Jump to content

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி


Recommended Posts

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது

 

பஷில் ராஐபக் ஷ கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வி

நேர்­காணல் - ரொபட் அன்­டனி

யுத்­தத்தின் இறுதி தரு­ணத்தில் கஜேந்­திர குமார் என்று கூறப்­ப­டு­கின்­றவர் என்­னுடன் தொலை­பே­சியில் பேசி­ய­தாக கூறு­வதை நான் நிரா­க­ரிக்­கின்றேன். புலித் தலை­வர்கள் சர­ண­டை­வது தொடர்பில் ஒரு ஏற்­பாடு இருந்­தி­ருக்­கு­மாயின் உத்­தி­யோ­க­பூர்­வ­மான அமைப்­புக்கள் ஊடாக வந்­தி­ருக்­கலாம். எனினும் இறுதி நேரத்­திலும் அனைத்து உயிர்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டோம் என்று முன்னாள் அமைச்­சரும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

தற்­போ­தைய அர­சாங்கம் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு தீர்வை வழங்கும் என்று நம்ப முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் மட்­டுமே இந்த நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும். இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு வழங்­கு­கின்ற ஆத­ரவைப் போன்று அன்று எமக்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தால் நாங்கள் இந்த தேசிய பிரச்­சி­னையை தீர்த்­தி­ருப்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு­வி­பரம் வரு­மாறு

கேள்வி : ராஜ­பக் ஷ குடும்­பத்தார் அர­சாங் கத்­திற்கு பயந்து கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக் கப்­ப­டு­கி­றதே? அர­சாங்கம் தங்­களை சிறையில் அடைத்து விடும் என அச்­சத்தில் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் உங்கள் பதில் என்ன?

பதில் : அர­சாங்கம் பத­விக்கு வந்து இரண்­டரை வரு­டங்கள் கடந்து விட்­டன. இந்த காலப் பகு­தியில் மக்­க­ளுக்கு எதுவும் நன்மை கிடைத்­த­தாக தெரி­ய­வில்லை. மாறாக அர­சியல் பழி­வாங்­கல்கள் மிகவும் சிறப்­பாக இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த அர­சியல் பழி­வாங்­கலில் ராஜ­பக் ஷ குடும்­பமே பிர­தான இலக்­காக அமைந்­தி­ருக்­கி­றது. அத்­துடன் ராஜ­பக் ஷ மாருடன் இருந்த அரச ஊழி­யர்­களும் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளனர். அர­சியல் ரீதியில் நாடு வீழ்ச்­சி­ய­டை­யும்­போது எதிர்த் தரப்­பினர் மக்கள் மத்­தியில் முன்­செல்வர். அந்த மாற்­றத்தை கண்­ட­துடன் இரண்டு விட­யங்­களை அர­சாங்கம் செய்­யலாம். அதா­வது மக்­களை தமது பக்கம் இழுத்துக் கொள்­வ­தற்கு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கலாம். அல்­லது அர­சியல் பழி­வாங்­கலை தொடர்ந்து அதி­க­ரிக்­கலாம். அந்­த­வ­கையில் மே தினத்தின் பின்னர் அர­சாங்கம் மேலும் பழி­வாங்கல் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தா­கவே நாங்கள் காண்­கிறோம். இந் நிலையில் இந்த விட­யங்­க­ளுக்­காக நாங்கள் பயந்து விடுவோம் என யாரும் நினைக்­கக்­கூ­டாது. 1936 ஆம் ஆண்டு ராஜ­பக் ஷ அர­சி­ய­லுக்கு வரும்­போது சவால்கள் என்­பது சாதா­ர­ண­மா­கின. 1936 ஆம் ஆண்டு டி.ஏ.ராஜ­பக் ஷ வெலிக்­கடை சிறைச்­சா­லை­யி­லி­ருந்தே அரச மந்­திரி சபைக்கு வந்தார். அன்­றி­லி­ருந்து அனைத்து ராஜ­பக் ஷக்­களும் அர­சியல் பழி­வாங்­கல்களுக்கு உட்­பட்­டுள்­ளனர். மஹிந்த ராஜ­பக் ஷ ஆறு மாதங்கள் சிறை­யி­லி­ருந்­துள்ளார். நானும் இருந்­துள்ளேன். நாமல் ராஜ­பக் ஷ இருந்­துள்ளார். எனவே பயம் என்­பது ராஜ­பக் ஷக்­க­ளுக்கு இல்லை.

