Jump to content

முதன் முதலாக அரசியல் பற்றிப் பேசுகிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்


Recommended Posts

முதன் முதலாக அரசியல் பற்றிப் பேசுகிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின்

 

உத­ய­நி­தியின் தாய் மாமன் ஒரு கட்சி தொடங்­கு­கி றார். அதற்­கான சின்னம் தொப்பி. ஒரு கட்­டத்தில் தாய்­மா­ம­னுக்கும் உதயநிதிக்கும் சண்டை வரு­கி­றது. தாய் மாமனின் கட்­சியைக் கைப்­பற்றி, தானே தலை­வ­ராகி விடு­கிறார் உத­ய­நிதி.

இவை எல்லாம் நிஜத்தில் அல்ல. உத­ய­நிதி நடிப்பில் வெளி­யாகி இருக்கும் ‘சர­வணன் இருக்கப் பயமேன்’ படத்தின் காட்­சிகள். இது­காலம் வரை அர­சியல், பொலிஸ் சம்­பந்­தப்­பட்ட கதைகள் என்­றாலே காதைப் பொத்திக் கொள்­பவர் உத­ய­நிதி. தவ­றியும் தன் படங்­களில் அர­சியல் வாசம் வந்­து­வி­டாமல் கவ­னித்துக் கொண்­டவர், திடீ­ரென அர­சியல் அம­ளி­து­ம­ளி­க­ளுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்­தி­ருக்­கிறார்.

என்ன சார், அர­சியல் என்ட்­ரிக்­கான முன்­னோட்­டமா? என்று கேட்­ட­போது சத்தம் போட்டுச் சிரிக்கத் தொடங்­கி­விட்டார் உத­ய­நிதி.

சர­வணன் இருக்கப் பயமேன் படத்தில் வரும் அர­சியல் காட்­சிகள் குறுக்கு வழியில் கட்­சியைக் கைப்­பற்­று­வது மாதி­ரி­யா­னவை. நான் அர­சி­ய­லுக்கே வந்­தாலும் அப்­ப­டிப்­பட்ட வழி­களில் எப்­படி வருவேன்? இது முழுக்க முழுக்க எழில் சாரோட கற்­பனைக் கதை. நான் எப்­ப­வுமே இயக்­கு­நரோட சிந்­த­னையில் தலை­யிட மாட்டேன். அதிலும் எழில்சார் சீனியர். நல்ல அனு­பவம் கொண்­டவர். அப்­ப­டி­யி­ருக்க அர­சியல் காட்­சிகள் வேண்­டாம்னு நான் எப்­படி அவர்­கிட்ட சொல்ல முடியும்? அவ­ரு­டைய கற்­பனை வயிறு குலுங்கச் சிரிக்க வைச்­சது. அதனால் ஓ.கே. சொன்னேன்!

ஆர்.கே. நகர் தேர்­த­லில டி.டி.வி. தின­கரன் தொப்பிச் சின்­னத்தில் போட்­டி­யிட்டார். உங்க படத்­திலும் தொப்பிச் சின்னம் வருது. இதை எப்­படிக் கற்­ப­னைன்னு நினைக்க முடியும். திட்­ட­மிட்ட கலாய்ப்­புத்­தானே?

ஐயையோ என்­னங்க இது அநி­யா­யமா இருக்கு. தொப்பி சின்­னம்னு சொல்லி ஷூட் பண்­ணி­னப்ப கூட இப்­படிச் சர்ச்­சை­யா­கும்னு நாங்க யோசிக்­கலை. முழுப் படத்­தையும் முடிச்­சிட்டுப் போட்டுப் பார்க்­கி­றப்ப தொப்பி சின்­னத்தைப் பார்த்த உடனே எல்­லோரும் சிரிச்­சிட்­டாங்க. அது ஆர்.கே. நகர் தேர்தல் ரத்­தான நேரம். எழில் சாரோட யதார்த்த சிந்­த­னையும் அ.தி.மு.க. தேர்தல் கமி­ஷன்ல சின்னம் கேட்ட சிந்­த­னையும் ஒண்ணா அமைஞ்­சி­டுச்சு. மற்­றப்­படி யாரையும் கலாய்க்­கிற எண்­ணமே இல்லை. நான் அப்­ப­டிப்­பட்ட ஆள் இல்­லைங்­கி­றது சினி­மாவில் என்­னோட பணி­யாற்­றிய எல்­லோ­ருக்­குமே தெரியும். படம் பார்த்­திட்டு வெளியே வந்­தப்ப, கற்­ப­னையில் நீங்க பண்­ணிய காமெ­டி­களை விட நாட்ல நிறைய காமெடி நடக்­குது சார். படத்­துக்குக் கதை தேவைன்னா டெய்லி நியூஸ் பேப்­பர படிச்­சாலே போதும் என்று எழில் சார்­கிட்ட சொன்னேன். இன்­னிக்கு தமிழ்­நாட்­டுல அப்­ப­டித்­தானே நடக்­குது!

