Jump to content

நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் !


Recommended Posts

நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் !

 

 

முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளது.

1.jpg

இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2.jpg

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

4.jpg

இது தொடர்பாக மேலும் மீனவர்கள் கருத்து வெளியிடுகையில்,

மக்களை வாழ வைக்கும் இந்த நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர்மட்டம் தற்பொழுது மிகக்குறைவடைந்துள்ளது.

தொடரும் வெப்பநிலை அதிகரிப்பினால் மீன்கள் இறந்துள்ளன. இதனால் எமது சிறு கடல்தொழில் பாதிப்படைந்துள்ளது.

5.jpg

குறித்த நந்திக்கடலில் தேங்கியுள்ள சேற்று மண்ணை அகற்றுவதன் மூலம் மழைக்காலத்தில் அதிகமான மழைநீரை தேக்கி வைக்க முடியும்.

6.jpg

இது தொடர்பாக அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

7.jpg

மேலும், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆழ்கடல் மீன்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

8.jpg

 

 

Tags

http://www.virakesari.lk/article/20563

Link to comment
Share on other sites

நந்திக்கடல் வட்டுவாகல் பகுதியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள் !

 

முல்லைத்தீவில் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளன. இதன் காரணமாக வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தநிலையில் ஒதுங்கியுள்ளதனால்  துர்நாற்றம் வீசுவதை காணக்கூடியதாக உள்ளது.மேலும், இறந்த மீன்களை அகற்றுவதற்கு இயந்திர உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது.  இதன் காரணமாகவே வட்டுவாகல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் மீனவர்கள் கருத்து வெளியிடுகையில்,

மக்களை வாழவைக்கும் இந்த நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர்மட்டம் தற்பொழுது மிகக்குறைவடைந்துள்ளது. தொடரும் வெப்பநிலை அதிகரிப்பினால் மீன்கள் இறந்துள்ளன. இதனால் எமது சிறு கடல்தொழில் பாதிப்படைந்துள்ளது.

குறித்த நந்திக்கடலில் தேங்கியுள்ள சேற்று மண்ணை அகற்றுவதன் மூலம் மழைக்காலத்தில் அதிகமான மழைநீரை தேக்கிவைக்க முடியும். இது தொடர்பாக அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து ஆழ்கடல் மீன்களை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_3909-Copy.jpgIMG_3913-Copy.jpgIMG_3930-Copy.jpgIMG_3932.jpgIMG_3940.jpg

 

https://globaltamilnews.net/archives/28749

Link to comment
Share on other sites

நந்திக் கடலில் இன்றும் இறந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்கின

 


நந்திக் கடலில் இன்றும் இறந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்கின
 

முல்லைத்தீவு நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் இன்றும் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையொதுங்கின.

வட்டுவாகல் களப்பில் இறந்த நிலையில் தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் மீன்கள் கரையொதுங்கின.

இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்களை இன்று சிலர் எடுத்துச்சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வட்டுவாகல், நந்திக்கடல் மற்றும் வடக்காறு பகுதிகளில் பெருமளவு சிறியவகை மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதிகளில் நிலவிய நீண்டகால வறட்சியினால் நீரின் உவர்தன்மை அதிகரித்து ஒட்சிசன் அளவு குறைவடைந்துள்ளமையே பெருமளவு மீன்கள் உயிரிழப்பதற்கு காரணம் என நாரா எனும் தேசிய நீரியல்வள முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்திருந்தது.

மூன்று வருடங்களின் பின்னர், மீண்டும் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில் நாரா நிறுவனத்தின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு வட்டுவாகல் களப்புக்குச் சென்று ஆய்வுகளை நடத்தவுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தனர்.

http://newsfirst.lk/tamil/2017/06/நந்திக்-கடலில்-இன்றும்-இ/

Link to comment
Share on other sites

 

நந்திக் கடலில் இன்றும் இறந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்கின

Link to comment
Share on other sites

யாழ் இணைய தளத்துக்கும் நவீனனுக்கும் நன்றி. இது மிகவும் முக்கியமான செய்தியாகும். ஈழம் கடல்நீர் ஏரிகளின் சுவர்க்கமாகும். கடல்நீர் ஏரிகள்  நம் தாயகம் நமக்களித்த பெருஞ்செல்வமாகும். கல்டல் ஏரிகளை நன்நீர் ஆக்கும் யானையை வெழுத்து  வெள்லையாக்கும் சிந்தனைகளல்ல கடல் நீர் ஏரிகளை பாதுகாக்கிற செயல்பாடுகளே தாய் மணின் கோரிக்கையாகும்.

கடல் ஏரிகளில் மீன் இறப்பதுவும் திமிங்கிலம் கரை ஒதுங்குவதும் இரு வேறு பிரச்சினைகள். இதில் க்டலேரிகளில் மீன் இறக்கும் பிரச்சினை நம் தாயகத்தின் உள்ளார்ந்த பிரச்சினையாகும்.

கடல் ஏரிகளில் ஒக்சிசன் குறைவதற்கான வரட்ச்சி கால பிரச்சினைகள் குறிப்பாக அடர்தி மாற்றம் இரசாயன செயல்பாடுகள் பற்றி முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது.