கேள்வி : அமைச்­ச­ரவை மாற்றம் எவ்­வாறு அமைந்­துள்­ளது.

பதில் : அமைச்­ச­ரவை மாற்றம் என்­பது ஒரு நாட்­டுக்கோ அர­சாங்­கத்­துக்கோ புதி­தா­ன­தல்ல. ஆனால் அர­சியல் ஸ்திரத்­தன்மை என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அமைச்­சர்­க­ளுக்கு குறிப்­பிட்ட கால அட்­ட­வ­ணையின் கீழ் பொறுப்­பு­களை வழங்க வேண்­டி­யது அவ­சியம். சில நேரங்­களில் எந்­த­வி­த­மான விடயதானங்களும் தொடர்பான தெளிவற்­ற­வர்­க­ளுக்கு அமைச்சுப் பொறுப்­புக்கள் வழங்­கப்­ப­டு­வ­துண்டு. அது எந்த அர­சாங்­கத்­திலும் நடை­பெறும். ஆனாலும் அர­சாங்கம் சரி­யான நேரத்­தி­லேயே அமைச்­ச­ரவை மாற்­றத்தை செய்­துள்­ளது. ஆனால் இந்த மாற்­ற­மா­னது மக்­களின் பக்­கத்­தி­லி­ருந்து செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக அரச வளங்­களை விற்கும் செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. அவற்றில் காணப்­படும் தடை­களை நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது. துறை­முக அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்த அர்­ஜுன ரண­துங்க மாற்­றப்­பட்­டுள்­ள­மையும் இந்தக் கார­ணத்தை நோக்­க­மாக கொண்­ட­தாக இருக்­கலாம்.மறு­புறம் நாட்டின் பொரு­ளா­தாரம் குழப்­பத்தில் உள்­ளதை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ள­தையும் உணர முடி­கின்­றது. தலை­வ­லிக்கு மருந்து கொடுப்­பதை விடுத்து தலை­ய­ணையை மாற்றும் செயற்­பாட்­டையே அர­சாங்கம் செய்­தி­ருக்­கி­றது. வருத்­தத்­திற்கு மருந்து எடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி : நீங்கள் பிர­மாண்­ட­மான மே தினக் கூட்­ட­மொன்றை நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. எவ்­வாறு இதனை செய்­தீர்கள்?

பதில் : எமது புதிய கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி கடந்த வருடம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது. சரி­யாக ஆறு மாதங்­களில் பாரிய திட்­டங்­களை வகுத்தோம். அந்த திட்­டத்தின் ஒரு கட்­டமே மே தினக் கூட்­ட­மாகும். இலங்­கையில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட மே தினக் கூட்­டங்­களில் மிகப்­பெ­ரிய கூட்­ட­மாக இது அமைந்­தது. அதிக மக்­களை கொண்டு வரு­வதே எமது நோக்­க­மாக அமைந்­தது. 36 கிரா­மங்­க­ளிலும் 14 ஆயிரம் கிரா­ம­சேவைப் பிரி­வு­க­ளிலும் கிளை அமைப்­புக்­களை உரு­வாக்­கினோம். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் தவிர்ந்த அனைத்து பகு­தி­க­ளிலும் கிளை­களை ஆரம்­பித்து செயற்­பட்டோம்.

