய் கசிவு தொடர்­பில் விசா­ர­ணைக்­காக நிபு­ணர்­ கு­ழுவை நிய­மித்து மாகா­ண­ ச­பை­யின் நிதியை வீண்­ வி­ர­யம் செய்­தமை.

7. 2015 நவம்­பர் முன்­னெ­டுக்­கப்­பட்ட 5 இலட்­சம் மர­ந­டு­கைத் திட்­டம் தொடர்பில் பண மோசடி செய்­தமை.

8. ஏற்று நீர்ப்­பா­ச­னத்­திட்­டம் இது­வ­ரை­யில் நன்கு வெற்றி அளிக்­க­வில்லை எனத் தெரிந்­தி­ருந்­தும் தவ­றான செல்­வாக்­கைச் செலுத்தி நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து சாத்­தி­யக்­கூற்று அறிக்­கை­யைப் பெற்று புழு­தி­யாறு ஏற்று நீர்ப்­பா­ச­னத் திட்­டத்தை முன்­னெ­டுத்து 36 மில்­லி­யன் ரூபா நிதியை வீண்­வி­ர­யம் செய்­தமை.

9. 1) யாழ்கோ பாற்­பண்ணை கூட்­டு­ற­வுச் சங்­கத்துக்கு 2014 ஆண்டு மே மாதம் வரை தலை­வ­ராக இருந்த பெரி­ய­தம்பி இரா­ச­நா­ய­கம் இரஞ்­சன் என்­ப­வரை நியா­ய­மான கார­ணங்­க­ளின்றி கூட்­டு­றவு ஆணை­யா­ள­ருக்கு ஊடாக அதி­கார முறைகேடு மூலம் பதவி நீக்­கம் செய்­தமை.

2) 2015இல் யாழ்கோ பாற்­பண்ணை கூட்­டு­ற­வுச் சங்­கத்துக்குத் தலை­வ­ராக முன் அனு­ப­வ­மில்­லா­த­வ­ரும் மாவட்டச் செயலாளரால் பரிந்­துரை செய்­யப்­ப­டா­த­வ­ருமான இ.சர்­வேஸ்­வரா என்­ப­வரை குடும்ப நண்­பர் என்ற அடிப்­ப­டை­யில் கூட்­டு­றவு ஆணை­யா­ளர் மூலம் தலை­வ­ராக நிய­மித்­தமை தொடர்­பில் அதி­கார முறைகேடு செய்­தமை.

3) மரு­தங்­கேணி கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வரை நியா­ய­மான கார­ணங்­க­ளின்றி கூட்­டு­றவு ஆணை­யா­ளர் மூலம் 2015 மார்­கழி மாதமள­வில் பதவி நீக்­கம் செய்­தமை மூலம் அதி­கார முறைகேடு செய்­தமை.

அமைச்சர் குருகுலராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்

1. வட­ம­ராட்சி வல­யக்­ கல்­விப் பணிப்­பா­ளர் சிவ­பா­தம் நந்­த­கு­மார் என்­ப­வர் 58 வயது 3மாதங்கள் கடந்­துள்ள நிலை­யில் 16.01.2017 இல் இட­மாற்­றம் ஒன்றை வழங்கி இருந்­தமை மூலம் அதி­கார முறைகேடு செய்­தமை.

2. யா/ யூனி­யன் கல்­லூரி அதி­ப­ரின் நிய­ம­னத்­தில் யூனி­யன் கல்­லூரி பழைய மாண­வ­ராக இரு­ந்த வர­தன் மாஸ்­டர் என்­ப­வரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் செல்­வாக்கு மூலம் அவரை குறுகிய காலம் படி­த்த கார­ணத்துக்காக அதி­ப­ராக நிய­மிக்க மாகா­ணக் ­கல்வி அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அழுத்­தம் கொடுத்தமை.

3. குறித்த வர­தன் மாஸ்டர், என்­ப­வர் கல்­விக்­கான கற்கை விடு­மு­றை­யில் இருக்­கும் போது அவரை அதி­ப­ராக நிய­மித்­த­தன் மூலம் அதி­கார முறைகேடு புரிந்­தமை.

4. குறித்த அதி­ப­ரின் நிய­ம­னத்தை உடன் நிறுத்­து­மாறு முத­ல­மைச்­சர் தலை­மை­யில் நடை­பெற்ற மாகா­ண­ சபை அமர்­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­ போ­தும் அத­னைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­காது செய­லா­ளரைத் தடுத்­தமை.

5. 1) 2015ஆம் ஆண்­ட­ள­வில் கிளி­நொச்சி பார­தி­பு­ரம் அதி­பர் அந்­தப் பாட­சா­லை­யில் கல்வி கற்ற மாணவி ஒரு­வ­ரி­டத்தில் தகாத முறை­யில் நடக்க முற்­பட்­டமை தொடர்­பாக மாகா­ண­ சபை உறுப்­பி­னர் அனந்­தி­ ச­சி­த­ரன் தங்­க­ளுக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்­த­போ­தும் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை.

2. குறித்த அதி­பர் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்து கொண்ட விட­யத்தை பாட­சாலை வகுப்­பா­சி­ரி­யர் வல­யக் ­கல்­விப் பணிப்­பா­ளர் முரு­க­வே­ளுக்கு கடித மூலம் முறைப்­பாடு செய்­தார். அதற்­காக அந்த ஆசி­ரி­யர் பழி­வாங்­கப்­பட்டு வல­யக் ­கல்­விப் ­ப­ணிப்­பா­ளர் முரு­க­வே­ளி­னால் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டமை.

3. குறித்த ஆசிரியரின் கடித மூலமான முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற வல­யக்­ கல்­விப் ப­ணிப்­பா­ளர் அந்த ஆசி­ரி­யரை ஏனைய ஆசி­ரி­யர்­கள் முன்­னி­லை­யில் கொச்­சைப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக அனந்தி சசி­த­ரன் கல்வி அமைச்­ச­ரின் கவ­னத்துக்குக் கொண்டு வந்­தும் எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை.

6. கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தி­லும் கிளி­நொச்சி புனித திரேசா பெண்­கள் பாட­சா­லை­யி­லும் தனக்­கேற்­ற­வர்­களை அதி­ப­ராக நிய­ம­னம் செய்ய கல்வி அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அழுத்­தம் கொடுத்­தமை.

7. வட­மா­கா­ணத்­தி­லுள்ள கல்வி வல­யங்­க­ளில் ஆசி­ரி­யர் மாநாடு என்ற பெய­ரில் பெரு­ம­ள­வில் நிதி செல­வ­ழித்து வீண்­வி­ர­யம் செய்­தமை.

8. மாகா­ணப்­ பா­ட­சா­லை­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியை முன்­னாள் அரச தலைவரின் வரு­கைக்­காக ஆறு தேசி­யப்­ பா­ட­சா­லை­களை அலங்­க­ரிப்­ப­தற்கு பெருந் ­தொ­கைப் பணத்­தைச் செல­வ­ழித்­தமை.

9. கிளி­நொச்சி வல­யக்­ கல்­விப் பணிப்­பா­ளர் முரு­க­வே­ளின் சேவைக்­கா­லம் முடி­வுற உள்ள நிலை­யில் வேறு பொருத்­த­மான வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் ஒருவரை நிய­மிப்­ப­தற்­கான எந்த நட­வ­டிக்­கை­யும் இது­வரை எடுக்­கா­மல் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் அவ­ரது சேவையை தொட­ரு­வ­தற்கு முயற்­சிக்­கி­ன் றமை.

அமைச்­சர் சத்­தி­ய­லிங்­கத்­துக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள்

1. 2014 /2015 காலப் ப­கு­தி­யில் சுகா­தாரத் தொண்­டர்­க­ளா­கக் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னம் வழங்­கா­மல் கடை­க­ளி­லும் மருந்தகங்­க­ளி­லும் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னம் வழங்­கி­யமை.

2. சுகா­தார ஊழி­யர்­க­ளின் சீருடை விநி­யோ­கத்­தில் நடை­பெற்ற முறை­கேடு

3. 94 மாகாண வைத்­தி­ய­சா­லை­க­ளுக்­கான உணவு விநி­யோக கேள்வி கோர­லில் நடை­பெற்ற முறை­கேடு தொடர்­பில் தாங்­கள் அறிக்கை விட்­டி­ருந்­த­போ­தி­லும் அந்­த ­மோ­ச­டியை வெளிக்­கொ­ணர எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை.

4. வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு குருதி சுத்­தி­க­ரிப்­பு இயந்திரம் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள புலம்­பெ­யர் தமி­ழர்­கள் வழங்­கிய நிதி குறிப்­பிட்ட நோக்­கத்­துக்காகப் பயன்­ப­டுத்­தாமை.

5. சுகா­தார திணைக்­க­ளங்­க­ளில் பாது­காப்­புச் சேவை ஒப்­பந்­தம் கேள்வி கோர­லில் தவ­றாக நடந்து கொண்­டமை.

அமைச்­சர் டெனீஸ்வ­ர­னுக்கு
எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள்

1. நன்­னீர் குளங்­க­ளில் மீன்­குஞ்சு விடு­வ­தில் பார­பட்­ச­மாக நடந்­தமை.

2.வடக்கு ­மா­கா­ணத்­தில் எல்லா மாவட்­டங்­க­ளி­லும் நடை­மு­றை­கள் பின்­பற்­றாது போடப்­பட்ட வீதி­கள் தொடர்­பில் நிதி­மோ­சடி செய்­தமை.

3. ஒப்­பந்த நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் பேருந்து தரிப்­பி­டங்­கள் அமைக்­கப்­பட்­டமை.

4. போரா­ளி­கள், மாவீ­ரர்­கள் குடும்­பங்­க­ளுக் கான வாழ்­வா­தா­ரத்துக்காக ஒதுக்­கப்­பட்ட ஒரு ­கோடி ரூபா நிதி­யைச் சரி­யான முறை­க­ளைப் பின்­பற்­றாது போரா­ளி­க­ளின் வாழ்­வா­தார உதவி பய­னா­ளி­கள் சரியான முறையில் தெரி­வு செய்யாமல் முறை­கே­டு­க­ளைப் பின்­பற்றி மோசடி செய்­தமை.

முறைப்பாட்டாளர் அனந்தி விசாரணைக்கு வரவில்லை

மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் முறைப்­பாட்­டா­ள­ரான அனந்தி சசி­த­ரனை உரிய சாட்­சி­க­ளு­டனும் ஆவ­ணங்­க­ளு­ட­னும் அறி­விக்­கப்­ப­டும் தினத்­தில் சமு­கம் தரும்­படி அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதி­லும் குறித்த அமைச்­சர் முன்னிலையான விசா­ர­ணைத் தினத்­தில் முறைப்­பாட்­டா­ளர் சமு­கம் அளிக்­க­வில்லை. முறைப்­பாட்­டா­ளர் சமுகமளிக்காத நிலை­யில் விசா­ர­ணைக்­குழு குறித்த அமைச்­ச­ரி­டம் அவ­ருக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­தி­யது.

சுகாதாரத் தொண்டர் நியமனத்தில்  முறைகேடு இடம்பெறவில்லை

1.1) 2014 – 2015 காலப்­ப­குதி­யில் சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கக் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னம் வழங்­கா­மல் கடை­ க­ளி­லும் மருந்தகங்­க­ளி­லும் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னம் வழங்­கி­யமை

2014 தொடக்­கம் 2015 வரை­யில் சுகா­தா­ரத் தொண்­டர்­கள் நிய­ம­னத்­தில் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் முறை­கே­டு­கள் தொடர்­பில் சாட்­சி­ய­ம­ளித்த அமைச்­சர் சத்தியலிங்கம், இந்­தக் குற்­றச் சாட்டை முற்­றாக மறுத்­தி­ருந்­தார். அவர் மேலும் தமது சாட்­சி­யத்­தில், “அந்­தக் காலத்­தில் பதவி வகித்த ஆளு­நர் சுகா­தார அமைச்­சின் செய­லா­ள­ரின் கையொப்­பத்­து­ட­னான நிய­ம­னக் கடி­தத்­து­டன் 180 நாள்­க­ளுக்கு மேல் சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளாக களப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­வர்­களை மாத்­தி­ரம் இந்­தச் சேவைக்கு உள்­வாங்­கும்­படி அறி­வித்­தார்.

இதைத் தொடர்ந்து வட­மா­கா­ணத்­தின் MOH அலு­வ­ல­கத்­தி­னால் சுகா­தார அமைச்­சின் செய­லா­ள­ராக இருந்த இர­வீந்­தி­ர­னின் கையொப்­பத்­து­டன் சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளா­கக் கட­மைாற்­றிக் கொண்­டி­ருந்த எல்­லோ­ரு­டைய விவ­ர­மும் சேர்க்­கப்­பட்டு RDHS ஊடாக PD அலு­வ­ல­கத்­துக்கு அனுப்­பப்­பட்டு செய­லா­ள­ரின் அனு­ம­தி­யோடு மாகா­ண­ அ­மைச்­சர் காரி­யா­ல­யத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அதன் அங்­கீ­கா­ரத்­து­டன் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஆளுநரின் அங்கீகாரத்துடன் பெயர் குறிப்­பி­டப்­பட்ட அனை ­வ­ருக்­கும் நிய­ ம­னம் வழங்­கப்­பட்­டது. அந்தச் சுற்­றறிக்கை வரும்­போது பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்­தோ­ருக்கு மட்­டும் நிரந்­தர நிய­ம­னம் வழங்கப்­பட வேண்­டும் எனக் குறிப்­பிட்­டி­ருந்­த­மை­யால் அதன்­படி நிய­ம­னம் வழங்­கப்­பட்­டது” என்று கூறி­யி­ருந் தார்.

பாதிக்­கப்­பட்ட தொண்­டர்­களை விசா­ரணை செய்­யத் தம்­மால் ஒழுங்கு செய்து தர முடி­யும் என முறைப்­பாட்­டா­ள­ரான வட­க்கு மா­கா­ண­சபை உறுப்­பி­னர் அனந்தி சசி­த­ரன் கூறி­யி­ருந்த வேளை­யி­லும் அழைத்­து­வரத் தவ­றி­விட்­டார். அமைச்­ச­ரின் சாட்­சி­யத்­து­டன் முரண்­ப­டும் சாட்­சி­யம் எது­வும் விசா­ர­ணைக் கு­ழு­விடம் முன்வைக்­கப்­ப­ட­வில்லை.

இந்­தச் சூழ்­நி­லை­யில் சுகா­தார அமைச்­ச­ரால் இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் கொடுக்­கப்­பட்ட சாட்­சி­யத்தை நிரா­க­ரிக்க எது­வித கார­ண­மும் இல்லை என விசா­ர­ணைக்­குழு கரு­து­கின்­றது. எனவே சுகா­தா­ரத் தொண்­டர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னம் வழங்­கும் விட­யத்­தில் அமைச்­சர் தவறு இழைக்­க­வில்லை என்ற முடி­வுக்கு விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

கட்டடங்கள் அமைப்பதில் நடந்த முறைகேடு நிரூபிக்கப்படவில்லை

சுகா­தார அமைச்­சில் நடை­பெ­றும் கட்­டட வேலை­கள் தொடர்­பில் கிடைத்த முறைப்­பாடு தொடர்­பில் அமைச்­சர் சத்தியலிங்கம், “கட்­டட வேலை­கள் கட்டடத் திணைக்களம் கவ­னித்­துக் கொள்­ளும். திட்­டத்­தைப் பரி­சீ­லித்து மதிப்பீட்டுக் குழு உடன் கலந்­தா­லோ­சித்து பகிரங்கக் கேள்வி கோரலுடன் அதனைக் கட்டி முடிப்­பது வரை­யில் கட்டடத் திணைக் களம் ஈடு­ப­டும். எனக்கோ அல்­லது சுகா­தா­ரப் பணிப்­பா­ள­ருக்கோ இந்­தக் கட்­ட­டம் கட்­டு­வது தொடர்­பில் எந்­தத் தொடர்­பும் இருக்­காது” எனச் சாட்­சி­ய­ளித்­தார்.

அமைச்­ச­ரின் சாட்­சி­யத்­துக்கு மாறான சாட்­சி­யம் எது­வும் விசா­ர­ணைக்­கு­ழு­விடம் முன் வைக்­கப்­ப­டாத நிலை­யில் அவரின் சாட்­சி­யத்தை விசா­ர­ணைக்­குழு ஏற்று குறித்த குற்­றச்­சாட்டு ஆதா­ர­மற்­றது என்­ற­மு­டி­வுக்கு வரு­கின்­றது.

சீருடை விநியோகத்தில் மோசடி நடக்கவில்லை

1.2) சுகா­தார ஊழி­யர்­க­ளின் சீருடை விநி­யோ­கத்­தில் நடை­பெற்ற முறை­கேடு
சுகா­தார ஊழி­ய­ரின் சீருடை வி ட­யத்­தில் சாட்­சி­ய­ம­ளித்த அமைச்­சர், தாங்­கள் சீருடை வழங்­கு­வ­தில்லை என்­றும் ஒவ்­வொரு வரு­ட­மும் மார்ச் மாதத்­தில் அவர்­க­ளு­டைய சம்­ப­ளத்­து­டன் சீரு­டைக்­கான பணமும் தையல் கூலி­யும் வழங்­கப்­ப­டு­கின்­றது என்­றும் சம்­ப­ளப்­பட்­டி­ய­லில் இல்­லாத ஒரு­வ­ருக்கு சீருடை வழங்­கப்­பட்­டால் செய­லா­ள­ரையே கேட்க வேண்­டும் என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தார்.

விசா­ர­ணைக்­கு­ழு­வின் முன் இந்த முறைப்­பாட்­டைச் செய்­த­வர் சமுக­ம­ளித்து சாட்­சி­யம் சொல்­ல­வில்லை. வேறு சாட்­சி­களை முன்­னி­லைப்­ப­டுத்­த­வு­மில்லை. சுகா­தார அமைச்­ச­ரின் சாட்­சி­யம் முரண்­ப­டுத்­தப்­ப­டா­த­வி­டத்து அந்­தச் சாட்­சி­யத்தை நம்­ப­ம­றுக்க வேண்­டிய தேவை விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு எழ­வில்லை. எனவே சீருடை விநி­யோ­கம் தொடர்­பில் அமைச்­ச­ருக்கு எதி­ராகச் செய்­யப்­பட்ட குற்­றச்­சாட்டை இந்த விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கின்­றது.

உணவு விநியோக நடைமுறையில் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை

1.3 94 மாகாண வைத்­தி­ய­சா­லை­க­ளுக்­கான உணவு விநி­யோக கேள்வி கோர­லில் நடை­பெற்ற முறை­கேடு தொடர்­பில் தாங்­கள் அறிக்கை விட்­டி­ருந்த போதி­லும் அந்­த ­மோ­ச­டியை வெளிக்­கொ­ணர எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை

மாகாண வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு உணவு விநி­யோக கேள்வி கோர­லில் ஏற்­பட்ட மோச­டியை வெளிக்­கொண்­டு­வர எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கவில்லை என்ற குற்­றச்­சாட்டு தொடர் பில் சாட்­சி­ய­ம­ளித்த அமைச்­சர், “18 பெரிய ஆஸ்­பத்­தி­ரிக்­குத்­தான் உணவு விநி­யோ­கம் நடை­பெ­று­கின்­றது.

மணி ஐயப்பா என்­ப­வ­ருக்­குத் தொடர்ச்­சி­யாக கேள்வி கோரல் மூலம் கொடுக்­கப்படு­வது தொடர்­பில் ஒரு விசா­ர­ணைக்­குழு நிய­மித்து விசா­ரணை நடை­பெற்­றது. அந்த விசா­ர­ணை­யில் இந்த ஒப்­பந்­தகா­ரர் மிக நுணுக்­க­மாக அதி­க­மா­கப் பாவிக்­கப்­ப­டும் பொருள்­க­ளுக்கு கூடிய விலை­யைப் போட்­டுள்­ளார். இந்த விசா­ர­ணைக்­குப் பின் ஒரே இடத்­தில் பல கேள்வி கோரல் போடு­வ­தைத் தவிர்த்து அந்­தந்த மாவட்­டங்­க­ளில் RDHS மூலம் கேள்வி கோரலை நடத்தும் முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது” என்­று சாட்­சி­ய­ம­ளித்­தார்.

விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த லோகேஸ்­வ­ரன் என்­ப­வர் சில ஒப்­பந்­த­கா­ரர் சில நுணுக்­க­மான முறை­க­ளைக் கையாள்­வது பற்­றிக் கூறி­யி­ருந்­தார். அமைச்­ச­ரும் தமது சாட்­சி­யத்­தில் இதை ஏற்று இருந்­தார். கூறு­விலை கோர­லின் போது பொருள்­க­ளின் விலை­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கும் வேளை­யி­லும் அத­னைக் கூட்­டிக் காண்­பித்து மற்­றைய பொருள்­க­ளின் விலை­க­ளில் நுணுக்­க­மாக மாற்­றம் செய்து ஒப்­பந்­தங்­க­ளைப் பெறு­வ­தாக சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டது.

மேலும் கூறு­விலை திறக்கப்பட்டு முடி­வெ­டுக் கப்­ப­டும் வேளை­யில் கூறு­விலை கோரி­ய­வர்­க­ளுக்கு எது­வும் தெரி­ய­வ­ரு­வ­தில்லை என­வும் கூறப்­பட்­டது.

எனவே சுகா­தார, சுதேச மருத்­துவ நன்­ன­டத்தை சிறு­வர் பரா­ம­ரிப்பு சேவைகள் அமைச்­சர் கேள்வி கோரல் நடைமுறையில் வெளிப்­ப­டைத் தன்­மையை ஏற்­ப­டுத்தி அதில் பங்­கு­பற்றும் சக­ல­ருக்­கும் முன்­னி­லை­யில் முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கையை உறுதி செய்ய வேண்­டும்.

விலை நிர்­ண­யம் செய்­யப்­பட்ட பொருள்­க­ளின் விலை­க­ளில் நுணுக்­க­மான நடை­மு­றை­யைப் பின்­பற்றி மாற்­றம் செய்து ஒப்­பந்­தங்­க­ளைப் பெற்­றுக்கொள்­ளும் முறை தவிர்க்­கப்­பட வேண்­டும் என்றும் இத்­த­கைய தவ­று­கள் செய்­யும் ஒப்­பந்­தகா­ரர்­களை கறுப்புப் பட்டியலில் இடவேண்டும் வேண்­டும் என்­றும் இந்த விசா­ர­ணைக்­குழு அமைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கு­கின்­றது. மேலும் ஒரே நப­ருக்கு மீண்­டும் மீண்­டும் உணவு விநி­யோக ஒப்­பந்­தங்­கள் வழங்கப்படுவதையும் அமைச்­சர் தமது கவ­னத்­தில் எடுக்க வேண்­டும்.

இந்­தக் கட­மை­கள் அமைச்சு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கா­ன­தாக இருப்­பி­னும் கொள்­கை­ய­ளில் தவ­று­க­ளுக்கு இட­ம­ளிக்­காத நடை­மு­றையை உறுதி செய்­யும் பொறுப்பு அமைச்­ச­ரு­டை­யது.

கேள்வி கோரல் நடைமுறையில் உள்ள தவ­று­கள் குறித்து இந்த விசாரணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்ட போதி­லும் இந்­தச் சாட்­சி­க­ளில் இரு­ந்து அமைச்­சர் நிதி­மோ­சடி, கையூட்டு, அதி­கார முறைகேடு போன்­ற­வற்­றில் ஈடு­பட்­டார் என்ற முடி­வுக்­கு­வர இட­மில்­லை­ என விசாரணைக்கு கரு­து­கின்­றது.

குருதி இயந்திர நிதி பயன்பாடு குறித்து நிரூபிக்கப்படவில்லை

1.4) வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு குருதி சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரம் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள புலம்­பெ­யர் தமி­ழர்­கள் வழங்­கிய நிதி குறிப்­பிட்ட நோக்­கத்­ துக்காக பயன்­ப­டுத்­தாமை.

இந்­தக்­குற்­றச்­சாட்டை சுகா­தார அமைச்­சர் மறுத்­தி­ருந்­தார். இது தொடர்­பில் அவர் தமது சாட்­சி­யத்­தில் தாம் 2014ஆம் ஆண்டு ஆஸ்­தி­ரே­லியா சென்ற வேளை­யில் தனக்கு ­கு­ருதி சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­கள் இரண்டு அங்­குள்ள மருத்துவர்­க­ளால் தரப்­பட்­டது என்­றும் அவற்றை அவர்­கள் உற்­பத்­தி­யா­ளர்­கள் மூல­மாக சீரமைப்­புச் செய்து பின் கப்­ப­லில் அனுப்­பி­ய­தா­க­வும் கொழும்பு சுகா­தார அமைச்­ச­ரு­டன் தொடர்­பு­கொண்டு வரி செலுத்­தாது திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர் மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு வந்­த­தா­க­வும் கூறி­யி­ருந்­தார்.

இந்­தச் சாட்­சி­யத்­துக்கு மாறான சாட்­சி­யம் எது­வும் விசா­ர­ணைக்­குழு முன் வைக்­கப்­ப­டாத நிலை­யில் விசா­ர­ணைக்­குழு அமைச்­ச­ரின் சாட்­சி­யத்தை ஏற்று இந்­தக் குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்­கின்­றது.

அமைச்­சர் சத்­தி­ய­லிங்­க­த்துக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள்
நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை

1.5) சுகா­தா­ரத் திணைக்­க­ளங்­க­ளில் பாது­காப்பு சேவை ஒப்­பந்­தம் கேள்வி கோர­லில் தவ­றாக நடந்து கொண்­டமை

இறு­தி­யா­கப் பாது­காப்பு சேவை ஒப்­பந்­தம் கேள்வி கோரல் விட­யம் அமைச்சு உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வது என்­பதை இந்த விசா­ணைக்­குழு ஏற்று அந்­தக் குற்­றச்­சாட்­டை­யும் நிரா­க­ரிக்­கின்­றது.

எனவே வைத்­தி­ய­சா­லை­க­ளுக்­கான உணவு விநி­யோக கேள்வி கோர­லில் கூடிய கவ­னம் அமைச்­சர் எடுக்க வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்டு இந்த விசா­ர­ணைக்­குழு, சுகா­தார சுதேச மருத்­துவ நன்­ன­டத்தை சிறு­வர் பரா­ம­ரிப்பு சேவை­கள் அமைச்­சர் மருத்­து­வர் ப. சத்­தி­ய­லிங்­கத்­துக்கு எதி­ரான எந்­தக் குற்­றச்­சாட்­டும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்ற முடி­வுக்கு வரு­கின்­றது.

