Jump to content

பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?


Recommended Posts

ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. .

ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு .

எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும்

நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க முழுக்க காரணம் என்றுதான் நான் சொல்வேன் . வாசிக்கிற உங்களுக்கு வேறு கருத்துக்கள் இருக்கக்கூடும் . அதுவும் நீங்கள் ஒரு பதின்ம வயதுப் பிள்ளையின் பெற்றோரா இருந்தால் நிச்சயம் என் கருத்தோட ஒத்துப்போக மாட்டீர்கள் . வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் எங்கே அந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளைப் போட்டு எங்கட பிள்ளைகள் வாழ்க்கையில் தவறான பாதையில் போகக் காரணமாகி விடுகிறோம் .

எங்கட பிள்ளைக்கு இப்பத்தானே 15 வயதாகிறது . அது சின்னப்பிள்ளை அதுக்கு காதல், செக்ஸ் பற்றியெல்லாம் என்ன தெரியப்போகுது என்பதுதான் பலரின் நினைப்பு . ஆனால் எங்கட பிள்ளைகள் வளர்வது நாங்கள் வளர்ந்த மாதிரியான சூழலில் அல்ல என்பதை அநேகமான பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள் . அண்மையில் வடஅமெரிக்கப் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அந்தப் பாடசாலையில் படிக்கின்ற 39 வீதமான ஐந்தாம் ஆண்டுப்பிள்ளைகள் தங்களுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியும் என்று கூறியிருக்கிறார்கள் . இன்றைய பெற்றோராகிய நீங்கள் பதின்ம வயதில் இருக்கும்போது உங்களுக்கு இருந்த காதல் எண்ணங்கள் புலத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒன்பது பத்து வயதுகளிலேயே வந்து விடுகிறது என்பதுதான் உண்மை .

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்களாகவே முன்வந்து காதலைப் பற்றியோ அல்லது செக்ஸ் ஐ பற்றியோ உரையாட முற்படும்போது “ வயசுக்கேத்த மாதிரிக்கதை ” , “ நீ சின்னப்பிள்ளை இதைப்பத்தியெல்லாம் கதைக்கக் கூடாது ” , “ படிக்கிற வயசில படிக்கிற வேலையை மட்டும் பார்க்கவேணும் “ இப்படியெல்லாம் உங்கட பிள்ளைகளைக் கதைக்கவிடாம சுலபமா அந்தத் தருணத்துக்கு தடுத்துவிடலாம் . அப்பாடா கதை இத்தோட நின்றுவிட்டது என்று அப்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம் . ஆனால் நீ சிந்திக்கிற விதம் சரியில்லை கதைக்கிற விடயம் பிழையானது என்று உங்கள் பிள்ளைகளுடைய சுயத்தை நீங்களே சிதைக்கிறீர்கள் அதனால்தான் அந்தப்பிள்ளைகள் வளர்ந்து பதின்ம வயதுக்கேயானா சந்தேகங்கள் , கேள்விகள் , தேடல்கள் தொடங்கும்போது உங்களிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி முடிந்தளவு தன் நண்பர்களோடு நேரத்தை செலவழிக்க நினைக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகள் பதின்ம வயதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாகவோ , பெண்ணாகவே உடலாலும் உள்ளத்தாலும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் அவர்களுக்குத் தேவையான ஒரு வழிகாட்டியாக நீங்கள் இல்லாமல் போவதால் தான் நிருஜா போன்ற பிள்ளைகள் 16 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் .

நிருஜாவினுடைய பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் . திருமணம் செய்துவிட்டோம் பிள்ளைகள் பெற்றுவிட்டோம் அதனால என்னதான் எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் பிள்ளைகளுக்கா நாங்கள் சேர்ந்துதான் வாழவேண்டும் என்று முட்டாள்தனமாக தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் . நிருஜாவுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாக பெற்றோரின் வழமையான சண்டையையும் வாக்குவாதங்களையும் பார்த்து பார்த்து ஆண் பெண் உறவென்றால் இப்படித்தான் போல என்ற நினைப்பு . அதானால் தான் வீடு என்ற நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும் என்ற முடிவெடுக்க வைத்தது .

