Jump to content

புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது – புத்தூர் பகுதியில் தொடரும் பதட்டம்.


Recommended Posts

புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது – புத்தூர் பகுதியில் தொடரும் பதட்டம்.

puthoor-4.jpg

புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின் பின்னனர் நீதிவான் ஏ.யூட்சன் மாயனத்தை சுற்றி சுற்றுமதில் அமைத்த பின்னர் சடலங்களை எரியூட்டுங்கள் என்றும் மிக விரைவில் மின் தகன மயானத்தை உருவாக்குங்கள் எனவும் கட்டளையிட்டார்.  அதன் பிரகாரம் மயானத்தை சூழ சுற்று மதில் அமைக்கும் பணியில் மயான அபிவிருத்தி சங்கம் ஈடுபட்டது. அதற்கு மயானத்தை சூழ உள்ளவர்கள் கடும் எதிர்ப்புக்களை காட்டி வந்தனர்.

கடந்த 16 ஆம் திகதி மதில் கட்டட பணியில் ஈடுபட்ட மேசன் தொழிலாளியான இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக மல்லாகம் நீதிமன்றில் மதில் கட்ட அனுமதி பெற்ற வழக்காளிகள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது.  குறித்த இரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை எனவும் , தாகுதலாளிகளை கைது செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

அந்நிலையில் , கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு மாயனத்தை சுற்றி அமைக்கபட்டு இருந்த சுற்று மதில் உடைத்து வீழ்த்தப்பட்டது. அது தொடர்பில் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் மயான அபிவிருத்தி செயலாளார் முறைப்பாட்டினை பதிவு செய்தார்.

அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மறுநாள் நள்ளிரவு 26ஆம் திகதி செயலாளரினதும்  அவரின் உறவினர் ஒருவருக்கும் சொந்தமான வாழைத்தோட்டத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த சுமார் 400 க்கும் அதிகமான வாழைகளை வெட்டி சாய்த்துள்ளனர். அது தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்றைய தினம் மாயானம் அமைந்துள்ள பகுதிகளை சூழவுள்ள மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்க சென்று இருந்த அச்சுவேலி போலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசாரும் அப்பகுதி மக்கள் முரண்பட்டதை அடுத்து போலீசார் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தவாறே அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.

போலீசார் வெளியேறிய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டப்பட்ட மதில்கள் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் அவற்றின் அத்திபரத்தினையும் சிலர் கிளறி எறிந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதனை அடுத்து , நிலைமையினை கட்டுப்படுத்த நெல்லியடி , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய போலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இரவு வேளைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனும் எதிர்பார்ர்பில் விசேட போலிஸ் அதிரடிப்படையினரும் மயானத்தை சூழ உள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  அதனால் புத்தூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

puthoor-768x1024.jpg

 

puthoor2-768x1024.jpg

puthoor3.jpg

http://globaltamilnews.net/archives/28233

 

Link to comment
Share on other sites

மயானப் பிரச்சினை காரணமாக புத்தூரில் நால்வர் கைது: பொலிஸார் மூவருக்கு காயம்

 


மயானப் பிரச்சினை காரணமாக புத்தூரில் நால்வர் கைது: பொலிஸார் மூவருக்கு காயம்
 

யாழ். புத்தூர் வடக்கு பகுதியில் மயானப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயானத்தில் முன்னெடுக்கப்பட்ட நிர்மானப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட முறுகலின் போது 03 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் திரிப்பிட்டி மற்றும் கலைமகள் கிராமங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/05/மயானப்-பிரச்சினை-காரணமாக/

 

Link to comment
Share on other sites

மயானத்துக்கு எதிராக பிரச்சினையை கிளப்பிய அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைப்படுவதுடன் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடுகளையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்!

Link to comment
Share on other sites

மாயானத்தை சூழவுள்ள குடியிருப்புகள் முன்னர் வந்ததா? அன்றி மாயானம் முன்னர் வந்ததா? மாயாணம் முன்னர் வந்திருந்தால்...! அதனை அழிக்கத்தான் செய்வார்கள். முன்னர் வந்த தமிழ்மொழியை பின்னர் வந்த மொழிகள் அழிக்க முற்படுவதுதான் இன்றைய யதார்த்தம். :shocked: 

