Jump to content

வித்தியா படுகொலை வழக்கு தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும் இன்று நேரில் ஆராய்வர்


Recommended Posts

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரை தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகளும் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பாயத்தின் அடைவிடம், சாட்சியப் பதிவுகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை அவர்கள் ஆராய்வர் என்றும் கூறப்பட்டது.

http://www.tamilwin.com/community/01/147256?ref=view-latest

Link to comment
Share on other sites

புங்குடுதீவு வித்தியா படுகொலை : முதலாவது  ட்ரயலட்பார் நீதிமன்ற அமர்வு இன்று 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புனர்வு படுகொலை வழக்கினை விசாரனை செய்யவுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை இன்று நடாத்தியுள்ளது.

asfasfasfg.jpg

இன்றைய முதல் அமர்வின் போது, வழக்கின் முதல் ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் பன்னிரன்டாம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ட்ரயலட்பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய மூன்று தமிழ் மொழி பேசும் நீதிபதிகளும் இன்றைய தினம் முதல் தடவையாக ஒன்றுகூடியுள்ளனர்.

இன்று மாலை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதான அறையில் ஒன்றுகூடிய மேற்படி மூன்று நீதிபதிகளும், குறித்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் பன்னிரன்டாம் திகதி யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டனர். அத்துடன் இவ் வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரத்தை அன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற ரயலட்பார் நீதிமன்றில் தாக்கல் செய்யவும் சட்டமா அதிபர் சார்பிலான சட்டவாதிகளை மன்றில் ஆஜராகுமாரும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20455

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.