கேள்வி : ஏன் கிளி­நொச்சியிலும் யாழ்ப்­பா ணத்திலும் கிளை­களை அமைக்க முடி­ய­வில்லை.

பதில் : அங்கு நாங்கள் இன்னும் செல்­ல­வில்லை. அதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. வெறு­மனே ஏமா­று­வ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு அமை­வா­கவே நாங்கள் கிளை­களை அமைத்து வரு­கிறோம். வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய பகு­தி­களில் இருந்து இந்தக் கோரிக்கைகள் வந்­ததன. அதனால் அங்கு கிளை­களை ஆரம்­பித்தோம். தற்­போது யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்­சி­யி­லி­ருந்து அழைப்­புக்கள் வந்து கொண்டிருக்­கின்­றன. இலங்­கையில் மிகப்­பெ­ரிய மைதா­ன­மாக காலி முகத்­தி­டலை குறிப்­பி­டலாம். அந்த மைதா­னமே நிறைந்து வழியும் அள­விற்கு நாங்கள் மக்­களை திரட்­டினோம். அதற்கு அரு­கி­லுள்ள வீதி­களில் கூட மக்கள் கூட்டம் நிரம்­பி­யது. இதன்­மூலம் மக்கள் தற்­பே­ாதைய அர­சாங்­கத்­திற்கு ஒரு செய்­தியை வழங்­கி­யி­ருக்­கின்­றனர். மஹிந்த ராஜ­பக் ஷவை மக்கள் ஒரு தலை­வ­ராக ஏற்றுக் கொண்­டுள்­ளனர். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களில் மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை என்­ப­து தெளிவா­கின்­றது.

கேள்வி : 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நாட்டின் தேசியப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு உங்கள் அர­சாங் கத்­திற்கு ஒரு சந்­தர்ப்பம் காணப்­பட்­டது என் பதை ஏற்றுக் கொள்­கி­றீர்­களா?

பதில் : அதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்­ததும் முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டிய பல விட­யங்கள் காணப்­பட்­டன. ஒரு மனிதன் பிர­சங்கத்தை கேட்­ப­தற்­காக பசி­யுடன் வந்தால் முதலில் அவரின் பசியை தீர்த்து விட்டு பிர­சங்­கத்தை ஆரம்­பிக்க வேண்டும். நாங்கள் முதலில் பயங்­க­ர­வா­தத்தை அழித்தோம். மனி­தா­பி­மான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்தோம். 2009 ஆம் ஆண்டு இலட்­சக்­க­ணக்­கான மக்கள் முகாம்­களில் இருந்­தனர். வீதி­களை அமைக்க வேண்­டி­யி­ருந்­தது. கண்ணி வெ­டி­களை அகற்ற வேண்­டி­யி­ருந்­தது. பாட­சா­லைகள், பாலங்கள் என்­ப­வற்றை நிர்­மா­ணிக்க வேண்­டி­யி­ருந்­தது. மக்­களை மீளக்­கு­டி­ய­மர்த்த வேண்­டிய தேவை இருந்­தது. எனவே 2009 ஆம் ஆண்டு இந்த விட­யங்­க­ளுக்கு நாங்கள் முக்­கி­யத்­துவம் அளித்தோம். யாழ்ப்­பா­ணத்­திற்கு ரயில் பாதை அமைக்க வேண்­டிய தேவை இருந்­தது. அவற்­றையும் நாங்கள் செய்தோம். மின்­சாரம் இருக்­க­வில்லை. ஏ–9 பாதை திறக்­கப்­ப­ட­வில்லை. அவற்றை நாங்கள் செய்தோம். முதலில் இந்தக் காயங்­களை ஆற்றி பின்னர் தீர்வு குறித்து சிந்­திப்­ப­தற்கு நாம் தீர்­மா­னித்தோம். அவற்றை செய்து முடித்தோம். அதன் பின்னர் அர­சியல் தீர்வுத் திட்­டத்­திற்கு பிர­வே­சிக்க திட்­ட­மிட்­டி­ருந்தோம். மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்களை நடத்­தினோம். அதி­காரப் பகிர்வு பற்றிப் பேசப்­படு­கி­றது. அதி­கா­ரத்தை பகிர்ந்து கொடுப்­ப­தற்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட வேண்டும். அத­னையே நாங்கள் செய்தோம்.

