Jump to content

உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..!


Recommended Posts

உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1

 

கோடம்பாக்கம் தேடி... சினிமா

மிழ் சினிமாவின் ஒவ்வொரு வெற்றிப்படத்திற்குப் பின்னேயும் கோடம்பாக்கக் கனவுகளோடு சென்னைக்கு வண்டி ஏறுபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆகவேண்டும், நடிகர் ஆகவேண்டும் எனப் பெரிய லட்சியங்களின் முதல் அடியாகக் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைப்பவர்களும், சினிமாவின் ஒரு மூலையிலாவது தனது பங்கிருக்க வேண்டும் எனும் தாகத்தோடு லைட்மேன், அஸிஸ்டென்ட் ஆக  விரும்புகிறவர்களும் இந்தப் பெரும் பட்டியலில் இருக்கிறார்கள். காலத்தின் வேகத்தில் கேமரா ட்ராலியின் பின்னே ஓடமுடியாதவர்கள் மூச்சு வாங்கிப் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். முயன்று முன் செல்பவர்கள் டைட்டில் கார்டுகளில் மின்னுகிறார்கள்.

அப்போதைய ரீல் பெட்டி காலத்தில் மட்டுமல்ல... பாகவதர் காலம் முதல், பாலசந்தர், பா.ரஞ்சித் காலம்வரை இதுதான் நிலைமை. அப்படி, சினிமாவின் 70 எம்.எம் கனவுகளோடு சென்னைக்குப் பயணப்படுகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கதையைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். இன்னும் ஒரு ஓரத்தில் கூட இடம் கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கிற மற்றும் சினிமாவில் சின்ன அறிமுகம் கிடைத்துப் பெரிய மாரத்தானில் ஓடிக்கொண்டிருக்கிறவர்களின் சென்னைக்கு வண்டி ஏறிய அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். அந்த அனுபவங்களின் சுவாரஸ்யங்களையும், அவர்கள் சந்தித்த மனிதர்களையும் பற்றிப் பேசலாம். சினிமா உலகில் பல்லாயிரக்கணக்கான கோடி வணிகம் நடைபெறுவதைப் போலவே, சினிமா வாய்ப்புத் தேடி வருபவர்களைச் சுற்றியும் பெரும் வணிகம் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேச எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. பேசிப் பெறுவோம்...

இயக்குநர்

அவர் தற்போது ஊடகத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நண்பர். பள்ளிக்கூடம் படிக்கிற காலம் முதலே சினிமாவின் மீது தீவிரமான ஈர்ப்பு உடையவர். சினிமாக் கனவுகளுக்கும், குடும்பத்தின் சூழல்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு உழன்றிருக்கிறார். 'சினிமா'வைப் பற்றிய தவறான பிம்பங்ளால் குடும்பத்தினர் அனுமதிக்க மறுக்க, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பால்டாயிலில் சீயக்காயைக் கரைத்துக் குடித்திருக்கிறார். அவர் சீரியஸாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போது 'அது ஏங்க சீயக்காயைக் கரைச்சுக் குடிச்சீங்க..?' என்றெல்லாம் கேட்டால் கும்பிபாகம் நிச்சயம் என்பதால் விட்டுவிட்டேன். பாவம் அவருக்கென்ன கஷ்டமோ... படிக்கும் நீங்களும் அப்படியே விட்டுவிடுங்களேன்.

டூரிங் டாக்கீஸ் படங்கள் பார்த்து ஃபிலிம் ரோலின் மீது பெருத்த மையல் கொண்டவருக்கு, செய்தித்தாள்களில் வரும் 'சினிமா வாய்ப்பு' விளம்பரங்களைக் கத்தரித்துச் சேகரிக்கும் அளவிற்கு வெறி ஊறிப்போனது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு நாள், நைட் ஸ்டடி இருப்பதாக முதல் நாளே வீட்டில் சொல்லிவிட்டு அவரும் அவரது நண்பரும் சென்னைப் பட்டினத்துக்கு ரயில் ஏறியிருக்கிறார்கள். எழும்பூர் வந்திறங்கி அந்தச் செய்தித்தாள் விளம்பரத்தில் இருந்த முகவரிக்குச் சென்று உதவி இயக்குநராகும் ஆசையைச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு பீஸுகள் சிக்கிக்கொண்டதை அடுத்து, தலைக்கு 250 ரூபாயை முன்பணமாகக் கட்டச் சொல்லிப் பின்னர் போனில் அழைப்பதாகக் கூறியிருக்கிறார்கள். வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் மாலையில் ரயிலேறினால் விடியும்போது அவர்கள் ஊருக்குப் போய்விடலாம்.

'நீங்கள் சினிமாவில் சாதிக்க... எங்கள் கதவு திறந்தே இருக்கிறது' என விளம்பரம் கொடுத்திருந்தவர்களை ஒருமுறை பார்க்கப் போனால் அந்த ஆபிஸில் கதவே இல்லையாம். 'என்னடா இது சினிமாவுக்கு வந்த சோதனை' எனப் புலம்பியபடியே திரும்பியிருக்கிறார்கள். ஆனாலும், இந்த சினிமா வாய்ப்புத் தரும் (?) நிறுவனங்கள் சங்கம் வைத்து இந்த வேலையைச் செய்து வருவார்கள்போல. எல்லா உப்புமா கம்பெனிக்காரர்களும் சொல்லிவைத்தாற்போல 250 ரூபாயைத்தான் வசூலித்து வந்திருக்கிறார்கள். இந்தத் தொகை அந்தத்தக் காலகட்டத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வேலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக்கொண்டிருப்பவர்களும் எப்போதோ இதே முறைப்படி பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக்கூடும் எனப் பட்சி சொல்கிறது.

சினிமா

இப்படியே, நான்கைந்து முறைகள் நைட் ஸ்டடி போவதாகச் சொல்லிச் சென்னைக்கு வருவதும், சேர்த்து வைத்த பணத்தைத் தலைக்கு 250 ரூபாய் அழுவதுமாகக் கடந்திருக்கிறது காலம். அந்தத் தயாரிப்புக் கம்பெனிக்காரர்கள் திரும்ப அழைக்கவுமில்லை. எடுக்கப்போவதாகச் சொன்ன படங்களை எடுக்கவுமில்லை. ஆபிஸ் இருக்கும் அறையை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாஸ்துப்படி இடமாற்றம் செய்து விடுவார்கள் போல... முன்பு ஆஞ்சனேயர் பெயரில் இருந்த புரொடக்‌ஷன் கம்பெனி அடுத்தமுறை அதே இடத்தில் 'குமரன் புரொடக்‌ஷன்ஸ்' ஆகியிருக்குமாம்.

இத்தனைக்குப் பின்பும் இன்னொருமுறை ஒரு எக்மோர் உப்புமா புரொடக்‌ஷன் கம்பெனிக்குப் போயிருக்கிறார்கள். அதே 250 ரூபாயைக் கொடுத்துவிட்டு 'உனக்கு எரநூத்தி அம்பது, எனக்கு எரநூத்தி அம்பது ஆகமொத்தம் ஐநூறு. சியர்ஸ்' எனப் புலம்பியபடி திரும்பும்போதுதான் இது வேலைக்கு ஆகாது என மெடூலா ஆப்லங்கட்டாவில் மெள்ள உரைத்துக் கொஞ்சமாகச் சுதாரித்திருக்கிறார்கள். சரி, கடைசியாகக் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஊருக்குப் போய்விடலாம் என அந்த மொபைல் நம்பருக்குத் திரும்பவும் அழைக்க, அதற்குள் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கிறது. நேரில் போய்ப் பார்த்தால், சந்தடிசாக்கில் கடையையே காலி செய்திருக்கிறார்கள். இந்த அட்டெம்ட்டும் ஃபெயிலியர் ஆன சோகத்தோடு நண்பரும், அவரது நண்பரும் 'இதுதான் கடைசி...' என ஊர் திரும்பி இருக்கிறார்கள். இதைப்போன்ற சம்பவம் சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்த பலருக்கும் நேர்ந்திருக்கும்.

ஒரே ஒரு காமெடியின் மூலம் உலக லெவல் ஃபேமஸ் ஆன நடிகர் அவர். சென்னைக்கு வந்த கதையைச் சொல்லும்போதே கண்கலங்கும் அந்த நடிகர் யார் தெரியுமா..? அடுத்த பதிவில்...

 
 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/90818-problems-faced-by-future-director---kodambakkam-thedi-series-1.html

Link to comment
Share on other sites

'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 2

 
 

கோடம்பாக்கம் தேடி - சினிமா
பாகம் 1 படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


மில்லினியம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரைப் பக்கம் உசிலம்பட்டியிலிருந்து, கனவுக்கோட்டை கட்டிக் கையோடு கொண்டுவந்தவர் அவர். அவர் சென்னைக்கு வண்டியேறியது சினிமாவில் ஏதோ ஒரு இடத்தை எப்படியாவது பற்றிப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக... வெள்ளித்திரையில் முகம் காட்டி, பிறகு நாயகனாகச் சிலபல படங்கள், அப்படியே அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகிவிடவேண்டும் என்கிற தீராத அவாவெல்லாம் அவரிடம் இல்லை. நல்ல படங்களை இயக்க வேண்டும், தான் வசனம் எழுதும் படங்கள் சிறந்தவையாக அமையவேண்டும் என்பதுதான் அப்போதும் இப்போதும் அவரது கனவாக இருக்கிறது.

சென்னைக்கு வந்தது முதலே சினிமாவில் பணியாற்ற வாய்ப்புத் தேடினார்... தேடினார்... தேடிக்கொண்டே இருந்தார்... முதலில் நாள்கணக்கில் ஆரம்பித்திருந்த இந்த வாய்ப்புத் தேடும் படலம், பின்பு வாரக்கணக்காகி, மாதக்கணக்காகி, வருடக்கணக்காகிவிட்டது. ஒருகட்டத்தில் சினிமாவுக்கான எல்லாக் கதவுகளும் எட்டுத் திசைகளிலும் அடைக்கப்பட்டதைப் போலான ஒரு சூழலை உணர்ந்தார். இவையெல்லாம் சிலபல வருடங்களுக்கு முன்பு... இப்போது அவருக்குத் திருமணமாகியிருக்கிறது. இவற்றிற்கிடையே கிரீம்ஸ் சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, இன்றும் அவரால் ஊன்றுகோல் துணையின்றி நடப்பது சிரமம்.  

 

இவர் வசனம் எழுதிய சில படங்கள் வேறு யாரோ பெயரோடு வெளிவந்திருக்கின்றன. இவர் வேலை பார்த்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அத்தனையையும் விட, இவரை இப்போது எல்லோருக்கும் தெரிவது ஒரு காமெடி நடிகராகத்தான். இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய 'ரஜினிமுருகன்' படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு துணை நடிகர் குறிப்பிட்ட காட்சியில் ஆறேழு டேக் வாங்கிச் சொதப்ப, இவர் சொல்லிக் கொடுக்கிறார். அப்போதும் சரியாக வரவில்லை. இயக்குநர் பொன்ராம், 'பேசாம நீயே நடிச்சிறேன்யா...' எனச் சொல்ல கேமராவுக்குப் பின்னே நின்றவர் அப்போது ஃப்ரேமுக்குள் வருகிறார். அந்த ஆண்டு முழுவதும் வெவ்வெறு மாடுலேஷனில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வசனமாக ட்ரெண்டாகிறது அவர் பேசிய அந்த வசனம். 'என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை..!' பவுன்ராஜ் எழுதிப் பேசிய இந்த வசனம் இவர் சென்னைக்கு வந்த நாள் முதலே நித்தமும் உணர்கிற வலிமிகுந்த வாக்கியம். ஆனால், ஊரே சிரித்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தாலும், மதுரைக்கார பவுன்ராஜுக்கு சோதனைகளை கொஞ்சமேனும் தகர்த்தது ரஜினிமுருகன் தான்

" என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன
   ஆனால், அது என் உதடுகளுக்குத் தெரியாது.
   அது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்..! "
                                                                                                
                                                                                                                   - சார்லி சாப்ளின்

'இந்த சினிமா உலகம் நம்மை எங்கோ கொண்டுபோயிடும்னு பூரணமாக நம்பியிருந்தேன். திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப் பாடல்கள் எழுதுவது என எதையாவது பண்ணிப் பெரிய ஆளாகிடலாம்னு நினைச்சு வந்தேன். நான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருந்தா 'பாகுபலி' விஜயேந்திர பிரசாத் மாதிரி இந்நேரம் வளர்ந்திருக்கலாம். ஆனால், என் சென்னை வாழ்க்கை நான் நினைச்ச மாதிரியா ஆரம்பிச்சுச்சு..?

பவுன்ராஜ் - ரஜினிமுருகன்

உசிலம்பட்டியிலிருந்து கோயம்பேடு போற லாரியில் இங்கே வந்தேன். வந்துட்டு, எங்க போறதுனு தெரியாம ஒரு மாசம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்லயே படுத்துக் கிடந்தேன். அப்புறம், போலீஸ்காரங்க வந்து இங்கலாம் படுக்கக் கூடாதுனு விரட்ட ஆரம்பிச்சாங்க. ஊருக்குப் போறதுக்குச் சீக்கிரம் பஸ் வரணும்னு வேண்டிக்கிட்டு இருந்தவங்களுக்கு மத்தியில போலீஸ்காரங்க வந்துடக்கூடாதுனு வேண்டிக்கிட்டவன் நான் ஒருத்தனாதான் இருப்பேன்.' எனச்  சொல்லும்போதே தழுதழுத்தார் பவுன்ராஜ்.

 

'போலீஸ்காரங்க தொந்தரவு தாங்க முடியாம அப்புறம் வடபழனி பஸ் ஸ்டாண்டுக்குப் போய்க் கொஞ்சநாள் படுத்திருந்தேன். கழுதை கெட்டா குட்டிச் சுவருங்கிற மாதிரி சினிமா வாய்ப்புத் தேடி வர்றவங்களுக்கு வடபழனி. அங்கே, ஒரு பெயின்ட்டர் என்னைப் பார்த்து விசாரிச்சார். 'என்னடா நோஞ்சான் மாதிரி இருந்துக்கிட்டு எப்படிடா சினிமாவுல போய்க் கதை வசனம் எழுதுவ...'னு கேட்டு எனக்குத் தங்குறதுக்கு இடம் கொடுத்தார். அவர் கூடமாடச் சேர்ந்து பெயின்ட்டர் வேலை பார்த்தேன். அந்த வேலையைப் பத்தி ஒண்ணும் தெரியாமலேயே அவங்க சொல்ற இடத்தில் பெயின்ட்டைப் பூசிக்கிட்டு இருப்பேன். என்னோட ஆர்வம் எல்லாம் சினிமாவைத் தவிர வேற எந்தப்பக்கமும் திரும்பலை. ஒரு வாரம் பூராம் வேலை பார்த்துச் சம்பளத்தை வாங்கிக்கிட்டு, அடுத்த வாரம் சினிமா வாய்ப்புத் தேடுவேன். அப்புறம் வேற வேலை பார்ப்பதும், சம்பளம் வாங்கி சினிமா வாய்ப்புத் தேடுறதும்னு காலம் போய்க்கிட்டு இருந்துச்சு. ஹோட்டல்ல சர்வல் வேலை பார்க்குறதுல, ஆரம்பிச்சு ஜல்லிக்கல் கொட்டுற லோடுமேன் வேலை வரைக்கும் அந்த நாலு வருசத்துல நான் பார்க்காத வேலையே இல்லை.' 

" எதை இழந்தீர்கள் என்பதல்ல...
   இப்போது என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்..! "

                                                                                        - ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் 

 

'இப்படிப் போய்க்கிட்டு இருந்த வாழ்க்கையில் 'மலையன்', 'வேல்முருகன் போர்வெல்ஸ்' படங்களின் இயக்குநர் கோபியின் அறிமுகம் கிடைச்சது. கேமராமேன் ப்ரியனைப் பார்த்தேன். சினிமாவில் சாதிக்கத் துடிக்கிற சக நண்பர்களின் பழக்கம் மீண்டும் சினிமாவை நோக்கி உந்தித்தள்ள ஆரம்பிச்சிடுச்சு. சென்னைக்கு வந்த நாலு வருசத்துல தூரமாகிக்கிட்டே போன சினிமா இப்பதான் கொஞ்சம் கிட்ட வர ஆரம்பிச்சிச்சு. 'மலையன்' படம் எடுக்கும்போது நானும் சேர்ந்து வேலை பார்த்தேன். ஆனால், அந்தப் படம் நல்லா போகலை. அப்புறம் பொன்ராம் சார் கூடச் சேர்ந்ததுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. அவரோட படங்களில் கதை, வசனத்தில் உதவி பண்ணினேன். 'ரஜினிமுருகன்' படத்தில் எதிர்பாராவிதமா நடிச்சது இப்போ என்னை எல்லோருக்கும் தெரியவும் வெச்சிடுச்சு. 

பனானா பவுன்ராஜ் - கோடம்பாக்கம் தேடி

என் கடந்தகாலக் கவலையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு, இனி என் ஆசைகள் நிறைவேறும் காலம் வரும். வாழ்க்கை முழுக்கக் கஷ்டங்களை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்த நான் இப்போதான் வெற்றிங்கிற வெளிச்சத்தைப் பார்க்க ஆரம்பிச்சுருக்கேன். நான் சினிமாவில் பெரிய ஆளாகுறதுக்காக மெட்ராஸுக்குப் போறேனு சொல்லும்போது சிரிச்ச என் சித்தப்பா இப்போ டி.வி.யில் என் காமெடியைப் பார்த்துச் சிரிக்கிறாரு. வாழ்க்கை எம்புட்டு வினோதமானது பாருங்க..!' என்கிறார் மெலிதாகச் சிரித்தபடி.

 

இப்படித்தான் சினிமாக் கனவுகளோடு வருபவர்கள் எல்லோரையும் வெச்சு செஞ்சு வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்புதான் அவர்களைச் செதுக்கவே தொடங்குகிறது இந்தக் கோடம்பாக்கச் சமூகம். ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதெல்லாம் ஒபாமாவுக்கும் கூடச் சாத்தியமில்லையே..! 

இன்றைய சென்னையின் இத்தனை அடர்த்திக்கும் சினிமாதான் காரணம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? எப்படி..? அடுத்த பதிவில் பார்க்கலாம். 

 
 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/others/cinema-serials/91071-comedian-pounrajs-cinema-experience---kodambakkam-thedi-series-part-2.html

Link to comment
Share on other sites

நடிகர் பாண்டியனை வெறுக்கும் டீக்கடைக்காரர்.. ஏன்? - கோடம்பாக்கம் தேடி! #Cinema மினி தொடர் Part 3

 

கோடம்பாக்கம் தேடி

 

ம் ஊர்களில் இப்படியான வகையினர் சிலர் இருப்பார்கள். நாட்டில் நடக்கிற எல்லா அக்கப்போர்களுக்கும் ஒரே காரணம் இந்த சினிமாக்காரர்கள்தாம் என்பார்கள். 'அரசியல் ஒரு சாக்கடை' எனப் பொத்தாம்பொதுவாக பப்ளிக் கமென்ட் போட்டுவிட்டு நகர்ந்துவிடுகிற கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்தான் இவர்களும். 'நீயாவது வந்து சுத்தப் படுத்தேன்யா...' எனக் கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டார்கள். 'அடப் போப்பா அது ஒரு சாக்கடை...' என 'அன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும்...' எனப் புலம்பல் கதைகளையே ரிப்பீட் மோடில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சரி, அதை விட்டுவிடலாம். சினிமாக்காரர்கள்தான் அநியாயங்களுக் காரணம் என ஏன் சொல்கிறார்கள் என்பதையும் கூட விட்டுவிடலாம்.  சென்னையின் அடர்த்திக்குச் சினிமா ஒருவிதத்தில் பெரும் காரணமாயிருக்கிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த மக்கள் நெருக்கத்திற்கும் கோடம்பாக்கத்திற்கும் அப்படி என்னதான் தொடர்பு..?

அவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாகச்  சென்னையின் இதயப் பகுதியான மவுன்ட் ரோட்டில் டீக்கடை வைத்திருக்கிறார். திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமம்தான் சொந்த ஊர். 'சம்பாத்தியம் கைக்கும் பத்தல... வாய்க்கும் பத்தல... குடும்பத்தை ஓட்டுறதே பெரிய சாதனையா இருக்குப்பா...' என எப்போதாவது புலம்பிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் நன்றாக வியாபாரம் ஆகும் கடைதான் அது. ஐ.டி. கம்பெனிக்காரர்கள், அருகிலிருக்கும் ஐந்தாறு வங்கி ஊழியர்கள் எனப் பலரின் இன்டர்வெல் நேரம் விடிவதே இந்தக் கடையில்தான். சில நாட்களில் சாப்பாட்டை எல்லாம் மறந்து டீ ஆற்றிக் கொண்டிருப்பார். காலையில் வாங்கி வைத்த பொங்கல் ஒரு ஓரத்தில் காத்து வாங்கிக் கொண்டிருக்கும். டீக்கடை வைத்து அம்பானியாகும் கனவோடுதான் வந்திருப்பார் போல என அதுவரை நினைத்திருந்தேன்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறந்து வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதுதான் இவர் அம்பானி ஆகும் கனவோடு வந்தவரல்ல... சூப்பர்ஸ்டார் ஆகும் கனவோடு சென்னைக்கு வண்டி ஏறியவர் எனத் தெரிந்தது. பெரிய டைரக்டர்களிடம் ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பு வாங்கிவிட்டால் காலத்துக்கும் கவலையில்லை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு நான்கைந்து துணை நடிகைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கலாம் எனக் கணக்குப் போட்டுக் கனவு கண்டபடியே கோயம்பேட்டில் இறங்கியவருக்குக் கோடம்பாக்கம் பஸ்ஸைக் கண்டுபிடிக்கவே ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. கோடம்பாக்கம் ஒரு சொர்க்கலோகம்... சொர்க்கத்தில் ரம்பையும், ஊர்வசியும் போல இங்கே ரஜினியும், கமலும் குறுக்கும் மறுக்குமாக வாக்கிங் போவார்கள். நிமிர்ந்து பார்த்தால் ஏதோவொரு டைரக்டராகத்தான் கண்ணில் படுவார் என நம்பியவருக்குப் பாவம் கொடூர ஏமாற்றம்! 

வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோ (பாரதிராஜா -சினிமா வாய்ப்பு)

அடுத்த வருடத் திருவிழாவுக்கு வரும்போது பெரிய ஹீரோவாக அம்பாஸிடர் காரில்தான்  ஊருக்கு வருவேன் என எல்லோரிடமும் சபதம் வேறு எடுத்திருந்திருக்கிறார். இங்கே வந்து விசாரித்துத் திரிகையில், பெயர் தெரியாத படங்களுக்கு டைரக்டர் எனச் சிலர் அறிமுகமாகி டிபன், சாப்பாடு எல்லாம் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கல்லாக் கணக்கை இவர் தலையில் எழுதி இருக்கின்றனர். சேர்த்துவைத்துக் கொண்டுவந்திருந்த பணத்தை வைத்துச் சென்னையில் ஒரு வாரம் கூடத் தாக்குப் பிடிக்கவில்லை. மெரினா பீச், வள்ளுவர் கோட்டம், ஏ.வி.எம் ஸ்டுடியோ என இன்னும் ஒரு வாரம் சுற்றியவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஹீரோவாகும் வாய்ப்பு தெரியவில்லை. நம்ம ஆள் 'நடிச்சா ஹீரோதான் சார்... இந்த ஹீரோவுக்கு ஸ்நேகிதன், ஹீரோயினுக்கு சித்தப்பா கதாபாத்திரம்லாம் வேணாம் சார்... நான் வெய்ட் பண்றேன்' எனச் சொல்லும் விருச்சிககாந்த் கேரக்டர் கூட இல்லை. துண்டு துக்கடா ரோல்களில் தலைகாட்டியதைச் சந்தோசமாகச் சொல்லிக்கொண்டாவது அடுத்த திருவிழாவுக்குப் போய்விடலாம் எனத் தனக்குத் தானே சபதத்தைத் தளர்த்தியும் கொண்டிருக்கிறார். இருந்தும் என்ன பிரயோஜனம்... இரண்டு அமாவாசைகள் கடந்தும் இவர் கனவுக்கு ஒரு விடிவுகாலம் வந்தபாடில்லை.

