Jump to content

தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு!


Recommended Posts

தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு!

 

Tamilarin_pumi_wrapper_jpg__66715_zoom.j
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.

 

நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அதற்கெதிரான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளது.

நில ஆக்கிரமிப்புக்களின் வழியாக தமிழர்களின் சமயம், பொருளாதாரம், பண்பாடு முதலியவற்றை ஒடுக்குவதையும் நில ஆக்கிரமிப்பின் ஊடாக இன அழிப்பு இடம்பெறுகின்றமை பற்றியும் இந்த நூல் பேசுகின்றது.

 

இந்த நூலை தமிழகத்தின் பிரசித்தமான எதிர்வெளியீடு என்ற பதிப்பகம் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குளோபல் தமிழ் செய்திகளில் பிரசுரமான பல கட்டுரைகளை இந்த நூல் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/archives/29108

Link to comment
Share on other sites

மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. புலிகளை மட்டும் கொச்சைப்படுத்தி எழுதிய பக்கங்களை மட்டும் பிரசுரித்த  தமிழினியின் புத்தகத்துக்கு அனுமதி; ஆனால் தமிழர் நிலங்கள் பறிபோவதை பற்றி எழுதிய புத்தகத்துக்கு மட்டும் சிக்கல்கள்

ஈழத்  தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.


பார்ப்பம்... பலாத்காரமாக முத்தம் கொடுத்த மாட்டுப்பட்ட தெய்வீகனுக்காக சமூக வலைத்தளங்களில்  ஆதரவுக்  குரல் கொடுக்கும் கோமகன், தமிழ் கவி அக்கா போன்றோர் இதை எப்படி அணுகுகின்றார்கள் என
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. புலிகளை மட்டும் கொச்சைப்படுத்தி எழுதிய பக்கங்களை மட்டும் பிரசுரித்த  தமிழினியின் புத்தகத்துக்கு அனுமதி; ஆனால் தமிழர் நிலங்கள் பறிபோவதை பற்றி எழுதிய புத்தகத்துக்கு மட்டும் சிக்கல்கள்

ஈழத்  தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.


பார்ப்பம்... பலாத்காரமாக முத்தம் கொடுத்த மாட்டுப்பட்ட தெய்வீகனுக்காக சமூக வலைத்தளங்களில்  ஆதரவுக்  குரல் கொடுக்கும் கோமகன், தமிழ் கவி அக்கா போன்றோர் இதை எப்படி அணுகுகின்றார்கள் என
 

பச்சோந்திகள் சுயநலத்திற்கேற்ப தான் ,நிறம் மாறும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மிகவும் கண்டிக்கதக்க செயல் இது. புலிகளை மட்டும் கொச்சைப்படுத்தி எழுதிய பக்கங்களை மட்டும் பிரசுரித்த  தமிழினியின் புத்தகத்துக்கு அனுமதி; ஆனால் தமிழர் நிலங்கள் பறிபோவதை பற்றி எழுதிய புத்தகத்துக்கு மட்டும் சிக்கல்கள்

ஈழத்  தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.


பார்ப்பம்... பலாத்காரமாக முத்தம் கொடுத்த மாட்டுப்பட்ட தெய்வீகனுக்காக சமூக வலைத்தளங்களில்  ஆதரவுக்  குரல் கொடுக்கும் கோமகன், தமிழ் கவி அக்கா போன்றோர் இதை எப்படி அணுகுகின்றார்கள் என
 

இதில் கண்டிக்க என்ன இருக்கிறது ?

உங்களுடன் கிருபனை போன்றவர்களுடன் நான் முரண்படும் இடம் இதுதான்.
புத்தகம் என்பற்க்காக எமது இனத்தை அழிக்க மறைமுகமாக வரும் ஆயுத 
வடிவங்களுக்கும் நாம்  வர்த்தக முண்டு கொடுத்து வாசிக்க வேண்டுமா ?

கொழும்பில் இருந்து தமிழினியின் பெயரில் புத்தகம் வருகிறது எனும்போது 
இவ்ளவு அடிவேண்டிய தமிழனுக்கு என்ன வரும் என்று அறியும் புத்தி இன்னமும் இல்லையா ?

எதோ இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து பூ சொரிவதுபோல 
நாடகம் ஆடியவர்கள் யாராவது இப்போ இந்த தடை பற்றி ஏதும் சொல்ல போகிறார்களா ?