Link to comment
Share on other sites

அர­சி­யல் கட்சி ஒன்­றின் தூண்­டு­தலே சுட­லைக் குழப்­பங்­க­ளுக்­குக் கார­ணம்

 
அர­சி­யல் கட்சி ஒன்­றின் தூண்­டு­தலே சுட­லைக் குழப்­பங்­க­ளுக்­குக் கார­ணம்
 

புத்­தூர் மேற்கு, கலை­மதி கிரா­மத்­தின் சுட­லைப் பிரச்­சினை திடீ­ரெ­னப் பெரி­தாகி வன்­மு­றையை எட்­டி­யி­ருப்­ப­தன் பின்­ன­ணி­யில் மார்க்­சிச லெனி­னி­சக் கட்­சியே இருப் ப­தாக ஆணித்­த­ர­மான குற்­றச்சாட் டுக்­கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. கட்­சி­யின் தலை­வர் சி.க.செந்­திவேல் இந்­தக் குற்­றச்­சாட்டை அடி­யோடு மறுத்­தா­லும், கட்­சி­யின் முக்­கிய பத­வி­யில் உள்­ள­வர் உட்­பட கட்சி உறுப்­பி­னர்­களே அங்­குள்ள சில­ரைத் தூண்­டி­விட்டு பிரச்­சி­னையை வளர்த்து வரு­கி­றார்­கள் என்று அங்­குள்ள மக்­க­ளால் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­ கி­றது.

நீதி­மன்ற உத்­த­ரவை மதிக்­காது வன்­மு­றை­யில் இறங்­கிய கட்­சி­யின் முக்­கிய பத­வி­யில் இருக்­கும் ஒரு­வர் மீது சுமத்­தப்­பட்ட அடி காயங்­களை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக் காக அவ­ரைத் தேடிச் சென்­ற­போதே நேற்­று­முன்­தி­னம் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. பொலி­ஸார் எச்­ச­ரிக்கை வேட்­டுக்­க­ளைத் தீர்க்­க ­வேண்­டிய நிலமை உரு­வா­னது. சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரும் கள­மி­றக்­கப்­பட்­டும் இரவு 10 மணி வரை பதற்­றம் நீடித்­தது.

பொலி­ஸார் சிறு பிள்ளை ஒன்­றைத் தாக்­கி­ய­த­னால் ஏற்­பட்ட ஆத்­தி­ரத்­தி­லேயே நேற்­று­முன்­தி­னம் குழப்­பம் உரு­வா­னது என்று கலை­மதி கிரா­மத்­த­வர்­கள் சிலர் கூறி­னர். ஆனால், சந்­தே­க­ந­பர்­க­ளைத் தேடி அங்கு சென்­ற­போது பொலி­ஸா­ரைச் சிலர் தாக்­கி­ய­தன் கார­ணத்­தா­லேயே தாம் எச்­ச­ரிக்கை வேட்­டுக்­க­ளைத் தீர்க்க வேண்­டி­யி­ருந்­தது என்று பொலி­ஸார் கூறி­னர்.

பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­யால் ஆத்­தி­ர­முற்ற கிராம மக்­களே சுட­லை­யைச் சுற்­றிக் கட்­டப்­பட்டு வந்த மதில் சுவரை இடித்­த­ழித்­த­னர் என்று கலை­மதி கிரா­மத்­தைச் சேர்ந்த சிலர் தெரி­வித்­த­னர். ஆனால், உணர்ச்­சி­வ­சப்­பட்­டுச் செய்­யப்­பட்ட நட­வ­டிக்­கை­யல்ல அது, நன்கு திட்­ட­மிட்டு வேண்­டும் என்றே செய்­யப்­பட்ட செயல் அது என்று இந்­தப் பிரச்­சி­னையை நடு­நி­லை­யாக அணு­கு­ப­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

‘‘முத­லில் அரை­வா­சிக்­குக் கட்­டப்­பட்­டி­ருந்த மதில் நேற்­று­முன்­தி­னம் உடைக்­கப்­பட்­டது. பின்­னர் சிறிது நேரம் கடந்து, மதி­லின் இடையே கொங்­கி­றீற் தூண்­களை எழுப்­பு­வ­தற்­கா­கப் போடப்­பட்­டி­ருந்த இரும்­புக் கம்­பி­க­ளும் அறுத்­தெ­றி­யப்­பட்­டன. அதன் பின்­னர் நேற்­றைய தினம் மதில் அத்­தி­பா­ர­மும் சேத­மாக்­கப்­பட்­டது. சுட­லை­யில் நின்ற பெரிய மரம் ஒன்­றும் அடி­யோடு அறுத்­துச் சாய்க்­கப்­பட்­டது.