அனந்­தி­யின் நட­வ­டிக்­கை­யால் விசா­ர­ணைக்­குழு விச­னம்

வட­மா­காண சபை­யின் மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னுக்கு கெதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் 26.02.2017 இல் விசா­ரணை நடத்­து­வது என விசா­ர­ணைக்­குழு தீர்­மா­னித்­தது. இந்­தத் தீர்­மா­னம் குறித்து அமைச்­ச­ருக்­கும் முறைப்­பாட்­டா­ளர் அனந்தி சசி­த­ர­னுக்­கும் உரிய முறை­யில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

குறித்த விசா­ரணை தின­மான 26.02.2017 இல் வட­மா­காண சபை­யின் மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து அமைச்­சர் விசா­ர­ணைக்­குழு முன் விசா­ர­ணைக்­கென சமு­க­ம­ளித்­தி­ருந்த வேளை­ யிலும் அவ­ருக்­கெ­தி­ரான குற்­றச்­சாட் டுக்­களை முன்­வைத்த அனந்தி சசி­த­ரன் விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளித்து தனது குற்­றச்­சாட்­டுக் களை எண்­பிப்­ப­தற்­கு­ரிய சாட்­சி­க­ளை­யும் ஆவ­ணங்­க­ளை­யும் முன்­வைக்­கப் பொறுப்­பற்ற முறை­யில் தவ­றி­விட்­டார்.

இவ­ரது இந்­தச்­செய்கை குறித்து விசா­ர­ணைக்­குழு தனது விச­னத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றது. முறைப்­பாட்­டா­ளர் சமு­க­ம­ளிக்­காத நிலை­யில் விசா­ர­ணைக்­குழு அமைச்­ச­ரி­டம் அவ­ருக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­தி­யது.

நன்­னீர் மீன்­வ­ளர்ப்­பால் மக்­க­ளுக்­குத்­தான் பயன்

2.1. நன்­னீர் மீன்­வ­ளர்ப்­புத் திட்­டத்­தில் மீன்­குஞ்­சு­கள் விடு­வ­தில் பார­பட்­ச­மாக நடந்­தமை

இந்­தக் குற்­றச்­சாட்­டுக் குறித்து அமைச்­சர் பதி­ல­ளிக்­கும்­ போது, வெலி­ஓ­யா­வில் இருக்­கும் குளங்­க­ளில் NAQDA இன் ஆலோ­ச­னைப்­படி தாம் செயற்­பட்­டதை ஏற்­றுக் கொண்­டார். மேலும் அவர் தனது சாட்­சி­யத்­தின்­போது, வெலி­ஓ­யா­வி­லுள்ள குளங்­கள் மகா­வலி அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின்­கீழ் அமை­கின்­றன என்­றும் வடக்கு மாகாண சபையின் கட்­டுப்­பாட்­டில் இல்­லா­த­து­மான குளங்­களை நன்­னீர் மீன்­வ­ளர்ப்­புத் திட்­டத்­துக்­குத் தெரிவு செய்து வட­மா­காண நிதியை அதற்கு உப­யோ­கித்­த­மை­யும் சாட்­சி­யத்­தின்­போது ஏற்­றுக் கொண்­டார்.

இது ‘‘அப்­ப­கு­தி­யி­லுள்ள மக்­கள் கேட்­டுக் கொண்­ட­தா­லும் நன்­னீர் மீன்­பி­டியை ஊக்­கு­விக்க வேண்­டும் என வட­மா­கா­ணத்­தி­லுள்ள ஓரிரு குளங்­க­ளைத் தவிர ஏனைய குளங்­கள் அனைத்­துமே கொழும்பு அர­சுக்­குட்­பட்­டது’’ என­வும் அமைச்­சர் தனது சாட்­சி­யத்­தின்­போது கூறி­யி­ருந்­த­மை­யும் வடக்கு மாகா­ணத்­துக்­குட்­பட்ட மூவின மக்­க­ளுக்­கும் தங்­க­ளது வேலைத்­திட்­டம் செல்ல வேண்­டும் எனக் கூறி­ய­தை­யும் விசா­ர­ணைக்­குழு இவ்­வி­டத்­தில் குறிப்­பிட விரும்­பு­கி­றது. எனவே மகா­வலி அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் கீழ் வரு­கின்ற குளங்­க­ளி­லி­ருந்து நன்­னீர் மீன் வளர்ப்­புத் திட்­டத்தை முன்­னெ­டுத்­த­மை­யால் பயன்­பெ­று­வ­தாக வட­ மாகா­ணத்­துக்­குட்­பட்ட மக்­கள் அமை­வ­தா­லும் மகா­வலி அபி­வி­ருத்தி சபை எது­வித பயனை­யும் இதன் மூலம் பெற முடி­யாது.

இந்­த­வி­ட­யத்­தில் வெலி­ஓ­யா­வி­லுள்ள குளங்­க­ளுக்­கும் வடக்கு மாகா­ணத்­தின் ஏனைய குளங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் மீன்­குஞ்­சு­களை விடு­வ­தில் பாகு­பாடு காண்­பிக்­கப்­பட்­ட­தற்­கான சாட்சி எது­வும் ஆணைக்­கு­ழு­வின் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மேலும் குறித்த அமைச்­ச­ரின் சாட்­சி­யத்­தி­லி­ருந்து வடக்கு மாகா­ணத்­தின் வெலி­ஓயா பிர­தே­சம் தவிர்ந்த வேறு பகு­தி­க­ளி­லுள்ள குளங்­க­ளில் ஓரி­ரண்­டைத் தவிர அனைத்­தும் கொழும்பு அர­சின் கட்­டுப்­பாட்­டில் வரு­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.

எனவே வடக்கு மாகா­ணத்­தின் ஏனைய பகு­தி­யில் அர­சுக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள குளங்­க­ளுக்கு மீன்­பிடி வளர்ப்­புத் திட்­டம் மாகாண நிதி­யின் மூலம் முன்­னெ­டுக்­கப்­படு மிடத்து வெலி­ஓயா மட்­டும் ஏன் விதி­வி­லக்­காக அமைய வேண்­டும் என்ற கேள்வி எழு­வதை விசா­ர­ணைக் ­குழு அவ­தா­னிக்­கின்­றது.

இது கொள்கை (policy) சம்­பந்­தப்­பட்ட விட­ய­மா­கின்­றது. குளங்­கள் யாரு­டைய கட்­டுப்­பாட்­டி­னுள் வந்­தா­லும் அங்கு ஆரம்­பிக்­கப்­பட்டு நன்­னீர் மீன்­வ­ளர்ப்­புப் பய­னா­ளி­க­ளாக வடக்கு மாகாண மக்­களே ஆகின்­ற­னர். இதன் கார­ண­மாக வட­ மாகா­ணத்­தில் நன்­னீர் குளங்­க­ளில் மீன்­குஞ்­சு­களை விடு­வ­தில் வடக்கு மாகாண சபை­யின் பணம் வீண்­வி­ர­யம் செய் யப்­பட்­ட­தா­கவோ அல்­லது மோசடி செய்­யப்­பட்­ட­தா­கவோ கருத எது­வித இட­மும் இல்லை என விசா­ர­ணைக்­குழு அபிப்­பி­ரா­யம் கொள்­கி­றது.

மேலும் NAQD தாப­னத்­து­டன் இணைந்து மக்­க­ளுக்­குச் சேவை செய்ய வேண்­டும் என்ற நல்­லெண்­ணத்­து­ட­னேயே அமைச்­சர் செயற்­பட்­டுள்­ளார் என்­ப­தை­யும் அவ­ரது சாட்­சி­யத்­தி­லி­ருந்து காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இது­வி­ட­யத்­தில் எது­வித முரண்­பட்ட சாட்­சி­யம் எம்­முன் வைக்­கப்­ப­டாத நிலை­யில் குறித்த அமைச்­ச­ரின் இந்­தச் ­செயற்­பாட்­டில் அதி­கார முறை­கேடு ஏதா­வது இருந்­த­தாக­ விசா­ர­ணைக் குழு கருத­ வில்லை.

வீதி அமைப்­ப­தில் நிதி மோச­டியை விசா­ரிப்­பது இந்­தக் குழு­வின் கட­மை­யல்ல

2.2) வட­மா­கா­ணத்­தில் எல்லா மாவட்­டங்­க­ளி­லும் நடை­மு­றை­கள் பின்­பற்­றாது போடப்­பட்ட வீதி­கள் தொடர்­பில் நிதி­மோ­சடி செய்­தமை

இந்த விட­யத்­தில் விசா­ர­ணைக்­குழு ஆரம்­பத்­தி­லேயே இத்­த­கைய மோச­டி­கள் உள்­ள­கக் கணக்­காய்வு மூலமே கண்­டு­பி­டிக்­கப்­ப­டல் வேண்­டும். இதற்­கென மாகாண சபை­யில் ஒழுங்கு விதி­கள் இருக்க வேண்­டும் என்­ப­தும் இவற்றை ஒழுங்­கு­ப­டுத்­து­வது இந்த விசா­ர­ணை­கு­ழு­வின் வேலை­யில்லை என்­ப­தும் முறைப்­பாட்­டா­ள­ருக்கு விசா­ர­ணைக்­கு­ழு­ வால் எடுத்­துக் கூறப்­பட்­டது. எனி­னும் விசா­ர­ணைக்­குழு இந்த முறைப்­பாடு தொடர்­பி­லும் குறித்த அமைச்­ச­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது. இந்­தக் குற்­றச்­சாட்டு அனந்தி சசி­த­ரன் என்­ப­வ­ரால் முன்­வைக்­கப்­பட்­டது.

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­குப் பதி­ல­ளித்த குறித்த அமைச்­சர், தனது அமைச்­சில் 2120 கி.மீ நீள­மான வீதி­கள் மட்­டுமே வரு­வ­தா­க­வும் இந்த வீதி­கள் செப்­ப­னி­டப்­ப­டும்­போது நிதி ஆணைக்­குழு, தலை­மைச் செய­லா­ளர் ஆகி­யோ­ரின் அனு­ம­தி­யின் பின்­னரே உரிய நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­பட்டு வீதி­கள் சீர­மைக்­கப் பட்­ட­தா­கக் கூறி­யி­ருந்­தார்.
மேலும் நிதி மோசடி குறித்து சாட்­சி­ய­ம­ளித்த அமைச்­சர், வரு­டா­வ­ரு­டம் ஒதுக்­கப்­ப­டும் தமது நிதி­யி­லி­ருந்து முத­ல­மைச்­சர் உட்­பட சக­ல­ருக்­கும் 6 மில்­லியன் ரூபாவை அவர்­க­ளு­டைய பகுதி வீதி­கள் சீர­மைக்­கப்­ப­டு­வ­தற்­காக வழங்­கப்­பட்­டது.

எனி­னும் இந்த வரு­ட­மும் ஒவ்­வொரு உறுப்­பி­ன­ருக்­கும் தலா 5மில்­லி­யன் ரூபா கொடுப்­ப­தா­க­வும் இந்த முறைப்­பாட்­டுக் கார­ரும் இந்த ஒதுக்­கீட்­டைப் பெற்று வீதி சீர­மைப்­புச் செய்­த­தா­க­வும், ஆயி­னும் அவர் தனது அமைச்சு சார்ந்த ஆலோ­ச­னைக் குழு­வில் அங்­கத்­த­வ­ராக இல்லை என­வும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தார்.

முறைப்­பாட்­டுக்­கா­ரர் விசா­ர­ணைக்­குழு முன்­தோன்றி தனது முறைப்­பாடு தொடர்­பில் உரிய சாட்­சி­கள், ஆவ­ணங்­கள் என்­ப­வற்றை முற்­ப­டுத்­தாத நிலை­யில் குறித்த அமைச்­ச­ரின் சாட்­சி­யத்தை மறுக்க வேண்­டிய நிலமை ஆணைக்­கு­ழு­வுக்கு ஏற்­ப­ட­வில்லை.

எனவே இங்கு நிதி மோசடி அல்­லது அதி­கார முறை­கேடு ஏதா­வது நிகழ்ந்­தது என்­ப­தற்­குப் போதிய சாட்­சி­யம் விசா­ர­ணைக்­குழு முன் இருக்­க­வில்லை.

பேருந்து தரிப்­பி­டங்­கள் அமைத்­த­தில் தவ­றில்லை

2.3) ஒப்­பந்த நடை­மு­றை­களை பின்­பற்­றா­மல் பேருந்து தரிப்­பி­டங்­கள் அமைக்­கப்­பட்­டமை

மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ருக்­கெ­தி­ராக அனந்தி சசி­த­ரன் முன்­வைத்த அடுத்த குற்­றச்­சாட்டு பேருந்து தரிப்பு நிலை­யங்­கள் வடக்கு மாகா­ணத்­தின் எல்லா மாவட்­டங்­க­ளி­லும் நிறு­வப்­பட்­டன. இதற்கு மாகாண சபைக் கூட்­டங்­க­ளில் அல்­லது இந்த அமைச்­சின் ஆலோ­ச­னைக் குழுக் கூட்­டங்­க­ளில் முன் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. இத­னால் பெரு­ம­ளவு நிதி மோசடி இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது என்­ப­தா­கும்.

முறைப்­பாட்­டா­ளர் சமு­க­ம­ளிக்­கத் தவ­றி­ய­மை­யால் இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கு­ரிய சாட்­சி­யங்­கள் ஆவ­ணங்­கள் எது­வும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக முதற்­தோற்ற அள­வி­லேயே இந்­தக் குற்­றச்­சாட்டு கேள்­வி­வ­ழிச் சான்­று­க­ளில் தங்கி நிற்­பது தெளி­வா­கின்­றது. எனி­னும் இந்­தக் குற்­றச்­சாட்­டும் விசா­ர­ணைக்­கு­ழு­வால் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இந்­தக் குற்­றச்­சாட்டு தொடர்­பில் குறித்த அமைச்­சர், இந்த பேருந்­துத் ­தரிப்பு நிலை­யங்­கள் பல­ரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க கட்­டப்­பட்­ட­தா­க­வும் 2014 ஆம் ஆண்­டில் வேலை­கள் உரிய காலத்­தில் முடி­ய­வில்லை என்­றும் இதற்­கான கார­ணம் வட­மா­கா­ணத்­தில் உரிய ஒப்­பந்­த­கா­ரர் இல்லை என்­றும் அவர்­கள் பல வேலை­களை வட­மாகா­ணத்­தில் எடுப்­ப­தால் வேலை­கள் உரிய காலத்­தில் முடி­ய­வ­டை­ய­ வில்லை என்­றும், இத­னால் 2015ஆம், 2016ஆம் ஆண்­டு­க­ளில் தமது அமைச்­சின் கீழுள்ள வீதி அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு ஒரு பேருந்து தரிப்பு நிலை­யம் அமைக்க தேவை­யான நிதி எவ்­வ­ளவு என்ற உரிய மதிப்­பீடு பொறி­யி­ய­லா­ள­ரி­னால் செய்­யப்­பட்டு பேருந்து தரிப்பு நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டிய இடம் தெரிவு செய்­யப்­பட்டு கேள்வி கோரல் நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­பட்டு பேருந்து ­தரிப்பு நிலை­யங்­கள் அமைக்­கப்­பட்­ட­தா­க­வும் நூற்­றுக்­கும் அதி­க­மான பேருந்து தரிப்பு இடங்­கள் வீதி அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­தால் அமைக்­கப்­பட்­டது என­வும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பி­லும் முறைப்­பாட்­டா­ள­ரால் எது­வித சாட்­சி­யம், ஆவ­ணங்­கள் எவை­யும் விசா­ர­ணைக்­குழு முன்­வைக்­காத நிலை­யில் குறித்த அமைச்­ச­ரின் சாட்­சி­யத்தை நம்ப மறுக்க வேண்­டிய நிலை விசா­ர­ணைக் குழு­வுக்கு ஏற்­ப­ட­வில்லை.

எனவே இங்கு நிதி மோசடி அல்­லது அதி­கார முறை­கேடு ஏதா­வது நிகழ்ந்­தது என்­ப­தற்கு போதிய சாட்­சி­யம் ஆணைக்­கு­ழு­வின் முன் இருக்­க­வில்லை. ஒரு குற்­றச்­சாட்டு குறித்த அமைச்­ச­ருக்கு எதி­ராக வைக்­கப்­பட்­டது. அதன் பிர­கா­ரம் வீதி­யில் ஒரு பைய­னைக் கண்டு ‘‘நீ ஏன் வீதி­யில் சும்மா திரி­கின்­றாய் ஒரு பேருந்­துத் ­தரிப்­பி­டத்தை எடுத்­துக் கட்டு. நான் உனக்கு பணம் தரு­கி­றேன் என்று கூறி­னார்’’ என்­ப­தா­கும்.

இந்­தக் குற்­றச்­சாட்­டும் அனந்தி சசி­த­ர­னி­னால் செய்­யப்­பட்­ட­தா­கும். அவர் தமது குற்­றச்­சாட் டில் குறித்த வாலி­பனே இந்­தச் குற்­றச் சாட்டை தமக்­குத் தெரி­வித்­த­தாக கூறி­யி­ருந்­தார். ஆயி­னும் குறித்த வாலி­பர் விசா­ர­ணைக் குழு முன் சாட்­சி­யாக வராத நிலை­யில் இது­வும் ஒரு கேள்வி வழி சாட்­சி­ய­மா­கி­றது. ஆயி­னும் விசா­ர­ணைக்­குழு இந்­தச் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பி­லும் விசா­ரணை நடத்­தி­யது.

இந்த விட­யம் குறித்து குறித்த அமைச்­சர் தனது சாட்­சி­யத்­தின் போது ஆரம்­பத்­தில் பல ஒப்­பந்­த­கா­ரர்­கள் ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் தம்மை அணுகி வீதி, கட்­டட வேலை­களை தமக்கு வழங்­கு­மாறு கோரி­ய­தா­க­வும் அது பிழை­யான நடை­முறை என்­ப­தால் தலை­மைச் செய­லா­ள­ரின் அனு­ம­தி­யோடு பத்­தி­ரி­கை­க­ளில் ஒப்­பந்­த­கா­ரர்­களை பதிவு செய்­வ­தற்­கான அறி­வித்­தல் கொடுக்­கப்­பட்டு திணைக்­க­ளத்­தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளைத் தவிர வேறு எவ­ருக்­கும் இந்த வேலை­கள் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்­றும் தான் அப்­படி எவ­ருக்­கும் கூற­ வில்லை என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருக்­கி­றார்.

குறித்த அமைச்­ச­ரின் இந்த சாட்­சி­யத்தை நம்ப மறுக்க வேண்­டிய நிலை எது­வும் விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு ஏற்­ப­ட­வில்லை. மேலும் இந்­தக் குற்­றச்­சாட்டு கேள்வி வழிச் சாட்­சி­யாக அமை­யும் கார­ணத்­தால் அதனை இந்த விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கி­றது.

அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள்
ஆதா­ர­மற்­றவை

2.4) போரா­ளி­கள், மாவீ­ரர்­கள் குடும்­பங்­க­ளுக் கான வாழ்­வா­தா­ரத்­துக்­காக ஒதுக்­கப்­பட்ட ஒரு கோடி ரூபா நிதியை சரி­யான முறை­க­ளைப் பின்­பற்­றாது போரா­ளி­க­ளின் வாழ்­வா­தார உதவி பய­னா­ளி­கள் தெரி­வில் சரி­யா­கத் தெரிவு செய்­யாது முறை­கே­டு­க­ளைப் பின்­பற்றி மோசடி செய்­தமை.

குறித்த அமைச்­ச­ருக்கு எதி­ராக இந்­தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­வ­ரான அனந்தி சசி­த­ரன் இது தொடர்­பி­லும் விசா­ர­ணைக்­குழு முன் இந்­தக் குற்­றச்­சாட்டை எண்­பிப்­ப­தற்­கு­ரிய சாட்­சி­யங்­கள், ஆவ­ணங்­கள் என்­ப­வற்றை முற்­ப­டுத்­தத் தவ­றி­விட்­டார். எனி­னும் விசா­ர­ணைக்­குழு குறித்த அமைச்­ச­ரி­டம் இந்த விட­யம் குறித்து விசா­ரணை நடத்­திய வேளை­யில் அமைச்­சர் தனது சாட்­சி­யத்­தில்,

1 கோடி ரூபா நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை என்­றும் 2015இல் 43 மில்­லி­ய­னும் 2016இல் 25 மில்­லி­ய­னும் பயன்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் தமக்கு கிடைக்­கப்­பெற்ற 16, 000 இற்கு மேற்­பட்ட விண்­ணப்­பப் படி­வங்­க­ளில் தெரிவு எவ்­வாறு இருக்க வேண்­டும் என திணைக்­க­ளத் துக்­குப் பணிப்­புரை கொடுத்­த­தா­க­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

( நாளை தொட­ரும்)

 

http://uthayandaily.com/story/5619.html

Link to comment
Share on other sites

 

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் ஐங்கரநேசன், குருகுலராசா பதவி நீக்கப்பட வேண்டும்..

Link to comment
Share on other sites

வடக்கு மாகாண சபை மீதான மக்­க­ளின் எதிர்­பார்ப்பு மழுங்­க­டிக்­கப்­பட்டுள்ளது

வடக்கு மாகாண சபை மீதான மக்­க­ளின்  எதிர்­பார்ப்பு மழுங்­க­டிக்­கப்­பட்டுள்ளது
 

மேலும் இந்­தத் தெரிவு முறை­யில் தமிழ் அர­சி­யல் கைதி­கள், அத்­து­டன் கண­வனை இழந்­துள்ள பெண் போரா­ளி­கள், முள்­ளந் தண்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், அவ­ய­வங்­களை இழந்­த­வர்­கள், இரண்­டுக்­கும் மேற்பட்‌ட போராளி களை இழந்­தி­ருக்­கும் குடும்­பங்­களை உள்­வாங்­கு­வது என்ற பிர­மா­ணத்­தின் அடிப்­ப­டை­யில் செய­லா­ளர், பணிப்­பா­ளர் ஆகி­யோ­ரு­டன் ஆலோ­சித்­துத்­தான் கொள்­கைத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது என­வும் கூறி­யி­ருந்­தார்.

எனவே பய­னா­ளி­களை போரா­ளி­கள் குடும்­பங்­கள் மத்­தி­யி­லி­ருந்து தெரிவு செய்­யும் விட­யத்­தில் ஒரு கொள்கை அடிப்­ப­டை­யி­லான முடிவு எட்­டப்­பட்­டுள்­ளமை குறித்த அமைச்­ச­ரின் சாட்­சி­யத்­தி­லி­ருந்து தெளி­வா­கின்­றது. இத்­த­கைய முடி­வுக்கு மேலான பார­பட்­சம் காட்­டப்­பட்­டது என்ற சாட்­சி­யம் இந்த விசா­ர­ணைக்­கு­ழு­வின் முன்­வைக்­கப்­ப­டாத நிலை­யில் இந்தக் குற்­றச்­சாட்­டை­யும் விசா­ர­ணைக் குழு நிரா­க­ரிக்­கின்­றது.

எனவே, குறித்த மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, அமைச் சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்கு எதி­ரா­கக் கொண்டு வரப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் ஆதா­ர­மற்­றவை என்ற முடி­வுக்கு இந்த விசா­ர­ணைக்­குழு வருகின்­றது.

கல்வி அமைச்­ச­ருக்கு எதி­ராக சாட்­சி­யங்­கள் வழங்­கப்­பட்­டன

3. வடக்கு ­மாகாண கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ரா­சா­வுக்கு எதி­ரான முறைப்­பா­டு­கள்

வடக்கு மாகாண சபை­யின் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ரா­சா­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் தொடர் பில் 2017.02.25ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் அமைந்­துள்ள வடக்கு ­மாகாண சபை மாநாட்டு மண்­ட­பத்­தில் விசா­ர­ணைக் குழு­வால் விசா­ரணை நடத்­தப்­பட் டது.

கல்வி அமைச்­ச­ருக்கு எதி­ராக வடக்கு ­மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான அனந்தி சசி­த­ரன், க.சர்­வேஸ்­வ­ரன், ச.சுகிர்­தன், பசு­பதி அரி­ய­ரட் ணம் ஆகி­யோ­ரால் முறைப்­பா­டு­ கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக முறைப்­பாடு செய்­த­வர்­க­ளை­யும் அவர்­க­ளால் முன்­வைக் கப்­பட்ட விட­யம் தொடர்­பான சாட்­சி­யா­ளர்­கள், மாகாண அரச சேவை­யில் பணி­யாற்­றிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளை­யும் இந்த முறைப்­பா­டு­க­ளின் உண்­மைத் தன்­மையை வெளிக் கொண்டு வரு­வ­தற்­காக விசா­ர­ணைக் குழு, சாட்­சி­ய­ம­ளிக்க அழைப்­பாணை அனுப்­பி­யி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டை­யில் முறைப்­பாட்­டா­ ளர்­கள் மாகாண சபை­யின் பிர­தி­நி­தி­கள், விசா­ர­ணைக் குழு­வின் முன்­தோன்றி சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­னர்.

முறைப்­பாட்­டா­ளர்­க­ளது சாட்­சி­யங்­கள் மற்­றும் ஆவ­ணச் சான்­று­க­ளின் ­படி­யும் அந்த முறைப்­பா­டு­கள் தொடர்­பாக சாட்­சி­கள் வழங்­கிய சாட்­சி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ரா­சா­வுக்கு எதி­ராக வழக்கு தொடு­ந­ரால் பின்­வ­ரும் 09 குற்­றச் சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் வடக்கு ­மாகாண ­சபை உறுப்­பி­னர்­க­ளான பசு­பதி அரி­ய­ரட்­ணம், கந்­தையா சர்­வேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரு­டன் சிவ­பா­தம் நந்­த­கு­மார் ஆகி­யோர் சாட்­சி­ய­ம­ளித்து இருந்­த­னர். அத்­து­டன் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இராசா இர­வீந்­தி­ரன் மற்­று­மு் கல்வி அமைச்­சர் ஆகி­யோ­ரது சாட்­சி­யங்­க­ளும் விசா­ர­ணைக்­குழு ­முன் பதிவு செய்­யப்­பட்­டன.

3.1) வட­ம­ராட்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் சிவ­பா­தம் நந்­த­கு­மார் என்­ப­வர் 58 வயது 3 மாதங்­கள் கடந்­துள்ள நிலை­யில், அவ­ருக்கு 16.01.2017இல் தவ­றான இட­மாற்­றம் ஒன்றை வழங்கி இருந்­தமை மூலம் அதி­கார முறை­கேடு செய்­தமை.