சின்ரெல்லா போன்ற கதைகளை வாசித்து கற்பனை உலகத்தில் வாழும் நிருஜா போன்றவர்கள் . கண்டதும் காதலில் விழுந்து பின்னர் அந்தக் காதலுக்கு அடிமையாகி காதலனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என யோசித்து யோசித்து அவர்களுக்காகவே வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் . சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டும் தங்களுக்குள்ள சண்டை வரக்கூடாது என்பதற்காக செய்யாத தப்புக்குக்கூட தாங்களாகவே முன்வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டும் நண்பர்களுடன் கழிக்கும் நேரங்களைக் கூட காதலனுடன் மட்டுமே கழிக்கவேண்டும் இனிமேல் தான் வாழ்வதே தன் காதலனுக்காகத்தான் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவனோடயே கழிக்கவேண்டும் என்ற மாதிரி ஒரு மனப்பிரமையில் அடிமையாகிப் போகிறார்கள் .

நான் இவனுடைய சொந்தம் என்ற எண்ணத்தோடுதான் நிருஜா போன்றவர்கள் தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . அதுவே கொஞ்சநாளில் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுயகௌரவத்தையும் இழந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு மன்னிப்புக்கேட்பதிலயும் பயத்திலும் குற்ற உணர்விலும் சுழன்று திரும்பவும் வீட்டுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலையில்லை என முடிவு செய்து சிறுவர் காப்பகங்களில் தஞ்சம் புகவேண்டியவர்களாகின்றார்கள

Link to comment
Share on other sites

ஒரு உண்மைக் கதையைச் சொல்லுறன் கேளுங்கோ. இது எனது நண்பர் ஒருவர் சொன்ன கதை. கனடா நாட்டிலிருந்து ஒரு குடும்பம் சாமர்த்திய வீடொன்றுக்கு பிரான்ஸ்க்கு போயிருந்தார்கள். அவர்களிற்கு 15 வயதில் ஒரு பெண் பிள்ளை இருந்தாள். போன இடத்தில் அந்தப் பிள்ளையை பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு பெடியன் விரும்பி கடைசியில் ஒரு கிழமையுள் பெட்டை பெடியனுடன் தாய், தகப்பனை விட்டிட்டு ஓடியிட்டு. திரும்பி வரவில்லை. யாரின்டையோ சாமர்த்திய வீடு என்று போய் கடைசியில் அவர்கள் பெட்டையை பறிகொடுத்துவிட்டு வந்ததுதான் மிச்சம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலும் இரவும் வேலக்குப்போய் காசு சம்பாதித்தால் கானும்.மறவனைவிட வசதியாக வாழவேனும்.இல்லை அ்ப்படி வாழவது போல நடிக்கவாவது வேனும்.காசு இருந்தால் எதுவும் செய்யலாம்.பிள்ளைகளுக்கு விலை கூடிய பொருட்களை வாங்கிக் கொடுத்தால் சரி அவர்கள் காலுக்குள் நிப்பார்கள் என்று நினைக்கும் பொற்றோர்கள் தங்கள் காலுக்குள் வெள்ளம் வரும்வரை இதையெல்லாம் உணருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.இது எல்லாப் பெற்றோருக்கும் பொருந்தாது என்றாலும் பெரும்பான்மையானவர்கள் இப்படிதான் சின்ன வட்டத்துக்குள் வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சூப்பர் சினேகிதி..நம்ம சில புலம் பெயர் பெற்றோரின், பிள்ளைகளின் நிலையை நன்றாக சொல்லி இருக்கிறீங்கள்.

நான் வாழும் நாட்டிலும் நடந்த்திச்சு. தாய் தந்தையின் சண்டையை பார்த்து மகள், காதலனோடு வேறு நாட்டிற்கு சென்று விட்டார். என்னை பொறுத்த வரையில் அந்த பெண் அந்த வீட்டை விட்டு தப்பி விட்டார். சந்தோசப்பட்டு அம்மாக்கு சொன்னேன். அம்மா சொன்னா..பிள்ளை சின்னப்பிள்ளை. அவவுக்கு 15 வயது தான். பையனும் சின்னப்பையன். பொறுப்பா இனி இருக்கணுமே என்று கவலைப்பட்டா. நானும் அதை அப்போ தான் யோசித்தேன். காதல் முதலில் உணர்ச்சி வசமாக ஆரம்பித்து போக போக சுயநலங்கள், சண்டைகள், கோவங்களாக மாறி கொலையிலும் முடிந்திருக்கின்றது. தாய் தகப்பனை பிரிந்து செல்லும் இப்படி சின்ன பிள்ளைகள் பாவம். சிறு வயதில்..ரொம்ப கஷ்டப்பட்டு போவார்கள். நினைக்க எனக்கு கஷ்டமாக இருக்கின்றது.