இவ்­வாறு கட்­டம் கட்­ட­மா­கச் செய்­யப்­பட்ட ஒவ்­வொரு செயல்­க­ளும் உணர்ச்சி மேலீட்­டால் ஆத்­தி­ரப்­பட்ட ஒரு மக்­கள் கூட்­டம் செய்­யும் செயல் அல்ல’’ என்று அவர்­கள் கூறி­னர்.

தாமும் தாக்­கப்­ப­டு­வோம் என்­கிற அச்­சம் கார­ண­மாக எவ­ரும் தமது பெயர் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை. இந்­தச் சுட­லைப் பிரச்­சி­னை­யில் தொடர்­பு­பட்­டி­ருக்­கும் சிறுப்­பிட்டி வடக்கு, சிறுப்­பிட்டி மேற்கு மக்­கள் தாமும் கடு­மை­யாக அச்­ச­ம­டைந்­தி­ருக்­கின்­ற­னர் என்று தெரி­வித்­த­னர். ஏற்­க­னவே ஒரு­வர் தனக்கு உயிர் அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கப் பொலி­ஸில் முறை­யிட்­டுள்­ளார்.

‘‘ஊட­கங்­கள் இதனை இரு சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை என்று தவ­றா­கச் செய்தி வெளி­யி­டு­கின்­றன. உண்­மை­யில் புத்­தூர் மேற்கு கலை­மதி கிரா­மத்­தி­லும் சிறுப்­பிட்டி மேற்­கி­லும் வாழும் மக்­கள் அனை­வ­ருமே ஒரே சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­களே. ஆனால் நாங்­கள் சுட­லை­யில் உட­லைத் தக­னம் செய்­வ­தற்­கும் விடு­கி­றார்­க­ ளில்லை.

வேறு சமூ­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் தக­னம் செய்­வ­தற்­கும் விடு­கி­றார்­கள் இல்லை. எனவே இதனை இரு சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை என்று சொல்­வது தவ­றா­னது. இது சுடலை வேண்­டாம் என்று கூறு­ப­வர்­க­ளின் பிரச்­சி­னையே தவிர சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை அல்ல’’ என்று தெரி­வித்­த­னர் சிறுப்­பிட்டி மக்­கள்.

இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக நேற்று அரச நிர்­வாக அதி­கா­ரி­கள், பொலி­ஸார், சம்­பந்­தப்­பட்ட மக்­கள் ஆகி­யோரை ஒருங்­கி­ணைத்து கூட்­டம் ஒன்று நடத்­தப்­பட்­டது. அதி­கா­ரி­கள் கலந்­து­பேசி ஒரு தீர்க்­க­மான முடி­வுக்கு வரும் வரை­யில் ஒன்­றரை மாத காலத்­திற்கு இரு தரப்­பி­ன­ருமே சுட­லைக்­குள் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­ப­டக்­கூ­டாது என்று அறி­வு­றுத்­தப்­பட்­டது. இந்த விவ­கா­ரத்தை ஆராய்ந்து அறிக்­கை­யி­டு­வ­தற்­குக் குழு ஒன்றை நிய­மிப்­பது என்­றும் முடிவு செய்­யப்ட்­டது.

எனி­னும் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் பின்­ன­ரும் சுட­லைக்­குள் நுழைந்து மதில் அத்­தி­பா­ரங்­களை உடைத்து நொறுக்­கி­யும் மரத்தை வெட்­டிச் சாய்த்­தும் பல்­வேறு குற்­றங்­கள் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றன. இத­னால் அந்­தக் கூட்­டத்­திற்கு அர்த்­தமே இல்­லா­மல் போய்­விட்­டது என்று சிறுப்­பிட்டி மக்­கள் கூறு­கின்­ற­ னர்.

பிரச்­சி­னை­யில் தொடர்­பு­பட்­டுள்ள புத்­தூர் மேற்கு கலை­ம­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் இவ்­வாறு நீதி­மன்ற உத்­த­ர­வை­யும் மதிக்­காது நடந்­து­கொள்­வ­தற்கு மார்க்­சிக லெனி­னி­சக் கட்­சி­யி­ன­ரின் தூண்­டு­தலே கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்­தக் குற்­றச்­சாட்டை கட்­சி­யின் தலை­வர் சி.க.செந்­தி­வேல் மறுத்­தா­லும், அந்­தக் கிரா­மத்­தில் தமது கட்­சி­யைச் சேர்ந்த முக்­கிய உறுப்­பி­னர்­கள் உள்­ளார்­கள் என்­றும் கிரா­மம் மொத்­த­முமே தமது கட்சி ஆத­ர­வா­ளர்­களே என்­றும் அவர் தெரி­வித்­தார். அவர்­க­ளின் கோரிக்கை நியா­ய­மா­ன­தா­கப் பட்­ட­தால் கட்சி அதற்கு ஆத­ர­வ­ளிக்­கி­றது என்­றும் கூறி­னார்.

http://uthayandaily.com/story/4404.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

மார்க்­சிக லெனி­னி­சக் கட்­சி­யி­ன­ரின் தூண்­டு­தலே கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது.