வடக்கு மாகாண­ சபை உறுப்­பி­னர் சந்­தி­ர­லிங்­கம் சுகிர்­த­னால் முன்­வைக்­கப்­பட்ட இந்­தக்­ குற்­றச்­சாட்டு தொடர்­பில் வட மாகா­ண­சபை கல்வி அமைச்­சில் உத­விச் செய­லா­ள­ரா­கப் பதவி வகிக்­கும் சிவ­பா­தம் நந்­த­கு­மார் தமது சாட்­சி­யத்­தின்­போது, “2005ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை வட­ம­ராட்சி கல்வி வல­யத்­தின் திட்­ட­மி­டல் பிர­திக் கல்­விப் பணிப்­பா­ள­ராக தான் கட­மை­யாற்­றி­ய­தா­க­வும் 2011ஆம் ஆண்டு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­ட­தா­க­வும் 2016ஆம் ஆண்­டு­வரை அந்­தப் பத­வி­யில் கட­மை­யாற்­றி­ய­தா­க­வும் 17 வரு­டங்­கள் ஒரே வல­யத்­தில் கட­மை­யாற்­றி­ய­தா­கத் தன் மீது குற்­றம் காணப்­பட்டு 16.01.2017இல் தனக்கு 58 வயது 3 மாதங்­கள் முடி­வ­டைந்த நிலை­யில் வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் உத­விச் செய­லா­ளர் பத­விக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­ட­தா­க­வும் ஓய்வு பெறு­வ­தற்கு 2 வரு­டங்­கள் உள்ள நிலை­யில் தன்னை இட­மாற்­றம் செய்து SLEAS தரம் II இல் உள்ள தனக்கு SLAS தரம் III இதற்­கு­ரிய பதவி வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யி­ருந்­தார். ஓய்­வு­பெ­றும் நிலை­யில் இருந்த தன்னை இட­மாற்­றம் செய்­தது தவறு என இவர் தமது சாட்­சி­யத்­தின்­போது தெரி­வித்­தார்.

(மாகாண நிர்­வாக சுற்­ற­றிக்கை இல: NP/02/2009(7)––25/03/2009)

இவ­ரது சாட்­சி­யம் இவ­ருக்­குப் பின் சாட்­சி­ய­ம­ளித்த கல்வி அமைச்­சர், கல்வி அமைச்­சின் செய­லா­ளர் ஆகி­யோ­ரது சாட்­சி­யங்­க­ளில் இருந்து கல்வி அமைச்­சில் நடை­பெற்ற நிய­ம­னங்­கள், பதவி வழங்­கல், இட­மாற்­றம் தொடர்­பில் பல முக்­கிய விட­யங்­களை எம்­மால் அவ­தா­னிக்க முடி­கி­றது. சட்­டத்­தின் பிர­கா­ரம் மாகாண அளு­ந­ருக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை அவர் மாகா­ணப் பொதுச் சேவை ஆணைக்­குழு, தலை­மைச் செய­லா­ளர், அமைச்­சின் செய­லா­ளர்­கள் மற்­றும் குறித்த பத­வி­நிலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மாத்­தி­ரமே கைய­ளிக்க முடி­யும். இவ்­வாறு கைய­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள் மீண்­டும் கைய­ளிக்­கப்­பட முடி­யாது.

நிய­ம­னம் பத­வி­நிலை வழங்­கல், இட­மாற்­றம் என்­ப­வற்­றில் அர­சி­யல் தலை­யீடு இல்­லாது இருக்க வேண்­டும் என்ற அர­சின் பொதுக்­கொள்­கைக்கு ஏற்­பவே அத­ன­டிப்­ப­டை­யில் பொதுச் சேவை ஆணைக்­குழு தேசிய­ ரீதி­யில் செயற்­ப­டு­கின்­றது. மாகா­ணப் பொதுச் சேவை ஆணைக்­குழு மாகாண மட்­டத்­தில் செயற்­ப­டு­கின்­றது.

மேலும் மாகாண ஆளு­ந­ரின் அதி­கா­ரங்­கள் எத்­த­கைய குழு அல்­லது உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­லாம் என்­பது சட்­டத்­தில் திட்­ட­வட்­ட­மா­கக் கூறப்­ப­டு­ கின்­றது. இவை­ய­னைத்­தும் அரச ஊழி­ய­ரின் நிய­ம­னம், பதவி நிலை வழங்­கள், இட­மாற்­றம் என்­பன தொடர்­பில் அர­சி­யல் செல்­வாக்­குப் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் நோக்­கில் செய்­யப்­பட்ட அர­ச­மைப்பு ரீதி­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளாக அமை­கின்­றன.

நிலமை இவ்­வாறு இருக்க, எம் முன்­னி­லை­யில் பதி­யப்­பட்ட சாட்­சி­யங்­கள் வடக்கு மாகாண அமைச்­ச­ரவை இந்த ­விட­யங்­க­ளில் தலை­யிட்­டுள்­ளது என்­ப­தைத் தெளி­வாக எடுத்­துக் காட்­டு­கின்­றது. சிவ­பா­தம் நந்­த­கு­மா­ரின் விட­யத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் மாகா­ணப் பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்­கும் அமைச்­சின் செய­லா­ள­ருக்­கும் அப்­பாற்­பட்டு மாகாண­ சபை­யின் தலை­யீட்­டால் அமைச்­ச­ர­வை­யில் எப­டுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது குறித்த கல்வி அமைச்­ச­ரது சாட்­சி­யம், கல்வி அமைச்சு செய­லா­ள­ரின் சாட்­சி­யம் ஆகி­ய­வற்­றில் இருந்து தெளி­வா­கின்­றது.

மேலும் எந்த ­வகை­யி­லும் ஒரு அரச ஊழி­ய­ருக்­குக் கொடுக்­கப்­ப­ட­மு­டி­யாத வாக்­கு­றுதி வட மாகாண ­சபை அமைச்­ச­ரவை அறி­வு­டன் சி.நந்­த­கு­மா­ரிற்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது யாருக்­குப் பதவி வழங்­கு­வ­தற்­காக சி.நந்­த­கு­மார் வட­ம­ராட்சி வல­யக்­கல்­விப் பணிப்­பா­ளர் பத­வி­யி­லி­ருந்து இட­மாற்­றம் செய்­யப்­பட்­டாரோ அந்த உத்­தி­யோ­கத்­தர் 6 மாதத்­தில் ஓய்வு பெறு­வார் என்­றும், அவ்­வே­ளை­யில் முறைப்­பாட்­டா­ள­ரான சி.நந்­த­கு­மாரை அந்­தப்­ பத­வி­யில் மீண்­டும் அமர்த்­து­வது என்ற வாக்­கு­றுதி முறைப்­பாட்­டா­ள­ருக்­குக் கல்வி அமைச்­சி­னால் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. கல்வி அமைச்­சர், கல்வி அமைச்­சின் செய­ லா­ளர் ஆகி­யோ­ரது சாட்­சி­யத்­தின்­படி, மாகாண அமைச்­ச­ர­வை­யின் அறி­வு­டன்­தான் இந்த ­வாக்­கு­றுதி கல்வி அமைச்­சி­னால் வழங்­கப்­பட்­டுள்­ளது தெரிய வரு­கி­றது.

இச் சந்­தர்ப்­பத்­தில் கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரின் கூற்­றுக்­கள் சில­வற்றை மேற்­கோள்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

‘‘இதை பொதுச் சேவை­கள் ஆணைக்­குழு மேற்­கொண்­டால் எவ்­வ­ளவோ பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­டும்’’…. அதே போன்று எமது மாகா­ணத்­தில் பொதுச்­ சேவை ஆணைக்­குழு தனது அதி­கா­ரத்தை கையி­லெ­டுத்து சேவை­யாற்ற வேண்­டும் என்­பதே எமது வேண்­டு­கோள்’’ மேற்­கூ­றிய அவ­தா­னிப்­பு­க­ளு­டன் விசா­ர­ணைக்­குழு குறித்த முறைப்­பாடு தொடர்­பில் தனது கவ­னத்தை திருப்­பு­கின்­றது.

இந்த விசா­ர­ணைக்­குழு­ முன் சாட்­சி­ய­ம­ளித்த கல்வி அமைச்­சர், இந்த முறைப்­பாடு தொடர்­பில் வில­கிச் செல்­லும் வகை­யில் பொறுப்­பற்ற முறை­யில் சாட்­சி­ய­ம­ளித்­த­தைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

குறித்த இட­மாற்­றம் தொடர்­பில் கீழ்க் கண்ட பதில்­கள் கல்வி அமைச்­சர் வழங்­கி­யி­ருந்­தார். இந்த இட­மாற்­றம் மாகாண அமைச்­ச­ர­வை­யின் அனு­ம­தி­யு­டன் செய்­யப்­பட்­ட­தா­க­வும், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரின் கோரிக்­கை­யின் மேல் செய்­யப்­பட்­ட­தா­க­வும், முறைப்­பாட்­டா­ளர் வல­யத்தை சரி­யான முறை­யில் நடத்­திக் கொண்­டி­ருந்­தார்.

ஆனால் புஸ்­ப­லிங்­கம் விடாப்­ப­டி­யாக தனக்கு இப்­ப­தவி தரப்­ப­ட­வேண்­டும் எனக் கோரி­ய­தால் வழங்­கப்­பட்­ட­தா­க­வும், வடக்கு மாகாண­ சபை முறைப்­பாட்­டுக் குழு­வின் கோரிக்­கை­யால் செய்­யப்­பட்­ட­தா­க­வும், முறைப்­பாட்­டா­ள­ ரின் நிய­ம­னத்­தில் நிகழ்ந்த அர­சி­யல் பழி­வாங்­கலை தாம் சுட்­டிக்­காட்­டி­ய­தா­க­வும் இந்த இட­மாற்­றத்­துக்­குத் தாம் பொறுப்­பாளி இல்லை என பல கார­ணங்­க­ளைக் குறித்த இட­மாற்­றம் தொடர்­பில் அமைச்­சர் கூறி­யி­ருந்­தார்.

வில­கிச் செல்­லும் மனப்­பான்மை கல்வி அமைச்­ச­ரி­டம் தெரிந்­தது

கல்வி அமைச்­சில் நடை­பெ­றும் விட­யங் க­ளுக்கு தாம் பொறுப்­பாளி இல்லை என கல்வி அமைச்­சர் கூறி­ய­தும் மேலே குறிப்­பிட்­ட­வாறு இந்த இட­மாற்­றம் தொடர்­பில் பல விளக்­கங்­கள் கொடுக்க முன்­வந்­த­மை­யும் கல்வி அமைச்­ச­ரின் இந்த இட­மாற்­றம் விட­யத்­தில் வில­கிச் செல்­லும் மனப்­பான்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

மேலும் முறைப்­பாட்­டுக்­கா­ர­ரின் வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் நிய­ம­னம் அர­சி­யல் செல்­வாக்­குட்­பட்­ட­தாக இருந்­த­தாக கூறி முறைப்­பாட்­டா­ள­ருக்கு 16.01.2017 வழங்­கப்­பட்ட இட­மாற்­றத்தை நியா­யப்­ப­டுத்த அமைச்­சர் முயற்­சித்­துள்­ளார்.

முறைப்­பாட்­டுக்­கா­ரர் எம் முன் சாட்­சி­ய­ம­ளித்த வேளை­யில் வட­ம­ராட்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ராக தாம் நிய­ம­னம் செய்­யப்­பட்ட வேளை­யில் தனது தரா­த­ரத்­தில் சேவை மூப்­பு­டை­ய­வ­ராக புஸ்­ப­லிங்­கம் என்­ப­வர் இருந்­த­தா­க­வும் தமக்கு இந்த ­நிய­ம­னம் வழங்­கப்­பட்­ட­தன் மூலம் குறித்த புஸ்­ப­லிங்­கம் சேவை மூப்பு இருந்­த­போ­தி­லும் அதே வல­யத்­தில் தமக்கு கீழ் சேவை­யாற்­றிய நிலை ஏற்­பட்­ட­தை­யும் ஏற்­றுக்­கொண்­டார்.

ஆசி­ரி­ய­ராக தாம் சேவை­யாற்­றிய வேளை­யில் கஸ்­ட­மான பகு­தி­க­ளில் சேவை செய்­த­தை­யும் தனது திற­மை­யை­யும் தமது சாட்­சி­யத்­தின்­போது எடுத்­துக்­கூறி தனது வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் நிய­ம­னத்தை நியா­யப்­ப­டுத்த அவர் முயற்­சித்­தார். எனி­னும் வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் பத­வி­யில் முறைப்­பாட் டா­ளர் கஷ்­டப் பிர­தே­சத்­தில் சேவை செய்­ய­வில்லை என்­ப­தை­யும் ஏற்­றுக்­கொண்­டார்.

எம்­முன் பதி­யப்­பட்ட சாட்­சி­யத்­தின் மூலம் முறைப்­பாட்­டா­ள­ருக்கு 2011இல் வட­ம­ராட்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ராக வழங்­கப்­பட்ட நிய­ம­னம் அர­சி­யல் செல்­வாக்­கின் நிமி்த்­தம் வழங்­கப்­பட்ட முற்­றி­லும் தவ­றான நிய­ம­னம் என்ற முடி­வுக்கு விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

நண்­பர்­கள் இரு­வரை பாது­காத்­த­வர் கல்வி அமைச்­சர்

ஆயி­னும் 2013ஆம் ஆண்டு கல்வி அமைச்­ச­ராக பத­வி­யேற்ற குறித்த கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்­டுத்­துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா அவர்­கள் ஏன் 2017 தை மாதம் வரை­யில் இந்த மாற்­றத்தை செய்­யத் தயங்­கி­னார் என்ற கேள்வி எழு­கி­கின்­றது. இதே போன்று தவ­றான வழி­யில் பத­வி­களை பெற்ற தனது நண்­பர்­கள் இரு­வரை பாது­காக்க அவர்­க­ளது சேவை ஓய்­வுக்­கா­லம் வரும்­வரை அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்­காது இருந்­தார் என எம் முன் கூறப்­பட்ட சாட்­சி­யத்தை இவ்­வி­டத்­தில் சுட்­டிக்­காட்­டு­வது பொருத்­த­மா­ன­தா­கின்­றது.

16.01.2017ல் முறைப்­பாட்­டா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட இட­மாற்­றம் தவ­றா­னது இல்லை என அமைச்­சர் தனது சாட்­சி­யத்­தின் போது கூறி­யுள்­ளார்.

முறைப்­பாட்­டா­ளர் தவ­றான வழி­யில் வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் நிய­ம­னத்­தைப் பெற்­றி­ருந்த போதி­லும் கல்வி அமைச்­சர் தான் பத­வி­யேற்று 4 வரு­டங்­க­ளின் பின் அவர் ஓய்­வு­பெ­றும் காலத்தை அண்­மித்து இருக்­கும்­போது அவ­ருக்கு இட­மாற்­றம் வழங்­கி­யமை தவறு என்ற முடி­வுக்கு விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது. மேலும் SLEAS தரம் II ல் இருந்த முறைப்­பாட்­டா­ள­ருக்கு SLEAS தரம் III தரத்­தில் உள்ள பத­வியை வழங்கி சேவை வழங்­கி­ய­தும் தவறு என்ற முடி­வுக்கு விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

செய­லா­ள­ரின் கட­மை­க­ளில் அமைச்­சர் தலை­யி­டு­வது தவறு

புதிய மாகாண­ சபை ஓர் புதிய அர­சி­யல் நாக­ரீ­கத்தை உரு­வாக்­கும் என்ற மக்­க­ளின் எதிர்­பார்ப்பு மழுங்­க­டிக்­கப்­பட்ட நிலையை இங்கு காண­மு­டி­கின்­றது.

அமைச்­சின் நிய­ம­னங்­கள், இட ஒதுக்­கீடு, இட­மாற்­றம் என்­பன சட்­டப்­படி அமைச்­சின் செய­லா­ள­ரு­டைய நிர்­வாக கடமை. கொள்கை ரீதி­யான முடி­வு­களை எடுப்­பதே அமைச்­சர்­க­ளி­ன­தும் மாகாண அமைச்­ச­ர­வை­யின் கட­மை­யா­கும். நிய­ம­னம், இட­ஒ­துக்­கீடு, இட­மாற்­றம் போன்ற விட­யங்­க­ளில் தலை­யி­டா­தி­ருக்க வேண்­டிய அமைச்­சர் இந்த ­விட­யங்­க­ளில் மாகாண அமைச்­ச­ர­வை­யின் முடிவு எனக் கூறு­வது மிக­வும் தவ­றான நிலைப்­பா­டா­கம்.

எம்­முன் சாட்­சி­ம­ளித்த கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரும் இந்த ­விட­யங்­க­ளில் தாம் அமைச்­ச­ர­வை­யின் முடி­வு­களை செயற்­ப­டுத்­து­வ­தா­கக் கூறி­யுள்­ளதை இங்கு சுட்­டிக்­காட்ட விசா­ர­ணைக்­குழு விரும்­பு­கின்­றது. இந்த நிலை மாற வேண்­டும். அமைச்­சின் செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட நிர்­வாக நீதி­யான கட­மை­க­ளில் மாகாண அமைச்­ச­ரவை அல்­லது அமைச்­சர் தலை­யி­டு­வது தவ­றா­ன­தா­கும்.

3.2) யா/ யூனி­யன் கல்­லூரி அதி­ப­ரின் நிய­ம­னத்­தில் யூனி­யன் கல்­லூரி பழைய மாண­வ­ராக இருந்த வர­தன் மாஸ்­டர் என்­ப­வரை ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் செல்­வாக்கு மூலம் அந்­தப் பாட­சா­லை­யில் சிறி­து­கா­லம் படித்த கார­ணத்­துக்­காக அவரை அந்­தப்­ பாட­சா­லை­யின் அதி­ப­ராக நிய­மிக்க மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அழுத்­தம் கொடுத்­தமை.

3.3) குறித்த வர­தன் என்­ப­வர் கற்கை விடு­மு­றை­யில் இருக்­கும்­போது அவரை அதி­ப­ராக நிய­மித்­த­தன் மூலம் அதி­கார முறை­கேடு புரிந்­தமை.

மாகாண சபை உறுப்­பி­னர் கந்­தையா சர்­வேஸ்­வ­ரன் முன்­வைக்­கப்­பட்ட இந்­தக் ­குற்­றச்­சாட்­டு­கள் குறித்து கல்வி, பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்­டுத்­துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சின் செய­லா­ளர் காட்­சி­ய­ம­ளிக்­கை­யில், “2016ஆம் ஆண்டு யூனி­யன் கல்­லூரி அதி­பர் ஓய்வு பெற்­று­விட்­டார்.

அந்த வெற்­றி­டத்­திற்கு பதவி விண்­ணப்­பம் கோரப்­பட்டு விண்­ணப்­பித்த நால்­வ­ருக்­கும் நேர்­மு­கப் ­பரீட்சை மாகாண கல்­விப் பணிப்­பா­ள­ரின் தலை­மை­யில் நடாத்­தப்­பட்­டது. அதில் அவர்­க­ளால் விதந்­து­ரைக்­கப்­பட்­ட­வர்­க­ளது பட்­டி­யலை கல்வி அமைச்­ச­ருக்கு பரிந்­துரை செய்து அனுப்பி அனு­மதி பெற்று நிய­ம­னம் செய்­யப்­பட்­டது. இந்த நிய­ம­னத்­தின் நிய­மன அதி­காரி அமைச்­சர் இல்லை.

மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட பின்­னர் சட்ட ஒழுங்கு பண்­ணப்­பட்டு இருக்­கின்­றது. அதில் அமைச்­ச­ருக்­கான சில அதி­கா­ரங்­களை குறிப்­பிட்டு இருக்­கின்­ற­படி, நிய­ம­னம் அமைச்­சின் அனு­ம­தி­யோடு செய்­யப்­பட்­டது” என்று சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்.

அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் மாகாண சபை­யின் பத­வி­க­ளுக்­கான உத்­தி­யோ­கத்­தர்­கள் நியமன­ அதி­கா­ரம் மாகாண ஆளு­ந­ரு­டை­யது.

அதை அவர் யாருக்கு தனது அதி­கா­ரத்தை கைய­ளிக்­க­லாம் என்­ப­தும் தெளி­வா­கக் கூறப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு கைய­ளிக்­கப்­பட்ட அதி­காரி மாகா­ணப் பொதுச் ­சேவை ஆணைக்­குழு அல்­லது மாகாண ஆளு­நர் மட்­டுமே இந்த ­நிய­ம­ன­தைச் செயற்­ப­டுத்த முடி­யும். இது தொடர்­பில் வடக்கு ­மாகாண சபை ஏதா­வது நியதி சட்­டம் இயற்றி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பின் அது எம்­முன் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்க வேண்­டும். அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை.

இந்த நிய­ம­னம் குறித்து சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில் ‘‘ வர­தன் அவர்­க­ளுக்­குத்­தான் நேர்­மு­கப்­ப­ரீட்­சை­யில் அதிக புள்­ளி­கள் கிடைத்து அதன்­படி அவ­ருக்கு வழங்­கி­னோம்’’ என்­றும் ‘‘மாகாண அமைச்­ச­ர­வைக்கு அனுப்பி முடி­வெ­டுத்து செய்­கின்­றோம்’’ என முன்­னுக்­குப் பின் முர­ணாக சாட்­சி­யம் கூறி­யுள்­ளார்.

எது எப்­படி இருப்­பி­னும் அமைச்­சுச் செய­லா­ள­ரின் சாட்­சி­ய­மும் அமைச்­ச­ரின் சாட்­சி­ய­மும் இந்­நி­ய­ம­னம் அமைச்­ச­ரி­ன­தும் பணிப்­பு­ரை­யின் படியே செய்­யப்­பட்­டது என்­பதை நிரூ­பிக்­கின்­றன.

விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த முன்­னாள் வட­மா­காண மேல­திக கல்­விப் பணிப்­பா­ள­ரும் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான பசு­மதி அரி­ய­ரட்­ணம், தமது சாட்­சி­யத்­தின்­போது யூனி­யன் கல்­லூரி … தரத்­தில் உள்ள பாட­சாலை என்­றும் இங்கு தரம் 1 அதி­பர் வகுப்­பில் உள்­ள­வர் அல்­லது … அல­வ­லர் அதி­ப­ராக வர­மு­டி­யும் என்­றும் 2016ஆம் ஆண்டு இந்­தப் ­பாட­சா­லைக்க அதி­பர் ஆக நிய­மிக்கப்­பட்­ட­ வர் இத்­த­ரா­த­ரத்­தில் இல்லை என்­றும் அவர் தரம் 2ஐச் சேர்ந்த அதி­பர் என்­றும் கற்கை விடு­மு­றை­யில் நின்­ற­வேளை அவ­ருக்கு இந்த ­நிய­ம­னம் வழங்­கப்­பட்­ட­தெ­ன­வும் கல்­வித் துறை­யில் தமது 40 வரு­ட­கால அனு­ப­வத்­தில் கற்கை விடு­மு­றை ­யில் நின்ற ஒரு­வ­ருக்கு நிய­ம­னம் வழங்­கிய சம்­ப­வம் ஒரு­போ­தும் நடை­பெ­ற­வில்லை என்­றும் அவ்­வாறு கற்கை விடு­மு­றை­யில் நின்ற ஒரு­வ­ருக்கு அதி­பர் பதவி வழங்­கி­யமை தவறு என்­றும் வர­த­னின் நிய­ம­னத்தை இடை­நி­றுத்­து­மா­றும் முத­ல­மைச்­சரே வட ­மாகாண சபை­யில் தீர்­மா­னித்­தும் கல்வி அமைச்­சர் எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­றும் அமைச்­சின் செய­ லா­ளர் இந்த நிய­ம­னத்தை செய்­யும் அதி­காரி என்­றும் அமைச்­சர் இந்­தத் தவ­றான நிய­ம­னம் குறித்து எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

கல்வி அமைச்­சின் செய­ல­ரால் உண்மை மறைக்­கப்­பட்­டது

மேலும் அவர் தமது சாட்­சி­யத்­தில், அமைச்சு செய­லா­ளர் தமது சாட்­சி­யத்­தில் தரம் 1 அதி­பார்­க­ளின் பற்­றாக் குறை பற்றி கூறி­யது மறைக்­கப்­பட்ட உண்மை என­வும் தட்­டு­வன்­கொட்டி அம்­பிகை வித்­தி­யா­ல­யத்­தில் 1–5 வரை­யி­லான வகுப்­பு­களே நடை­பெ­று­வ­தா­க­வும் அதன் அதி­பர் தெய்­வேந்­தி­ர­ராஜா என்­ப­வர் தரம் I அதி­ப­ராக இருக்­கி­றார் என்­றும் மாற்­றம் கோரிய வேளை­யி­லும் அது அவ­ருக்கு கொடு­ப­ட­வில்லை என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

கல்வி அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில், “யூனி­யன் கல்­லூரி தொடர்­பில் முத­ல­மைச்­சர் தீர்­மா­னம் எடுத்­ததை ஏற்­றுக் கொண்­டுள்­ளார். தட்­டு­வன்­கொட்டி பாட­சாலை அதி­பர்­ தெய்­வேந்­தி­ர­ராஜா தொடர்­பில் தெரி­விக்­கும் பொழுது அவர் விபத்­தில் சிக்­கி­ய­தால் அவ­ரால் சரி­வர தனது கட­மை­களை செய்ய முடி­ய­வில்லை என சாட்­சி­ய­ம­ளித்­தார். அவர் அவ்­வாறு விபத்­தில் சிக்தி தனது கட­மை­களை சரி­வர செய்ய முடி­யாத நிலை­யில் இருக்­கி­றார் என்­பது எம் முன்­னி­லை­யில் உரிய சாட்­சி­யங்­கள் மூலம் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.

மேலும் அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில் ‘‘ 1AB பாட­சா­லைக்கு உரிய ஆள்­கள் இருக்­கி­றார்­கள் அவர்­கள் அந்த பாட­சா­லைக்கு போக­வில்லை. கோட்­டக் கல்வி அலு­வ­ல­கங்­க­ளில் இணைத்து இருக்­கி­றோம்’’ எனக் கூறி­யுள்­ளார். இந்­தச் சாட்­சி­யம் பசு­பதி அரி­ய­ரட்­ணத்­தின் சாட்­சி­யத்தை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.மேலும் வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தின் போது, “கற்கை விடு­மு­றை­யில் நிற்­கும் ஒரு­வர் அந்­தக் காலத்­தில் வேறு பயிற்சி பெறக் கூடாது என்று மட்­டுமே பிர­மா­ணம் உள்­ளது.

பதவி உயர்­வு­க­ளுக்கு நேர்­மு­கப் பரீட்­சைக்கு சமூ­க­ம­ளிக்­கக்­கூ­டாது என்று எது­வும் இல்லை. இத­னால் பதவி வழங்­கப்­பட்­டது” என்று கூறி­யி­ருந்­தார். கல்வி அமைச்­ச­ரின் இந்த நிலைப்­பாட்டை இந்த ­விசா­ர­ணைக்­குழு ஏற்க மறுக்­கின்­றது. ஏனெ­னில் விடு­மு­றை­யில் நிற்­கும் ஒரு­வ­ருக்கு பதவி வழங்­கப்­ப­டு­வது ஓர் தகுந்த நெறி­முறை இல்லை.

அதி­பர் நிய­ம­னத்­தில் கல்வி அமைச்­சர் தலை­யீடு

மேலும் மாகாண சபை உறுப்­பி­னர் பசு­பதி அரி­ய­ரட்­ணம் தமது சாட்­சி­யத்­தில் வட­மா­காண கல்வி அமைச்­சர் கிளி­நொச்­சி­ யில் கல்வி பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றிய வேளை­யில் வர­தனை அவ­ரது வீட்­டுக்கு மிக அரு­கில் உள்ள முரு­கா­னந்தா பாட­சா­லைக்கு அதி­ப­ராக நிய­மித்­தார் என்­றும் அவர்­கள் மிக நெருங்­கிய குடும்ப நண்­பர்­கள் என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தார். இந்த சாட்­சி­யம் அமைச்­ச­ரின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­பட்ட போதும் அவர் அதை மறுத்து எது­வும் கூற­வில்லை.

