Jump to content

அங்காடி தெருவின் கதை!


Recommended Posts

அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1

 
 

தி நகர்

க்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர்.

நுகர்வு கலாசாரம்

"ரெண்டு நைட்டி  100 ரூபா, வாங்க மேடம்" என்று கடையின் இரண்டு பக்கமும் நைட்டிகளை விற்பனைக்கு வைத்திருக்கும் ஒருவர்  தெருவில் போகும் மனித கடலில், பெண்களைப் பார்த்து அழைக்கிறார்.

வியாபார குரல்களும், விற்பனைக் குரல்களும் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு கலவையாக காதில் விழுகிறது. காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு, போனில் தென் மாவட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசுகிறார் இளைஞர் ஒருவர், "மாப்ள நான் இப்போ தி.நகர் ரங்கநாதன் தெருவுல இருக்கேன். நீ ஒரு ஜீன்ஸ் வேண்டும்னு கேட்டியே. என்ன கலர் வேணும்னு சொன்ன" என்று கேட்கிறார். பேசியவர் முகத்தில் தி.நகரில் இருந்து பேசுகிறோம் என்பதில் ஏகப்பட்ட பெருமிதம். அவரது வார்த்தைகளில் உற்சாகம் பெருக்கெடுக்கிறது. தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் தி நகர் நுகர்வு கலாசாரம் இப்போது மாபெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

தி நகர்

பிழைப்புக்காக...

தியாகராய நகரின் பிரமாண்ட கட்டடங்களின் முதல் செங்கல் ஏதோ ஒரு செங்கல் சூளையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். அதேபோலத்தான் அங்கிருக்கும் பிரமாண்ட கட்டங்களின் உரிமையாளர்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து பிழைப்புக்காகச் சென்னை நகரை, தி.நகரை நோக்கி வந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.

நாம் சந்தித்த சமோசா விற்பவர் ஆகட்டும், கோயில் செயலாளர் ஆகட்டும், சாக்ஸ் விற்பவராகட்டும் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை 'பிழைப்பு'-க்காத்தான் இங்கு வந்தேன் என்பதுதான். பிழைப்புக்காகத் தி.நகர் வந்தவர்களை இங்கிருக்கும் அங்காடி தெருக்கள் ஏமாற்றவில்லை.

ரங்கநாதன் தெருவில் சமோசா விற்கும் சரவணன், அரியலூரைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் நிலம் இருக்கிறது. விவசாயம் செய்கிறார். இப்போது விவசாயத்தை அவரது குடும்பத்தினர் கவனித்துக் கொள்கின்றனர். "நான் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன். பல்லவாரத்துல சமோசா செஞ்சு இங்க எடுத்துட்டு வந்து விப்போம். இப்ப வெயிலா இருக்கிறதால சாயங்காலம் 5 மணிக்கு வருவோம். ராத்திரி 10 மணி வரைக்கு விப்போம். ஒரு நாளைக்கு 700 ரூபா கிடைக்கும். செவ்வாய் கிழமை அவ்வளவா யேவாரம் இருக்காது. அன்னைக்கு ரெஸ்ட் எடுத்துப்போம். 15 நாளைக்கு ஒரு தடவை பல்லவன் எக்ஸ்பிரஸ்ல அரியலூர் போயிட்டு வந்துடுவேன். குடும்பம் எல்லாம் அங்கதான் இருக்கு. பரவாயில்ல. பொழப்பு ஓடுது" என்கிறார் நம்பிக்கையோடு.

தி.நகரின் பழைமையான அடையாளங்களில் ஒன்று சிவா விஷ்ணு கோயில். அந்த கோயிலில் செயலாளராக இருக்கிறார் வேணுகோபால். அவரது தந்தை காலத்தில் பிழைப்புக்காக தி.நகர் வந்திருக்கிறார்கள். "எங்க அப்பா, ஈயபாத்திரம் செய்றவர். 50 வருஷத்துக்கு முன்னாடி அப்பா பிழைப்புத் தேடி இங்க வந்தார். நான் ராமகிருஷ்ணா மிஷின் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்போ ரெங்கதான் தெருவுல மூணு கடைதான் இருந்துச்சு. அதுல ஒரு கடை கும்பகோணம் பாத்திரக்கடை. இன்னொரு கடை லிப்கோ புஸ்தக கடை. அப்புறம் இன்னொரு கடை இருந்துச்சு. அப்போ தி.நகர்ல பஸ்ஸ்டாண்ட் எல்லாம் இல்ல. அந்த இடத்தில செடி, கொடிங்க வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கும். அந்த இடத்த மக்கள் திறந்தவெளி கழிப்பிடமா உபயோகிச்சாங்க. இந்தபக்கம் உஸ்மான் ரோட்டில ஒரு எருக்கம் புதர் இருந்தது. அதுவும், திறந்தவெளி கழிப்பிடமாத்தான் இருந்துச்சு. இன்னைக்கு தி.நகர் வளர்ச்சியை பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு" என்கிறார் வியப்புடன்.

பிரமாண்டத்துக்குப் பின்னால்.,.

இன்றைக்கு புகழ் பெற்ற நிறுவனமாக விளங்கும் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமியின் தந்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காகத்தான் அவர்கள் குடும்பம் சென்னை வந்தது. இன்றைக்கு நல்லி என்ற பிராண்ட் நிலைத்திருக்கிறது. பெண்கள் உள்ளாடைகளுக்கு புகழ் பெற்று விளங்கும் நாயுடு ஹால் உரிமையாளர் நாயுடு, குடியாத்தத்தைச் சேர்ந்தவர், சிறுவயதில் வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் ஏறி வந்தவரை, டெய்லராக இருந்த பெரியவர் அழைத்து வந்து டெய்லரிங் பயிற்சி கொடுக்கிறார். அதில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்த நாயுடு இன்று ஊரெல்லாம் பேசும் நாயுடு ஹால் என்ற பிரமாண்ட பிராண்டை நிலை நிறுத்தி விட்டுச் சென்றிருக்கிறார். இப்படி இன்றைய பிரமாண்டத்துக்கும் பின்னால், பல ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தொடக்கப்புள்ளி இருந்திருக்கிறது. தி.நகரின் தொடக்கப்புள்ளி எது? அடுத்த அத்தியாயத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பார்க்கலாம்...

 

(தொடரும்)

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தொடக்கப்  .  யை பார்க்க ஆவலுடன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அந்த தொடக்கப்  .  யை பார்க்க ஆவலுடன்.....!  tw_blush:

சாமி ஏதோ ஆவலுடன் கேட்கிறத பார்த்தால் எதையோ எதிர்பார்க்கிறார் போல:unsure:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனி ஒருவன் said:

சாமி ஏதோ ஆவலுடன் கேட்கிறத பார்த்தால் எதையோ எதிர்பார்க்கிறார் போல:unsure:tw_blush:

சும்மா வாசிக்காமல் எழுதக்கூடாது.... அங்காடில என்னத்த எதிர்பார்க்கிறது....! அது ஒரு ஊக்குவிப்பு பதிவு....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

சும்மா வாசிக்காமல் எழுதக்கூடாது.... அங்காடில என்னத்த எதிர்பார்க்கிறது....! அது ஒரு ஊக்குவிப்பு பதிவு....! tw_blush:

அங்காடியென்றாலே  கூட்டம் தானே  சனத்திரளை சொன்னேன்tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கூட்டத்தை கலைக்கிற காலத்தை கடந்திட்டம் என்று சொன்னன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஏரியின் முடிவும்... தி.நகரின் தொடக்கமும்! அங்காடி தெருவின் கதை - பகுதி 2

 
 

அங்காடி தெருவின் கதை

2015-ம் ஆண்டு சென்னையில் பெய்த மழை மறக்கூடிய ஒன்றல்ல. சென்னையில் அப்படி ஒரு மழை இதற்கு முன் எப்போதும் பெய்ததில்லை. ஹெலிகாப்டரில், விமானத்திலிருந்து அன்றைக்கு ஏரியல் வியூவில் பார்த்தவர்களுக்கு சென்னை நகரைப் பார்த்தவர்களுக்கு, சென்னை ஒரு பெரிய ஏரிபோல தோற்றம் அளித்தது.

ஏரியைத் தூர்த்து உருவான நகர்

வேதனையின் உச்சத்தில் கண்ணில் திரண்ட கண்ணீர் மழையோடு, மழையாக கரைந்து போன நிலையில், வீட்டுக்குள் எஞ்சிய பொருட்களுடன் படகுகளில் பயணித்த அனுபவங்களைச் சென்னை வாசிகள் அவ்வளவு தூரம் மறக்க மாட்டார்கள். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இன்றைக்கு ஏரிகள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றி பசுமை ஆர்வலர்கள் கொதித்து எழுகின்றனர். ஆனால், 1920-ம் ஆண்டு ஒரு பெரிய ஏரியைத் தூர்த்துத்தான் தி.நகர் உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? நம்பினாலும், நம்பா விட்டாலும் அதுதான் உண்மை. பழைய தடத்தைத் தேடித்தான் அடையாறு ஆறு கோட்டூர்புரம், நந்தனம், சைதாபேட்டை, அசோக்நகர், மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதிகளில் 2015- டிசம்பரில் பயணித்தது. இயற்கையை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். லாங் டேங்க் ஏரி நகரமாக்கப்பட்டது போலத்தான் இன்றைக்கு சென்னைப் புறநகரிலுள்ள ஏரிகளும் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புலம்பலை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கலாம்.

1911-ம் ஆண்டு சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், நகரை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாம்பலம் என்ற கிராமமும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நூறு ஆண்டுகள் கழித்து ஒரு பிரமாண்டமான நகராக உருவாவதின் தொடக்கமாக இந்த ரயில் பாதை இருந்தது. காஞ்சிபுரத்திலிருந்து  நெசவாளர்கள் துணி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மாம்பலம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்கு வந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஏரியை மூட திட்டம்

நாளுக்கு நாள் சென்னை நகரை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜார்ஜ் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் ஜனநெருக்கடி அதிகரித்ததால் அந்தக் காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், 1923-ம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த நீதிகட்சி சார்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அரசின் டவுண் பிளானிங் டிரஸ்ட் என்ற அமைப்பு இதற்கான திட்டங்களைத் தீட்டியது. இதற்காக மாம்பலம் கிராமத்தை ஒட்டி இருந்த LONG TANK ஏரி மற்றும் ஏரியை ஒட்டி இருந்த பகுதிகள் என மொத்தம் 1600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அப்போது இந்த LONG TANK  அடையாறு ஆற்றில் தொடங்கி, லயோலா கல்லூரி வரை 6 கி.மீ தொலைவுக்குப்(கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) பரந்து விரிந்திருந்தது. அப்போதைய வரலாற்றுக் குறிப்புப் படி  செங்கல்பட்டு மாவட்டத்தில் சைதாப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஏரி இருந்திருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமான சுவாரஸ்யமான தகவலும் உண்டு. LONG TANK ஏரியில் மெட்ராஸ் போட் கிளப் சார்பில் படகு சாகச நிகழ்வுகள் (sailing and rowing )நடைபெற்றன. மெட்ராஸ் போட் கிளப் அமைப்பின் இணையதளத்தில், 19-ம் நூற்றாண்டின் இறுதியில், லாங்க் டேங்க் ஏரியில் படகு சாகச  நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. போட்கிளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, கிளப்பின் வரலாறு குறித்த  புத்தகத்திலும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சென்னை தி.நகர்

தண்ணீர் ததும்பும் ஏரி

"1893-ம் ஆண்டு நல்ல மழை பெய்திருந்ததால், LONG TANK ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால், அந்த ஏரியில் கதீட்ரல் கார்னரில் இருந்து சைதாபேட்டை வரை படகுப்போட்டி நடைபெற்றது. ஏரியில் பயணிப்பது எப்போதுமே சுகமான அனுபவம். ஆனால், ஒரே ஒரு வருத்தம் என்னெவென்றால், மாலை நேரங்களில் சூரிய ஒளியின் கதிர்கள் தண்ணீரில் பட்டு நம் முகத்தில் எதிரொலிக்கும் போது கண்கள் கூசும். இதை மட்டும் பொறுத்துக்கொண்டால், இந்த ஏரி படகு பயணம் என்பது அற்புதமானது. அதே போல 1903-ம் ஆண்டு சென்னையில் பெய்த பெரும் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, LONG TANK  ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. ஏரியில் இருக்கும் தண்ணீர் மற்றும் அடையாறு ஆற்றில் ஓடும் தண்ணீர் கண்ணாடி போல் தெளிவாக இருக்கும்"

இவ்வளவு அற்புதமான இந்த ஏரியைத்தான் தூர்க்க செய்து தி.நகர் உருவாக்கப்பட்டது. ஏரியை மூடும் முன்பு சென்னை மாநகராட்சியில் இது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது என்ன நடந்தது தெரியுமா? அது அடுத்த அத்தியாயத்தில்....

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சரவணா ஸ்டோர்ஸ் தி.நகர் வந்தது எப்படி? அங்காடித் தெருவின் கதை! மினி தொடர்

 
 

தி நகர்

ரசாங்கங்கள் எப்போதுமே, மக்களின் எதிர்ப்புகளையும் ஊடகங்களின் எதிர்ப்புகளையும் கண்டுகொள்வதில்லை. அன்றைக்கு இருந்த அரசும், மிகப்பெரிய ஏரியான LONG TANK ஏரியைத் தூர்ப்பதில் அக்கறையோடு இருந்தது. பொதுமக்கள் நலனுக்காகத்தான் தி.நகர் என்ற புதிய நகர் உருவாக்குகிறோம் என்றும் கூறினார்கள்.

தி.நகருக்காக தீர்மானம்

சென்னை மாநகராட்சியில் இதற்காகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், LONG TANK  ஏரியைத் தூர்த்துவிட்டு நகர்ப் பகுதியை உருவாக்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ''ஏரியைக் கையகப்படுத்தக்கூடாது; ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் இருக்கிறது; இருக்கிற ஏரியையும் தூர்த்துவிட்டால், குடிநீர்ப் பஞ்சத்தில் பாதிக்கப்படுவோம்; இப்படி ஒரு பகட்டான திட்டம் தேவையில்லை'' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஏரியைத் தூர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அன்றைக்கு THE HINDU செய்தியாளர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ''தண்ணீர் நிரம்பிய ஏரியையும் வளம் மிக்க நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றுவது நல்லதல்ல'' என்று தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு அப்போது டவுன் பிளானிங் இயக்குநராக இருந்த Ronald Dann பதில் எழுதினார். ''ஏன் இந்தத் திட்டம் மிகவும் தேவையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடனும் அவர் இருந்தார். 

