Jump to content

பெளத்த மேலாதிக்கம்!


Recommended Posts

பெளத்த மேலாதிக்கம்!

 

வெசாக் தினக்­கொண்­டாட்டம் கார­ண­மாக  திரு­கோ­ண­மலை நக­ரத்தின் சில ­ப­கு­திகள் அலங்­க­ரிக்­கப்­பட்டு வெசாக்­கூ­டுகள்  தொங்­க­வி­டப்­பட்­டுள்ள காலப்­ப­கு­தியில் மடத்­தடி வீர­கத்­திப்­பிள்­ளையார் ஆல­யத்­துக்கு முன்­பாக பிள்­ளை­யாரின் வில்­ல­னாக பிர­திஷ்டை  செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் புத்த பெருமான். வெசாக் தினத்­துக்­காக  வைக்­கப்­பட்ட பெருமான் தொடர்ந்தும் வீற்­றி­ருக்கும் நிலை  கொண்­ட­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார்.

 

இன­வா­த­பூக்கள் வாரந் தவ­றாமல், மாதந்­த­வ­றாமல் பூக்கும் ஒரு நாடாக இலங்கை ஆகி­விட்­டதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் நிரூ­பிக்­கின்­றன.

இன­வாத நாட்­டுக்கு அடை­யா­ள­மிட்டு காட்­டக்­கூ­டிய அள­வுக்கு இந்­நாட்டில் பல்­வேறு சம்­ப­வங்கள் நிகழ்ச்சி நிரல் தப்­பாமல் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இன்னும் கூறப்­போனால் இன­வா­தத்­துக்­கான நோபல் பரி­சொன்று வழங்­கப்­ப­டு­மாயின் அதை தவ­றாமல் பெறக்­கூ­டிய தகு­தியும் தரமும் இலங்­கைக்கு மாத்­தி­ரமே உண்­டென்­ப­தற்கு மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது. அந்­த­ள­வுக்கு அண்­மைக்­கா­ல­மாக குறிப்­பாக புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­தன்பின் இந்­நி­கழ்­வுகள் தொடர் கதை­யா­கவே நடந்து கொண்­டி­ருக்­கின்றன.

பௌத்­த­வாதம், அடிப்­ப­டை­வாதம், இன­வா­த­மென்ற முச்­சக்­க­ரத்தில் நல்­லாட்­சியை நகர்த்திக் கொண்டு போகிற போக்கே இன்­றைய தேசிய அர­சாங்­கத்தின் பண்­பாக காணப்­ப­டு­கி­றது என்று கருதும் அள­வுக்கும் விச­னப்­படும் நிலை­யிலும் நாட்டின் நகர்­வு­களும் ஆட்சிப் போக்­கு­களும் அமைந்து காணப்­ப­டு­கி­ன்றன.

பள்­ளி­வா­சல்­களை எரித்தல், இந்­துக்­கோ­யில்­களை தகர்த்­தெ­றிதல், தமிழ்– முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான கடைகளை உடைத்தல், தீயிடல், சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எரிச்­சலை உண்­டாக்கும் வகையில் அவர்கள் வாழும் பிர­தே­சங்­களில் பௌத்த விகா­ரைகள் நிறு­வப்­ப­டு­கின்­றன. புத்தர் சிலைகள் நிறு­வப்­ப­டு­கின்­றன.

இவை ஒரு புற­மி­ருக்க தமிழ் கிரா­மங்­க­ளுக்கு சிங்­க­ளப்­பெ­யர்­களை சூட்­டு­வது சிறு­பான்­மை­யினர் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்­து­வரும் பிர­தே­சங்­களை தொல்­பொருள் மயப்­ப­டுத்­து­வது தமிழ், இஸ்லாம், இந்து பெயர்கள் கொண்­ட­தெ­ருக்­களை சிங்­களப் பெயர் சூட்டி அதன் பாரம்­ப­ரி­யத்தை மறைப்­பது என ஏகப்­பட்ட விவ­கா­ரங்கள் மலிந்து போன நாடாக தற்­பொ­ழுது இலங்கை காணப்­ப­டு­வ­த­னாலோ என்­னவோ பௌத்­த­வாதம், இன­வாதம் அடிப்­ப­டை­வாதம் கொண்ட ஒரு நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் வெறுப்பும் விரக்­தியும் கொண்ட நிலைக்கு ஆளா­கப்­பட்டு வரு­கின்­றார்கள்.