அதற்கு மேல் அவருக்கும் பொறுமை இல்லை... அல்லிநகரம் பாரதிராஜாவுக்கும் பொறுமையில்லை. பாரதிராஜா புதுமுக நடிகர் பாண்டியனை வைத்து 'மண்வாசனை' எடுக்கத் தொடங்கிவிட்டார். நம்ம டீக்கடை அண்ணன், திருச்சிக்காரர் ஒருவர் வண்டலூரில் வைத்திருந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். 'பாண்டியன்னு ஒரு நடிகர் புதுசா வந்துருக்காராம்ல... அந்தமாதிரி நாமளும் ஆகிடலாம். பாரதிராஜா கண்ணுல பட்டுட்டா போதும். பிறவிப்பயனை அடைஞ்சிடலாம்' என நினைத்து, வேலை செய்யும் கடையில் சொல்லாமல் கொள்ளாமல் பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருக்கிறார். புதுப்படப் பரபரப்பில் திரிந்தவரிடம் ஹீரோ சான்ஸ் கேட்க, 'எ ஃபிலிம் பை' பாரதிராஜாவும் 'அடுத்த படம் ஆரம்பிக்கும்போது கூப்பிடுறேன். போய்யா' எனக் கொஞ்சம் கடுப்பாகி இருக்கிறார். அவர் சொன்னதும் திரும்பி வந்து டீக்கடை ஓனரின் கையைக் காலைப் பிடித்து அதே டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 

காதல் காமெடி - சினிமா

பாரதிராஜா அடுத்த படம் எடுக்கும்போது மெட்ராஸில் சொந்தமாக அட்ரஸ் கூட இல்லாத இவரை எப்படிக் கூப்பிடுவார்? என்கிற அவலமிக்க நிதர்சனமே பிறகுதான் இவருக்குப் புரிந்திருக்கிறது. அதே வருடத்தில் பாரதிராஜாவுக்கு நல்லநேரம் வந்து இந்திப் படமும் எடுத்தார். இந்திப் பட ஹீரோ லுக் இவருக்கு இல்லை என இவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு பாரதிராஜாவைத் தேடிப் போய்ப் பார்த்துத் தர்மசங்கடத்தை உண்டாக்கவில்லை போலும். நடிகர் பாண்டியனை வைத்து அடுத்த வருடமே பாரதிராஜா 'புதுமைப் பெண்' படத்தையும் இயக்கினார். இன்று வரை நம் டீக்கடைக்காரருக்கு பாண்டியன் எனும் பெயரைப் கேட்டாலே கடுப்பாகி விடுகிறதாம். இப்படிச் சென்னையின் தெருக்களில் டீக்கடை வைத்திருப்பவர் முதல் காய்கறிக்கடை வைத்திருப்பவர் வரை பலர் அம்பானி, பிர்லா ஆகும் கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்கள் அல்லர். பாரதிராஜாவாகவும், பாண்டியன்களாகவும் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு மெட்ராஸ் வண்டியைப் பிடித்தவர்கள்தாம். 

இப்படியாக டிஜிட்டல் கலர் கனவுகளோடு வந்தவர்களில் சிலர் வேறு வாய்ப்புகளின்றி மீண்டும் ஊர் திரும்பி விடுகிறார்கள். ஆனால், பலர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் ஊர் திரும்பவும் முடியாமல் வேறு ஏதேனும் வேலைகளைச் செய்தபடி இங்கேயே தங்கி விடுகிறார்கள். அவர்கள் சோற்றுக்காகவும், குடும்பத்துக்காகவும் எந்த வேலைகளை வேண்டுமானாலும்  செய்துகொண்டிருக்கலாம். ஆனால், சினிமாவை கானல் நீராகத் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தவண்ணமே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அண்ணா சாலைக்கும், கோடம்பாக்கத்திற்கும் இடையேயான தூரம் அன்று நான்கு கிலோமீட்டர். இன்று நானூறு கிலோமீட்டர். லட்சியத்துக்கும், வாழ்க்கைக்குமான தூரத்தில் இந்தப் பயணமும் ஒரு கானல் நீர்.

சென்னையின் அடர்த்திக்கு சினிமாவும் ஒருவகையில் காரணம் என்பது இப்போது கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறதா..?

 

 
 

- இன்னும் ஓடலாம்... 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/91275-bharathiraja-movie---kodambakkam-thedi-series-part-3.html

Link to comment
Share on other sites

‘அனகோண்டா படத்தோட கதை நம்மாளோடதுதான்..’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 4

 
 

கோடம்பாக்கம் தேடி..! - சினிமா

 

கோடம்பாக்கத்துக்கு ஸ்ட்ரைட்டாக வரமுடியாமல் தமிழகத்தின் தெற்குப் பக்கம் இருப்பவர்களின் வசதி (?!) கருதி, சினிமாவின் தலைநகர் கோடம்பாக்கத்தின் நேரடிக் கிளை அலுவலகங்கள் ஆங்காங்கே 'வேறு எங்கும் கிளைகள் இல்லை' எனும் சப் டைட்டிலோடு செயல்பட்டு வருகின்றன. 'புது இயக்குநர் இயக்கவிருக்கும் புதுப்படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவை... சினிமாவில் சாதிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்க...' என இப்போதும் விளம்பரங்கள் வந்துகொண்டுதாம் இருக்கின்றன. புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பக்கம், மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்புறம், திருநெல்வேலி ஜங்ஷன் மீனாட்சிபுரம் பக்கம் எனச் சில இடங்களில் இன்றும் இதேபோல புதுமுகங்களைத் தேடுகிற நோட்டீஸ்கள் கண்களில் படும். பள்ளிப்படிப்பு முடிகிற கையோடு மேக்ஸி சைஸ் புகைப்படம் ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புக்காகக் காத்திருக்கிறவர்கள்தான் இவர்களுக்குத் தீனி. நூறு முதல் ஆயிரம் வரை அட்வான்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு அடுத்த பட டைட்டிலோடு வேறு நோட்டீஸ் அடிக்கக் கிளம்பி விடுவார்கள்.  

இப்படித்தான் புதுக்கோட்டையில் வசிக்கும், ஒரு படம் கூட இயக்காமல் 'இயக்குநர்' எனச் சொல்லிக்கொள்ளும் ஒருவர்,  'உதவி இயக்குநர், நடிகர்கள் தேவை' என நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். சினிமாவில் உதவி இயக்குநராவதற்கு முயன்றுகொண்டிருக்கும் நமது நண்பர், சென்னைக்குப் போய்த் திரும்பி வருவதற்குப் பதிலாக பக்கத்திலேயே இருக்கிற புதுக்கோட்டைக்குப் போயிட்டு வந்துடலாமே என யோசித்து இந்தமுறை புதுக்கோட்டைக்குப் போயிருக்கிறார்.

சினிமா வாய்ப்பு - இப்போதும் நவீன போஸ்டர்கள்

அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியைத் தேடினால் அது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஸ்வீட் ஸ்டால் அட்ரஸ். அந்தக் கடையை ஒட்டி, ஒரு ஆள் மட்டுமே நுழைகிற மாதிரிக் குறுகலான மாடிப்படி இருந்திருக்கிறது. அதற்குப் பக்கத்தில் 'இயக்குநர் சோமதேவாவைப் பார்க்கச் செல்லும் வழி' என ப்ரின்ட் செய்த நோட்டீஸ்களை ஒட்டி அம்புக்குறி போடப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த தளத்திலும் இப்படியே மேல்நோக்கி ஒரு அம்புக்குறி. இப்படியாக மூன்றாவது ஃப்ளோரில் இருந்தது மொட்டைமாடி. மொட்டைமாடிக்கு வருவதற்குள் ஒவ்வொரு வளைவுக்கும் ஒரு நோட்டீஸ் ஒட்டி, சினிமா உலகில் தன் இருப்பைக் குறியீடாகப் பதிவு செய்திருக்கிறார் அந்த இயக்குநர்.

கட்டுப்பாடற்ற சிந்தனை விரும்பியோ என்னவோ மேற்கூரை இல்லாத மொட்டைமாடியின் ஒரு ஓரத்தில் இருந்த சின்ன அறையை அலுவலகமாக்கி இருக்கிறார். அவரைத் தேடிப் போனால், அறைக்கு வெளியே லுங்கியோடு சட்டையில்லாத மனிதர் ஒருவர் இருந்திருக்கிறார். அவர்தான் இயக்குநரின் உதவியாளராம். போனதும், 'தம்பி... டைரக்டர் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு. உக்காருங்க...'எனச் சொல்லி ரெண்டு சேர்களை எடுத்துப் போட்டவர் கொஞ்சநேரத்தில், தலையைச் சொறிந்துகொண்டே, 'சில்லறை இல்ல. ரெண்டு ரூவா கொடுங்க... பான்பராக் வாங்கணும்' எனக் கேட்டிருக்கிறார். அப்போதே உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடிய நம் நண்பருக்கு லேசாக ஜெர்க் ஆகியிருக்கிறது. ‘சரி போய் தொலையுது...’ எனக் காசு கொடுத்த சிறிது நேரத்தில் ஒரு படம் கூட எடுக்காத அந்தப் புதுமுக டைரக்டர் வந்துவிட்டார்.

தினத்தந்தியில் வரும் 'ஜுன் 1 ல் வருகிறான் சிலந்தி...' போஸ்டரில் ஆரம்பித்து, 'ஆரவாரமிக்க ஆறாவது வாரம்...' போஸ்டர் வரைக்கும் பல படங்களின் போஸ்டர்களை அறையின் சுவர் முழுக்க ஒட்டியிருந்தார். 'ஆழ்வார்', 'அகரம்' எனச் சுவர் முழுவதும் நீண்ட அந்தப் போஸ்டர்கள் எல்லாம் அவர் இன்ஸ்பயர் ஆன படங்களின் தொகுப்பு என அவரே சொல்லியிருக்கிறார். பெயின்ட் செலவுக்குக் காசில்லாமல் சுவரை மறைக்கத்தான் ஒட்டியிருக்கிறார்கள் என்பது எழுதிப்போட்டதைப் போல அப்பட்டமாகப் புரிந்தாலும் அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமா... ஆமா...' எனத் தலையாட்டும் துர்பாக்கிய நிலை வேறு. 

'யாருக்கும் புரியாம படம் எடுக்கிற கிறிஸ்டோபர் நோலன் கூட ஸ்கிரிப்ட் புக்கை யாருக்கும் காட்டமாட்டார். நான் தரேன்னா என்ன அர்த்தம்... உங்க முகம் அப்படி இருக்குது தம்பி. நம்மக்கிட்ட ரெண்டு படத்துக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டுப் போனீங்கனா அடுத்து பெரிய டைரக்டரா வருவீங்க..' என மஞ்சத்தண்ணியை அள்ளி மூஞ்சிமேலேயே தெளித்திருக்கிறார். 'ஓ... இதுவரைக்கும் எத்தனை பேரு அப்படி ஆகியிருக்காங்க...' எனக் கேட்க நினைத்து, 'பொறுமையா இருடா சூனாபானா...' எனத் தனக்குத்தானே சமாதானம் செய்துள்ளார் நமது நண்பர்.

சினிமா போஸ்டர்

ஸ்கிரிப்ட் புத்தகம், டெஸ்ட் சூட் ஆல்பம் என அத்தனையையும் அள்ளிக் கையில் கொடுத்திருக்கிறார் டைரக்டர். படத்தின் டைட்டில் 'விருது 2008'. அட்டாக் ஸ்டைல் தலையோடு பையனும், பேபி கட் தலையோடு ஒரு பெண்ணும் காட்டுவாசி கோலத்தில் மரங்களுக்கிடையே இருக்கும் போட்டோ அது. 'காட்டுல இருக்கிற ஒரு செடி மனுசப்பயலுக ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிற தன்மைகொண்டது. அந்தக் காட்டுக்கு வரும் ஆறு இளம் ஜோடிகள், அந்தச் செடிகளுக்கு மத்தியில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுதான் கதை. இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் உலக சினிமாவுக்கே புதுசு' என வார்த்தைக்கு வார்த்தை கொளுத்திப் போட்டிருக்கிறார். புதிதாகச் சிக்குகிற யாரையும் எளிதில் தன் வலையில் வீழ்த்துகிற மாதிரியான பேச்சுவன்மை கொண்டவர் அவர். 'டைரக்டர் ஆகுறதுக்குப் பதிலா சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ் வேலையில் சேர்ந்திருந்தா எங்கேயோ போயிருப்பீங்க சார்...' என மைண்ட்வாய்ஸிலும், 'அடேங்கப்பா...' என வெளியிலுமாக ஒரே நேரத்தில் ரெண்டு டயலாக் பேசியிருக்கிறார் நம் உதவி இயக்குநர்.

'நான் ஏற்கெனவே எழுதி வெச்சிருந்த கதையை 'அனகோண்டா'னு பேரு வெச்சு ஹாலிவுட்ல எடுத்துட்டாய்ங்க... இந்தக் கதையை யார்கிட்டயும் சொல்லிறவேணாம் தம்பி... நமக்கு புரொடியூசர் கிடைக்குறதுக்குள்ள அவிங்க படத்தையே ரிலீஸ் பண்ணிடுறாய்ங்க...' எனப் பாவமாகக் கேட்டுக்கொண்டாராம். 'இதை எப்படி சார் என் வாயால...' என அழாத குறையாகப் புலம்பிவிட்டுக் கிளம்பும்போதுதான் முக்கியக் கட்டத்துக்கு வந்திருக்கிறார் சோமதேவா. போகும்போது ஐநூறு ரூபாய் டொனேஷன் கொடுத்துட்டு போங்க தம்பி... பட வேலை ஆரம்பிக்கும்போது சொல்லி அனுப்புறோம் எனச் சொல்ல, 'இதென்னய்யா கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தப்போற மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க... இப்போ காசு எடுத்துட்டு வரலை. அடுத்தவாரம் வர்றோம்' எனச் சொல்லி ஒருவழியாக அவர்களிடம் எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். 

அதற்குப் பிறகு 2011-ல் ஒருமுறை 'புதுக்கோட்டையில் சினிமா வாய்ப்பு... புதுமுகங்கள் தேவை' விளம்பரம் அவரது பார்வையில் சிக்கியிருக்கிறது. உற்றுப் பார்த்தால் அதே இயக்குநர், அதே முகவரி. படத்தின் பெயர் 'விருது 2011'. அவர் இந்த உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடிய கதையை என்னிடம் சொன்ன பிறகு, சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் தினசரியைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, யதேச்சையாக இதேபோன்ற ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. அதே மாதிரி அல்ல... அதே ஆள்தான். இந்தமுறை படத்தின் டைட்டில் 'விருது 2016'

அடங்கப்பா..! வருசத்துக்கு வருசம் டைட்டிலை மட்டும் மாத்தி எத்தனையோ பேருக்குப் படத்தை ஓட்டியிருக்காப்ள... 

 

- இன்னும் ஓடலாம்... 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/91531-cinema-chance---kodambakkam-thedi-series-part-4.html

Link to comment
Share on other sites

'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்..!' - கபாலி நடிகரின் கடந்த காலம் : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் part 5

 

கோடம்பாக்கம் தேடி -5 (சினிமா)

 

தெற்குப் பக்கமிருந்து வாய்ப்புத் தேடி வருபவர்களுக்குத்தான் சினிமா செவ்வாய்க் கிரகத் தொலைவில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் உள்ளோரும் கோடம்பாக்கத்தின் கருணைப் பார்வைக்கு ஆண்டாண்டு காலமாகக் காத்திருந்த கதைகளும் நிகழ்ந்திருக்கின்றன. சம காலத்திலும் இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஒரு வட மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர், சினிமா டைரக்டரியின் பக்கங்களுக்குள் நுழைந்த கதையைப் பார்ப்போம். 

மரக்காணத்தில், தலைமுறை தலைமுறையாகவே கூத்துக்கட்டும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா உலகில் டைரக்டராக ஜெயிப்பதற்காகவே சென்னைக்குப் படிக்கவந்தவர் அவர். சென்னைக்குப் போயிட்டா, வீட்டு எஜமானர்கள் எந்திரிக்கிறதுக்குள்ள பால் பாக்கெட், டெய்லி பேப்பர் வீட்டு வாசல்ல கிடக்கிறமாதிரி  ஈஸியா சினிமாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்திருக்கிறார். நல்ல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் அவரது அப்போதைய ஆசை. ஆனால், அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொண்டு அவரோடு டிஸ்கஸ் செய்வதற்கு தமிழ் சினிமாவில் அப்போது யாரும் தயாராக இல்லை. 1997-ல் சினிமா வாய்ப்புத் தேட ஆரம்பித்தவருக்குப் பத்து வருடங்களுக்குப் பிறகும் யாரும் வாய்ப்புத்தரத்  தயாராக இல்லை. காரணம் என்ன தெரியுமா..?

சிவாஜி ராவ் ரஜினிகாந்த் ஆனார்... விஜயராஜ் விஜயகாந்த் ஆனார்... சரவணன் சூர்யா ஆனார்... சரிதான். இவர்கள் எல்லோருக்கும் சினிமாவுக்காகத் தங்கள் இயற்பெயர்களை இழப்பதில் எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், தலித் சாதிய அடையாளம் இருக்கிற ஒரே காரணத்திற்காக, 'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்...' எனும் வார்த்தைகளை இந்த நடிகர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக காதில் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். சமீபத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தீவிரமான எழுத்துப் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்பு, தனது துயர்நிறைந்த நாள்களைப் பற்றி 'கோழையின் பாடல்கள்' எனும் தொகுப்பில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. 

“உங்கள் வாழ்க்கையில்
  ஒரே ஒரு நாளை
  ஒரே ஒரு நாளை உங்களால்
  ஒருபோதும் மறக்க முடியாது
  உங்கள் கண்ணெதிரே
  நீங்கள் கொல்லப்பட்ட நாள்.”

                                      - பெருமாள் முருகன் ('கோழையின் பாடல்கள்' தொகுப்பிலிருந்து...)

இந்தக் கவிதைக்கும் இந்த நடிகரின் அனுபவத்திற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. கட்டுரையைத் தொடர்ந்து வாசித்தால் உங்களுக்கே புரியும். 'கிரீடம்' படத்தில் கும்பலில் ஒருவராக நின்றவர், இயக்குநர் சற்குணத்தின் நட்பால், 'களவாணி' படத்தின் மூலம் சொல்லிக்கொள்ளும்படியாகத் திரையில் தோன்ற ஆரம்பித்தார். அந்தப் படத்தின் கன்னட ரீமேக்கில் இவரது கேரக்டர் கொஞ்சம் மெருகூட்டப்பட்டது. 'வத்திக்குச்சி' படத்தில் நல்ல ரோலில் வந்தாலும் படம் சுமாராகப் போனதால் பேசப்படவில்லை. 2009-ல் அசோசியேட் டைரக்டராகப் பணிபுரிந்த 'கறுப்பர் நகரம்' படம் எதிர்பாராவிதமாகத் திரைக்கு வரவில்லை. 

சினிமா வாய்ப்பு - கோடம்பாக்கம் தேடி

நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவருக்கு இயக்குநர்கள் ராஜுமுருகன், பா.ரஞ்சித் போன்றோர் உதவ, தற்போது அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகிறார். இப்போது அவர் 'குக்கூ', 'மெட்ராஸ்', 'கபாலி', லென்ஸ்' எனப் பேர் சொல்லக்கூடிய வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போது சினிமாவில் ஓரளவு தெரிந்த முகமாகிவிட்டார்தான். ஆனால், இதற்குப் பின்னால் அவர் சந்தித்த சங்கடங்களும், உணர்ந்த வலிகளும் கொஞ்சம் வித்தியாசமானவை. 

'தான் போதைக்கு அடிமையான நாள்களைப் பத்தி 'வாரணம் ஆயிரம்' படத்துல சூர்யா சொல்வார்ல... 'என் வாழ்க்கையில் நான் மறக்கணும்னு நினைக்கிற கேவலமான நாட்கள்...'னு. அப்படியான நாள்கள்தான் நான் சினிமாவுக்கு வாய்ப்புத்தேடி அலைஞ்சப்போ வேற வழியில்லாம என் பேரை அசோக்னு மாத்திச் சொல்லிக்கிட்டுத் திரிஞ்ச மூணு வருச காலம். சினிமாவுல வாய்ப்புத் தேடுற எல்லோருக்குமே சுலபமா வாய்ப்புகள் கிடைச்சிடாதுங்கிறது உண்மைதான். ஆனால், நான் வித்தியாசமான காரணத்தால எல்லா இடங்களிலேயும் நிராகரிக்கப்பட்டேன் என்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை' எனப்  பொருமலாகப் பேசத் தொடங்கினார் அம்பேத். 

'எல்லா வகையான மனிதர்களும் சகஜமாகப் புழங்குகிற சினிமாவிலேயே சாதி சார்ந்த பிரிவினைகள் இருக்கிறதை ஏத்துக்க முடியலை. அம்பேத்கர்னு என் பெயரைச் சொன்னாலே பேர் மாத்திக்கிட்டு வந்து சான்ஸ் கேளுன்னு சொன்னவங்க இருக்காங்க. ஒருத்தனோட அடையாளத்தைப் பறிச்சுட்டு அவனுக்கு உதவி செய்யணும்னு இவங்களுக்கு எப்படி சார் தோணுது..? தலித் என்றாலே குனிஞ்சுதான் நிக்கணும்னு சொல்ற இவங்கதான் நாளைக்கு உலகத்தைப் புரட்டிப் போடுறமாதிரி படங்கள் எடுக்கப் போறாங்களா..? என் தாத்தா எப்படிப் பேசுவார்னு எனக்குத் தெரியும்... அவரை மாதிரி நடிக்கணும்னா குனிஞ்சுதான் நிக்கணும்னு உங்களால எப்படிச் சொல்ல முடியும்...?' பேசிய வார்த்தைகள் முழுவதும் ஆத்திரம் தடவியே வந்து விழுந்தன. 

'சீக்கிரமா ஒரு படம் இயக்கப் போறேன்... என்கூடவே அசிஸ்டென்ட்டா சேர்ந்துக்கனு ஒரு கோயம்புத்தூர்காரர் சொன்னார். நானும் இன்னும் சிலரும் ரெண்டு வருசம் அவர்கூட இருந்தோம். படத்துக்குக் கதை டிஸ்கஸ் பண்ணுவோம். ஸ்க்ரிப்ட் எழுதுவோம். பட வேலை எல்லாம் எழுத்து அளவுலயே இருந்துச்சு. ரெண்டு வருசமா பேசிக்கிட்டே இருந்தாரே தவிர ஒரு படமும் எடுக்கலை. அப்போ மட்டும் இல்லை. அதுக்கு அப்புறமும் அவர் இன்னும் படம் எடுக்கலை. அவர் கூட இருந்தவங்கள்ல ரெண்டு பேர் படங்கள் இயக்கிட்டாங்க. அப்போதான் நல்லவேளையா அவர்கிட்டே இருந்து எப்படியோ தப்பிச்சு வந்துட்டோம்னு தோணுச்சு.

அம்பேத் - நடிகர்

இப்போ ஷார்ட்ஃபிலிம் தான் சினிமாவுக்கான ஆதார் அட்டை. சினிமாவுக்கு வரணும்னா ரெண்டு மூணு ஷார்ட் ஃபிலிம் எடுத்திருந்தா போதும். வெகு சுலபமா பெரிய தயாரிப்பாளர்களிடமே பேசி படம் எடுத்துடலாம். ஃபேஸ்புக், ட்விட்டர் காலத்தில் பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் எளிதாக அப்ரோச் பண்ண முடியுது. அந்தக் காலத்தில் சந்திக்க்கிறதே குதிரைக்கொம்பா இருக்கும். 'அழகி' படம் பார்த்துட்டு தங்கர் பச்சானைப் பார்க்கப் போனேன். 'உங்களைப் பார்க்க வந்தேன்'னு சொன்னதும் அப்படியா ரைட்டுனு கிளம்பிட்டார். வாய்ப்புத் தேடி வர்றவங்க அடக்கமா, பணிஞ்சு பேசணும்னு எதிர்பார்ப்பாங்க போல. சினிமா வாய்ப்புத் தேடுறவங்களுக்குத் தன்மானம் இருக்கக்கூடாதுனு இன்னும் போர்டு மட்டும்தான் மாட்டலை. இப்படி உதாரணத்துக்குப் பல சந்திப்புகளைச் சொல்லலாம்.

