Jump to content

இந்தியாவின் அவசர உதவி உணர்த்தும் உட்பொருள் யாது?


Recommended Posts

14678.jpg

தென்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 119 பேர் இறந்து போயுள்ள தான செய்தி மிகுந்த வேதனைக்குரியது

இதேவேளை சுமார் 150 பேர் வரை காணாமல்போயுள்ளதுடன் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தவண்ணமுள்ளன.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவும் பொருட்டு இந்திய மத்திய அரசு அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு அவசர அவசரமாக நிவாரணப் பொருட்களை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளார்.

உண்மையில் இந்தியாவின் இந்த உதவி காலத்தால் செய்யப்பட்ட பேருதவி. இதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி கூறிக்கொள்ள முடியும்.

அதேவேளை இந்தியப் பிரதமர் இத்துணை தூரம் விரைவாக நிவாரணப் பொருட்களுடன் கப்பல்களை கொழும்புக்கு அனுப்பி வைத்ததன் பின்னணி என்ன என்று பார்ப்பதும் பொருத்துடையது.

சர்வதேச வெசாக் தினத்தையயாட்டி இலங்கைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கு சென்று மலையகத் தமிழ் மக்களைச் சந்தித்தார்.

மலையகத் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறிய இந்தியப் பிரதமர், மலையகத் தமிழ் மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில்தான் வெள்ளப்பெருக்கால் மலையக மக்கள் பாதிப்படைந்தனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களுக்கு  உதவி செய்வதில் பிரதமர் மோடி அதிதீவிரம் காட்டினார். 

அதன் விளைவாகவே நிவாரணப்பொருட்கள் அடங்கிய கப்பல்கள் கொழும்புத்துறை முகத்தை வந்தடைந்துள்ளன. 

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தராமல் இருந்திருந்தால் அல்லது மலையக மக்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இத்துணை விரைவாக நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆக, எப்போதும் ஒரு நல்ல உறவு பேணப்படுவது மிகவும் அவசியமாகும். மலையக மக்களைச் சந்தித்ததன் காரணமாக பிரதமர் அந்த  மக்களுக்கு விரைந்து நிவாரண உதவி செய்தது போல,
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளும் இந்தியப் பிரதமர் மோடியுடன் ஒரு நெருக்கமான தொடர்பை - உறவை ஏற்படுத்த வேண்டும். 

இதற்காக வடக்கின் முதலமைச்சர் இந்தியா  சென்று பிரதமர் மோடியைச் சந்திப்பது அவரது ஆலோசகர்களைச் சந்திப்பது என்ற தொடர்பு மிகச் சாதகமான சூழலை நமக்கு ஏற்படுத்தி தரும்.

இதைவிடுத்து எப்போதாவது இருந்துவிட்டு பிரதமர் மோடியைச் சந்திப்பதென்பது ஒரு சந்தர்ப்பவாதமாக கணிக்கப்படுமேயன்றி அது தமிழ் மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்குமான ஒரு நல்ல உறவாகக் கருதப்படமாட்டாது.

ஆகையால் இந்தியப் பிரதமர் மோடியுடன் வடக்கின் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் நல்லதொரு உறவை, தொடர்பாடலை ஏற்படுத்த வேண்டும். 

இது தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பாக அமையும். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=14678&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளும் இந்தியப் பிரதமர் மோடியுடன் ஒரு நெருக்கமான தொடர்பை - உறவை ஏற்படுத்த வேண்டும். 

இலவச பொருள்உதவியென்றால் இலங்கை அரசும் பிக்குமாரும் அமைதியாக இருப்பினம்,ஆனால் அரசியல் தீர்வு என்றால் பெரும்பான்மையினர் கிளர்ந்தெழுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

இந்தியப் பிரதமர் மோடியுடன் வடக்கின் முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் நல்லதொரு உறவை, தொடர்பாடலை ஏற்படுத்த வேண்டும். 

இது தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பாக அமையும். 

இந்திய  மத்திய அரசின் ... 
ஈழத் தமிழர் மீதுள்ள பார்வையும்,
சிங்கள மக்கள் மீதுள்ள பார்வையும்.... பாரிய வித்தியாசமானது.

ஈழத் தமிழர்களை இந்தியா... ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது தான் உண்மை.
அண்மையில்... ஸ்ரீலங்கா வந்திருந்த மோடி... இறுதி நாளில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பாகத்தான்,
விமான நிலையத்தில் வைத்து, சம்பந்தரை சந்தித்ததாக... ஒரு செய்திக் குறிப்பில் வாசித்தேன்.

Link to comment
Share on other sites

பொறுங்க சீனா என்ன உதவி செய்தான் என்று கொஞ்ச நாள் போகவிட்டு சொல்லுவினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, TNT said:

பொறுங்க சீனா என்ன உதவி செய்தான் என்று கொஞ்ச நாள் போகவிட்டு சொல்லுவினம் 

பாகிஸ்தானும் வரப்போயினமாம்....

Link to comment
Share on other sites

Just now, putthan said:

பாகிஸ்தானும் வரப்போயினமாம்....

இலங்கை ஆசியாவின் முத்து என்ற நிலை போய் ஆசியாவின் ஆசைநாயகியாகிவிட்டதை நினைத்தால் கொஞ்சம் வருத்தம்தான் என்ன செய்யலாம் விதி அப்படி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, TNT said:

இலங்கை ஆசியாவின் முத்து என்ற நிலை போய் ஆசியாவின் ஆசைநாயகியாகிவிட்டதை நினைத்தால் கொஞ்சம் வருத்தம்தான் என்ன செய்யலாம் விதி அப்படி 

ஒருத்தனுக்கு ஆசைநாயகியாக இருந்தால் நல்ல வசதியா  வாழலாம் ....பலருக்கு என்றால் கஸ்டகாலம்....

Link to comment
Share on other sites

அது உணர்த்தும் பொருள் யாதெனில்.. நான் ஒரு மொள்ளமாரி.. tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெள்ளத்துக்கு ஏதும் கப்பல் கிப்பல் வந்துச்சா ???

சின்ன வீட்டுக்கு எப்போதும் ஒரு சிறப்பு உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாத்துப் ..பாத்து... கவனம்!

நிவாரணப் பொருளுகளோட...எலி ..கிலி எண்டு வேற எல்லாமோ... வந்திடப் போகுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

பாத்துப் ..பாத்து... கவனம்!

நிவாரணப் பொருளுகளோட...எலி ..கிலி எண்டு வேற எல்லாமோ... வந்திடப் போகுது..

இரண்டாவது கப்பலில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.அதைப்பார்த்து சிங்களவர்கள் சிலர் துள்ளக்க்கூடும்...:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.