அ.தி.மு.க. வில் நடக்கும் கலாட்­டாக்­களைச் சொல்­றீங்­களா?

அ.தி.மு.க.வில் என்ன வேணும்­னாலும் நடக்­கட்டும். அது அவங்­க­ளோட கட்சிப் பிரச்­சினை. ஆனால் ஆட்சி நல்லா நடக்­கணும் இல்­லையா? முதல்வர் பதவி மியூ­சிக்கல் சேர் மாதிரி ஆகி­டிச்சு. இப்போ யாருப்பா சி.எம். என்று கேட்டுச் சிரிக்­கி­றாங்க. அர­சாங்கம் அலு­வ­ல­கங்­களில் ஏதா­வது வேலை நடக்­குதா? நியாயம், நிர்­வாகம் என்று எல்­லாமே ஸ்தம்­பிச்சு நிற்­குது. முன்னாள் முதல்வர் ஓ. பன்­னீர்­செல்வம் எம்.ஜி.ஆர். சமா­தியில் தியா­னத்தில் உட்­கார்ந்த நேரம். அடுத்த நாள் நானும் சூரி அண்­ணனும் ‘இப்­படை வெல்லும்’ ஷூட்டிங் வேலையா பெங்­க­ளூரு போனோம்!

 அங்க இருந்த தமி­ழர்கள் எல்லோரும் எங்­களைச் சூழ்ந்­துக்­கிட்டு துக்கம் விசா­ரிக்­கிற மாதிரிப் பேசி­னாங்க. என்ன சார் நம்ம தமிழ்­நாட்­டோட நிலைமை இந்த மாதிரி ஆகி­டிச்­சுன்னு வருத்­தப்­பட்­டாங்க. நீங்க ஏதாச்சும் பண்­ணுங்க சார். அப்­பா­கிட்ட சொல்லி ஏதா­வது விடிவை ஏற்­ப­டுத்­துங்­கன்னு சொன்­னாங்க. இதை அர­சி­ய­லுக்­காகச் சொல்­லலை. ஆனால் அடுத்த மாநி­லத்தில் இருக்­கிற தமி­ழர்கள் கூட நம்ம மண்ணில் நடக்­கிற அர­சி­யலால் தலைக்­கு­னிஞ்சு நிற்­கி­றாங்க. ஒரு காலத்தில் டெல்­லியே நம்­மளைக் கண்டா பயப்­படும். ஆனால் இன்­னிக்கு அவங்­களைக் கண்டு இவங்க பயப்­ப­டு­றாங்க.

நேற்று இதே ஆட்­சியில் முதல் அமைச்­சரா இருந்­தவர் இன்­னிக்கு இருக்­கி­ற­வரைத் திட்­டுகிறார். இன்­னிக்கப் பத­வியில் இருக்­கிற அமைச்­சர்கள் எல்­லோரும் இதே ஆட்­சியில் முதல்­வரா இருந்­த­வரை திட்­டுகி­றாங்க. சரி­யான ஆட்­சியோ நிர்­வா­கமோ நடக்­க­லைங்­கி­றதை அவங்­களே அடிச்­சுக்­கிட்டு வெளிச்சம் போட்டுக் காட்­டிக்­கி­றாங்க. இதை­யெல்லாம் காமெ­டின்னு சொல்­லாம வேறென்னவென்று சொல்ல முடியும்?

 இந்­த­ள­வுக்கு அர­சியல் நில­வ­ரங்­களைத் தீவி­ர­மாகக் கவ­னிக்­கி­றீங்­களா?