இந்­தச் சாட்­சி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தில்­லை­யம்­ப­லம் வர­தன் என்­ப­வர் தரம் 2 அதி­பர் என்­ப­தும் இவர் தரம் 2 அதி­ப­ராக இருந்த வேளை­யில் 1 AB பாட­சா­லை­யான யூனி­யன் கல்­லூ­ரிக்கு அதி­ப­ராக வடக்கு மாகாண கல்வி அமைச்­ச­ரது பணிப்­பு­ரைக்­க­மைய நிய­மிக்­கப்­பட்­டார் என்­ப­தும் அவ்­வாறு நிய­மிக்­கப் பட்ட வேளை­யில் அவர் கற்கை விடு­மு­றை­யில் நின்­றார் என்­ப­தும் நிரூ­ப­ண­மா­கின்­றது. ஆயி­னும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் செல்­வாக்கு குறித்து எது­வித சாட்­சி­ய­மும் எம் முன் வைக்­கப்­ப­ட­வில்லை.

அத்­து­டன் அமைச்­சின் செய­லா­ளர் இந்த நிய­ம­னத்தை சுதந்­தி­ர­மாக செய்ய வேண்­டிய அதி­கா­ரி­யாக இருந்த போதி­லும் அமைச்­சரே அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அழுத்­தம் கொடுத்­த­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே 2ஆம் குற்­றச்­சாட்­டில் நாடா­ளு­மன்ற அங்­கத்­த­வ­ரின் செல்­வாக்கு என்­பது நீக்­கப்­ப­டு­ வ­தற்­க­மை­வாக வடக்கு ­மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத் துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­ச­ருக்கு எதி­ராக மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள் ளது என்ற முடி­வுக்கு இந்த ­விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

3.4) குறித்த அதி­ப­ரின் நிய­ம­னத்தை உடன் நிறுத்­து­மாறு முத­ல­மைச்­சர் தலை­மை­யில் நடை­பெற்ற வடக்கு மாகாண சபை அமர்­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­ போ­தும் அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்கு எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­காது இருக்க செய­லா­ளரை தடுத்­தமை.

மேற்­படி குற்­றச்­சாட்டு குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தின்­போது, “மாகாண சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப் பட்டது தமக்கு ஞாப­க­மில்லை எனக் கூறிய வேளை­யி­லும் வேறொரு கேள்­விக்கு பதில் அளிக்­கும் வேளை­ யில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் அத்­தீர்­மா­னம் யூனி­யன் கல்­லூரி தொடர்­பா­னது எனக் கூறி­யுள்­ளார்.

எனவே இந்­தப் ­பதி­லி­லி­ருந்து இத்­தீர்­மா­னம் குறித்து அமைச்­சர் அறிந்­தி­ருந்­தார் என்ற முடி­வுக்கு விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது. எனி­னும் பதவி இடை நிறுத்­தம் என்­பது அமைச்சு செய­லா­ள­ரின் அதி­கா­ரத்­திற்­குட்­பட்ட விட­யம். இதில்­ மாகாண சபையோ முத­ல­மைச்­சரோ முடிவு எடுக்­கவோ அல்­லது அந்த ­முடி­வைச் செயற்­ப­டுத்­து­மாறு அமைச்சு செய­லா­ளரை கேட்­கவோ சட்­டத்­தில் இட­மில்லை.

இதன் கார­ண­மாக இந்­தக்­ குற்­றச்­சாட்­டுக்கு வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­ யாட்­டுத்­துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர் பொறுப்பு இல்லை என்ற முடி­வுக்கு விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

அதிபர் மீதான குற்றச்சாட்டை அமைச்சரின் சாட்சியம்
உறுதி செய்தது

3.5) அ. 2015ஆம் ஆண்­ட­ள­வில் கிளி­நொச்சி பார­தி­பு­ரம் அதி­பர் அந்­தப்­ பாட­சா­லை­யில் கல்வி கற்ற மாணவி ஒரு­வ­ரி­டம் தகாத முறை­யில் நடக்க முற்­பட்­டமை தொடர்­பாக வடக்கு மாகாண­ சபை உறுப்­பி­னர் அனந்தி சசி­த­ரன், மாகா­ணக் கல்வி அமைச்­ச­ருக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்த போதும் அந்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக எந்த வித­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை.

வடக்கு ­மாகாண சபை உறுப்­பி­னர் அனந்தி சசி­த­ர­னால் முன்­வைக்­கப் பட்ட குற்­றச்­சாட்­டான 2015ம் ஆண்­ட­ள­வில் பார­தி­பு­ரம் பாட­சாலை அதி­பர் அப்­பா­ட­சாலை மாணவி ஒரு­வ­ரி­டம் தகாத முறை­யில் நடக்க முற்­பட்­டமை தொடர்­பில் எது­வித ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை. இந்­தச்­ சம்­ப­வம் குறித்து வடக்கு ­மாகாண சபை உறுப்­பி­னர் அனந்தி சசி­த­ரன், வடக்கு மாகாண கல்வி அமைச்­ச­ரி­டம் முறைப்­பாடு செய்­துள்­ளார்.

இந்­தக்­ குற்­றச்­சாட்டு தொடர்­பில் கல்வி அமைச்­சர் தனது சாட்­சி­யத்­தில் இச் சம்­ப­வத்தை தொடர்ந்து குறித்த அதி­பர் 1AB பாட­சா­லை­யில் இருந்து சிறிய பாட­சா­லைக்கு மாற்­றப்­பட்­டார் என்­றும் வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரி­னால் இந்­தச்­ சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை செய்­யப்­பட்டு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் குறித்த அதி­ப­ரின் பெயர் கணே­சன் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இந்த ­விட­யம் குறித்து பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கொடுக்­கப்­ப­ட­வில்லை என கேட்­கப்­பட்ட போது அமைச்­சர் அதற்கு ‘‘நீங்­கள் அதனை செய­லா­ள­ரி­டம்­தான் கேட்­க­வேண்­டும் எனக்கு அது­பற்றி தெரி­யாது’’ எனப் பொறுப்­பற்ற வகை­யில் கூறி­யுள்­ளார். இந்த ­விட­யத்­தில் அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றி­யமை பற்றி அமைச்­ச­ரி­டம் சுட்­டிக்­காட்­டப்­பட்ட வேளை­யில் ‘‘நீங்­கள் தான் குறிப்­பி­டு­கின்­றீர்கள்.
(நாளை தொட­ரும்)

http://uthayandaily.com/story/5749.html

Link to comment
Share on other sites

2 நாள்க­ளில் செல­வா­கிய ரூ. 40 மில்­லி­ய­னால் வட­மா­கா­ணத்­தில் கல்வி வளர்ச்சி ஏற்­பட்­டதா?

 
2 நாள்க­ளில் செல­வா­கிய ரூ. 40 மில்­லி­ய­னால் வட­மா­கா­ணத்­தில் கல்வி வளர்ச்சி ஏற்­பட்­டதா?
 

அதி­பர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றி­விட்­டார் அமைச்­சர் குரு­கு­ல­ராசா

‘‘நீங்­கள்­தான் குறிப்­பி­டு­கின்­றீர்­கள். சம்­பந்­தப்­பட்ட மாண­வி­யி­டம் இருந்து எந்த முறைப்­பா­டும் கிடைக்­க­வில்லை’’ எனக் கூறி­யுள்­ளார்.

சம்­பந்­தப்­பட்ட மாண­வி­யி­டம் இருந்து முறைப்­பாடு கிடைக்­க­வில்லை என்ற நிலைப்­பாட்டை அமைச்­சர் எடுத்த வேளை­யி­லும் அதி­ப­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­பட்டு அவர் 1AB பாட­சா­லை­யில் இருந்து தரம் இறக்­கப்­பட்­டுள்­ளார் என்ற அமைச்­ச­ரின் கூற்று இந்­தச்­ சம்­ப­வத்தை நிரூ­பிக்­கின்­றது.

இவ்­வாறு அந்த அதி­ப­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அவர் தரம் இறக்­கப்­பட்­டார் என்­ப­வற்­றுக்கு எது­வித ஆதா­ர­மும் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் அமைச்­ச­ரின் பதி­லில் இருந்து குறித்த சம்­ப­வம் உண்மை என்­ப­தும் இது குறித்து அமைச்­சர் அறிந்­தி­ருந்­தார் என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது.

கல்­வித் துறை­யையே தலை குனி­ய­வைக்­கும் செயல்
மூடி­ம­றைக்­கப்­பட்­டது

மேலும் அமைச்­ச­ரி­டம் குறித்த அதி­ப­ரு­டன் என்ன தொடர்பு எனக் கேட்­கப்­பட்ட வேளை­யில் தாம் கல்­விப் பணிப்­பா­ள­ராக இருந்த வேளை­யில் அந்த அதி­பர் சேவைக்­கால ஆலோ­ச­க­ராக இருந்­தார் என்­றும் அவர் தன்­னு­டைய நண்­ப­னில்லை என்­றும் கூறி­யி­ருந்­தார். எனி­னும் இந்­தச்­ சம்­ப­வத்தை நன்கு அறிந்­தி­ருந்­தும் குறித்த அதி­ப­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளரை அல்­லது செய­லா­ளரை கேட்க அமைச்­சர் தவ­றி­யுள்­ளார்.

கல்­வித்­து­றை­யையே தலை குனிய வைக்­கும் இந்­தச் செயல், கல்வி அமைச்­சர் உட்­பட கல்வி அதி­கா­ரி­க­ளால் மூடி­ம­றைக்­கப்­பட்­டுள் ளதை நாம் காண்­கின்­றோம். இது ஓர் தவ­றான செய­லா­கும். குறித்த அதி­பர் மாண­வி­யின் மீது புரிந்த பாலி­யல் வன்­முறை நட­வ­டிக்­கை­யா­னது ஓர் குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­யாக அமை­கின்­றது.
இந்­தச்­ சம்­ப­வத்தை மூடி மறைப்­ப­தில் அமைச்­ச­ருக்கு பங்கு இருந்­துள்­ளது என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது. எனவே இது ஓர் அதி­கார முறை­கேடு என்ற முடி­வுக்கு ­விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

ஆசி­ரி­யர் மீதான பழி­வாங்­கல் ; முதல்­வர் விசா­ரிக்­க­வேண்­டும்

3.5 ஆ) குறித்த அதி­பர் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்­து­கொள்ள முயன்ற விட­யத்தை பாட­சாலை வகுப்­பா­சி­ரி­யர் வல­யக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர் முரு­க­வே­ ளுக்­குக் கடி­தம் மூலம் முறைப்­பாடு செய்­தார். அதற்­காக அந்த ஆசி­ரி­யர் பழி­வாங்­கப்­பட்டு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் முரு­க­வே­ளால் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டமை.

இந்த ­விட­யம் குறித்து எது­வித நேரடி சாட்­சி­ய­மும் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­வைக்­கப்­ப­ட­ வில்லை. எனி­னும் கல்வி­ அமைச்­ச­ரி­டம் இது குறித்து கேட்­கப்­பட்ட வேளை­யில், “குறித்த ஆசி­ரி­யர் தமது விருப்­பப்­படி இட­மாற்­றம் பெற்­றுச் சென்­ற­தா­க­வும் இந்த ­முறைப்­பாடு தமக்கு வர­வில்லை என்­றும் வந்­தி­ருந்­தால் நட­வ­டிக்கை எடுத்­திருப்­பேன்” என்­றும் கூறி­யி­ருந்­தார்.

சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யை­யின் சாட்­சி­யம் எம் முன் நெறிப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யால் இந்­தக்­ குற்­றச்­சாட்டை விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கின் றது. அதே­வே­ளை­யில் இந்­தக்­ குற்­றச்­சாட்டு தொடர்­பில் முறை­யான விசா­ரணை ஒன்றை நடத்­து­மாறு கல்வி­ அதி­கா­ரி­க­ளைப் பணிக்­கு­மாறு முத­ல­மைச்­சரை இந்த ­விசா­ர­ணைக்­குழு கேட்­டுக்­கொள்­கின்­றது.

கல்­விப் பணிப்­பா­ள­ரின் நடத்தை தொடர்­பில் விசா­ரணை அவ­சி­யம்

3.5) குறித்த ஆசி­ரி­ய­ரின் கடித மூல­மான முறைப்­பாட்டை விசா­ரிக்­கச் சென்ற வல­யக்­கல்­விப் பணிப்­பா­ளர், அந்த ஆசி­ரி­யரை ஏனைய ஆசி­ரி­யர்­கள் முன்­னி­லை­யில் கொச்­சைப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக அனந்தி சசி­த­ரன், கல்வி அமைச்­ச­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தும் வல­யக்­ கல்­விப் பணிப்­பா­ள­ருக்கு எதி­ராக எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை.

இது தொடர்­பில் விசா­ர­ணைக் குழு­வி­டம் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டில் குறித்த கல்­விப் பணிப்­பா­ளர் விசா­ர­ணைக்கு என்று சென்ற வேளை­யில், அந்த முறைப்­பாட்­டைச் செய்த வகுப்­பா­சி­ரி­யை­யி­ட­மி­ருந்து தமக்கு ஒரு காதல் கடி­தம் வந்­துள்­ளது என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­னார் என்­ப­தா­கும்.

இதி­லி­ருந்து கல்வி அமைச்­ச­ரி­டம் விசா­ர­ணைக்­ குழு விசா­ரித்த வேளை­யில், “தமக்கு எழுத்து மூல­மான அறி­வித்­தல் ஒன்­றும் இல்லை என்­றும் அனந்தி சசி­த­ரன் சொன்­னது தமக்­குத் தெரி­யாது என­வும் கூறி­யி­ருந்­தார்.

இங்கு சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யை­யின் சாட்­சி­யம் விசா­ர­ணைக் குழு முன்­னி­லை­யில் நெறிப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யால் இந்­தக் குற்­றச் சாட்டை இந்த விசா­ர­ணைக்­குழு நிரா­க­ ரிக்­கின்­றது.

அதே­வே­ளை­யில் ஆசி­ரி­யை­யி­னால் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டின் பெரிய தன்மை கார­ண­மாக வல­யக்­ கல்­விப்­ பணிப்­பா­ள­ரின் இந்த நடத்தை குறித்து ஓர் முறை­யான விசா­ரணை நடத்­து­மாறு கல்வி அதி­கா­ரி­க­ளைப் பணிக்­கு­மாறு முத­ல­மைச்­சரை இந்த விசா­ர­ணைக்­குழு கேட்­டுக் கொள்­கின்­றது.

அதி­ப­ருக்கு எதி­ராக குற்­ற­வி­யல் வழக்கு

மேலும் கிளி­நொச்சி, பாரதி பாட­சா­லை­யில் 2015ஆம் ஆண்­ட­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் அப்­போ­தைய அதி­பர் தகாத முறை­யில் நடக்க முற்­பட்­டமை தொடர்­பி­லும் இந்த விட­யத்தை வல­யக்­ கல்­விப்­ப­ணிப்­பா­ள­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­திய ஆசி­ரியை இட­மாற்­றம் செய்­யப்­பட்­டமை குறித்­தும் குறித்த ஆசி­ரியை இந்த­ முறைப்­பாட்­டைச் செய்­த­தை­ம­யால் வல­யக்­ கல்­விப் ­பணிப்­பா­ளர் ஆகிய முரு­க­வே­ளி­னால் ஏள­னம் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லும் குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­துக்கு அமைய விசா­ரணை நடத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்கை அவர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் இந்த விசா­ர­ணைக்­குழு கேட்­டுக் கொள்­கின்­றது.

அமைச்­ச­ருக்கு எதி­ரான  குற்­றச்­சாட்டை செய­லா­ள­ரின்
சாட்­சி­யம் நிரூ­பிக்­கின்­றது

3.6) கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தி­லும் கிளி­நொச்சி புனித திரேசா பெண்­கள் பாட­சா­லை­யி­லும் தனக்­கேற்­ற­வர்­களை அதி­ப­ராக நிய­ம­னம் செய்ய கல்வி அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அழுத்­தம் கொடுத்­தமை.

இந்த விட­யம் குறித்து கல்வி அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில், “கல்வி அமைச்­சில் விண்­ணப்­பம் கோரி நேர்­மு­கத்­தேர்வு நடத்­தித்­தான் நிய­ம­னம் செய்­தார்­கள் என்­றும் தாம் அதற்கு எந்­த­வித அழுத்­த­மும் கொடுக்­கவில்லை” என்­றும் கூறி­யி­ருந்­தார்.

வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் தமது சாட்­சி­யத்­தில், “2015ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட 80 அதி­பர்­க­ளுக்கு தரம் 1 பத­வி­யு­யர்வு கொழும்­புக் கல்வி அமைச்­சால் வழங்­கப்­பட்­டது.

அதில் வெற்­றி­ட­மாக இருந்த பாட­சா­லை­க­ளுக்கு விண்­ணப்­பம் கோரி நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்­தப்­பட்­டது. அப்­போது கிளி/ புனித திரேசா பெண்­கள் பாட­சா­லை­யில் இருந்த அதி­பர் வேறு பாட­சா­லைக்­குத் தெரிவு செய்­யப்­பட்­ட­தால் கிளி/ புனித திரேசா பெண்­கள் கல்­லூ­ரிக்கு அதி­பர் வெற்­றி­டம் ஏற்­பட்­டது. அதற்கு வலி­கா­மம் கல்வி வல­யத்­தில் சங்­கானை கோட்­டக் ­கல்வி அதி­கா­ரி­யாக இருந்த வகுப்பு 1 அதி­பரை அந்த பாட­சா­லைக்கு நிய­மிக்­கு­மாறு கல்வி அமைச்­சர் கூறி­யி­ருந்­தார்” என்று தெரி­வித்­தார்.

கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரின் சாட்­சி­யம் கிளி/ புனித திரேசா பெண்­கள் பாட­சாலை தொடர்­பில் அமைச்­சர் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட குற்­றச்­சாட்டை நிரூ­பிக்­கின்­றது. அங்கு கல்வி அமைச்­ச­ரின் அழுத்­தம் கார­ண­மா­கவே அந்த நிய­ம­னம் நடை­பெற்­றது என்ற முடி­வுக்கு இந்த விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யம் தொடர்­பில் எந்­த­வித சாட்­சி­ய­மும் எம்­முன் வைக்­கப்­ப­டாத நிலை­யில் கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யம் தொடர்­பான குற்­றச்­சாட்டு நிரா­க­ரிக்­கப் படு­கின்­றது.

நிதி வீண்­வி­ர­யம் குறித்து செய­லா­ள­ரின் சாட்­சி­யம் இது

3.7) வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள கல்வி வல­யங்­க­ளில் ஆசி­ரி­யர் மாநாடு என்ற பெய­ரில் பெரு­ம­ள­வில் நிதி செல­வ­ழித்து வீண்­வி­ர­யம் செய்­தமை
இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன், “ஆசி­ரி­யர் மா­நாடு 12 வல­யங்­க­ளில் நடத்­தப்­பட்­டது.

2015ஆம் ஆண்டு PSDG நிதி­யில் ரூபா 80 மில்­லி­யன் ஒதுக்கி ஆசி­ரி­யர் மா­நாட்­டை­யும் அதி­பர் மா­நாட்­டை­யும் கட்­டா­யம் நடத்­தும்­படி கூறப்­பட்­டது. நாங்­கள் ரூபா 80 மில்­லி­ய­னை­ யும் இதற்­குப் பயன்­ப­டுத்த முடி­யாது எனக்­கூறி ரூபா 40 மில்­லி­யனை இந்­தத்­ தேவைக்­கும் மிகுதி ரூபா 40 மில்­லி­யனை ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தள­பா­டங்­க­ளைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கும் வழங்­கி­னோம்.

அதன்­படி ரூபா 40 மில்­லி­ய­னில் ரூபா 24 மில்­லி­யனை ரூபா 2 மில்­லி­யன்­படி 12 வலங்­க­ளுக்­கும் மிகுதி ரூபா 16 மில்­லி­யனை அதி­பர் மா­நாட்­டுக்­கும் ஒதுக்கி வழங்­கி­னோம். ஒவ்­வொரு ­வல­ய­மும் தமக்கு வழங்­கிய நிதிக்­கேற்­ற­வாறு ஒதுக்கி செலவு செய்­தார்­கள்” என்று கூறி­யி­ருந்­தார்.

மேலும் அவர் தமது சாட்­சி­யத்­தில், “நாங்­கள் ஒவ்­வொரு வல­யத்­துக்­கும் நிதி­யைக் கொடுத்து அவர்­களே விழா­வுக்­கான திட்­டங்­களை மேற்­கொண்டு செய்­தார்­கள். இந்த மாநாட்­டின் நோக்­கம் எல்லா ஆசி­ரி­யர்­க­ளும் ஒன்­று­கூடி தங்­க­ளது திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வது. அவர்­க­ளுக்­கான பாட­வி­தா­னங்­க­ளு­டன் தொடர்­பான சுற்­ற­றிக்­கை­க­ளு­ட­னான ஆய்­வு­கள் ஆக்­கங்­கள் பற்­றிய நிகழ்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­ன”­என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இவ­ரது சாட்­சி­யத்­தில் இருந்து ஆசி­ரி­யர் மாநாட்­டுக்­கென வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­யன் ரூபா 40 மில்­லி­ய­னாக வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­சால் குறைக்­கப்­பட்­டது என்­பது தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் ஆசி­ரி­யர் மாநாட்­டுக்­கென இந்த நிதி வழங்­கப்­பட்ட போதி­லும் ஒவ்­வொரு வல­யத்­துக்­கும் நிதியை வழங்­கிய பின் அவர்­களே விழா­வுக்­கான திட்­டங்­களை மேற்­கொண்டு செய்­தார்­கள் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

நிதி விர­யம் குறித்து கல்வி அமைச்­ச­ரின் சாட்­சி­யம் இது

இந்த விட­யம் சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­சர், “ஆசி­ரி­யர்­கள், அதி­பர்­கள் மாநாட்­டுக்­கென நிதி ஆணைக்­கு­ழு­வால் ரூபா 40 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டது. எம்­மால் இந்த மாநாடு நடத்­தப்­ப­ட­வில்லை. ஒவ்­வொரு கல்வி வல­ய­மும் கையேட்­டின்­படி இதில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை நடத்­தி­னார்­கள். அவர்­க­ளின் ஆக்­கங்­க­ளைக் கொண்டு சஞ்­சி­கை­கள் வெளி­யிட்­டார்­கள்.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு உள்ள சந்­தே­கங்­கள் தொடர்­பாக ஆய்­வு­கள் நடத்­தி­னார்­கள். கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளைக் கொண்டு விரி­வுரை நடத்­தி­னார்­கள். ஒவ்­வொரு கல்வி வல­யத்­தி­லும் 2 நாள்­கள் இது நடை­பெற்­றது. கல்­விக் கண்­காட்­சி­கள், கலை நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­பட்­டன. ஆசி­ரி­யர்­க­ளின் ஆற்­றலை வெளிப்­ப­டுத்­து­கின்ற நிகழ்­வு­கள்­தான் நடை­பெற்­றன.

இது எவ்­வாறு நடத்த வேண்­டும் என நிதி ஆணைக்­குழு ஒரு பிர­மா­ணத்தை அனுப்பி இருக்­கின்­றது. அதில் இருந்து வில­கிச் செல்ல முடி­யாது. அந்த வகை­யில்­தான் ­செயற்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் மூலம் ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் எவ்­வாறு வகுப்­ப­றை­யில் கற்­பிக்க வேண்­டும் என்­பது பற்றி விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது” என்று கூறி­யி­ருந்­தார்.

மேலும் அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில், “இந்த மாநாட்­டில் என்ன நடை­பெற்­றது என்­பதை தாம் பார்க்­க­வில்லை என்­றும் செய­லா­ளர்­கள், மாகா­ணக் கல்­விப் பணிப்­பா­ளர்­கள், கல்வி வல­யங்­க­ளில் தயா­ரிக்­கப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளைப் பார்ப்­பார்­கள் என்­றும் 12 வல­யங்­க­ளில் பதி­னை­யா­யி­ரம் ஆசி­ரி­யர்­கள் இருக்­கின்­றார்­கள் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

மேலும் அமைச்­ச­ரி­டம் ஆசி­ரி­யர்­க­ளின் திறன் விருத்­திக்­காக வழங்­கப்­பட்ட அந்த நிதியை ஒரு­நா­ளில் செலவு செய்­யா­மல் அவர்­க­ளின் கல்வி கற்­பிப்­ப­தற்­கான அறிவை வளர்ப்­ப­தற்கு பயன்­ப­டுத்­த­லாம் எனக்­கூ­றப்­பட்ட போது, அந்த நிதி இதற்­கா­க­வே­தான் வழங்­கப்­பட்­டது எனக்­ கூறி­யி­ருந்­தார்.

நிதிப் பயன்­பாட்­டில் கல்வி அமைச்­சர் பொறுப்­பற்ற செயற்­பாடு

வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்சு செய­லா­ள­ரின் சாட்­சி­யத்­தை­யும் வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­ச­ரின் சாட்­சி­யத்­தை­யும் ஒப்­பிட்டு நோக்­கும் இடத்து வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­ச­ரின் பொறுப்­பற்ற செயற்­பாடு மிகத் தெளி­வாக வெளிப்­ப­டு­கின்­றது.

கல்வி அமைச்­சின் செய­லா­ளர், ரூபா 80 மில்­லி­யன் வழங்­கப்­பட்டு பின் அது தங்­க­ளால் ரூபா 40 மில்­லி­ய­னா­கக் குறைக்­கப்­பட்­டது எனக்­கூ­றிய வேளை­யில், அமைச்­சர் ரூபா 40 மில்­லி­யன் மட்­டுமே தரப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

நிதி ஆணைக்­கு­ழு­வின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வா­கவே இந்த நிதி செலவு செய்­யப்­பட்­டது என்­றும் நிதி ஆணைக்­கு­ழு­வின் பிர­மா­ணத்தை மீற முடி­யாது என்­றும் கல்வி அமைச்­சர் தெரி­விக்­கும் அதே வேளை­ அ­மைச்­சின் செய­லா­ளர் வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­யன் நிதி­யில் ரூபா 40 மில்­லி­யன் வேறு தேவைக்­குப் பாவிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் ஏற்­க­னவே கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த போதி­லும் அவர் தமது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டுள்ள ஆவ­ணங்­கள் எத­னை­யும் விசா­ர­ணைக்­குழு முன் சமர்ப்­பிக்­க­வில்லை.