 மேலும் இங்கு முக்­கி­ய­மான விடயம் ஒன்றை குறிப்­பி­ட­வேண்டும். அதா­வது இன்று அர­சாங்­கத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வழங்­கு­கின்ற ஆத­ரவைப் போன்று அன்று எமக்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தால் நாங்கள் இந்த தேசிய பிரச்­சி­னையை தீர்த்­தி­ருப்போம். அன்று முகாம்­களில் இருந்த மக்­க­ளுக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை வழங்­கு­வ­தற்கும் கூட்டமைப்பு உத­வ­வில்லை. இந்த அர­சாங்­கத்­துக்கு வழங்கும் ஆத­ரவு எமது அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. மக்­க­ளுக்கு தலை­வர்கள் இட­ம­ளிக்­க­வு­மில்லை.

 கேள்வி : தற்­போ­தைய அர­சாங்­கத்தில் தமிழ் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளதே?

பதில் : இந்த அர­சாங்­கத்தின் மூலம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­காது. இந்தப் பிரச்­சி­னையை வைத்து அர­சியல் செய்­யவே முயற்­சிக்­கின்­றனர். அடுத்த தேர்­த­லுக்கும் இதனை பயன்­ப­டுத்­து­வார்கள். ஆனால் நாங்கள் பிரச்­சி­னை­களை நீடிக்­க­வில்லை. அத­னால்தான் முன்­னைய அர­சாங்­கங்கள் யுத்­தத்தை இழுத்­த­போது நாங்கள் அதனை நிறைவு செய்தோம். இன்று மாண­வர்கள் பாட­சாலைப் பைகளை தோளில் சுமந்து செல்­கின்­றனர். முன்னர் அந்த நிலைமை காணப்­ப­ட­வில்லை. எனவே வடக்கு அர­சியல் பிரச்­சி­னைக்கும் தீர்­வு­காண மஹிந்த ராஜ­பக் ஷவினால் மட்­டுமே முடியும் என்­ப­த­னையும் நான் கூறு­கின்றேன். மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு மட்­டுமே இதனை தீர்க்க முடியும். குப்பை பிரச்­சி­னையை தீர்க்­காத அர­சாங்கம் தேசிய பிரச்­சி­னையை தீர்க்­குமா?

கேள்வி : இந்­திய பிர­தமர் மோடி இலங்கை வரும்­போது உங்கள் முகாமின் ஒருவர் கறுப்பு கொடி காட்­ட­வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்­திய பிர­தமருடன் முன்னாள் ஜனா தி­பதி மஹிந்த 45 நிமி­டங்கள் பேச்சு நடத்­தி­ய தாக கூறப்­ப­டு­கின்­றது. என்­னதான் நடந்­தது?

பதில் : இந்­திய பிர­த­ம­ருக்கு எதி­ராக கறுப்பு கொடி காட்­ட­வேண்டும் என்று கூற­வில்லை. மாறாக அவர் செய்­ய­வி­ருந்த உடன்­ப­டிக்­கைக்கு எதி­ரா­கவே அவ்வாறு செய்­ய­வி­ருந்­தனர். சம்­பி­ர­தா­யப்­படி இந்­திய பிர­தமர் இலங்­கைக்கு வந்தால் எதிர்க்­கட்­சியை சந்­திப்­பது வழ­மை­யாகும். சேர் ஜோன் கொத்­த­லா­வல காலத்­திலும் இது நடை­பெற்­றது. அவ்­வா­றான ஒரு வழ­மை­யான சந்­திப்பே மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கும் இந்­திய பிர­த­ம­ருக்கும் இடையில் நடை­பெற்­றது.