ஆனால் அதற்கு வழி வகுப்பது தாய் தந்தையர் எனும் போது இன்னும் கவலையை விட கோவம் தான் வருகின்றது. உதாரணத்துக்கு நான் வெளிநாடு வந்த போது இங்கு ஒரு வயது போன அம்மம்மா வீட்டிற்கு வருவா. நான் அப்போ தான் பள்ளிக்கு செல்ல தொடங்கி இருந்தேன். ஒரு நாள் அவா அம்மாவோட கதைத்து கொண்டிருந்ததை கேட்டதும் கோவம் தான் அப்போது வந்திச்சு. அவா சொன்னது என்னவென்றால். சிறு வயதில் கடைசி பிள்ளை வந்துட்டா..இங்க பெடியள் சரியான மோசம். காதல், அது இது என்று வெளிக்கிட்டால் கடைசியில் ஆஸ்பத்திரி வழியில் தான் திரியணும்..அதனால ப்ரெண்டுகள் என்று கூட்டு சேர்க்க விடாதைங்கோ..அப்படி இப்படி என்று. அவா சொன்னதில் தப்பும் இல்லை..சரியும் இல்லை.

நான் அதையே அவா..பிள்ளையை புரிந்து கொண்டு..அவாவோட கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்கோ அப்படி என்று சொல்லி இருந்தால். நன்றாக இருந்திருக்கும் அதை விட்டு விட்டு என் காதிற்கு கேட்கவே இப்படி சொன்னது எனக்கு பிடிக்கவில்லை. அன்றோடு அவவோட நான் நன்றாக கதைப்பதுமில்லை. :angry:

என்னோட கருத்தும் சினேகிதியின் கருத்தே..பிள்லைக்கு சிப்சும், மை டோனல்டில மைக் சிக்கினும் வாங்கி குடுத்தால் போதுமா..பிள்ளையின் வயதுக்கேற்ற எண்ணங்களை அவதானித்து ஓப்பினாக கதைக்க வேண்டும்.

மொத்தத்தில் அதிகாரம் செய்யும் பெற்றோராக இல்லாமல்..அன்பான, நட்பான பெற்றோராக இருந்தால் பின்னால் அவர்களிற்க்கும் கௌரவ குறைச்சல் வராது!!! அதை யோசித்தாவது அவர்கள் செய்வார்களா? :icon_idea:

Link to comment
Share on other sites

பிரண்ஸ் ஓடச் சேரமா பின்ன என்ன அம்மம்மா போல ஆக்களோடயோ சேருறதாம்....நானெழுதினதும் ஒரு உண்மைக்கதையை வச்சுத்தான்.இதை மட்;டும் அம்மா இல்லாட்டா அக்கா பார்க்கணும் நான் துலைஞ்சன்.இந்தக்கதையில வாற கேர்ள் இப்ப அந்h போய் வீட்டில நல்ல சந்தோசமா காம்பிங் கொட்டேஜ் கிழமைக்கொரு பார்ட்டி என்றிருக்கிறா படிப்பும் விட்டாச்சு கேட்டால் அடுத்த வருசும் தொடர்ந்து படிக்கப்போறாவாம்.ஆனால் பெற்றோர்கள் படும்பாடுதான் பாவம்.ஒழுங்காச் சமைக்கிறேல்ல சாப்பிடுறேல்ல யாரும் போன் பண்ணினாக்கூட மகளைப் பற்றி விசாரிப்பினமோ என்று பயந்து பயந்து கதைக்கிறது பாரக்கப் பாவமா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த இளசுக்கின்ர எல்லாக் கூத்தும் ஒரு கொஞ்சக் காலத்துக்குத்தான். ஆடி அடங்கட்டும் என்று விட்டிட்டு இருக்க வேண்டியதுதான் சரியான வழி. உதுகளுக்காக பெற்றோர் தங்கள் சந்தோசத்தை தொலைக்கிறது சரியாப் படேல்ல. பிள்ளைகளுக்கு பெற்றோரின்ர நிலை பற்றிக் கவலையில்ல. 15 வயது வரை வளர்க்க மட்டும் அவை வேணும். வளர்ந்த அப்புறம் போறவ எங்கையும் போகட்டன் பெற்றோருக்கு என்ன வந்திச்சு. நொந்து நூலாகி மீண்டும் வீட்டுக்கு வரேக்க மனிதாபிமானத்தோட வரவேற்கிற பக்குவம் பெற்றோரிட்ட வர வேணும் என்றதுதான் சொல்லக் கூடிய ஒரே தீர்வு.