அவ்­வாறு செய்­யு­மாறு தமது அமைச்­சின் செய­லா­ள­ரை­யும் அவர் பணிக்­க­வில்லை. நிதி ஆணைக்­கு­ழு­வின் இன் அறி­வு­றுத்­த­லைச் சமர்ப்­பிக்­காது அமைச்­சர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார். மேலும் ஆசி­ரி­யர் மா­நாட்­டின் போது சஞ்­சி­கை­கள் வெளி­யி­டப்­பட்­ட­தா­கக் கூறிய போதி­லும் அவை விசா­ர­ணைக்­குழு முன் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

கல்வி வளர்ச்­சிக்­கென ஆசி­ரி­யர் அதி­பர் மாநாடு நடத்த நிதி ஆணைக்­கு­ழு­வால் தரப்­பட்ட ரூபா 80 மில்­லி­யன் அமைச்­ச­ரின் அறி­வுக்கு அப்­பாற்­பட்ட வகை­யில் ரூபா 40 மில்­லி­ய­னா­கச் செய­லா­ள­ரி­னால் குறைக்­கப்­பட்டு அந்­தத்­ தொகை­யும் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட்­டு­விட்­டது.

இரண்டு நாள்­க­ளில் ரூபா 40 மில்­லி­யனை செலவு செய்த இந்­தச் செயற்­பாடு வடக்கு ­மாகா­ணக் கல்வி வளர்ச்­சிக்கு எவ்­வாறு உத­வி­யது என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

கல்வி வளர்ச்சி குறித்து திற­னாய்வு அவ­சி­யம்

அத்­து­டன் மிகுதி ரூபா 40 மில்­லி­ய­னுக்கு ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் தேவை­யான­ தள­பா­டங்­கள் பெறப்­பட்­ட­தாக அமைச்சு செய­லா­ளர் கூறி­யுள்­ளார். அந்­தத் தள­பா­டங்­கள் பற்­றிய விவ­ரம் ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

இன்­றும்­கூட எமது பாட­சா­லை­க­ளில் சுகா­தா­ரத்­துக்­கும் ஊறு­வி­ளை­விக்­கக்­கூ­டிய கரும்­ப­ல­கை­யும் வெண்­கட்­டி­க­ளும் பாவிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில் நிதி ஆணைக்­கு­ழு­வால் வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­ய­னில் ரூபா 40 மில்­லி­யன் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட மிகுதி ரூபா 40 மில்­லி­ய­னுக்­குத் தகுந்த விளக்­கம் எமக்­குத் ­தரப்­ப­ட­வில்லை.

இந்த ரூபா 40 மில்­லி­ய­கும் 12 கல்வி வல­யங்­க­ளில் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட்­ட­தன் மூலம் வட­மா­கா­ணக் கல்வி வளர்ச்­சி­யில் ஏதா­வது மாற்­றம் ஏற்­பட்­டதா? என்ற விட­யம் திற­னாய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்­டி­யது ஒன்­றா­கும். இந்த நிதி ரூபா 80 மில்­லி­ய­னை­யும் உப­யோ­கித்து ஆசி­ரி­யர்­கள் அதி­பர்­க­ளின் செயற்­றி­றனை அதி­க­ரிக்­கும் கொள்கை ரீதி­யா­கத் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டி­ருக்க முடி­யும். அவ்­வா­றான திட்­டம் எது­வும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு அவர்­கள் கற்­பிக்­கும் பாடத்­தி­லுள்ள அறிவு அத­னைக் கற்­பிக்­கும் முறை பற்­றிய அறிவு என்­பன தொடர்ச்­சி­யாக வளர்ச்­சி­ய­டைய வேண்­டும் என்­ப­தில் இரண்­டா­வது கருத்­துக்கு இட­மில்லை. எனவே இந்த நிதி­யைக் கொண்டு ஆசி­ரி­யர்­க­ளுக்கு அவர்­கள் கற்­பிக்­கும் பாடத்­தி­லான அறிவு அத­னைப் போதிக்­கும் ஆற்­றல் என்­ப­வற்றை வளர்க்­கக் கூடிய பயிற்­சி­களை அந்­தத் ­துறை­யில் அறி­வும் அனு­ப­வ­மும் உடை­ய­வர்­கள் மூல­மாக வழங்கி கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்த இந்த நிதி­யைத் திட்­ட­மிட்­டுப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க முடி­யும்.

நிதி வீண் விர­யம் நடந்­தது உண்­மையே

வடக்கு ­மாகாண மாண­வர்­க­ளுக்கு ஒரு சிறந்த எதிர்­கா­லத்தை உரு­வாக்­கிக் கொடுக்­கக்­கூ­டிய ஒரே வள­மாக அமை­வது கல்­வியே ஆகும். வடக்கு மாகா­ணம் ஒரு காலத்­தில் கல்­வி­யில் மிக முன்­னே­றிய நிலை­யில் இருந்­தது. இந்­தக் கல்­வி­வ­ளம் போர்க்­கா­லத்­தில் தொடர்ச்­சி­யா­கச் சீர­ழிக்­கப்­பட்­டுப் பூச்­சி­யம் என்ற நிலைக்கு வந்­தது. ஆயி­னும் தற்­போது அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாணர்­கள் ஆகி­யோ­ரது அய­ராத உழைப்­பால் இந்த மாகா­ணத்­தில் கல்வி மீண்­டும் வளர்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­துள்­ளது.

இந்த நிலை­யில் 2015ஆம் ஆண்டு நிதி ஆணைக்­கு­ழு­வின் அறி­வு­றுத்­த­லால் வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­ய­னும் உரிய வகை­யில் தகுந்த கொள்கை அடிப்­ப­டை­யில் மாண­வர்­கள் பய­ன­டை­யக்­கூ­டிய வகை­யில் திட்­ட­மி­டப்­பட்டு ஆசி­ரி­யர்­க­ளி­ன­தும் அதி­பர்­க­ளி­ன­தும் தகு­தியை உயர்த்­து­வ­தற்­கு­ரிய மேற்­ப­டிப்­புக்­கள் பயிற்­சி­கள் போன்­ற­வற்­றி­லும் கற்­பிக்­கும் ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பின் அது மிக­வும் வர­வேற்­கத்­தக்­க­தாக அமைந்­தி­ருக்­கும்.

இதற்­குப் பதி­லாக இந்­தப் பணத்­தில் ரூபா 40 மில்­லி­யன் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட்­ட­தும் மிகுதி ரூபா 40 மில்­லி­யன் ஆசி­ரி­யர்­க­ளின் தள­பாட கொள்­வ­ன­வுக்­குப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக்­கூ­றப்­பட்­ட­மை­யும் மிக­வும் கவ­லைக்­கு­ரிய வகை­யில் இந்­தப் பணம் வீண் விர­ணம் செய்­யப்­பட்­டதை நிரூ­பிக்­கின்­றது.
கணக்­காய்வு அவ­சி­யம்

எனவே வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­ச­ருக்கு எதி­ரான இந்­தக் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என்ற முடி­வுக்கு இந்த விசா­ர­ர­ணைக்­குழு வரு­கின்­றது. மேலும் இந்­தத் தொகை ­ரூபா 80 மில்­லி­ய­னும் எவ்­வாறு செலவு செய்­யப்­பட்­டது என்­பது குறித்து முழு­மை­யான கணக்­காய்வு செய்­யப்­பட்டு தவறு இழைத்­த­தா­கக் காணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் இந்த விசா­ர­ணைக்­குழு பரிந்­து­ரைக்­கின்­றது.

வட­மா­கா­ணத்­தில் வாழும் மக்­க­ளுக்கு வழி­காட்­டும் பொறுப்பை தம் கரங்­க­ளில் ஏந்­தி­யுள்­ள­வர்­கள் கொள்­கை­கள் திட்­டங்­கள் என்­ப­வற்றை வகுக்­கும் வேளை­யில் இந்த மக்­கள் கடந்த காலங்­க­ளில் அனு­ப­வித்த துன்ப துய­ரங்­கள் கடந்து வந்த பாதை என்­ப­வற்றை ஒரு தட­வை­யா­வது திரும்­பிப்­பார்க்க வேண்­டும் என்றே இந்த விசா­ர­ணைக்­குழு கரு­து­கின்­றது.

ஆளு­ந­ரால் நடத்­தப்­பட்­ட­வைக்கு அமைச்­சர் பொறுப்­பா­ளி­யல்ல

3.8) மாகா­ணப்­ பாட­சா­லை­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் முன்­னாள் அரச தலை­வ­ரின் வரு­கைக்­காக ஆறு தேசி­யப் பாட­சா­லை­களை அலங்­க­ரிப்­ப­தற்கு பெருந்­ தொகைப் பணத்­தைச் செல­வ­ழித்­தமை.

மேற்டி குற்­றச்­சாட்டு தொடர்­பில் பதி­ல­ளித்த வட­மா­கா­ணக் கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத்­துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர், “தமது அமைச்­சின் செய­லா­ள­ருக்கு மாகாண ஆளு­நர் கூறியே இந்த விட­யம் நடை­பெற்­ற­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

இந்த விட­யம் தொடர்­பில் கொள்கை அடிப்­ப­டை­யி­லான முடிவு எது­வும் வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­ச­ரால் எடுக்­கப்­ப­டாத நிலை­யில் மாகாண ஆளு­ந­ரால் கைய­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்­தும் செய­லா­ளர் ஆளு­ந­ரின் கோரிக்­கைப் ­படி செயற்­பட்­ட­மைக்கு அமைச்­சர் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை என இந்த விசா­ர­ணைக் ­குழு கரு­து­கின்­றது.

3.9) கிளி­நொச்சி வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ளர் முரு­க­வே­ளின் சேவைக் ­காலம் முடி­வுற உள்ள நிலை­யில் வேறு பொருத்­த­மான பணிப்­பா­ளர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை இது­வரை எடுக்­கா­மல் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் அவ­ரது சேவை­யைத் தொட­ரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றமை.

வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் நிய­ம­னத்­தில் அமைச்­சர்
தலை­யி­டு­வது தவறு

இந்­தக் குற்­றச்­சாட்டு குறித்து சாட்­சி­ய­ம­ளித்த கல்வி அமைச்­சர், “வல­யக் ­கல்­விப்­ பணிப்­பா­ளர் பத­விக்கு விண்­ணப்­பம் கோரு­வ­தில்லை என்­றும் சேவை மூப்பு அடிப்­ப­டை­யில் நிய­ம­னம் செய்­வது என்­றும் தற்­போது தென்­ம­ராட்சி கல்­விப்­ பணிப்­பா­ளரை பதிற்­க­ட­மைக்கு நிய­மித்­துள்­ளோம் என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தார். இது தவ­றன நிலைப்­பா­டா­கும்.

இந்த ­நிய­ம­னங்­க­ளில் தலை­யிட அமைச்­ச­ருக்கு எந்­த­வித அதி­கா­ர­மும் கிடை­யாது. அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் மாகாண ஆளு­ந­ருக்கே இந்த அதி­கா­ரம் உண்டு. அவர் யாருக்கு அந்த அதி­கா­ரத்தை கைய­ளித்­துள்­ளாரோ அவரே அர­சி­யல் தலை­யீடு எது­வும் இன்றி அந்­தக் கட­மை­யைச் செய்ய வேண்­டும்.

எனவே அமைச்­சின் செய­லா­ளர் அல்­லது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்­குழு இவர்­க­ளில் யாருக்கு இந்த அதி­கா­ரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளதோ அவர்­கள் இந்த நிய­ம­னத்­தைப் பொறுப்­பேற்று அர­சி­யல் தலை­யீடு எது­வு­மின்றி தகுதி உடை­ய­வரை இந்­தப் பத­விக்கு உடன் நிய­மிக்க வேண்­டும் என­வும் வட­மா­காண கல்வி அமைச்­சர் இந்த நிய­ம­ன­மத்­தில் தலை­யி­டக்­கூ­டாது என­வும் இந்த விசா­ர­ணைக்­குழு பணிக்­கின்­றது. மேலும் இந்­தக் குற்­றச்­சாட்­டா­னது எதிர்­கா­லத்­தில் நிக­ழ­வி­ருக்­கும் ஒரு­வி­ட­யம் தொடர்­பா­ன­தா­கை­யால் இந்­தக் குற்­றச்­சாட்டை விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கின்­றது.

அமைச்­சர் ஐங்­க­ர­நே­ச­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள்

4.1) வவு­னியா மாவட்­டத்­தில் மூங்­கில், மல்­லிகை வளர்ப்­புத் திட்­டங்­கள், எள்ளு விநி­யோ­கித்து சுய­தொ­ழிலை முன்­னெ­டுக்க வைக்­கும் திட்­டம் ஆகி­ய­வற்றை கையூட்­டுப் பெறும் நோக்­கத்­துக்­காக நிரா­க­ரித்­தமை.

இலங்­கை­யில் நடை­மு­றை­யி­லுள்ள சட்­டங்க ளின் படி ஓர் விவ­சாயி தனது காணி­யில் வேறு சட்­டங்­க­ளால் தடை செய்­யப்­பட்ட பயிர்­க­ளைத் தவிர, தான் விரும்­பிய பயிரை பயி­ரி­டும் உரிமை உண்டு. ஆனால் நீர்ப்­பா­ச­னச் சட்­டத்­தின் படி அர­சால், மாகாண சபை­யால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரும் நீர்ப்­பா­சன நீர்த் தேக்­கங்­க­ளி­லி­ருந்து குறிப்­பிட்ட பயி­ருக்கு நீர் பெற வேண்­டு­மெ­னின், குறிப்­பிட்ட தகுதி வாய்ந்த அரச, மாகாண உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­ட­மி­ருந்து அனு­ம­தி­யைப் பெற வேண்­டு­மென்ற கட்­டுப்­பாடு உள்­ளது.

வடக்கு மாகாண சபை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் தரைக்­கீழ் தரை­மேல் உள்ள நீரை உப­யோ­கித்­தல், பயிர்ச்­செய்­கைக்கு பாவித்­தல் என்­பதை கட்­டுப்­ப­டுத்­தும், ஒழங்­கு­ப­டுத்­தும் நிய­திச் சட்­டங்­கள் எது­வும் நிறை­வேற்­றப்­பட்­டுள் ளதா­கத் தெரி­ய­வில்லை.

எனவே விவ­சாயி ஒரு­வர் தனது சட்­ட­பூர்வ உரித்­து­டைய காணி­யில் மழை நீரையோ, நிலத்­தடி நீரையோ, உப­யோ­கித்து தனது வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­காக, உண­வுக்­கா­கவோ, வர்த்­தக தேவைக்­காக எந்­த­வித பயிர்­க­ளையோ மரப் பயிர்­க­ளையோ பயி­ரி­டும் உரிமை அவர்­க­ளுக்கு உண்டு என்று விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது.

மேற்­படி கரு­து­கோ­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­படி குற்­றச்­சாட்­டில் விட­யங்­களை தொடர்­பாக விசா­ர­ணை­யின் போது முன்­வைக்­க­பட்ட விட­யங்­க­ளை­யும் அவற்­றுக்­குத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளது விளக்க சாட்­சி­யங்­க­ளை­யும் இறு­தி­யில் அமைச்­ச­ரால் விசா­ர­ணைக்­கு­ழு­ வுக்கு அறிக்­கப்­பட்ட விளக்­கங்­க­ ளும் மேற்­படி குற்­றச் சாட்­டு­கள் விசா­ர­ணை­ யின் பொழுது சந்­தே­கத்­துக்கு அப்­பாற்­பட்ட முறை­யில் எண்­பிக்­கப்­பட்­டுள்­ள­னவா? என ஆராய்­வோம்.

முத­லீட்­டா­ளரை சந்­திக்க அழைத்­தமை அமைச்­சர் மீது
சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது

வவு­னியா நெடுங்­கேணி பிரதேச செய­லர் பிரி­வில் இந்­திய முத­லீட்­டா­ளர் ஒரு­வ­ரா­கிய ராம் என்­ப­வர் மூங்‌கில் செய்­கை­யில் விவ­சா­யி­ களை ஊக்­கு­விக்­கும் திட்­டம் ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­மொ­ழிவு ஒன்றை முன்­வைத்து நெடுங்­கே­ணிப் பிர­தேச செய­லர் தலை­மை­யில் கூட்­டம் ஒன்­றைக் கூட்டி திட்­டத்­தின் நன்மை தீமை­களை எடுத்­து­ரைத்தார்.

இது வெளி­நாட்டு முத­லீடு என்ற கார­ணத்­தால் மாகாண முத­மைச்­ச­ரின் அனு­ம­திக்கு விண்­ணப்­பித்து முத­ல­மைச்­ச­ரால் அந்த விண்­ணப்­பம் மாகாண விவ­சாய அமைச்­ச­ருக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் மாகாண விவ­சாய அமைச்­சர் அந்­தத் திட்­டத்தை அனு­ம­திக்க மறுத்­து­விட்­டார். முத­லீட்­டா­ளர் மாகாண ஆளு­ந­ரி­டம் அனு­ம­தி­யைப் பெற்று திட்­டத்தை அந்­தப் பிர­தே­சத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

மாகாண விவ­சாய அமைச்­சர் மூங்­கில் வளர்ப்­புத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை மறுத்­த­தோடு, குறிப்­பிட்ட முத­லீட்­டா­ ளரை வேண்­டிய ஆவ­ணங்­க­ளு­டன் வந்து தன்னை சந்­திக்­கும்­படி கேட்­டுள்­ளார். தன்னை வந்து சந்­திக்­கும்­படி கோரி­யமை மாகாண விவ­சாய, கம­நல சேவை கால்­நடை அபி­வி­ருத்தி, நீர் வழங்­கல், உணவு வழங்‌கல் விநி­யோ­கித்­தல், சுற்­றா­டல் மற்­றும் கூட்­டு­றவு அமைச்­ச­ரின் நடத்தை மீது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விட­யம் தொடர்­பாக விசா­ர­ணைக்­குழு முன் விளக்­க­ம­ளித்த அமைச்­சர், “மூங்­கிலை எரித்து மின்­சா­ரம் பெறும், அதா­வது அனல் மின் நிலை­யம் அமைப்­பதை சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் என்ற ரீதி­யில் தான் அனு­ம­திக்க முடி­யா­தென்­றும் அவ்­வா­றெ­னில் காற்­றாலை மின்­சா­ரம் பெற மாகாண சபை­யு­டன் ஒப்­பந்­தம் செய்­தது போல ஒரு தொகைப் பணத்தை வரு­டாந்­தம் CSRஇற்கு வழங்க வேண்­டும்” என­வும் குறிப்­பிட்­டார். இது அவ­ரது கருத்­தில் உள்ள இரட்­டைத்­தன்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

இந்த விட­யத்­தில் விவ­சாய, கம­ந­ல­சேவை கால்­நடை அபி­வி­ருத்தி நீர் வழங்­கல், உணவு வழங்­கல் விநி­யோ­கித்­தல், சுற்­றா­டல் மற்­றும் கூட்­டு­றவு அமைச்­சர் மாகாண சபைி­யல் சுற்­றுச் சூழல் அமைச்­சர் என்ற சட்­ட­பூர்­வ­மற்ற நிலைப்­பாட்டை வைத்­துக்­கொண்டு இந்த விட­யங்­க­ளில் தலை­யி­டு­வ­தை­யும் விசா­ர­ணைக் குழு கவ­னத்­தில் எடுத்­துள்­ளது.

(நாளை தொடரும்)

http://uthayandaily.com/story/5932.html

Link to comment
Share on other sites

போரால் சின்னாபின்னமான முல்லையில் மக்களைக் கவரும் தேவை ஏன் ஏற்பட்டது?

 
 
போரால் சின்னாபின்னமான முல்லையில் மக்களைக் கவரும் தேவை ஏன் ஏற்பட்டது?
 

சுற்­றுச் சூழல் என்­பது அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் கொழும்பு அர­சும், மாகாண சபை­க­ளுக்­கும் இடை­யே­யான ஒரு­மைப்­பாடு (concurrence) விட­யம். அந்­தச் செயற்­பாட்­டின் ஒரு பகு­தியை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கும் புரிந்து­ணர்வு ஒப்­பந்­தம் அல்­லது அமைச்­ச­ர­வைத் தீர்­மா­னம் ஒன்றோ நிறை­வேற்­றப்­பட­ வில்லை.

அத்­து­டன், இந்த விட­யம் மாகாண ஆளு­கைக்­குள் வர வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யில் வடக்கு மாகாண சபை நிய­திச் சட்­டம் ஒன்றை இது­வரை இயற்றி அனு­மதி பெறப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை. எனவே இந்த நிலை­யில் விவசாய அமைச்­சர் தான் சுற்­றுச் சூழல் அமைச்­ச­ராக வடக்கு மாகா­ணத்­தில் செயற்­பட்டு வரு­கிறார் எனத் தெரி­விப்­ப­தை­யும் இவ் விசா­ர­ணைக் குழு சட்­ட­பூர்­வ­மற்­ற­தென்று கரு­து­கின்­றது. இந்த நிலை­யில் மூங்­கில் நடு­கைத் திட்­டத்தை நிரா­க­ரித்­தமை

சட்­ட­பூர்­வ­மற்­ற­தெ­ன­வும் முத­லீட்­டா­ள­ரைத் தன்னை வந்து சந்­திக்­கும்­படி கேட்­டுக் கொண்­டதை அவர் நடத்தை மீது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­த­வ­தாகவும் விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது.

தனி­யார் காணி­யில் எந்­தப் பயி­ரை­யும் செய்­வ­தற்கு வடக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரின் அல்­லது விவ­சா­யத் திணைக்­க­ளத்­தில் அனு­மதி அல்­லது ஆலோ­சனை பெற வேண்­டிய தேவை இல்லை என்ற அமைச்­ச­ரின் இறுதி விளக்­கம் மேற்­படி சந்­தே­கத்தை மேலும் உறு­திப்­ப­டுத்­து­கின்­றது.

முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போட  அமைச்­ச­ரால் முடி­யாது

மல்­லி­கைச் செய்­கையை ஊக்­கு­விக்­கும் நோக்­கில் முத­லீட்­டா­ளர் விவ­சாய அமைச்­சரை அணு­கிய பொழுது சரி­யான நடை­மு­றை­யின்­படி தன்னை அணு­காத கார­ணத்­தால் அதனை அங்­கீ­க­ரிக்­க­வில்லை என்று அமைச்­சர் கூறு­கின்­றார். அத்­து­டன், ஆரம்ப விழா­வுக்­குத் தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட போதும் அமைச்­சர் தான் அந்த நிகழ்­வுக்கு செல்­ல­வில்லை எனத் தெரி­வித்­துள்­ளார். இந்­தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வடக்கு மாகாண சபை­யின் அனு­மதி பெற வேண்­டிய தேவை இல்­லாத பொழு­தும் அமைச்­சர் அனு­ம­திக்­காத கார­ணத்­தால் முத­லீட்­டா­ளர் வடக்கு மாகாண ஆளு­ந­ரின் அனு­ம­தி­யைப் பெற்று தி்ட்டத்தை ஆரம்­பித்­துள்­ளார்.

அனு­மதி பெறத் தேவை­யற்ற விட­யங்க­ளுக்­கெல் ­லாம் அனு­மதி பெறவேண்­டு­மென்று வலி­யு­றுத்­து­வ­தும் தங்­க­ளது அமைச்சு, திணைக்­க­ளங்­கள் தொடர்­பான எல்லா விட­யங்­க­ளும் விவ­சாய அமைச்­ச­ருக்கு தெரிய வேண்­டு­மென திணைக்­கள மாவட்ட உத­விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்­த­ர­விட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்த நினைப்­ப­தும் முத­லீட்­டா­ளர் களை­யும் விவ­சாய ஆர்­வ­லர்­க­ளை­யும் விவ­ சா­யத் துறை­யில் முத­லீடு செய்­வ­தற்கு, போரி­னால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளது வாழ்­வா­தா­ரத்தை உயர்த்த முனை­ப­வர்­க­ளுக்கு ஒரு முட்­டுக்­கட்­டை­யாக உள்­ள­தெ­ன­வும் இது அமைச் ச­ரின் அதி­கார முறை­கேடு எனவும் இந்த விசா­ர­ணைக் குழு அபிப்­பி­ர­யா­யப்­ப­டு­கி­றது.

எள் விநி­யோ­கத் திட்­டம் வவு­னியா மாவட்­டத்­தின் அமெ­ரிக்க நிறு­வ­னம் ஒன்­றின் உத­வித் திட்­டத்­தின் கீழ் செயற்­ப­டு­வ­தற்கு பிர­தேச தெரிவு, பய­னா­ளி­கள் தெரிவு மற்­றும் அறு­வ­டைக்­குப் பின்­ன­ரான சந்­தைப்­ப­டுத்­தல் நடை­மு­றை­கள் பிர­தேச செய­லர், பிர­தேச விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர், மாவட்ட விவ­சா­யப் பணிப்­பா­ளர் ஆகி­யோ­ரு­டைய மேற்­பார்­வை­யில் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் விவ­சாய அமைச்­ச­ரின் ஒப்­பு­தலை பெற வேண்­டு­மெ­னத் தெரி­வித்த குற்­றச்­சாட்டை பிரதி விவ­சா­யப் பணிப்­பா­ளர் தனது சாட்­சி­யத்­தில் ஏற்­றுக் கொண்­ட­து­டன், மாவட்­டத்­தில் நடை­பெ­று­வதை தனது கவ­னத்­துக்கு கொண்டு வர­வேண்­டும் என்ற அமைச்­ச­ரின் பணிப்­ப­ரை­யின் அடிப்­ப­டை­யி­லேயே தனது ஆலோ­ச­னையை அவ்­வாறு தெரி­வித்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

அமைச்­ச­ரும் அதனை ஏற்­றுக் கொண்­ட­து­டன், எழுத்­தில் தந்­தால் அனு­ம­திக்­கி­றேன் என தனது வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­துள்­ளமை இந்­தக் குற்­றச்­சாட்­டில் சுமத்­தப்பட்­ட­தற் கான கார­ணத்தை விசா­ர­ணைக்­குழு தெளி­ வாக விளங்­கிக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

வீண் நிதி விரயம்

4.2) கண்­காட்­சி­கள், உழ­வர் விழா எனப் பல விழாக்­களை பெருந்­தொ­கைப் பணத்­தைச் செல­வ­ழித்து நடத்­தி­யதன் மூலம் மாகாண சபை­யின் பெரும் அள­வி­லான நிதியை வீண் விர­யம் செய்­தமை.

வடக்கு மாகா­ணம் கடந்த 30 வருட போரால் பாதிப்­ப­டைந்த மாகா­ணம். மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். விவ­சாய, கடற்­றொ­ழில் கட்­டு­மா­னங்­கள் அழி­வ­டைந்­துள்­ளன. போர் முடி­வுக்­குப் பின்­னர் மாகாண விவ­சாய அமைச்சு விவ­சா­யி­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக விவ­சாய கால்­ந­டைத் திணைக்­க­ளத்­தின் மூலம் வரு­டந் தோறும் சிறந்த விவ­சா­யி­கள், நவீன தேவைக்­கேற்ப தொழில்­நுட்­பத்தை பிர­யோ­கித்து விவ­சா­யம் செய்­வோர், வீட்­டுத் தோட்­டங்­கள், பாட­சாலை மட்­டத் தோட்­டங்­கள் என்பவற்றை ஊக்­கு­விப்­ப­தற்­காக போட்­டி­களை நடத்தி பரி­சு­களை வழங்கி கெள­ர­வித்து வந்­த­தாக வடக்கு மாகாண விவ­சா­யப் பணிப்­பா­ள­ரது சாட்­சி­யங்­க­ளி­லி­ருந்து வெளி­யா­கின்­றது.

