Jump to content

அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்!

Recommended Posts

அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்!

அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்!

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கிய அரசு நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன. இருப்பினும், அங்கு போதிய மழையின்றி மக்களிடையே குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மழை என்பதே அரிதான ஒன்றாகும். எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர்ப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர்.

தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு ஆலை நிறுவப்படுகிறது. அதாவது, அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வருகின்றனர். பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2019-ம் ஆண்டுக்குள் தொடங்கப்பட உள்ளதாக அமீரக தேசிய ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=68583

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Athavan CH said:

தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு ஆலை நிறுவப்படுகிறது. அதாவது, அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வருகின்றனர். பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பூமி வெப்பமாதலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

பூமி வெப்பமாதலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையோ?

அங்கிள் சாமின்ட மூளை நல்லாய் வேலை செய்யுது ....எல்லாம் பணம் சம்பாதிக்க எடுத்த முயற்சிகள்Image result for image of usa flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

ஆலோசனை  (ஐடியா...)  கொடுப்பவன் தமிழன்.  :grin:
செய்து... பார்ப்பவன், அராபியன்.  :D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.