இலங்கை ஒரு சிங்­களப் பௌத்த நாடு. நாமே இதன் சொந்­தக்­கா­ரர்கள் என்ற மம­தை­யுடன் அடா­வ­டித்­தனம் செய்து வரும் ஒரு­ம­த­வாதக் கும்­பலை அடக்க முடி­யாமல் அட்­டூ­ழியம் தர்பார் நடத்திக் கொண்­டி­ருக்கும் மத­வாதக் கும்­பலை அடக்க முடி­யாமல் நல்­லாட்சி செய்­கி­றோ­மென பெரு­மைப்­ப­டு­வதில் என்ன ஜன­நா­யகம் பேணப்­ப­டு­கி­றது என்று தெரி­ய­வில்லை.

திரு­கோ­ண­ம­லைக்கு அண்­மையில் விஜயம் செய்த ஜனா­தி­ப­தி­ய­வர்கள் இன­வாத பௌத்­த­வாத கெடு­பி­டி­கள்­பற்றி இவ்­வாறு ஒரு கருத்தை தெரி­வித்­தி­ருந்தார். இன­வாத கெடு­பி­டிகள் நடை­பெ­று­கின்ற போதும் மத முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­ற­போதும் அப்­பி­ரச்­சி­னை­களை என்னைத் தீர்த்­து­வைக்­க­வில்­லை­யென குறை கூறு­கின்­றார்கள். அந்­தந்த பிர­தே­சங்­க­ளுக்கு சென்று என்னால் தீர்த்து வைக்க முடி­யுமா-? பிரச்­சி­னைகள் உரு­வாகும் பிர­தே­சத்­தி­லுள்ள மதத்­த­லை­வர்கள் ஒன்று கூடி முரண்­பா­டு­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் மத விவ­கா­ரங்­க­ளுக்கும் முடிவு காண­வேண்­டு­மெ­னக்­கூ­றி­யி­ருந்தார்.

சிங்­கள பௌத்த புரட்சி வெடிக்கும், என நாட்­டுக்கும் நல்­லாட்­சிக்கும் பொருத்­த­மற்ற இன­வா­தங்­களைக் கக்கும் சிங்­கள ராவய, பொது­ப­ல­சேனா, ஹெல­உ­று­மய போன்ற வாதி­க­ளுடன் பேசித்­தீர்வு காணும் நிலை­யி­லா நாடு சென்று கொண்­டி­ருக்­கி­றது என வின­வ­வேண்­டி­யுள்­ளது.

குரு­நாகல், கண்டி பிர­தான வீதியின் மல்­ல­வ­பிட்­டிய ஜும் ஆ பள்­ளி­வாசல் மீது 21.05.2017 அதி­காலை அடை­யாளம் தெரி­யா­தோரால் பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. மூன்று மோட்டார் சைக்­கிளில் வந்த ஆறு­பேரே இத்­தாக்­கு­தலை நடத்­தி­விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

இச்­சம்­பவம் நடை­பெ­று­வ­தற்கு இரு­நாட்­க­ளுக்கு முன்பு பாணந்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட எலு­வில பகு­தியில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு சொந்­த­மான இரு­வர்த்­தக நிலை­யங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக தமிழ் முஸ்லிம் சமூ­கத்­துக்­கெ­தி­ரான குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்டு வரும் கெடு­பி­டி­களும் அட்­டூ­ழி­யங்­களும் அதி­க­ரித்த வண்­ணமே காணப்­ப­டு­கி­ன்றன என்­ப­தற்கு, வடக்கு, கிழக்­கிலும் அதற்கு வெளி­யேயும் நடை­பெற்ற அசம்­பா­வி­தங்கள் ஏற்ற உதா­ர­ணங்­க­ளாகும்.

மறிச்­சுக்­கட்டி வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் சிவில் அமைப்­பு­களும் தங்­க­ளது கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்துக் கொண்­டு­வ­ரு­வ­துடன் பாதிக்­கப்­பட்ட மக்கள் மறிச்­சிக்­கட்டி பிர­தே­சத்தில் தொடர்ச்­சி­யாக கவ­ன­யீர்ப்பு போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­த­மையை நாட­றியும்.

