Jump to content

மனைவியை வன்புணர்ந்த கணவனுக்குத் தண்டனை


Recommended Posts

மனைவியை வன்புணர்ந்த கணவனுக்குத் தண்டனை

16 வயதில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பிள்ளைகளின் தந்தையான பின் ஒத்திவைத்த கடூழியச் சிறை

 
மனைவியை வன்புணர்ந்த  கணவனுக்குத் தண்டனை
 

மனைவியை 16 வயதில் வன்புணர்வுக்குட்படுத்தியதற்காகக் கணவனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்று 8 வருடங்களுக்குப் பின்னர், தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் நேற்று இந்தத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்பவம் இடம்பெற்றபோது காதலர்கள். எனினும் 16வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அவரது சம்மதத்துடனாக இருந் தாலும் பாலியல் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வுக் குற்றமாகவே கருதப்படும் என்பதால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆண் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும் சம்பவம் இடம்பெற்ற 2 வருடங்களின் பின்னர், பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்ததும் அவர்கள் இருவரும் சட்டபூர்வமாகத் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 8 ஆண்டுகளில் அவர்களுக்கு 3 பிள்ளைகளும் பிறந்துள்ளனர்.

எனினும், கணவன் மீதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தனது கணவர் அந்த வயதில் தெரியாது செய்த தவறை மன்னித்து அவரை விடுதலை செய்யுமாறு மனைவி நீதிபதியிடம் வேண்டினார். குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் கணவன் தனது குற்றத்தைத் தற்போது ஏற்றுக்கொள்கிறார் என்று அவரது சட்டத்தரணி கௌதமன் மன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணையே அவர் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளமையால் அவருக்குக் குறைந்தபட்சத் தண்டனை வழங்குமாறு வேண்டினார். சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துள்ளார் என்றாலும் அவர் புரிந்தது பாரதூரமான குற்றம் என்று மன்றுக்குச் சுட்டிக்காட்டினார் அரச சட்டவாதி.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து வாழ்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி அதனைக் கவனத்தில் எடுத்த நீதிபதி, எனினும் நிகழ்ந்தது பாரதூரமான குற்றம் என்பதால், குற்றவாளிக்கு மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தார். ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டமாக தலா 2ஆயிரம் படி 6ஆயிரம் ரூபாவும், ஒவ்வொரு குற்றத்திற்குமான இழப்பீஈடாக 5ஆயிரம் ரூபாபடி 15ஆயிரம் ரூபாவும் விதித்து தீர்ப்பளித்தார்.

http://uthayandaily.com/story/4147.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நீதிபதியாய் இருப்பது சில நேரங்களில் எவ்வளவு தர்மசங்கடமானது என்று இது போன்ற வழக்குகளில்தான் உணர முடியும். ஆளுக்கும் நோகக்கூடாது தடியும் முறியக்கூடாது, அதேசமயம் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை தர வேண்டும்....சிறப்பு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இவங்கள் புது கதை பேசுறாங்கள் ...........?
குமாரசாமி அண்ணர் .....தமிழ் சிறி அண்ணர் மார் நாட்டுப்பக்கம் 
போகவே முடியாது போல இருக்கே ????

16க்கு இந்த துள்ளல் துள்ளுறாங்கள் ......
நாங்கள் 14-15லேயே  ............. 
வேண்டாம் சொந்த செலவுல சூனியம் வைக்கிற மாதிரி ஆகிடும். 

கணவருக்கும் வயது 18க்கு குறைவாக இருந்தால் ..?
தீர்ப்பு வேற மாதிரி இருக்குமா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.