ரங்கநாதன் தெரு

முதல்கட்டமாக, ஏரியின் ஒரு பகுதி மற்றும் விவசாய நிலங்கள் என 600 ஏக்கர் நிலம் வீட்டு வசதித் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்டது. அவை, விவசாய நிலத்துக்கு ஏக்கருக்கு 910 ரூபாய் அரசுத் தரப்பில் இழப்பீடாகத் தரப்பட்டது. வீட்டு வசதித் திட்டத்துக்கான பணிகள், 1924 ஆம் ஆண்டு தொடங்கின. வீட்டு வசதித் திட்ட வடிவமைப்பின்படி தி.நகரில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்டதுதான், பனகல் பார்க் பூங்கா. இந்தப் பூங்கா 10 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது. 1928 நவம்பர் 8ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. 

சமகாலத்துக்கு நகரம்

இப்போது LONG TANK ஏரியின் மிச்சங்களாக இருப்பவை, மேற்கு மாம்பலத்தில் உள்ள லேக் வியூ ரோடு என்ற சாலையும், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லேக் ஏரியா என்ற பகுதியும்தான். பெயரில் மட்டும்தான் 'ஏரி' இருக்கிறது. மற்றபடி கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. 

சென்னை நகரில் முறையாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் நகர் பகுதி, தியாகராயநகர்தான். குடிநீர் வசதி அளிப்பதற்காக நிலத்துக்கு அடியில் குழாய்கள் கொண்டுசெல்லப்பட்டன. அதேபோல அப்போது சென்னையின் பிற பகுதிகளில் ஓடிய டிராம் தி.நகரில் இயக்கப்படவில்லை. தியாகராய நகர், சமகாலத்தில் உருவாக்கப்பட்ட நகரம் என்பதற்கு இது ஓர் ஆதாரம். 

தி நகர்

மூன்று கடைகள்

மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கிச் செல்பவர்கள், முதலில் நுழையும் தெரு, ரங்கநாதன் தெரு. இது, அப்போது பிராமணர்கள் அதிகம் வசிக்கும் அக்ரஹாரமாக இருந்தது. இந்த அக்ரஹாரத்தில் பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகள். வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் மாட்டுத் தொழுவங்கள் இருந்தன. தி.நகர் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் மேட்லி சுரங்கப்பாதைக்கு மேலே இருந்து சீனிவாசா திரையரங்கு செல்லும் வழியில் கோதண்டராமர் கோயில் தெரு இருக்கிறது. இந்தத் தெருவில் இன்றும் பல வீடுகள் ஓட்டு வீடுகளாகவே இருக்கின்றன. இதேபோன்றுதான் ரங்கநாதன் தெருவும் இருந்தது என்று அப்போதைய காலத்தைச் சேர்ந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

ரங்கநாதன் தெருவில், வீடுகளைத் தவிர மூன்று முக்கியக் கடைகள் இருந்தன. அதில், கும்பகோணம் பாத்திரக்கடை என்பது குறிப்பிடத்தக்க ஒரு கடை. இந்தக் கடையை நடத்தியவர், காரைக்குடியைச் சேர்ந்த தனபாலன் செட்டியார். அவர், இந்தக் கடையில் பித்தளைப் பாத்திரங்களை வைத்திருந்தார். அந்தப் பாத்திரங்களை ஜட்கா வண்டியில் எடுத்துச்சென்று மயிலாப்பூர், ஜார்ஜ் டவுன் மற்றும் பக்கத்தில் இருந்த கிராமப் பகுதிகளில் விற்றுவருவார். 

ரங்கநாதன் தெருவில் இருந்த இன்னொரு கடை, லிப்கோ புத்தகக் கடை. இன்றைக்கும் இந்தப் புத்தகக் கடை இருக்கிறது. இது தவிர, கல்யாணி ஸ்டோர் என்ற கடையும் இருந்தது. உஸ்மான் ரோட்டில், அந்தக் காலத்தில் 'சுந்தரம் காபி' என்ற காபித் தூள் கம்பெனி இருந்தது. இந்தக் கடையை நடத்தியவர், அப்போது முதல்வராக இருந்த காமராஜரின் உறவினர் சோமசுந்தரம் நாடார். இவர், விருதுநகரைச் சேர்ந்தவர். அப்போது, சென்னையில் இருந்த உணவு விடுதிகளுக்கெல்லாம் இந்தக் கடையிலிருந்துதான் காபித் தூள் வாங்கிச் செல்வார்கள். 

 

அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்திலும் இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது, பணிக்கர் குடியிருப்பு என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் விவசாயம்தான் முக்கியத் தொழில். அங்கு வசித்துவந்த செல்வரத்தினம் மற்றும் அவரது சகோதரர்கள் விவசாயம் பார்த்துவந்தனர். அத்துடன், ஓர் அரிசி ஆலையையும் நடத்திவந்தனர். அந்தச் சமயத்தில், செல்வரத்தினத்துக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. சென்னைக்குச் சென்று மளிகைக் கடை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காகத் தன்னுடைய சேமிப்பை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தனது உறவினர் பார்க்கச் சொன்ன சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரம் நாடாரைத் தேடிச் சென்றார். அவரிடம், 'நான் ஒரு மளிகைக் கடை (இப்போதைய சரவணா ஸ்டோர்ஸ்) வைக்கலாம்னு  இருக்கேன். அதுக்கு நீங்க உதவி பண்ணணும்' என்று கேட்டார். அதற்கு சோமசுந்தரம் நாடார் என்ன சொன்னார் தெரியுமா? அது, அடுத்த அத்தியாயத்தில்....

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

“அங்காடிகளுக்கு மத்தியில் மிச்சமிருக்கும் ஒரு வீடு!”அங்காடித் தெருவின் கதை! மினி தொடர்

 
 

அங்காடித் தெரு

கோடிக்கணக்கான பாதங்கள் நடந்துசென்ற ரங்கநாதன் தெரு, இரவு 11 மணிக்கு மேல் சப்தங்கள் அற்று ஓய்கிறது; மாம்பலம் ரயில் நிலையத்தில் எப்போதாவது கடந்துசெல்லும் ரயில்களின் சத்தம் கேட்கிறது; பணிக்குச் சென்று தாமதமாக திரும்பிய ஒரு சிலர், ரங்கநாதன் தெரு வழியே பைக்குகளைச் சீறிவிட்டுச் செல்கிறார்கள்; எப்போதாவது ஓர் ஆட்டோ ஓடும் சத்தம் கேட்கிறது;

மெள்ள, மெள்ள விழிக்கும் தெரு

விடியற்காலை 4 மணிக்கு மேல் மின்சார ரயில்களின் சத்தம் 10 நிமிடத்துக்கு ஒருமுறை கேட்கிறது; மெள்ளமெள்ள விழித்து எழுகிறது ரங்கநாதன் தெரு; குப்பை லாரி வந்து செல்கிறது; காலையில் பணிக்குச் செல்பவர்கள், சுதந்திரமாகத் தங்களின் வாகனங்ளுடன் ரங்கநாதன் தெருவைக் கடந்துசெல்கின்றனர். காலை 8 மணிக்குமேல் சீருடை அணிந்த ஜவுளிக்கடைகளின் ஊழியர்கள், கும்பல்கும்பலாகக் கடைகள் திறப்பதற்காகக் காத்திருக்கின்றனர். 

ரங்கநாதன் தெரு

9 மணிக்குமேல் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பலர் ரங்கநாதன் தெரு வழியே தி.நகர் நோக்கி விரைகின்றனர். அங்காடித் தெரு மெள்ளமெள்ளச் சுறுசுறுப்பாகிறது. வியாபார அழைப்புக் குரல்கள் கதம்பமாகக் காதுகளில் கேட்க ஆரம்பிக்கின்றன. மதியம், கடைகளின் ஊழியர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். மாலை நெருங்கநெருங்க கொத்துக்கொத்தாக மக்கள் கூட்டம் கடந்துசெல்கிறது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கும் வழியிலேயே கும்பல்கும்பலாக அங்காடித் தெருவுக்குள் நுழைகிறார்கள்; திருமணத்துக்காக மொத்தமாக ஆடைகள் எடுப்பவர்கள், நகைகள் எடுப்பவர்கள் என வருகிறார்கள்; வெளியூர்க்காரர்கள் வருகிறார்கள். ஜாலியான ஷாப்பிங் அனுபவத்துக்காக இளைஞர்கள் கும்பல் வருகிறது. ரங்கநாதன் தெருவைப் பார்க்கவேண்டும் என்று முதன்முறையாக இங்கு வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரே ஒரு வீடு

ஒரே ஒரு வீடு! 

இப்படியாக இரவு 11 மணிவரை ரங்கநாதன் தெரு, ஆடை அலங்கார வணிகத்தின் நுகர்வு மையமாகத் திகழ்கிறது. ஒரு புள்ளி விபரத்தின்படி ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மையங்களில் ஒன்றாக இந்தத் தெரு இருக்கிறது. இவ்வளவு பிஸியான ரங்கநாதன் தெருவில் ஒரே ஒரு வீடு இருக்கிறது என்று கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

ஆம், ரங்கநாதன் தெருவில், சரவணா செல்வரத்தினம் கடைக்கு எதிரே இருக்கும் 19-ஆம் எண் வீடுதான் அது. அப்படி ஒரு வீடு இருப்பதே தெரியாமல், வீட்டின் காம்பவுண்ட் சுவரில் எல்லாம் துணிகளைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இரும்புக் கேட்டிலும் சுடிதார், நைட்டிகளைத் தொங்கவிட்டு வியாபாரம் செய்கிறார்கள். நாம் அந்த வீட்டைக் கண்டுபிடித்து எப்படிப் போவது என்று விழித்துக்கொண்டிருந்தபோது துணிகளுக்கு இடையே இரும்புக் கேட் இருப்பது தெரிந்தது. கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே போனால், வீட்டின் முன்னே விஸ்தாரமாக உள்ள இடத்தில் சில இளைஞர்கள் ஜாலியாகக் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அங்காடி தெரு வீடு

கோயில் போன்ற வீடு! 

அவர்களிடம் பேசினோம். "இந்த வீடு எங்க பெரியப்பாவோட சொந்தக்காரங்களுடையது. இங்கு வசிப்பதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது. தெருவில் பரபரப்பு இருந்தாலும், வீட்டுக்குள் எதுவும் கேட்காது" என்கிறார் லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும் வருண்.

வருணின் பெரியப்பா சுரேஷ், "இது, எங்க மாமா பக்தவத்சலம் வீடு. அவர், இப்போ அமெரிக்காவுல இருக்குறார். அவரோட பாரம்பர்ய வீடு இது. அதனால, இந்த வீட்டை அவர் கோயிலாகத்தான் நினைக்கிறார். இந்தக் கோயிலை யாருக்கும் விற்றுவிடக் கூடாது என்பதுதான் அவரோட ஒரே முடிவு. மாமாவின் குடும்பம் இங்கிருந்தபோது, பல ஜவுளிக்கடைகளின் ஓனர்களும் செல்வரத்தினமும் மாமாவுடைய அம்மாகிட்ட வந்து... வீட்டை விலைக்குக் கேட்டனர். 'நீங்க இந்த வீட்டை எங்களுக்குக் கொடுத்தா ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்களுக்கு வேலை கொடுப்போம்' என்றெல்லாம் பேசிப் பார்த்துள்ளனர். ஆனா, என் மாமாவின் அம்மா, 'வீட்டை விக்க முடியாது' என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார். என் மாமாவுக்கும் இந்த வீட்டை யாருக்கும் விக்கும் எண்ணமில்லை. 1988-இல் இருந்து இந்த வீட்டுல இருக்கேன். அப்போ, இங்கு 'பட்' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இருந்துச்சு. மேன்ஷன் ஒண்ணும் இருந்துச்சு. அதிகளவு கடைகள் இல்லை. இப்போ, இவ்வளவு பரபரப்பான தெருவுக்கு மத்தியில் குடியிருப்பது என்பது ஒரு கண்காட்சிக்கு நடுவே குடியிருப்பதுபோல இருக்குது. நம்மைச்சுத்தி எல்லாம் சுவாரஸ்யமான கண்காட்சி நடக்கும்போது நாம மட்டும் ஒரு வீட்டுல உட்கார்ந்து அதை அமைதியா வேடிக்கை பார்ப்பது ஓர் அலாதியான அனுபவம். அப்படியான ஓர் அனுபவத்தைக் கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து அனுபவிச்சுகிட்டு வர்றோம்.

ரங்கநாதன் வீடு

ஆம்புலன்ஸ் வரமுடியாது!

இதெல்லாம் ஓர் அனுபவம்னாலும், வயசான என் அம்மாவும் இங்கேதான் இருக்கிறார். அவருக்கு உடல்நலம் இல்லாம போகும்போது ஆம்புலன்ஸை வரவழைப்பது அல்லது டாக்சி வரவழைப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்குது. காருல அழைச்சிக்கிட்டுப் போகணும் என்றாலும் முதல்ல தி.நகர் பஸ்ஸ்டாண்டுக்குத்தான் போகணும். இதுக்காகச் சில தெருக்களைக் கடக்கணும். இது ஒண்ணுதான் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்குது. மத்தபடி ரங்கநாதன் தெருவுல இருப்பது ஒரு புதுவித அனுபவமா இருக்குது. வீட்டுக்கு அருகிலேயே எல்லாப் பொருள்களும் கிடைக்குது. பொருள்களை வாங்குவதற்காக அலைய வேண்டியதில்லை" என்றார் மிகவும் மனநிம்மதியுடன்.

ரங்கநாதன் தெருவில் நீண்டகாலமாக லிஃப்கோ புத்தக நிறுவனம் இருந்தது. இப்போது அந்த நிறுவனம் ராமநாதன் தெருவுக்கு இடம்பெயர்ந்து இருக்கிறது. புடைவைகள், பாத்திரங்கள் இவைகளுக்கு மத்தியில் ஒரு புத்தக நிறுவனம் எப்படித் தொடங்கப்பட்டது? அது, அடுத்த அத்தியாயத்தில்....

http://www.vikatan.com/news/coverstory/92510-lone-house-in-ranganathan-street-story-of-t-nagar-part-5.html

Link to comment
Share on other sites

இதற்காகதான் எங்கள் இடத்தை சரவணா ஸ்டோர்ஸிடம் விற்றோம்! அங்காடித் தெருவின் கதை! பகுதி 6

 
 

அங்காடித் தெரு

ங்கநாதன் தெரு, அதிக வீடுகளுடனும் ஒரு சில கடைகளுடனும் இருந்தது என்று கடந்த அத்தியாயங்களில் கூறி இருந்தேன். அந்த ஒரு சிலகடைகளில் முக்கியக் கடையாக இருந்தது லிஃப்கோ புத்தகக் கடை. இப்போதைய விளம்பர யுகத்தில்  ரங்கநாதன் தெரு என்றால், பல்வேறு பிராண்ட்களின் பெயர்களில் உள்ள ஜவுளிக் கடைகளின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.  
ஆனால், அந்தக் காலத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல், ரங்கநாதன் தெரு என்றால் லிஃப்கோதான் என்ற அடையாளம் அந்தக் காலத்தைய மக்களிடம் இருந்தது. கடலூரைச் சேர்ந்த வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவர் சென்னைக்கு வந்தபோது, முதன் முதலாக 'லிட்டில் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு ஆங்கில இலக்கண நோட்ஸ்களை வெளியிட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம் லிஃப்கோ என்று பெயர் மாற்றம் பெற்றது.