கடந்த ஏப்ரல் மாதம் மாயக்­கல்லி மலை நில ஆக்­கி­ர­மிப்பு பௌத்த விகாரை அமைப்பு ஆகிய அத்­து­மீ­றிய அடா­வ­டித்­த­னங்­களால் புத்த சம­யத்தின் பெயரால் கிழக்­கு­மா­கா­ணத்தில் பாரிய இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்கும் முயற்­சியில் சில அமைச்­சர்­களும் சிங்­கள பேரின வாதி­களும் முயன்­ற­மையால் பாரிய பதட்ட நிலை­யொன்று உரு­வா­கி­யது. இறக்­காமம் மாயக்­கல்லி மலை விவ­கா­ர­மா­னது, கிழக்கில் எத்­த­கைய கொந்­த­ளிப்பு நிலையை உரு­வாக்­கி­யது என்­பது தொடர்பில் முஸ்லிம் தலை­மைகள் தமது கடு­மை­யான எதிர்ப்­பையும் கண்­ட­னத்­தையும் காட்­டி­யி­ருந்­தனர்.

இதே­போ­லவே திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் பல்­வேறு அசம்­பா­வி­தங்கள் மே மாத கால அளவில் இடம்­பெற்­றுள்­ளன என்­பதை செய்திப் பதி­வுகள் தெரி­விக்­கின்­றன. அண்­மையில் புல்­மோட்டை, பட்­டிக்­குடா, கரை­யா­வெளி மீள் குடி­யேற்­றப்­ப­கு­திக்கு வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் அலு­வ­லக அதி­கா­ரிகள் (19.05.2017) புல்­மோட்டை பட்­டிக்­குடா பகு­திக்கு வருகை தந்து அங்­குமீள் குடி­யே­றி­யுள்ள மக்­களை அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் அவர்­களின் காணி­களில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த கட்­டு­மா­னப்­ப­ணி­களை மேற்­கொள்ளக் கூடா­தெ­னவும் இது­ வ­ன­ப­ரி­பா­ல­னத்­துக்கு சொந்­த­மா­னது எனவும் தெரி­வித்­த­மையால் அப்­ப­குதி மக்கள் கல­வ­ர­ம­டைந்து பதட்­ட­நி­லை­யொன்று உரு­வா­கி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இக்­கி­ரா­மத்­தி­லி­ருந்து குடி பெயர்ந்­த­மக்கள் மீளக்­கு­டி­யே­ற­மு­யன்ற போதே வன­ப­ரி­பா­லன பாய்ச்சல் இடம் பெற்­றி­ருக்­கி­றது. இங்­கு­வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் நீண்­ட­கா­ல­மா­கவே வாழ்ந்­து­வந்­த­மைக்­கு­ரிய உரித்­தா­வ­ணங்­களும் கொண்­ட­வர்­க­ளாக இருந்­த­போ­திலும் வன­ப­ரி­பா­லன கெடு­பி­டிகள் இருக்­கத்தான் செய்­தன.

புல்­மோட்­டையில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் ஏலவே இடம் பெற்­றுள்­ளன. என்­ப­தற்கு கடந்த மூன்­று­வ­ரு­டங்­க­ளுக்கு முன் இடம்­பெற்ற ஒரு சம்­ப­வத்தை இவ்­வி­டத்தில் பதிவு செய்து கொள்­வது பொருத்­த­மாக இருக்கும்.

புல்­மோட்டை முதலாம் கிரா­ம­சே­வகர் பிரிவு உட்­பட்ட அரி­சி­ம­லைக்­குடா என அழைக்­கப்­படும் பொன்­ம­லைக்­குடா கிரா­மத்­தி­லுள்ள 500 ஏக்கர் நிலப்­ப­கு­தியை (விவ­சா­யக்­காணி) புனித பூமி எனும் பெயரில் சுவீ­க­ரிக்க திட்­டங்­களை மேற்­கொண்ட வேளை மக்­களின் எதிர்ப்பின் கார­ண­மாக கைவி­டப்­பட்ட சம்­ப­வமும் உண்டு.

தோப்பூர் செல்­வ­நகர் நீலாக்­கேணி கிரா­மத்தில் 1520 முஸ்லிம் மக்கள் குடி­யி­ருந்து வந்த அவர்­களின் ஜீவ­னோ­பா­ய­மாக இருந்த 40 ஏக்கர் காணியை கைப்­பற்­று­வ­தற்கு சேரு­வில பிர­தே­சத்­தி­­லுள்ள வில்கம் விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் பேரின சமூக இளை­ஞர்கள் குழுவும் நீலாக்­கேணி முஸ்லிம் கிரா­மத்­துக்குள் அத்­து­மீறி நுழைந்து காணி­களை கைய­கப்­ப­டுத்த முயன்­றனர்.