'கேஸ்ட்... வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்..?'னு கேட்குற இயற்கையான முற்போக்குவாதிகளும் இருக்காங்க. அவங்களைப் பத்திப் பிரச்னையே இல்லை. பேச்சளவில் சாதிய மறுப்பாளராகவும், வாழ்க்கையில் அதற்கு எதிர்மறையாகவும் வாழுகிற சிலரால்தான் வில்லங்கம். தலித்களை ஒடுக்குகிற அத்தனை வேலையையும் சினிமாக்காரங்களும் பண்றாங்க. சமத்துவம் எல்லாத் துறைகளிலும் பரவணும். எனக்குப் பிறகும், இன்னொருவன் தன் பெயரால் வாய்ப்பை இழக்கிற நிலை வரக்கூடாது.'

கடந்த வார 'நீயா நானா' விவாத நிகழ்ச்சியில் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர் போட்டுக்கொள்பவர்களுக்கும், அதற்கு எதிர்வினை ஆற்றுபவர்களுக்கும் இடையேயான விவாதம் நடைபெற்றது. பெயரே சாதிய அரசியலாகப் பார்க்கப்பட்டு ஒதுக்கப்படும் அவலமும் சினிமாத்துறை உள்பட எல்லா இடங்களிலும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஊர்த் தெருக்களின் திசைகாட்டிப் பலகையைப் போல, சினிமாவில் சாதிக்கத் துடிக்கிறவர்களின் ஆரம்பகால அனுபவங்கள் அடுத்து வருபவர்களுக்கு  வழிகாட்டியாக மாறலாம். புதிதாக வருபவர்கள் எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகளையும் தொடர்ந்து விவாதிக்கலாம். 

 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/91742-facing-problems-in-cinema--kodambakkam-thedi-series-part-5.html

Link to comment
Share on other sites

வைகைப்புயல் கோடம்பாக்கத்தில் நிலைகொண்ட கதை - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 6

 
 

கோடம்பாக்கம் தேடி - சினிமா

 

திருவிழாவுல தெரை கட்டிப் படம் பார்த்த மூணாம் நாளு படம் எடுக்கப்போறேன்னு சொல்லாமக் கொள்ளாம பெட்டியைக் கட்டுன பலபேரு இன்னிக்கு கோடம்பாக்கத்துல பெரிய தலைக்கட்டுக. ஊரு, மக்க, சனம், சந்தோசம்னு ரெண்டு வேளைக் கஞ்சியோட வாழ்ந்தவரு, ஊரு ஒலகத்தையே சிரிப்பாச் சிரிக்கவச்ச கதய இப்பப் பாக்கப்போறோம். 

அவுக அப்பாரு கூலி வேலை பார்த்தாரு. அவரு, அவருகூடப் பொறந்த தம்பிங்கள்லாம் அப்பாரோட வேலைக்குப் போவாக. கண்ணாடியை அறுத்துத் தினுசு தினுசா நகைப்பெட்டிங்க மாதிரி செஞ்சு கொடுக்கிற வேலை. எவ்வளவுக்கெவ்வளவு சுருக்கா வேலை செய்யிறமோ, அவ்வளவுக்கவ்வளவு வருமானம். அதனால காலங்காத்தால கண்ணு முழிக்கிறதே வேலையிலதான். பழையசோறும் வெங்காயமுந்தேன் காலைச் சாப்பாடு. தண்ணி ஊத்தின சோத்துக்குச் சில நாள்கள் ரெண்டு தக்காளி, ரெண்டு வெங்காயம், கொஞ்சம் உப்புப் போட்டு, அம்மா கையால பிசைஞ்சே வைக்கிற 'கைக்கூட்டு' உண்டு. அந்தக் கூட்டுக்கு எதையும் அரைக்கிற வேலையுமில்ல... சமைக்க அடுப்பும் தேவையில்ல... அந்தக் கைக்கூட்டோட பழையதை ஒரு புடி புடிச்சா, சும்மா தேவாமிர்தமா இருக்கும்! இன்னிக்கு வரைக்கும் அத அடிச்சிக்கிற வேற பண்டமும் இல்ல. மதுரையில இருந்த காலத்துலயுஞ் சரி... இப்பயுஞ்சரி... பழைய சோறுதேன் அண்ணனுக்கு உசிரு. 

என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், எம்.ஆர்.ராதா, பாலையா, சுருளிராஜன் இவங்களை எல்லாம் பாத்து சிரிச்சு வளந்தவரு. ஆனா, இடைப்பட்ட காலத்துல வந்த காமெடிகளை எல்லாம் பாத்தப்ப, 'ஆஹான்'னு உப்பு இல்லாம கஞ்சி குடிக்கிற மாதிரி சப்புனு ஆகிருக்கு. இவிங்களைவிட நல்லா காமெடி பண்ணலாமேனு வெறி ஏறுனவருக்கு, எங்கிட்டுப் போறது... யாரப் பாக்குறதுன்னுதான் ஒரு பாதையும் மட்டுப்படல. சரி ரைட்டு... நாமளே எறங்குவோம்னு போட்டுருக்குற டவுசரோட அங்க இங்க புடிச்சு கோடம்பாக்கத்துக்கு வந்துட்டாரு. வைகைப்புயலு கூவக்கரைக்கு வந்துசேந்த கத இதுதேன்.

'வைகைப்புயல்' வடிவேலு

அவரு சினிமா சான்ஸ் தேடி அவரு மெட்ராஸுக்குப் படையெடுத்தது ரொம்பத் தமாசு. வேலை செஞ்சு சம்பாதிச்சதுல வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி கொஞ்சங் கொஞ்சமா மிச்சப்படுத்தி மாசத்துக்கு ஒருவாட்டி மெட்ராஸுக்கு லாரியில புறப்பட்டுருவாரு. லாரி மேல தார்ப்பாய்ல படுத்துக்கிட்டு அதுல கட்டியிருக்கிற கயித்துல கையைக் கோத்துக்கிட்டுக் கனவுகளோட தூங்கிக்கிட்டே போவாராம். சினிமாக் கனவோட போறவருக்கு வேறென்ன வரும்... எல்லாம் நடிக்கிற மாதிரி கனவுதேன். மெட்ராஸுக்கு வாற ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு ஏரியாவில் ஏதாவது வீட்டு வாசல்ல படுத்துத் தூங்கிடுவாராம். வைகைக்கரையில வாழ்ந்த மனுசன் எதுக்கும் யார் கையையும் எதிர்பார்க்க மாட்டாரு. சினிமாவுல எப்படியும் நடிச்சிடணும்கிற ஆசையில பித்துப்பிடிச்ச மாதிரி அலைஞ்சிருக்காப்ள. அடிக்கடி சென்னைக்கு வந்து சான்ஸ் கேட்டு, கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கியிருக்காரு. பட்டணத்துக்காரவுகளும் நாயைத் தொரத்தற மாதிரி விரட்டி அடிச்சிருக்காக. சினிமாக் கெரகத்துல சாட்டிலைட் வுடுறது ஒண்ணும் லேசுப்பட்ட காரியமில்லைல. 

ஒருநாள் மத்தியான நேரம்... நல்ல பசியில ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப் போயிருக்காரு. வாசல்ல ஒரு ஆள் நிக்கிற மாதிரி கூண்டு ஒண்ணு இருக்கு. அதுல இருந்த வாட்ச்மேன் உள்ளே போகவிடாமத் தடுத்துப் பாத்துருக்கார். 'எங்கே வந்தே?’னு கேட்டதுக்கு, 'நம்ம ஊர் மருதங்க... சினிமாவுல நடிக்க சான்ஸ் கேக்கலாம்னு வந்தேங்க’னு நம்மாளு சொல்லிருக்கார்.

 

'அதுசரி... நானும் பெரியகுளத்துக்காரன்தான்’னு அவர் சொல்ல, அட நம்ம ஆளுன்னு சந்தோஷமா இருந்திருக்கு இவருக்கு. நடிக்கத் தெரியுமானு கேட்டவர், 'நடிச்சுக் காட்டு... பார்ப்போம்’ன்னாராம். அது போதாதா நம்மாளுக்கு... அவர் கையைப் பிடிச்சு வெளியே இழுத்துவுட்டுட்டுக் கூண்டுக்குள்ள போய் நின்னு கையக் காலை உதறி நடிச்சுக் காட்டிருக்கார் நம்ம அண்ணன். விழுந்து விழுந்து சிரிச்சார் வாட்ச்மேன். 'நல்லா நடிக்கிறியே... பொழச்சுக்குவே, போ’னு ஸ்டூடியோவுக்குள்ள அனுப்பிவெச்சாராம். சென்னையில முதன்முதலா நடிச்சதே ஏ.வி.எம்-மில்தான்னு நெனைக்கிறப்போ ஆனந்தமா இருக்குனு அண்ணன் அப்பப்போ சொல்லுவாராம். 

சினிமாவுக்கு வர்றதுக்கு முந்தி சாப்பாடெல்லாம் நேரத்துக்குச் சாப்புடுறதை நெனைச்சுப் பார்க்க முடியாதாம். மதுரைக்கு வந்திருந்த ராஜ்கிரணை முதன்முதலா ஒரு மத்தியான நேரத்துல சந்திச்சிருக்கார். சென்னைக்கு வந்து ராஜ்கிரண் கூட இருக்கறப்போ, கம்மங்களியும் கருவாட்டுக் குழம்பும்தான் காலை டிபன். 'டேய் வடிவேலு... கருவாடு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டுக் குழம்பு வெச்சு, கருவாட்டைத் தூக்கித் தூரப்போட்டுட்டு அந்தக் குழம்பை உள்ளங்கையில் ஊத்தி உறிஞ்சிக் குடிக்கணும்டா'னு சொல்வாராம் ராஜ்கிரண்.

அந்தக் காலத்துலயுஞ் சரி... இந்தக் காலத்துலயுஞ் சரி... சினிமாதேன் வடிவேலண்ணனுக்கு பெரிய பொழுதுபோக்கு. அப்பலாம் சினிமாவுக்குப் போறதுனா...  தீபாவளி, பொங்க மாதிரி. எம்.ஜி.ஆரை நேர்ல பாக்க மனசு கெடந்து அடிச்சுக்குமாம். இப்ப இருக்குற மாதிரி... இன்டர்நெட்டோ, ஸ்மார்ட் போனோ என்னவோ ஒண்ணுல டிக்கெட்டு வாங்கி, பக்கத்துத் தேட்டர்ல போயி பகுமானமா பாக்குறதெல்லாம் அந்தக் காலத்துல நடக்காதுல்ல. ஆறு மணி ஆட்டத்துக்குப் போகணும்னா... மூணு மணிக்கே கௌம்ப ஆரம்பிக்கணும். கொஞ்சம் வசதி வாய்ப்பு கொண்டவுக வண்டி பூட்டிக் கௌம்புவாகளாம். இல்லாதவுக, வண்டிப் பூட்டிப் போறவுகள வயித்தெரிச்சலோட பாக்கத்தேன் முடியும். 

வைகைப்புயல் வடிவேலு - கோடம்பாக்கம் தேடி

இந்தச் சென்னைப் பட்டணத்துல எங்க பாத்தாலும் கேரட்டுக்குக் கை, கால் மொளைச்ச மாதிரி பொண்டு புள்ளைகபூராம் வெள்ளை வெளேர்னு திரியறாக... மூஞ்சிக்கு அப்புடி என்னத்தத்தேன் பூசுவாகளோ... அப்புடி ஒரு செவப்புனு ஆச்சரியமாப் பாப்பாராம். சின்னப் புள்ளையா இருந்தப்ப, கூடப் பொறந்த ஏழு பேர்ல அவரு ஒருத்தர்தேன் கறுப்பு. மத்த ஆறு பேரும் அவங்கம்மா கலரு. இவரு மூஞ்சியத் தொட்டு மத்த ஆறு புள்ளைங்களுக்கும் பொட்டு வெச்சு அனுப்பி வுடாதது மட்டுந்தேன் பாக்கியாம். பள்ளிக்கூடம் போனா... எல்லாப் பயலுகளும் 'ஏ கருவாப்பயலே’னுதேன் கூப்புடுவாய்ங்களாம். மதுரையிலயே கருவாப்பயனு கூப்புட்டு இருக்காகனா, சென்னையில எப்புடிப் பாத்துருப்பாக..? வாழ்ந்து பாக்கறதுக்கு வண்ணமா முக்கியம்... மனசு நோகாம நடக்குற எண்ணந்தானே முக்கியம்!

     'ஆடி அடங்கும் வாழ்க்கையடா
     ஆறடி நிலமே சொந்தமடா 
     வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
     வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
     தொகுப்பான் சிலர் அதைச் சுவைப்பதில்லை
     தொடங்குவான் சிலர் அதை முடிப்பதில்லை..." 
                                                               

                                                                                           - சுரதா  

 

பொறந்த மண்ணுல பொழங்குற வார்த்தைகதான நம்ம வாழ்க்க. நாடி நரம்பு சதையெல்லாம் ஓடிக்கெடக்குறது நம்மூரு மொழி. எங்கிட்டுப் போனாலும் அதான வரும். நீட்டி இழுத்துப் பேசுற நெல்லைத் தமிழ், மரியாதையையும் அன்பையும் குழைச்சுப் பேசுற தஞ்சைத் தமிழ், கொஞ்சிப் பேசுற கொங்குத் தமிழ்னு எல்லாத்தையும் ரசிப்பாரு. ஆனா பேசுறது பொரண்டு திரிஞ்ச மதுரப்புழுதி மொழிதேன். பாஷை ஒண்ணும் தோசை இல்லைல.. நெனச்சதும் திருப்பிப் போடுறதுக்கு..? 

நம்மூருல நாம பாக்காத கேரக்டருகளா கழுதனு விட்டு வெரட்டுனவருக்குக் குரல்மொழி ஆரம்பிச்சு குனிஞ்சு நிமிருற முதுகுத்தண்டு மொழி வரைக்கும் இன்னிக்கு அத்தனையும் அத்துப்படி. டெண்ட் கொட்டாய் தெரையில பாத்து ஹோம்வொர்க்கு பண்ணதுதேன் எல்லாம். போடா போடா புண்ணாக்குனு உள்ள நொழைஞ்சவரு புலிகேசியா ஒசந்து நின்னாப்ள. இந்த நடிப்புக்கு ரிஷிமூலம், ஆதிமூலம்னு தேடிப்போனா வைகைக்கரைதான் டெட் எண்டு. மதுர மண்ணுல சல்லித்தனமும், சவடாலும் ததும்ப உருண்டு பொரண்டவர்ங்கிறதால எப்பவுமே சுதாரிப்பு கொஞ்சம் ஜாஸ்தி. செத்த நேரங் கண்ணசந்தா... சொத்தப் பூரா எழுதி வாங்கிட்டு அனுப்பிடுற காலம்ங்கிறதால எப்பயுமே சூதானமாத்தேன் இருப்பாப்ள. ஏப்ப, சாப்பைகனா இந்த ஊருல காலந்தள்ள முடியுமா..? 

வைகைப்புயல் வடிவேலு - 'என் தங்கை கல்யாணி'

'தேவர் மகன்' படந்தேன் நம்மாளுக்கு டர்னிங் பாயின்டு. 'தேவர் மகன்' படத்துல நடிக்கும்போது, சிவாஜி, கமலைக் கூப்புட்டு 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா' னு சொல்லி, 'இத இப்படியே வளத்துக்கடா, லேசா என்னயவே சிலுப்பி விட்டுட்டடா... நல்லா வருவடா...'னு அழுத்தமா ஒரு முத்தம் குடுத்துருக்காரு. அதுவே அஞ்சாறு நேசனல் அவார்டு வாங்குனதுக்குச் சமானமா சொல்லிச் சிலாகிப்பாரு. இப்ப, சார்லி சாப்ளினையும் வடிவேலு அண்ணனையும் ஒப்பிடுறாய்ங்க. ரெண்டு பேருமே வறுமைக்கு வாக்கப்பட்டு வளந்து வரலாறு படைச்சவிய்ங்க. 

இங்கிலீசுல தெரிஞ்சதெல்லாம் 'வாட் இஸ் யுவரு நேமு, வெல்கம், தேங்கியூ, ஹாய், பாயி'னு ஒரு ஏழெட்டுப் பீஸுகதேன். இதுகள வச்சுக்கிட்டுத்தேன் இத்தன வருசமா கடைய ஓட்டிக்கிட்டு இருக்கோம்னு கமுக்கமாச் சிரிப்பாப்ள. போறவாற இடத்துல பெரியாளுனு மதிச்சு இங்கிலீசுல பேசுறவங்கக்கிட்ட 'ஓ... ஐ ஸீ..'னு என்னத்தையாச்சும் சொல்லிச் சமாளிப்பாப்ளயாம். தப்புத் தப்பான எடத்துல 'ஐ...ஸீ' போடுறதப் பாத்து 'யார்யா இவன் ஐஸ் யாவாரியா இருப்பான் போலருக்கே'னு அவிய்ங்க கேவலமா லுக் விட்டா ஒடனே கடையச் சாத்திருவாப்ளயாம். 

 

'முன்னாடியெல்லாம் புள்ளகுட்டிகளுக்கு நெலாவக் காட்டி சோறு ஊட்டுவோம். இப்ப 'எலே... இங்காரு வடிவேலு...'னு ஒன்னயக் காட்டித்தேன் சோறு ஊட்டுறோம்'னு வாய்நிறையச் சொல்லும்போதே அண்ணனுக்கு வயிறு நெறைஞ்சுபோகுமாம். நல்ல இனிமையான வார்த்தைக இருக்கிறப்ப ஏன் கொடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துறீகனு ரெண்டே வரியில சொல்லிட்டுப் போயிருக்காரு தாடிக்கார வள்ளுவரு. நீங்க பேசுறதை வெறும் வார்த்தைனு மட்டும் நெனைக்காதீக. பலரோட வாழ்க்கையே ஒங்க வார்த்தையிலதேன் அடங்கி இருக்கு! வசதியும் வாய்ப்பும் இன்னிக்குப் போகும்; நாளைக்கு வரும்; மனுச மக்கதேன் என்னிக்கும் நிரந்தரம்!

அண்ணனோட அகராதிப்படி, வாழ்க்க ஒரு வாடக சைக்கிளு... ஓனரு வண்டியப் புடுங்குற வரைக்கும் புடிவாதமா ஓட்டிக்கிட்டே திரியணும். க்ளிங் க்ளிங் க்ளிங்..!

 

- இன்னும் ஓ(ட்)டலாம்... 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/91913-vadivelus-early-cinema-life--kodambakkam-thedi-series-part-6.html

Link to comment
Share on other sites

‘வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன.. தமிழினம் காப்பாற்றும்!’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 7

 
 

கோடம்பாக்கம் தேடி..! - சினிமா தொடர்

 

ழுபதுகளின் இறுதிப்பகுதி அது. இவரும் சினிமா வாய்ப்புத் தேடிப் புறப்பட்டார். சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. நாடகங்களில் நடித்து அனுபவம் இல்லை. சினிமா பின்னணியும் இல்லை. இத்தனைக்கும்  ரஜினியும், கமலும் மசாலாப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலம் அது. ஹீரோவாக நடிக்க வாய்ப்புத் தேடிச் சென்னைக்கு வருவதற்கு முன் தன்னுடைய நண்பர் ஒருவர் சொன்னதுபோலவே ரஜினிகாந்த் ஸ்டைலில் பல போட்டோக்களை எடுத்து ஆல்பம் ஒன்றைத் தயார் செய்துள்ளார். தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து அந்த ஆல்பத்தைக் காட்டி வாய்ப்புக் கேட்டுள்ளார். 'அதான் ஒரு ரஜினி இருக்காரே அப்புறம் நீ எதுக்கு... எடுத்துட்டு ஊருக்குப் போ' என்று அந்த தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம். அதன் பிறகே தன்னுடைய ஸ்டைலில் வேறு ஒரு ஆல்பம் தயார் செய்து வாய்ப்புத் தேடத் துவங்கியுள்ளார் அந்த நடிகர். 

நாராயணனுக்கு மதுரைக்குப் பக்கத்தில் நல்ல வசதியான குடும்பம். அவரது அப்பா காங்கிரஸில் மூத்த தொண்டர். கவுன்சிலராகவும் இருந்தவர். சாப்பாட்டுக்கும், வசதிக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. வீட்டில் இருக்கும்போது  கஷ்டத்தைத் துளியும் உணராதவர் சினிமா வாய்ப்புத்தேடி சென்னைக்கு வந்து பட்ட கஷ்டங்கள் ஏராளம். இன்றும் பசியோடு யாரையாவது பார்த்தால் கலங்கிப் போய்விடுவார். நாராயணன் என்பது அவரது தாத்தாவின் பெயர் என்பதால் , விஜயராஜ் என வீட்டில் அழைப்பார்களாம். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா சூட்டிய பெயர் விஜயகாந்த். இன்று அரசியல் ரீதியாகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை அத்தனை பேருக்குமான நம்பிக்கைப் பாடம்! சரத்குமார், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என அவர்மூலம் பிரபலமான நடிகர்களின் பட்டியலும் ரொம்பவே நீளம்!

விஜயகாந்த்

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து இஞ்ச் பை இஞ்ச் காட்சிகளை வர்ணித்துச் சந்தோஷப்படுவாராம். 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை 70 தடவைகளுக்கு மேல் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்து, சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளுக்குள் கொளுந்துவிட்டு எரிந்த சமயம் அது. நண்பர் ஒருவருடன் சென்னைக்குக் கிளம்புகிறார். இருவரும், தியாகராய நகரில் கீதா கஃபேவுக்குப் பின்புறம் இருக்கும் லாட்ஜில் தங்குகிறார்கள். விஜயராஜ் ஒருபுரம் சினிமா வாய்ப்புத் தேடிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் அவரது நண்பர் விஜயராஜுக்காக வாய்ப்புத் தேடி அலைகிறார். அந்த நண்பர்தான் பால்யகாலம் முதல் தோள்கொடுத்த இப்ராஹிம் ராவுத்தர். தமிழ்மொழிப் பற்றாளரான விஜயகாந்த் தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு 'மே டே' எனும் படத்தில் நடிக்கச் சம்மதித்தது இதே இப்ராஹிம் ராவுத்தருக்காகத்தான். அந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்கு முன்பே அவர் நெடிய போராட்டத்தைக் கடந்துவிட்டிருந்தார்.

முதல் பட வாய்ப்புத்தேடி அலையும்போது, 'உன்னோட தமிழ் நல்லாயில்லே...’ எனச் சொல்லிப் பல இடங்களில் திருப்பி அனுப்பப்பட்டார். மதுரைக்கார விஜயராஜுக்கு நாக்கு புரளாது. வல்லினம், மெல்லினம் சரியாகப் பேச வராது. ஆனால், இன்று அவரது நாக்குச் சுழல்வு நையாண்டியானது தனிக்கதை. 'வல்லினம், மெல்லினம் வரலைன்னா என்ன... மொத்தத் தமிழினமும் ஆதரவு தந்து தூக்கி நிறுத்தியது. அந்த நன்றி இன்னும் நெஞ்சுக்குள்ளே இருக்கு' என்பார் விஜயகாந்த். தான் கஷ்டப்பட்டாலும், அது வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியக்கூடாது என நினைத்ததால் உதவிகேட்காமல் பசியும் பட்டினியுமாகச் சென்னையில் நாட்களை ஓட்டினார். 

விஜயகாந்த்

பள்ளிக்கூடம் படித்த காலத்தில், ஹாஸ்டலில் இருக்கும்போது காசு கொடுத்து வார்டனைக் கரெக்ட் செய்து வைத்துக்கொள்வாராம். எல்லோருக்கும் போலக் கொடுக்கும் சப்பாத்திகளைக் சாப்பிட்டுவிட்டு, கை கழுவும் இடத்திற்குப் பக்கத்தில் நின்றால், சமையல்காரர் எக்ஸ்ட்ரா சப்பாத்தியைத் தூக்கிப் போடுவாராம். ஹாஸ்டலில் இருக்கும்போது வீட்டிலிருந்து மிக்ஸர், முறுக்கு என டின்களில் கொடுத்து அனுப்புவதையெல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றிரண்டு நாள்களில் காலி செய்துவிடுவாராம். சினிமாவுக்கு வரவேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால், விஜயராஜ் எஸ்.எஸ்.எல்.சி-யைத் தாண்டவில்லை. ஆனால், இன்று தனது வீட்டில் வேலைசெய்பவர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் படிக்கவைக்க உதவி செய்கிறார்.