கலை­ஞ­ரோட பேர­னா­கவோ, தி.மு.க. செயல் தலை­வ­ரோட மக­னா­கவோ இந்த ஆதங்­கத்தை நான் பேசலை. தின­சரி டி.வி. பார்க்­கிற, பேப்பர் படிக்­கிற ஒரு தமிழ்­நாட்டு இளை­ஞ­னா­கத்தான் இதை நான் சொல்றேன். மக்­க­ளுக்­கான உரி­மை­களை ஸ்ட்ராங்கா வலி­யு­றுத்­துற தலைமை இன்­னிக்கு தமிழ்­நாட்­டுல இருக்கா? இங்கே என்ன நடக்­க­ணும்­கி­றதைக் கூட யாரோ தீர்­மா­னிக்­கி­றாங்க. நமக்குக் கிடைக்க வேண்­டிய நியா­ய­மான உரி­மை­களைக் கூடத் தடுக்­கி­றாங்க!

மத்­திய அரசைச் சொல்­றீங்­களா?

இதை வெளிப்­ப­டை­யாகச் சொல்­றதில் எனக்­கென்ன தயக்கம்? பார­திய ஜனதா அரசு திட்­ட­மிட்டு தமி­ழ­கத்தைப் புறக்­க­ணிக்­கி­றது. ஏன் அவங்க இப்­படிப் பண்­றாங்­கன்னு எல்லோ­ருக்கும் தெரியும். ஆனால் இங்கே ஆட்­சியில் இருக்­கி­ற­வங்க, இது முது­கெ­லும்பு கொண்ட அர­சு என்­கிற தார்­மீக உரி­மை­யோட அதை எதிர்­கொண்டு நின்­னி­ருக்­கணும். நம்ம உரி­மை­க­ளுக்­காகப் போராடி இருக்­கணும். ஆனால் அவங்க நம்ம வீட்­டுக்கும் ரெய்டு வந்­தி­டு­மோன்னு பயப்­ப­டு­றாங்க. தங்­களைப் பார்த்­துக்­கவே அஞ்­சு­ற­வங்க தமி­ழ­கத்தை எப்­படிப் பார்த்­துக்க முடியும்? இந்த ஆதங்கம் இங்கே இருக்­கிற ஒவ்­வொ­ருத்­த­ருக்கும் இருக்கு. நெஞ்­சு­றுதி மிக்க அர­சுதான் தேவை. அதுக்­கான மாற்றம் அவ­சியம் என்று ஓட்டுப் போட்ட ஒவ்­வொ­ருத்­தரும் நினைக்­கி­றாங்க. அது விரை­வி­லேயே நடக்கும்!

 இந்­த­ள­­வுக்குத் தெளிவா, தைரி­யமாப் பேசுற நீங்க வெளிப்­ப­டை­யாக அர­சி­ய­லுக்கு வர­லாமே?

கலை­ஞ­ரோட குடும்­பத்தில் ஒருத்­தனா பிறந்­திட்­டேன்­கிற ஒரு தகு­தியை வைச்­சுக்­கிட்டு என்னை அர­சி­ய­லுக்கு வரச்சொல்­றீங்­களா? அர­சியல் குடும்­பத்தில் பிறந்­ததை அர­சி­ய­லுக்­கான தகு­தி­யா­கவோ, உரி­மை­யா­கவோ என்னால் பார்க்க முடி­யலை. அர­சியல் வேற, ஆதங்கம் வேற. நம்­மளைச் சுத்தி என்ன நடக்­கு­தன்னு பேசு­றது ஆதங்கம். நம்­மளை சுத்தி என்ன நடக்குணும்னு தீர்­மா­னிக்­கி­றது அர­சியல். எதையும் தீர்­மா­னிக்­கிற சக்­தி­யாக நாம் வர­ணும்னா இந்த மக்­க­ளுக்கு ஏதாச்சும் செஞ்­சி­ருக்­கணும். மக்கள் நம்­மளை நம்­புற அள­வுக்கு அவங்­க­ளோட பிரச்­சி­னை­களில் நின்­னி­ருக்­கணும். அர­சியல் என்­கி­றது முன்ன மாதிரி இல்ல. யார் தேவைங்­கி­றதைத் தீர்­மா­னிக்­கிற தெளி­வோட மக்கள் இருக்­காங்க. இன்னும் அஞ்சு வருடம் கழிச்சு அப்­படி ஆகி­டலாம். இப்­படி ஆகி­டலாம் என்று நீங்க திட்டம் போட்டா, மக்கள் முன்னால் முட்­டா­ளா­கத்தான் நிற்­பீங்க!