இந்த நிகழ்ச்­சி­கள் மாவட்ட மட்­டத்­தில் ஆடம்­ப­ர­மின்றி நடை­பெற்று வந்­தன.ஆனால் 2016ஆம் ஆண்­டி­லி­ருந்து மாகாண ரீதி­யாக இந்த நிகழ்வு விவ­சாய அமைச்­சால் – அமைச்­ச­ரி­னால் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டுச் செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்­தில் விவ­சா­யத் திணைக்­க­ளத் தின் ஆலோ­ச­னைப்படியே இந்த விழா ஒழுங்கு செய்­யப்­பட்­ட­தென்ற அமைச்­ச­ரின் விளக்­கம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத­ தொன்­றா­கும். ஏனெ­ னில் குழு­வின் முன் சாட்­சி­ய­ம­ளித்த மாகாண விவ­சா­யப் பணிப்­பா­ளர் எல்­லாம் அமைச்­சி­னால்­தான் செய்­யப்­பட்­டன என்று தனது சாட்­சி ­யத்­தில் குறிப்­பி­டப் பட்­டுள்­ளதை இந்த விசா­ர­ணைக்­குழு கவ­னத்­தில் எடுத்­துள்­ளது.

இந்த விழா­வுக்கு தென் இந்­தி­யத் திரைப்­ப­டக் கவி­ஞர் வைர­முத்­துவை அழைக்­கும் எண் ணம் தனக்­கி­ருக்­க­வில்லை என­வும் இது தனது திணைக்­கள கட்­ட­ளை­க­ளில் இல்லை என­வும் இதனை ஒழுங்­க­மைத்­தது அமைச்­சு­தான் என­வும் மாகாண விவ­சா­யப் பணிப்­பா­ளர் தனது சாட்­சி­யத்­தில் மேலும் குறிப்­பிட்­டார்.

மக்­க­ளைக் கவ­ரு­வ­தற்­காக வைர­முத்து அழைக்­கப்­பட்­டார் என­வும் அவ­ருக்­கான செலவு ரூபா 28,000 மாத்­தி­ரமே என­வும் மாகாண விவ­சாய அமைச்­சர் தனது விளக்­கத்­தில் தெரி­வித்­தி­ருப்­பதைக் கவ­னத்­திற்கொள்­ள­ வேண்­டி­யுள்­ளது. இறு­திப் போரில் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்ட முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் இந்­தக் களி­யாட்­டம் மக்­க­ளைக் கவ­ரும் தேவை ஏன் ஏற்­பட்­டது? என்ற கேள்­விக்­கு அமைச்­ச­ரது விளக்­கம் ஏற்­றுக்­கொள்­ளக் கூடி­ய­தாக இல்லை.

அமைச்­ச­ருக்கு பெருமை சேர்க்­கவா வைர­முத்து
வர­வ­ழைக்­கப்­பட்­டார்?

எவ்­வா­றெ­னி­னும் இந்த விழா­வுக்­குச் செலவு செய்­யப்­பட்ட மொத்த நிதி­யான ரூபா 2.5 மில்­லி­ய­னில் ரூபா 1.9 மில்­லி­யன் விவ­சாயி ­களுக்­கான பரி­சிற்­கா­க­வும் கேட­யங்­க­ளுக்­கா­க­வும் செலவு செய்­யப்­பட்­டன என்று அமைச்­ச­ரின் செய­லா­ள­ரது சாட்­சி­யை­யும் அவ­ரி­னால் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணத்­தை­யும் விசா­ர­ணைக்­குழு ஏற்­றுக் கொள்­கின்­றது.

எவ்­வா­றெ­னி­னும், பல வரு­டங்­க­ளாக விவ­சா­யத் திணைக்­க­ளத்­தால் மாவட்ட ரீதி­யில் சாதா­ரண நிகழ்ச்­சி­யாக நடை­பெற்ற விவ­சா­யி­க­ளின் கௌர­விப்பு நிகழ்வை பிர­மாண்­ட­மான நிகழ்ச்­சி­யாக மாற்றி மக்­களை வசீ­க­ரிக்­கக் கூடிய தென்­னிந்­தி­யக் கலை­ஞ­ரை­யும் அழைத்து விவ­சாய அமைச்­சர் தலைமை தாங்கி இந்த நிகழ்வு அமைச்­ச­ரது பெரு­மையை வெளிக்­கொண்டு வரு­வ­தற்கு ஒழுங்கு செய்­யப்­பட்ட விழாவா? அல்­லது விவ­சா­யி­களை கௌர­விப்­ப­தற்கு ஒழுங்கு செய்­யப்­பட்ட விழாவா? என்ற சந்­தே­கம் முறைப்­பாட்டா­ளருக்கு ஏற்­பட்­டி­ருப்­பது தவிர்க்க முடி­யாத­ தொன்­றா­கும்.

எவ்­வா­றெ­னி­னும் இந்த நிகழ்­வுக்­குச் செலவு செய்­யப்­பட்ட பணத்­தில் 76% பரி­சுக்­காக செல­வி­டப்­பட்­டமை முழு­நி­தி­யும் வீண் விர­யம் செய்­யப்­பட்­டுள்­ள­தென்ற குற்­றச்­சாட்டை இந்த விசா­ர­ணைக் குழு முன் எண்­பிப்­ப­தற்கு முறைப்­பாட்­டா­ளர்­கள் தவ­றி­விட்­ட­னர். எனி­னும், தேர்­தல் கால வாக்­குத் திரட்­டல், மக்­க­ளைக் கவ­ரு­தல், தன்­னைப் பிர­பல்யப்­ப­டுத்­து­தல் போன்ற மன­வி­யல்­பான எண்­ணங்­க­ளைக் குறைத்து விவ­சாய அமைச்­சர் விவ­சாயி­களின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளில் அக்­கறை காட்ட வேண்­டும் என்று இந்­தக் குழு விதந்து ­ரைக்­கி­றது.

4.3) மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­ன­தும், மாகாண சபை ஆலோ­ச­னைக் குழுக்­க­ளின­ தும் ஆலோ­ச­னை­க­ளைப் பெறா­மல் திட்­டங்­களை முன்­னெ­டுத்­தமை.

விவ­சாய அமைச்­ச­ருக்கு எதி­ராக மேற்­ப­டி குற்­றச்­சாட்டை எண்­பிப்­ப­தற்கு ஆவ­ணச் சான்­று­களோ அல்­லது முறை­யான வாய்­மொ­ழிச் சான்­று­களோ விசா­ர­ணைக் குழு­வி­டம் வழக்­குத் தொடு­ந­ரால் முன்­வைக்­கப்­பட­ வில்லை என்­ப­து­டன் இவை மாகாண சபை பேரவை (Councill) தொடர்­பான விட­ய­மாக இருப்­ப­த­னால் இந்­தக் குற்­றச்­சாட்டை விசா­ரணை செய்­வது இந்­தக் கு­ழு­வின் அதி­கார வரம்­புக்கு உட்­பட்­டதா? என்­ப­தில் முழுத் திருப்­திப்­பாடு காண­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆகை­யால் இந்­தக் குற்­றச்­சாட்டி­ லிருந்து விவ­சாய அமைச்­சரை விடு­விக்க விசா­ர­ணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.

பண மோச­டிக் குற்­றச்­சாட்டு விசா­ர­ணை

4.4) Beta Power (Pvt)Ltd.&Joule Power (Pvt)Ltd. நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து 2015 ஆம் ஆண்டு முதல் வரு­டம் ஒன்­றுக்கு ரூபா 20 மில்­லி­யன் வீதம் 2016 வரை பெறப்­பட்ட ரூபா 40 மில்­லி­யன் பணத்தை மோசடி செய்­தல்.

Beta Power (Pvt)Ltd.&Joule Power (Pvt)Ltd. நிறு­வ­னங்­கள் தனி­யார் நிறு­வ­னங்­க­ளா­கும். 16 காற்­றா­லை­கள் அரச காணி­க­ளில் அமைப்­ப­தற்கு, முறை­யான குத்­தகை அனு­ம­தி­யைப் பெறு­வ­தற்கு மாகாண முத­ல­மைச்ச­ரின் ஒரு­மைப்­பாட்டை (Concurence) பெறு­வ­தற்கு அந்த நிறு­வ­னத்­தி­னர் அவரை அணு­கி­யுள்­ள­னர். அந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் விவ­சாய அமைச்­ச­ரும் கலந்­து­கொண்டு, அவர்­க­ளோடு ஒரு புரிந்­து­ணர்வு உடன்­பாட்டை, மாகாண சபைச் செய­லா­ள­ரைக் கொண்டு கையொப்­ப­மி­டப் பண்­ணி­யுள்­ள­னர்.

முத­லா­வது உடன்­ப­டிக்கை 19.03.2014 இலும் திருத்­தப்­பட்ட புதிய உடன்­ப­டிக்கை பின்­னர் தலை­மைச் செய­லா­ள­ரு­டன் 07.11.2014 இலும் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதற்­கான பேச்­சில் Corporafive Social Responsibility நிதி மூலம் வரு­டம் தோறும் முதல் 10 வரு­டங்­க­ளுக்­கும் வரு­டாந்­தம் 20 மில்­லி­யன் ரூபா­வும், 10 வரு­டங்­க­ளுக்கு பின்­னர் வரு­டம் ஒன்­றுக்கு 23 மில்­லி­யன் ரூபாவும் வடக்கு மாகாண சபைக்­குப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக உப­யோ­கிக்­கப்­ப­டு­வ­தற்­கும், மாகாண விவ­சாய அமைச்­சுக்கு இந்த நிதியை வழங்­கு­வ­தற்­கும், உடன்­ப­டிக்­கை­யில் வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.

விவ­சாய அமைச்­சர் ஆரம்­பத்­தி­லி­ருந்தே இந்­தப் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட்டு வந்­த­மை­, விவ­சாய அமைச்­சுக்கு வாழ்­வா­தார உத­வி­யாக இந்த நிதியை வழங்க ஒப்­பந்தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டமை, பீட்டா மற்­றும் ஜுலி நிறு­வ­னத்­தால் செய்­யப்­பட்ட பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யி­லேயே என்­பது விசா­ர­ணை­ யின் பொழுது வெளிக்­கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதில் அமைச்­ச­ரின் நேர­டி­யான சட்­ட­பூர்­வ­மற்ற பங்­க­ளிப்பை எண்­பிப்­ப­தற்­கான சாட்­சி­கள் எத­னை­யும் விசா­ர­ணை­யின் பொழுது முன்­வைக்­கப்­பட­ வில்லை.

அத்­து­டன் 2015இல் பெறப்­பட்ட 20 மில்­லி­யன் ரூபா­வும், 2016 இல் வருட 10 மில்­லி­யன் ரூபா­வு­மாக 30 மில்­லி­யன் ரூபா செல­வில் விவ­சாய திணைக்­க­ளத்­தின் மூலம் 252 விவ­சா­யக் கிண­று­கள் யாழ். மாவட்­டத்­தி­லும் பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச செய­லர் பிரி­வி­லும் சீர­மைக்­கும் திட்­டம் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாகவும், இந்­தத் திட்­டத்தை விவ­சா­யத் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம், கமக்­கார அமைப்­பு­கள், பய­னா­ ளி­கள் ஒன்­றா­கச் செயற்­ப­டுத்­து­வ­தாக விசா ­ர­ணை­யின் பொழுது முன்­வைக்­கப்­பட் டன.

அமைச்­சுக் கொடுத்­தது வெறும் 60,000 ரூபா

ஆயி­னும் விசா­ர­ணைக்­குழு கோண்­டா­வில், இணு­வில், கைதடி ஆகிய பகு­தி­க­ளுக்­குச் சென்று இந்­தத் திட்­டத்­தின் கீழ் திருத்­தப்­பட்ட விவ­சா­யக் கிண­று­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளைச் சந்­தித்து நடத்­திய கள ஆய்­வின்­போது, குறித்த கிணற்று உரி­மை­யா­ளர் ஒவ்­வொ­ரு­வ­ரும் தமக்­குக் கிணற்றை திருத்­தி­யது தொடர்­பில் ரூபா ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரம் செலவு ஏற்­பட்­ட­தா­க­வும் 2016ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் ரூபா 60 ஆயி­ரம் வரை­யில் பண­மா­கத் தமது விவ­சா­யச் சம்­மே­ளத் தலை­வர் (அல்­லது செய­லா­ளர்) ஊடா­கச் செலுத்­தப்­பட்­டது என்­றும் மிகு­திப் பணம் செலுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் கூறி­யி­ருந்­த­ னர்.

எவ்­வ­ளவு நிதி கிடைக்­கு­மென விவ­சா­யி­க­ளுக்­குத் தெரி­யாது

கோண்­டா­வில் பகு­தி­யைச் சேர்ந்த ஒரு விவ­சாயி மட்­டும் தனக்கு ரூபா ஒரு இலட்­சத்து 17 ஆயி­ரம் செலுத்­தப்­பட்­ட­தா­கக் கூறி­யி­ருந்­தார். வேலை­க­ளைத் தாமே தமது பணத்­தில் செய்­த­தா­க­வும் எவ்­வ­ளவு தொகை தமது கிணற்­றுக்கு ஒதுக்­கப்­பட்­டது என்­பது தமக்­குத் தெரி­யாது என்­றும் கேள்வி கோரல் இன்­றியே இந்த வேலை செய்­யப்­பட்­ட­தா­க­வும் விவ­சா­யி­கள் கூறி­யி­ருந்­த­னர்.

ஒவ்­வொரு கிணற்­றுக்­கும் ரூபா 150,000 செலவு ஏற்­பட்­ட­தா­கக் கிணற்று உரி­மை­யா­ளர்­கள் கூறி­ய­போ­தும் அதற்­கான பற்­றுச்­சீட்­டு­கள் எது­வும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. செய்­யப்­பட்ட திருத்த வேலை­க­ளும் அத்­தொ­கைக்கு ஏற்­ற­தா­கத் தென்­ப­ட­வில்லை. மேலும் இப்­ப­ணம் விவ­சாய சங்­கங்­க­ளுக்­குக் காசோ­லை­யா­கக் கொடுக்­கப்­பட்டு அதன் தலை­வர் அல்­லது செய­லா­ளர் அதனை மாற்­றித் தமக்­குப் பண­மா­கத் தந்­த­னர் என எமக்­குக் கூறப்­பட்­டது.

கேள்வி கோர­லும் நடக்­க­வில்லை

வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சுச் செய­லா­ளர், விவ­சா­யக் கிண­று­கள் சீர­மைப்­புச் செய்­யப்­பட்ட விட­யத்­தில், விவ­சா­யத் திணைக் களத்­தால் உரிய நடை­முறை பின்­பற்­றப்­பட்ட ­தெனக் கூறிய வேளை­யி­லும் கள ஆய்­வின்­போது கேள்வி கோரல் இன்­றித் தமது பணத்­தில் தாமே இந்த வேலை­யைச் செய்­த­தா­க­வும் தமக்கு ஒதுக்­கப்­பட்ட பணம் எவ்வ­ ளவு என்­பது தமக்­குத் தெரி­யாது என்­றும் விவ சாயிகளால் கூறப்­பட்­டமை இங்கு ஒரு நிதி மோசடி தொடர்பில் பலத்த சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

கணக்­காய்வை நடத்தி தவ­றி­ழைத்­தோரை தண்­டிக்­க­வேண்­டும்

எனவே இவ்­வி­ட­யம் தொடர்­பில் ஒவ்­வொரு விவ­சா­யி­கள் சங்­கத்­துக்­கும் கொடுக்­கப்­பட்ட காசோ­லை­யின் தொகை எவ்­வ­ளவு? ஒவ்­வொரு விவ­சா­யி­கள் சங்­கத்­தா­லும் கிணற்று உரி­மை­யா­ளர்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட தொகை எவ்­வ­ளவு? என்­ப­தைத் திருத்­தப்­பட்ட 252 கிணற்று உரி­மை­யா­ளர்­க­ளை­யும் சம்­பந்­தப்­பட்ட விவ­சாய சங்­கத் தலை­வர்­க­ளை­யும் அமைச்சு உத்­தி­யோ­கத்­தர்­க­ளை­யும் அழைத்து விசா­ரித்து அறி­ய­வேண்­டிய தேவை எம்­மால் உண­ரப்­பட்ட போதி­லும் இதற்­கான கால அவ­கா­சம் போதா­மை­யால் அத­னைச் செய்ய இந்த விசா­ர­ணைக் கு­ழு­வால் முடி­ய­வில்லை.

இதன் கார­ண­மாக உண்­மை­நிலையை வெளிக் கொண்­டு­வர இந்த விட­யம் தொடர்­பில் உடன் ஒரு கணக்­காய்வு நடத்­தப்­ப­ட­வேண்­டும் என­வும் எவ­ரா­வது தவறு இழைத் திருப்­பது தெரி­ய­வ­ரின் அவர்­க­ளுக்­கெ­தி­ரா­கத் தகுந்த சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் முத­ல­மைச்ச­ருக்கு இந்த விசார­ணைக்­குழு பரிந்­து­ரைக்­கின்­றது.

நிதி மோடி குறித்து விவ­சாய  அமைச்­ச­ரி­டம் விசா­ரணை நடத்­த­வேண்­டும்

இந்­தப் பரிந்­து­ரைக்கு அமை­வாக அமைச்­ச­ரின் நிதி மோசடி குறித்து நேர­டிச் சாட்­சி­யம் இல்­லா­மை­யால் அமைச்­சரை இந்­தக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கின்­றோம்.

அதே நேரத்­தில் விவ­சா­யக் கிண­று­கள் திருத்­தப்­பட்­டமை தொடர்­பில் செய்­யப்­பட்ட செல­வு­கள் குறித்து மேல­திக முழு விசா­ரணை நடத்­து­மாறு முத­ல­மைச்­சரை விசா­ர­ணைக்­குழு கேட்­டுக்­கொள்­கின்­றது.

மேலும் மேற்­படி இரு நிறு­வ­னங்­க­ளி­டமி­ ருந்து வரு­டந்­தோ­றும் ரூபா 20 மில்­லி­யன் விவ­சாய அமைச்­சுக்­குப் பெறு­வ­தும் அதன் செல­வும் தற்­பொ­ழுது சட்­ட­ரீ­தி­யாக்­கப்­பட்­டுள்­ள­தா­யி­னும் ­2014 ஆம் ஆண்­டுக் கொடுப்­ப­ன­வில் இருந்து இந்த இரண்டு நிறு­ வ­னங்­க­ளி­ட­மி­ருந்து ரூபா 19.5 மில்­லி­யன் பெறு­ம­தி­யான 06 பவு­சர் வாக­னங்­க­ளைப் பெற்­ற­தும் அந்த வாக­னங்­க­ளுக்கு இயக்­கு­வ­தற்­கான நிதி, சாரதி உத­வி­யா­ளர் வேத­னத்தை நிர்­வாக ஒழுங்கு விதி­க­ளுக்கு முர­ணா­ன­தாக மாகாண நீர்ப் பாச­னத் திணைக்­கள நிதி­யைப் பயன்­ப­டுத்தி கொடுப்­ப­னவு செய்­வ­தும் அந்த வாக­னங்­க­ளைத் தொடர்ந்­தும் திரு­நெல்­வேலி விவ­சா­யப் பண்­ணை­யில் அமைச்சு சார்­பாக வைத்­தி­ருப்­ப­தும் மாகாண சபை நிதியை வீண்­வி­ர­யம் செய்­வ­தாக விசா­ர­ணைக்குழு அபிப்­பி­ரா­யப்­ப­டு­கி­றது. ஏனெ­னில் நீர் விநி­யோ­கம் கொழும்பு அர­சின் கீழ் செயற்­ப­டும் தேசிய நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்பு சபை­யினதாகும். அத்­தோடு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளு­மா­கும். அது அவ்­வாறே செயற்­பட்டு வரு­கி­றது.

நிதி வீண் விர­யம் செய்­யப்­பட்­டுள்­ளது

அது அவ்­வா­றி­ருக்க நீர் விநி­யோ­கம் என்ற அமைச்­சின் பெய­ரைத் தவிர நிதிக்­குழு வாலோ அல்­லது மாகாண சபை பாதீட்­டிலோ நீர் விநி­யோ­கத்­துக்கு எந்­த­வித நிதி ஒதுக்­க­மும் பெறாத விவ­சாய அமைச்­சர் 19.5 மில்­லி­யன் ரூபாவை வீண் விர­யம் செய்து 6 பவு­சர்­க­ளைக் கொள்­வ­னவு செய்­வித்து குறிப்­பிட்ட பணியை செயற்­ப­டுத்த அதி­கா­ரம் மற்­றும் நிதி, மனி­த­வ­ளம் அற்ற விவ­சாய அமைச்­சில் கடந்த 2 வரு­டங்­க­ளாக தாமே வைத்­தி­ருப்­பது எப்­படி வீண்­வி­ர­யம் அல்ல என்று தீர்­மா­னிக்க முடி­யும்? ஆகை­யால் இந்த பவு­சர் வாக­னங்­கள் உரிய தேவை­யான உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வேண்­டும் என விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது.

அதே நேரத்­தில் இந்­தப் பணத்தை அமைச்­சர் அவர்­கள் மோசடி செய்­தார் என்­பதை எண்­பிப்­ப­தற்­கான சாட்­சி­கள், சான்­றா­வ­ணங்­கள் விசா­ர­ணைக் குழு­வுக்கு முன்­வைக்­கப்­ப­டாத கார­ணத்­தால் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. எனவே இந்­தக் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து அமைச்­சரை விடு­விக்க விசா­ர­ணைக்­குழு தீர்­மா­னிக்­கின்­றது.

4.5) பாதீ­னிய ஒழிப்பு நட­வ­டிக்கை என்ற பெய­ரில் மாகாண நிதியை மோசடி செய்­தமை.

பாதீ­னி­யம் 1987ஆம் ஆண்டு இந்­திய அமை­திப் படை­யு­டன் வந்த மிரு­கங்­கள் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்ட செடி­யா­கும். இந்­திய அமை­திப்­படை இலங்­கை­யை­விட்­டுச் சென்ற பின்­னர் இச் செடி­யால் ஏற்­ப­டும் பாதிப்பு இனங்­கா­ணப்­பட்டு மக்­க­ளுக்கு விழிப்­பூட்­டலை ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு பல இடங்­க­ளில் அறி­வித்­தல் பல­கை­கள் போடப்­பட்டு இந்­தச் செடியை ஒழிப்­ப­தற்கு விவ­சாய திணைக்­க­ளத்­தால் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. உண்­மை­யில் பாதீ­னி­யத்­தின் தாக்­கம் விவ­சா­யி­கள் மட்­டத்­தில் முழு­மை­யாக உண­ரப்­ப­டா­மை­யால் அவர்­க­ளால் அந்­தச் செடி­களை அழிக்­கும் நட­ வடிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட­ வில்லை. ஆனால் இந்­தச் செடி­யின் பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்து வந்­தது. இந்த நிலை­யில் மாகாண விவ­சா­யத் திணைக்­க­ளம் கடந்த சில வரு­டங்­க­ளாக பாதீ­னிய ஒழிப்பு நட­வ­டிக்­கையை நடை­மு­றைப்படுத்­த­வில்லை.

பாதீ­னி­யம் ஒழிப்பு திட்­டத்­தி­லும் நிதி வீண் விர­யம்

2014ஆம் ஆண்டு பாதீ­னி­யம் ஒழிப்பு என்ற பெரிய அள­வி­லான திட்­டம், மாகாண விவ­சாய அமைச்­சி­னால் முன்னெடுக்­கப் பட்­டது. ரூபா 50 இலட்­ச­ம­ள­வில் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணைக் குழு­வின் முன்­னர் விளக்­க­ம­ளித்த விவ­சாய அமைச்­ச­ரது விளக்­கத்­தின்படி செல­வ­ழிக்­கப்­பட்ட பணம் மனி­த­வலு என்­பன நியாயபூர்­வ­மா­ன ­தாக இருக்­க­வில்லை என்­பது ஒப்­புக்­கொள்ளப் பட்டது.

இந்த நிலை­யில் சிறப்­பாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத, ஏற்­க­னவே விவ­சா­யத் திணைக்­க­ளத்­தால் கைவி­டப்­பட்ட திட்­டத்தை எவ்­வாறு நிறை­வேற்­ற­லாம் என விவ­சாய அமைச்­சர் தீர்­மா­னித்து முத­ல­மைச்­சர் தலை­மை­யில் பெரிய விழா­வாக ஆரம்­பித்து அதற்­காக ரூபா 5 மில்­லி­யன் அள­வில் செலவு செய்த இந்­தத் திட்­டத்தை இடை நடு­வில் கைவிட்­டது விவ­சாய அமைச்­சும், முத­ல­மைச்­ச­ரும், மாகாண சபை நிதியை செயல்­ப­டுத்த முடி­யாத திட்­டங்­க­ளுக்கு செலவு செய்து வீண் விர­யம் செய்­கி­றார்­கள் என்ற எண்­ணத்தை அல்­லது அபிப்­பி­ரா­யத்தை வடக்கு மாகாண மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­து­வது தவ­றென விசா­ர­ணைக் குழு கரு­த­வில்லை.

ஆனால் இந்­தப் பணம் மோசடி செய்­யப்­பட்­ட­தாக சாட்­சி­கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலை­யில் இச் செலவை ஓர் திட்­ட­மி­டப்­ப­டாத செலவு என­வும், ஆனால் பொது மக்­க­ளுக்கு நன்மை கிடைக்­காத கார­ணத்­தால் வீண் விர­யம் என­வும் விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது. அதற்கு விவ­சாய அமைச்­சரே முழுப் பொறுப்­பை­யும் ஏற்க வேண்­டும்.

4.6 அ). நொதேர்ன் பவர் (Northern Power) என்ற மின் உற்­பத்தி நிலை­யம் சுன்னா கத்­தில் தொழிற்­பட்ட வேளை­யில் அத­னது கழிவு எண்­ணெய் குடி­தண்­ணீ­ரில் கலந்த விட­யத்­துக்கு, ஆய்­வுக் குழு ஒன்றை நிய மித்து அந்­தக் குழு­வின் அறிக்கை மூலம் நிறு­வ­னத்­துக்­குச் சாதா­க­மாக அறிக்­கையை வெளிப்­ப­டுத்தி உண்மைகளை மறைத் தமை.

நொதேர்ன் பவர் என்ற நிறு­வ­னம் இலங்கை மின்­சார சபை­யோடு செய்­யப்­பட்ட உடன் படிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே சுன்னா கத்­தில் இயங்கி வந்­தது. இலங்கை மின்­சார சபை கொழும்பு அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்ள ஓர் நிறு­வ­ன­மா­கும். இந்த நிறுவ னத்­தின் செயற்­பாட்­டால் ஒயில் கசிவை ஏற்­ப­டுத்தி நிலத்­தடி நீரை மாசுபடுத்­தி­யுள்­ளது என்ற சந்­தே­கம் ஏற்­பட்­டுள்ளது. நிலத்­தடி நீர் நிர்­வா­கம் கொழும்பு அர­சின் கீழ் நிர்­வ­கிக்­கப்­ப­டும், தேசிய நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்பு மற்­றும் நீர் வளச் சபை­யின் நிர்­வா­கத்­துக்­குட்­பட்­டது.