கேள்வி : என்ன பேசப்­பட்­டது என்று கூற முடி­யுமா?

பதில் : வழ­மை­யான பொது­வான விட­யங்­களே பேசப்­பட்­டன.

கேள்வி : யுத்­தத்தை முடிக்க இந்­தியா உத­வி ய­தாக உங்கள் தரப்பு பல தட­வைகள் கூறி­யுள் ளது. யுத்­தத்­துக்கு பின்னர் இந்­தி­யா­வுடன் உங் க­ளது முன்­னைய அர­சாங்­கத்­துக்கு முரண் பாடு ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. என்­னதான் நடந்­தது?

பதில் : அவ்­வாறு முரண்­பாடு இருந்­ததா என தெரி­ய­வில்லை. நாங்கள் இந்­தி­யா­வுடன் சிறப்­பா­கவே செயற்­பட்டோம். இன்னும் அர­சியல் ரீதி­யாக அல்­லது வேறு கார­ணங்­க­ளினால் சில வேறு­பா­டுகள் காணப்­பட்­டன. எனினும் தற்­போது இந்­தியா அன்று எம்மை தவ­றாக புரிந்­து­கொண்­டதை உணர்ந்­தி­ருக்கும்.

கேள்வி : உங்­க­ளு டைய புதிய கட்­சிக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான தற்­போ தைய உறவு என்ன?

பதில் : இரண்டு தரப்­பி­னரும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­ப­டு­கின்றோம். பிரச்­சினை இல்லை என்றும் உள்­ளது என்றும் கூற முடி­யாது.

கேள்வி : ஜன­வரி எட்டாம் திகதி மாற்­றத்­துக்கு இந்­தியா பங் க­ளிப்பு செய்­த­தாக குற்­றச் சாட்டு உள்­ளதா ?

பதில் : அது பேசப்­ப­ட­வேண்­டிய விட­ய­மல்ல. அது வர­லாற்­றுடன் இருக்­கின்­றது. ஒரு சந்­தேகம் இருக்­கின்­றது.

கேள்வி : உங்கள் அர­சாங்கம் சீனா­வுடன் நெருங்­கிய உறவை பேணி­யது. எனினும் தற் போது சீனாவை விமர்­சிப்­பது போன்று தெரி­கின் றதே?

பதில் : அவ்­வாறு ஒன்­று­மில்லை. நாங்கள் இந்­தியா, சீனா ஆகிய இரு நாடு­க­ளு­டனும் பொது­வான உறவை பேணு­கின்றோம். ஆனால் ஒரு விட­யத்தை கூறி­யா­க­வேண்டும். சீனா­வுக்கு வழங்­கிய சில அபி­வி­ருத்தி திட்­டங்­களை இந்­தி­யா­வுக்கு மீள் வழங்கி சீனா­வு­ட­னான ஒப்­பந்­தங்­களை ரத்து செய்­தி­ருக்­கின்றோம். கையொப்பம் இட்ட பின்னர் ரத்துச் செய்­துள்ளோம். வடக்கு ரயில் பாதையை அமைக்க சீனா முன்­வந்­தது. ஆனால் இறு­தியில் இந்­தி­யா­வுக்கே கொடுத்தோம். இவ்­வாறு இந்­தி­யா­வுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­துள்ளோம்.

கேள்வி : துறை­முக நகரை நீங்­கள்தான் ஆரம்­பித்­தீர்கள். எனினும் தற்­போது சீனா பங் கெ­டுக்கும் அபி­வி­ருத்தி திட்­டங்­களை விமர்­சிப் பது ஏன்?