தோழர்மார் ஒரு சமுகத்திற்கு குரல் கொடுக்கினம் போல ......அதுசரி உவையள் இன்னும் தாயகத்தில் இருக்கினமோ?

Link to comment
Share on other sites

திரித்தும் மறைத்தும் உதயன் செய்தி வெளியிடுகின்றதாம்!

சுடலைப் பிரச்சினை

 
 
திரித்தும் மறைத்தும் உதயன் செய்தி வெளியிடுகின்றதாம்!
 

புத்­தூர் மேற்கு கலை­மதி கிரா­மத் தின் சுட­லைப் பிரச்­சி­னை­யைத் திரித் தும் மறைத்­தும் உத­யன் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது என்று குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கி­றார் புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனி­னிச கட்­சி­யின் தலை­வர் சி.க.செந்­தி­வேல்.

இது தொடர்­பில் அந்­தக் கட்சி அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக் கப்­பட்­டுள்­ள­தா­வது,

அண்­மைய மாதங்­க­ளா­கப் புத்­தூர் கலை­ம­திக் கிராம மக்­கள் தமது குடி­யி­ருப்­பு­கள் மத்­தி­யில் இருந்து வரும் மயா­னத்தை அகற்­றக்­கோரி பல்­வேறு கவ­ன­வீர்ப்­புப் போர◌ாட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்­கள். அதன் கார­ண­மா­கச் சில நாள்­க­ளுக்கு முன்பு இடம்­பெற்ற பொலி­ஸார் பொது­மக்­க­ளுக்கு இடை­யி­லான முறு­கல் நிலைக்­கும் பதற்­றச் சூழ­லுக்­கும் பொலிஸா­ரின் துப்­பாக்­கிச் சூடே கார­ணம்.

பக்­கச் சார்­பும் பழி­வாங்­கும் நோக்­க­மும் கொண்ட மேற்­படி செயற்­பாட்­டைத் திரித்­தும் மறைத்­தும் யாழ்ப்­பாண ஊட­க­மான உத­யன் பத்­தி­ரிகை எமது புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனினி­சக் கட்சி மீது பழி சுமத்தி செய்தி வெளி­யிட்­ட­து­டன், ஆசி­ரி­ய தலை­யங்­க­மும் எழு­தி­ய­மை­யா­னது விச­னத்­திற்­கும், கண்­ட­னத்துக் கும் உரி­ய­ தா­கும்.

மேற்­படி கிராம மக்­கள் முன்­வைத்­துள்ள மனி­தா­பி­மா­னக் கோரிக்­கை­யின் நியா­யத்­தைக் கண்டுகொள்­ளாது, பிணப் புகை­யை­யும், எரி சாம் பல் தூசி­க­ளை­யும் அந்த மக்­கள் அனு ­ப­விக்க வேண்­டும் என்ற பழை­மை­வாத ஆதிக்க சக்­தி­க­ளுக்கு வக்­கா­லத்து வாங்­கும் வகை­யில் அந்­தப் பத்­தி­ரிகை எழு­தி­யுள்­ள­து­டன், எமது கட்சி பின்­னால் இருந்து தூண்டி விட்­டுள்­ள­தா­க­வும் வக்­கி­ரத்­து­டன் எழுதி இருப்­பது நடு­நி­லைப் பத்­தி­ரிகை என்ற அதன் போலித்­த­னத்­தையே எடுத்­துக் காட்­டு­கி­றது.

நில­வு­டை­மை­யா­லும், சொத்­துை­ட­மை­யா­லும், சாதி ஆதிக்­கத்­தா­லும் ஒடுக்­கப்­பட்டு வந்த கலை­ம­திக் கிராம மக்­கள், கடந்த மூன்று தசாப்தங்­க­ளா­கத் தம்­மைப் பிணைத்­தி­ருந்த அடி­மைச் சங்­கி­லி­களை ஒன்­றன் பின் ஒன்­றாக உடைத்­தெ­றிந்து கொண்டு தமக்­கு­ரிய உரி­மை­களை நிலை­நாட்டி வந்­தி­ருக்­கி­றார்­கள். சமூக அநீ­தி­க­ளுக்கு எதி­ரான அவர்­க­ளின் போராட்ட முன்­னெ­டுப்­பு­க­ளில் எந்த ஒரு தமி­ழர் தரப்பு ஆதிக்­க­வாத கட்­சி­க­ளும் உத­வவோ, பங்­கெ­டுக்­க வோ முன்­வந்­த­தில்லை.