எனவே நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­தி­ருந்­தால், இலங்கை மின்­சார சபை, தேசிய நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்பு சபை, இலங்கை நீர்­வ­ளச் சபை என்­பன நொதேர்ன் பவர் நிறு­வ­னத்­தோடு, அவர்­க­ளுக்கு இலங்கை மின்­சார சபை­யு­டன் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த எழுத்­தி­லான உடன்­ப­டிக்கை அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுத்து அந்­தப் பிரச்­சி­னையை மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டிய பொறுப்பு அந்த நிறு­வ­னங்­க­ளுக்­கும், அந்த நிறு­வ­னங்­களை நீர்­வ­கிக்­கும் கொழும்பு அர­சுக்­கும் இருந்­தது. அவர்­கள் அந்­தப் பொறுப்பை சரி­யான முறை­யில் செயற்ப­டுத்­தி­னர்.

அத்­தோடு மக்­கள் பாதிப்பை உணர்ந்து, கொழும்பு அமைச்­சர், அமைச்­ச­ர­வைக்கு பத்­தி­ர­மூ­லம், அர­சின் அ­னு­ம­தி­யைப் பெற்று அதற்­கான செயற்­பாட்­டுக் குழுவை அமைத்து பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­க­ளுக்கு குடி­தண்­ணீர் விநி­யோ­கிக்க உடன் நட­வ­டிக்­கை­யை­யும் நீண்ட கால நோக்­கில் இந்­தப் பாதிப்பை நீக்க நட­வ­டிக்கையும் எடுத்­துள்­ளார். ஏனெ­னில் அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு தேவை­யான மனி­த­வ­ளம், இயந்திர சாத­னங்­கள் மற்­றும் நிபு­ணத்­துவ அறிவு என்­பன அவர்­க­ளுக்கு இருந்­த­த­னால் இந்த இடர் அறி­விக்­கப்­பட்ட உட­னேயே இதற்­கான குழு­வொன்றை நிய­மித்து மேற்­படி நிறு­வ­னங்­க­ளின் உத­வி­யு­டன் உண்­மையை, பாதிப்பை கண்­ட­றி­யும் நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தன.

அதே நேரத்­தில் வடக்கு மாகாண சபை விவ­சாய அமைச்சு தமக்கு சட்டபூர்­வ­மாக அதி­கா­ர­ம­ளிக்­கப்­ப­டா­த­தும் , நிர்­வாக ரீதி­யாக தொடர்­பற்­ற­து­மான இந்த விட­யத்­தில் தலை­யிட்டு இதற்­கான நிபு­ணத்­து­வம், தொழில்­நுட்ப வளம், தேவை­யான உப­க­ர­ணங்­கள் இல்­லாத நிலை­யில் விவ­சாய அமைச்­சர் தன்­னிச்­சை­யா­கவே ஓர் குழுவை அமைத்­தார். பின்­னர் அதற்கு மாகாண சபை அனு­ம­தி­யைப் பெற்று கொழும்பு அர­சால் செய்­யப்­பட்ட ஆய்­வுத் தர­வு­களை மாத்­தி­ரம் கொண்டு அந்­தக் குழு பகுப்­பாய்வு செய்து நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலப்பு இல்லை என ஓர் அறிக்­கையை தயா­ரித்து சிறு வட்­டத்­துக்­குள் அதனை வெளி­யிட்­டது.
கழிவு ஒயில் விவ­கா­ரத்­தில் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட  சந்­தே­கம் நியா­ய­மா­னதே

இதன்­மூ­லம் நொதேர்ன் பவர் நிறு­வ­னம் அத­னைப் பாராட்­டும் அள­வுக்கு செயற்­பட்டு, நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலக்­கப்­பட்­டுள்­ளது என்ற அடிப்­ப­டை­யில் கொழும்பு அர­சால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யோடு முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யமை, விவ­சாய அமைச்­சால் நிய­மிக்­கப்­பட்ட நிபு­ணர் குழு­வின் தகு­தி­யி­லும், அவர்­க­ளது அறிக்­கை­யின் மீதும் அந்­தக் குழுவை நிய­மித்த விவ­சாய அமைச்­சர் மீதும் ஒட்டு மொத்­த­மாக வடக்கு மாகாண சபை மீதும், பொது­மக்­க­ளுக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யமை நியா­ய­பூர்­வ­மா­னது என இந்த விசா­ர­ணைக்­குழு கருத்­து­கின்­றது.

இதற்­காகச் செல­வி­டப்­பட்ட நிதி வீண் விர­யம் என விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது. இந்த நிபு­ணர் குழு­வின் அறிக்கை பொது­மக்­க­ளுக்கு வெளி­யி­டப்­ப­டாமை இந்­தச் சந்­தே­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

3.6. ஆ). நிலத்­தடி நீர் விட­யம் தொடர்­பில் எந்­த­வித அதி­கா­ர­மும் அற்ற நிலை­யில் நிலத்­தடி நீரில் எண்­ணெய் கசிவு தொடர்­பில் விசா­ர­ணைக்­காக நிபு­ணர் குழுவை நிய­மித்து மாகாண சபை­யின் நிதியை வீண்­வி­ர­யம் செய்­தமை.

மேற்­படி குற்­றச்­சாட்­டில் குறிப்­பி­டப்­பட்ட நிலத்­தடி நீர் தொடர்­பான நிர்­வா­கம் மாகாண சபைக்கு இலங்கை அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் பாரா­தீ­னப்­ப­டுத்­தப்­பட்ட விட­ய­மல்ல. அதனை அமைச்­சின் செய­லா­ளர், தனது சாட்­சி­யத்­தின் பொழுது ஏற்­றுக்­கொண்­டுள்­ளார். அவர்­தான் மாகாண நிதிக்­கான அமைச்­சின் கணக்கு உத்­தி­யோ­கத்­தர் ஆவார். அதே நேரத்­தில் விசா­ர­ணைக் குழு­வின் முன்­தோன்றி விளக்­க­ம­ளித்த அமைச்­ச­ரும் இந்த விட­யத்தை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

நிலத்­தடி நீரில் ஒயில் கலந்­தமை ஓர் சூழல் பிரச்­சினை என்­ற­தால் சுற்­றுச் சூழல் அமைச்­சர் என்ற அடிப்­ப­டை­யில் தான் தலை­யிட்டு, மாகாண சபை அனு­ம­தி­ய­ளித்த கார­ணத்­தால்­தான் அந்த விட­யத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் விசா­ர­ணைக் குழு­வுக்கு அமைச்­சர் விளக்­க­ம­ளித்­தார்.

http://uthayandaily.com/story/6221.html

Link to comment
Share on other sites

மர நடுகைத் திட்டத்தால் வருடாந்தம் சபை நிதி வீண் விரயம்!

 
மர நடுகைத் திட்டத்தால் வருடாந்தம் சபை நிதி வீண் விரயம்!
 

நிலத்­தடி நீர் பிரச்­சி­னை­யில் விவ­சாய அமைச்­சர்
தேவை­யற்ற தலை­யீடு

வடக்கு மாகா­ணத்­தில் கொழும்பு அர­சின் செயற்­பா­டு­கள் எந்­த­வி­தத் தடை­யு­மின்றி மாவட்­டச் செய­லா­ள­ரின் ஒருங்­கி­ணைப்­போ­டும், வழி­காட்­ட­லோ­டும் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அதே­நே­ரம் நிலத்­தடி நீருக்குப் பொறுப்­பான தேசிய நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை­யும், நீர் வளச் சபை­யும் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் சூழ் நிலை­யில் பொது­மக்­க­ளுக்­கான எந்த சூழல் பிரச்­சி­னை­யை­யும் எதிர்­நோக்­கக் கூடிய மாவட்ட இடர் முகா­மைத்­து­வப் பிரிவு இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில் கொழும்பு சுற்­றா­டல் அமைச்­சும், சுற்­றா­டல் அதி­கார சபை மூலம் தனது செயற்பாட்டை நடத்­திக் கொண்­டு­வ­ரும் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில், சுற்­றா­டல் அமைச்­சு­டனோ அல்­லது நீர் விநி­யோ­கத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சு­டனோ ஒரு புரிந்­து­ணர்வை (M.O.U) ஏற்­ப­டுத்­திக் கொள்­ளாது மாகாண விவ­சாய அமைச்­சர் இந்த விட­யத்­தில் தலை­யிட்டு, நிபு­ணர் குழுவை நிய­மித்­த­ மை­யும் அதற்­காக மாகாண நிதி 1.9 மில்­லி­யன் ரூபா செலவு செய்­த­மை­யும் நியா­ய­மான தொன்­றாக விசா­ர­ணைக் குழு கரு­த­வில்லை.

நிபு­ணர் குழுவை நிறு­வி­யமை நிதி வீண் விர­யச் செயற்­பாடே

அத்­தோடு அமைச்­சர் தனது விளக்­கத்­தில் இந்­தக் குழு ஓர் ஆய்­வை­யும் தாமா­கவே செய்­ய­வில்லை என­வும் கொழும்பு அரச நிர்­வாக அல­கு­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுத் தர­வு­களை வைத்­துக்­கொண்டே தனது இந்த நட­வ­டிக்கை செய்­யப்­பட்­டது என்ற விளக்­கம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத தொன்­றா­கும். ஏனெ­னில் மாகாண சபை­யின் அனு­ம­திக்கு விண்­ணப்­பித்­ததே விவ­சாய அமைச்­ச­ரே­யா­கும். அப்­பொ­ழுது தன­தும், மாகாண சபை­யி­ன­தும் அதி­கார எல்­லையை வரை­யறை செய்­யும் அறிவு அமைச்­ச­ருக்கோ அல்­லது அவ­ரது செய­லா­ள­ருக்கோ இருந்­தி­ருக்க வேண்­டும். எனவே இதற்­காக செல­வி­டப்­பட்ட செலவு அப்­பட்­ட­மாக ஓர் வீண் விர­யம் என விசா­ர­ணைக் குழு அபிப்பிரா­யப்­ப­டு­கின்­றது.

4.7) 2015ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் முன்­னெ­டுக்­கப்­பட்ட 5 லட்­சம் மர­ந­டு­கைத் திட்­டம் தொடர்­பில் பண­மோ­சடி செய்­தமை

மர­ந­டுகை என்­பது குறிப்­பாக விவ­சா­யத் திணைக்­க­ளத்­தால், பயன்­தரு மரங்­கள் நடும் திட்­டம். ஒவ்­வொரு வரு­ட­மும் இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்படுத்தப்ப­டு­கி­றது. பனை அபி­வி­ருத்­திச் சபை­யும் ஒவ்­வொரு வரு­ட­மும் பெரி­ய­ள­வில் பனை மீள் நடு­கைத் திட்­டத்தை செயற்ப­டுத்தி வரு­கின்­றது. அதற்கு மேலான அர­சும் தேசிய ரீதி­யான மரம் நடு­கைத் திட்­டத்தை செயற்­ப­டுத்தி வரு­கின்­றது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் கடந்த 30 வருட கால­மாக மர­ந­டு­கைத் திட்­டம் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­டன் அதில் கண்ட அனு­ப­வம் கார­ண­மாக மரம் நடு­தலை மரம் நட்டு பரா­ம­ரித்­தல் என்ற புதுத் தொனி­யு­டன் இந்­தத் திட்­டம் 1990ஆம் ஆண்­டி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அதன் பயனை மிரு­சு­வில் வரை­யி­லான ஏ9 வீதி­யோர மரங்­கள், வல்­லை­வெளி – யாழ்ப்­பா­ணம் – பருத்­தித்­துறை வீதி­யோர மரங்­கள், மானிப்­பாய் வீதி­யில் மருங்­கில் உள்ள மரங்­கள் என்­பன சான்­றா­கி­யுள்­ளன.

அதா­வது மரம் நடு­தல் மாத்­தி­ர­மல்ல அந்த மரங்­கள் தாமா­கவே வள­ரும் வரை அவற்றைப் பரா­ம­ரித்­தல் என்ற கொள்­கை­ய­டிப்­ப­டை­யி­லேயே இந்த மர­ந­டுகை உலர் வல­யத்­தில் பரி­மா­ணம் பெற்­றுள்­ளது. அதே­நே­ரம் போரின் பின்­னர் பல லட்­சக்­க­ணக்­கான தென்னை மற்­றும் பயன்­தரு மர­வ­கை­கள் குடும்­பங்­க­ளுக்கு வழங்கி அவர்­க­ளால் பரா­ம­ரிக்­கப்­பட்டு, பயன்­த­ரும் நிலை­யில் உள்­ளன.

இந்த வர­லாற்றைக் கொண்ட மர­ந­டுகை, மாகாண சபை உரு­வாக்­கப்­பட்ட பின்­னர் 2015 நவம்­பர் மாதத்­தில் 5 லட்­சம் மரங்­கள் நடு­வோம் என்ற குறிக்­கோ­ளு­டன் ஆரம்­பிக்­கப்­பட்ட திட்­டத்­தில் 14 ஆயி­ரத்து 193 மரக்­கன்­று­கள் மாத்­தி­ரம் விவ­சாய அமைச்­சால் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்கு ரூபா 2.5 மில்­லி­யன் செல­வி­டப்­பட்­டுள்­ளது.

இம்­ம­ரக்­கன்­று­கள் நடு­கைத் திட்­டம்

(அ) நேர­டி­யாக அமைச்­ச­ருக்­கூ­டா­கச் செய்­யப்­பட்­டது
(ஆ) சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளங்­க­ளூ­டா­கச் செய்­யப்­பட்­டது
(இ) பொது அமைப்­புக்­கள் மூலம் செய்­யப்­பட்­டது
என அமைச்­சின் செய­லா­ள­ரது சாட்­சி­யத்தை விசா­ர­ணைக்­குழு ஏற்­றுக் கொள்­கின்­றது. ஆனால் வவு­னியா சேம­மடு வீதி­யில் இள­ம­ரு­தங்­கு­ளம் கிரா­மத்­தில் முத­ல­மைச்­சர், விவ­சாய அமைச்­சர், அமைச்­சின் செய­லா­ளர் மற்­றும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் முன்­னி­லை­யில், பனை அபி­வி­ருத்தி கூட்­டு­ற­வுச் சங்­கத்­துக்கு உரித்­தான 15 ஏக்­கர் காணி­யில் பெரும் விழா­வாக நடப்­பட்­டது.

அதில் மரங்­க­ளுக்கு யார் உரி­மை­யா­ளர் என்­பதை அமைச்­சின் செய­லா­ளரோ அல்­லது அமைச்­சரோ விசா­ர­ணைக் குழு­வுக்கு விளக்­க­ம­ளிக்­கத் தவ­றி­விட்­ட­னர். அமைச்­ச­ரின் நேரடிப் பங்­கு­பற்­று­தல் இல்­லாது இந்­தத் திட்­டம் செயற்­ப­டு்த்­தப்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை. ஏனெ­னில் முத­ல­மைச்­ச­ரும் இந்த நிகழ்­வுக்கு சமு­க­ம­ளித்­தி­ருந்­த­தாக பொது­மக்­கள் குழு­வி­டம் நேர­டி­யா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

விசா­ர­ணைக் குழு அந்­தப் பிர­தே­சத்­துக்­குச் சென்று கள ஆய்வு செய்த போது, மரங்­கள் நட்­டதை நிரூ­பிக்­கும் குழி­க­ளும் ஓரிரு தேக்­கம் கன்­று­க­ளை­யும்­தான் அங்கு காணக் கூடி­ய­தா­க­ இருந்­த­து­டன் எல்லை வேலி­கள் பாழ­டைந்து எந்­த­வி­தப் பரா­ம­ரிப்­பு­மின்றி அந்­தக்­காணி இருந்­ததை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக இருந்­தது.

மாகாண சபை நிதி வீண் விர­யமா­கி­யது

எனவே குறிப்­பிட்ட இடத்­தில் மரம் நடு­கையை தூண்­டி­யது யார்? அதற்­கான செலவு எவ்­வ­ளவு? அது யாரு­டைய நிதி? முத­ல­மைச்­சர், விவ­சாய அமைச்­ச­ரால் பெரு விழா­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் மாகாண சபை­யின் திட்­ட­மெ­னவே அந்­தப் பகுதி மக்­கள் அபிப்­பி­ரா­யப்­ப­டு­வ­தோடு இவ்­வாறு பொது­மக்­கள் நிதியை திட்­ட­மி­டாது செலவு செய்து வீண்­வி­ர­ய­மாக்­கு­ வது வடக்கு மாகாண சபை என அவர்­கள் கொள்­ளும் அபிப்­பி­ரா­யத்தை விசா­ர­ணைக்­குழு புறந்­தள்ள முடி­யா­துள்­ளது.

அமைச்­சர்­க­ளின் செல்­வாக்கை முன்­னி­லைப்­ப­டுத்­தவே விழா

இது விட­ய­மாக அமைச்­சின் செய­லா­ளர் மரங்­களைப் பரா­ம­ரிக்­கும் பொறுப்பு தங்­க­ளு­டை­யது அல்ல என­வும் அதற்­கான பொறி­முறை தம்­மி­டம் இல்லை என­வும் அவ்­வாறு செய்­வ­தா­யின் பெரு­ம­ளவு நிதி தேவை என­வும் விசா­ர­ணை­யின் பொழுது தெரி­வித்த கருத்து ஏற்­றுக் கொள்ள முடி­யா­தது. அத்­து­டன், விழா எடுப்­ப­தும் அமைச்­சர்­க­ளின் செல்­வாக்கை முன்­னி­லைப்­ப­டுத்­து­ வ­தும்­தான் அமைச்­சர்­க­ள­தும் அமைச்­சின் செய­லா­ளர்­க­ள­தும் பணியே என விசா­ர­ணைக் குழு தனது ஆதங்­கத்தை தெரி­வித்­துக் கொள்­கி­றது.

விவ­சாய அமைச்­ச­ருக்கு எதி­ரான இந்­தக் குற்­றச்­சாட்டை எண்­பிப்­ப­தற்கு முழு­மை­யான ஆதா­ரங்­கள் விசா­ர­ணை­யின்­போது வெளிக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்­லை­யா­யி­னும் வழங்­கப்­பட்ட மரக்­கன்­று­களை பரா­ம­ரித்து பாது­காப்­ப­தற்­கான பொறி­முறை இல்­லாத இந்­தத் திட்­டம் வெற்­றி­ய­ளிக்­காத திட்­டம் என்­ப­து­டன் முழுமை பெறா­த­தும் வரு­டா­வ­ரு­டம் நிதி வீண் விர­யத்­துக்­கும் கொண்டு செல்­வ­தற்­கான கார­ண­மாக அமைந்­து­விட்­டது என விசா­ர­ணைக்­குழு அபிப்­பி­ரா­யப்­ப­டு­கி­றது.

இந்த விழா­வுக்­கான செலவு வீண்­வி­ர­யமே. இந்­தச் செலவை வவு­னியா மாவட்ட பனை, தென்னை அபி­வி­ருத்தி கூட்­டு­ற­வுச் சங்­கம் செய்­தி­ருப்­ப­தற்­கான நியா­ய­பூர்­மான கார­ணங்­கள் உள்­ளன. எனி­னும் இதற்­கான சாட்­சி­கள் விசா­ர­ணைக்­கு­ழு­வி­டம் முன்­வைக்கப்ப­டாத நிலை­யில் இந்­தச் செல­வு­க­ளுக்கு அமைச்­சரே பொறுப்பு எனச் சுட்­டிக்­காட்ட விசா­ர­ணைக் குழு­வுக்கு முடி­யா­ துள்­ளது.

4.8) ஏற்று நீர்ப்­பா­ச­னத் திட்­டம் இது­வ­ரை­யி்ல் நன்கு வெற்றி அளிக்­க­வில்லை எனத் தெரி­வித்­தி­ருந்­தும் தவ­றான செல்­வாக்­கைச் செலுத்தி நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தி­ட­ மி­ருந்து சாத்­தி­யக்­கூற்று அறிக்­கையைப் பெற்று புழு­தி­யாறு ஏற்று நீர்ப்­பா­ச­னத் திட்­டத்தை முன்­னெ­டுத்து 32 மில்­லி­யன் ரூபாவை வீண்­வி­ர­யம் செய்­தமை.

இந்­தக் குற்­றச்­சாட்டு தொடர்­பாக விசா­ர­ணைக் குழு, முறைப்­பாட்­டா­ளர், சம்­பந்­த­பட்ட திணைக்­க­ளப் பிர­தி­நி­தி­க­ளது சாட்­சி­யங்­க­ளைப் பதிவு செய்­த­தோடு விசா­ர­ணை­யின் போது முன்­வைக்­கப்­பட்ட ஆவ­ணச் சான்­று­க­ளை­யும் கவ­னத்­தில் எடுத்­துக் கொண்­டது. அதற்கு மேல­தி­க­மா­கக் களப் பரி­சோ­தனை செய்­த­து­டன் மாய­வ­னூர் கிராம மக்­க­ளான பய­னா­ளி­க­ளை­யும் சந்­தித்து அவர்­க­ளது கருத்­து­க­ளை­யும் விசா­ர­ணைக் குழு பதிவு செய்­துள்­ளது.

புழு­தி­யாறு நீர்ப்­பா­ச­னத் திட்­டம் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் வட்­டக்­கச்சி கிரா­மத்­தில் மாய­வ­னூர் என்­னும் கிரா­மத்­தில் மக­ர­நாட்­டி­லி­ருந்து குடி­யேறி தலா 1/2 ஏக்­கர் மேட்­டுக் காணி­க­ளைப் பெற்று குடி­யி­ருக்­கும் 100 குடும்­பங்­க­ளுக்கு அவர்­கள் தமது காணி­யில் மேட்டு நிலப் பயிர் செய்­கையை செய்து அவர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தை அதி­க­ரிக்­கும் நோக்­க­மாக புளிக்­கன் குளத்­தில் இருந்து நீர்­கால்­வாய் வெட்டி நீரை கொண்டு வந்து சுமார் 20 அடி உய­ரத்­தில் உள்ள மேட்டு நிலத்­துக்கு டீச­லி­னால் இயங்­கும் நீர்­பம்பி மூலம் நீரை மேலேற்றி நீரை விநி­யோ ­கிக்­கும் திட்­ட­மா­கும்.

இது­போன்ற ஏற்று நீர்ப்­பா­ச­னத் திட்­டங்­கள், குறிப்­பாக கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் கூட்டு விவ­சா­யி­கள் பங்­கு­பற்­றும் அடிப்­ப­டை­யில் கடந்த காலங்­க­ளில் (1980 –90ஆம் ஆண்­டு­க­ளில்) ஆரம்­பிக்­கப்­பட்டு பின்­னர் அரச உத­வி­யின்­மை­யா­லும் மேல­தி­கச் செல­வு­கள் கார­ண­மா­க­வும் விவ­சா­யி­க­ளால் கைவி­டப்­பட்ட திட்­ட­மா­கும்.

பின்­னர் முத்­தை­யன்­கட்டு திட்­டத்­தில் போரின் பின்­னர் பன்­னாட்­டுச் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் உத­வி­யு­டன் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­பி­னும் அந்­தத் திட்­டம் முழு­மை­யான வெற்­றி­ய­ளிக்­க­வில்­லை­யா­யினும், நீர் இறைப்பு இயந்­தி­ரங்­களை இயக்­கு­வ­தற்கு கூடிய செலவு கார­ண­மாக உச்ச பய­னைப் பெற முடி­ய­வில்லை.

விவ­சாய அமைச்­சின் செய­ல­ரின் சாட்­சி­யத்­தில் சந்­தே­கம் எழு­கி­றது

அதே­நே­ரத்­தில் விவ­சா­யத் திட்­ட­மொன்றை செயற்­ப­டுத்த திட்­ட­மி­டும் பொழுது நீர்ப்­பா­ச­ னம் தொடர்­பான சாத்­தி­யக்­கூற்று அறிக்­கையை மாத்­தி­ரம் நம்­பி­யி­ருக்­காது விவ­சாய சமூக பொரு­ளா­தார சாத்­தி­யக்­கூற்று அறிக்­கை­க­ளை­யும் பெற்றே திட்­டத்­தில் முத­லீடு செய்ய வேண்­டும் என்­பது யாவ­ரா­லும் ஏற்­றுக் கொள்­ளப்­ப­டும் நிய­தி­யா­கும்.

எல்லா செயற்­றிட்­டங்­க­ளை­யும் செயற்­ப­டுத்­து­வது அமைச்சு, கொள்­கைத் தீர்­மா­னம் எடுப்­ப­து­தான் அமைச்­சர் செய்­யும் பணி என அமைச்­சர் சார்­பாக விசா­ர­ணைக் குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த அமைச்­சின் செய­லா­ள­ருக்கு ஏன் மேற்­படி விட­யம் தெரி­ய­வில்லை என்­பது அவ­ரது சாட்­சி­யங்­க­ளின் உண்­மைத் தன்­மை­யில் விசா­ர­ணைக்­குழு தனது சந்­தே­கத்­தைத் தெரி­விக்­கின்­றது.

இந்­தத் திட்­டப் பய­னா­ளி­கள் அரை ஏக்­கர் மேட்­டுக் காணியை மாத்­தி­ரம் கொண்ட கூலித் தொழி­லா­ளர்­கள். ஓரிரு குடும்­பத்­த­ வர்­கள் தவிர, மற்­ற­வர்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் ஏழை­கள், சேமிப்பு அற்­ற­வர்­கள். அவர்­கள் டீசல் நீர் இறைக்­கும் இயந்­தி­ரத்தை இயக்க நிதி வச­தி­யற்­ற­வர்­கள். அவர்­க­ளால் இந்­தத் திட்­டத்தை இயக்க முடி­யாது என்­ப­து­டன் அவர்­களை ஒன்­றி­ணைக்­கும் ஓர் அமைப்­பே­னும் இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது தொடர்­பாக ஒழுங்­காக இயங்­கு­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

அத்­தோடு முக்­கி­ய­மான ஒரு விட­யம் விவ­சா­யத் திணைக்­க­ளம் இந்­தச் செயற்­றிட்­டத்­தில் இணைக்கப்ப­ட­வில்லை. இணைக்­கப்­பட்­டி­ருப்­பின் மக்­க­ளது அனு­ப­வத்­தின் படி­யும் மண் வளத்­தின் அடிப்­ப­டை­யில் கிடைக்­கக் கூடிய நீரை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒவ்­வோர் விவ­சா­யக் குடும்­பத்­துக்­கு­மான பயிர் செய்கை அட்­ட­வ­ணையைத் தயா­ரித்து இந்­தத் திட்­டத்தை சிறப்­பாக இயக்­கி­யி­ருக்க சந்­தர்ப்­பம் உண்டு.