மதுரையில் சேனாஸ் சினிமா கம்பெனி வைத்திருந்த மர்சூக், எம்.ஏ.காஜா இருவரும்தான் விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டவர்கள்.  நடிச்சா ஹீரோதான் எனும் எண்ணத்தோடு வந்தவர் வேறு வழியின்றி, 'இனிக்கும் இளமை' படத்தில் வில்லன் ரோலில் நடித்தார். அவர் வில்லனாக நடித்த ஒரே படமும் அதுதான். 'தூரத்து இடி முழக்கம்' படம்தான் இவருக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. இது மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்ற படமாகும். எஸ்.ஏ சந்திரசேகர் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்.

விஜயராஜுக்குத் தெரிந்தது சண்டையும், சிலம்பமும்தான். இவற்றைச் செய்துகாட்டித்தான் வாய்ப்புக்கேட்க வந்தாராம். இயற்கையாகவே அவரது கால்களை உயரமாகத் தூக்க முடிந்ததால் லெக் ஃபைட்டிங்கைத் தொடர்ந்து பயன்படுத்தினார். 'உப்ஹாய்' சத்தத்தோடு சுவரில் கால் வைத்துப் பறந்து உதைப்பது, முஷ்டி மடக்கியே பத்துப் பேரைப் போட்டுப் பொளப்பது என டேபிள் சேர்களை உடைத்து கிராமத்து இளைஞர்களுக்கு இன்னும் நெருக்கமானவரானார்.

பெரிய இயக்குநர்கள் அனைவரும் ரஜினி, கமலை வைத்துக் கடையை நடத்திக்கொண்டிருக்க, திறமையான புது இயக்குநர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். இவர் நடித்த ஒரே பெரிய இயக்குநர் பாரதிராஜா மட்டுமே.  திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என இந்தப் பட்டியல் நீளும். 

விஜயகாந்த்

அந்தக் காலகட்டத்தில் சிறு பட்ஜெட் படங்களின் வசூல் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். கதைக்குத் தேவையென்றால் இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடிப்பவர் எனும் நற்பெயர் உண்டு. தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984-ல் 'மதுரை சூரன்' முதல் 'ஜனவரி 1' படம் வரை 18 படங்களும் 1985-ம் ஆண்டில் மட்டும் 'அலை ஓசை'யில் ஆரம்பித்து 'நானே ராஜா நானே மந்திரி' வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது.
 
'வானத்தைப் போல' படத்தின் கதையைப் போலவே, எல்லாத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்தபோதே விஜயகாந்துக்கு 37 வயதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். 

"வெற்றின்னா ஆடுறதும், தோல்வின்னா புலம்புறதும் கிடையாது. மகிழ்ச்சியோ, வருத்தமோ எல்லாமே கொஞ்ச நேரம்தான். கோடிக்கணக்குல சம்பாதிச்சும் பார்த்துட்டேன்... நஷ்டப்பட்டும் பார்த்துட்டேன். 'எங்கேயும் நின்னுடாதே... நடந்துட்டே இரு’ங்கிறதுதான் என்னோட தத்துவம். நான் ஓடிக்கிட்டே இருக்கேன்..!''

'பாய்ஸ்' படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் சொல்வதாக ஒரு வசனம் வரும். 'விஜயகாந்த் ஆபிஸ்ல எப்ப கறிச்சோறு போடுறாங்க...' என சென்னையில் இலவசமாக சாப்பாடு கிடைக்கும் இடங்களின் டேட்டாபேஸ் சொல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயகாந்த் வீட்டில் 100 பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த்!

(தகவல் உதவி : திரு.திருநிறைச்செல்வம் - விஜயகாந்த்தின் ஆரம்பகால உதவியாளர்)

இன்று புதிதாகச் சினிமா வாய்ப்புத் தேடுகிறவர்கள் நாளையோ, நாளை மறுநாளோ உச்சிக்குச் சென்றாலும், உதவி செய்தவர்களின் நன்றி மறக்காமல் இருப்பதைத் தனது அனுபவங்களின் மூலம் கற்றுத்தருகிறார் விஜயகாந்தாகிய விஜயராஜ். வெற்றி எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு முழுத் தகுதியாயிருப்பது உங்கள் பண்புகளில் இருக்கிறது. 

 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/92209-kodambakkam-thedi-series-part-7---vijayakanths-early-cinema-life.html

Link to comment
Share on other sites

ஏ.ஆர்.ரஹ்மானும் வாய்ப்புத் தேடிய பாடலாசிரியரும்.. - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 8

 

கோடம்பாக்கம் தேடி..! - சினிமா

 

சினிமாவுக்கும், அரசியலுக்கும் நகமும் சதையுமாகத் தொடர்பிருப்பதைப் போலவே, இலக்கியத்துக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு இன்று நேற்றல்ல... அண்ணா, கருணாநிதி போன்றோர் இலக்கியம் - சினிமா - அரசியல் என நான்-ஸ்டாப்பாக எல்லா ஏரியாக்களிலும் ஒரு ரவுண்ட் அடித்தனர்.  இலக்கிய உலகில் இருக்கும் பெரும்பாலானோர் தங்களது அடுத்தகட்ட நகர்வாகக் கருதுவதே சினிமாவைத்தான். நாவல், சிறுகதைகளின் எழுத்தாளர்கள் திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தாவாக முயற்சிப்பதைப் போலவே, கவிஞர்கள் சினிமாவில் பாடல் எழுத வருகிறார்கள். இதற்குக் குறிப்பிட்டெல்லாம் உதாரணம் சொல்லத் தேவையிருக்காது. 

கண்ணதாசன், வைரமுத்து முதல் மதன் கார்க்கி கடந்தும் அதுதான் நிலவுகிறது. விக்னேஷ் சிவன், தனுஷ், சிம்பு, ஹிப்ஹாப் ஆதி போன்ற பாடலாசிரியர்கள் எல்லாம் எந்த லிஸ்டில் வருவார்கள் எனக் கேட்கிறீர்களா..? சந்தேகமே வேண்டாம். அதே பட்டியல்தான். பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில், 'அன்பே... நீ ஒரு ரோசாப்பூ...' என என்றாவது கவிதை வரிகள் எழுதியிருப்பார்கள் என நம்புவோமாக.  

 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நண்பராக அறிமுகமானவர் அவர். 'அலைபாயுதே' படம் பார்த்தபோது, டைட்டில் கார்டில் தன் பெயர் வரவேண்டுமென ஆசைப்பட்டு, தான் சினிமாவில் பாடலாசிரியராக வாய்ப்புத் தேடி அலைந்த கதையைச் சொன்னார். இப்போது போல அவர் வாய்ப்புத் தேடிய காலத்தில் வசதிகள் இல்லை. அதுவும், மதுரை போன்ற தெற்குப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடுபவர்கள் இன்னும் கடினமாகவே சோதனைக்காலத்திற்குத் தயாராகியிருக்கவேண்டும். அவர் பள்ளிக்கூடம் படிக்கும்போதே வானம்பாடிக் கவிஞராக இருந்திருக்கிறார். பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியடைந்து 1998-வாக்கில் சினிமாவுக்குப் பாடல் எழுதும் வாய்ப்புப் பெற முயற்சித்திருக்கிறார். 

“உண்மையில் கவிதையின் மிகச் சிறந்த குணம், அதன் தாளம். அது தன்னகத்தே ஒரு பொருளைக்கொண்டிருக்க வேண்டும். அது அழகுணர்ச்சியுடன் வெளிப்பட  வேண்டும். அதேசமயம், எளிமையுடனும் இருக்க வேண்டும். அலங்காரச் சொற்களை வலிந்து திணித்ததாக இருக்கக்கூடாது." 
                                                               

                                                                                                         - பால் சக்காரியா 
 

எழுதிய கவிதைகளை பிரபல பாடலாசிரியர்களின் முகவரிக்கு அனுப்பிவிட்டு மாதக்கணக்காக பதிலுக்காகக் காத்திருப்பாராம். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு அமைந்திருக்கும் தெருவும், பின்கோடு 600024 என்பதையும் மட்டும் தெரிந்துகொண்டு அவருக்கும் சிலமுறை பாடல்வரிகளைக் கூரியரில் அனுப்பி இருக்கிறார். சிலபல வருடங்கள் இப்படியே இருந்ததால் வீட்டிலும் பெரிய மரியாதை இல்லை. சினிமாவில் பாடல் எழுதவும் வாய்ப்புக் கிடைக்கவில்லை... யார் மூலம் பெறுவது எனவும் தெரியவில்லை எனச் சோர்ந்தவர், அந்த நாட்களில் இன்டர்நெட்டின் அபரிமிதமான வளர்ச்சியை அறிந்து சென்னையில் ப்ரௌசிங் சென்டர் வைக்கும் எண்ணத்தோடு மதுரையிலிருந்து கிளம்பியிருக்கிறார். 

இங்கே வந்தபிறகுதான் தெரிந்திருக்கிறது இவர் கடை வைக்கக் கிளம்பிவந்த கோடம்பாக்கத்தின் பின்கோடுதான் 600024 என்பது. தனது ப்ரௌசிங் சென்டரின் பலகையில் தினமும் கவிதை எழுதிப் போடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் வராமல் காற்று வாங்கும் அநேக நேரங்களில் கவிதை எழுதுவதையே வேலையாகவும் வைத்திருந்திருக்கிறார். இவைதவிர கதைகளைக் கவிதைகளாகச் சொல்லும் உத்தியைக் கையாண்டு 'கதைப் பாடல்கள்' சிலவற்றையும் எழுதியிருக்கிறார். அதே சமயத்தில் ஆங்கில அகராதிகளைப் புரட்டுவதையே ஃபுல் டைம் வேலையாக வைத்திருந்தவர் அப்படியே ஆங்கிலக் கவிதைகளையும் எழுதத் தொடங்கிவிட்டிருக்கிறார். 

ஜோதா அக்பர்

ப்ரௌசிங் சென்டர் வைத்திருந்ததால் விஸ்டா, யாஹூ, ரெடிஃப்மயில் போன்ற தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் மெயில் ஐ.டி-யைத் துழாவியிருக்கிறார். ஒருவழியாகக் கண்டுபிடித்து ரஹ்மானுக்கு மெயில் அனுப்பியிருக்கிறார். ஆச்சரியமாக 'டொரான்டோவில் இருக்கிறேன்... ரம்ஜானுக்கு ஊருக்கு வரும்போது சந்திக்கிறேன்'  அவரிடமிருந்து ரிப்ளை வந்திருக்கிறது. அவர் சென்னை வரும் நாளுக்காகக் காத்திருந்தவர், அப்போது ரஹ்மான் வசித்த சாமியார்மடம் பகுதியிலிருக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதுவும் எப்படி... பாடலாசிரியர் வாய்ப்புக்காக ரெஸ்யூம் ப்ரிபேர் செய்துகொண்டு சென்றவர்களைப் பார்த்திருக்கிறீர்களா..? நம் நண்பர் அவர் எழுதிய கவிதைப் பிரதிகளையும், ரெஸ்யூமையும், வேலைக்குச் சேருவதற்கான விண்ணப்பக் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு முன்னேற்பாட்டோடு சென்றிருக்கிறார். 'கண்டிப்பாக நல்ல வாய்ப்போடு திரும்ப அழைக்கிறேன்' எனச் சொல்லியிருக்கிறார் ரஹ்மான். 

அவர் ரஹ்மானின் வீட்டுக்குப் போவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, அவரது உதவியாளரின் பெயரினைத் தெரிந்துகொண்டு வாய்ப்புக் கேட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ரஹ்மானைப் பார்க்கமுடியவில்லையாம். அவரது வீட்டுக்கு அருகில் அமைந்திருந்த இசை நாடகத்துறை அமைச்சகத்தில் மேனேஜராகப் பணியாற்றிய ஜெயக்குமார் என்பவர் வழிகாட்டுதலின்படி, 'கவிதை உறவு' எனும் அமைப்பின் கூட்டத்துக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார். அங்கே நடைபெறும் கவிதைப் போட்டிகளில் பூவை.செங்குட்டுவன், மு.மேத்தா, விவேகா கைகளால் பரிசும் பெற்றிருக்கிறார். 

தான் நடத்திவந்த ப்ரௌசிங் சென்டர் திவாலானதை அடுத்து ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்திருக்கிறார். கோடம்பாக்கத்திலிருந்த வீட்டிலிருந்து விஜயராகவா ரோட்டில் இருந்த அலுவலகத்திற்கு நடந்தே செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் அலுவலகம் போனதுமே அலுவல் தொலைபேசிக்கு அவரது வீட்டிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ரஹ்மான் அலுவலகத்திலிருந்து தன்னைக் கேட்டு அவரது தந்தையின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்ததாகச் சொல்லவும் ஓடியிருக்கிறார். அப்போது பேருந்து வசதி இல்லாத அந்த வழித்தடத்தில் நிஜமாகவே ஓடித்தான் போயிருக்கிறார்.  வீடு வந்துசேர்ந்து அவரது அப்பாவிடம் பணம் பெற்றுக்கொண்டு  ரஹ்மானைப் பார்க்க மனம் முழுக்கக் கேள்விகளோடும், படபடப்போடும் ஒரு ஆட்டோ பிடித்துச் சென்றிருக்கிறார்.  

ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் ஒரு அறையில் அமரும்படி கூறியிருக்கிறார்கள். அப்புறம்தான் விஷயம் தெரிந்திருக்கிறது. 'வரலாறு' படத்தின் பாடல்கள் பதிவிற்காக ரஹ்மான் கனடா சென்றுவிட்டதாகவும், பாடல் வரிகளின் பிரதி அவரிடம் இல்லாததால் தன்னை அழைத்து ஏற்கெனவே பதிவுசெய்த பாடலின் அடிப்படை வடிவத்தைக் கேட்டு அந்த வரிகளைப் படியெடுத்துத்  தருமாறு சொல்லித்  தம் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் செய்திருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். ஏமாற்றத்தைச் சந்தித்தவர், பாடல்களை கேட்டுப் படியெடுத்துக் கொடுத்துவிட்டு அவர்கள் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார். அதுவே சினிமாத்துறையில் முதன்முதலில் அவர் சம்பாதித்த பணம். 

"உண்மைதான் ஆகப்பெரும் நகைச்சுவை."

                                                          - அசோகமித்திரன் 

ஏ.ஆர்.ரஹ்மான் - மஷூக் ரஹ்மான்

அதற்குப் பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததும் அவரைச் சந்தித்து வாய்ப்புப் பெற்றிருக்கிறார்.  2007-ல் ‘ஒன் லவ்’ என்ற இசைப்புயலின் ஆல்பத்தில் பாடல் எழுதியிருக்கிறார். ஆனால், வெளியிடப்பட்ட கேசட்களில் பிறமொழிப் பாடலாசிரியர்களின் பெயர் இருக்கிறது. இவரது பெயர் இடம்பெறவில்லை. அப்போதும் அடையாளம் கிடைக்காமல் நொந்துகொண்டவர், ’ஜோதா அக்பர்’ படத்தில் ‘க்வாஜா எந்தன் க்வாஜா’ பாடலை எழுதினார். இசைப்புயலுக்குப் பாடல் எழுதவேண்டும் எனும் அவரது கனவு இடைப்பட்ட காலத்தில் தொலைநிலைக் கல்வியில் பயின்று, ஒரு கல்லூரியில் புரொஃபஸராகச் சேர்ந்தபிறகு ஒருவழியாக நிறைவேறியது மஷூக் ரஹ்மானுக்கு.

'ஜோதா அக்பர்' படத்தில் இவர் எழுதிய பாடல் வரிகள் இடம்பெற்றன. அவரது அபரிமிதமான 'அதிர்ஷ்டமோ' என்னவோ அந்தப்படம் வெளியான சில நாள்களிலேயே தமிழகத் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. அதற்குப் பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காதவர், சினிமாவுக்காக சமூகத்திற்குப் புறம்பான வரிகளை எழுதுவதற்கு எப்போதும் ஒப்புக்கொள்வதில்லை. இப்போது சூபியைப் பற்றி மஷூக் ரஹ்மான் எழுதிய பாடல் விரைவில் Hungama பேனரில் வெளியாகவிருக்கிறது. 

'ஊர்ல எல்லோரும் என்னைச் சப்பாணினுதான் கூப்புடுறாங்க. நான்தான் கோபால் கோபால்னு சொல்லிக்கிட்டுத் திரியிறேன்'. என '16 வயதினிலே' படத்தில் கமல் சொல்வதாக ஒரு காட்சி வரும். கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது வாய்ப்புக் கிடைக்காத இந்தக் கவிஞரின் வாழ்வும்!

சுத்தவிட்டுச் சுண்ணாம்பு அடிக்கும் இந்தச் சினிமாவில் வாய்ப்புத் தேடித்தான் இந்தக் கணத்திலும் ஒருவன் வண்டியேறிக் கொண்டிருக்கிறான். கல்லூரிப்படிப்பு முடிந்த கையோடு, சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த நண்பர் ஒருவரிடம் நேற்று ஒருவர் வாய்ப்புக்கேட்டு அலைபேசினார். ஆம். எளிதில் அடைந்துவிடுகிற லட்சியத்தில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?

தன்னைப் பார்க்க வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த்! ஏன் தெரியுமா..?

 

ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு வடிவேலு வந்த கதை இதுதான்..!

 

'பேரை மாத்திக்கிட்டு வந்தா சேர்த்துக்கிறேன்...' எனச் சொல்லித் திருப்பி அனுப்பப்பட்ட நடிகர்... 

 

‘அனகோண்டா படத்தோட கதைக்கு ஓனர் புதுக்கோட்டைக்காரர்...

 

சென்னையின் அடர்த்திக்குச் சினிமாவும் காரணம்... எப்படி?

 

வாழைப்பழக் காமெடிக்குப் பின்னே மறைந்திருக்கும் கதை...

 

உப்புமா கம்பெனியும், புதிதாக வாய்ப்புத் தேடுபவர்களும்..!

 

 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/92437-lyricists-experience-with-arrahman--kodambakkam-thedi-series-part-8.html

Link to comment
Share on other sites

'ஆலமரத்தடியில புல்லு மொளைக்காது!' - கமல் உதவி இயக்குநரின் கதை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 9

 
 

கோடம்பாக்கம் தேடி..! - சினிமா

 

ந்த மதுரைக்காரப் பங்காளி நடிக்கிறதுக்காகச் சென்னைக்கு வந்தது 1998-ல. பள்ளிக்கூடம் படிக்கும்போதே நடிப்பும் சினிமாவும்னா கொள்ளைப் பிரியம். சுத்துப்பட்டுல இருக்கிற கிராமங்கள்ல சமூக விழிப்புஉணர்வு நாடகங்கள்ல நடிச்சதுதான் பயிற்சி. அவுக அப்பாவுக்கு இவரு டைரக்டரா சினிமாவுல ஒசந்து பேர் நிலைக்க வாழணும்ங்கிறதுதான் ஆசை. 'படம் எடுக்கப் போறதுனா படிச்சுட்டுப் போ... அங்க போய்த் திக்கும்தெரியாம தெசையும்தெரியாம திரியப்படாதுல'னு சொல்லியிருக்கார். அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவரு படிப்பு முடிஞ்சதும் மெட்ராஸுக்கு வண்டியேற ஆயத்தமாகிட்டார். 

எடுத்தவொடனே டைரக்டராகிற முடியுமா... படிப்படியா மலையேறுவோம்னு ஒருநாள் ராத்திரி, பக்கத்து வீட்டுல காரணத்தைச் சொல்லாம முந்நூர்ருவா கடனா வாங்கிக்கிட்டு 'சினிமாவுல நடிக்க மெட்ராஸுக்குப் போறேன். என்னைய யாரும் தேடவேணாம்... விரைவில் திரையில பாருங்க...'னு வீராப்பா கடுதாசி எழுதி வெச்சுப்புட்டு சொல்லாமக் கொள்ளாம வண்டியேறியிருக்காரு. கூட்டாளி அட்ரஸத் தொலைச்சவரு இங்க ராஜா அண்ணாமலைபுரத்துல வந்து தங்கியிருந்துருக்காரு.  எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினியை இமிடேட் பண்ணினவங்களுக்கு மத்தியில, வடிவேலு கொடிகட்டிப் பறந்த சமகாலத்துலேயே வடிவேலுவை இமிடேட் பண்ணின மொத ஆள் இவருதான். 

நடிக்கப்போனா என்னடா தெரியும் ஒனக்குனு கேட்பாய்ங்களேனு டான்ஸ், ஜிம்னாஸ்டிக், குங்ஃபூனு சிலபல வித்தைகளையெல்லாம் கத்துக்கிட்டுத்தேன் கெளம்பிருக்காரு. இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறந்தேன் சினிமாவுல இதையெல்லாத்தையும் பண்றதுக்கு டூப்னு ஒரு புது ஐட்டம் இருக்குங்கிறதே தெரிஞ்சிருக்கு. திரைக்கு முன்னாடி நடிக்கிறவங்களை ஹீரோன்னும், ஹீரோவுக்குப் பதிலா பத்துமாடிக் கட்டடத்துல இருந்து குதிக்கிறவன டூப்புன்னும் சொல்ற முரண்தான் சினிமான்னு புரிஞ்சதுக்கு அப்புறம் 'இம்புட்டு நாளா சூதுவாது தெரியாமயே வளந்துட்டம்போல...'னு பொட்டுல உரைச்சிருக்கு. 

சென்னைக்கு வந்தும் ஷூட்டிங் நடக்குற ஸ்டூடியோக்களுக்குள்ள எல்லாம் போகமுடியாம வாட்ச்மேன்களால விரட்டப்பட்ட கதையும் நிகழ்ந்திருக்கு. விஜயவாஹினி, ஏ.வி.எம், பிரசாத்னு எல்லாப் பக்கமும் அலைஞ்சாலும் கொஞ்சங்கூட அசந்து உள்ளவிட ஆள் இல்ல. அட்ரஸ் தேடித்திரிஞ்ச கூட்டாளி, யதேச்சையா வடபழனிப் பக்கம் ஒரு ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்துருக்கார். நிகழ்ச்சி முடியுறவரைக்கும் உக்காந்து பார்த்துட்டு அப்புறமா தேடிப்பிடிச்சு மெட்ராஸுக்கு வந்த கதையைச் சொல்ல, ஒருவழியா தங்குறதுக்கு இடமும் கிடைச்சிருச்சு. அவர் மூலமா அப்படியே கூடமாடச் சேர்ந்து கோயில் திருவிழா டான்ஸ் க்ரூப்கள்ல ஆடித் திரிஞ்சிருக்கார். அதுலயும் வடிவேலு பாட்டுன்னா அப்படியே ஆட்டம் களைகட்டிரும். குடியாத்தம் பக்கத்துல ஒரு கோயில் திருவிழாவுல ஆடுறதுக்குக் கூலி முப்பது ரூவா. 'எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டக் கேக்கும்...'னு கரகரன்னு ஆடி முடிச்சா அந்தூரு ஆளுக குடுத்த டிப்ஸு மட்டும் ஐந்நூறு ரூவாய்க்கு மேல. இது நல்ல யாவாராமா இருக்குனு அவிங்ககூடவே ஊர்த் திருவிழா கலைநிகழ்ச்சிகள்ல ஆட ஆரம்பிச்சிட்டார்.

காதல் சுகுமார் 

'புதிய பூமி'ங்கிற டான்ஸ் க்ரூப்ல சேர்ந்து ஊர் ஊராப் போயி பெர்பார்மன்ஸ் பண்றதுதான் அப்போ வேலை. சினிமாவுக்கு வந்தும் சான்ஸ் கிடைக்காம இப்படித் திரிஞ்சவருக்கு, வடிவேலுத்தம்பி இருந்தாத்தான் உங்க க்ரூப்ப புக் பண்ணுவோம்ங்கிற அளவுக்கு தமிழ்நாடு பூராம் ஏகப்பட்ட ரசிகர்கள். கொஞ்சம் வசதியானதும் சேர்த்துப் பிடிச்சு ஒரு செயினும் மோதிரமும் வாங்கிப்போட்டுக்கிட்டு ஊர்ப்பக்கம் போனா பெருமையா நினைப்பாய்ங்கனு நினைச்சு வாங்கிப் போட்டிருக்கார். செயினு வாங்கி போட்ட நேரமோ என்னமோ அதிர்ஷ்டம்(!) முகட்டைப் பிச்சிக்கிட்டுக் கொட்டுன கதையா ரஜினி படத்துல நடிக்கிற வாய்ப்பு தேடி வந்திருக்கு. அந்தக் கதையக் கேளுங்க... 