தமக்­கான நிலம், பொரு­ளா­தா­ரம், கல்வி, சுகா­தா­ரம், சமூ­கப் பயன்­பாடு அனைத்­தை­யும் பழை­மை­வாத ஆதிக்­கங்­க­ளோடு போரா­டியே அந்த மக்­கள் படிப்­ப­டி­யா­கப் பெற்று வந்­துள்­ள­னர்.

அதே வேளை சமூக விரோ­தச் செயல் க­ளையோ அல்­லது அடா­வ­டித்­தன ரவு­டித்­த­னங்­க­ளையோ, வாள்­வெட்­டுக் கலா­சா­ரத்­தையோ கொண்­டி­ருக்­காத சமூக அக்­க­றை­கொண்ட இளந்­தலைமுறை­யி­ன­ரை­யும் மக்­க­ளை­யும் கொண்ட கட்­டுப்­பாடு உடைய கிரா­ம­மா­கவே அந்தக் கிரா மம் இருந்து வரு­கின்­றது. இதற்கு எமது கட்­சி­யின் வழி­காட்­ட­லும் பங்­க­ளிப்­பும் இருந்து வந்­துள்­ளது.

இந்த நிலை­யி­லேயே அந்­தக் கிரா­மத்­தின் மத்­தி­யி­லி­ருக்­கும் மயா­னத்தை அகற்றி குடி­யி­ருப்­பு­க­ளுக்கு அப்­பால் இருந்­து­வ­ரும் மயா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­மாறு கலை­ம­திக் கிராம மக்­கள் கோரிக்கை வைத்து வரு­கி­றார்­கள். சுகா­தா­ரச் சீர்­கேட்டுக் கும், சூழல் மாச­டை­த­லுக்­கும், குழந்­தை­கள், சிறு­வர்­கள், கர்ப்­பி­ணித் தாய் மார்­கள், முதி­யோர் நோய்த் தாக்­கத்­துக்கு ஆட்­ப­டு­வ­தற்­கும், பிணப்­புகை, சாம்­பல் தூசி­கள் பர­வு­தற்­கும் கார­ண­மாக அமைந்­துள்ள மேற்­படி மயா­னம் அகற்­றப்­பட வேண்­டும் என்­பதே அந்த மக்­க­ளின் உறு­தி­யான நிலைப்­பா­டா­கும்.

கூலி விவ­சா­யி­க­ளும், அன்­றாட தொழி­லா­ளர்­க­ளு­மான கலை­ம­திக் கிராம மக்­க­ளின் மேற்­படி கோரிக்­கை­யில் மனி­தா­பி­மா­ன­மும், நியா­யத்­தன்­மை­யும், மக்­கள் சார்­பும் இருப்­ப­தன் கார­ண­மா­கவே எமது கட்சி அதனை ஆத­ரித்து நிற்­கின்­றது. அதே­போன்று குடா நாட்­டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லும் மக்­கள் குடி­யிருப்­பு­க்கள் மத்­தி­யில் இருந்­து­வ­ரும் மயா­னங்­கள் அகற்­றப்­பட வேண்டும் என்­ப­தை­யும் எமது கட்சி வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

பின்­தங்­கிய கிரா­மிய சமூ­கச் சூழ­லில் வாழ்ந்து வரும் உழைக்­கும் மக்­க­ளின் அன்­றாட வாழ்­வுக்­கும், வளர்ச்­சிக்­கும் தடை­யாக இருந்து வரும் பழைமை, வழமை, பாரம் ப­ரி­யம் என்­ப­வை சமூக நீதி அடிப்­ப­டை­யில் ஒதுக்­கித் தள்­ள­ப்பட வேண்­டி­ய­வை­யா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசி­ரி­யர் குறிப்பு

1. சி.க.செந்­தி­வேல் குறிப்­பி­டு­வது போன்று, பொலி­ஸா­ருக்­கும் கலை­மதி கிரா­மத்­தைச் சேர்ந்த சில­ருக் கும் இடையே நடந்த மோத­லுக்கு புதிய ஜன­நா­யக மார்க்­சிச லெனி­னி­சக் கட்சி கார­ணம் என்று உத­யன் பத்­தி­ரிகை ஒரு­போ­தும் குறிப்­பி­ட­ வில்லை.