ரங்கநாதன் தெரு

ஓர் அனா விலை

1953-ம் ஆண்டு ரங்கநாதன் தெருவுக்கு லிஃப்கோ இடம் பெயர்ந்தது. இது குறித்து லிஃப்கோ உரிமையாளர் வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மாவின் மூன்றாவது மகன் வீரராகவனிடம் பேசினோம். "இப்போது சரவணா ஸ்டோர் இருந்த இடத்தில்தான் லிஃப்கோ இருந்தது. என் தந்தை எஸ்.எஸ்.எல்.சி- படிப்புக்கான கைடுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஓர் அனா விலையில்  ஆங்கிலக் கைடுகள் வெளியிடப்பட்டன. தமிழில் 'கோனார்' போல, எங்களது ஆங்கில நோட்ஸ் பாப்புலர் ஆக இருந்தது. அப்போது ரங்கநாதன் தெருவில் முக்கியமான கடையாக எங்கள் கடை இருந்தது. கடையின் ஒரு பகுதியில்தான் எங்கள் வீடும் இருந்தது.

1952-ல் இருந்து ஆங்கில டிக்சனரி வெளியிட்டோம். டிக்சனரிக்கு பெரும் அளவில் வரவேற்பு இருந்தது. இப்போது சிறிய அளவில் இருந்து பெரிய டிக்சனரி வரை வெளியிட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் ஆன்மிகப் புத்தகங்களும் நாங்கள் வெளியிட்டோம். டிக்சனரி, ஆன்மிகப் புத்தகங்கள் என எங்கள் பதிப்பகத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

லிஃப்கோஅப்போது மாம்பலம் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் வருபவர்கள், எங்கள் தெரு (ரங்கநாதன் தெரு) வழியாகச் சென்று, (அப்போது தி.நகர் பேருந்து நிலையம் இல்லை) உஸ்மான் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நகரப் பேருந்துகளில் ஏறிச் செல்வார்கள். உஸ்மான் ரோட்டில் இருந்து பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என்று நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல பேருந்துகள் இருக்கும். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த தூரத்தில் பேருந்து நிலையம் இருந்ததால்தான் இந்தத் தெருவை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தினர். ரங்கநாதன் தெருவழியே மக்கள் அதிக அளவு செல்லத் தொடங்கியதால்தான், நாளுக்கு நாள் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது எங்கள் கடையைத் தவிர அம்பிகா அப்பளம் கடை ஒன்றும் இருந்தது. ஆர்.ஆர்.ஸ்டோர் என்ற பெயரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டும் இருந்தது.
எங்களைப் பார்த்துத்தான், தி.நகரில் பல்வேறு நிறுவனங்களின் பதிப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நாளடைவில் மக்கள் நெருக்கம் அதிகமானதால், எங்களின் வீட்டை காலி செய்துவிட்டோம். வீட்டை சரவணா ஸ்டோர் நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம். பின்னர் கடையை மட்டும் தொடர்ந்து நடத்திவந்தோம்.  

நெருக்கடி அதிகம்

நாளடைவில் ரங்கநாதன் தெரு மிகவும் நெரிசல் ஆகிவிட்டது. வணிக மயமாகவும், நெருக்கடியாகவும் ஆகிவிட்டது. புத்தகம் வாங்க வருபவர்கள், எப்போதும் அமைதியான ஒரு சூழலைத்தான் விரும்புவார்கள். நெருக்கடி அதிகமானதால், எங்கள் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. தெருவில் இருந்த நெரிசலைப் பார்த்து பலர் எங்கள் கடைக்கு வரத் தயங்கினர். எனவே, பின்னர் கடையையும் சரவணா ஸ்டோர் நிறுவனத்துக்கே கொடுத்துவிட்டு, சி.ஐ.டி நகர் வந்துவிட்டோம். பின்னர், ரங்கநாதன் தெருவின் கடைசியில் சிறிய கடை மட்டும் வைத்திருந்தோம். அந்தக் கடை இப்போது இருக்கும் ராமநாதன் தெருவுக்கு மாற்றப்பட்டது. லிஃப்கோ நிறுவனத்தை இப்போது மூன்றாவது தலைமுறையினர் நடத்தி வருகின்றனர். அடுத்து பல தலைமுறைகளைத் தாண்டியும் எங்கள் பயணம் தொடரும். எங்களின் தொடக்கம் ரங்கநாதன் தெரு என்பதால், அந்தத் தெருவை மறக்க முடியாது" என்றார். தியாகராய நகரின் பழைய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது தி.நகர் சோஷியல் கிளப்... அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/coverstory/92790-this-is-why-we-sold-our-land-to-saravana-stores-story-of-t-nagar-part-6.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா டென்னிஸ் விளையாடிய தி.நகர் கிளப்! - அங்காடித் தெருவின் கதை! பகுதி 7

 
 

Angadi_thiru_final_18452_18063_09138.jpg

ய்வுக்குப் பின்னர் உழைப்பு என்ற விஷயத்தில் அமெரிக்கர்கள், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்களை அடித்துக்கொள்ள முடியாது. அதே போல அதிகம் உழைப்பு, கொஞ்சம் ஓய்வு அல்லது ஓய்வே இல்லாமல் உழைப்பு என்பதில் தமிழர்களை அடித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் இன்றளவும் தமிழர்கள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளிலும், பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்பெருமையை ஒதுக்கி வைத்து விட்டு விஷயத்துக்கு வருகிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில் கொஞ்சம் உழைப்பு, நிறைய ஓய்வு என்பதுதான் வழக்கமாக இருந்தது. எனவே, மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் பொழுது போக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொழுதுபோக்குகளுக்காகக் கிளப்களை உருவாக்கினர். அப்படி சென்னையில் உருவாக்கப்பட்டதுதான் அடையாறு போட் கிளப், அண்ணா சாலையிலுள்ள காஸ்மோ பாலிடன் கிளப் ஆகியவை. இந்த கிளப்களை எல்லாம் பார்த்த சென்னை வாசிகள், நமக்கு மட்டுமான ஒரு கிளப் தொடங்க வேண்டும் என்று நினைத்தனர். தி.நகர் புதிய நகராக உருவாக்கப்பட்டபோது, பிராமணர்கள் தங்களுக்கான ஒரு கிளப்  உருவாக்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக ராஜாஜியைச் சந்தித்து நிலம் வேண்டும் என்று கேட்டனர். அதன்படி ராஜாஜி உத்தரவின் பேரில், தி நகர் சோஷியல் கிளப்புக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்துக்கு முத்தையா செட்டியார் பணம் கொடுத்தார்.

தி நகர்

 1 ஏக்கர் நிலத்தில்...

இன்றளவும் வெங்கட்நாராயணா சாலையில் தி நகர் பகுதியின் வரலாற்றுச் சின்னமாக சோஷியல் கிளப் இருந்து வருகிறது. அந்த காலத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்கள் தி.நகரில்தான் வசித்து வந்தனர். எம்.ஜி.ஆர் காலத்துக்கு முன்பே ராஜகுமாரி, தியாகராஜ பாகவதர் ஆகியோர் தி.நகரில் வசித்து வந்தனர். எம்.ஜி.ஆர் தி.நகரில்தான் அலுவலகம் வைத்திருந்தார். ஜெயலலிதா தி நகர் பகுதியில்தான் தமது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார். சந்தியாவின் சகோதரி வித்யாவதியும் அப்போது சினிமாவில் நடித்து வந்தார். அவர் தி.நகர் சோஷியல் கிளப்பில் உறுப்பினராக இருந்தார்.

தி.நகர் சோஷியல் கிளப்புக்கு மிக, மிக அருகில்தான் ஜெயலலிதாவின் வீடு இருக்கிறது. எனவே ஓய்வு நேரங்களில் சித்தியுடன் ஜெயலலிதாவும் கிளப்புக்குச் செல்வார். சித்தியுடன் டென்னிஸ் விளையாடுவது அவரது வழக்கமாக இருந்தது. கண்ணதாசன் தி.நகரில் இருந்த போதிலும் அவர் கிளப்பின் உறுப்பினர் ஆகவில்லை. ஆனால், வி.கே.ராமசாமி உறுப்பினராக இருந்தார். எனவே அவருடன், கண்ணதாசன் அடிக்கடி கிளப்புக்கு வருவார். பஞ்சு அருணாசலம் போன்றவர்களும் அடிக்கடி தி.நகர் கிளப்புக்கு வந்து செல்வார். கதை விவாதங்களிலும் ஈடுபடுவார்.

காஃபியின் ருசி

தி.நகர் சோஷியல் கிளப்பின் தலைவர் இன்னோரா அசோக்கிடம் பேசினோம். "தி.நகர் கிளப்புக்கு அரசால் ஒதுக்கப்பட்ட 1 ஏக்கர் நிலத்துக்கு முத்தையா செட்டியார் அப்போது 5018 ரூபாய் பணம் கொடுத்தார்.1939-ம் ஆண்டு சோஷியல் கிளப்பை ராஜாஜி திறந்து வைத்தார். தொடர்ந்து 9 ஆண்டுகள் முத்தையா செட்டியார் கிளப்பின் தலைவராக இருந்தார்.

தி.நகர் மற்றும் அதனைச் சுற்றி வசித்து வந்த சினிமா பிரபலங்கள் எல்லோரும் இங்கு உறுப்பினர்களாக இருந்தனர். ஜெமினி கணேசன், நாகேஷ் போன்றவர்கள் ஷூட்டிங் இல்லாத சமயங்களில் இங்கு வந்து விடுவார்கள். அந்த சமயத்தில் இங்கு ஒரு கேன்டீன் இருந்தது. அதை செட்டி கேன்டீன் என்று சொல்வார்கள். கேன்டீனில் விற்கப்படும் காஃபியின் ருசிக்காகவே இங்கு பலர் வருவார்கள். இப்போது எங்கள் கிளப் கேன்டீனில் சமைக்கப்படும் பிரியாணி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் ருசிக்காவே பல பிரபலங்கள் மதிய உணவுக்காக இங்கு வருவார்கள்

போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனப் பலர் இங்கு தொடர்ந்து வருகின்றனர். இப்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் இங்கு தொடர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பிரைவசி கருதி அவர்கள் பற்றிய விவரங்களை நாங்கள் வெளியிடுவதில்லை" என்றார்.

சமுதாயத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கான பொழுது போக்கு இடமாக தி.நகர் சோஷியல் கிளப் இருக்கிறது. சோஷியல் கிளப் இருக்கும் அதே வெங்கட்நாராயணா சாலையின் இன்னொரு கோடியில் எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒரு அமைப்புத் தொடங்கப்பட்டது. அங்கு தொழிற்பயிற்சி பெறும் பலர் வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்துள்ளனர். மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலில் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

http://www.vikatan.com/news/coverstory/93159-once-jayalalithaa-played-tennis-in-t-nagar-club-story-of-t-nagar-part-7.html

Link to comment
Share on other sites

புனே உடன்படிக்கைக்கும் தி நகர் பகுதிக்கும் என்ன தொடர்பு? அங்காடித் தெருவின் கதை - 8

 

அங்காடித் தெரு

தி நகர், ரங்கநாதன் தெருவையும் விட்டு, ஒரு மாற்றத்துக்காக புனே வரை சென்று வரலாம். வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படும் புனே ஒப்பந்தத்துக்கும் தி.நகருக்கும் நெருக்கமான ஒரு முக்கியத் தொடர்பிருக்கிறது. 

ஹரிஜன் சேவா சங்கம்

தலித்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், அந்தத் தொகுதியில் போட்டியிடும் தலித் வேட்பாளரை, தொகுதியில் உள்ள தலித்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த நாளில் அம்பேத்கர், ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

1932-ம் ஆண்டு லண்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில், இது குறித்து விவாதிக்கப்பட்டது. அம்பேத்கரின் கோரிக்கையை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இதற்கு மகாத்மா காந்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தலித்களுக்குத் தனித் தொகுதி இருக்கலாம். ஆனால், அந்தத் தொகுதியில் அனைத்து பிரிவினரும் ஓட்டுப்போட்டுத்தான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வழி செய்யவேண்டும் என்று  வலியுறுத்தினார். கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப்  போராட்டம் தொடங்கினார் காந்தி. எனவே, கைது செய்யப்பட்ட அவர், புனே எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மகாத்மாவின் யோசனையை அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக புனே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர்தான் மகாத்மா காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் ஹரிஜன் சேவா சங்கம் தொடங்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படிதான், தமிழ்நாட்டில் சென்னை கோடம்பாக்கத்தில் (இன்றைக்கு மீனாட்சி கல்லூரி இருக்கும் இடத்தில்) ஹரிஜன் சேவா சங்கம் தொடங்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் சார்பில் தொழிற்கல்வியுடன் கூடிய படிப்புகள் வழங்கப்பட்டன.பின்னர் இந்தச் சங்கம் தி.நகருக்கு இடம் பெயர்ந்தது.

தி நகர் தக்கர் பாபா வித்யாலயா

கரண்டி பிடித்த காந்தி

தி. நகர் வெங்கட்நாராயணா தெருவிலுள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தை ஹரிஜன் சேவாசங்கம் விலை கொடுத்து வாங்கியது. தொழிற் பயிற்சி நிலையத்துக்குப் பெருமளவு நன்கொடை கொடுக்க விரும்புவதாகவும், தமது பெயரை வைக்கவேண்டும் என்றும் பிரபல தொழிலதிபர் கேட்டுக்கொண்டார். ஆனால், காந்தி அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் தக்கர் பாபா என்பவரது பெயரை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்றைக்கு தி. நகர் பகுதியின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தக்கர் பாபா வித்யாலயா அமைக்கப்பட்டதன் வரலாறு இதுதான். தக்கர் பாபா வித்யாலயாவின் செயலாளர் பி.மாருதியிடம் பேசினோம். "காந்தி 1946-ம் ஆண்டு தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக சென்னை வந்தார். அப்போதுதான் (1946-ம் ஆண்டு  பிப்ரவரி 1-ம் தேதி )தக்கர் பாபா வித்யாலயாவுக்குக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பயன்படுத்திய கரண்டியை இன்னும் நாங்கள் பத்திரமாக வைத்திருக்கிறோம்.

காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தொழிற்கல்வி பயின்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைக்கு அனைத்துப் பிரிவு மாணவர்களும் இங்கு தொழிற் கல்வி பயின்று வருகின்றனர். அறிவு, திறன் ஆகியவற்றுக்கான கல்வி மட்டுமன்றி இன்றைய சமூகத்துக்குத் தேவையான நீதிபோதனைகளும் கற்றுத்தரப்படுகின்றன. தி.நகரில் உள்ள இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி, வணிகக் கட்டடங்கள் கட்டவேண்டும் என்று பல்வேறு தரப்பில் எங்களுக்கு அழுத்தங்கள் வந்தன. ஆனால், அந்த அழுத்தங்களுக்கு நாங்கள் பலியாகவில்லை. காந்தியின் கனவைத் தொடரவே விரும்புகிறோம்" என்றார்.

மதுரையைச் சேர்ந்த பிரபல சுதந்திரப் போராட்ட தியாகி வைத்தியநாத ஐயரின் மாப்பிள்ளை தாணு நாதன் என்பவர்தான், தக்கர் பாபா வித்யாலயாவின் செயலாளராக இருந்தவர். இப்போது அவர் கெளரவ ஆலோசகராக இருக்கிறார். தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் தங்கி இருக்கிறார். 94 வயதாகும் இவரைச் சந்தித்தோம். "நான் ரயில்வே துறையில் மதுரையில் பணியாற்றிய சமயத்தில் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பது குறித்து பெரும் சர்ச்சை இருந்தது. அதுவரை கருத்துத் தெரிவித்த காந்தி, "தாழ்த்தப்பட்டவர்களைக் கோயில்களுக்குள் அனுமதிக்கும் வரை நானும் கோயில்களுக்குள் நுழைய மாட்டேன்" என்றும் சொல்லி வந்தார். அப்போது என் மாமனார் வைத்தியநாத ஐயர், காந்தியின் கோரிக்கைபடி தலித்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். மேலும் இதை மகாத்மா காந்தியிடம் சொன்னார். அதன் பின்னர், தமிழகம் வந்த காந்தி முதலில் சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் வருகை தந்தார். காந்தியின் வழியைப் பின்பற்றி நான் ரயில்வேயிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1991-ம் ஆண்டிலிருந்து 2014- வரை தக்கர் பாபா வித்யாலயாவின் செயலாளராக இருந்தேன்" என்றார்.

பிரதமரை உருவாக்கும் கிங் மேக்கராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். அவர் சென்னையில் இருந்த காலத்தில் தி நகர் பகுதியில் வசித்து வந்தார். தி.நகருக்கும், அவருக்குமான தொடர்புகள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/93424-story-of-t-nagar-part-8.html

Link to comment
Share on other sites

காமராஜர் வசித்த தி.நகர் வீடு! அங்காடித் தெருவின் கதை பகுதி-9

 

அங்காடித் தெரு

ருமானத்துக்கு அதிகமாகச் சொத்து, வீடுகள் வாங்கிக் குவித்ததாகக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முதல்வர் வாழ்ந்ததும் தமிழகம்தான். இதே தமிழகத்தில், சென்னை தி.நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் வீடு, வீட்டு உரிமையாளர் வாங்கியிருந்த கடனுக்கு ஈடாக ஏலத்துக்கு வந்தது. காமராஜர் இறக்கும்வரை வாடகை வீட்டில்தான் வசித்துவந்தார். 

தி.நகரில் காங்கிரஸ் பிரமுகர் சத்தியமூர்த்தி வசித்துவந்தார். அவர், தமது வீட்டுக்குவந்து தங்கும்படி காமராஜரைப் பலமுறை அழைத்து இருக்கிறார். ஆனால், காமராஜர் சத்தியமூர்த்தியைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பிவிடுவார்; வீட்டில் தங்கமாட்டார்.

வீட்டு வாடகை ரூ.160

'காமராஜர் ஒரு சகாப்தம்' என்ற பெயரில் காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.கோபண்ணா ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், காமராஜர் வசித்த தியாகராய நகர் திருமலைப்பிள்ளை வீடு குறித்து எழுதியிருக்கும் தகவல்களைப் பார்க்கலாம். 

காமராஜர் தொடக்கக் காலத்தில் சென்னை வந்தபோது, பெரியமேடு பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எவரெஸ்ட் ஹோட்டலில் தங்குவார். அண்ணா சாலை அருகில் உள்ள நரசிங்கபுரம் தெருவில், 'எக்ஸ்பிரஸ்' நாளிதழ் உரிமையாளர் ராம்நாத் கோயங்காவுக்குச் சொந்தமான கட்டடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் செயல்பட்டது. அப்போது, அங்கேயே தங்கிக்கொண்டு காமராஜர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். 

1946-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, தமது விருதுநகர் நண்பர் நடராஜன் சென்னையில் தங்கும், தி.நகர் திருமலைப்பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் காமராஜரும் தங்க ஆரம்பித்தார். நடராஜன் வற்புறுத்தியதால் அந்த வீட்டில் காமராஜர் தங்கினார். காமராஜருக்கு உதவி செய்ய 1948-ல் வைரவனை வேலைக்கு அமர்த்தினார் நடராஜன். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே திருமலைப்பிள்ளை தெரு வீட்டில் காமராஜர் தங்கி இருப்பார். மீதி நாள்கள் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவிடுவார். 

காமராஜர் தி நகர் வீடு

1954-ல் முதல்வர் ஆனதும், காமராஜருக்கு அரசு சார்பில் தனி வீடு ஒதுக்க ஏற்பாடு நடைபெற்றது. ஆனால், அப்போது அரசு வீடுகள் சென்னையின் மையப்பகுதியைவிட்டு ஒதுக்குப்புறமாக இருந்தன. எனவே, தம்மைப் பார்க்க வருபவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்று கருதி, திருமலைப்பிள்ளை தெரு வீட்டிலேயே தங்க முடிவு செய்தார். அந்த வீட்டுக்கு, வாடகையாக 160  ரூபாய் கொடுத்து வந்தார். 

ஏலத்துக்கு வந்த வீடு

இந்த வீட்டுக்கும், காமராஜர் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் உள்ள 9-ம் நம்பர் வீட்டுக்கும் ஒரே உரிமையாளர். வீட்டு உரிமையாளர் 9-ம் எண் வீட்டுக்கு 800 ரூபாய் வாடகை வாங்கினார். எனவே, 'காமராஜர் வசிக்கும் வீட்டுக்கும் கூடுதல் வாடகை வேண்டும்' என்று கேட்டிருக்கிறார். எனினும், அரசு வீட்டு வாடகைப்படி 250 ரூபாயை மட்டும் காமராஜர் வாடகையாகக் கொடுத்துவந்தார். 

வீட்டின் சொந்தக்காரர் 1956-ம் ஆண்டு, 60 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டை விற்கத் தயாராக இருந்தார். ஆனால், 'நமக்கு எதுக்கு வீடு' என்று கருதி, அதை காமராஜர் வாங்க மறுத்துவிட்டார். 1962-ம் ஆண்டு காமராஜரின் 60-வது பிறந்த நாள் சமயத்தில், அந்த வீட்டை வாங்கி அவருக்குப் பரிசாகத் தர திருச்சி த.பா.ரெட்டியாரும் மற்றவர்களும் முயன்றுள்ளனர். இதுகுறித்துக் கேள்விப்பட்ட காமராஜர், ஆத்திரமடைந்து அவர்களைக் கடுமையாகக் கண்டித்ததோடு, திட்டிவிட்டார்.

இதற்கிடையே, வீட்டின் உரிமையாளர் கடனுக்கு ஈடாக வீட்டை அடகு வைத்திருந்ததால் வீடு ஏலத்துக்கு வந்தது. ஏல நோட்டீஸை ஒட்டவந்த அமீனா, இது காமராஜர் தங்கியிருக்கும் வீடு என்பதால், நோட்டீஸை ஒட்டாமல் சென்றுவிட்டார். 

1973-ல் வீடு ஏலம் விடப்படுவதைத் தடுக்க முடியவில்லை. எனவே, காமராஜர் தங்குவதற்கு பா.ராமச்சந்திரன், சி.ஆர்.ராமசாமி ஆகியோர் வேறு சில வீடுகளை வாடகைக்குப் பார்த்தார்கள். ஆனால், அந்த வீடுகள் ஏற்றவாறு அமையவில்லை. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஒரு சிறுவீடு கட்டிப் போய்விடலாம் என்று காமராஜர் நினைத்தார்.

தம் பெயரில் வீடு வாங்கினால், தமக்குப் பிறகு உறவினர்கள் உரிமைகொண்டாட வருவார்கள் என்பதால், வீடு வாங்குவதை அவர் விரும்பவில்லை. ஒருமுறை எம்.பி.தாமோதரன், காமராஜரிடம் தனியாகப் பேசியபோது, "2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் வீட்டை விலைக்கு வாங்கிவிடலாம். உங்கள் சம்மதம் தேவை" என்று கேட்டார். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு எல்லோரிடமும் பணம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், மாவட்டத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூல் செய்ய அனுமதி கொடுத்தார். "இந்த வீட்டை எனக்காக மட்டும் வாங்க நினைக்கவில்லை. எனக்குப் பின்னால் வீட்டின் ஒரு பகுதியில் வைரவன் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என காமராஜர் கூறினார்.

வீடு வாங்க அனுமதி

பிறகு, எம்.பி.தாமோதரன், பா.ராமச்சந்திரன், ஜி.கருப்பையா மூப்பனார், சேலம் என்.ராமசாமி உடையார், முருக.தனுஷ்கோடி ஆகியோரை உள்ளடக்கிய அறக்கட்டளையின் பேரில், திருமலைப்பிள்ளை தெரு வீட்டை வாங்குவது என்று காமராஜர் அனுமதியோடு முடிவு செய்யப்பட்டது.

முதல் தவணையாக ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாயை காமராஜரிடம், அப்போது தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஜி.கருப்பையா மூப்பனார் கொடுத்தார். வட நாட்டுக்காரரான பாப்பா லால் அந்த வீட்டை அடமானம் வாங்கியிருந்தார். எம்.பி தாமோதரன் முயற்சியால் ஒருமுறை, காமராஜருடன் தொலைபேசியில் பேசிய பாப்பா லால், பணம் பெற்றுக்கொள்ளாமல் வீட்டைக் கொடுப்பதாகக் கூறினார்.

ஆனால், அதை ஏற்க உறுதியாக காமராஜர் மறுத்துவிட்டார். அடமானத் தொகையை வட்டியோடு திருப்பிக் கட்டிவிடுவதாக கூறினார். இல்லையென்றால், வீடு வாங்கும் முயற்சியைக் கைவிட்டு விடும்படி கூறினார். வீட்டை விற்கும் உரிமைபெற்ற கோவிந்தராஜுலு நாயுடுவின் மகன் கிரிராஜ், அமெரிக்காவில் இருந்தார். அவர் வந்துதான் விற்பனைப் பத்திரத்தை பதிவுசெய்து தரமுடியும். அவர் இந்தியா திரும்ப காலதாமதம் ஆனது.

இதற்கிடையே, காமராஜர் மரணம் அடைந்துவிட்டார். வாடகை வீட்டில் வசித்த முதல்வர் என்ற பெயரை மட்டுமே காமராஜர் பெற முடிந்தது. காமராஜர் இறந்த பின்னர்தான், அந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் வகையில் தமிழக அரசே அந்த வீட்டை வாங்கியது. இப்போது அங்கு காமராஜர் நினைவு இல்லம் செயல்படுகிறது. 

தி.நகரின் மையப்பகுதியில் வீடு ஒன்றை வாங்கினார் அந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி. ஆனால், அந்தத் தெருவில் வசித்துவந்தவர்கள். நடிகர் வீட்டை வாங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

http://www.vikatan.com/news/coverstory/93636-house-where-kamarajar-dwelled-story-of-t-nagar-episode-9.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்புத் தெரிவித்த தி.நகர்வாசிகள்! அங்காடித் தெருவின் கதை- 10

 

தி நகர்

தியாகராய நகர், அனைத்து வசதிகளும் கொண்ட முக்கியப் பகுதியாக இன்றளவும் இருந்துவருகிறது. கோடம்பாக்கத்துக்கு அருகில் இருக்கும் நகர் என்பதால், பல்வேறு திரைப் பிரபலங்கள் தி.நகரில் குடியிருப்பதற்குக் காரணமாக இருந்தது.

குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு

சென்னைப் புறநகராக இருந்த ராமாபுரத்தில், எம்.ஜி.ஆர் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றைக் கட்டி அங்கேயே குடியிருந்தார். அரசியல்ரீதியிலும், சினிமாத் துறையிலும் பெரும் உச்சத்தைத் தொட்ட எம்.ஜி.ஆர்., 1970-களில் 'எம்.ஜி.ஆர் புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் படம் தயாரிக்கத் திட்டமிட்டார். இதற்காக ஓர் அலுவலகம் திறக்க வேண்டும் என்று விரும்பினார்.

தியாகராய நகரில் அமைதியான இடத்தில் ஓர் இடம் கிடைக்குமா என்று பலரிடமும் கேட்டு வந்தார். அப்போது, 'மதுரை வீரன்' படத்தின் தயாரிப்பாளர் லேனா செட்டியார் தி.நகரில் இருந்தார். அவரிடமும் எம்.ஜி.ஆர் சொல்லிவைத்தார். தாம் குடியிருந்த தெருவுக்கு அருகில் ஆற்காடு சாலையில் சேட் ஒருவருக்குச் சொந்தமாக வீடு இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் அவர் சொன்னார். எம்.ஜி.ஆர் அந்த வீட்டைப் பார்த்தார். அவருக்குப் பிடித்துவிட்டது. அதை வாங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். அப்போது ஆற்காடு தெருவில் இருந்த குடியிருப்புவாசிகள் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் வீடு வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

''எம்.ஜி.ஆர் இங்கு வீடு வாங்கினால், தங்களுடைய அமைதி கெட்டுவிடும்'' என்று அவர்கள் கருதினர். ''எம்.ஜி.ஆரைப் பார்க்கத் தினந்தோறும் ரசிகர்கள் வருவார்கள்; கட்சித் தொண்டர்கள் வருவார்கள். இதனால், இந்தப் பகுதியின் அமைதி கெட்டுவிடும்'' என்று கருதி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பகைக்க வேண்டாம்

எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் சிலரைக் கூப்பிட்டு எம்.ஜி.ஆர் பேசினார். எம்.ஜி.ஆர் அவர்களிடம் பேசிய பிறகு, அவர்கள் எதிர்ப்புக் குறைந்தது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு சேட்டிடம் இருந்து எம்.ஜி.ஆர் வீட்டை வாங்கினார். இரண்டு கிரவுண்ட் இடமுள்ள அந்த வீட்டில், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் இரண்டாவது மாடியில் எம்.ஜி.ஆருக்குத் தனி அறை கட்டப்பட்டது. பெரிய கேட் போடப்பட்டது.