ஊரிலையும் இப்படி ஒரு பொண்ணு 15 வயசில வீட்டுக்கு வந்து போன பொடியனோட லவ்வு வந்து ஓடிட்டா. பெற்றோர் போனவள் போகட்டும் என்று விட்டுட்டினம். கடைசில சரியா ஒரு வருசத்தில ஒரு குழந்தையும் கையுமா வந்திச்சு பொண்ணு.என்ன செய்யுறது என்று வரவேற்றிச்சினம் பெற்றோர்.

புகலிடத்தில ஓடினா வீடு வசதி அரசுகள் செய்து கொடுக்கும். சோ பெற்றோர் பொறுப்பற்ற பிள்ளைகளை எண்ணி தங்கட நிம்மதியத் தொலைக்கிறதிலும் நடக்கிறதைக் கவனிச்சுக் கொண்டிருக்கிறதுதான் அவைக்கு மரியாதை. மகிழ்ச்சி... எனலாம்..! :icon_idea: :P

Link to comment
Share on other sites

உந்த இளசுக்கின்ர எல்லாக் கூத்தும் ஒரு கொஞ்சக் காலத்துக்குத்தான். ஆடி அடங்கட்டும் என்று விட்டிட்டு இருக்க வேண்டியதுதான் சரியான வழி. உதுகளுக்காக பெற்றோர் தங்கள் சந்தோசத்தை தொலைக்கிறது சரியாப் படேல்ல. பிள்ளைகளுக்கு பெற்றோரின்ர நிலை பற்றிக் கவலையில்ல. 15 வயது வரை வளர்க்க மட்டும் அவை வேணும். வளர்ந்த அப்புறம் போறவ எங்கையும் போகட்டன் பெற்றோருக்கு என்ன வந்திச்சு. நொந்து நூலாகி மீண்டும் வீட்டுக்கு வரேக்க மனிதாபிமானத்தோட வரவேற்கிற பக்குவம் பெற்றோரிட்ட வர வேணும் என்றதுதான் சொல்லக் கூடிய ஒரே தீர்வு.

ஊரிலையும் இப்படி ஒரு பொண்ணு 15 வயசில வீட்டுக்கு வந்து போன பொடியனோட லவ்வு வந்து ஓடிட்டா. பெற்றோர் போனவள் போகட்டும் என்று விட்டுட்டினம். கடைசில சரியா ஒரு வருசத்தில ஒரு குழந்தையும் கையுமா வந்திச்சு பொண்ணு.என்ன செய்யுறது என்று வரவேற்றிச்சினம் பெற்றோர்.

புகலிடத்தில ஓடினா வீடு வசதி அரசுகள் செய்து கொடுக்கும். சோ பெற்றோர் பொறுப்பற்ற பிள்ளைகளை எண்ணி தங்கட நிம்மதியத் தொலைக்கிறதிலும் நடக்கிறதைக் கவனிச்சுக் கொண்டிருக்கிறதுதான் அவைக்கு மரியாதை. மகிழ்ச்சி... எனலாம்..! :icon_idea: :P

நல்ல அறிவுரை! யாழ் கள பெற்றோரும், பிள்ளைகளும் இந்த வயசு போன தாத்தாவின் கதையைக் கேட்டு உருப்பட்ட மாதிரித்தான்! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.