2. கலை­ம­திக் கிரா­மத்­தின் சுட­லைப் பிரச்­சினை வன்­மு­றை­யாக மாறி­வ­ரு­வ­தன் பின்­ன­ணி­யில், அந்­தக் கட்சி இருக்­கி­றது என்­கிற குற்­றச்­சாட் டையே பத்­தி­ரி­கைச் செய்தி வெளிப்­ப­டுத்­தி­யது. இங்கு வன்­முறை என்று குறிப்­பி­டப்­பட்­டது, சுட­லை­யைச் சுற்றி மதில் அமைத்­த­வர்­க­ளைத் தாக்­கி­யது, அவர்­க­ளுக்­குச் சாப்­பாடு எடுத்­துச் சென்­ற­வர்­க­ளைத் தாக்­கி­யது, வாழைத் தோட்­டங்களில் வாழை மரங்களை வெட்­டிச் சரித்­தது, இர­வில் வீடு மீது தாக்­கு­தல் நடத்­தி­யது, சிறுப்­பிட்டி கிரா­மங்­க­ளுக்­குள் இர­வில் புகுந்து அடா­வ­டித்­த­னங்­க­ளில் ஈடு­பட்­டது என்­ப­வற்­றை­யும் சேர்த்­துத்­தான்.

3. பொலி­ஸா­ருக்­கும் கலை­ம­தி­யைச் சேர்ந்­த­வர்­க­ளில் சில­ருக்­கும் இடை­யில் நடந்த பிரச்­சினை குறித்து இரு தரப்­பி­ன­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற் றஞ்­சாட்­டித் தெரி­வித்த கருத்­துக்­கள் அந்­தச் செய்­தி­யில் தெளி­வா­கக் குறிப் பி­டப்­பட்­டி­ருந்­தன. எந்­தக் கருத்­தும் திரித்­துக் கூறப்­ப­ட­வில்லை.

4. அதே­போன்று, வன்­மு­றை­க­ளின் பின்­ன­ணி­யில் இந்­தக் கட்சி இருக்­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை மறுக்­கும் கட்­சித் தலை­வ­ரின் பதி­லும் அந்­தச் செய்­தி­யில் தெளி ­வா­கக் கூறப்­பட்­டி­ருந்­தது.

5. அந்­தக் குற்­றச்­சாட்­டுக் குறித்து கட் சித் தலை­வ­ரி­டம் அவ­ரது விளக்­கத்­தைக் கோரு­வ­தற்கு முன்­னர், அந்­தக் கட்­சி­யில் மிக முக்­கிய பத­வியை வகிக்­கும் நப­ரான செல்­வம் என்­ப­வரே அவ்­வப்­போது கூட்­டங்­களை நடத்தி நீதி­மன்­றத்­தின் ஆணையை உதா­சீ­னம் செய்து மயா­னத்­தின் மதிலை இடிப்­ப­தற்குத் தூண்­டு­த­லாக இருந்­தார் என்று உத­யன் அறிந்­தி­ருந்­தது.

சுட­லை­யின் சுற்­று­ம­தில் அமைத்­துக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்­குச் சாப்­பாடு எடுத்­துச் சென்­ற­வ­ரைத் தாக்­கி­னார் என்று ஏற்­க­னவே பொலி­ஸில் முறை­யி­டப்­பட்டு இருந்­த­தை­யும் உத­யன் அறிந்­தி­ருந்­தது. அந்த நப­ரைத் தேடி, அவ­ரை­யும் அவ­ரு­டன் சேர்ந்த வேறு சில­ரை­யும் கைது செய்­வ­தற்­கா­கச் சென்­ற­போதே பொலி­ஸா­ருக்­கும் கிரா­மத்­த­வர்­கள் சில­ருக்­கும் இடை­யில் பிரச் சினை உரு­வா­னது என்­ப­தை­யும் உத­யன் அறிந்தே இருந்­தது. இவற்­றின் அடிப்­ப­டை­யி­லேயே அந்­தக் குற்­றச்­சாட்டுக்கான பதிலை தலை­வர் சி.க.செந்­தி­வே­லி­டம் உத­யன் பத்­தி­ரிகை கேட்­டது.