பதில் : அவ்­வாறு எந்த குற்­றச்­சாட்டும் இல்லை. முத­லீடும் விற்­ப­னையும் இரண்டு விட­யங்­க­ளாகும். அம்­பாந்­தோட்­டையில் காணி விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தையே எதிர்க்­கின்றோம். தெற்கு கொழும்பு துறை­மு­கத்தில் சீனா முத­லீடு செய்­தது. தற்­போது நாம் பயன்­ப­டுத்­து­கின்றோம். துறை­முக நகரும் முத­லீ­டாகும். சீனா மற்­று­மொரு துறை­மு­கத்தை அமைத்­துக்­கொ­டுத்தால் நல்­லது. ஆனால் இருக்­கின்ற துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கு­வது நல்­ல­தல்ல.

கேள்வி : நாட்டில் மீண்டும் இன­வாத செயற் பா­டுகள் தலை­தூக்­கு­கின்­ற­னவே?

பதில் : ஆம். நாங்­களும் அதனை அவ­தா­னித்தோம். அது மிகவும் பயங்­க­ர­மான நிலை­மை­யாகும். நாட்டில் ஸ்திர­மற்ற நிலைமை வரும்­போது சர்­வ­தேச சக்­திகள் இவ்­வாறு செய்யும். எனவே அர­சா­ங்கம் இந்த விட­யத்தில் உட­ன­டி­யாக தலை­யி­ட­வேண்டும். மதத் தலை­வர்­களும் இந்த விட­யத்தில் தலை­யிட்டு செயற்­ப­ட­வேண்டும். இரண்டு தரப்­புக்கள் மத்­தி­யிலும் சந்­தே­கங்கள் இருப்பின் அதனை தீர்த்­துக்­கொள்­ள­வேண்டும். இனங்­க­ளுக்கும் மதங்­க­ளுக்கு இடையில் சந்­தே­கங்கள் ஏற்­படின் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­விடும். ஆனால் அர­சாங்கம் இதில் தலை­யி­ட­வேண்டும். ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் தலை­யிட்டால் நாம் ஆத­ரவு வழங்­குவோம்.

கேள்வி : யுத்தம் தோற்­க­டிக்­கப்­பட்­டதால் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ தமிழ் மக்­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாக கரு­து கின்­றீர்­களா?

பதில் : முதலில் நாங்கள் யுத்த வெற்­றியை பெற்­ற­தாக கூறு­வ­தை­விட சமா­தா­னத்தை வெற்­றி­கொண்­ட­தா­கவே கூற­வேண்டும். நாங்கள் மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யையே முன்­னெ­டுத்தோம். மக்­க­ளுக்கு சமா­தா­னத்தை பெற்­றுக்­கொ­டுத்தோம். தமிழ் மக்கள் தோல்­வி­ய­டை­ய­வில்லை. இன்று யாழ்ப்­பாண மக்கள் ரயிலில் செல்­கின்­றனர். எனவே தமிழ் மக்கள் எங்­களை தோற்­க­டித்­த­தாக கூற முடி­யாது. தமிழ் மக்­களை மீட்­கவே மனி­தா­பி­மான செயற்­பாட்டை முன்­னெ­டுத்தோம்.

கேள்வி : நீங்கள் சமா­தா­னத்­தையே வெற் றி­கொண்­ட­தாக கூறு­வ­தாயின் ஏன் 2015 ஆம் ஆண்டில் தோல்­வி­ய­டைந்­தீர்கள்?

பதில் : சமா­தா­னத்தை வெற்­றி­பெற்­றாலும் தேர்­தலை வெற்­றி­பெ­ற­வில்லை. இவை இரண்டும் வேறு­பட்­ட­வை­க­ளாகும். நாங்கள் 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் வெற்­றி­பெற்றோம். 2015 ஆம் ஆண்டு தோல்­விக்கு வேறு கார­ணங்கள் உள்­ளன.

கேள்வி : உங்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்ற கட்சி தேர்­தல்­களில் போட்­டி யி­டுமா?