அப்பத்தான் புரோகிராம் மேனேஜருனு அறிமுகமான ஒருத்தர், 'தம்பி... உங்களத்தான் தேடிக்கிட்டிருந்தோம்... படையப்பா படத்துல நடிக்கிறதுக்கு ஆள் கேட்டாங்க ­­­வாங்க'னு ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கார். சினிமாவுல நாம வியந்து பாக்குற ஆளுகளையெல்லாம் லெஃப்ட்ல டீல் பண்றவர்மாதிரி அந்தாளு பேச்சு அம்புட்டு கெத்தா இருந்துருக்கு. ஸ்டூடியோ வெளிவாசல்வரைக்கும் போனவர் என்ன யோசிச்சாரோ, தம்பி உங்க செயினு மோதிரத்தைப் பார்த்தா வசதியானவர்னு வாய்ப்புக் குடுக்க யோசிப்பாங்க. கழட்டி இந்தப் பேப்பர்ல மடிச்சு பாக்கெட்ல பத்திரமா வெச்சுக்கங்க'னு சொல்லவும் 'இதுவும் சரித்தேன்'னு கழட்டிக் குடுத்து,  அதை வாங்கி பேன்ட் பாக்கெட்டுக்குள்ள வெச்சுருக்கார். இங்கேயே இருங்க தம்பி... இன்னொருத்தர் வர்றாராம். அவரையும் போய்க் கையோட கூட்டியாந்தர்றேன்'னு சொல்லிப்புட்டுக் கெளம்பிப்போனவர் போனது போனதுதான். 

ரெண்டு மணி நேரம் ஆகிருக்கு... மூணு மணிநேரம் ஆகிருக்கு... ம்ஹூம். அந்த ஆள் வந்தபாடு இல்ல. அவர் வராம இந்த வாட்ச்மேனும் உள்ள விடமாட்டாப்ள. ரைட்டு கெளம்புவோம்னு வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் பாக்கெட்ல மடிச்சு வெச்ச செயினையும் மோதிரத்தையும் போடலாம்னு எடுத்தா மடிச்சுவெச்ச பேப்பருக்குள்ள ரெண்டு சின்ன செங்கக்கட்டிக இருந்துருக்கு. 'மாயமில்லே... மந்திரமில்லே' கணக்கா முழிச்சகண்ணுலயே நாலு லோடு மண்ணைத் தூவி தங்கத்தை அடிச்சிட்டுப் போயிருக்காய்ங்க. இனிமே, யாரையும் நம்பி இந்த ஊர்ல எதுவும் பண்ணக்கூடாதுனு பாடத்தையும் படிச்சிப்புட்டு பொத்துனாப்ள உக்காந்து அழுதிருக்கார். தொலைச்சவனுக்குத் தானே உழைப்போட வலி தெரியும். 

காதல் சுகுமார்

அப்புறம், ராஜ் டி.வி யில 'ஊர்வம்பு'ங்கிற நிகழ்ச்சிக்கு வாய்ப்புக் கேட்டுப் போயிருக்கார். நம்ம ஊர்ப்பக்கம் அந்திசாய்ஞ்ச நேரத்துல வீட்டு வாசல்ல உக்காந்து பொரளி பேசுற புள்ளைக மாதிரி ஊர்வம்பு பேசுற நிகழ்ச்சி அது. புள்ளைக பேசுற நிகழ்ச்சியில நாம போயி என்ன பண்றதுன்னு யோசிச்சி, அரசியல் நையாண்டி, வடிவேலு - பார்த்திபன் மாதிரி குண்டக்க மண்டக்கனு காமெடி ட்ராக் எழுதி நடிச்சிருக்காப்ள. கிட்டத்தட்ட 175 எபிசோடுகள்ல பட்டையைக் கெளப்புனவரு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே நடிப்பையும் நல்லாத் தெரிஞ்சிக்கிட்டாரு. அதுக்கப்புறம், கஸ்தூரி ராஜா, 'காதல் ஜாதி'ங்கிற படத்துக்கு நடிக்கக் கூப்பிட்டிருக்கார். யாரு வெச்ச செய்வெனையோ இவரு பாட்டுப் பாடுன அந்தப் படம் ரிலீஸாகவே இல்ல. அடுத்து 2002-ல 'கலகலப்பு'னு ஒரு படத்துல காமெடி வில்லன் ரோல்ல நடிச்சிருக்காப்ள. அதுதான் நம்மாளுக்கு அறிமுகப் படம். 

'தவசி' படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கும்போது வடிவேலுக்கு கால்ல அடிபட்டதால ஷூட்டிங்குக்கு வர முடியல. அந்த நேரத்துல இவரைப் பத்திக் கேள்விப்பட்டவுக வடிவேலு வரமுடியாமப்போன காட்சிகளுக்கு இவர டூப்பா நடிச்சுத் தரச்சொல்ல, அது நமக்குச் சரியா வராதுனு விலகிட்டாப்ள. வடிவேலு டூப் விவகாரம் ஒரு தனிப் பஞ்சாயத்து. அப்புறம் நடிகர் சங்கிலிமுருகனைப் பார்த்துப் பேசினவர் கமலுக்கு அசிஸ்டென்டா விருமாண்டி படத்துல சேந்துட்டார். கமலோட சேர்ந்து நடிச்ச காலத்துல, கமல் இவருக்கு சினிமாவுல பல கண்களைத் தொறந்து விட்ருக்காரு. ஆலமரத்தடியில புல்லு மொளைக்காதும்பாங்க... ஆனா, தன்னைச் சுத்தி இருக்குறவங்களுக்கு நிழல் கொடுக்கும்ல.  

"நான் ஆரம்பகாலத்துல மைக்கைப் புடிச்சுப் பாடுனதால எல்லாப் படத்துலயும், மைக்கோட பாடுற பாட்டை வெச்சுக் கொடுமைப் படுத்துனாய்ங்க. ரொம்பகாலமா கூடவே வெச்சிருந்த மைக்கை மோகன் வந்து ஒருவழியா வாங்கிட்டுப் போயிட்டார். நீயும் ஜிம்னாஸ்டிக் தெரியுமேனு இப்ப பல்டி அடிக்க ஆரம்பிச்சா ரிட்டயர்டு ஆகுறவரைக்கும் பல்டி அடிச்சிக்கிட்டேதான் கெடக்கணும்."  

                             - கமல்ஹாசன்  'காதல்' சுகுமாரிடம் சொன்னது...

 

இவரு கமல் கூட இருக்கும்போதே பிரமாண்ட ஷங்கர் ஆபிஸ்ல இருந்து 'காதல்'ங்கிற படத்துல நடிக்கக் கூப்புட்றாக. 'பாய்ஸ்' படத்துல நடிச்ச மணிகண்டன்தான் அந்தப் படத்துல ஹீரோவா நடிக்கிறதா இருந்துருக்கு. காமெடி வேசத்துக்கு மதுர வட்டாரமொழியில பேசுற இவரை நடிக்கக் கேட்டுட்டு, அப்படியே சேந்தாப்ல ஹீரோ மணிகண்டனுக்கும் மதுர நடையைச் சொல்லித்தரச் சொல்லிருக்காக. டிபிக்கல் சென்னைக்காரரான மணிகண்டனுக்கு மதுர பாஷை சுட்டுப்போட்டாலும் செட்டாவல. சொல்லிக்குடுத்த நம்மாளுக்கு மெட்ராஸ் பாஷை வந்துருச்சு. மணிகண்டனுக்கு மதுர ஸ்லாங்கு கடைசிவரைக்கும் வரல. அப்புறம் அவரத் தூக்கிப்புட்டு அந்த எடத்துல பரத் நடிச்சது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயந்தேன். 

கமல் - சுகுமார்

ஆறு மாசங் கழிச்சு, கமலோட 'சிறுக்கி சிரிச்சி வந்தா சீனாதானா டோய்...' பாட்டு ஷூட்டிங்ல பிஸியா இருக்கும்போது, 'காதல் பட ஷூட்டிங் இருக்கு... நாளைக்கு மதுரக்கி வந்துருங்க'னு போன் வந்துருக்கு. 'என்னய்யா முன்னபின்னச் சொல்லாம பொசுக்குனு கூப்பிடுறீக'னு யோசிச்சவரு, கமல் போகச் சொல்லவும் நைட்டோட நைட்டா பஸ் ஏறிட்டாரு. போய் எறங்குனதூம், மொத சீனுலயே கதாநாயகி சந்தியா வண்டியக் கொண்டாந்து குறுக்கால விடுறத காட்சியத்தேன் எடுத்துருக்காக. யதார்த்தமான காட்சி, இயல்பான நடிப்பு... நல்லா அமைஞ்சிரும்னு பூரிச்சுப் போனவர் முழுப்படத்தையும் திருப்தியா நடிச்சுக் கொடுத்திருக்கார். 

அதுவரைக்கும் ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்துக்கும் கஷ்டப்பட்டவருக்கு காதல் படம் வெளிவந்ததுக்கு அப்புறம் பத்துப் படங்களுக்கும் மேல நடிக்கச் சொல்லி அஞ்சு லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்துருக்காக. திக்குமுக்காடிப் போனவரு பாலாஜி சக்திவேலைத் தேடிப்போய் 'என்னை எப்படிண்ணே தேடிப்பிடிச்சீங்க'னு கேட்க, 'உன் பேச்சுல மணக்குற மதுர வாசத்தோட சிரிப்பும், சோகமும் ஒண்னாத் தெரிஞ்சது. உனக்கே தெரியாம அந்தச் சோகத்தை வெளியே கொண்டுவரணும்னு நெனச்சேன். படம் முழுக்க உன்னோட பரிதவிப்பு அதை முழுசா கொண்டுவந்துடுச்சு'னு சொல்லியிருக்கார். 'வேறென்னணே... கண்ணுமுன்னாடி பாத்து வளந்த வறும கண்ணுல சோகமாத் தெரியுது'னு சொல்லிட்டுத் திரும்பியிருக்கார் நம்மாளு.

kaadhal sukumar 

"மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை; வெற்றியில் தான் இருக்கிறது!"

                                                                                                                        - ராக்ஃபெல்லர்

'ஒருநாள் ஒரு கனவு' படத்துல 'காதல் சுகுமார்'ங்கிற பேர்ல நடிச்சவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புக் கிடைச்சுது. காமெடி நடிகரா நல்ல நிலைமையில இருக்கும்போது அவுக அப்பாவப் பாக்க ஊருக்குப் போயிருக்கார். 'நீ நல்ல க்ரியேட்டருய்யா... நடிகனா இருந்தீனா நம்ம குடும்பம் மட்டும் நல்லாருக்கும். டைரக்டராகிட்டா உன்னால நூறு குடும்பம் நல்லாருக்கும்'னு சொன்னதும், அரைகுறையா ஆரம்பிக்கக் கூடாதுனு லண்டனுக்குப் போய் ஒன்றரை வருசம் சினிமாப்படிப்பு படிச்சிட்டு வந்திருக்கார். இங்கே வந்து 'திருக்குரல்'னு படம் எடுக்க ஆரம்பிக்க, அதுக்கும் குறுக்கால கட்ட விழுந்திச்சு. அதைக் கிடப்புல போட்டுட்டு அப்புறம் எடுத்த 'திருட்டு வி.சி.டி' படம்  சுமாராகப் போச்சு. 'சும்மாவே ஆடுவோம்'னு இன்னொரு படமும் எடுத்தவர் இப்ப '9 கிரகங்களிலும் உச்சம் பெற்றவன்' பட வேலைல இறங்கியிருக்கார். ஒருபக்கம் நடிப்பு, மறுபக்கம் டைரக்‌ஷன்னு இந்த அலங்காநல்லூர்க் காளை களத்துல நின்னு விளையாடுது..!

 

அடுத்தடுத்த வெற்றிக்கான ஃபார்முலாவே தோல்வியிலதான இருக்கு. இதுல சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன..? அடிச்சு ஆடுவோம்!

 

- இன்னும் ஓடலாம்... 

 

வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த்! ஏன் தெரியுமா..?

 

ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு வடிவேலு வந்த கதை இதுதான்..!

 

'பேரை மாத்திக்கிட்டு வந்தா சேர்த்துக்கிறேன்...' எனச் சொல்லித் திருப்பி அனுப்பப்பட்ட நடிகர்..! 

 

‘அனகோண்டா படத்தோட கதைக்கு ஓனர் புதுக்கோட்டைக்காரர்..!

 

சென்னையின் அடர்த்திக்குச் சினிமாவும் காரணம்... எப்படி?

 

வாழைப்பழக் காமெடிக்குப் பின்னே மறைந்திருக்கும் கதை...

 

உப்புமா கம்பெனியும், புதிதாக வாய்ப்புத் தேடுபவர்களும்..!

 

 

ஏ.ஆர்.ரஹ்மானும் வாய்ப்புத் தேடிய பாடலாசிரியரும்..!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/92639-kadhal-sugumars-cinema-career--kodambakkam-thedi-series-part-9.html

Link to comment
Share on other sites

கேமராமேனை அறைந்த புது டைரக்டர்...! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 10

 
 

கோடம்பாக்கம் தேடி..! - சினிமா

 

'புதுப் படத்தில் பணியாற்ற நடிகர்கள், உதவி இயக்குநர்கள் தேவை'ன்னு நோட்டீஸைப் பார்த்ததுமே பாலசந்தர்கிட்ட சான்ஸ் கிடைச்ச ரஜினிகாந்த் மாதிரி முகம் பளிச்னு பிரகாசமாகிறக் கூடாது. இந்த பேஷன்ட்களை எல்லாம் பார்த்துப் பக்குவமா அணுகணும் பாஸு. மஞ்சத்தண்ணியை வாளி நிறைய ரொப்பி வெச்சுக்கிட்டு ஆடுகளுக்காகக் காத்திருப்பாய்ங்க. அவிங்ககிட்ட அட்ரஸ் கேட்டுப் போறவிங்களையே டைரக்டர் ஆக்குறோம்னு சொல்லி விபூதி அடிக்கப் பார்ப்பாய்ங்க. நீங்க டைரக்டராவே ஆகணும்னு போனா... அவிங்களுக்கு அன்னிக்கு யாவாரம் அமோகம்தான். 

அப்படித்தான் நம்மாளு ஒரு படத்துல உதவி இயக்குநரா சேரலாம்னு போனாப்ள. பார்க்கவே தேசிய விருது வாங்குன டைரக்டர் லுக்குல இருந்திருக்கார் அந்தப் படத்தோட இயக்குநர். வாய்ப்புக் கேட்டுப் போனவர்கிட்ட, கத்திரிச்செடிக்கு மருந்தடிக்கிற மாதிரி மொத்த வித்தையையும் வாயாலேயே தெளிச்சிருக்கார்.  'தம்பி ஒண்ணும் கவலைப்படாதீக... உங்களை மாதிரி இளம் ரத்தங்களைப் பீய்ச்சி அடிச்சித் தமிழ் சினிமாவில் புரட்சி பண்றதுதான் நம்ம நோக்கம்' எனக் கைகால்களே புல்லரிக்கும் அளவுக்குப் பேசினவர், 'அதுக்காகத்தான் படத்துக்கு டைட்டிலே 'என் உயிர் நீதானே'னு வெச்சிருக்கோம். இதுல என் உயிர்ங்கிறது யார் தெரியுமா... நீங்கதான் தம்பி...' என நெஞ்சில் குழி விழுற அளவுக்கு போர் போட்ருக்கார். எல்லாம் முடிஞ்சு முக்கியக் கட்டம்... அதாங்க முடிஞ்ச அளவுக்கு பணத்தைக் கறக்குற திட்டம்.. அதுலயும் 300 ரூபாயை சேவை வரியாக் கட்டி முடிச்சதும், நாலு நாள் காத்திருக்கச் சொல்லிருக்காய்ங்க. அன்னிக்குக் காத்திருக்க ஆரம்பிச்சவர்தான்... இப்போ நாலு வருசமாச்சு. இதுவரைக்கும் அங்கேயிருந்து ஒருத்தரும் கூப்பிடலை. 

சினிமா வாய்ப்பு - டைரக்டர்

இன்னொரு முறை வாய்ப்புத் தேடிப்போனது 'சொப்பனத்துறை' வாழும் வடபழனிப் பக்கம். தூரத்துல நின்னு குறுகுறுன்னு பார்த்த ஒருத்தர் கொஞ்சநேரம் போனதும் கிட்ட வந்து, 'நீங்க சினிமா சான்ஸ் கேட்டுத்தானே வந்திருக்கீங்க..?' எனப் பசையைத் தடவியிருக்கார். 'மூஞ்சியே சொல்லுதே... பேரரசு மாதிரி பிரகாசமா மின்னும்போதே பெரிய ஆளா வருவனு தெரியுதே...' என லாஜிக்லயே குந்தாங்கூறாக ஓட்டையைப் போட்ருக்கார். சரி... லாஜிக் இல்லாம ஹாலிவுட் ரேஞ்சுக்குப் படம் எடுக்குறவர் போலன்னு மனசைத் திடப்படுத்திக்கிட்டு சிரிச்சி வெச்சா 'வாங்க கதையை டிஸ்கஸ் பண்ணுவோம்'னு அணைக்கட்டி ஆபிஸ் ரூமுக்குப் கூட்டிட்டுப் போயிருக்கார். 

ஆபிஸ் ரூம் பூட்டைத் திறந்தாலும் அவ்வளவு ஈஸியா கதவைத் தொறக்கமுடியாத டெக்னாலஜிய யூஸ் பண்ணிக் கட்டியிருப்பாய்ங்க போல. 'பூங்கதவே... தாழ் திறவாய்...' னு பாட்டு மட்டும்தான் பாடல. படத்துல கல்யாணத்தை நிறுத்துற காட்சியில தாம்பூலத் தட்டைத் தட்டிவிடுற மாதிரி ஆவேசமா எத்துனாத்தான் கதவு தொறக்குது. உள்ள ரெண்டு சேர். அதுல ஒண்ணுல உட்காரமுடியாது. ஃபேன் ரெண்டு. ஒண்ணுல சுவிட்ச் போட்டாலும் காத்து வராது. இப்படியாக அந்த ரூம்ல இருந்ததுல பாதி ஆகாவளிப் பொருள்கள். அவரும் பாய விரிச்சு உட்காரவெச்சு, அவர் சினிமாவுக்கு வாய்ப்புத் தேடி அலைஞ்சப்ப பிளாட்பார்ம்ல படுத்துத் தூங்குனது, நாலஞ்சு வருசம் ஓம் முருகா ப்ரொடக்‌ஷன்ஸ்ல ஆபிஸ் பாயா வேலைபார்த்ததுல ஆரம்பிச்சு விஜய், அஜித்கூட போட்டோ எடுத்துக்கிட்ட கதை வரைக்கும் சொல்லிமுடிக்கிறதுக்குள்ள பாவம் பார்த்து இவங்களே ஐநூறு ரூபாயை நன்கொடை லிஸ்ட்ல எழுதியிருக்காங்க.

 

இப்ப நடிகரா, இயக்குநரா வளர்ந்திருக்குற ஒருத்தர் மெட்ராஸுக்கு வந்து நடிக்க சான்ஸ் தேடுனப்ப நடந்த அட்டூழியங்கள் அந்தலை சிந்தலை ரகம். 'நெல்லைச் சீமையிலே'னு ஒரு படத்துல நடிக்கிறதுக்கு சென்னையில இருந்து திருநெல்வேலிக்கு மொத்த யூனிட்டும் ஷூட்டிங் போயிருக்காங்க. நடிகர்கள் எல்லோரும் திருநெல்வேலியில இருக்கிற ஒரு ஹோட்டல்ல தங்கி இருந்திருக்காங்க. ரெண்டுநாள் ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் மூணாவது நாள் ஒருத்தரைக் காணோம். அது யார்னா அந்தப் படத்தோட டைரக்டர். ஷூட்டிங் ஆரம்பிச்ச ரெண்டு நாள்ல என்ன நினைச்சு மனசு மாறுனாரோ தெரியல... யார்கிட்டயும் சொல்லாமக் கொள்ளாம எங்கேயோ கெளம்பிட்டார். தங்கியிருக்கிற லாட்ஜுக்கு வாடகை குடுக்காததால மொத்த யூனிட்டையும் உள்ளேயே வெச்சுப் பூட்டிட்டாங்க. மொத்தப் பணத்தையும் குடுக்குற வரைக்கும் ரூமை விட்டு அவசரத்துக்குக் கூட வெளிய போகவிடமாட்டோம்னு மிரட்டிருக்காக. மெட்ராஸ்ல இருக்குற ப்ரொடியூசருக்குத் தகவல் சொல்ல போன் நம்பரும் இல்லையாம். ஒருவழியா, எல்லோரும் சேர்ந்து ப்ளான் போட்டு, ஒருத்தர் மட்டும் வென்டிலேட்டர் வழியா வெளியே குதிச்சு எஸ்கேப்பாகி மெட்ராஸுக்குப் போயி ஆளுகட்டச் சொல்லி, மிச்சப்பேரை எல்லாம் மீட்டுக்கொண்டு வந்து சேத்துருக்காக.

Cinema chance

திண்டுக்கல்லுக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல ஷூட்டிங். புதுமுகங்களா சேர்ந்து எடுக்குற படம். டைரக்டர், புரொடியூசருக்குச் சொந்தக்காரராம். பூஜை எல்லாம் முடிச்சிட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது ஒரு தகராறு. 'யோவ்... தொப்பி எங்கய்யா... டவல் எங்கய்யா... அதெல்லாம் இல்லாம என்னைய டைரக்டர்னு எப்படியா நம்புவாய்ங்க'னு அசிஸ்டென்ட் டைரக்டர் மேல பாய்ஞ்சிருக்கார் டைரக்டர். அவரைச் சமாதானப்படுத்தி டவுனுக்குப் போய் வாங்கிட்டுவர ஆள் அனுப்பிருக்காக. கொஞ்சநேரம் கழிச்சு அசிஸ்டென்ட் டைரக்டர் கன்னத்துல கைய வெச்சுத் தடவிக்கிட்டு இருந்துருக்கார். என்னடான்னு விசாரிச்சா, 'நான் ஒரு டைரக்டர்... இந்தப்பய என்கிட்ட வந்து கேமராவ எங்க வெக்கணும்னு கேக்குறான்யா'னு மறுபடியும் தாவிருக்காப்ள. சுதாரிச்ச ப்ரொடியூசர், மொத்தத்தையும் பேக்கப் பண்ணச் சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிட்டாராம். 

இந்தமாதிரி வாய்ப்புத் தேடிப் போய் பணத்தைக் கோட்டைவிட்டவங்க, ஆழம் தெரியாம குட்டைக்குள்ள காலைவிட்டுத் தப்பிப்பிழைச்சு வந்தவங்கனு சினிமாவில் 'பல்பு' வாங்கின பங்காளிகளோட கதைகள் ஏராளம் இருக்கு. ஆகவே, மக்கழே... 'நாங்கள் தொடங்கவிருக்கும் புதுப்படத்தில் நடிக்க ஆறு வயது முதல் அறுபது வயது வரை புதுமுகங்கள் தேவை...'னு பேப்பர்ல மூணு இஞ்ச்ல விளம்பரம் கொடுத்திருக்கிறவங்களை முழுசா நம்பி ஏமாந்துறாதீங்க. அதுக்காக, சினிமாவைக் கண்டாலே விலகி ஓடிறணும்னு இல்ல. தடைகள் இல்லாத வாழ்க்கை போரடிச்சுரும். ஆனா... பார்த்து சூதானமப்பூ..!

"பிரச்னைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்; எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்."

                                                                                              - ஓஷோ 

 

- இன்னும் ஓடலாம்... 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/92913-experience-of-assistant-directors--kodambakkam-thedi-series-part-10.html

Link to comment
Share on other sites

‘பாலுமகேந்திராவின் கடிதத்தால் சென்னைக்கு வந்தேன்..’ - சுகா : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 11

 
 

கோடம்பாக்கம் தேடி..! - சினிமா

 

தாமிரபரணிக் கரையில் இருந்து கோடம்பாக்கத்துக் கனவோடு கிளம்பியவர் அவர். பள்ளி இறுதி நாட்களில் 'கமல்’ ரசிகராக இருந்தவர். 'வீட்டுப் பாடம்லாம் செய்வேளா, எப்பிடிடே?’ என டிக்கெட் கிழிப்பவர் கேட்கும் அளவுக்கு ராயல் டாக்கீஸில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் மீண்டும் மீண்டும் பார்த்தவர். படப்பெட்டி வருவதற்கு முன்பே தியேட்டர் வாசலில் தவமாகக் காத்துக்கிடக்கும் கூட்டத்தில் ஒருத்தர். நண்பனின் காதலுக்காக அப்புறமாய் ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்ததெல்லாம் தனிக்கதை. 