இவற்றோடு வயல் கழிவு நீரோடு வரும்  விவசாய இரசாயனங்களையும் நமது நெய்தலை நப்ஜ்சாக்கும் இறால் வளர்ப்பையும் கட்டுப்படுத்தல் கண்டல் தாவரங்களை வளர்க்கு திட்டம்மூலம்  அலையாத்தி காடுகளைக் காப்பாற்றி பராமரித்தல்போல பல்துறை பணிகளில் வடகிழக்கு மாகாண அதிகாரிகளும் பல்கலைக் கழகங்களும்  விஞானிகளும் ஒருங்கிணைந்து பணி புரிய வேண்டும், இத்தகைய முயற்ச்சிகளுக்கு புலம் பெயர்ந்த தமிழ் விஞானிகளும் ஆர்வலர்களும் பெரிய அளவில் உதவிட முடியும்  

Link to comment
Share on other sites

நந்திக்கடலில் மீன்கள் இறப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டது

 


நந்திக்கடலில் மீன்கள் இறப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டது
 

ஒட்சிசன் குறைப்பாடே நந்திக்கடல் களப்பில் மீன்கள் இறப்பதற்கான காரணம் என நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில், நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளமை மற்றுமொரு காரணம் எனவும் நாரா நிறுவனத்தின் சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி நிரோஷன் விக்ரமஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நந்திகடல் பகுதியில் ஓரளவு மழை பெய்தமையால் ஏற்பட்ட குழப்ப நிலைக் காரணமாக மீன்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் நண்டுகள் இறக்கவில்லை எனவும் நாரா நிறுவனத்தின் சுற்றாடல் பணிப்பாளர் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி நிரோஷன் விக்ரமஆராச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நந்திக்கடல் வட்டுவாகல் களப்பில் கடந்த சில தினங்களாக இறந்த நிலையில் இலட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/06/நந்திக்கடலில்-மீன்கள்-இற/

Link to comment
Share on other sites

நந்திக்கடல் மீன்கள் இறந்தமைக்கான காரணம் வெளியாகியது..!

 

 

முல்லைத்தீவின் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியுள்ளமை தொடர்பிலான காரணம் வெளியாகியுள்ளது.

2.jpg

மீன்களின் உயிரிழப்பு குறித்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான நாரா மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்டு வெப்பநிலை அதிகரிப்பே இதற்கு காரணமென நாராவின் சூழல் ஆய்வு பிரிவின் தலைவர் எஸ்.ஏ.எம். அஸ்மி வீரகேசரிக்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் களப்பு பகுதியிற்கும் கடலுக்குமான தொடர்பு துண்டிக்கப்படவே, கடல் நீருடன் நதி நீர் கலக்கும் போது உருவாகும் ஒக்சிஜனின் அளவு அதிகமாகி நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

5.jpg

அத்தோடு தொடர் வறட்சியில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதியில் இடையில் பெய்த மழை காரணமாக கடலுக்கு அடித்துவரப்பட்ட கழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இரசாயன தாக்கத்தினாலேயே மீன்கள் இறக்க நேரிட்டதாக தெரிவித்தார்.

குறித்த நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் காணப்படும் மணல் மேடானது, கடலுக்கும் களப்பு பகுதிக்குமான தொடர்பை தடுப்பதாகவும், இதனால் குறித்த மணல் மேட்டு பகுதியை அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20641

Link to comment
Share on other sites

நந்திக்கடலில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மீன்கள்: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள்

 


நந்திக்கடலில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மீன்கள்: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள்
 

முல்லைத்தீவு – நந்திக்கடல், வட்டுவாகல் களப்பில் உயிரிழந்த நிலையில் இன்றும் மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

வட்டுவாகல் களப்பில் ஐந்தாவது நாளாக இந்த நிலைமை தொடர்கிறது.

அங்கு கடந்த வெள்ளிக்கிழமை (02) உயிரிழந்த நிலையில் இலட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கின.

அதன் பின்னர், தொடர்ந்து மீன்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இன்றும் அந்த நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது.

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்களை சிலர் எடுத்துச் செல்கின்றனர்.

எவ்வாறாயினும், இறந்து ஒதுங்கிய மீன்கள் உணவுக்குப் பொருத்தமானவை இல்லை எனவும், அவற்றை உண்ண வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி, கலாநிதி நிரோஷன் விக்ரம ஆராச்சி குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை ஊடறுத்துச் செல்லும் பல ஆறுகள் கடலுடன் சங்கமிக்கும் இடமாக நத்திக்கடல் பகுதி காணப்படுகிறது.

கடல்வாழ் உயிரினங்களுக்கு குறைவில்லாத வட்டுவாகல் கடல்நீரேரி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கும் கைகொடுக்கிறது.

மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள் தாம் ஆழ் கடலுக்குச் சென்று பிடிக்க வேண்டிய மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதால் செய்வதறியாது தவிக்கின்றனர்.

இதேவேளை, இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவது தொடர்பில் விசேட விசாரணைகள் இடம்பெறுவதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

http://newsfirst.lk/tamil/2017/06/நந்திக்கடலில்-தொடர்ந்து/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.