Jump to content

போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா வலியுறுத்தல்


Recommended Posts

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் குறித்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர்,

ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில் ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிறுத்தப்படக் கூடாது.

ஜகத் டயஸ் தலைமை தாங்கிய 57வது படைப்பிரிவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/147159?ref=recommended3

Link to comment
Share on other sites

அறிக்கைகளும் கருத்துரைகளும் இலங்கை அரசை செம்மைப்படுத்தாது
 
14691.jpg
இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவி வரும் இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என்ற விடயம் சாத்தியப்படுதல் பற்றி எவரும் சிந்திப்பதாக இல்லை.
 
அதிலும் குறிப்பாக சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கின்றனவே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை.
 
போர்க்குற்றவாளிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாக்கக்கூடாது என சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா கேட்டுள்ளார்.
 
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை எக்காரணம் கொண்டும் பாதுகாக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யஸ்மின் சூகா விடுத்த கோரிக்கை   நியாயமானது.
 
அதற்காக அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி  மைத்திரி சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்வாரா? என்பதுதான் இங்கு ஆராயப்பட வேண்டும்.
 
போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது  என்ற கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய மதிப்புக் கொடுப்பாராயின் யஸ்மின் சூகாவின் கோரிக்கை பொருத்தமானதும் சரியானதும் என எடுத்துக் கொள்ளலாம்.
 
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஒரு போதும் இடம்தரமாட்டார் என்பது நிறுதிட்டமான உண்மை.
 
இந்நிலையில் அவரிடம் கோரிக்கை வைப் பது, கோரிக்கை வைத்தோம் என்று சொல்வதற்கு உதவுமேயன்றி, போர்க்குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கோ அன்றி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவோ இது எந்த வகையிலும் உதவமாட்டாது என்பதே உண்மை.
 
ஆக, சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் ஒரு சம்பிரதாய முறையில் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுகின்ற நடைமுறையைப் பின்பற்றுகின்றனவேயன்றி ஆக்கபூர்வமான அல்லது இலங்கை அரசுக்கு பொருத்தமான பொறிமுறையைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
 
உண்மையில் அறிக்கை விடுதல், கோரிக்கை  முன்வைத்தல் என்ற சர்வதேச நடைமுறைகள் எதுவும் இலங்கை அரசாங்கத்திடம் செல்லு படியாகவில்லை.
 
அவ்வாறாயின் அந்த நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்றுவதை விடுத்து இலங்கை அரசுக்கு எவ்வாறான அழுத்தம் கொடுத்தால் சில வரன்முறைக்கு இலங்கை அரசைக் கொண்டு வர முடியும் என்ற ஆய்வின் அடிப்படையில், சர்வதேசம் செயற்பட வேண்டும்.
 
அவ்வாறான ஆய்வுப்புலம் சர்வதேசத்திடம் இருந்திருக்குமாயின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கான கால அவகாசம் என்பது அடியோடு நிராகரித்திருக்கப்பட வேண்டும்.
 
ஆனால் கால அவகாசம் அனைத்து நாடுகளினதும் ஏகமனதான சம்மதத்துடன் வழங்கப்பட்டது.
 
நிலைமை இதுவாக இருக்கையில், போர்க் குற்றவாளிகளை ஜனாதிபதி மைத்திரி பாதுகாக்கக்கூடாது என யஸ்மின் சூகா கேட்பது எந்தவகையிலும் பிரயோசனமற்றதாகும்.
 
இதை நாம் இவ்விடத்தில் கூறும் போது 500 புத்தபிக்குகள் வடக்கின் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.
 
வடபுலத்தில் பெளத்த விகாரைகளை நிறுவுவதே அவர்களின் இலக்காகும் எனும் போது நல்லாட்சியிலும் நடப்பது என்ன என்பது தெரிகிறதல்லவா?
 
ஆம், வெறும் கோரிக்கைகளும் அறிக்கைகளுமே சர்வதேசத்தின் வெளிப்பாடாக இருந்தால் இலங்கையின் ஆட்சியாளர்கள் எவரும் இதைத்தான் தொடர்ந்தும் செய்வர்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.