திருநெல்வேலி செல்வம் தியேட்டரில் 'அழியாத கோலங்கள்' படத்தைப் பலவருடங்கள் கழித்துப் பார்த்ததுதான் சினிமாவை நோக்கி ஆளைத் தள்ளி இருக்கிறது. அதுவரை பார்த்துப் பார்த்துப் பழகிய சினிமாவாக அது இல்லை. வண்ணதாசனின் கதைகளைப் போல... 'ராஜி கட்டியிருந்தது ஒரு கருநீலப் புடவை. சந்திரா சொல்வது மாதிரி சொன்னால், 'நவ்வாப் பழக் கலர்.' புடவை முழுவதும் வளையம் வளையமாகக்கிடக்கிறது. கோயில் வாசல் வளையல் கடையில் இருந்து எல்லா வளையல்களும் உருண்டு உருண்டு வந்து, ஒன்றின் மேல் ஒன்றாக மண்டபத் தரையில் சுழன்றன. வளையல்களுக்கு உயிர் இருப்பதுபோலவும் ஒவ்வொரு வெவ்வேறு நிற வளையலும், குவியலுக்குள் புதைந்து, இன்னொரு புதிய நிறத்தோடு வெளியே வருவதும் நன்றாகத்தானே இருக்கும். ஸ்டூலில் நிற்கிற ராஜியின் புடவையில் இருந்து எந்த விநாடியிலும் அப்படி ஒன்றிரண்டு வளையல்கள் உருண்டு கீழே வரக்கூடும்...' என்பது போலக் கதையே சொல்லாமல் நெஞ்சைப் போட்டு நெருக்கியிருக்கிறது 'அழியாக் கோலங்கள்' படம். 

அதன்பிறகு பார்த்த 'யாத்ரா' என்றொரு மலையாளப் படத்தின் மூலம் பாலுமகேந்திரா என்னும் பெயர் இன்னும் அழுத்தமாக மனதில் பதிகிறது. பிறகு, 'ஓளங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்' என பாலுமகேந்திராவின் பல படங்களைப் பார்த்திருக்கிறார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு எந்த எதிர்கால நோக்கமும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் 'வண்ண வண்ணப் பூக்கள்' படம் பார்த்திருக்கிறார். அதுவரை தோன்றாத 'சினிமாவுக்குப் போனால் என்ன?' என்ற எண்ணமும் அப்போதே தோன்றியிருக்கிறது. பாலுமகேந்திராவுக்குக் கடிதம் எழுதுகிறார்... நான்கைந்து முறை கடிதங்கள் பரிமாற்றத்தோடு, ஒரு கடிதத்தில் 'கிளம்பி வாடா' என அவர் சொல்ல, சுகா அண்ணன் கிளம்பியிருக்கிறார் சென்னைக்கு.

உதவி, இணை இயக்குநர் 

திருநெல்வேலி போன்ற சிறு நகரத்திலிருந்து சென்னைக்கு வந்தவருக்கு, நகரத்தின் பிரமாண்டத்தையும், சினிமா எனும் மாய உலகத்தையும் கண்டு மிரண்டுவிடாமல் மனம் முழுக்க வியாபித்திருந்த தாழ்வு மனப்பான்மைகளை மயிலிறகால் வருடி அகற்றியிருக்கிறார் பாலுமகேந்திரா. சினிமாவில் இருப்பவர்கள் கக்கூசுக்கே காரில்தான் போவார்கள் என்பனபோன்ற பாமரத்தனமான எண்ணங்கள் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தபின்புதான் இவருக்கு மறைந்திருக்கின்றன. பாலுமகேந்திரா எனும் மலையுச்சியை அடைந்தபின்பு போக என்ன இருக்கிறது..? பாலா, ராம், வெற்றிமாறன், நா.முத்துக்குமார், மீரா கதிரவன், சீனு ராமசாமி எனப் பலரோடு சேர்ந்து அவரிடம் சினிமாப்பாடங்கள் கற்றுக்கொண்டார்.

   "அறிவின்மைக்குத்தான் வருத்தப்படணும்; வாய்ப்பின்மைக்கு இல்லை.

    Beggars can't be choosers''

                                                            - பாலுமகேந்திரா. 


 மனம் முழுதும் கற்பனையையும் தாங்கள் வடிவமைத்த ஏராளமான கதாபாத்திரங்களையும் சுமந்தபடி சென்னைக்கு உதவி இயக்குநர் கனவோடு வந்து இறங்குகிற இளைஞர்களை முதலில் முகத்தில் அறைந்து வரவேற்பது, 'இவ்ளோ பெரிய மெட்ராஸ்ல எங்கே தங்கப்போற?’ என்ற கேள்விதான். எங்கெங்கோ பிறந்தவர்கள் சென்னையில் தங்களுக்கு என்று ஒரு கூரை கிடைக்க எதிர்கொள்ளும் போராட்டம் கொடுமையானது. இந்தத் தொடர் போராட்டம் தரும் நெஞ்சுரம்தான், பிற்காலத்தில் இந்த இளைஞர்களைப் படைப்பாளிகளாக, ஒப்பற்ற கலைஞர்களாக உயர்த்துகிறது எனச் சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ளலாம். மேன்ஷன் வாழ்க்கையைத் தாண்டி ஓரளவு வசதியாக ஒரு வீடு எடுத்துத் தங்கிக்கொள்ள முடிவு எடுத்த பின், உதவி இயக்குநர்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஹவுஸ் ஓனரும், அவர்களை 'ஏன்டா இந்த சினிமாவுக்கு வந்தோம்?’ என்று எளிதாக நினைக்க வைப்பார்களாம்.

'ஐயா மகனே, இவனுக சினிமாக்காரங்களுக்கு நாட்டைக் குடுப்பானுக. ஆனா, குடியிருக்க வீட்டக் குடுக்க மாட்டானுக. இந்தக் கொடுமைக்குள்ளதான் நாமளும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். என்ன பண்ணச் சொல்றிய?’ என மனம் வெதும்பிப்போன ஒரு தருணத்தில் சீமான் இவரிடம் சொல்லியிருக்கிறார். 'நாமளும் ஒருநாள் அப்படி வளர்ந்து, இதே ஏரியாவுல பெரிய பில்டிங் கட்டி வாடகைக்கு விடுவோம். அதுவும் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு மட்டும் குறைஞ்ச வாடகைல.’ என மற்றொரு நண்பர் மன உறுதியோடு உற்சாகப்படுத்துவாராம். மாநகர வாழ்க்கையில் தாக்குப்பிடிக்க முடியாமல் கிட்டத்தட்ட செங்கல்பட்டில் இருந்தெல்லாம் உதவி இயக்குநர்கள் படப்பிடிப்புக்கு வந்துபோவார்களாம். 'மாப்ளே, இதுக்கு நீ பேசாம புதுக்கோட்டைலயே இருந்துருடா. நாங்க மிஸ்டுகால் குடுத்தா, கௌம்பி வா. என்ன சொல்றே?’ என புதுக்கோட்டையில் இருந்து வந்திருக்கும் உதவி இயக்குநரைக் கலாய்ப்பது என வாழ்க்கையின் ஒவ்வொரு சிரமமான கட்டத்தையும் இப்படி நகைச்சுவையுடனே தினந்தினம் கடந்திருக்கிறார்கள்.

பாலுமகேந்திரா - சுகா - வெற்றிமாறன்

பாலுமகேந்திராவின் அருகிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக, சாலிகிராமத்திலேயே வீடு தேடி இருக்கிறார் சுகா அண்ணன். அப்போது படும் சிரமங்களை நினைத்து ஊருக்கே போய்விடலாம் என்றுகூட எண்ணம் தோன்றுமாம். ஃபேமிலிமேன், வெஜிடேரியன் என வீடு தேடுவதற்கான இரு அடிப்படைத் தகுதிகள்(!) இருந்தாலும், 'சினிமாவுல இருக்குறவங்களுக்கு வீடு கொடுக்குறதில்லை. இது எங்க பாலிஸி' என ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிடுவார்களாம். 'அதென்ன சார்... பெரிய இன்சூரன்ஸ் பாலிசி... தியேட்டர்லயும், டி.வி-லயும் தினமும் நீங்களும் சினிமாதான பார்க்குறீங்க...' எனக் கேட்டால் 'அது வேற இது வேற...' என ஒருமாதிரி பேசிக்கொண்டே நாய் கழுத்தில் உள்ள சங்கிலியை அவிழ்க்க முனைவார்களாம். இன்னொரு வீடு பார்க்கச் செல்லும்போது, முன் அனுபவங்கள் கொடுத்த படிப்பினைகளால் 'அட்வர்டைஸிங் கம்பெனியில் வொர்க் பண்றேன்' எனச் சொல்லியிருக்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு வீடு கொடுக்கச் சம்மதித்திருக்கிறார் ஓனர். நடிகர் ஆர்யா ஒருமுறை இவரைப் பார்க்க வந்துபோன விவகாரத்தில் அந்தக் குட்டும் வெளிப்பட்டிருக்கிறது.

சென்னைக்குப் புதிதாக வரும் இளைஞர்களை ஆரம்பத்தில் மிரட்டும் ஆங்கிலம் இவரையும் மிரட்டியிருக்கிறது. அதுவும் சினிமாத்துறையில் இருப்பவர்கள் தும்மினாலும் ஆங்கிலத்தில்தான் தும்முவார்கள். ஒரு சினிமாகூட எடுத்துவிடலாம். அதைவிடக் கடினமானது, அதன் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி வாய்ப்பு வாங்குவது. சினிமா பாஷையிலேயே சொல்வதாக இருந்தால், 'கதையை ஓ.கே பண்ணுவது’. அப்படி ஓ.கே செய்யப்பட்ட கதைகள் படமாகுமா என்பது அடுத்த கேள்வி.

பாலுமகேந்திராவிடம் இருந்து வந்த பின்னர், தனியாக ஒரு படம் இயக்க வாய்ப்பு தேடி அலைந்த சமயம். முதன்முதலில், ஆந்திரா கிளப்பில் இருந்த ஒரு ஃபைனான்ஸியரிடம் அவரது நண்பரும் எடிட்டருமான பீட்டர் ஃபாபியா அழைத்துச் சென்றிருக்கிறார். வீடியோவில் இயக்குநர் ஸ்ரீதரின் 'தில் ஏக் மந்திர்’ ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது. 'மொதல்ல டீ... அப்புறம் ஸ்டோரி’ என்றிருக்கிறார் ஃபைனான்சியர். டீ வந்து குடிக்கும் வரை மனதுக்குள் மீண்டும் ஒருமுறை கதையைச் சொல்லிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் சுகா அண்ணன். டீ குடித்து முடிக்கவும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, 'இப்போ ஸ்டார்ட் பண்ணலாமா சார்?’ என ஃபைனான்சியர் கேட்டதும் 'யெஸ் சார்’ என்று நிமிர்ந்து உட்கார்ந்து தயாராகியிருக்கிறார். 

கமல் - சுகா

காலை டிபன், மதிய உணவு, மாலை டீ, பிஸ்கட் என அன்றைய பொழுது முழுதும் அவருடனேயே கழிய, ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் மூன்று கதைகள். மூன்றாம் கதை முடியும்போது, இரவு 7 மணி. 'எப்படி சார் இருந்தது?’ என்று கேட்டிருக்கிறார் ஃபைனான்சியர். (ப்ரூஃப் மிஸ்டேக் எல்லாம் இல்லை.) காரணம், மூன்று கதைகளையும் சொன்னது அந்த ஃபைனான்சியர்தான். 'சூப்பர் சார்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டு சுகா அண்ணன், நண்பர் பீட்டர் ஃபாபியாவைத் தேட, கைகளுக்குச் சிக்காமல் தடதடவென மாடிப் படிகளில் இறங்கி ஓடியிருக்கிறார் அவர். கதை சொல்லும் அனுபவத்தின் முதல் முயற்சியில் கதையே சொல்ல முடியாத சோகம் அரங்கேறியிருக்கிறது.

செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் பீட்டர். அடுத்து, ஒரு வெள்ளிவிழா தயாரிப்பாளரிடம் கதை சொல்லல் நிகழ்வு. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் அவர். ரொம்ப மரியாதையாக நடந்துகொண்டவர், 'நீங்க என்ன மாதிரி கதை சொல்லுவீங்க தம்பி?’ என்று கேட்டிருக்கிறார். 'என்ன மாதிரி கதை... ஆங்...' என யோசித்த சுகா அண்ணன், தனது முதல் கதை சொல்லும் அனுபவத்தையே சொல்லியிருக்கிறார். விழுந்து விழுந்து சிரித்தவர், கதை சொல்லத் தொடங்குவதற்கு முன்பு, 'தம்பி, இப்போ நான் படம் எடுக்கிறது இல்ல. நீங்க சொல்லப்போற கதை எனக்குப் பிடிச்சாலும், என்னால எதுவும் செய்ய முடியாது. டைம் வேஸ்ட்டுன்னு நெனச்சீங்கன்னா, நீங்க சொல்லாமயே தவிர்க்கலாம்.’ என கேப்ஷன் போட்டிருக்கிறார்.  'உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்குங்க...' என முடிவெடுத்துக் கதையைச் சொல்லியிருக்கிறார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பிறகு, யாரிடம்தான் கதை சொல்லிப் பழகுவதாம்?

இன்னொரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேரம் கேட்டபோது, காலை 9 மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார். பரவாயில்லை என எட்டே முக்காலுக்கே போனவருக்கு, ஆபிஸ் பாய் ஒரு தினசரியை வாசிக்கக் கொடுத்து காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். வரி விளம்பரம் உள்பட அனைத்தையும் வரிவிடாமல் படித்துவிட்டுப் பசி மயக்கத்தில் சோர்ந்திருந்த நேரத்தில் அழைத்திருக்கிறார். போய் அமர்ந்ததும், 'ம்ம்ம், சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு, ஆபீஸ் பாய் கொண்டு வந்து வைத்த அன்றைய தினத்தந்தியைப் பிரித்து முகத்தை மறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டாராம். 'ரைட்டு' என அப்படியே இவரும் கிளம்பி வந்திருக்கிறார்.

சுகா

தொடர் கதைசொல்லும் படலத்தால் மனம் வெறுத்துப் போயிருந்த நேரத்தில் இன்னொரு வாய்ப்பு வந்திருக்கிறது. முன்பு நடந்தவை போல இப்போதும் சோதனைகள் நிகழக்கூடாது என வேண்டிக்கொண்டே தொழிலதிபர் ஒருவரிடம் கதை சொல்லப் போயிருக்கிறார். 'சினிமா எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னு வைங்க. அதுல இருக்கிற வெவரமான ஆட்கள்கூட சேர்ந்துக்கிட்டுதான் எடுக்கணும்.' எனச் சொன்னவர் அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு திருக்குறளையும் சொல்லியிருக்கிறார். இப்போதுதான் நம்மாளுக்கு முழுத் தெம்பும் வந்திருக்கிறது. 

'சினிமால எத்தனையோ டிபார்ட்மென்ட் இருக்கு. ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமானவன். எப்போதுமே ஒரு படத்தோட எடிட்டிங்கைத்தான் உன்னிப்பா கவனிப்பேன்’ என்றிருக்கிறார். தொழிலதிபரின் சினிமா ரசனை ஆச்சர்யப்படுத்தியதில், 'ச்சே... நாம மொதல்ல இவரை மீட் பண்ணியிருக்கணும்' என மனதில் நினைத்துக்கொண்டே, 'எடிட்டர்ல உங்களுக்கு யாரை சார் ரொம்பப் பிடிக்கும்?’ என்று கேட்டிருக்கிறார். சற்றும் யோசிக்காமல் அந்தத் தொழிலதிபர் சொன்னது...  'வேற யாரு? தோட்டாதரணிதான்!'

இப்படியாகப் பல நிகழ்வுகளுடன், ஒருவழியாக கதை ஓகே ஆகி 'படித்துறை' படம் இயக்கினார். சிலபல காரணங்களால் அந்தப்படம் வெளியாகவில்லை. இப்போது அடுத்த பட வேலைகளில் சுகா அண்ணன் பிஸி. பல வருடங்களாக இணை இயக்குநராகவே திரையில் ஒளிர்ந்த பெயர் இயக்குநராக டைட்டில் கார்டில் மின்னும் படம் விரைவில் வரப்போகிறது. கோடம்பாக்கத்தின் கனவுக் கதவு திறக்கக் காத்திருப்பவர்கள் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டுகிறார்கள். பாதியில், தடுமாறுபவர்களைக் காலமும், வெளியே தள்ளிக் கதவைச் சாத்திவிடுகிறது. சுகா அண்ணன் இவற்றில் முதலாவது. எப்போதும் எழுதப்படுவதும், நினைவுகொள்ளப்படுவதும் முதலாவது வகையினரின் கதைகள்தாம்...  

இன்னும் ஓடலாம்... 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/93296-cinema-career-of-director-suga---kodambakkam-thedi-series-part-11.html

Link to comment
Share on other sites

பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்? - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part -12

 
 

கோடம்பாக்கம் தேடி..! - 12 (சினிமா)

முந்தைய பாகத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

திருட்டு முழி... எவரும் அத்தனை எளிதாக அலட்சியப்படுத்திவிடக்கூடிய சிறிய உருவம்... தமிழ் சினிமா கட்டமைத்திருந்த கதாநாயகனுக்கான பிம்பம் எதுவுமில்லாமல் கதாநாயகனாக வெற்றியடைந்தவர் பாண்டியராஜன். பல்லவன் பஸ் டிரைவராகப் பணியாற்றிய தந்தை இவர் வயலின் கற்றுக்கொள்வதற்காக இசை வகுப்புக்கு அனுப்பினார். வயலின் வாசிக்க மேடையேறியவர், பின்னாட்களில் பாடல்களுக்கு இசையமைத்தார், பாடல் பாடினார், வெற்றிப் படங்களை இயக்கினார், படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் பாவம், குள்ளமான அவர் தொட்ட உயரத்தைப் பார்க்க அவரது தந்தை இல்லை.  

ஆறாம் வகுப்பு படிக்கும்போது நாடகங்களில் நடித்தவருக்கு நடிப்பு மீது அலாதி ஆர்வம். நாடகங்களுக்காக மேக்கப் போடுவதே அப்போது போதையாகியிருக்கிறது. அதுதான் சினிமாத் தீக்குச்சிக்கான பொறி. மேக்கப் போட்டு நாடகம் முடிந்ததும் அவற்றை வேண்டுமென்றே சரியாகக் கலைக்காமல் அடுத்தநாள் பள்ளிக்குச் செல்வாராம். பள்ளிக்கூட நண்பர்கள் பார்த்து என்னவெனக் கேட்டால், தான் நடித்ததைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் அப்படி ஒரு ஐடியாவாம்.  

அப்போதெல்லாம் சினிமாவை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு திரையில் வருபவர்களை மட்டுமே தெரியும். நடிப்பு மட்டும்தான் சினிமா எனப் பலரும் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. நடிப்பதற்காகத்தான் ஊர்களில் இருந்து ஆட்கள் கிளம்பி வருவார்கள். இங்கே வந்து 'பட்டு'த் தெளிந்தபின்புதான் சினிமாவில் திரைக்குப் பின்னால் இத்தனை துறைகள் இருப்பதே தெரியவரும். இவரும் அப்படித்தான் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற எண்ணத்தோடு கோடம்பாக்க வாசலில் வலதுகால் வைத்திருக்கிறார். சென்னைதான் சொந்த ஊர் எனும்போது, பிறகென்ன கவலை... நினைத்தபோதெல்லாம் சினிமா கம்பெனிக்குப் போய் வாய்ப்புக் கேட்கலாம் என நினைத்தவருக்கு, ஸ்டூடியோ கேட்டுக்குள்ளேயே அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பிறகுதான் நமக்கு முன்னே அங்கே ஒரு பெருங்கூட்டம் இருக்கிற யதார்த்தம் புரிந்திருக்கிறது. 

பாண்டியராஜன்

அப்போது யானைக்கொடி கட்டிப் பறந்த தேவர் பிலிம்ஸில் வாய்ப்புக் கேட்க தினமும் நூற்றுக்கணக்கானோர் தவம் கிடப்பார்களாம். பாண்டியராஜனும் நூறில் ஒருவராக நடிக்க வாய்ப்புத்தேடிப் போயிருக்கிறார். அதிலும் நடிக்க வாய்ப்புக் கேட்பவர்கள் நல்ல கலராக, ஆஜானுபாகுவான உடலமைப்போடு, கர்லிங் ஸ்டைல் தலையோடு இருப்பார்கள். இவர்களுக்கு மத்தியில் நாம் வாய்ப்புக் கேட்பதும், சாவி போடாத வண்டியில் கிக்கரை உதைத்துக் கொண்டிருப்பதும் ஒன்றுதான் என உணர்ந்தவருக்கு உதவி இயக்குநர் என்கிற பதம் ஒன்று சினிமா உலகில் இருப்பது தெரிந்திருக்கிறது. 'அசிஸ்டென்ட் டைரக்டர்' - பேர்லேயே டைரக்டர் இருக்கு... நல்ல வேலைதான்... படத்தில் டைரக்டருக்கு அடுத்த லெவல் போல... எனச் சமாதானமும் சந்தோஷமும் ஒருசேர அசிஸ்டென்ட் டைரக்டர் ஆவதற்கான அட்டெம்ட்டுகளைச் செய்திருக்கிறார். 

தினமும் தேவர் பிலிம்ஸுக்குப் போனவரை ஒருநாள் பார்த்த தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவன், 'என்ன உன்னைய அடிக்கடி இங்க பார்க்குறேனே.. 'எனக் கேட்டிருக்கிறார். 'இதோட 118 முறை வந்துருக்கேன்' என டைரியில் ஒவ்வொரு முறை வந்ததையும் எழுதி வைத்திருந்ததைக் காட்ட, இவரது கையெழுத்து பிடித்துப்போனவர், இவரை காப்பி ரைட்டர் வேலைக்குச் சேர்த்துக்கொண்டு அவரது அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார். அடுத்தநாள் முதல் தினமும் போனவருக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் தூயவனைப் பார்க்க முடிந்திருக்கிறது. அதுவரை அவர் அந்த ஆபிஸுக்கே வரவில்லையாம். வந்த முதல்நாளே காபி வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். 'காப்பி ரைட்டர் வேலைன்னா இதுவாதான் இருக்குமோ...' எனச் சந்தேகத்தோடு அதையும் செய்திருக்கிறார் பாண்டியராஜன். 

"சினிமாவுக்கு நீங்க வர ஆசைப்பட்டா, முதல் விஷயம் , 'ஏமாறத் தயாரா இருங்க’னு சொல்வேன். ஏன்னா, இது ஆபத்தை நோக்கிப் போற சாகசப் பயணம். அதே சமயம் நம்ம இலக்குக்குப் போய்ச் சேர்ற வரை நாம ஓயக் கூடாது."

                                                                                         - ஆர்.பாண்டியராஜன் 

அந்தக் காலகட்டத்தில், கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தைப் பார்த்ததும் மண்டையில் ஸ்பார்க் தோன்றியிருக்கிறது. வீட்டுக்கு எதிர்ல உட்கார்ந்து போற வர்ற புள்ளைகளை சைட் அடிக்கும் காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, 'யதார்த்தமாகப் படங்கள் எடுக்கிற இவர்கிட்ட தான் அசிஸ்டென்ட்டா சேரணும்' எனக் கங்கணம் கட்டியிருக்கிறார். ஒரு நாள் வசனகர்த்தா தூயவன் இவரை அழைத்து, 'பாண்டியா நாளைக்கு ஆபீஸுக்கு, நாம தயாரிக்கப் போற 'விடியும் வரை காத்திரு' பட டிஸ்கஷனுக்காக பாக்யராஜ் வர்றாரு. அவரை நல்லா கவனிச்சுக்கணும். அவர் எது கேட்டாலும் வாங்கிக் கொடு' என்று அவர் சொன்னது முதல் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டாராம்.