6. சமூக விரோ­தச் செயல்­க­ளையோ, அடா­வ­டித்­தன ரவு­டித்­த­னங்­க­ளையோ, வாள்­வெட்­டுக் கலா­சா­ரத்­தையோ கொண்­டி­ருக்­காத சமூக அக்­க­றை­கொண்ட இளந்­தலை முறை­யி­ன­ரை­யும் மக்­க­ளை­யும் கொண்ட கட்­டுப்­பாடு உடைய கிரா­ம­மா­கவே கலை­மதி இருந்து வரு­கின்­றது, இதற்கு எமது கட்­சி­யின் வழி­காட்­ட­லும் பங்­க­ளிப்­பும் இருந்து வந்­துள்­ளது என்று தலை­வர் சி.க. செந்­தி­வேல் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அப்­ப­டி­யா­னால் வன்­மு­றைக் குற்­றச்­சாட்­டின் கீழ் தேடப்­ப­டும், தனது கட்­சி­யில் முக்­கிய பொறுப்பை வகிக்­கும் நப­ரைப் பொலி­ஸா­ரி­டம் விசா­ர­ணைக்­காக ஒப்­ப­டைக்­க அவர் தவ­றி­யி­ருப்­பது ஏன்?

7. அந்த நபர் இர­வில் கலை­மதி கிரா­ மத்­த­வர்­க­ளைத் திரட்டி கூட்­டம் நடத்தி ஏனைய மக்­களை அச்­சு­றுத்­தும் கருத்­துக்­க­ளை­கூறி “என்ன ஆனா­லும் விடு­வ­தில்லை, தலை­கள் உருண்­டா­லும் ஒரு கை பார்ப்­போம்’’ என்ற ரீதி­யில் ஆவே­ச­மா­கப் பேசி உசுப்­பேற்றி வரு­கி­றார் என்று கிரா­மத்­த­வர்­களே தெரி­விக்­கின்­ற­போ­தும் அதைத் தடுத்து நிறுத்தி அமை­தியை ஏற்­ப­டுத்த அவ­ரது கட்சி இது­வ­ரை­யில் எந்­த­வொரு முயற்­சி­யை­ யும் எடுக்­கா­தது ஏன்?

8. அவர் சொல்­வ­தைப் போலவே கலை­ம­திக் கிரா­மம் கட்­டுக்­கோப்­பாக இருக்க கட்சி வழி­ந­டத்­து­கின்­றது என்­றால், தற்­போது அந்­தக் கிரா­மத்­த­வர்­க­ளில் சிலர் மீது குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­ப­டு­கின்­ற­போது, அந்த வன்­மு­றைக் கட்­டுப்­பாட்டை வழிப்­ப­டுத்­து­வ­தும் கட்சி என்­று­ தானே பொருள்­கொண்­டா­க­வேண்­டும்!

9. இந்­தப் பிரச்­சினை பற்றி ஆசி­ரி­யர் தலை­யங்­கம் எழு­திய உத­யன் பத்­தி­ரிகையின் நோக்கம் கலை­மதி கிரா­மத்­தின் பிரச்­சி­னை­யைப் புறந்­தள்­ளு­வ­தல்ல. அது தீர்க்­கப்­ப­டு­வ­ தற்கு எடுக்­கப்­ப­டும் வழி­முறை பிழை­ யா­ன­தாக இருக்­கி­றது என்­ப­தைத் தெளி­வா­கச் சுட்­டிக்­காட்டி, இது அந்­தக் கிரா­மத்­திற்கு மட்­டு­மான பிரச்­சினை அல்ல, அத­னைப் பொது அடிப் படை­யில் அணுகி அதற்­கான பொதுத் தீர்வு, விதி­முறை என்­பவை உரு­வாக் கப்­ப­ட­வேண்­டும் என்றே குறிப்­பிட்­டி­ ருந்­தது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது கட்சி, அதில் எங்கே பக்­கச் சார்­பை­யும் பழி­ வாங்­கும் நோக்­கத்­தை­யும் கண்­டது என்­ப­தும் புரி­ய­வில்லை.

10. இந்­தப் பிரச்­சி­னையை சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை ­யா­கக் காட்­டும் தொனியே சி.க. செந்­தி­வே­லின் அறிக்­கை­யி­லும் தொனிக்­கி­றது. ஆனால், இது சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னையே அல்ல, நாங்­க­ளும் அவர்­க­ளும் ஒரே சமூ­கத்­த­வர்­க­ளாக இருக் கும்­போது எப்­படி அது சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னையாக முடி­யும் என்று சிறுப்­பிட்டி மேற்கு மக்­கள் கோபப்­ப­டு­கி­றார்­கள்.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது இத­னைச் சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­யாக ஊதிப் பெருப்­பித்­துக் காட்­டக் கட்சி முனை­வ­தைப் பார்க்­கும்­போது பிரச்­சி­னை ­யின் பின்­ன­ணி­யில் இந்­தக் கட்சி இருக்­கி­றது என்­கிற குற்­றச்­சாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தில் தவறே◌ா பக்­கச் சார்போ பழி­வாங்­கும் நோக்­கமோ உத­யன் பத்­தி­ரி­கைக்கு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

http://uthayandaily.com/story/4829.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