காணி­க­ளுக்கு இடப்­பட்­டி­ருந்த வேலி­ களை அகற்றி அமைக்­கப்­பட்­டி­ருந்த தற்­கா­லிக குடி­சை­க­ளை­யெல்லாம் உடைத்­தெ­றிந்து அக்­கு­ழு­வினர் அடா­வ­டித்­தனம் புரிந்­துள்­ளனர். இவ்­வ­ள­விற்கும் மூல கார­ண­மாக இருந்த விடயம் என்­ன­வென்றால், இவ்­வி­டத்தில் ஒரு­ வ­ர­லாற்றுப் புகழ் கொண்ட பௌத்த விகா­ரை­யொன்று இருந்­துள்­ளது. இவ்­வி­கா­ரைக்கு உரித்­து­டைய காணி­க­ளையே பிடித்­து­வைத்­துள்­ளனர் முஸ்லிம் மக்கள். என காரணம் கூறப்­பட்டே மேற்­ப­டி ­சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் வரை அக்­கா­ணி­களில் பயிர்ச் செய்கை மேற்­கொள்­வ­தற்கும் கட்­டிடம் நிர்­மா­ணிப்­ப­தற்கும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

வெசாக் தினக்­கொண்­டாட்டம் கார­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ரத்தின் சில ­ப­கு­திகள் அலங்­க­ரிக்­கப்­பட்டு வெசாக்­கூ­டுகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்ள காலப்­ப­கு­தியில் மடத்­தடி வீர­கத்­திப்­பிள்­ளையார் ஆல­யத்­துக்கு முன்­பாக பிள்­ளை­யாரின் வில்­ல­னாக பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் புத்த பெருமான். வெசாக் தினத்­துக்­காக வைக்­கப்­பட்ட பெருமான் தொடர்ந்தும் வீற்­றி­ருக்கும் நிலை கொண்­ட­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார்.

இது இவ்­வாறு இருக்க வட­புல நில­மைகள் மெல்ல மெல்ல பௌத்த ஆதிக்­கத்தால் விழுங்­கப்­படும் சூழ்­நிலை வளர்ந்து கொண்டு போவதை காணலாம். வட­மா­கா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளிலும் வெவ்­வேறு வகை­யான நுட்­பங்­களைப் பாவித்து பௌத்த ஆதிக்­கத்­தையும் கலா­சா­ரத்­தையும் குடி­யேற்­றங்­க­ளையும் விஸ்­த­ரித்து கொள்­ளப்­ப­டு­வதை நாளுக்கு நாள் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

மூன்று சமூ­கங்கள் பரந்து வாழும் மன் னார் மாவட்­டத்­திலும் இரு சமூ­கங்கள் செறி­வா­கவும் ஏனைய சமூகம் சிறியளவிலும் வாழுகின்றது. வவு­னியா மாவட்டம் இப்­பண்­புகள் மாறு நிலை­யாக காணப்­படும். யாழ், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகி­ய­மா­வட்­டங்­களில் யுத்­தத்­துக்குப் பின்­னுள்ள நிலை­மைகள் பெளத்த ஆதிக்­கத்­தையும் கலா­சார ஊடு­ரு­வல்­களை மறை முக­மாக உள்­ளீ­டு­செய்­வதில் காட்­டப்­படும் தீவிரம் இம்­மா­வட்­டங்கள் அடிப்­படை வாழ்­வி­யல்­பண்­பு­க­ளையும் பூகோள நிலை­மை­க­ளையும் முற்­றா­கவே மாற்­றி­விடும் போக்கே காணப்­ப­டு­கி­றது.