எம்.ஜி.ஆர் தி நகர் வீடு

வீட்டுக்குக் குடிபோனதும், அந்தத் தெருவில் உள்ளவர்கள் பற்றித் தம் உதவியாளர்களிடம் விசாரித்தார். நாம் இங்கிருக்கும் காலங்களில் நமக்கு அவர்களால் தொந்தரவு ஏற்படுமோ என்றும் அவர் கருதினார். அந்தச் சமயத்தில் ஆற்காடு தெருவில் இருந்தவர்களில் பலர் எம்.ஜி.ஆர் மீது அவ்வளவாக அபிமானம் இல்லாதவர்கள். இதுகுறித்து உதவியாளர்கள் சொன்னதும், "தெருவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. நாம் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்" என்று அவர்களிடம் எம்.ஜி.ஆர் சொன்னார்.

துண்டுகளை திருடியவன்
 
தி.நகர் வீட்டில் ஒருமுறை, எம்.ஜி.ஆர் பயன்படுத்தும் துண்டுகளைத் துவைத்து வீட்டின் பின்புறம் காயப்போட்டிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் திருடன் ஒருவன் பின்வாசல் வழியே வந்து துண்டுகளை எடுத்துப் போய்விட்டான். இரவில் ரோந்து சென்ற போலீஸாரிடம் அவன் சிக்கிக்கொண்டான். போலீஸார் அவனிடம் விசாரித்தபோது எம்.ஜி.ஆர் வீட்டில் துண்டுகளைத் திருடி வந்ததாகக் கூறினான். பின்னர், இதுகுறித்து எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ''அந்தத் துண்டுகளைத் திரும்ப வாங்கவேண்டாம்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். இந்தத் தகவல் போலீஸ் அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது.
 
அவருடைய, பல முக்கியமான அரசியல் திருப்பங்களுக்குக் காரணமாகத் தி.நகர் வீடு இருந்தது. கட்சி தொடங்கும்போது ராயப்பேட்டையில் முறைப்படி கட்சி அலுவலகம் திறப்பதற்கு முன்பு, தி.நகர் வீடுதான் அ.தி.மு.க அலுவலகமாகச் செயல்பட்டது. அவ்வை சண்முகம் சாலையில் கட்சித் தலைமை அலுவலகம் திறக்கப்பட்ட பிறகுகூட, முக்கியமான கட்சிப் பிரச்னைகள் பற்றித் தி.நகர் அலுவலகத்தில்தான் எம்.ஜி.ஆர் விவாதிப்பார்.

உள்கட்சிப் பிரச்னைகள் தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசுவதும் இங்குதான் நடக்கும். முதலமைச்சர் ஆக இருந்தபோது, மதிய ஓய்வுக்காக ராமாபுரம் செல்வதற்குப் பதில், தி.நகருக்குச் செல்வார். ஆனால், இரவு எவ்வளவு நேரமானாலும் ராமாபுரம் சென்றுவிடுவார். இரவு எக்காரணம் கொண்டு தி.நகர் வீட்டில் தங்கமாட்டார்.

சில நேரம் சந்திக்க விருப்பம் இல்லாதவர்கள் எம்.ஜி.ஆரைத் தேடிவந்து தொந்தரவு செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, வீட்டைவிட்டு வெளியே வருவதற்காக தி.நகர் வீட்டில் மாற்று வழியும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்று சொல்கிறார்கள். எம்.ஜி.ஆரின் தியாகராய நகர் வீடு இப்போது எம்.ஜி.ஆரின் நினைவு இல்லமாகப் பராமரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் மற்ற சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் தி.நகர் நினைவு இல்லம் பராமரிக்கப்படுகிறது.
 
தியாகராய நகரில் வசித்துவந்த இன்னொருவரும் தமிழகத்தின் முதல்வர் ஆனார். அவர் வசித்துவந்த தி.நகர் வீடு பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/93888-t-nagar-residents-oppose-mgr-story-of-t-nagar---10.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா சைக்கிள் ஓட்டிப் பழகிய தி நகர் வீதிகள்! அங்காடித் தெருவின் கதை பகுதி 11

 

அங்காடி தெரு

ஜெயலலிதா தி நகர் வீடுசென்னை தியாகராய நகர் பகுதியில் தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த சிலர் குடியிருந்த பெருமை உண்டு. அவர்களில் காமராஜர், எம்.ஜி.ஆர் குறித்து கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். ஜெயலலிதாவும் தி.நகரில்தான் வசித்தார் என்பதை, தி நகர் சோஷியல் கிளப் பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஜெயலலிதா படித்த பள்ளி

ஜெயலலிதா தமது தாயார், சந்தியா உடன் சென்னைக்கு முதன் முதலாக வந்தபோது, அடையாறு பகுதியில் உள்ள காந்திநகர் நான்காவது மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் இருவரும் தங்கி இருந்தனர். அப்போது ஜெயலலிதாவுக்கு நான்கு வயது. சில மாதங்கள் மட்டும் சென்னையில் இருந்தவர்கள் மீண்டும் பெங்களூர் சென்று விட்டனர். இதன் பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை வந்தனர். முதலில் தி நகர் மாசிலாமணி தெருவில் குடியிருந்தனர். அங்கு இருக்கும்போது சென்னை பாண்டிபஜாரில் இருக்கிற ஹோல் ஏன்ஜல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 5வது வரை படித்தார். அதன் பின்னர்தான் சர்ச் பார்க் பள்ளிக்கு மாறினார்.


ஜெயலலிதாவின் தாய் சந்தியா, தமது வருமானத்தில் தி நகர்  சிவஞானம் தெருவில் இடம் வாங்கி, அதில் வீடு கட்டினார். அந்த வீட்டுக்குக் குடிபோன பின்னர்தான், மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர் சபாவில் ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்துக்கு சிவாஜி கணேசன் வந்திருந்தார். அப்போது அவர், "இந்தப் பெண்ணைப் பார்த்தால், சினிமாக் கதாநாயகி போல இருக்கிறார். நிச்சயமாக இவர் படங்களில் நடிப்பார்" என்று தெரிவித்தாராம். அதே போல இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் சொல்லித்தான், இயக்குனர் ஶ்ரீதர், ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை  படத்தில் நடிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டார். அதன் பின்னர்தான் சந்தியாவை அழைத்துப் பேசினார்.

ராசியான வீடு

ஜெயலலிதாவின் பள்ளித் தோழிகள் பலர் சிவஞானம் தெருவில்தான் வசித்து வந்தனர். இந்தத் தெருவில்தான் ஜெயலலிதா சைக்கிள் ஓட்டிப் பழகினார். அப்போது ஜெயலலிதாவின் வீட்டில் சந்தியாவின் சகோதரிகள் ஒருவரான வித்யாவதியும் இருந்தார். அவர் ஒரு நடிகையாகவும், விமானப் பணிப்பெண் ஆகவும் பணியாற்றினார். அவருடன் தி.நகர் சோஷியல் கிளப்புக்கு டென்னிஸ் விளையாடுவதற்கு ஜெயலலிதா செல்வார். சந்தியாவின் இன்னொரு சகோதரியான அம்புஜா என்பவரும், தமது கணவர் கண்ணனுடன் (இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை)ஜெயலலிதாவின் சிவஞானம் தெருவீட்டில்தான் வசித்தனர்.
முதலில் கன்னடப்படத்தில் 14 வயதில் ஜெயலலிதா நடித்தபோது, சென்னை தி.நகரில்தான் இருந்தார். பின்னர் தமிழ்படங்களில் நடித்தபோதும் இந்த வீட்டில்தான் இருந்தார். அறிமுகம் முதல், தமிழகத்தில் ஒரு பெரும் நடிகையாகப் புகழ்பெற்றது வரை சிவஞானம் தெரு வீட்டில் இருந்தபோதுதான் நடந்தது. ஜெயலிதாவைப் பொறுத்தவரை இந்த வீட்டை தம்முடைய ராசியான வீடாகத்தான் அவர் கருதினார்.

ஜெயலலிதா, சந்தியா

அண்ணனுக்கு அஞ்சலி

ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவின் வருமானத்தில் போயஸ் கார்டனில் ஒரு இடம் வாங்கி, சந்தியா அதில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆனால், முழுமையாகக் கட்டி முடிக்கும் முன்பு 1971-ம் ஆண்டு சந்தியா இறந்து போனார். அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து போயஸ்கார்டன் வீட்டுக்கு ஜெயலலிதா  குடிபுகுந்தார். இருந்தபோதிலும் அவர் சிவஞானம் தெரு வீட்டை எப்போதும் மறந்ததில்லை. சந்தியா இறக்கும் முன்பு, இந்த வீட்டை ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் பெயருக்கு உயில் எழுதி வைத்தார். இப்போது ஜெயக்குமாரின் மகள் தீபா, இந்த வீட்டில்தான் வசிக்கிறார். ஜெயக்குமார் இறந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிவஞானம் தெரு வீட்டுக்கு ஜெயலலிதா  சென்றார்.
தி.நகரில் ஒரு வெள்ளை மாளிகை இருக்கிறது. அது யாருக்குச் சொந்தமானது என்று தெரியுமா? அது ஒரு பிரபல நடிகருக்குச் சொந்தமான வீடு. அவர் யார் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/coverstory/94205-jayalalithaa-practiced-bicycle-here-story-of-t--nagar-part-11.html

Link to comment
Share on other sites

கூட்டுக்குடும்பத்தின் அடையாளம்! நடிகர் திலகம் சிவாஜி வீடு! அங்காடித் தெருவின் கதை 12

 

அங்காடித் தெரு

ணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால், ஒரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு  

இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று  அழைக்கப்பட்டது.

பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்படார்.

சிவாஜி வீடு

தந்தை பெயரில் வீடு

இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".

சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.  

அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதனை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.

சிவாஜியின் ஆசை

சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்தி விட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவு கூறுவார்.  

சிவாஜி கணேசன்

2010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.
சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டுக்கு வந்த 'இசைக்குயில்' யார் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுமானம் "லதா மங்கேஸ்கராய்" இருக்கும்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

சிவாஜியின் அன்னை இல்லத்தில் இசைக் குயில்! அங்காடித் தெருவின் கதை 13

 
 

அங்காடித் தெரு

ங்காடித் தெருவின் கதையின் 12-ம் அத்தியாயத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் குறித்து எழுதிய கட்டுரையை பெரும்பாலான வாசகர்கள் படித்திருக்கிறார்கள். குறிப்பாக, சிவாஜி வீட்டுக்கு வந்த இசைக்குயில் குறித்து அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஒரு வாசகர் எளிதாக அதைக் கணித்து விட்டார். ஆம். அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

மனித நேயர்

சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி சார் குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “சிவாஜி என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும்  மற்றும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.

சிவாஜி

தங்க சங்கிலி பரிசு!

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், எங்கள் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் ஒரு நாள் அவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படத்தையும் அங்கு திரையிட்டார். அதன் பின்னர் 12 நாள்கள் வரை சிவாஜி குடும்பத்தினரின் விருந்தினர்களாக நாங்கள் தங்கி இருந்தோம். மும்பையில் நாடகம் நடிப்பதற்காக சிவாஜி வந்தபோது, என் தாய் அவருக்கு சூப் தயாரித்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அமெரிக்கா செல்லும் வழியில் மும்பையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்திருந்தார். என்னுடைய தாய் அவருடைய பூஜை ரூமுக்கு சிவாஜியை அழைத்துச் சென்றார். அப்போது சிவாஜிக்கு ஒரு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்தார். அவர் அமெரிக்கா சென்றுவிட்டு, மீண்டும் மும்பை வழியே வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.

சிவாஜி தந்த பரிசு

சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடந்தபோது, நான் ஹோட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால், வீட்டுக்கு ஒரு முறையாவது வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். சில நேரங்களில் அவர் உடல்நிலை சரியில்லாதபோதிலும், ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். அவரது மகளை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார். எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து எனக்குப் பரிமாறுவார்கள். இதை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் அவருடைய தமிழ்ப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு தனியாக ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். 'தேவன் மகன்' திரைப்படத்தை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் சிவாஜி சார் எங்களுக்கு புதிய உடைகள் அனுப்பி வைப்பார். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி சாருக்கு ராக்கி கயிறு அனுப்பி வைப்போம்.

அன்னை இல்லத்தின் கடவுள்

ஒவ்வொரு முறை அவர் வீட்டில் தங்கும்போதும், வீட்டில் உள்ளவர்களிடம், ஷூட்டிங் கிளம்பும் முன்பு, எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லி அதை மட்டும் பரிமாறும்படி சொல்லி விட்டுச் செல்வார். ஷூட்டிங் முடிந்து வீட்டு வந்த உடன், என்னைப் பற்றி அவர் விசாரிப்பார். சிவாஜிசாரின் தாய் இறந்தபோது, நானும், ஆஷாவும் வந்திருந்தோம். சிவாஜியின் அன்னை இல்லத்தின் கடவுளாக அவரது தாயார் இருந்து வந்தார்.

சிவாஜியின் சகோதரர்களும் அவருடைய வீட்டிலேயே வசித்து வந்தனர். அவரது சகோதரர் இறந்தபோது, சிவாஜி மிகவும் துடித்துப் போய்விட்டார். அவரது மரணத்தை பெரிய இழப்பாகக் கருதினார். சண்முகத்தின் இழப்பை சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சரி செய்தார்.
நடிகர் பிரபுவும் அவரது தந்தையைப் போலவே எங்களிடம் பாசமாக இருக்கிறார். சிவாஜி என் தந்தையைப் போலவே, அவர்களின் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்தார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்.

சிவாஜி சாருக்கு இந்தி மொழி தெரியும். எனவே, எங்களிடம் பேசும்போது இந்தியில் பேசுவார். ஒரு முறை அவருடைய மனைவி அணிந்திருந்த நெக்கலஸைப் பாராட்டினேன். உடனே அவர், கமலா என்று அவரை அழைத்து, அதை எனக்குக் கொடுக்கச் சொன்னார். இது போன்று எனக்குப் பல பரிசுகளை அவர் கொடுத்திருக்கிறார்.