கலை­ம­திக் கிரா­மத்­தின் சுட­லைப் பிரச்­சினை வன்­மு­றை­யாக மாறி­வ­ரு­வ­தன் பின்­ன­ணி­யில், அந்­தக் கட்சி இருக்­கி­றது என்­கிற குற்­றச்­சாட் டையே பத்­தி­ரி­கைச் செய்தி வெளிப்­ப­டுத்­தி­யது. இங்கு வன்­முறை என்று குறிப்­பி­டப்­பட்­டது, சுட­லை­யைச் சுற்றி மதில் அமைத்­த­வர்­க­ளைத் தாக்­கி­யது, அவர்­க­ளுக்­குச் சாப்­பாடு எடுத்­துச் சென்­ற­வர்­க­ளைத் தாக்­கி­யது, வாழைத் தோட்­டங்களில் வாழை மரங்களை வெட்­டிச் சரித்­தது, இர­வில் வீடு மீது தாக்­கு­தல் நடத்­தி­யது, சிறுப்­பிட்டி கிரா­மங்­க­ளுக்­குள் இர­வில் புகுந்து அடா­வ­டித்­த­னங்­க­ளில் ஈடு­பட்­டது என்­ப­வற்­றை­யும் சேர்த்­துத்­தான்.

 புரட்சி என்றால் இப்படித்தான் இருக்கும் .....இடதுசாரிகள் செய்தால் புரட்சி....வலதுசாரிகள் செய்தால் பயங்கரவாதம்

Link to comment
Share on other sites

2 minutes ago, putthan said:

 புரட்சி என்றால் இப்படித்தான் இருக்கும் .....இடதுசாரிகள் செய்தால் புரட்சி....வலதுசாரிகள் செய்தால் பயங்கரவாதம்

இடம், வலம் போகாமல் நேரா போறாக்கள் செய்தா மனிதாபிமானம் ஆக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Rajesh said:

இடம், வலம் போகாமல் நேரா போறாக்கள் செய்தா மனிதாபிமானம் ஆக்கும்!

அரசு செய்தால் மனிதாபிமானம்:10_wink:

Link to comment
Share on other sites

  • 3 months later...

புலம்பெயர்ந்த தமிழர் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அனுப்பும் பணத்தில் சாதி மற்றும் வர்க்க ஆதிக்கத்தை கட்டி எழுப்ப சிலர் முயல்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்டியிருக்கும் குடிமனைகளை கருத்தில் கொள்ளாமல் மதிலைக் கட்டியபின் சுடலைக்குள் பிரேதங்களை எரிக்க அனுமதிவழங்கிய நீதிபதியைச் சொல்லணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/28/2017 at 6:44 AM, நவீனன் said:

கடந்த 16 ஆம் திகதி மதில் கட்டட பணியில் ஈடுபட்ட மேசன் தொழிலாளியான இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக மல்லாகம் நீதிமன்றில் மதில் கட்ட அனுமதி பெற்ற வழக்காளிகள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது.  குறித்த இரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை எனவும் , தாகுதலாளிகளை கைது செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இங்கு பல இடங்களில் சுட்டி காட்டி எழுதபட்டுள்ளது இந்த பிரச்சனைகளை தூண்டுபவர் திருவாளர் போலிஸ் அவர்கள் தான் பிரச்சனை பண்ணுபவர்களை எப்படி சாதிய வெறியில் தள்ளி பெரிதாக்குகண்ணும் கருத்துமாக உள்ளனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களில் இருந்து நான் அவதானித்தது. மேற்படி மதில்கள் கட்டப்படும் சீமெந்தின் தரம் அல்லது கொங்கிரீட் கலவையில் சேர்க்கப்பட்ட சீமெந்தின் அளவு சர்ச்சைக்குரியது போல காணப்படுகிறது. இதுவே கட்டிடங்களையும் வீடுகளையும் கட்ட பயன்படுத்தப்படுமாயின் கட்டிடம் இடிந்துவழும் ஆபத்தான நிலைமை உருவாகலாம். தரமான கொங்கிரீட்டை இப்படியெல்லாம் இடித்து தள்ளுவது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.