R. Pandiyarajan - Manorama

தினமும் டிஸ்கஷன் டீமுக்கு டிபன் வாங்கிக் கொடுப்பதுதான் அவர் வேலை. டிபன் கொடுத்து முடித்ததும் கதவைச் சாத்திக்கொள்வார்களாம். டிஸ்கஷனில் எப்படிக் கதை விவாதம் செய்வார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, டிபன் கொடுத்து முடித்ததும் கதவை முழுவதுமாகச் சாத்தாமல் சின்ன இடைவெளி இருக்குமாறு சாத்திவிட்டு வந்துவிடுவாராம். அதற்கு அப்புறம் அந்தக் கதவு இடுக்கில் ஒட்டுக்கேட்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தே 'விடியும் வரை காத்திரு' படத்தின் மொத்தக் கதையையும் தெரிந்துகொண்டாராம். இப்படி, கதவு இடுக்கில் பார்த்துப் பார்த்து, எப்படியாவது அதே டிஸ்கஷன் ரூம்ல நாமளும் உட்காரணும்கற வைராக்கியமும் நாளுக்கு நாள் அதிகமாகியிருக்கிறது. 

டிஸ்கஷன் முடிந்து ஷூட்டிங் தொடங்கியதும், பாக்யராஜிடம் சென்று உதவிக்கு சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டிருக்கிறார். 'ஏற்கெனவே ஆள் நிறைய இருக்காங்க...' எனச் சொல்லிவிட்டாராம் பாக்யராஜ். பிறகு ஒருமுறை பாக்யராஜின் அசோஸியேட் ஒருவர், இவரை சிபாரிசு செய்தும், வேண்டாமெனச் சொல்லியிருக்கிறார். இத்தனை முறை முயற்சித்துத் தோல்வியைத் தழுவினாலும், மானசீகமாக பாக்யராஜையே குருவாக ஏற்றுக்கொண்டதால் வேறு யாரிடமும் அசிஸ்டென்ட்டாகச் சேர விரும்பவில்லையாம். அஸோசியேட் இயக்குநர் கோகுலகிருஷ்ணா வேறு படம் எடுக்கச் செல்லவும், உதவி இயக்குநர் இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இப்போது க்ளாப் அடிக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கும் கொஞ்சம் கூடக் கூச்சப்படாமல் காபி, டீ வாங்கிக்கொடுத்து கரெக்ட் செய்திருந்ததால் அவர்கள் தயவில் க்ளாப் அடிக்கும் வேலையைப் பெற்றிருக்கிறார். 

'மௌன கீதங்கள் படப்பிடிப்பு தொடங்கியது. என்ன ஆனாலும் சரி என்று தன்னைத்தானே தயார்படுத்திக்க்கொண்டவர் டைரக்டர் கிளாப் சொன்னவுடன் கேமரா முன் சென்று டக்கென்று அடித்து விட்டு ஓடி ஒளிந்துகொண்டாராம். டைரக்டர் உடனே 'கட்' சொல்லியிருக்கிறார். லைட் பிரச்சினையா, இல்லை டயலாக் பிரச்சினையா? எதுக்காக கட் சொன்னார் என்று யூனிட் குழம்ப, பாக்யராஜ் உதவி இயக்குநர் கோவிந்தராஜைக் கூப்பிட்டு 'நீதானப்பா கிளாப் அடிக்கணும். இப்ப கிளாப் அடிச்சுட்டு ஒளிஞ்ச பையன் யார்? அவனைக் கூப்பிடு' எனச் சொல்லியிருக்கிறார். ஒளிந்துகொண்டிருந்தவர் ஓடிவந்து அப்படியே சாஷ்டாங்கமாக காலைப் பிடித்துக்கொண்டு 'சார் நான் அப்பா இல்லாத பையன். கத்துக்கொடுங்க. என்னை நம்பி இரண்டு தங்கச்சிங்க. அம்மா இருக்காங்க. எனக்கு சினிமான்னா உயிரு' என்று அழுதவரை சரிதா உட்பட படப்பிடிப்பு அரங்கில் இருந்த எல்லோரும் பரிதாபமாகப் பார்த்தார்களாம்.

பாக்யராஜ் - பாண்டியராஜன்

'அந்த ஏழு நாட்கள்' உள்பட சில படங்களுக்கு உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். அப்போது பல உதவி இயக்குநர்களுக்கு மத்தியில் சின்னப்பையனாகப் போனதால் அவர்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்வாராம். சாப்பாடு போட்டுத் தருவது முதல் தட்டுகளைக் கழுவி வைப்பது வரை எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்ததால் அப்போது எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாம்.

'இன்று போய் நாளை வா' படத்தில் ஒரு காட்சி. ஜி.என்.செட்டி ரோட்டில் வைத்து காட்சி படமாக்கப்படுகிறது. உதவி இயக்குநர் பாண்டியன் ஒரு தெலுங்கு பேசும் துணை நடிகருக்கு டயலாக் சொல்லிக் கொடுக்கிறார். 

"ஒரு பொண்ணு ரோஸ் கலர் புடவை கட்டிக்கிட்டு நின்னுச்சா..?"
"ஆமா..."
"அது சம்பளப் பணத்தைத் தொலைச்சுட்டேன்னு சொல்லுச்சா...?"
"ஆமா..."
"நீங்க பணம் கொடுத்தீங்களா..?"
"ஆமா..."
"கோவிந்தா கோவிந்தா... " 

- இதுதான் டயலாக்.

இதை பாண்டியன் சொல்லிக் கொடுக்க, அந்தத் தெலுங்குக்காரரோ, 'ஒரு பொண்ணு ரோஸ் கலர் புடவ கட்டிக்கிணு நிக்கிதே அது இது...'என சுந்தரத் தமிழில்(!) திணறியிருக்கிறார். அப்போது டைரக்டர், 'யார்யா டயலாக் சொல்லிக்கொடுத்தது' எனக் கேட்க, பாண்டியராஜனை மாட்டிவிட்டிருக்கிறார் அந்த துணை நடிகர். 'யோவ்.. நான் இப்படியா சொல்லிக்கொடுத்தேன்..?' எனத் தலையில் அடித்துக்கொள்ள, அந்தக் காட்சியில் நடிகராகியிருக்கிறார் பாண்டியராஜன். அந்தக் காட்சி பிறகு படத்தில் இடம்பெறவில்லை. அதற்குப் பிறகு தனியாக அழைத்த பாக்யராஜ், 'நீ நடிக்கத்தான் வந்தியா' எனக் கேட்டவர், 'வருங்காலத்துல நல்ல நடிகனா வருவ... இந்தா அட்வான்ஸ்' என 11 ரூபாய் கொடுத்திருக்கிறார்.

Pandiyarajan

அப்போது பாண்டியன் என்கிற பாண்டியராஜனுக்கு இருபது வயது. தனது முதல் படம் இயக்கும் வாய்ப்பு வந்ததும், தனது குருநாதர் பாக்யராஜிடம் இரவு இரண்டு மணிக்குச் சொல்லியிருக்கிறார். 'உனக்கு ரெண்டு அட்வைஸ் சொல்றேன்' எனச் சொல்லியிருக்கிறார் பாக்யராஜ். அவர் சொன்ன அறிவுரையைத்தான் பாண்டியராஜன் எப்போதும் பின்பற்றி வருகிறாராம்.  'இவ்வளவு இளம் வயதில் இயக்குனராவதற்கான தகுதிகள் படைத்தவன் நீ. நீ இயக்கும் படத்தை எங்கோ ஓர் மூலையில் உள்ள டென்ட் கொட்டாயில் திரைக்கு முன்னே மணலைக் குவித்து அதன்மேல் அமர்ந்து பீடியைப் பிடித்துக்கொண்டே பார்ப்பவன் ஏதாவது ஒரு காட்சியில் லயித்து பீடியைப் பிடிப்பதை மறந்து கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு படம் அமைந்தால் இன்டஸ்ட்ரியில் உன் பெயரை அழிக்க முடியாது' என்றிருக்கிறார். 'ரெண்டாவது அட்வைஸ் என்ன குருவே...' எனக் கேட்டதற்கு,'ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்‌ஷன் பண்ணு... டைரக்‌ஷன் பண்றமாதிரி நடிக்காதே!' என்றாராம்.

பாக்யராஜ், பாண்டியராஜனிடம் சொன்ன அறிவுரைகள் அவருக்கு மட்டுமானது அல்ல. அது சினிமாவில் சாதிக்கத்துடிக்கிற ஒவ்வொருவருக்குமானது. கதையை எப்படி எழுதுவதென்கிற சந்தேகம் சினிமாவை வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு நிச்சயமாக ஏற்படும். பாண்டியராஜன் எடுத்த படங்கள் எல்லாம் யதார்த்தமானவைதான். முப்பது மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து கதாநாயகியின் உயிரைக் காப்பாற்றுகிற மாதிரியான சூப்பர் ஹீரோ சப்ஜெட்டுகள் இல்லை. அன்றாடம் பார்க்கிற காட்சிகளை மனதில் பதித்து அதை சினிமாவுக்கு ஏற்றபடி ருசிப்படுத்தினார். 'கன்னிராசி', 'ஆண்பாவம்' என வெற்றிப்படங்கள் கொடுத்தார். 'மீடியம் பட்ஜெட் படமா... பாண்டியராஜனைக் கூப்பிடு.' என்கிற நிலை வந்தது. லாப நஷ்டங்களைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதும், கஷ்டங்களைப் புலம்பிக் கொண்டிருப்பதுமே சிலநேரங்களில் ஒரு முழுப் படத்திற்கான கதையையும் தந்துவிடும். அது பெரும்பான்மையானோரின் கதையாகவும் இருக்கக்கூடும். அதையே படமாக்கும்போது ரசிகர்களையும் கதைக்குள் இழுத்துப்போட்டு tag செய்யமுடியும். அதை செம்மையாகச் செய்தார் பாண்டியராஜன். இப்போது ஒரு படத்திற்காகக் கதை விவாதத்தில் இருக்கிறாராம்.


"புலி ஒரு மான் கூட்டத்தையே துரத்தத் தொடங்கினாலும் கடைசியாகக் குறிவெச்சுப் பிடிக்கிறது ஒரு மானைத்தான். அப்படி நான் பிடிச்ச மான்  'ஆண்பாவம்'. இன்னும் அதேமாதிரியான  மான் வேட்டைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு..!"

                                                                                                   - ஆர்.பாண்டியராஜன்.

பாண்டியராஜன்


பாக்யராஜ், அவர் எடுத்த காட்சியையே வேண்டாம் எனச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் காட்சியை எடுப்பாராம். அவருக்கு முழுதிருப்தி ஏற்படாதவரை எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமாட்டாராம். வெற்றி கிடைக்கும்வரை சமரசம் செய்துகொள்ளாமல் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் வெற்றிபெறுகிற நாள்களின் இடைவெளி மட்டுமே மாறுபடுகிறது. வெற்றிப்படி ஒன்றுதான்!

 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/93834-actor-pandiyarajan-s-cinema-entry--kodambakkam-thedi-series-part-12.html

Link to comment
Share on other sites

'செத்துச் செத்து விளையாடுற விளையாட்டு இதுதான்..!' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 13

 

கோடம்பாக்கம் தேடி..! - 13 (சினிமா)

 

சினிமா என்பது ஒரு கனவுலகம் எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். திரையுலகை ஒரு ஃபேன்டஸி கனவாகக் காட்டுவதற்குப் பின்னே இருக்கும் உழைப்பு பலபேருடையது. ஐந்து நிமிட சண்டைக் காட்சி வரும்... படத்தின் ஹீரோ ஐம்பது பேரைப் போட்டுப் புரட்டியெடுத்துப் பந்தாடுவார். ஹீரோ எகிறி உதைத்ததில் பலர் அருகில் இருக்கும் காய்கறிக் கடைகளில் புகுந்து விழுவார்கள்... தள்ளுவண்டியில் விழுந்து வண்டியைச் சாய்ப்பார்கள்... சிவனே என நிற்கும் சுமோவின் கண்ணாடியை உடைப்பார்கள்... பறந்து விழுந்து பத்து பிளாஸ்டிக் குடங்களை சல்லிசல்லியாக உடைப்பார்கள். இத்தனை களேபரங்களுக்கும் காரணமான அந்த ஸ்டன்ட் நடிகர்களுக்கு என்னாகுமோ என்கிற பதைபதைப்பு படம் பார்க்கும் எவருக்கும் ஏற்படுவது இல்லை. இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு பல நேரங்களில் கீறல் விழும்... கை, கால்கள் உடையும்... கண்ணில் கண்ணாடிச் சில்லுகள் தெறிக்கும். அடுத்த படத்திற்கு வேலை செய்யமுடியாத நிலை கூட ஏற்படலாம். ஆனாலும், ஒவ்வொரு சண்டைக்கும் பறக்கிறார்கள். 

இவர்களுக்கு இயற்கையாகவே, அடி தாங்கும் வாழ்வு அமையப்பெற்றிருக்கிறது. இந்த வேலையையும் விரும்பிச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். இன்று நடக்கிற ஒரு அசம்பாவிதத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தெரிந்தே இருக்கிறது. அவருக்கு ராஜபாளையம் பக்கம் திருக்கோவில்புரம் கிராமம்தான் சொந்த ஊர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கராத்தேவில் ப்ளாக் பெல்ட். சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஸ்கேட்டிங் எனப் பல வித்தைகளையும் கற்றுக்கொண்டுதான் ஸ்டண்ட் ஃபீல்டுக்குத் தயாரானார். பள்ளிக்கூடத்தில் படிப்பில் ஆர்வமில்லாமல் கிளம்பிவிட்டாலும் இப்போது எம்.ஏ படித்துக்கொண்டிருக்கிறார். 

முத்துக்காளை

பத்து வயதில் சினிமா ஃபைட்டராக ஆசைப்பட்டவருக்கு முப்பதாவது வயதில்தான் அதன் வாசலைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் சினிமாவுக்குப் போகிறவர்களை வாழ்த்தி வழியனுப்பவெல்லாம் மாட்டார்கள். இவருக்கு, சோதனைகள் அதைவிட அதிகம். 'மெட்ராஸுக்குப் போய்ப் பிச்சைதான் எடுக்கப்போற...' எனச் சொல்லாத வாய் இல்லை. அத்தனைகளையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு 'சென்னைக்கு ஒரு டிக்கெட்' கேட்டார். 

இடையூறுகளுக்கு அஞ்சி பயணத்தைப் பாதியில் நிறுத்திவிடுகிறவர்கள் வரலாற்றில் காணாமல் போகிறார்கள்! 

எம்.ஜி.ஆரின் சிலம்பச் சண்டையைப் பார்த்து வளர்ந்தவருக்கு எங்காவது கம்பைப் பார்த்துவிட்டால் கை கால் நடுங்கத் தொடங்கிவிடுமாம். எடுத்து நாலு சுத்துச் சுத்தினால்தான் அந்தக் காய்ச்சல் விடும். 'மனோகரா' படத்தின் மொத்த வசனத்தையும் அப்படியே பேசுவாராம். அப்போது, சாலிகிராமத்திலிருந்து மெரினாவுக்கு தினமும் சைக்கிளில் வந்து பல்டி அடித்து பிராக்டீஸ் செய்வாராம். இடையில் எப்போதாவது பஞ்சர் ஆனால் பஞ்சர் பார்க்கக் கையில் காசிருக்காது. 12 கிலோமீட்டர் தள்ளிக்கொண்டே பலமுறை வீட்டுக்குப் போயிருக்கிறாராம். 

முத்துக்காளை

திரைத்துறைக்குள் தலைகாட்டுவதற்கு முன்பு சின்னச் சின்ன வேலைகள் பார்த்திருக்கிறார். யாருமே அவ்வளவு எளிதில் நுழையமுடியாத ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு உள்ளே செல்ல என்ன வழி என யோசித்தவர் ஏ.வி.எம்மிலேயே மூன்று வருடங்கள் கார்பென்டராகவும் வேலை பார்த்திருக்கிறார். 1990-ல் சென்னைக்கு வந்தவர் ஏழு வருடங்கள் போராட்டத்துக்குப் பிறகு, யூனியனில் ஃபைட்டர் ஆகச் சேர்ந்தார். ஸ்டன்ட் யூனியனில் உறுப்பினராகச் சேருவது சாதாரண விஷயம் இல்லை. அப்போதே ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் கட்டவேண்டுமாம். பல இடங்களிலும் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு எதற்கும் துணிந்தவராக பணத்தைக் கட்டி உறுப்பினரானார். 

பணத்தைக் கட்டி முடித்துவிட்டு வெளியே வரும்போது ஸ்டன்ட் சிவா அழைத்து, 'காதலுக்கு மரியாதை' படத்தில் பணியாற்றச் சேர்த்திருக்கிறார். முதல் படத்திற்கே டெபாஸிட் கட்டியதில் நான்கில் ஒரு பங்கு  சம்பளமாகக் கிடைத்திருக்கிறது. 'பொன்மனம்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிக்கவேண்டியிருந்திருக்கிறது. தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போக, அந்த இடத்தில் யாராவது ஒரு மாஸ்டர் நடிக்கவேண்டும். டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் என்ன நினைத்தாரோ என்னவோ இவரைத் தேர்ந்தெடுத்தார். மூன்று நாள்கள் ஷூட்டிங் சிறப்பாக முடிந்தது. 

collage_muthu_20427.jpg

'நீயும் நானும் ஒண்ணா திருப்பரங்குன்றம் மலையில இருந்து குதிச்சு செத்துப்போனோமே... ஞாபகம் இல்ல..? 

'செத்துச் செத்து விளையாடுவோமா...’ என வடிவேலுவோடு சேர்ந்து காமெடி பண்ணியதுதான் இவரது விசிட்டிங் கார்டு.

'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தின் இந்த காமெடிக் காட்சியும், அந்த ஊரில் இருக்கும் தெருக்கள் பூராம் விரட்டிக் காதைத் தொடும் காமெடியையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா..? 250 படங்களுக்கு மேல் நடிப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் கலைஞர். ரஜினி முதல் லேட்டஸ்ட் ஹீரோக்கள் வரை உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வேலைபார்த்து சினிமாச் சண்டை கற்றுக்கொண்டவர். 

'கண்டேன்' படத்தில் ஒரு காட்சியின் படப்பிடிப்பு. சாந்தனுவும் சந்தானமும் முத்துக்காளையைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துப் பாலத்திலிருந்து ஒரு குட்டையின் சகதிக்குள் விழுவதுபோல ஒரு காட்சி. செட் போட்டுக் குதிக்கலாம் என இன்னொரு வாய்ப்பு இருந்தாலும் இவர் ரிஸ்க் எடுத்தார். ஆனால், இதில் ஒரே டேக்கில் ஓகே ஆகவேண்டும். இல்லையெனில் சகதியைக் கழுவிவிட்டு மீண்டும் வர அதிக நேரம் பிடிக்கும். யோசிக்காமல் சகதிக்குள் குதித்தார். டேக் ஓகே! அதன்பின் கண்ணில் மண் உறுத்த, பிறகு கண்ணில் ஆபரேஷன் நடந்ததெல்லாம் தனிக்கதை. ஏதோ ஒரு காட்சியிலாவது ஃபைட்டிங் திறமையைக் காட்டி 'ஃபைட் மாஸ்டர்’ ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாம். 

முத்துக்காளை

எவ்வளவு லென்த்தாக டயலாக் கொடுத்தாலும் சரி... அவரிடம் இயக்குநர் எதிர்பார்ப்பதை நடித்துவிட்டுத்தான் ஃப்ரேமை விட்டு வெளியே வருவார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பம்மல் கே. சம்மந்தம்' படத்தில் கமல் இவரது வயிற்றில் மிதித்து ஓடியிருக்கிறார். விஜயகாந்த் படத்தில் நடித்தவர் இப்போது அவரது மகன் சண்முகபாண்டியன் உடன் 'சகாப்தம்' வரையிலும் நடித்துவிட்டார். காமெடியனுக்கும், ஸ்டண்ட் மாஸ்டருக்கும் டைமிங் மிக முக்கியம். அது இரண்டிலும் பட்டையைக் கிளப்புவது இவர், மொட்டை ராஜேந்திரன் போன்ற வெகுசிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது. 

பறக்குறதும், உடைக்கிறதும்தான் வாழ்க்கை என்றானபிறகு, கிருட்டுக் கிருட்டுனு பறந்து சுக்குநூறா உடைச்சு எறிஞ்சுட வேண்டியதுதான். 

 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/94132-actor-muthukaalais-cinema-career--kodambakkam-thedi-series-part-13.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 14

 
 

கோடம்பாக்கம் தேடி..! - 14

 

வ்வொரு சினிமாவும் ரசிகர்களின் ஆரவாரத்தோடு தியேட்டர் ஸ்கிரீனில் வெளியாவதற்குப் பின்னால் இருப்பது ஓரிருவர் மட்டுமல்ல. திரையில் தோன்றுகிற நடிகர்கள் தொடங்கி, இயக்குநர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், லைட்மேன், மேக்கப்மேன்... ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருப்பவர்கள் என ஒரு பெரிய குழுவின் மகத்தான முயற்சியில்தான் ஒரு கதை முழு சினிமாவாகிறது. சினிமாவின் ஏதாவது ஒரு காட்சிக்கு டயலாக் ஆர்டிஸ்ட் தேவையென்றால்  யூனிட்டில் இருக்கும் யாரையாவது நடிக்க வைப்பார்கள். அப்படி, ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருந்தவர் எதிர்பாராவிதமாகத் தலைகாட்டி, நடிகராக வளர்ந்த கதை இது. 

இவர் சிவகங்கை மாவட்டத்தின் இளையாத்தாங்குடிப் பக்கமிருந்து பதினைந்து ரூபாயோடு சென்னைக்கு வந்தவர். ஆறாவது படிக்கும்போதே மூணு வருஷம் ஃபெயிலானவருக்கு, சுட்டுப்போட்டாலும் படிப்பு ஏறலை. வீட்டுல கூடப்பொறந்தவங்க ஆறு பேரு. அம்மா எப்படியாவது கஷ்டப்பட்டுப் படிக்கச்சொல்ல, அப்பா ஆடு மாடு மேய்க்கச் சொல்லியிருக்கார். ஜல்லிக்கட்டுப் பிரியரான அப்பாவுக்கு, இவர் ஆடு மேய்ச்சிக்கிட்டா ஜல்லிக்கட்டுப் பார்க்கப் போலாம்ங்கிற பிரயாசை. சென்னைக்குப் போன உறவினரோடு சேர்ந்து பஸ் ஏறிவிட்டார். 

தி.நகரில் அண்ணன் சுப்பையா நடத்திய பால் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து, வீடு வீடாகப் பால் ஊற்றியிருக்கிறார். அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில், தெலுங்குப்பட இயக்குநர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். மூன்று சட்டை-ட்ரவுசர்களோடு போனவர், அங்கே வேலை பிடிக்காமல் 'அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்' எனச் சொல்லிவிட்டு மூன்று உடைகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக அணிந்துகொண்டு மஞ்சள் பையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அண்ணனிடம் வந்து, 'பாத்ரூம் எல்லாம் கழுவச் சொல்றாங்க. அங்க வேணாம்...' எனச் சொல்ல, அவரும், எல்.ஐ.சிக்குப் பக்கத்தில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார். ஊரில் இருக்கும்போது ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் பழக்கம் இருந்ததால் வேலை நேரங்களில் தூக்கம் சொக்க ஆரம்பித்துவிடுமாம். இங்கே, ஏழு மணிக்கு மேல்தான் வியாபாரம் தொடங்கிச் சூடுபிடிக்கும். அசறும் நேரங்களில் முதலாளியிடம் குட்டு வாங்கிக்கொண்டே இலை போட்டுத் தண்ணீர் ஊற்றுவாராம்.

ப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி

ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துவராமல் மஞ்சள்காமாலை வந்ததால் ஊருக்குப் போகவேண்டிய சூழல். ஊருக்குப் போய் மாதக்கணக்கில் தங்கி மஞ்சள்காமாலையை குணப்படுத்திவிட்டுத் திரும்ப வந்தவர் பாரீஸ் கார்னரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் ஆபிஸ் பாயாக வேலை பார்த்திருக்கிறார்.  40 ரூபாய் சம்பளம். இப்போதைப் போல அந்தக் காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஜெராக்ஸ் கடைகள் இல்லை. சென்னையிலேயே ஜெராக்ஸ் எடுக்க பாரிமுனைக்குத்தான் போகவேண்டும். அந்த ஜெராக்ஸ் கடையை வைத்திருந்த ராஜஸ்தான் சேட்டுக்குச் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றும் இருந்தது. அவர் சொன்னதற்காக வீடு வீடாகத் தவணை முறையில் துணி விற்றிருக்கிறார். 300 ரூபாய் கிடைத்திருக்கிறது. 'இது நல்லாருக்கே...' என யோசித்தவர் தீபாவளி நேரத்தில் ஒரு ஐயாயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை வாங்கி இப்படித் தவணை முறையில் விற்க ப்ளான் போட்டிருக்கிறார். 