சிவாஜி சார் இறக்கும் முன்பு அவரை நேரில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு பாடல் பதிவுக்காக, இளையராஜா சார் மும்பை வந்திருந்தார். அவரிடம் சிவாஜி சார் பற்றிக் கேட்டேன். அவர், ‘சிவாஜி சார் உடல் நிலை கவலைக்கு உரியதாக இருக்கிறது. நீங்கள் அவரை சென்று பார்த்து வாருங்கள்’ என்று சொன்னார். ஆனால், அன்று இரவு ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று விட்டேன்.  நான் மீண்டும் மும்பை வந்த பின்னர், முதலில் சிவாஜி சாரை சென்று பார்க்க வேண்டும் என்று என் சகோதரி மீனாவிடம் சொன்னேன்.
நான் பாரத ரத்னா விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, லண்டனில் இருந்த என்னை அழைத்து சிவாஜி சார் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சிவாஜி சாரிடம் பேசலாம் என்று முயற்சி செய்தோம். முடியவில்லை. ஆனால், அன்று மாலைதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். அவர் மரணம் எங்களிடம் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. அவரைப் போன்ற ஒருவரை இனி எங்களால் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் சிங்கமாக அவர் வாழ்ந்தார். அவரையும், அவரது அன்னை இல்லத்தையும் எங்களால் மறக்கவே முடியாது” என்று லாதா மங்கேஷ்கர் நினைவு கூர்ந்தார்.

http://www.vikatan.com/news/coverstory/94928-lata-mangeshkar-in-sivajis-annai-illam-t-nagar-story-of-angadi-street-part-13.html

Link to comment
Share on other sites

தி.நகரில் கண்ணதாசன் வீடு வாங்கியது எப்படி? அங்காடித் தெருவின் கதை

அங்காடித் தெரு

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்பது போன்ற அழியாப் புகழ் மிக்க பல திரைப்பட பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். தியாகராய நகருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. கண்ணதாசன் வாழ்ந்த வீடு இருக்கும் தெருவுக்கு தமிழக அரசு கண்ணதாசன் தெரு என்று பெயர் வைத்திருக்கிறது.

காத்திருக்கும் கார்கள்...

ஆரம்பத்தில் கண்ணதாசன், மியூசிக் அகாடமி அருகில் வசித்து வந்தார். பின்னர் அடையாறில் வசித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக தியாகராய நகரில் கிரசன்ட் பூங்கா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த பல படங்களுக்கு பாடல்கள் எழுதிப் புகழின் உச்சத்தில் இருந்தார். எங்கு திரும்பினாலும் கண்ணதாசன் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்த நேரம் அது. பாடல் பதிவுக்கு கண்ணதாசனை அழைத்துச் செல்வதற்காக காலை நேரத்தில் தயாரிப்பாளர்கள் கார்களுடன் காத்திருப்பார்கள். கண்ணதாசன் அன்றைக்கு யாருடைய காரில் ஏறுகிறாரோ? அந்த நிறுவனத்தின் படத்துக்குத்தான் பாட்டு எழுதப் போகிறார் என்று அர்த்தம். மற்றவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். மீண்டும் மறுநாள் வந்து கண்ணதாசனுக்காகக் காத்துக்கிடப்பார்கள்.


அப்போது கண்ணதாசனின் நண்பரும் பாரதி பதிப்பகத்தின் உரிமையாளருமான சிதம்பரம் செட்டியார், கண்ணதாசனிடம், "என்னப்பா நீ பிள்ளைக் குட்டிகளை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு வாடகை வீட்டில் இருக்கப்போறே" என்று கேட்டிருக்கிறார்.
கண்ணதாசன்அதோடு நில்லாமல், கண்ணதாசனிடமிருந்து வீடு வாங்குவதற்கு எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் வாங்கி வைத்து, அந்தப் பணத்தில்தான் கண்ணதாசனுக்கு அவர் வீடு வாங்கிக் கொடுத்தார்.  


இது குறித்து கண்ணதாசனின் மகனும் கண்ணதாசன் பதிப்பக உரிமையாளருமான காந்தி கண்ணதாசனிடம் பேசினோம். "சிதம்பரம் செட்டியார்தான் இந்த வீட்டை என் தந்தைக்கு வாங்கிக் கொடுத்தார். இன்றளவுக்கும் அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த வீடு அத்தனை பேருக்கும் போதாது என்பதால், என் தந்தை சில மாற்றங்கள் செய்து வீட்டைப் புதுப்பித்தார்.

டி.ஆர்.ராமண்ணா கம்பெனி உள்ளிட்ட சில கம்பெனிகள் தி.நகரில்தான் இருந்தன. என் தந்தை பாடல் கம்போசிங் போவதற்கு எளிதாக இருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பார்க்கில்தான், என் தந்தை அடிக்கடி ரிலாக்ஸ் ஆக அமர்ந்திருப்பார்.

ரத்தத்தோடு ஒன்றிய வீடு

அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பிரபலங்கள் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகையின்போது என் தந்தையைப் பார்ப்பதற்காக காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோர் வருவார்கள். அப்படி வந்த பிரபலங்கள் எல்லாம் எங்கள் வீட்டின் மாடியில் அப்போது இருந்த டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த டைனிங் ஹால் ஒரே நேரத்தில்
50 பேர் சாப்பிடும் வசதியுடன் இருந்தது. தி.நகர் வீடு எங்கள் ரத்தத்தோடு ஊறிய ஒன்றாக இருக்கிறது. இப்போதும் அந்த வீட்டில்தான் நான் என் குடும்பத்தினருடன் இருக்கிறேன். வீட்டின் மேல் மாடியில்தான் கண்ணதாசன் பதிப்பகத்தின் அலுவலகம் இருக்கிறது. எந்த ஊருக்குச் சென்றாலும், தி.நகர் வீட்டுக்கு எப்போது திரும்பி வருவோம் என்ற நினைவே இருக்கும்.


பல சினிமா நிறுவனங்கள் கோடம்பாக்கத்தில் செயல்பட்டன. எனவே, பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், கன்னட நடிகர் ராஜ்குமார், அந்தக் காலத்து நட்சத்திரங்களான கண்ணாம்பாள், ராஜாம்பாள் ஆகியோரும் தி.நகரில்தான் இருந்தனர்.
தி.நகரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சில நிமிடங்களில் காரில் சென்று விடலாம். இதனால், அப்போது சினிமாவை நம்பி இருந்த பலர் தி.நகரில் வீடு வாங்குவதை விரும்பினர். மேலும், இங்குதான் அப்போது 4 கிரவுண்ட், 5 கிரவுண்ட் என இடம் வாங்கி வசதியாகக் கட்டும் அளவுக்கு இடமும் இருந்தது" என்றார்.


சினிமாக்காரர்களுக்கு இணையாக தி.நகர் பகுதி பதிப்பகங்களுக்கும் பெயர் பெற்றது. அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

 

http://www.vikatan.com/news/coverstory/95177-this-is-how-kannadasan-bought-house-tale-of-t-nagar-episode-14.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சமையல் முதல் இலக்கியம் வரை புத்தகச் சந்தையாக தி நகர் உருவானது எப்படி? அங்காடித் தெருவின் கதை - 15

 
 

தி நகர்

ங்காடித் தெருவின் அடையாளம் என்பது வெறுமனே நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளும் மட்டும் அல்ல. 'சமைப்பது எப்படி' என்பதுமுதல் சீரியஸ் ஆன இலக்கியப் புத்தகங்கள்வரை விற்பனை செய்யப்படும் சந்தையும் தி நகர் பகுதியில்தான் இருக்கிறது. ஆம், தி.நகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இருக்கின்றன.  

லிஃப்கோ பதிப்பகம் 

Lifco

பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை என வணிக வீதிகளுக்கு மத்தியில், தி நகர் உட்புறச் சாலைகளில் இந்தப் பதிப்பகங்கள் செயல்படுகின்றன. பாண்டி பஜார் அருகில் உள்ள தெருக்களில் மட்டும் பத்து பதிப்பகங்களுக்கு மேல் இருக்கின்றன. 

அங்காடித் தெருவின் கதைத் தொடரில் ஆறாவது அத்தியாயத்தில் லிஃப்கோ புத்தக நிறுவனம் பற்றிச் சொல்லி இருந்தேன். கடலூரைச் சேர்ந்த வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவர் சென்னைக்கு வந்தபோது, முதன் முதலாக 'லிட்டில் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு, ஆங்கில இலக்கண நோட்ஸ்களை வெளியிட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம், 'லிஃப்கோ' என்று பெயர் மாற்றம் பெற்றது. 1953-ம் ஆண்டு ரங்கநாதன் தெருவில், லிஃப்கோ தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த 'லிஃப்கோ' பதிப்பகம், தற்போது ராமேஸ்வரம் தெருவில் உள்ளது.

தமிழ்வாணனின் பதிப்பகம் 

தி நகர் தமிழ்வாணன்அதேபோல, 1980-களில் கறுப்புக் கண்ணாடியையும், தொப்பியையும் மட்டும் வரைந்து போஸ்ட் கார்ட் அனுப்பினால், அது எழுத்தாளர் தமிழ்வாணன் வீட்டுக்கு வந்துவிடும் என்ற நிலை அப்போது இருந்தது. 'இந்தி கற்றுக் கொள்வது எப்படி', 'ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி', 'கோலம் போடுவது எப்படி' என்றெல்லாம் தமிழ்வாணன் புத்தகங்கள் போட்டார். தமிழ்வாணனுடைய மணிமேகலை பிரசுரம் தி நகர் பகுதியில் முக்கிய அடையாளமாக இருந்தது என்றே சொல்லலாம். இப்போதும் மணிமேகலைப் பிரசுரம் அதே இடத்தில் இயங்கிவருகிறது. நடிகர், நடிகையர் உள்பட பிரபலமானவர்களின் முகவரிகள் அடங்கிய புத்தகத்தை மணிமேகலைப் பிரசுரம் போட்டிருக்கிறது. மணிமேகலைப் பிரசுரத்தின் மிகப் புகழ்பெற்ற புத்தகம் என்றால் இதைத்தான் சொல்ல முடியும். 

“நிதி உதவி கிடைத்தது!”

தி.நகரில் பதிப்பகங்கள் தோன்றுவதற்கு என்ன காரணம் என கண்ணதாசன் பதிப்பகத்தின் உரிமையாளர் காந்தி கண்ணதாசனிடம் கேட்டோம். "1960-களில் பாண்டி பஜார் வணிக மையமாக மாறத் தொடங்கியிருந்தது. பாண்டி பஜாரைச் சுற்றிச் சினிமா பிரபலங்களும், அவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் சினிமா ஃபைனான்ஸியர்களும் இருந்தனர். அப்போது இருந்த 40 சதவிகித ஃபைனான்ஸியர்கள் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள்தான். அந்தக் காலகட்டத்தில் பதிப்பகங்கள் தொடங்குவதற்கும், இந்த ஃபைனான்ஸியர்கள் பண உதவி செய்தனர். இதனால்தான் சின்ன அண்ணாமலை, தி.நகரில் ஒரு பதிப்பகம் தொடங்கினார். சின்ன அண்ணாமலையிடம் வேலை பார்த்த பலர் பின்னர் தி.நகரிலேயே பதிப்பகங்கள் ஆரம்பித்தனர். பாண்டி பஜாரில் அப்போது, 'ராமன் பிரஸ்' என்று இருந்தது. இந்தப் பிரஸ் இருந்த மாடியில் சிறிய அறைகள் இருக்கும். அதில்தான் வானதி பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், குயிலன் பதிப்பகம் அனைத்தும் இருந்தன" என்றார்.

பார்சல் அனுப்பும் வசதிகள்!

தி.நகர்

1955-ல் இருந்து வானதி பதிப்பகம் தி.நகரில் இயங்கிவருகிறது. அதன்  உரிமையாளர் வானதி ராமநாதனிடம் பேசினோம். "பொதுமக்களிடம் புத்தகம் வாங்கும் பழக்கம் என்பது முதலில் தபால் வழியே வி.பி.பி-யில் வாங்குவதாகத்தான் இருந்தது. அதேபோல, தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள புத்தக விற்பனையாளர்களுக்கும் புத்தகங்களைப் பார்சலில் அனுப்ப வேண்டும். அப்போது, தி.நகரில் போஸ்ட் ஆபீஸ், டி.வி.எஸ்., ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள், ரயில்வே புக்கிங் அலுவலகங்கள் எல்லாம் இருந்தன. இதனால் பதிப்பாளர்கள், எளிதாகத் தங்கள் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது. இதன் காரணமாகத்தான் தி.நகரில் அதிக அளவு பதிப்பகங்கள் தொடங்கப்பட்டன என்று நான் நினைக்கிறேன். பின்னாளில் திருவல்லிக்கேணி, பாரிமுனையில் தொடங்கப்பட்ட பதிப்பகங்கள்கூடத் தி.நகருக்கு இடம்பெயர்ந்தன. இப்போது தி.நகர் என்பது ஒரு ஷாப்பிங் மையமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. மலேசியா, இலங்கை, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சென்னை வரும்போது தி.நகரில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். அவர்கள் நகைக்கடைகள், துணிக்கடைகளுக்குச் செல்வதுபோல, புத்தகக்கடைகளுக்கும் வருகிறார்கள். புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் தி.நகரில் பதிப்பகங்கள் அதிக அளவுக்கு இருக்கின்றன'' என்றார். 

அங்காடித் தெருவின் கதையில் இந்தப் பகுதியைப் பற்றிச் சொல்லாவிட்டால், இந்தத் தொடர் முழுமைபெறாது. அது எல்லோரும் அறிந்த தெருதான். அந்தத் தெரு பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/coverstory/96127-story-of-tnagar---part-15.html

Link to comment
Share on other sites

மண்பாதை பாண்டி பஜார் ஆனது இப்படித்தான்! அங்காடித் தெருவின் கதை -16

 
 

தி நகர்

தியாகராயா சாலை' என்று அழைக்கப்படும் பாண்டி பஜார் சாலை, பனகல் பார்க்கில் இருந்து தொடங்கி, தேனாம்பேட்டை சிக்னல் அருகே அண்ணா சாலையில் முடிகிறது. பாண்டி பஜாரின் ஓர் எல்லையில் இருந்து, மற்றோர் எல்லைவரை நடந்துசென்றால், அவ்வளவாகக் களைப்புத் தெரியாது. காரணம், இந்தச் சாலையில் இருபுறமும் வளர்ந்திருக்கும் மரங்கள் தரும் குளுமை நம் சோர்வை நீக்கிவிடும்.

பாண்டி பஜார் பெயர்க் காரணம்...