தமிழனை ஏய்த்து பிழைத்து வாழ்ந்தவன்தான் வாழ்கிறான்.
தமிழனுக்கு ஏதும் செய்ய நினைத்தவன் ..... தமிழனால் கூட கண்டுகொள்ள படுவதில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்தப் புத்தகத்தைப்பற்றியும் அதை எழுதியவரைப்பற்றியும்  அறிந்து கொள்ள முயற்சி செய்யும் தமிழர்கள் குறைவாகவே இருக்கும்.
அவர்கள் நாளை எங்கே எப்படித் தங்கள் பொழுதை உல்லாசமாகப் போக்கலாம் என்ற வகையிலேயே சிந்திப்பார்கள்.
தீபச்செல்வன் போன்றவர்கள் ஈழத்தில் குறைவாகவே இருக்கின்றனர்.
அவர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழர்கள்தான் ஈழத்தில் இன்று அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற குப்பைகளைத் தடை செய்யட்டும்!

பொங்கி எழுவார்கள்...ஈழத் தமிழர்கள்!

தீபச் செல்வனுக்காக....ஈழத்து இலக்கிய வாதிகள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்!

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த இனமதவெறியை ஊக்குவிக்கும் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி பயங்கரவாத இயந்திரம் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சிகளுக்கு தடை விதிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற குப்பைகளைத் தடை செய்யட்டும்!

பொங்கி எழுவார்கள்...ஈழத் தமிழர்கள்!

தீபச் செல்வனுக்காக....ஈழத்து இலக்கிய வாதிகள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்!

ஈழத்திலும் ..... ஒரு வேளை புலம்பெயர்ந்து ஒரு சிலர் வாழலாம்.
ஆனால் தயவு செய்து இந்த இலக்கிய யுத்தம் .... இலக்கிய கூட்ட்டம் என்று 
பரிசில் லண்டனிலும் மாறி மாறி கூடுற இலக்கிய சிற்பிகள் இதை காணாமல் விடுவதே 
தீபச்செல்வனுக்கு சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இதில் கண்டிக்க என்ன இருக்கிறது ?

உங்களுடன் கிருபனை போன்றவர்களுடன் நான் முரண்படும் இடம் இதுதான்.
புத்தகம் என்பற்க்காக எமது இனத்தை அழிக்க மறைமுகமாக வரும் ஆயுத 
வடிவங்களுக்கும் நாம்  வர்த்தக முண்டு கொடுத்து வாசிக்க வேண்டுமா ?

கொழும்பில் இருந்து தமிழினியின் பெயரில் புத்தகம் வருகிறது எனும்போது 
இவ்ளவு அடிவேண்டிய தமிழனுக்கு என்ன வரும் என்று அறியும் புத்தி இன்னமும் இல்லையா ?

எதோ இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து பூ சொரிவதுபோல 
நாடகம் ஆடியவர்கள் யாராவது இப்போ இந்த தடை பற்றி ஏதும் சொல்ல போகிறார்களா ?

தமிழனை ஏய்த்து பிழைத்து வாழ்ந்தவன்தான் வாழ்கிறான்.
தமிழனுக்கு ஏதும் செய்ய நினைத்தவன் ..... தமிழனால் கூட கண்டுகொள்ள படுவதில்லை.  

சிறிலங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவோ, சிங்களவர்கள் மேலாதிக்க வெற்றிவாத மனநிலையில் இருந்து மாறியுள்ளார்கள் என்றோ ஒருபோதும் கருதியதில்லை.

சாத்திரியார் கூட தனது "அவலங்கள்" சிறுகதைத் தொகுப்பை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்திருந்தார்கள் என்று அங்கலாய்த்திருந்தார். பின்னர் எப்படியோ வெளியே விட்டுவிட்டார்கள்.

தீபச்செல்வனின் கட்டுரைகளை வாசித்தளவில் இப்புத்தகம் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு ஆவணம் என்றுதான் சொல்வேன். அழுத்தங்களைக் கொடுத்து உள்ளே விட செல்வாக்குள்ள தமிழ்த்தலைமைகள் உதவவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற குப்பைகளைத் தடை செய்யட்டும்!

பொங்கி எழுவார்கள்...ஈழத் தமிழர்கள்!

