Jump to content

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு!


Recommended Posts

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு!

 
 

ட்ரம்ப் அதிபரான பிறகு ஜெர்மனியுடன், தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதை கண்டுகொள்ளவில்லை. ஏஞ்சலாவின் முகத்தைக் கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ் கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார். 

Trump


இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது. முக்கியமாக, "ஜெர்மனியர்கள் கெட்டவர்கள். மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில் கார்களை விற்பனை செய்துள்ளனர். ஆனால், அவற்றை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

ட்ரம்பின் இந்தக் கருத்தால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல, ட்ரம்புக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

ஒபாமா இருந்தவரை ஜெர்மனியுடன் அவர் நல்லுறவைக்  கடைபிடித்துவந்தார். இதற்கிடையே ட்ரம்பின் இந்த நடவடிக்கை, இரு நாட்டின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

http://www.vikatan.com/news/world/90440-trump-promises-to-stop-car-imports-from-germany.html

Link to comment
Share on other sites

tw_blush:

Link to comment
Share on other sites

 

பார்வையாளர்கள் இவரை உண்மையான ட்ரம்ப் என நம்பிவிட்டார்கள் போல. இவர்கள் தேர்ந்தெடுக்கும் அதிபர்தான் உலகையே ஆட்டிப்படைக்கிறார் என்பதை நினைக்கும்போது அழுகாச்சியா வருது.. tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

ஜெர்மனியர்கள் ரொம்ப மோசம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சலசலப்பு

ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெர்மனியர்கள் ரொம்ப மோசம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சலசலப்பு
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் ஜெர்மனியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக ஜெர்மன் வார இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள். அமெரிக்காவில் எண்ணற்ற கார்களை விற்பனை செய்து கொள்ளை வருமானம் ஈட்டுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவோம்’ என டிரம்ப் பேசியதாக தெரிகிறது.

அப்போது, குறுக்கிட்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜங்கர், தடையற்ற வர்த்தகத்தால் ஒவ்வொருவரும் பயனடையத்தான் செய்வார்கள் என ஜெர்மனிக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
201705261943194930_trump2._L_styvpf.gif
தேர்தலுக்கு முன்புகூட ஜெர்மனியையும், அந்நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்கலையும் டிரம்ப் தாக்கிப் பேசினார்.

இத்தாலியில் இன்று நடைபெற உள்ள ஜி7 மாநாட்டின்போது ஏஞ்சலா மெர்கலை டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/26194311/1087374/Trump-reportedly-calls-Germans-very-bad.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பர்! எங்கை போனாலும் ஒபாமாவைப்பற்றி வாந்தியெடுக்காமல் விடுறதில்லை. ஒபாமாவுக்கு யார் யாரையெல்லாம் பிடிக்கிதோ அவர்களையெல்லாம் ட்ரம்பருக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது. எவன் கெட்டிக்காரனனோ அவனையும் அவருக்கு பிடிக்காது. 
டொனால்ட் ட்ரம்ப் செய்யுற ஒவ்வொரு கூத்தாடி வேலையும் ஒபாமாவின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.