Jump to content

விக்னேஸ்வரனைக் கைதுசெய்தால்தான் ஞானசாரதேரர் சரணடைவார்!


Recommended Posts

விக்னேஸ்வரனைக் கைதுசெய்தால்தான் ஞானசாரதேரர் சரணடைவார்!

விக்னேஸ்வரனைக் கைதுசெய்தால்தான் ஞானசாரதேரர் சரணடைவார்!

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டுமென பொதுபலசேனா அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஞானசார தேரரைக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாகல்கந்தே சுகந்ததேரர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஞானசார தேரரைக் கைதுசெய்யுமுன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டும். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூம் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோரையும் கைது செய்;தால்தான் ஞானசார தேரர் சிறிலங்கா காவல்துறையினரிடம் சரணடைபார் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=68777

Link to comment
Share on other sites

பொதுபலசேனா அமைப்பின் கோரிக்கையை நோக்கும்போது,! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூம் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர்தான் ஞானசார தேரர் கைதுசெய்யப்படுவதிலிருந்து அவரைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பது புலனாகிறது. :shocked: 

Link to comment
Share on other sites

ரிஷாத், ஹக்கீம், விக்கி, விஜ­ய­கலா, சிவா­ஜி­லிங்­கத்தை கைது செய்­யுங்கள்

01-03168982e83fe5fdbcbcfa21e8dd7ba0bf4e025b.jpg

 

ஞான­சார தேரர் சர­ண­டைவார்

பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட பௌத்த அமைப்­புக்கள் வலி­யு­றுத்தல்

 (ஆர்.யசி )

நாட்டின் புராதன சொத்­துக்­க­ளையும் பெளத்த சிங்­கள உரி­மை­யையும் பாது­காக்க வேண்டும். அதற்­கா­கவே நாம் குரல்­கொ­டுக்­கின்றோம். அர­சாங்­கத்தை வீழ்த்த வேண் டும் அல்­லது புதிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்­பது எமது நோக்கம் அல்ல. நாட்டின் பெளத்த சிங்­கள உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். எமது புரா­தன சொத்­துக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அதற்­காக ஒரு அடி பின்­வாங்­கவும் நாம் தயா­ராக உள்ளோம். இன்னும் சில காலம் அமைதி காக்­கவும் தயா­ராக உள்ளோம் என பொது­பல சேனா உள்­ளிட்ட சிங்­கள பெளத்த அமைப்­புகள் தெரி­வித்­தன.  

பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணா­விட்டால் அடுத்த சமு­தாயம் இந்த தீர்வை அடக்­கு­முறை மூலமே பெற்­றுக்­கொள்ளும். ஆகவே பொறு­மை­காப்­பது அச்­சு­றுத்­த­லா­னது எனவும் அந்த அமைப்­புக்கள் குறிப்­பிட்­டன.

பொது­பல சேனா அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ராஜ­கி­ரிய விகா­ரையில் இடம்­பெற்­றது. இதில் பொது­பல சேனா அமைப்­புடன் இணைந்து செயற்­படும் சிங்­கள ராவய, சிங்­கள அபி ஆகிய அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­கள்ட இணைந்து இந்த கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

சிங்­கள ராவய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கருத்து தெரி­விக்­கையில்,  இந்த நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் சக­லரும் வாழக்­கூ­டிய உரிமை உள்­ளது. அதேபோல் நாட்டில் உள்ள தொல்­பொ­ருட்கள் அனைத்­தையும் பாது­காக்க வேண்­டி­யது நாட்டில் வாழும் சகல மக்­களின் கட­மை­யாகும். ஆனால் இன்று கிழக்கில் இடம்­பெறும் சம்­ப­வங்கள் மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளன. பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் இல்­லா­ம­லேயே கிழக்கு மாகா­ண­சபை மிகவும் மோச­மா­ன­தாக செயற்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பும் போது எம்மை இன­வா­தி­க­ளாக சித்­த­ரித்து நாட்டில் தவ­றான தோற்­றத்தை வெளி­ப­டுத்தி வரு­கின்­றனர்.  