பய­னா­ளி­க­ளின் கருத்­துப்­படி திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்ட பின்­னர் நீர் இறைக்­கும் இயந்­தி­ரம் இயக்­கப்­ப­ட­வில்­லை­யெ­ன­வும் தங்­க­ளோடு கலந்­து­ரை­யா­டப்­ப­டா­மல் செயற்­ப­டுத்­தப்­பட்ட திட்­ட­மெ­ன­வும் கருத்துத் தெரி­வித்­துள்­ள­தோடு, இந்­தத் திட்­டத்­துக்கு பதி­லாக சூரிய சக்­தி­யால் இயங்­கும் செலவு குறைந்த நீர் இறைக்­கும் இயந்­தி­ரத்தை பூட்­டி­யி­ருக்­க ­லாம் என­வும் ஒவ்­வொரு காணிக்­கும் ஒவ்­வொரு கிணறை தந்­தி­ருக்­க­லாம் என­வும் அபிப்பி­ரா­யம் தெரி­வித்­துள்­ள­னர்.

நீர்ப்­பாச்சு வாய்க்­கால்­கள் நல்ல முறை­யில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு இருப்­பி­னும், அவை பரா­ம­ரிக்­கப்­ப­டா­மை­யால் செடி­கள் வளர்ந்­தும் சேத­மா­கி­யும் இருப்­பது பய­னா­ளிக­ளதோ அல்­லது அந்­தத் திட்­டத்தை நிர்­மா­ணித்த திணைக்­க­ளத்­தி­னதோ அக்­க­றை­யின்­மை­யைக் காட்­டு­கின்­றது.

அமைச்­ச­ரின் விளக்­கத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது

விசா­ர­ணைக் குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த நீர்ப்­பா­சன பிரதி பணிப்­பா­ளர், விவ­சாய அமைச்­ச­ரின் கோரிக்­கை­யின்­ப­டியே இந்­தத் திட்­டத்தை செயற்­ப­டுத்­தி­ய­தா­க­வும் வாய்க்­கா­லில் நீர் இருப்­ப­தால் மறை­மு­க­மாக நிலத்­தடி நீர்ம்ட்­டம் உயர்ந்து, கிண­று­க­ளில் நீர்­மட்­டம் உயர்­வ­தற்­கான சாத்­தி­யம் உள்­ளது எனத் தெரி­வித்­துள்­ள­து­டன் டீசல் நீர் இறைப்பு இயந்தி­ரத்­தின் இயக்­கச் செலவு அதி­க­மாக இருக்­கும் என்­ப­தை­யும் ஏற்­றுக் கொண்­டுள்­ளார்.

அதே­நே­ரத்­தில், இந்­தத் திட்­டம் பய­ன­ளிக்­கக் காலம் எடுக்­கும், பின்­னர் சரி­யாக வரும் என்ற கருத்­துப்­பட விசா­ர­ணை­யின் பொழுது விவ­சாய அமைச்­சர் வழங்­கிய விளக்­கம், முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள முடி­யா­மல் உள்­ளது என விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது.

ஏற்று நீர்ப்பா­ச­னத் திட்­டம் நிதி வீண் விர­யச் செயற்­பாடே

நீண்­ட­கா­லம் போர் கார­ண­மாக, வடக்கு மாகா­ணத்­தின் முக்­கிய வாழ்­வா­தாரத் துறை­யா­கிய விவ­சா­யத்­துறை பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­து­டன் தேசிய தரத்­துக்கு இந்­தத் துறையை மேம்­ப­டுத்த பல வேலைத்­திட்­டங்­களை செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய இந்­தக் காலப்­ப­கு­தி­யில் ரூபா 32 மில்­லி­யன் செலவு செய்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது உள்ள இந்­தத் திட்­டத்­துக்கு செய்­யப்­பட்ட செலவு ஓர் வீண் விர­யம் என்ற நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர்­க­ளின் நெருக்­கு­தல் கார­ண­மாக மற்­றைய தொடர்­பு­டைய திணைக்­க­ளங் க­ளது உதவி பய­னா­ளி­க­ளது பொரு­ளா­தார நிலை என்­ப­வற்றை கருத்­தில் எடுக்­காது, நிர்­மா­ணிக்­கப்­பட்ட இத்­திட்­டம் எதிர்­பார்த்த இலக்கை அடை­ய­வில்லை. இதற்கு விவ­சாய நீர்ப்­பா­சன அமைச்­சரே பொறுப்­புக்­கூற வேண்­டும் என இக்­குழு அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்­றது.

4.9) யாழ்கோ பாற்­பண்ணை கூட்­டு­ற­வுச் சங்­கத்­துக்கு 2014ஆம் ஆண்டு மே மாதம் வரை தலை­வ­ராக இருந்த பெரி­ய­தம்பி இரா­ச­நா­ய­கம் இரஞ்­சன் என்­ப­வரை நியா­ய­மான கார­ணங்­க­ளின்றி கூட்­டு­றவு ஆணை­யா­ள­ருக்கு ஊடாக அதி­கார முறை­கேடு மூலம் பத­வி­நீக்­கம் செய்­தமை.

யாழ்கோ நிறு­வ­னம் கூட்­டு­ற­வுத் திணைக்­க­ளத்­தில் பதிவு செய்­யப்­பட்ட சங்­கங்­க­ளில் ஒன்­றா­கும். அதை சங்­கத்­தின் உப விதி­க­ளின்­படி, பணிப்­பா­ளர் சபைக்கு 9 அங்­கத்­த­வர்­களை நிய­மிக்­கும் அதி­கா­ரம் மாகாண கூட்­டு­றவு அபி­வி­ருத்தி ஆணை­யா­ள­ரி­டம் இருந்­தது.

ஆனால் கொழும்பு அர­சால் ஆரம்­பிக்­கப்­பட்ட மாவட்ட அபி­வி­ருத்­திக் கருத்­திட்­டத்­தால் உரு­வாக்­கப்­பட்டுப் பின்­னர் கூட்­டு­றவு சங்­கம் என்ற வலை­ய­மைப்­புக்­குள் அதன் நிர்­வா­கம் கொண்­டு­வ­ரப்­பட்ட போதும் கொழும்பு கால்­நடை அபி­வி­ருத்தி அமைச்­சா­லும் மாவட்­டச் செய­லா­ள­ரா­லும் இந்­தத் திட்­டத்­துக்கு பெரு­ம­ளவு நிதி வழங்­கப்­பட்ட கார­ணத்­தால் அதன் நிதியை பாது­காக்கும் நோக்­கில் பணிப்­பா­ளர் சபைக்­கான இரு அங்­கத்­த­வர்­களை மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­து­ரை­யில் நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்ற கடப்­பாடு கூட்­டு­ற­வுச் சங்க துணை விதி 35.1ன் கீழ் உள்­ளது.

அமைச்­ச­ரின் தலை­யீட்­டால்­தான் யாழ்­கோ­வுக்­குப் புதிய தலை­வர்

கூட்­டு­றவு உதவி ஆணை­யா­ளர் 2014ஆம் ஆண்டு மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­து­ரை­யைப் பெறாது 01.05.2014இலி­ருந்து இரத்­தி­ன­சிங்­கம் சர்­வேஸ்­வரா, கந்­தையா மகா­தே­வன் ஆகிய இரு­வ­ரை­யும் பணிப்­பா­ளர் சபைக்கு நிய­மித்­துள்­ளார். இந்த நிய­ம­னம் மூலம், மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­து­ரைப்­படி முன்­னர் பொதுச் சபைக்கு நிய­மிக்­கப்­பட்டு, பொதுச் சபை­யால் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டு 30.04.2014 வரை தலை­வ­ராக கட­மை­யாற்­றிய ரஞ்­ச­னது பதவி பறிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பத­விக்கு மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­துரை பெறப்­ப­டா­மல் இ.சர்­வேஸ்­வரா என்­ப­வர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்த நிய­ம­னத்­துக்­கான பரிந்­துரை, கூட்­டு­ற­வுத் திணைக்­க­ளம் விவ­சாய அமைச்­சுக்குக் கீழ் கொண்­டு­வ­ராத காலப்­ப­கு­தி­யான 2014.04.03ஆம் திகதி, விவ­சாய அமைச்­ச­ரி­னால் செய்­யப்­பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டை­யில் அமைச்­ச­ரின் ஆலோ­ச­னைப்­படி, இந்த நிய­ம­னம் செய்­யப்­பட்­ட­தாக முன்­னாள் கூட்­டு­றவு ஆணை­யா­ளரின் சாட்­சியை இங்கு ஏற்க வேண்­டி­யுள்­ளது.

கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரும் நிர்­வாக முறை­கேடு செய்­தார்

அதே­நே­ரத்­தில் மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­துரை பெறப்­ப­டாது ஒரு­வரை இயக்­கு­நர் சபைக்கு நிய­மித்து அவரை தலை­வ­ரா­கத் தெரிவு செய்­த­தில் உள்ள நிர்­வாக முறை­கேட்டைத் தவிர்ப்­ப­தற்­காக மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் பணிப்­பா­ளர் சபைக்கு இரு­வரை பரிந்­துரை செய்­யும்­படி கோரிக்கை விடு­வ­தைத் தவிர்த்து தம்­மால் முறை­கே­டாக நிய­மிக்­கப்­பட்ட இரத்­தி­ன­சிங்­கம் சர்­வேஸ்­வரா மற்­றும் கந்­தையா மகா­தே­வன் ஆகி­யோர்­க­ளது பெயர்­களை தமது கடி­தத்­தில் உள்­ள­டக்கி அது­வும் அந்த நிய­ம­னம் வழங்­கப்­பட்­ட­பின் ஏறக்­குறைய ஒரு­வ­ரு­டத்­தின் பின்­னரே அதா­வது 27.04. 2015 இல் கூட்­டு­றவு உதவி ஆணை­ யா­ள­ரால் மாவட்­டச் செய­லா­ள­ருக்கு விண்­ணப்­பம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அவ­ரி­டம் அனு­ம­தி­யும் பெறப்­பட்­டுள்­ளது. இது வடக்கு மாகாண கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரால் செய்­யப்­பட்ட நிர்­வாக முறை­கே­டா­கும். இம்­மு­றை­கேடு விவ­சாய அமைச்­ச­ரின் அழுத்­த­த்தால் ஏற்­பட்­ட­தா­கும்.

ஆனால் விவ­சாய அமைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யி­லேயே இ.சர்­வேஸ்­வ­ரா­வின் நிய­ம­னத்தை செய்­த­தாக முன்­னாள் கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரது சாட்­சி­யில் தெரி­வித்­துள்­ள­மையை விசா­ர­ணைக்­குழு தனது கவ­னத்­தில் எடுத்­துள்­ளது. ஆனால் அந்த நிய­ம­னக் காலத்­தில் கூட்­டு­றவு திணைக்­க­ளம், அமைச்­சர் ஐங்­க­ர­நே­ச­னது அமைச்­சு­டன் இணைக்­கப்­பட்டு இருக்­க­வில்லை என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதா­வது கூட்­டு­ற­வுத் துறை முத­ல­மைச்­ச­ரது அமைச்­சு­டன் இணைக்­கப்­பட்டு இருந்­துள்­ளது. இ.சர்­வேஸ்­வ­ரா­வின் நிய­ம­னத்­தால் ரஞ்­ச­னது நிய­ம­னம் தானா­கவே செய­லி­ழந்­துள்­ளது.

நிர்­வாக முறை­கேட்டை மூடி­ம­றைக்க முயற்சி

ரஞ்­சன் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தற்­கான கார­ணம் அவ­ருக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­ப­து­டன் 2014இல் நிர்­வா­கச் சீர்­கேடு என்ற அடிப்­ப­டை­யில் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­ட­தென முன்­னாள் கூட்­டு­றவு ஆணை­யா­ளர் விசா­ர­ண­யின்­போது தெரி­வித்­தி­ருந்­தா­லும் ரஞ்­சன் அவர்­க­ளுக்­கெ­தி­ரான குற்­றப்­பத்­தி­ரம் அவர் பதவி நீக்­கம் செய்­யப்­பட்டு இரண்டு வரு­டங்­க­ளுக்கு பின்­னரே அதா­வது 2016இல்­தான் அனுப்­பட்­டதை கவ­னத்­தில் கொள்­ளும்­பொ­ழுது கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரும் அமைச்­ச­ரும் விசா­ர­ணைக் குழு­வுக்கு முன்­னர் அளித்த சாட்­சி­யும் விளக்­க­மும் உண்­மைக்கு புறம்­பா­ன­தென்­ப­தை­யும் கூட்­டு­றவு ஆணை­யா­ளர், தனது அதி­கா­ரத்தை தானே அமைச்­ச­ருக்குக் கைய­ளித்­துள்ள நிர்­வாக முறை­கே­டும் அமைச்­ச­ரால் செய்­யப்­பட்ட அதி­கார முறை­கேட்­டை­யும் மூடி மறைப்­ப­தற்கு செய்­யப்­பட்ட செய­லாக கருத வேண்­டி­யுள்­ளது.

இத­ன­டிப்­ப­டை­யில் பார்க்­கும்­பொ­ழுது சர்­வேஸ்­வரா, மகா­தே­வன் ஆகி­யோரை கூட்­டு­றவு ஆணை­யா­ளர் மூலம் யாழ்கோ பணிப்­பா­ளர் சபைக்கு நிய­ம­னம் செய்து அதன் தலை­வர் பத­வி­யில் இருந்து ரஞ்­சனை நீக்­கம் செய்­தமை அமைச்­ச­ரது அதி­கார முறை­கேடு என விசா­ர­ணைக்­குழு கரு­து­கி­றது.

4.9 2015 யாழ்கோ பாற்­பண்ணை கூட்­டு­ற­வுச் சங்­கத்­துக்­குத் தலை­வ­ராக முன் அனு­ப­வ­மில்­லா­த­வ­ரும் மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­துரை பெறப்­ப­டா­த­வ­ரு­மான இரத்­தி­ன­சிங்­கம் சர்­வ­வேஸ்ரா என்­ப­வரை குடும்ப நண்­பர் என்ற அடிப்­ப­டை­யில் கூட்­டு­றவு ஆணை­யா­ளர் மூலம் தலை­வ­ராக நிய­மித்­தமை தொடர்­பில் அதி­கார முறை­கேடு செய்­தமை.

சர்­வேஸ்­வ­ராவை தலை­வ­ராக்­கு­வ­தில் அமைச்­சர் உறுதி

யாழ்கோ கூட்­டு­றவு சங்­கத்­தின் பணிப்­பா­ளர் சபைக்கு மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­துரை பெறப்­ப­டாது 01.05.2014இலி­ருந்து விவ­சாய அமைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இ.சர்­வேஸ்­வரா மற்­றும் கந்­தையா மகா­தேவன் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­ட­தா­க­வும் சட்­ட­பூர்­வ­மாக அமைச்­ச­ருக்கு அந்த அதி­கா­ரம் இல்லை என­வும் கூட்­டு­றவு ஆணை­யா­ளர் இந்த விசா­ர­ணைக் குழு­வின் முன் அளித்த தனது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­ட­தை ­யும் நேர­டி­யாக இ.சர்­வேஸ்­வ­ரா­வின் பாற்­பண்ணை தொழில் தொடர்­பான அனு­ப­வ­மின்­மையை அமைச்­ச­ருக்­குத் தான் தெரி­வித்­த­தா­க­வும் அதற்கு அமைச்­சர் மகா­தே­வனின் ஆலோ­ச­னை­யைக் கேட்டு சர்­வேஸ்­வரா நடந்­து­கொள்­வார் எனத் தெரி­வித்து சர்­வேஸ்­வ­ரா­வின் நிய­ம­னத்­தில் உறு­தி­யாக இருந்­துள்­ள­மையை கூட்­டு­றவு ஆணை­யா­ள­ரது சாட்­சி­யி­லி­ருந்து தெளி­வா­கின்­றது.

சர்­வேஸ்­வ­ரா­வு­ட­னான உறவை மறைக்க முயன்­றார் அமைச்­சர்

அதே­நே­ரத்­தில் பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த காலம் தொடக்­கம் அமைச்­ச­ரைத் தனக்குக் தெரி­யும் என இ.சர்­வேஸ்­வரா குழு­வின் முன் அளித்த சாட்­சி­யத்­தில் தெரி­வித்­துள்­ள­மை­யும் அவர் தனது மனை­வி­யு­டைய குடும்ப நண்­பர் என­வும் தனது மாம­னா­ரின் பள்­ளித் தோழன் என­வும் அவர் தனது பெய­ரைப் பரிந்­துரை செய்­தி­ருக்­க­லாம் என­வும் அவர் தனது சாட்­சி­யத்­தின் பொழு­து­தெ­ரி­வித்­தி­ருக்­கும் அதே­நே­ரத்­தில் அமைச்­சர் இரத்­தி­ன­சிங்­கம் சர்­வேஸ்­வ­ராவை அவர் யாழ்கோ தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்­னர்­தான் தெரி­யும் என தனது சாட்­சி­யத்­தின் பொழுது முரண்­பா­டாக சாட்­சி­ய­ம­ளித்து சர்­வேஸ்­வ­ரா­வுக்­கும் தனக்­கும் இடையே உள்ள முன் உறவை மறைக்க முயற்­சித்­துள்­ள­மையை விசா­ர­ணைக்­குழு தனது கவ­னத்­தில் எடுத்­துள் ளது.

அத்­து­டன் தனக்கு கூட்­டு­றவு ஆணை­யா­ளரை நன்கு தெரி­யும் என­வும் அத­னா­லே­யே­தான் இந்­தப் பத­விக்கு நிய­மிக்­கப்­பட் டுள்­ள­தா­க­வும் மாவட்­டச் செய­லா­ள­ரின் பரிந்­து­ரை­யின் பேரி­லேயே தனது நிய­ம­னம் இருந்­தது என்­றும் உண்­மைக்­குப் புறம்­பாக இ.சர்­வ­வேஸ்­வ­ரா­வின் சாட்­சி­யும் அவர் உத்­தி­யோகத்­தர் என்ற உண்­மைக்கு புறம்­பான அமைச்­ச­ரின் சாட்­சி­யும் சர்­வேஸ்­வரா – அமைச்­சர் ஆகிய இரு­வ­ருக்­கும் இடையே நில­வி­வந்த முன் தொடர்­பை­யும் அமைச்­ச­ரின் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யி­லேயே கூட்­டு­றவு ஆணை­யா­ள­ருக்கு நெருக்­கு­தல் வழங்கி இந்த நிய­ம­னம் செய்­யப்­பட்­ட­தென்­பதை கூட்­டாக இந்த இரு­வ­ரும் மறுக்­கும் விதத்­தில் சொல்­லப்­பட்ட சாட்சி உண்­மைக்கு புறம்­பா­ன­ தென இந்த விசா­ர­ணைக்­குழு கரு­து­கின்­றது.

இந்த நிலை­யில் அமைச்­சர் தனது பதவி அதி­கா­ரத்தை முறை­கேடு செய்து இரத்­தி­ன­சிங்­கம் சர்­வேஸ்­வ­ராவை பணிப்­பா­ளர் சபைக்கு கூட்­டு­றவு ஆணை­யா­ளர் மூலம் நிய­மித்து பின்­னர் அவ­ரைத் தலை­வ­ராக்கி உள்­ளார். அத்­து­டன், ரஞ்­சனை தலை­வர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கம் செய்து மாகாண விவ­சாய அமைச்­சர் தனது அதி­கா­ரத்தை முறை­கேடு செய்­துள்­ளார் என்­பது விசா­ர­ணை­க­ளின் போது சாட்­சி­யங்­க­ளின் மூலம் எண்­பிக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்கோ தலை­வர் நிய­ம­னத்­தில் விவ­சாய, கம­நல சேவை, கால்­நடை அபி­வி­ருத்தி, நீர் வழங்­கல், உணவு வழங்­கல், சுற்­றா­டல் மற்­றும் கூட்­டு­றவு அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன் அதி­கார முறை­கேடு செய்­துள்­ளார் என்று விசா­ர­ணைக்­குழு கரு­து­கின்­றது.

4.10) மரு­தங்­கேணி கடற்­றொ­ழில் சமா­சத் தலை­வரை நியா­ய­மான கார­ணங்­க­ளின்றி கூட்­டு­றவு ஆணை­யா­ளர் மூலம் 2015ஆம் ஆண்டு டிசெம்­பர் மாத­ம­ள­வில் பத­வி­நீக்­கம் செய்­தமை மூலம் அதி­கார முறை­கேடு செய்­தமை.

பொன்­னுச்­சாமி பிரே­ம­தாஸ் என்­ப­வர் உடுத்­துறை கடற்­றொ­ழி­லா­ளர் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் தலை­வ­ராக அங்­கத்­த­வர்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­டார். மரு­தங்­கேணி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்ட 15 சங்­கங்­க­ளின் தலை­வர்­க­ளால் மரு­தங்­கேணி கடற்­றொ­ழி­லா­ளர் கூட்­டு­றவு சங்க சமா­சத்­தின் தலை­வ­ரா­க­வும் அவர் கட­மை­யாற்றி வந்­துள்­ளார். சமா­சத்­தின் நோக்­கம், மரு­தங்­கேணி பிர­தே­சத்­தில் வசிக்­கும் கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளது தொழில்­சார் வாழ்­வா­தா­ரத்தை அதி­க­ரிப்­ப­தா­கும்.

அதே நேரம் 2015ஆம் ஆண்டு ஏப்­ரல் மாத­ம­ள­வில் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, விவ­சாய, கம­ந­ல­சேவை, கால்­நடை அபி­வி­ருத்தி, நீர் வழங்­கல், உணவு வழங்­கல், விநி­யோ­கித்­தல், சுற்­றா­டல் மற்­றும் கூட்­டு­றவு அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், கூட்­டு­றவு ஆணை­யா­ளர், பிர­தேச செய­லா­ளர் ஆகி­யோர் அடங்­கிய பொதுக் கூட்­ட­ மொன்று பொ.பிரே­ம­தா­ஸின் தலை­மை­யில் நடை­பெற்­றுள்­ளது.

அதில் மரு­தங்­கேணி கடல் பிர­தே­சத்­தி­லி­ருந்து கடல் நீரை எடுத்து சுத்­தி­க­ரித்து அந்த நீரை யாழ். மாவட்­டத்­துக்கு குடி­தண்­ணீ­ராக விநி­யோ­கிப்­பது தொடர்­பாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட நீர் போக மீதி நீரை கட­லில் விடு­வ­தா­க­வும், அத­னால் எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­ட­மாட்­டா­தெ­ன­வும் அமைச்­ச­ரா­லும் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, தேசிய நீர் வழங்­கல் வடி­கால் அமைப்பு சபை உத்­தி­யோ­கத்­தர்­க­ளாலும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் கூட்­டத்­தில் பங்­கு­பற்­றிய கடற் றொழி­லா­ளர்­கள் இந்­தத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னாலும் தமது றொழி­லுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­மென தெரி­வித்து அந்­தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தமது சம்­ம­தத்தை வழங்க முடி­யா­தெ­ன­வும் தெரி­வித்­துள்­ள­னர். அத­னால் கூட்­டம் இடை­ந­டு­வில் நிற்­பாட்­டப்­பட்­டுள்­ளது.

நன்­னீர்த் திட்­டத்­துக்கு சம்­ம­திக்­கா­த­தால் சமா­சத் தலை­வர் நீக்­கம்

மாகாண முத­ல­மைச்­ச­ரின் தலை­மை­யில் அவ­ரது வதி­வி­டத்­தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் இந்­தத் திட்­டத்­துக்­கான சம்­ம­தத்தை வழங்க வேண்­டு­மென எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணங்­க­வும் இந்­தத் திட்­டத்­துக்­கான அனு­ம­தியை வழங்­கும்­படி பிர­தேச செய­லா­ளர்- மரு­தங்­கேணி, கூட்­டு­ற­வுத் திணைக்­க­ளம் என்­பன அமைச்­ச­ரது அழுத்­தம் கார­ண­மாக சமா­சத் தலை­வ­ருக்கு நெருக்­கு­தல் கொடுத்த கார­ணத்­தி­னா­லும், சமா­சத் தலை­வர் சமாச கடி­தத் தலைப்­பில் சங்­கங்­கள் மற்­றும் நலன்­வி­ரும்­பி­க­ளைக் கொண்ட கூட்­டம் ஒன்றை ஒழுங்­கு­ப­டுத்தி இருந்­துள்­ளார்.

அந்­தக் கூட்­டத்­தி­லும் இந்­தத் திட்­டத்­துக்கு சம்­ம­தம் கிடைக்­க­வில்லை. இந்த நிலை­யில் அமைச்­சர் சமா­சத்­தின் தலை­வரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தன் மூல­மும் புதிய பணிப்­பா­ளர் சபையை நிய­மிப்­ப­தன் மூல­மும் நீர்­வ­ழங்­கல் தொடர்­பான சம்­ம­தத்தைப் பெற­லாம் என்று எண்ணி சமா­சத்­தின் பொது முகா­மை­யா­ளர் மூலம் தலை­வ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான கார­ணங்­க­ளைப் பெற திட்­ட­மிட்டு இருந்­த­தாக எண்­ணு­வ­தற்­கான கார­ணம் இருந்­துள்­ளது.

ஏனெ­னில் சங்­கத்­தின் கடி­தத் தலைப்பை பாவித்து தலை­வர் கூட்­டம் கூட்­டிய ஆவ­ணத்தை பொது முகா­மை­யா­ளர் தலை­வ­ரின் முன் அனு­ம­தி­யின்றி அமைச்­ச­ரி­டம் கைய­ளித்­துள்­ளார். அமைச்­சர் அத­னைக் கார­ணம் கொண்டு சமா­சத் தலை­வரை அதி­கார முறை­கேடு என்ற குற்­றச்­சாட்­டின் கீழ் பத­வி­நீக்­கம் செய்­யும்­படி கூட்­டு­றவு ஆணை­யா­ள­ருக்கு பணித்­துள்­ளார். கூட்­டு­றவு உதவி ஆணை­யா­ளர் மூலம் அந்­தக் குற்­றச்­சாட்­டின் தன்மை அதன் தாக்­கம் சட்­ட­பூர்­வத்­தன்மை என்­ப­வற்றை ஆரா­யா­மல் அமைச்­ச­ரின் பணிப்­பு­ரையை நிறை­வேற்ற வேண்­டும் என்ற எண்­ணத்­தில் இந்­தச் செயற்­பாட்டை அனு­ம­தித்­துள்­ளார்.

சமா­சத் தலை­வர் கடி­தத் தலைப்பை குறிப்­பிட்ட நோக்­கத்­துக்­காக பாவித்­தமை அவரை பத­வி­நீக்­கும் அள­வுக்­கான பார­தூ­ர­மா­னவை அல்ல என்று விசா­ர­ணைக் குழு­வின் முன்­னி­லை­யில் கூட்­டு­றவு ஆணை­யா­ளர் அளித்த சாட்­சி­ய­மும் முன்­னாள் கூட்­டு­றவு உதவி ஆணை­யா­ளர் அவ­ச­ரப்­பட்டு பிழை­யான தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளார் என்று விசா­ர­ணைக் குழு முன்­னி­லை­யில் அமைச்­ச­ரின் விளக்­க­மும் மேற்­படி கூற்­றுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளன.

http://uthayandaily.com/story/6224.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.