இரா­ணுவ பிர­சன்னம் என்ற பலத்­தை யும் வல்­ல­மை­யையும் வைத்­துக்­கொண்டு இன­வி­கி­தா­சா­ரத்தை திட்­ட­மிட்ட முறை யில் மாற்ற எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு அப் பால் அடிப்­படைப் பொரு­ளா­தார தளங்­களை மாற்­றி­விடும் அள­வுக்கு மாற்­றின வியா­பா­ரிகள் சந்தை வாய்ப்­புக்கள் உள் நுழைந்த வண்­ணமே இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

ஒரு காலத்தில் கற்­ப­க­தரு என்ற காவோ லைக் கலா­சாரம் மலிந்து கிடந்த மண்ணில் இன்று புதி­ய­வ­ருகை பொருட்­களின் வருகை அறி­முகம், விற்­பனை மாற்­றப்­பட்டு கற்­ப­கப்­பொ­ருட்­க­ளையே இல்­லாமல் ஆக்கும் முயற்­சிகள் மிக தந்­தி­ரோ­பா­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கி­ன்றன. பனங்­கட்­டியும், பனங்­கூழும், பனாட்டும், ஒடி­யலும், எள்­ளுப்­பாகும், ஆடிக்­கூழும், சித்­தி­ரைக்­கஞ்­சியும், உண­வா­கியும், கலா­சா­ர­மா­கவும் இருந்த மண்ணில் பௌத்த கலா­சா­ரங்­களும் நடை­யுடை பாவ­னை­களும் மறை­மு­க­மா­கவே விதைக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு, ஒரு சின்ன உதா­ரணம் அண்­மையில் நாவற்­கு­ழியில் புதிய பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்­ற­தாகும். நாவற்குழியில் சிங்­கள குடி­யேற்ற பகு­தி­யி­லேயே குறித்த நாக­வி­கா­ரை­யா­னது அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. பல கோடி ரூபா செலவில் இவ்­வி­காரை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட சிங்­கள மக்­களை தமி­ழர்கள் செறிந்து வாழும் பகு­தியில் குடி­யேற்றி விகா­ரை­களை அமைப்­ப­திலும் பௌத்த பீடங்­களை நிர்­மா­ணிப்­ப­திலும் தமிழ் மக்கள் வாழும் பிர­தே­சங்­களை பௌத்த மற்றும் சிங்­கள மயப்­ப­டுத்­து­வதில் வேக­மான நட­வ­டிக்­கை­களே அரசு முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

நாவற்­கு­ழியில் அமைக்­கப்­ப­ட­வி­ருக்கும் விகா­ரை­யா­னது சட்­ட­வி­ரோ­த­மா­னது என எடுத்­துக்­காட்­டப்­பட்­ட­போதும் அதை அமைப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புக்கள் பௌத்த பேரி­ன­சக்­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று கூறப்­ப­டு­கி­றது. நாவற்­கு­ழியில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபைக்கு சொந்­த­மான காணியில் சிங்­கள மக்கள் வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர் என்றும் இப்­ப­கு­தியில் விகா­ரை­யொன்றை அமைப்­ப­தற்கு கடந்­த­வாரம் அடிக்கல் நாட்­டப்­பட்­ட­நி­லையில் சாவ­கச்­சேரி பிர­தேச செய­ல­கத்தின் அனு­மதி பெறப்­ப­டாமல் கட்­டி­ட­நிர்­மாண வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை தென்­னி­லங்கை அமைப்­பொன்றைச் சேர்ந்த 300க்கும் அதி­க­மாக பௌத்த பிக்­குகள் நாவற்­கு­ழிக்கு வருகை தந்து விகாரை அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்­டப்­பட்ட இடத்தில் சமய அனுட்­டா­னங்­களில் ஈடு­ப­ட­மு­னைந்­தமை எவ்­வ­ளவு மூர்க்­கத்­த­ன­மான செயல் என்­பதை கண்டு கொள்ள வேண்டும்.

பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் தெரி­வித்த ஒரு கருத்தை இவ்­வி­டத்தில் ஒப்­பிட்­டுப்­பார்ப்­பது பொருத்­த­மாக இருக்கும். திரு­மலை குச்­ச­வெளி செம்­பீஸ்­வரர் ஆலய வளா­கத்தில் புரா­தன விகா­ரை­யொன்று இருந்­த­தற்­கான அடை­யா­ளங்கள் இருக்­கின்­றன. எனவே தான் அங்கு புதிய இந்­துக்­கோ­வி­லொன்றை அமைப்­ப­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் தடுத்து நிறுத்­தப்­பட்­டது என்று அமைச்சர் ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

குச்­ச­வெ­ளி­யி­லுள்ள செம்­பீஸ்­வரர் ஆல யம் வர­லாற்று பெருமை கொண்­டது. வன்­செ­யல்கள் இன­முஸ்­தீ­புக்கள் கார­ண­மாக ஆலயம் துவாம்சம் செய்­யப்­பட்ட நிலையில் அதை மீள் நிர்­மாணம் செய்ய சைவ அன்­பர்கள் முயன்­ற­போ­துதான் அண்­மையில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் இதற்கு தடை­வி­திக்­கப்­பட்­டது.