பதில் : இனி­வரும் காலங்­களில் இலங்­கையில் நடை­பெறும் எந்­த­வொரு தேர்­த­லிலும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன முன்­னணி தனித்து போட்­டி­யிடும்.

கேள்வி : சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­ட­மாட்­டீர்­களா?

பதில் : எம்­முடன் எந்தக் கட்­சியும் இணைந்­து­கொள்­ளலாம். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டாலும் நாங்கள் பிர­ப­ல­மாக போட்­டி­யி­டுவோம்.

கேள்வி : 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் என்ன செய்­வீர்கள்?

பதில் : தேர்தல் நடக்­கும்­போது பார்ப்போம். எந்­தத்­தேர்­த­லுக்கும் நாம் தயார்.

கேள்வி : 2020 இல் ஜனா­தி­பதி தேர்தல் நடக்­கு­மானால் உங்கள் வேட்­பாளர் தொடர்பில் தற் போது ஆயத்­தங்கள் நடக்­க­ வேண்­டுமே?

பதில் : அப்­ப­டி­யில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறுதி நாளில்­தானே வெளி யில் வந்தார். அந்த நேரத்தில் தகு­தி­யா­னவர் முன்­வ­ருவார்.

கேள்வி : உங்கள் சகோ­த­ரரும் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பா­யவின் பெயரும் அடி­ப­டு­கின்­றதே?

பதில்: அனைத்து சகோ­த­ரர்­க­ளி­னதும் பெயர் களும் அடி­ப­டு­கின்­றன.

கேள்வி : யுத்­தத்தின் இறுதி தினங்­களில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் உங்­க­ளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தாரா?

பதில் : இவை தொடர்பில் சில விடயங்கள் சட்டரீதியாக அணுகப்படுவதால் நான் பதில ளிப்பது சரியல்ல.

கேள்வி : தான் உங்களுடன் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவு தொடர்பில் பேசியதாக கஜேந் திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் ஜெனிவாவில் தெரிவித்திருந்தார். அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் : நாங்கள் யுத்தம் செய்யவில்லை. மனிதாபிமான நடவடிக்கையையே செய்தோம். எந்த நேரத்திலும் மக்களின் உயிர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையையும் செய் வதற்கு தயாராக இருந்தோம். நீங்கள் கூறு பவர் என்னுடன் தொடர்புகொண்டு எதனை யும் பேசினாரா என்று எனக்கு ஞாபகம் இல்லை. அவசரமாக தொடர்புகொண்டு பேசுவது நம்பகத்தன்மை தொடர்பான பிரச் சினையை தோற்றுவிக்கும். நாங்கள் அப் போது ஐக்கிய நாடுகள் சபை, நோர்வே மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி னோம். மக்களின் உயிர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாக இருந்தது. புலிகள் இது போன்ற ஒரு செயற்பாட்டுக்கு தயார் இல்லை என்ற விடயத்தை நோர்வே தூதர கத்திடம் இருந்து நாங்கள் எழுத்துமூலம் பெற்றுக்கொண்டோம். யாரோ ஒருவர் தொலை பேசியில் பேசியதாக கூறுவது என்னவென்று புரியவில்லை. அதுமட்டுமன்றி இவ்வாறு ஒரு ஏற்பாடு இருந்திருந்தால் அதனை உரிய நடைமுறைகளுக்கு ஏற்ப முன்னெடுத்தி ருக்க வேண்டும். இவ்வாறு புலிகள் சரண டைவதாயின் சர்வதேச செஞ்சிலுவை சங் க மும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்பாடுகளை செய்திருக்கும். எனினும் இறுதி நேரத்திலும் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். கஜேந்திர குமார் என்னுடன் தொலைபேசியில் பேசி யதாக கூறுவதை நான் நிராகரிக்கின்றேன். அவ்வாறு ஒரு ஏற்பாடு இருந்திருக்குமாயின் உத்தியோகபூர்வமான அமைப்புக்கள் ஊடாக வந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.