பாண்டி பஜார் குறித்த வரலாற்றுத் தகவல்களை, நல்லி குப்புசாமி தம்முடைய 'தியாகராய நகர் அன்றும்... இன்றும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். "பாண்டி பஜாரில் 75 ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் அவ்வளவாக இல்லை. பாண்டிச்சேரியைச் சேர்ந்த சொக்கலிங்க முதலியார் என்பவர், பாண்டி பஜாரில் இப்போது கீதா கஃபே இருக்கும் இடத்துக்கு அருகில் பத்துக் கடைகள் கொண்ட ஒரு வணிகக் கட்டடத்தை உருவாக்கினார். இந்தக் கட்டடத்துக்கு... அவர், 'பாண்டி பஜார்' என்று பெயர்வைத்தார். இதைக் குறிக்கும் வகையில்தான் பின்னாளில்  தியாகராயர் தெரு முழுவதுமே பாண்டி பஜார் என்று அழைக்கக் காரணமாக இருந்தது.

அப்போது, பாண்டி பஜார் என்ற வணிகக் கட்டடத்தைத் தவிர, பிற பகுதிகள் எல்லாம் வீடுகளாக இருந்தன. பாண்டி பஜார் கட்டடத்தில் உரிமையாளர் சொக்கலிங்க முதலியார், தம்முடைய வணிக வளாகத்திலேயே பாகீரதி ஆயில் மில்ஸ் என்ற கடையை நடத்திவந்தார். சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒரு சைக்கிள் கடை வைத்திருந்தார். 

பாண்டி பஜார்

மண்பாதை...

இப்போது கீதா கஃபே இருக்கும் இடத்தில். முன்பு ஓர் உடுப்பி ஹோட்டல் இருந்தது. அதன் எதிரே, பாரத் கேஃப் என்ற ஹோட்டல் இருந்தது. பாண்டி பஜாரில் இருந்து தேனாம்பேட்டை செல்வதற்கு இப்போது உள்ளதுபோல தார் ரோடு முன்பு இல்லை. 85 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி பஜாரில் இருந்து தேனாம்பேட்டை செல்வதற்கு ஒரு மண்பாதைதான் இருந்தது. பாண்டி பஜார் பகுதியில், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது 'BTH டெய்லர்ஸ்' என்ற கடை. 'பெங்களூரு டெய்லரிங் ஹவுஸ்' என்பதைச் சுருக்கமாக BTH என்று அழைத்தனர். இந்தக் கடையின் உரிமையாளரான மூர்த்தி,  அந்தக் காலத்திலேயே வெளிநாட்டுக் கார் ஒன்றைச் சொந்தமாக்க வைத்திருந்தார். கவர்னர் முதல் பல பெரிய அதிகாரிகளுக்குத் துணிகள் தைத்துக் கொடுத்தவர் இவர்.

பாண்டி பஜாரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது 'நாயுடு ஹால்' நிறுவனம். இதன் உரிமையாளர் எம்.கோவிந்த சாமி நாயுடு முதலில், டெய்லர் கடை வைத்திருந்தார். நாளடைவில் வளர்ச்சியடைந்த அவர், பாண்டி பஜாரில் இப்போது நாயுடு ஹால் இருக்கும் இடத்தில்... முன்பு, 'மகளிர் மட்டும்' என்ற கடையைத் தொடங்கினார். இந்தக் கடையில், மகளிர்களுக்குத் தேவையான உள்ளாடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிறுவனம்தான் பின்னர், 'நாயுடு ஹால்' என்ற பெயர் மாற்றத்தைப் பெற்றது. பாண்டி பஜாரின் இன்னொரு முக்கியமான அடையாளம், 'ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி'. இரண்டாம் உலகப் போரின்போது, கடற்கரை அருகே இருந்த உயர் நீதிமன்றக் கட்டடத்தின்மீது குண்டு வீசலாம் என்று அச்சம் இருந்தது. இதனால், உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இந்தப் பள்ளியில் செயல்பட்டது" என்று அந்த நூலில் கூறியுள்ளார் நல்லி குப்புசாமி.  

பாண்டி பஜாரின் பழைய அடையாளங்களாக இருந்தவற்றில், ராஜகுமாரி திரையரங்கமும் ஒன்று. இது, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் இருந்தது. இதன் உரிமையாளராகப் பழம்பெரும் நடிகை டி.ஆர்.ராஜகுமாரி இருந்தார். அந்தக் காலத்தில், ஆங்கிலத் திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்கமாக ராஜகுமாரி இருந்தது. நகரின் பல இடங்களில் இருந்து ராஜகுமாரி திரையரங்குக்குப் படம் பார்க்க வருவார்கள். 

சினிமா பிரபலங்களின் திரையரங்குகள்...

நடிகர் சிவகுமார் இதுபற்றி ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். ''நான், சென்னைக்கு வந்த காலத்தில் புதுப்பேட்டையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். அங்கிருந்து கிளம்பிவந்து ராஜகுமாரி திரையரங்கில் Horror of Dracula' , ‘House of Wax' ஆகிய திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார். 

இந்தத் திரையரங்கம், தற்போது மெகா மார்ட் கடையாக மாறிவிட்டது. அதேபோல, ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளிக்கு எதிரே நாகேஷ் திரையரங்கம் இருந்தது. இது, நகைச்சுவை நடிகர் நாகேஷுக்குச் சொந்தமானதாக இருந்தது. இதை, 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் திறந்துவைத்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியான பல புதிய திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன. 1995-க்குப் பிறகு தொலைக்காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, திரையரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. தவிர, நாகேஷ் திரையரங்கைவிடப் பல நவீன திரையரங்குகள் சென்னைக்கு வரத் தொடங்கின. எனவே, நாகேஷ் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. இதனால், நாகேஷ் குடும்பத்தினர், அந்தத் திரையரங்கை விற்றுவிட்டனர். அதை வாங்கியவர்கள், அங்கு திருமண மண்டபம் கட்டியுள்ளனர். எனினும், பாண்டி பஜாரில் அந்த இடத்தைக் குறிப்பிடுவதற்கு இன்றும்கூடப் பலர், 'நாகேஷ் திரையரங்கம்' என்றுதான் குறிப்பிடுகின்றனர். 

இன்றைக்குப் பாண்டி பஜார் தெரு, நகரின் நெரிசல்மிக்க பகுதியாக மாறிவிட்டது. பிளாட்ஃபாரங்களில் கடை வைத்திருந்தவர்களுக்காகத் தனியாக ஒரு வணிக வளாகம் கட்டித் தரப்பட்டிருக்கிறது. பிளாட்ஃபாரங்கள் எல்லாம் இப்போது வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டன. மக்கள் சாலையில் நடப்பதால், எப்போதும் நெரிசல்மிக்க பகுதியாகவே பாண்டி பஜார் இருக்கிறது. 

தி.நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியில் படித்தவர்கள் இன்று பிரபலங்களாக உயர்ந்திருக்கின்றனர். அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/96663-muddy-road-turned-to-pondy-bazaar-story-of-t-nagar-16.html

Link to comment
Share on other sites

ஐ.ஏ.எஸ்-கள் முதல் பெப்சி சி.இ.ஓ வரை பலரை உருவாக்கிய தி நகர் பள்ளிகள்..! அங்காடித் தெருவின் கதை - 17

 

அங்காடித் தெரு

ருநகரின் கட்டமைப்பில், கல்விக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அந்த வகையில், சமகாலத்தில் உருவாக்கப்பட்ட தி நகர் பகுதியின் முக்கிய அடையாளங்களாக இரண்டு பள்ளிகள் திகழ்கின்றன. அதில், முதல் பள்ளி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி. இரண்டாவது பள்ளி, ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளி.

இந்திரா நூயி படித்த பள்ளி!

சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக 1888-ம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. இது, முதலில் செயின்ட் ஆண்டனி பள்ளி என்று அழைக்கப்பட்டது. பின்னர், 1897-ம் ஆண்டு Franciscan Missionaries of Mary சகோதரிகள், இந்தப் பள்ளியை நிர்வகித்து வந்தனர். அப்போது இந்தப் பள்ளி செயின்ட் தாமஸ் ஐரோப்பியன் பள்ளி என்று அழைக்கப்ப்ட்டது. 1909-ம் ஆண்டு இந்தப் பள்ளி வளாகத்தில் ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பெயரில் ஒரு ஹாஸ்டல் தொடங்கப்பட்டது.

தி நகர் ஹோலி ஏன்ஜெல்ஸ் பள்ளி

1933-ம் ஆண்டு தி.நகர் பாண்டி பஜாரில், இப்போது இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளி என்ற பெயரில் 8 அறைகளுடன் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது, துறைமுகம் அருகே இருந்த உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இந்தப் பள்ளியில் செயல்பட்டது. பின்னர், பல்வேறு மாற்றங்களைக் கண்டு இப்போது சென்னையின் மிகப்பெரிய பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சர்ச் பார்க் பள்ளியில் படிக்கும் முன்பு... சில ஆண்டுகள் இந்தப் பள்ளியில் படித்தார். பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, சித்ரா ஆறுமுகம் ஐ.ஏ.எஸ்., நடிகைகள் ஶ்ரீதேவி, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தாம்.

ராணுவ ஜெனரல் படித்த பள்ளி!

ராமகிருஷ்ணா மிஷின் மேல்நிலைப்பள்ளிராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்குச் சொந்தமான, ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளி (மெயின்) கடந்த 1932-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி தொடங்கப்பட்டது. பனகல் பார்க் எதிரே உள்ள இந்தப் பள்ளியில் படித்த பலர், இன்று தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பிரபலங்களாக இருக்கிறார்கள். ராணுவ ஜெனரல் சுந்தர் ஜி, முன்னாள் தலைமைச் செயலாளர் சங்கர், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி, நீதிபதி சந்துரு, எழுத்தாளர் தமிழ்மகன் உள்ளிட்டோர் இங்கு படித்திருக்கின்றனர். இதுகுறித்து ராமகிருஷ்ணா பள்ளிகளுக்கான நிர்வாகக் கமிட்டியின் துணைத் தலைவரும், முன்னாள் மாணவருமான சந்திரசேகரிடம் பேசினோம்.

"சென்னையில் அந்தக் காலத்தில் மிகச் சில பள்ளிகளே தொடங்கப்பட்டன. அதில், தி.நகரில் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி (மெயின்) முக்கியமான ஒன்று. இந்தப் பள்ளியில் படித்த நான், 1964-ல் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்தேன். தமிழில்தான் படித்தேன். அந்தக் காலத்தில் இந்தப் பள்ளியில் படித்த நான் உள்ளிட்ட 15 பேர் ஐ.ஐ.டி-யில் சேர்ந்தோம். மாணவர்களை, சமுதாயத்தில் மதிக்கத் தகுந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பள்ளி செயல்படுகிறது. நல்லி குப்புசாமி செட்டியார், டென்னிஸ் பிரபலம் கிருஷ்ணன், நடிகர் ஆர்.எஸ்.மனோகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் பள்ளியில் படித்தவர்கள்தான்.

''நகைக்கடைகள் இல்லை!''

இந்தப் பள்ளியில் படித்த சமயத்தில், பனகல் பார்க் அருகில்... முதலில் இரண்டு வழிகளிலும் வாகனங்கள் சென்றுவரும். உஸ்மான் சாலையில் அந்தக் காலத்தில் நகைக்கடைகள் எதுவும் இல்லை. மளிகைக் கடை, லாண்டரி கடை எனச் சில சிறிய கடைகள் மட்டும்தான் இருந்தன. 1969-க்குப் பின்னர்தான், உஸ்மான்  சாலையில் நகைக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டன" என்றார். 

1930-களில் தியாகராய நகர் அமைதியின் பிறப்பிடமாக இருந்தது. இதன் காரணமாகவே பலர் இங்கு இடம் வாங்கி  தனி வீடு கட்டிக் குடி வந்தனர். பல வீடுகள் இன்றும் கூட, தோட்டத்துடன் கூடிய தனி வீடுகளாகவே இருக்கின்றன. இப்போது, சென்னை நகரின் அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக தி நகர்  உருமாறி விட்டது. இங்கு இருக்கும் வணிக கட்டடங்கள் பல்வேறு விதிமுறைகளை மீறி இருப்பதாகச் சொல்கின்றனர். அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/97281-story-of-t-nagar---part-17.html

Link to comment
Share on other sites

தி. நகர் பகுதியில் தொடரும் அலட்சியங்களும்... அக்கறையின்மையும்! அங்காடித் தெருவின் கதை-18

 

தி நகர் அங்காடித் தெரு

ரு கிராமமாக இருந்து... நகராக உருவான விதம், அதன் முக்கியப் பகுதிகள் என்று தி. நகர் முகம் குறித்து கடந்த 17 அத்தியாயங்களாகப் பார்த்தோம். தியாகராய நகருக்கு என இன்னொரு முகம் இருக்கிறது. அதுகுறித்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 

'ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் சொர்க்கம்' தியாகராய நகர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம்தான். அதேநேரத்தில், சென்னை தி.நகரில் பல பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள் பாதுகாப்புக் குறைபாடுள்ள, மோசமான தீ விபத்தை ஏற்படுத்தும் வணிகப் பகுதிகளில் ஒன்றாகவும் இருக்கின்றன.  

முந்தைய விபத்துகள்!

இதற்குமுன்பு 2008-ம் ஆண்டுதி நகர்  ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். 2014-ம் ஆண்டில் மட்டும் மூன்று தீ விபத்துகள் தி.நகரில் நடந்துள்ளன. தி.நகர் துரைசாமி தெருவில் உள்ள பாம்பே ஜெனரல் ஸ்டோரில், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி பெரும் தீவிபத்து நடந்துள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தீ விபத்து நடந்த இடத்தை அடைய தீயணைப்பு வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டன. உஸ்மான் ரோட்டில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கடைசியாகக் கடந்த மே 31-ம் தேதி அதிகாலை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இப்படித் தியாகராய நகர் என்பது 'தீ நகரா'கத்தான் இருக்கிறது.  

அதிர்ச்சித் தகவல்கள்! 

'தியாகராய நகரில் உள்ள வணிகக் கட்டடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை' என்று தி.நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள கடைகளை ஆய்வுசெய்து தீயணைப்புத் துறை சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு ஜனவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் கடைகளில் ஆய்வுசெய்த குழுவினர், சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்; 

தி நகர்

நெருக்கடியான இடம்!

* தி.நகரில் குறிப்பாக ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் குறுகிய வழிகளாக இருக்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் இருக்கிறது. சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள மேம்பாலத்துக்குக் கீழே உஸ்மான் ரோட்டின் இருபுறமும், வாகனங்கள் செல்வதற்கு 3.7 மீட்டர் மற்றும் 4.9 மீட்டர் என்ற அளவில்தான் இடம் இருக்கிறது. குறிப்பாக ரங்கநாதன் தெரு 5.6 மீட்டர் கொண்டதாக இருக்கிறது. அதனால், இந்தச் சாலைக்குள் எளிதாகத் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைய முடிவதில்லை.