கோணேசர் பரி­பா­லன எல்­லைக்குள் புராண வர­லாற்­றுப்­பெ­ருமை கொண்ட பல ஆல­யங்கள் இருந்து வந்­துள்­ளன. அதில் ஒன்­றுதான் செம்­பீஸ்­வரர் ஆலயம். இவ்­வா­லயம் அண்­மைக்­கா­லத்தில் விஷ­மி­களால் சிதைக்­கப்­பட்டு ஆலய சான்­றுகள், விக்­கி­ர­கங்கள் உடைத்­த­தெ­றி­யப்­பட்டு திரு­டப்­பட்ட நிலை­யி­லேயே மேற்­படி ஆல­யத்தை புன­ர­மைக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

குறித்த அமைச்சர் இவ்­வாறு ஒரு கருத்­தையும் தெரி­வித்­தி­ருந்தார் வடக்கு கிழக்­கி ­லுள்ள தமி­ழர்­க­ளது தொன்­மை­களை வெளிப்­ப­டுத்தும் இடங்கள், ஆல­யங்கள், புரா­தன சின்­னங்கள், பாரம்­ப­ரி­ய­மான அடை­யா­ளங்கள், கல்­வெட்­டுக்கள் என்­பன தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் சிதைக்­கப்­ப­ட­வில்லை எனினும் அப்­ப­கு­தியில் வாழும் சிலரால் மதத்தின் தொன் ­மையை வெளிப்­ப­டுத்தும் இடங்­க­ளையும் புரா­தன சின்­னங்­க­ளையும் அழிக்கும் அச்­சு­றுத்­தல்கள் காணப்­ப­டு­கின்­றன. கன்னியா வெந்­நீரூற்று கிணறு அங்­குள்ள புரா­தன விகாரை உள்ளிட்டவை தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடமாக வர்த்தமா னியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அதை பிரதேச சபையிடம் ஒப்படைப்பதற்கு சட்டரீதியாக இடமில் லையென அவ்வமைச்சர் குறிப்பிட்டிருந் தார்.

கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதியவர்கள் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்த போது (25.05.2017) இலங்கைத்துறை முகத்துவாரம் எனும் இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலமொன்றை சம் பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.

இலங்கை துறை முகத்துவாரம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முற்றுமுழுதான தமிழ்க்கிராமமாகும். இது இவ்வரலாற்று புகழ்கொண்ட இட மும் கூட. வெருகலையும் சம்பூரையும் இணைக்கும் பாலமொன்று நிர்மாணிக்கப் பட்டு அப்பாலத்துக்கு லங்கா பட்டண (லங்காபட்டுவ) என்ற சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மகாவலிகங்கை கடலு டன் கலக்கும் இலங்கைத்துறை முகத்து வாரம் என்ற இவ்விடத்திலேயே இப்புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக்காலம் என விபரிக்கப்படுகிற போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்பே இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற துறை முகங்களிலொன்றாக இலங்கைத்துறை முகத்துவாரம் இருந்துவந்துள்ளது. போர்த் துகீ சரின் வருகையைத் தொடர்ந்தே திரு கோணமலைத்துறை முகம் பிரசித்தம் பெற் றது.

இத்தகைய புகழ் கொண்ட துறைமுகத் துக்கு அமைக்கப்பட்ட பாலத்துக்கு லங் கா பட்டண என்ற பெயர் சூட்டிக் கொண் டது எத்தகைய வரலாற்று மூடிமறைப்பு என்பதை ஊகிக்க வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களை பேரினமயப் படுத்துவது, விகாரை விஸ்தரிப்பு, தொல் பொருள் ஆய்வுகள், வனபரிபாலனம் என்ற வகையில் மேற்கொள்ளப்படும் கபளீ கரங்களும் கண்மூடித்தனங்களும் நல்லாட் சிக்கு உகந்ததல்ல சமாதானத்துக்கான நோபல்பரிசை இலங்கை பெறுகிறதோ என்னவோ இனவாதத்துக்கான நாடு என்ற பரிசை பெறுவதில் முன்னிலைநாடு என் பது இதன்மூலம் புரியும்.

திரு­ம­லை­ நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.