அர­சியல் எண்­ணமே இல்­லா­மலா மன்றச் செயற்­பா­டுகள், நற்­பணி விழாக்­களை முன்­னெ­டுக்­கி­றீங்க?

ஆரம்­பத்தில் இந்த மாதிரி ரசிகர் மன்­றங்­களை நான் விரும்­பவே இல்லை. ஒரு கல் ஒரு கண்­ணாடி படத்­துக்குப் பிறகு ரசி­கர்கள் செய்­யிற நலப்­ப­ணி­களை நான் தவிர்க்க விரும்­பலை. நம்ம பேரைச் சொல்லி நாலு பேருக்கு நல்­லது நடந்தால் சரின்னு நினைச்சேன். அவ்­வ­ள­வுதான். அதை வச்சு லோங் டைம் பிராசஸ் யோசிக்­கிற எண்ணம் எனக்குக் கிடை­யவே கிடை­யாது!

 அர­சி­ய­லுக்கு வந்தால் தப்­பில்­லைன்னு சமீ­பத்தில் சொல்லி இருந்­தீங்­களே?

நான் அர­சி­ய­லுக்கு வந்தால் தப்­பில்­லைன்னு சொல்­லலை. மக்கள் பிரச்­சி­னை­க­ளுக்­காக முன்­னிற்கத் துடிக்­கிற தங்­களை அர்ப்­ப­ணிக்­கிற எண்ணம் கொண்­ட­வங்க யாரா இருந்­தாலும் அர­சி­ய­லுக்கு வர­லாம்­கி­ற­துதான் என் கருத்து!

அ.தி.மு.க. வில் கூட 30 வயது தாண்­டாத விவேக் ஜெய­ரா­மனை துணைப் பொதுச் செய­லாளர் ஆக்­கு­வ­தற்­கான வேலைகள் நடக்­கின்­றன. யூத் ஆட்­களை அர­சி­ய­லுக்குக் கொண்­டு­வர அனைத்துக் கட்­சி­களும் யோசிக்கும் கால கட்டம் இது. உங்கள் விஷ­யத்தில் தி.மு.க. வுக்கு இது பொருந்­தாதா?

விவேக் ஜெய­ரா­மன்­கிற பேரை மட்­டும்தான் நான் கேள்­விப்­பட்­டி­ருக்கேன். மற்­ற­படி அவரை நான் பார்த்­தது கூட கிடை­யாது. அவரைக் கொண்டு வரு­வதும் வரா­ததும் அவங்க கட்சியோட வேலை. மக்கள் அவரை ஏற்றுக் கொண்டால் மற்றவங்க எப்படித் தடுக்க முடியும்?

சமீபத்தில் தீபா கூடத்தான் கட்சி ஆரம்பிச்சாங்கா. அடுத்து அவங்க கணவரே புதுக்கட்சி ஆரம்பிச்சார். இப்போதெல்லாம் அஞ்சு பேர் சேர்ந்தாலே அரசியல் கட்சி ஆரம்பிச்சிடுறாங்க. ஆனால் யாரை ஏற்கணும். யாரைத் தவிர்க்கணும்னு மக்களுக்குத் தெளிவா தெரியும். இன்னிக்கு நாட்டில் நடக்கிற ஒவ்வொரு போராட்டமும் தகுதியான இளைஞர்களை அடையாளம் காட்டுது. அந்த மாதிரி இளைஞர்களைத் தேடிப்போய், நீங்க அரசியலுக்கு வருவீங்களா ன்னு கேளுங்க. அதுதான் மீடியாக்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை என்கிறார் உதயநிதி ஸ்டாலின்

(சந்திப்பின் சிந்திப்பில் சரவணன். வாசிப்பின் நேசிப்பில் ஷண்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.