ரோஹிணி லாட்ஜில் நிறைய சினிமாக்காரர்கள் இருப்பார்கள். அங்கே போனால் விற்றுவிடலாம் என நண்பர் சொன்னதால், அங்கே போய் வியாபாரத்தை ஆரம்பிக்க ஒரே நாளில் துணிகள் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி முடிந்து பணம் தருவதாகச் சொன்ன யாரும் தீபாவளி முடிந்தும் வரவில்லை. அடுத்தமாதம் பணத்தை வசூல் செய்ய ரோஹிணி லாட்ஜுக்குப் போக, அவர்களால் பணம் கொடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பணத்தை வசூல் செய்வதற்காகவே அவர்களோடு சினிமா யூனிட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போயிருக்கிறார். அப்படியே சிலநாள்கள் போனாலும் இன்னும் பணத்தை வசூலித்தபாடில்லை. அதற்குள் சேட் வந்து, 'பணம் போனாலும் பரவாயில்லை; வேலைக்கு ஆள் வேணும்' என இவரைக் கையோடு கூட்டிப் போயிருக்கிறார். 

சிசர் மனோகர்

ஆனாலும் மனசு கேட்காமல், ஒரு இரண்டாயிரம் ரூபாயாவது வசூலித்து விடலாம் என மீண்டும் யூனிட்டுப் போய் வேலை பார்த்திருக்கிறார். குன்னக்குடி வைத்தியநாதன் டைரக்ஷனில் ‘ராக பந்தங்கள்‘ படம் உருவானது. மதுரையில் நடந்த ஷூட்டிங்கிற்குப் போய் பாத்திரம் கழுவும் வேலை பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் சேட்டுக்கு ஹார்ட் அட்டாக் வர, உடனே சென்னைக்கு வந்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார். திடீரென ஒருநாள் அவர் இறக்க, கவலையோடு மறுபடியும் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போயிருக்கிறார். 

1980-ல் 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்' படங்களில் ப்ரொடக்‌ஷன் யூனியனில் உறுப்பினர் ஆகாமலேயே வேலை பார்த்திருக்கிறார். இன்னும் சில படங்களிலும் வேலை பார்த்துவிட்டு, பிறகு அலெக்ஸ் பாண்டியன், ‘புதிய வார்ப்புகள்‘ ரதி ஜோடியாக நடித்த ‘கருமையில் ஒரு அழகு‘ படத்தில், ரதிக்குத் தம்பியாக நடித்திருக்கிறார். அந்தப் படம் பாதியில் நின்றுபோக, முதலில் நடிச்ச படமே இப்படி ஊத்திக்கிச்சேன்னு கவலைப்பட்டவர் 1982-ல் ப்ரொடக்‌ஷன் யூனியனில் உறுப்பினராகி, சில படங்களில் ப்ரொடக்‌ஷன் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறார். பிறகு, 'பாண்டியராஜன் எடுத்த 'கன்னிராசி' படத்தில் ப்ரொடக்‌ஷன் சீஃப் ஆகச் சேர்ந்திருக்கிறார். இதுவரை முப்பது படங்களுக்கும் மேல் ப்ரொடக்‌ஷன் சீஃபாகவும், 150 படங்கள் ப்ரொடக்‌ஷன் உதவியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 

இளையாத்தாங்குடி பழனிச்சாமி @ சிசர் மனோகர்

ராஜ்கிரண், கே.எஸ்.ரவிகுமாருக்கு நெருக்கமாகிவிட்டவர், ‘என் ராசாவின் மனசிலே‘, 'ராசாவே உன்னை நம்பி', 'எல்லாமே என் ராசாதான்', ‘அரண்மனை கிளி‘, ‘பெரிய குடும்பம்‘, ‘பரம்பரை‘, ‘அவ்வை சண்முகி‘ வரையிலும் எல்லாப் படங்களிலும் ப்ரொடக்‌ஷன் சீஃப் இவர்தான். மேலுரில் இருந்து சேரன் முதன்முதலாகச் சென்னைக்கு வந்ததும், 'ஆண்களை நம்பாதே' படத்தில் ப்ரொடக்‌ஷன் அசிஸ்டென்ட்டாக இவரோடு வேலை பார்த்தாராம். பிறகு பழனிச்சாமி, கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசி 'புரியாத புதிர்' படத்தில் உதவி இயக்குநராகச் சேர்த்து விட்டிருக்கிறார். சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்',  'தேசிய கீதம்' என எல்லாப் படங்களுக்கும் ப்ரொடக்‌ஷன் மேற்பார்வையாளராக பழனிச்சாமியே பணியாற்றியிருக்கிறார். 

அகத்தியன் இயக்கிய 'கோகுலத்தில் சீதை' படத்தில் பணியாற்றிய ப்ரொடக்‌ஷன் சீஃப்புக்கும் யூனிட்டுக்கும் ஒத்து வராததால் ஷூட்டிங் பாதிக்கப்பட, அதே கம்பெனிப் படம் என்பதால், இவர் அங்கே வேலைபார்க்கப் போயிருக்கிறார். இயக்குநர் சொன்னபடி, சுவலெட்சுமியும் கரணும் பேசிக்கொண்டிருக்கும்போது, சிகரெட் பிடித்தபடியே இடையில் புகுந்து 'என்ன ரூம் வேணுமா...' எனக் கேட்டு ஒறண்டையிழுத்துவிட்டு, 'மனோகர்... வெறும் மனோகர் இல்ல... சிசர் மனோகர். கேட்டாண்ட போய்க்கேட்டா எல்லோரும் சொல்லுவாங்க..' என சிகரெட் பாக்கெட்டை தட்டிக் காட்டிச் சொல்வார். அந்த வசனத்திற்கு டப்பிங் பேசியது வேறு ஒருவர். ஆனால், அந்த ஒற்றைக் காட்சிதான் இவரது பெயரை மாற்றியது... இவரது அடையாளத்தை மாற்றியது... வேலையை மாற்றியது. 

மனோகர்

'தர்மச் சக்கரம்' பட ஷூட்டிங்கிற்கு பொள்ளாச்சி போனதும், கே.எஸ்.ரவிகுமார்  'கோகுலத்தில் சீதை' படம் பார்த்துவிட்டு வந்து, பாராட்டிவிட்டு 'என் படத்துல ஒரு வெயிட்டான கேரக்டர் தர்றேன்டா' எனச் சொல்லியிருக்கிறார். தான் டப்பிங்கே பேசாத காட்சியால் ஒரு நடிகனின் பெயரும், அடையாளமும் மாறுகிறது. 1997ல் ‘துள்ளித் திரிந்த காலம்‘ படத்தில் இடம் பெற்ற வசனம் இன்னும் பரபரப்பு ஏற்படுத்தியது. ‘சிரிங்க... நல்லாச் சிரிங்கடா... இன்னும் மூணு வருஷம்... இன்னும் மூணே வருஷம்... பூமாதேவி சிரிக்கப்போறா... எல்லாரும் மண்ணோட மண்ணாகப் போறீங்க... ரெண்டாயிரத்துல உலகம் அழியப்போதுடா...‘ என்று சிங்கிள் ஷாட்டில், மூச்சுவிடாமல் சிசர் மனோகர் பேசிய வசனம், அவரை யாரென்று அடையாளம் காட்டியது.

விவேக் உடன் நடித்த, 'பல்லால மூக்கக் கடிப்பியா...' காமெடி, வடிவேலுவோடு இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் நடித்த  'தட்டாணுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்' வசனம் சொல்லும் காட்சி என காமெடி நடிகர்கள் அனைவரோடும் நினைவுகூரத்தக்க பல வசனங்கள் பேசினார். அதற்கிடையே, சன் டி.வி-யில் ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியிருக்கிறார். முதல்வன் எடுக்கும்போது ஷங்கர் அழைத்து, 'படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு.. ஆனா மூணு பொண்ணுங்களுக்கு அப்பாவா நடிக்கணும். வயசு செட்டாகாதே' என இழுக்க, 'ஆஹா... வந்த வாய்ப்பு வாயோட போச்சே' என இவர் நினைக்க, பிறகு அழைத்து வேறொரு கேரக்டர் கொடுத்திருக்கிறார். அதுதான் அந்த பஸ் ட்ரைவர் கேரக்டர். ஒருமுறை சொன்னதே படத்தில் ஹைலைட்டான காட்சியாகத் திரும்பத் திரும்ப வரும். 

'ஏத்திருவியளோ... என்னை ஏத்திக் கொன்னுட்டா என் ஜாதிக்காரன் விட்ருவானா... தமிழ்நாடே பத்தி எரியும்..!'

மனோகர்

‘தேவர் மகன்’ பட ஷூட்டிங்கில் சிவாஜி சாருக்கு இவர்தான் ஹெல்ப்பர். நடுவுல கொஞ்சநாள் வேற வேலையாக இவர் பொள்ளாச்சிப் பக்கம் போய்விட ஷூட்டிங்கில் எரிச்சலான சிவாஜி, ‘பழனிப் பய வந்தாத்தான் சாப்பிடுவேன்’ எனச் சொல்லி அடம்பிடித்திருக்கிறார். அதுதான் 'இந்த சினிமா வாழ்க்கையில நம்ம மனசுக்கு இதமா இருக்குற சங்கதி' என்கிறார் சிசர் மனோகரான பழனிச்சாமி. 'இந்தப் படம் திருப்பமா அமையும், அந்தப் படம் திருப்பமா அமையும்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கை கடந்து கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கு. ஆனா, இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கு' என்பவருக்கு இப்போதும் ஐந்தாறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டுதாம் இருக்கின்றன.

 

"Go as long as you can, and then take another step." 

 

- இன்னும் ஓடலாம்...

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/94539-actor-scissor-manohars-early-days-in-cinema.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கு பின்னால்தான் எவ்வளவு அவலங்கள்.... ஆயினும் அவற்றையும் தாண்டி ஜெயிப்பவர்கள் பாக்கியசாலிகள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆடிட்டர் கனவு முதல் காமெடி நடிகை வரை - தேவதர்ஷினி : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 15

 
 

கோடம்பாக்கம் தேடி..! - 15

 

குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக. 1997-ல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.வி-களின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார். சென்னையில் இருப்பவர்களே, 'என்னது நடிக்கப்போறியா..?' என ஆச்சர்யமாகக் கேட்கும் காலம் அது. எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் இதில் கொஞ்சம் முன்னேறிப் பொதுச் சமூகக் கட்டுகளை உடைத்து வெளியே வரத் தொடங்கினார்கள். 

சன் டி.வி-யில் நிகழ்ச்சிகளைத் தொகுத்த உமா பத்மநாபன் இவரது புகைப்படம் கேட்கவும் கொடுத்திருக்கிறார். கவிதாலயா கிருஷ்ணன் இவரது புகைப்படம் பார்க்க, 'கனவுகள் இலவசம்' வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 'மர்மதேசம்' சீரியல் இவரது திரைப் பயணத்துக்கான திறவுகோல். பள்ளி, கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவர் ஆடிட்டர் கனவைத் தள்ளிப் போட்டுவிட்டு சின்னத்திரையில் தடம் பதிக்கத் தயாரானார். தந்தை கல்லூரி முதல்வர், தாய் பள்ளி முதல்வர் என ஓரளவுக்கு பிரச்னை இல்லாத சூழல் என்பதால் கனவை நோக்கிய பயணம் தெளிந்த நீரோடையைப் போல் ஆனது. ஆடிட்டர் கனவை எப்போதும் எட்டலாம் என நடிக்கத் தொடங்கியவர், இப்போது சைக்காலஜி படித்திருக்கிறார். நடிப்புக்குப் பிறகு ஆடிட்டிங்கில் இறங்கும் எண்ணமும் இருக்கிறதாம். 

தேவதர்ஷினி

கனவுகள் இலவசம்' தொடர் சிறியது என்பதால் விடுமுறை நாள்களில் நடிப்பதே போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால், 'மர்மதேசம்' ஒன்றரை ஆண்டு தொடரும் சீரியல். கல்லூரி முடித்ததும் மாலை வேளைகளில், கல்லூரி விடுமுறை நாள்களில் நடிக்க ஆரம்பித்தவர், பிறகு நடிப்பை முதன்மையாக்கி தொலைநிலைக் கல்வியில் எம்.காம் படிக்கும் நிலை உருவானது. ஆரம்ப காலத்தில் ஃப்ரேம் பொசிஸனுக்குள் நிற்கத் தெரியாது... ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் சரியாக வராது... டயலாக் டெலிவரியை மட்டுமே கையில் இருக்கும் அம்பாக நினைத்துத் திரைநாணேற்றினார்.  அத்தனையையும் கற்றுக்கொண்டது அதன்பிறகுதான்.

நடிக்கப் போவது, அலுவலகத்துக்கு தினமும் வேலைக்குப் போவதைப்போல அத்தனை எளிதானதொன்றுமில்லை. திரையுலகின் மீதான ப்ரியம் எல்லாவற்றையும் தாங்க வைத்தது. 'மர்மதேசம்' ஷூட்டிங்கில் பார்த்த நடிகர் சேத்தனை 2002-ல் கரம்பிடித்தார். இவரின் பயணத்திற்குப் பின்னே இவரது கணவரும் உடன் நிற்கிறார். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார். தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. வீட்டிலிருக்கும் பெண்கள் தேவதர்ஷினியைத் தங்களுடைய பிம்பமாகவே பார்க்கத் தொடங்கினார்கள். சின்னத்திரையில் மின்னிய காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நேரமின்மையால் தள்ளிப்போட்டவருக்கு 'பார்த்திபன் கனவு' திரைப்படம் அடித்தளமாகிறது. முதல் படத்திற்கே தமிழ்நாடு அரசின் விருது பெறுகிறார். 'காக்க காக்க', எனக்கு 20 உனக்கு 18' எனச் சில படங்களிலும் கமிட் ஆகிறார். சினிமாவில் நிகழ்கிற ஒரு துன்பியல் உண்மை... ஒரு வருடம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலே போதும்... 'அவங்க இப்போ நடிக்கிறதையே விட்டுட்டாங்களே' எனக் கிளப்பிவிட்டு விடுவார்கள். அவற்றையெல்லாம் கடந்துவந்து தன்னை நிரூபிக்க நிறையப் போராட வேண்டியிருக்கும். இதோ 20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இப்போதும், சின்னத்திரையில் காமெடி ஷோவில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். திரைப் பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திறம்ப்டக் கையாண்டு வாள் சுழற்றுகிறார். 

Devadharshini

ஒரு ப்ரேக்குக்குப் பிறகு, 2010-ல் 'காஞ்சனா' திரைப்படம். கோவை சரளாவோடு காமெடி வொர்க்-அவுட் ஆனது. ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்குப் பிறகு காமெடி ரோலின் ரிலே குச்சியை நெடுந்தூரம் எடுத்துச்செல்ல யாருமில்லை. அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடித்தபடி காமெடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் 'காஞ்சனா' திரைப்படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நகைச்சுவை நடிகை' விருது பெறுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருது அவருக்கு இன்னும் உத்வேகத்தைக் தரக்கூடும். இவரது கணவர் சேத்தனும் தமிழ்நாடு அரசின் விருதைப் பெறவிருப்பது ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர். ஆண் காமெடி நடிகர்களைப் போலப் பெண்களுக்குத் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் வருவதில்லை. கிடைக்கும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் தலைகாட்டிக் காணாமல்போகும் நடிகைகள் என நிறைய பேரை உதாரணமாகச் சொல்லலாம். இந்த நிலை மாறி, நகைச்சுவை கேரக்டர்களுக்காக நடிகைகளுக்கும் ஸ்கோப் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார் தேவதர்ஷினி.

தேவதர்ஷினி - சேத்தன்

வாய்ப்புகள் எப்போதாவதுதான் தேடிவரும்... கிடைக்கிற வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்து மேலேறினால் வெளிச்சம். கண்கூசும் வெளிச்சத்திற்குத் தாக்குப்பிடித்து நிலைபெறுவது அவரவர் திறமை. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதுதான் இவரது அனுபவங்கள் சொல்லும் பாடம். 

- இன்னும் ஓடலாம்... 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/96800-cinema-career-of-actress-devadharshini--kodambakkam-thedi-series-part-15.html

Link to comment
Share on other sites

'ஒரு கத சொல்லட்டா சார்..?' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் நிறைவுப் பகுதி

 

கோடம்பாக்கம் தேடி..! - 16

 

கோடம்பாக்கம் தேடி..! இது சினிமாவின் பல்வேறு துறைகளைத் தேடி வந்தவர்களின் வாழ்க்கையைத் தேடிய தொடர். இவர்களில் சரிபாதிப்பேர் தங்கள் லட்சியங்களை எட்ட இன்னும் ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியின் 'ஒரு கத சொல்லட்டா சார்...?' எனும் கேள்விக்கு, 'உன்னைமாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரே கதைதானே... நான் கீழ இருந்தேன்... கஷ்டப்பட்டேன்... இத செஞ்சு அத செஞ்சு பெரியாளாகிட்டேன்... அந்தக் கத தானே...' என்பார் மாதவன். அவ்வாறு ஒன்றிரண்டு வரிகளில் சொல்லிவிடக்கூடியவை அல்ல இவர்களது கதைகள். எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகள். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது மட்டுமே இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கும் ஒற்றுமை. 

பதினைந்து ரூபாயுடன் சென்னைக்கு வந்த ஒருவர், உதவி இயக்குநர்களிடம் இன்ஸ்டால்மென்ட்டில் துணி விற்று, அந்தக் காசை வசூல் செய்வதற்காக அவர்களுடனேயே யூனிட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போகிறார். ப்ரொடக்‌ஷன் யூனிட் சீஃப் ஆகிறார். காமெடி, குணச்சித்திர வேடங்களில் 200 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்களுக்குத் தெரிந்த முகமாகிறார். இன்னொருவர், பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுக் கராத்தே கற்றுக்கொண்டு சென்னைக்கு சண்டைப்பயிற்சியாளர் வாய்ப்புத் தேடி வருகிறார். சினிமாவில் கண்ணாடிச் சில்லுகளைத் தெறிக்கவிட்டு, ரத்தத்துளிகளைச் சிந்தி நடிக்கிறார். காலம் தள்ளிய வேகத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ஆனவரது கதை இது. பன்னிரெண்டு கிலோமீட்டர்கள் நடந்து சென்று மெரினாவில் பயிற்சி செய்த அவரிடம் இப்போது சொந்தமாக வீடு, கார் எல்லாம் இருக்கிறது. 

அணிந்திருந்த ட்ரவுசரோடு சென்னைக்குப் பயணப்பட்டவர் ஒருவர் இருக்கிறார். ஷூட்டிங்குக்குப் பயன்படும் டீசலை மானியத்தில் வாங்க பெட்ரோல் பங்குகளில் முதல்நாள் இரவே படுக்கவைக்கப்பட்டவர். பின்னாளில் அவரது காமெடிகளைக் கண்டு சிரிக்காத மனிதர்கள் இல்லை. அவரது வசனங்கள் இல்லாத மீம்ஸ்கள் இல்லை. அவர் எக்காலத்திற்குமான நகைச்சுவைக் கலைஞனரென்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் நிஜம். 

சினிமா வாய்ப்பு தேடி

வானம் நிறையக் கனவுகளோடு உள்ளே நுழைந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை. ஒருவருக்குத் தனது பெயர் தடையாக இருக்கிறது. அதற்காகத் தனது பெயரை இழக்க அவருக்கு விருப்பமில்லை. 'சாதீய அடையாளம் ஒருவனை நசுக்குகிறதென்றால் நசுக்குகிற அத்தனை பூட்ஸ்களையும் கிழித்து மேலே வருவேன்' எனத் தன்மானத்தோடு முயற்சியைத் தொடர்கிறார். கொள்கையைத் தளர்த்திக்கொண்டால் வாய்ப்புக் கிடைக்கும் நிலையில், அந்த வாய்ப்பு தனக்கு வேண்டாமெனத் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார் இன்னொருவர். இயக்குநராகும் ஆசையோடு திரையுலகுக்குள் நுழைந்து, வேறொரு துறையில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள். ஸ்டூடியோ வாசலில் நின்ற வாட்ச்மேன் ஒருவர் இன்று பெயர்போன இயக்குநர். 

எப்போதும் வீரியமாயிருக்கிற உங்களது லட்சியம், இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்!

பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றி இருந்தாலும் இயக்குநராகத் தனது பெயரைத் திரையில் பார்க்காமல் இன்னும் கதை சொல்லிக்கொண்டே காத்திருக்கிறார்  ஒருவர். அவரது பேச்சில் இப்போதும் அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் இன்றும் வாய்ப்புத் தேடி வருபவர்களுக்கு எனர்ஜி டானிக். சினிமாக் கனவுகளுக்காக சிறு வயதிலேயே வீட்டை விட்டுக் கிளம்ப எத்தனித்தவர், பொருளாதார நிர்ப்பந்தங்களால் கனவுகளை நெஞ்சில் சுமந்தபடி, காலம் கனியும் என்கிற ஏக்கத்தோடு வேறொரு வேலையில் இருக்கிற நண்பர்... எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், ஆரம்ப காலத்தில் தான் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது எனத் தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் வயிறாறச் சாப்பாடு போட்டு அனுப்பும் நடிகர்... பாட்டெழுத வந்து எதிர்பாராமல் நடித்து, காமெடியனாகப் புகழ்பெற்ற ஒருவர் என எல்லோரும் கற்றுத் தருவது நம்மையும் எதையாவது தேடச் சொல்லித்தான். 

தேடல் இல்லா மனிதர் இருக்க முடியாது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவே கூகுளில் தேடுகிற காலம் இது. முன்போல் அல்லாமல் இப்போது தேடல் அவ்வளவு எளிதாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் உங்களது திறமையை வெகு எளிதாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும். அதன்மூலம் வாய்ப்புகளையும் பெற முடியும். பாரதிராஜா காலத்தைப் போல ஸ்டூடியோ வாசலில் மாதக்கணக்காகக் காத்துக்கிடந்து வாய்ப்புத் தேடத் தேவையில்லை.

விஜய் சேதுபதி

இந்தத் தொடரை எழுதுவதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களிடமும் அவர்களை நன்றாக அறிந்த / உடனிருந்த உதவியாளர்களையும் சந்தித்துப் பேசினேன். அவர்களது ஆரம்பகால வாழ்க்கையை அவர்கள் சொல்லும்போது கடந்து வந்த பாதையை ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்துக் கொள்கிறார்கள். காலத்தின் வேகத்தை உணர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். அத்தனை கதைசொல்லிகளுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றி. நடிகர், இயக்குநர் பாண்டியராஜனுடனான முதல் சந்திப்பு வழக்கமான ஒரு நேர்காணலைப் போல அமைந்தாலும், கட்டுரை வெளியான பின்பு, அவர் மறுபடி வீட்டுக்கு அழைத்து நெகிழ்ந்துபோய்ப் பல கதைகள் பேசினார்.  

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தான் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடும் கதை சொல்கிறார்... தான் ஏமாந்த கதை சொல்கிறார் இன்னொருவர். ஒவ்வொருவரின் அனுபவமும் நமக்கு வித்தியாசமான பாடம்தான். இவர்களோடு முடிந்துவிடுவதல்ல இந்தத் தேடல். பெண் இயக்குநர்கள், சினிமாவின் ஒவ்வொரு டெக்னிக்கல் துறைகளிலும் பணிபுரியும் நபர்கள் என ஒரு பெரிய கூட்டத்தின் கதைகளை அடையாளம்காட்ட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. யாவற்றையும் காலமே தீர்மானிக்கிறது. கடைக்கோடியில் இருந்து முன்னேறுகிற ஒவ்வொருவரின் கதையும் யாரோ ஒருவரால் எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். வெற்றிக்கதைகள் எப்போதும் வாசிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். 

ஆம். தேடல்களுக்கு முடிவேது..?

- நின்று நிதானமாக ஓடலாம்.  

~ நிறைந்தது. 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/97302-kodambakkam-thedi-mini-series-part-16.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்....தேடல்களுக்கு முடிவேது ...... தேடிக் கொண்டே இருப்போம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.