Jump to content

அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் – சீ.வீ.கே

Recommended Posts

அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் - சீ.வீ.கே

அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் – சீ.வீ.கே

அரசியல் தலைமைகளின்  தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள்  அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும்  என மக்களுக்கு தெரியும் என வடக்கு மாகாண  அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞாணம் தெரிவித்தார்.

சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வீரசிங்கம் மண்டப முதலாம் மாடியில்  இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண  அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞாணம், வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் உள்ள சனத்தொகைக்கும் அதிகமாக எங்களுடைய புலம்பெயர்   உறவுகள் பரந்து வாழ்கின்றனர். சுவிஸ், கனடா, ஜேர்மன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர்  உறவுகளில் பெரும்பாலானவர்கள் தமிழீழ மண்ணை நேசிக்கிறார்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்த அயராது உழைக்கின்றனர்.

புலம்பெயர்  உறவுகள்  பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே நிதி சேகரித்து  அனுப்புகின்றனர். பெரும்பாலானவர்கள் தாயக மண்ணை மறக்காமல் பல  உதவிகளை செய்து வருகின்றனர். எமது  இனத்தின்  எதிர்கால சந்ததியினர்கள் கண்ணீரில்  இருந்து மீள வேண்டும் என்றே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்த  விஞ்ஞான வளர்சிக் காலத்தில்  ஆளுக்கொரு இனையத்தளங்கள் உள்ளது. புலம்பெயர்  உறவுகள் இவ்வாறு  இனையத்தளங்களை  உருவாக்கி ஒரு ரிமோட்  கொன்றோலுக்குள் தாயகத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மேலும் இந்த  இணையத்தளங்கள் மூலம் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறார்கள். எங்கள் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள்  அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும்  என மக்களுக்கு தெரியும். மக்கள் தமது கடைமைகளை சரிவர செய்வார்கள்.

நாங்கள்  எமது  உரிமைக்காக, அரசியல்  அதிகாரத்திற்காக, எம்மை நாமே  ஆளவேண்டும்  என்ற  உறுதியோடு போராடுகின்றோம்.  இதற்கு  உறுதுணையாக நின்று தாயகத்து  உறவுகளுக்கும் உதவி செய்ய வேண்டும்  எனவும் தெரிவித்தார்

http://thuliyam.com/?p=69048

Link to comment
Share on other sites

சீ.வீ.கே.சிவஞானம்  வடக்கு மாகாண  அவைத்தலைவர் பதவிக்கு பொருத்தமற்றவர்! இவரை தொடர்ந்து அந்த பதவியில் வைத்திருப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது வாயும், வயிறும் தவிர....வேறு எதுவுமே...கண்ணுக்குத் தெரிவதில்லை!:cool:

Link to comment
Share on other sites

நான் கெடுகுடி யார்சொல்வதையும் கேட்கமாட்டேன் - சீ.வீ.கே

நான் தமிழனை அழிக்க வேண்டும் எந்தப் பேயுடனும் சேருவேன் - யெயவர்த்தனா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்களின் காசு வேண்டும்.. சுருட்டி பொக்கட்டுக்குள் போட. ஆனால்.. அவர்களின் புத்தி வேண்டாம். ஏனெனில்.. அது சிங்கள எஜமான.. ஹிந்திய எஜமான விசுவாசத்துக்கு கேடு விளைவித்து.. நம்ம இருப்பையே கேள்விக்குறியாக்கிடும். அப்புறம் சுருட்டினதில எப்படி சுகபோகிப்பது.. இல்ல ஐயா.

இவர் முந்தி புலிகள் காலத்தில் என்னமா ஒத்தூதினார் என்பதையும் தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டுற வெற்றியில் கொஞ்சத்தை 
இங்கு ஏற்றுமதி செய்திவிட்டீர்கள் என்றால் 
புலம்பெயர் தமிழர் அப்படியே வாய் அடைச்சு ஒதுங்கிடுவார்கள்.

அவ்வளவு வெற்றியையும் எப்படி நீங்கள் மட்டும் தனியாய் சுமக்கிறது?

Link to comment
Share on other sites

Quote

புலம்பெயர்  உறவுகள் இவ்வாறு  இனையத்தளங்களை  உருவாக்கி ஒரு ரிமோட்  கொன்றோலுக்குள் தாயகத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

18813171_1983863508503805_82813010526309

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/05/2017 at 11:37 PM, Athavan CH said:
 
இலங்கையில் உள்ள சனத்தொகைக்கும் அதிகமாக எங்களுடைய புலம்பெயர்   உறவுகள் பரந்து வாழ்கின்றனர். சுவிஸ், கனடா, ஜேர்மன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர்  உறவுகளில் பெரும்பாலானவர்கள் தமிழீழ மண்ணை நேசிக்கிறார்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்த அயராது உழைக்கின்றனர்.

புலம்பெயர்  உறவுகள்  பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலேயே நிதி சேகரித்து  அனுப்புகின்றனர். பெரும்பாலானவர்கள் தாயக மண்ணை மறக்காமல் பல  உதவிகளை செய்து வருகின்றனர். எமது  இனத்தின்  எதிர்கால சந்ததியினர்கள் கண்ணீரில்  இருந்து மீள வேண்டும் என்றே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்த  விஞ்ஞான வளர்சிக் காலத்தில்  ஆளுக்கொரு இனையத்தளங்கள் உள்ளது. புலம்பெயர்  உறவுகள் இவ்வாறு  இனையத்தளங்களை  உருவாக்கி ஒரு ரிமோட்  கொன்றோலுக்குள் தாயகத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மேலும் இந்த  இணையத்தளங்கள் மூலம் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறார்கள். எங்கள் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள்  அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும்  என மக்களுக்கு தெரியும். மக்கள் தமது கடைமைகளை சரிவர செய்வார்கள்.

நாங்கள்  எமது  உரிமைக்காக, அரசியல்  அதிகாரத்திற்காக, எம்மை நாமே  ஆளவேண்டும்  என்ற  உறுதியோடு போராடுகின்றோம்.  இதற்கு  உறுதுணையாக நின்று தாயகத்து  உறவுகளுக்கும் உதவி செய்ய வேண்டும்  எனவும் தெரிவித்தார்

ரொம்ப  தெளிவா  இருக்கிறார்

எங்களைவிட  நீங்க  அதிகம்  தான்

ஆனால் பணத்தை அனுப்பு

அவ்வளவு  தான் உங்க அளவு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.