Jump to content

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு


Recommended Posts

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

 
201705261406597305_Kamal-Hassan-words-of
 
கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது.

தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. நான் 21 வயதிலேயே அரசியலுக்குள் வந்துவிட்டேன். ஆனால், போட்டி அரசியலுக்குள் வரவில்லை. யார் வரவேண்டும்? யார் ஆளவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் அரசியலுக்குள்தான் வந்திருக்கிறேன்.

201705261406597305_kamal223-X._L_styvpf.

அரசியல் என்பது சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும். இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை எங்களுக்காக பணியாற்ற வாருங்கள் என்று சொல்லவேண்டும். அதைவிடுத்து தியாகம் செய்ய வாருங்கள் என்று சொன்னால், அவர்கள் அதை வேறுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

மேலும், ரஜினி அரசியலுக்குள் வந்தால் அவரை ஆதரிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான பதிலை அறிவிக்கும் களம் இது கிடையாது. அது வேறு என்று சொல்லி பேட்டியை முடித்தார்.

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் கூறியதை வைத்து பார்க்கும்போது, அவர் மறைமுகமாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்படுகிறது. 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/26140651/1087296/Kamal-Hassan-words-of-support-for-Rajinikanth.vpf

Link to comment
Share on other sites

அரசியல் சிஸ்டம் பற்றி ரஜினி சொன்னது சரியா? கமல்ஹாசன் அதிரடி பதில்

IMG_%2828%29_17162.jpg

 


'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனுக்கும் இந்தி வெர்ஷனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?

மொழியே ஒரு வித்தியாசம் தான். மொழியைத் தாண்டி பெரிய வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை.

இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் யாருடைய நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருந்தது?

அமிதாப்பை பல நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே பார்த்து விட்டதால் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் எனக்கு பிடித்திருந்தது. சல்மான் கான்  எளிமையாகவும், எதார்த்தமாகவும் செய்து இருந்தார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அரசியல்வாதி யாராவது பங்கேற்பார்களா?

அரசியல்வாதிகள் யாரும் இருக்க மாட்டாங்கனு நம்புறேன். பிரபலங்களுடன் சாமான்ய மனிதர் யாராவது இருப்பாங்கனு நினைக்கிறேன்.

30 கேமராக்கள் இருக்கும் ஒரு வீட்டில் பிரபலங்கள் எப்படி எதார்த்தமாக இருக்கவும், பேசவும் முடியும்?

முடியும். நாங்களே சில நேரம் கேமரா இருப்பது தெரியாமல் மனதில் இருப்பதே வெளிப்படையாக பேசி வம்புகளில் மாட்டிக்கொள்வதில்லையா? அதே மாதிரிதான் கேமரா இருக்கு என்பதையே போட்டியாளர்கள் மறந்து விடுவார்கள்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பதிலாக சமூக அக்கறையுடைய 'சத்யமேவ ஜெயதே' போன்ற நிகழ்ச்சியை நடத்தலாமே?

நான் என் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் செய்வதைவிட பல நல்ல விஷயங்களை செஞ்சிட்டுதான் இருக்கேன். இதை நான் என் தனிப்பெருமைக்காக இங்கே சொல்லலாம்.

இன்றைய அரசியல் சூழலில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

போட்டி அரசியலில் நான் இல்லை. தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை. சேவை செய்யும் இடம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னதைப் பற்றி?

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னதில் தவறு ஏதுமில்லை. அது வித்தியாசமானது இல்லை.

ஜூன் 25 ஆம் தேதி முதல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான பிரமாண்ட செட் சென்னையில் போடப்பட்டுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.
 

http://www.vikatan.com/news/cinema/90485-there-is-nothing-wrong-in-rajinis-words-says---kamal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு

தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

கமல் சார்?

தமிழகத்தை ஆளுவதற்கு ஏன் சார் தமிழ் உணர்வு வேண்டும்?

சொல்லுங்க சார்........உருது உணர்வு அரபு உணர்வுகள் சரி வராதா சார்....... சொல்லுங்க சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வு கொண்ட எவனும் மனிதனை ஆளலாம்.

அது இல்லாத ..........******** ஆளுவதை பற்றித்தான் இப்ப பேசிகிட்டு இருக்கோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.