தீபச் செல்வனுக்காக....ஈழத்து இலக்கிய வாதிகள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தும்!

தற்பொழுது இலக்கியவாதிகள் என்றால் புலிகளை திட்டி ஒரு கதை அல்லது கட்டுரை எழுதியிருக்க வேண்டும் ..

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

தற்பொழுது இலக்கியவாதிகள் என்றால் புலிகளை திட்டி ஒரு கதை அல்லது கட்டுரை எழுதியிருக்க வேண்டும் ..

தற்போதுள்ள அநேகமான இலக்கியவாதிகள் கூலிக்கு மாரடிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சிறிலங்காவில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவோ, சிங்களவர்கள் மேலாதிக்க வெற்றிவாத மனநிலையில் இருந்து மாறியுள்ளார்கள் என்றோ ஒருபோதும் கருதியதில்லை.

சாத்திரியார் கூட தனது "அவலங்கள்" சிறுகதைத் தொகுப்பை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்திருந்தார்கள் என்று அங்கலாய்த்திருந்தார். பின்னர் எப்படியோ வெளியே விட்டுவிட்டார்கள்.

தீபச்செல்வனின் கட்டுரைகளை வாசித்தளவில் இப்புத்தகம் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு ஆவணம் என்றுதான் சொல்வேன். அழுத்தங்களைக் கொடுத்து உள்ளே விட செல்வாக்குள்ள தமிழ்த்தலைமைகள் உதவவேண்டும். 

நீங்கள் அப்படி கருதுவதாக நான் எண்ணவில்லை 
உங்களுடன் நான் முரண்படும் இடம் ....
எதையும் வாசிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்துடன் மட்டுமே 
அதில் மறைமுகமாக எமது இன துரோகிகளுக்கு முண்டு கொடுக்க வேண்டிய 
ஒரு துர்பாக்கிய நிலை வருவதால் .....இப்போதைய சூழ்நிலையில் 
நாம் இவ்வளவு ஆதி வாங்கிய அனுபவத்தில் .... யாரிடம் இருந்து என்ன வரும் என்ற 
ஓரளவான புரிந்துணர்வு இருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட எண்ணம். 
(இது தனிப்பட்ட எண்ணம் மட்டுமே. இது சரியானதாக இருக்கவேண்டும் என்று இல்லை 
அவர் அவர் வாழ்க்கையின் அனுபவம் எதிர்கால சிந்தனை சமூக நலன் சார்ந்த எண்ணம் போன்றவற்றில் 
இவை மாறுபடும்)
சிலர் இறைவனுக்கு தொண்டு என்று எண்ணி சாமியாகி போகிறார்கள் 
வெறும் சாமியாகி ஒருவருக்கும் உதவாது போகாமல் கடுவுளின் படைப்புகளை 
கொஞ்சம் பாதுகாப்போம் என்று எண்ணி சிலர் சமூக தொண்டு சார்ந்து தமது வாழ்வை 
அர்பணிக்கிறார்கள். எது சரி எது பிழை என்பது அவர் அவர் இஸ்டம் என்பதிலும் அவர் அவர் 
அறிவு சார்ந்ததும் கூட ..... எனது அறிவுக்கு விண்வெளி மற்றும் இதர கிரகங்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க 
தெரியாது. ஆனால் சிலர் கல்வி ஆராய்ச்சி என்று தமது வாழ்வையே அதில் அர்பணிக்கிறார்கள்.
இப்போது எந்த நேர செலவும் இன்றி நாம் வாழ்வை அனுபவிக்கலாம் ..... ஆதலால் அவர்கள் 
வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்று கூட அறிவுரை கூற முற்படலாம். நாளை ஒரு ஆபத்து பூமியை நோக்கி வானில் இருந்து வந்தால் ...? என்னை கூட காப்பாற்ற போகிறவர்கள் அவர்கள்தான்.

எதோ ஒரு இடத்தில் எல்லோரும் முரன்பட்டு கொள்கிறோம். அதைதான் நான் எழுதினேன் 
எனது நிலைப்பாடு இது என்பதே எனது கருத்தே தவிர ... உங்கள் எண்ணம் தவறானது என்ற முடிவை 
எனது நிலைப்பாட்டில் இருந்து நான் எடுக்கிறேன். இது எனது தனிப்படட அறிவு சார்ந்த விடயம் மட்டுமே.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.