கடந்த சில கால­மாக நாட்டில் பௌத்தம் சிங்­களம் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. நாட்டின் புரா­தன தன்­மைகள், தொல்­பொ­ருட்கள், தேசிய வனம், பெளத்த கொள்கை என அனைத்தும் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது அடை­யாளம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் இவற்றை நாம் தட்டிக் கேட்டால் எம்மை பெளத்த இன­வா­திகள் என விமர்­சித்து அடக்க முயற்­சிக்­கின்­றனர். எமது அடை­யா­ளத்தை அழித்து சிங்­கள பெளத்த மக்­களை அடக்­கு­வதா இந்த அர­சாங்கம் கூறும் நல்­லி­ணக்கம்? புரா­தன சொத்­து­களை பாது­காப்­பதன் மூலம் முஸ்­லிம்­களின் மனங்கள் காய­ம­டை­கின்­றன என்றால் பௌத்­தத்தை அழித்தால் சிங்­கள மக்­களின் மனங்கள் காயப்­ப­டாதா? எமது பக்க நியா­யங்­களை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அர­சாங்கம் கலந்­து­ரை­யா­டலின் மூலம் பிரச்­சி­னை­களை தீர்க்க அழைக்­கின்­றது. அதற்­க­மைய அமைச்சர் மனோ கணே­ச­னுடன் நாம் பேச்­சு­வாத்­தைக்கு சென்றால் இந்த நாடு சிங்­கள நாடு என்­பதை அவர் ஏற்­று­கொள்ள தயங்­கு­கின்றார். இந்த நாடு சிங்­கள நாடு என்­பதை மறுத்து எவ்­வாறு இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடியும்? ஆகவே இவர்கள் சிங்­கள மக்­களை புறக்­க­ணிக்கும் நிகழ்ச்சி நிரலை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேலும் ஞான­சார தேரரை இந்த நாட்டின் மிகப்­பெ­ரிய தீவி­ர­வா­தி­யாக சித்­த­ரித்து விட்­டனர். ஒரு தீவி­ர­வா­தியை கைது­செய்ய எவ்­வாறு பாது­காப்பு நகர்த்­தப்­ப­டுமோ அதேபோல் ஞான­சார தேரரை கைது செய்­யவும் மிகப்­பெ­ரிய திட்டம் தீட்­டி­யுள்­ளனர். 200க்கும் அதி­க­மான பொலிசார் , விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் என மிகப்­பெ­ரிய பாது­காப்பு சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது. பொது­மக்­களின் எதிர்ப்பை அடுத்தே இந்த முயற்­சிகள் முறி­ய­டிக்­கப்­பட்­டன.

ஞான­சார தேரரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது. அவரை கொலை­செய்ய மிகப்­பெ­ரிய திட்டம் வரை­யப்­பட்­டுள்­ளது. அவரை சட்­டத்தின் மூலம் கைது செய்­யாது இர­க­சி­ய­மாக கைது­செய்து அவரை கொலை­செய்ய மிகப்­பெ­ரிய சதித்­திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது. அவரை கொலை செய்து அதன் மூலம் 1989ஆம் ஆண்டு கல­வரம் போன்­ற­தொரு கல­வ­ரத்தை உரு­வாக்கி இன முறு­கலை ஏற்­ப­டுத்­தவே திட்டம் தீட்­டினர். இதன் பின்­ன­ணியில் அர­சாங்­கத்தின் தூண்­டுதல் உள்­ளது. பாது­காப்பு படை­களின் சிலரும் இதற்கு உடந்­தை­யா­கி­யுள்­ளனர். ஞான­சார தேரரை கைது செய்ய எந்த கார­ணமும் இல்லை. பிடி­யா­ணையும் இல்லை. நீதி அமைச்­ச­ருக்கு இந்த விடயம் தெரி­ய­வில்லை. ஆகவே ஒரு சிலரின் தனிப்­பட்ட தேவைக்­கா­கவே ஞான­சார தேரரை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர். அவரை கொலை­செய்­யவே இந்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்த செயல் அர­சாங்­கத்தை வீழ்த்தும் நோக்­கத்தில் எதிர்க்­கட்சி மேற்­கொள்ளும் சூழ்ச்­சி­யாக இருக்­கலாம். அல்­லது எதி­ர­ணியை பல­வீ­னப்­ப­டுத்த அர­சாங்கம் மேற்­கொள்ளும் சூழ்ச்­சி­யாக இருக்­கலாம். அர­சாங்­கத்தை வீழ்த்த வேண்டும் அல்­லது புதிய அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்­பது எமது நோக்கம் அல்ல. நாட்டின் பெளத்த சிங்­கள உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். எமது புரா­தன சொத்­துக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். அதற்­காக ஒரு அடி பின்­வாங்­கவும் நாம் தயா­ராக உள்ளோம். இன்னும் சில காலம் அமைதி காக்­கவும் தயா­ராக உள்ளோம். அல்­லது ஞான­சார தேரரை கைது செய்தால் தான் எமது உரி­மைகள் கிடைக்கும் என்றால் அவரின் கைது தான் சிங்­க­ள­வர்­களின் உரி­மை­களை பாது­காக்க ஒரே வழி­முறை என்றால் அதற்­காக ஞான­சார தேரர் கைதா­கவும் தயா­ராக உள்ளார்.

ஆனால் ஞான­சார தேரரை கைது செய்ய முன்னர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், ரவுப் ஹகீம், வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன், அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் எம்.பி போன்­ற­வர்­களை முதலில் கைது­செய்ய வேண்டும். அதன்­பின்னர் ஞான­சார தேரர் தானாக சர­ண­டைவார். நாட்டில் தமிழ் முஸ்லிம் இன­வா­திகள் கருத்­துக்­களை முன்­வைக்கும் போது வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் எம்மை மாத்திரம் தண்டிக்க முயற்சிக்கின்றது. பாராளுமன்றத்தில் அனைவரும் முஸ்லிம்களின் நியாயத்தை மாத்திரம் கருத்தில்கொண்டு செயற்படுகின்றனர். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக முன்வைத்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. அவர் கூறுவதையே நாமும் கூறுகின்றோம். இப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் அடுத்த சமுதாயம் இந்த தீர்வை அடக்குமுறை மூலமே பெற்றுக்கொள்ளும். ஆகவே பொறுமைகாப்பது அச்சுறுத்தலானது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-26#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஐந்து பேரும் அரசியல்வாதிகள் .....நீங்கள் புத்தரின்ட வாரிசுகள் அவையளை மாதிரி ஏட்டிக்கு போட்டியா கதைக்கலாமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.