* வணிகக் கட்டடங்கள், கட்டடத்தைச் சுற்றி 7 மீட்டர் அளவுக்கு set back இடம் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கட்டடங்களில் இது இல்லை அல்லது தேவைப்படும் அளவுக்கு இல்லை. இதன் காரணமாக இத்தகைய கட்டடங்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. 

* தீ தடுப்பு அவசர வழியானது, ஒவ்வொரு கட்டடத்திலும் இரண்டு வழிகள் கொண்டதாக இருக்க வேண்டும். அதில், ஒருவழி படிகளுடன் கூடிய வழியாக இருக்க வேண்டும். மறுவழியான லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரை அவசர வழியாகக் கருத முடியாது. தி.நகரில் உள்ள பெரும்பாலான கட்டடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அங்குள்ள கடைகளின் படிக்கட்டுகளில் சரக்குகளை வைத்திருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் நடந்தசெல்ல முடியாத அளவுக்கு சரக்குகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான கட்டடங்களில் அவசர வழியானது மிகவும் குறுகியதாக, காற்றோட்டம் இல்லாத வகையில் இருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் 2008-ம் ஆண்டு நடந்த தீ விபத்தின்போது மூன்று பேர் உயிரிழந்ததற்கு இதுதான் காரணம்.

* பெரும்பாலான கட்டடங்களில் அலாரம் வசதி முறையானதாக இல்லை. சி.சி.டி.வி கேமராக்களுடன் இணைக்கப்படவில்லை. பெரும்பாலான கட்டடங்களில் பழைய அலாரம் முறைதான் வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் செயல் இழந்த நிலையில் இருக்கிறது. 

* பெரும்பாலான கட்டடங்களில் தீ தடுப்புக்கான தண்ணீர் சேமித்து வைப்பதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. பல்வேறு கட்டடங்களில் தானியங்கி ஸ்பிரிங்க்ளர் முறை இல்லை.

நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது தீயணைப்புத் துறை சார்பில், "தி.நகர் பகுதியில் வணிகக் கட்டடங்கள் அதிகமாக இருக்கின்றன. தெருக்கள் குறுகியதாக இருக்கின்றன. வணிகக் கட்டடங்கள் விதிகளை மீறிக் கட்டப்பட்டிருக்கின்றன. மக்கள் நெருக்கத்தைச் சமாளிப்பதற்கான போதுமான நடவடிக்கைகள் தி.நகரில் இல்லை. தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாகத் தீயணைப்பு வாகனங்கள் செல்லும் வகையில் இடவசதி இல்லை. தி.நகர் பகுதியில் மின்கசிவு காரணமாக அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. சுமார் 150 கட்டடங்களில் தீ தடுப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவற்றில் பெரும்பாலான கட்டடங்கள் தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை" என்று கூறப்பட்டிருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் தி.நகரில் இதே சூழல்தான் உள்ளது. 

தி.நகரை இயக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள். அவர்கள் நிலை எப்படி இருக்கிறது? அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

http://www.vikatan.com/news/coverstory/97595-safety-violations-in-t-nagar-tale-of-angadi-theru-episode-18.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஊழியர்கள் மீது திருட்டுப் பட்டம்!- அங்காடித் தெருவின் கதை-19

 
 

அங்காடித் தெரு

தியாகராய நகரில், குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ள  கடைகள் எல்லாவற்றிலும், ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடி தெரு'  திரைப்படம் தெள்ளத் தெளிவாகக் கூறியது. இந்தத் திரைப்படம் வெளி வந்து 7 ஆண்டுகள் கடந்த பின்னும், ஜவுளிக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 

உரிமை குறித்து விழிப்புஉணர்வு

இந்தக் கட்டுரைக்காக தி.நகரில் பல்வேறு நபர்களைச் சந்தித்துப் பேசினேன். ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் இருந்த ஊழியரைச் சந்தித்தேன். அந்தக் கடை, மிகப்பிரபலமான ஒரு நிறுவனத்தினுடையது. அந்தத் தொழிலாளர் அப்படிப் பேசியது ஆச்சர்யமாக இருந்தது. 

"ஜவுளிக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட சிந்தனைகள் எழுந்திருக்கின்றன" என்று அவர் கூறினார். நான் பத்திரிகையாளர் என்று காட்டிக்கொள்ளாமல், "அப்படியா?" என்று கேட்டேன். "ஆமாம், சார். பல ஆயிரம் பேர் இருக்கிறோம். எங்களுக்குள்ள ஒரு சங்கம் மாதிரி வைக்கலாம்னு பேசிக்கிட்டு இருக்கோம்" என்றார். 

அவர் சொன்னது அவரது கடை முதலாளிக்குத் தெரிந்தால், அவரது வேலை பறி போகலாம். எனினும் அந்தச் சிந்தனை வரவேற்கக்கூடிய ஒன்றுதான். தியாகராய நகரில், அங்காடித் தெருக்களின் ஓசைகளுக்கு இடையே குடியிருக்கும் இன்னொரு நபரைச் சந்தித்தேன். அவர் சொன்ன உண்மைச் சம்பவம், தி.நகரின் இன்னொரு முகத்தை, கோர முகத்தை வெளிப்படுத்தியது. 

சம்பளத்தில் பிடித்தம் 

"என்னுடைய வீடு இருக்கும் தெரு வழியே சீருடை அணிந்த ஊழியர்கள் செல்வார்கள். அவ்வப்போது அவர்களிடம் பேசுவது உண்டு. ஒரு நாள் இரவு 9 மணிபோல என் வீட்டுக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். நகைக்கடை ஒன்றில் வேலை பார்க்கும், ஒரு பெண் அழுதுகொண்டே நடந்து சென்றார். எனவே, அந்தப் பெண்ணிடம், 'என்னம்மா... என்ன ஆச்சு ஏன் அழுகை' என்று கேட்டேன். 

நான் கேட்பதற்காகக் காத்திருந்தவர் போல கதறி அழுதுவிட்டார். அழுகையின் இடையே அவர் சொன்ன செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் வேலை பார்க்கும் கடையில் அன்றைக்கு ஒரு தங்க மோதிரம் காணாமல் போய்விட்டது. அந்த மோதிரத்துக்கான விலையை அவரிடமும், அவருடன் வேலை பார்த்த சிலரிடமும் அந்தக் கடையின் உரிமையாளர் வசூலிக்கச் சொல்லிவிட்டாராம். இதனால், இந்த மாதம் சம்பளப் பணத்தில் பெரும் அளவு பிடிக்கப்பட்டுவிடும் என்று கதறினார். அவர் வேலை பார்க்கும் நகைக்கடையில் மட்டும் அல்ல. தி.நகரில் உள்ள பல கடைகளில் ஊழியர்களிடம் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என்று அந்த நண்பர் சொன்னார். அவர் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தி.நகரில் வசித்து வருபவர். 

சென்னையில் தி.நகரில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்களில் இருந்து பொருள்கள் காணாமல் போனதாக போலீஸில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில் இதுபோன்ற திருட்டுப் புகார்களை ஊழியர்களின் தலையில் சுமத்தி, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துவிடுகின்றனர் என்று அந்த நண்பர் சொன்னார். 

ஊழியர்களின் நேர்மையைக் கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, அவர்களை அடிமைகள் போல நடத்துவதும் அன்றாடம் நடக்கும் செயலாக இருக்கிறது. தவறுசெய்த ஊழியர்கள் மீது உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பது தவறு இல்லை. ஆனால், ஏதும் அறியாத அப்பாவி ஊழியர்களிடம், காணாமல் போன பொருளுக்கான தொகையை வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. 

நரம்பு பாதிக்கப்படும் 

தி.நகரில் உள்ள ஊழியர்கள் நிலைமை குறித்து சி.ஐ.டி.யூ தென் சென்னை மாவட்டச் செயலாளர் குமாரிடம் பேசினோம். "ஷாப் அண்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டத்தில் ஊழியர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு எல்லாம் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால், அதை தி.நகர் கடைக்காரர்கள் அமல்படுத்துவதில்லை. நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, ஆற்காடு, ஆரணி பகுதிகளில் இருந்து வருபவர்கள்தான் தி.நகர் கடைகளில் வேலை பார்க்கின்றனர். இப்போது, சென்னையைச் சேர்ந்தவர்களையும் ஜவுளிக் கடைக்காரர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். ஊழியர்கள் தங்கள் குடும்பச் சூழல் கருதி, தங்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் பற்றி தெரிந்துகொள்வதில்லை. தொழிலாளிகளின் சட்டங்களை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், 'தொழிலாளர்களே கேட்காமல் சும்மா இருக்கும்போது, நீங்கள் எதற்கு இதைக் கேட்கிறீர்கள்' என்று சொல்கிறார்கள். 

ஊழியர்களுக்குக் கடைகளில் போதுமான கழிவறைகள் இல்லை. ஊழியர்கள் தினமும் ஓய்வு இன்றி 12 மணி நேரம் வரை நின்றுகொண்டே வேலை பார்க்கின்றனர். நீண்ட நாள்கள் நின்று கொண்டே பணியாற்றும்போது தொடைக்கும், முழங்காலுக்கும் இடையேயான நரம்பு பாதிக்கப்படும். அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு நாற்காலி இருக்கும். ஆனால், அதில் அவர்கள் உட்கார முடியாது. உயரத்தில் இருக்கும் பொருள்களை எடுப்பதற்குத்தான் அந்த நாற்காலியைப் பயன்படுத்துகிறார்கள். 

 

தி நகர் ஊழியர்கள்

கழிவறைகள் போதாது

கடைகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதால், இந்தப் பிரச்னைகள் உடனடியாக அவர்களுக்குத் தெரியவருவதில்லை. ஓய்வு எடுக்கும்போதும், அறைக்குச் செல்லும்போதும்தான் உடல் வலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். அவர்கள் தங்கும் இடத்திலும் போதுமான கழிவறை, குளியல் அறைகள் இல்லை. இதனால், ஊழியர்கள் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து தயாராக வேண்டி இருக்கிறது. 

நிறுவனத்தை நடத்துபவர்கள் ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். போதுமான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். அரசு சார்பில், கடைகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த விவரத்தில், அரசு தலையிட்டு, 8 மணி நேர வேலை, அதிகப் பணி நேரத்துக்கு கூடுதல் சம்பளம், பண்டிகை காலங்களில் இரட்டை ஊதியம் ஆகியவற்றை வழங்க வழி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான சட்டங்களை, சலுகைகளை தி.நகர் கடைகள் அமல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.  

தி.நகரை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுகுறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

http://www.vikatan.com/news/coverstory/98499-a-story-of-t-nagar-shops-and-shop-workers.html

Link to comment
Share on other sites

வயல்வெளியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி! தி.நகர் கடந்து வந்த பாதை... அங்காடித் தெருவின் கதை - நிறைவுப் பகுதி

 
 

தி நகர் அங்காடித்தெருவின் கதை

தீயணைப்பு வண்டிகூட வரமுடியாத அளவுக்கு தி. நகர் தெருக்கள் குறுகலானவையாக மாறிவிட்டன. ஆனால், சென்னையில் 1930-ம் ஆண்டுக்குப் பின்னர் உருவான  முதல் நவீன நகரம் தியாகராய நகர் என்பதை, இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்களில் பார்த்தோம். 

பங்களா வீடுகள் 

80 ஆண்டுகளுக்கு முன்பு தி. நகர் ஏரியாவில், வயல்வெளியாக இருந்த பகுதிகள் சென்னை நகர மேம்பாடு என்ற பெயரில் பலிகொடுக்கப்பட்டன. இந்தப் பகுதியில் வசதி படைத்தவர்கள் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிப் போட்டனர். ஓர் ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பங்களா வீடுகள் அதிக அளவில் கட்டப்பட்டன. இத்தகைய வீடுகளை ஜி.என்.செட்டி ரோடு, ஹபிபுல்லா ரோடு, திருமலைப்பிள்ளை சாலை ஆகிய பகுதிகளில் இன்றும்கூடக் காணலாம். அந்த வீடுகளுக்குள் போய்விட்டால், ஒரு தனி உலகத்துக்குள், அமைதியான இடத்துக்குள் சென்றது போன்ற சூழல் இருக்கும். ஏனெனில், பெரும்பாலானவை வணிகக் கட்டடங்கள் ஆகிவிட்ட சூழலில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தப் பங்களாக்கள் இருக்கும் என்று தெரியவில்லை.

தி நகர்

இப்போது சென்னையிலேயே அதிக நெருக்கடிமிக்க நகரப்பகுதிகளில் ஒன்றாகத் தி.நகர் மாறிவிட்டது. இந்தச் சூழலில்தான் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதில், முதல்கட்டமாக தி.நகர் பகுதியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தி. நகர் பகுதியை மேம்படுத்த மத்திய அரசு 100 கோடி ரூபாய், தமிழக அரசு 100 கோடி ரூபாய் என  200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

வைஃபை ஹாட் ஸ்பாட்

வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பார்க், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஜீவா பார்க்  உள்ளிட்ட தியாகராய நகரில் இருக்கும் எட்டுப் பூங்காக்களைப் பல்வேறு வசதிகளுடன் கூடியவையாக மேம்படுத்த உள்ளனர். இந்தப் பூங்காக்களில் பசுமையான சூழலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தவிர, மழைநீர் சேகரிப்பு வசதிகள், வைஃபை ஹாட் ஸ்பாட் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மாசு கண்காணிக்கும் கருவிகள் நிறுவப்பட உள்ளன. பூங்கா அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் மாசு எவ்வளவு இருக்கிறது என்பதை இந்தக் கருவி உடனுக்குடன் டிஸ்பிளே செய்யும். 

23 சிறிய சாலைகளை அழகுபடுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. தி.நகர் தணிகாசலம் சாலை, பாண்டிபஜார் சந்திக்கும் பகுதியில் இருக்கும் மின்வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் மல்டி லெவல் கார்பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. தியாகராய நகர் முழுவதும் அதிநவீனக் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. பயணிகளுக்குப் பேருந்து எப்போது வரும் என்பது குறித்து அவர்களின் ஸ்மார்ட் போனுக்குத் தகவல் அனுப்பப்படும். வாகனங்களை பார்க்கிங் செய்ய இடத்தை முன்பதிவு செய்யும் நடைமுறையும் இங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டியாக தி. நகர் மாற உள்ளது.  

மெட்ரோ ரயில் 

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் தியாகராய நகரும் இணைக்கப்பட உள்ளது. பனகல் பார்க் அருகே ரயில் பாதை அமைக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதனால்தான் பனகல் பூங்கா தவிர பிற பூங்காக்கள் மட்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகின்றன.

இத்துடன் இந்தத் தொடர் நிறைவுபெறுகிறது.

http://www.vikatan.com/news/coverstory/98777-agriculture-field-to-smart-city-a-story-of-t-nagar---last-episode.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.