Jump to content

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு.19 பேர் வரை உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, steht und Nacht

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!
19 பேர் வரை உயிரிழப்பு!
50 பேர் வரையில் காயம்!
தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு!

Manchester Arena blast: 19 dead and about 50 hurt.

BBC.

 

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

 
 
 
பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

 

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நேரப்படி நேற்றிரவு 10.35 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கப் பாடகி ஒருவரின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மான்செஸ்டர் அரேனா அரங்கிலேயே இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உள்ளரங்கில் 18 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த போதே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து. அந்தப் பகுதி முழுவதும், தடை செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

http://thuliyam.com/?p=68515

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.

 ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://www.bbc.com/tamil/global-40008676

Link to comment
Share on other sites

மான்செஸ்டர் தாக்குதல்: இதுவரை அறிந்தவை என்ன?

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

 

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடுப்பு குறித்து இதுவரை நமக்கு தெரிந்தவை இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 
  • இசை கச்சேரி முடிந்து மக்கள் பெருங் கூட்டமாக வெளிக் கதவுகள் மூலமாக வெளியேறத் தொடங்கிய போது இத்திடலுக்கு வெளியே குண்டுவெடுப்பு நடந்ததாக குண்டுவெடிப்பு நடந்த அரீனாவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

• திங்கள்கிழமை இரவு பிரிட்டன் நேரம் 10.35-க்கு மான்செஸ்டர் பெருநகர போலீசார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். இப்பகுதியை சுற்றி இருந்த சாலைகள் உடனடியாக மூடப்பட்டன.

•இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இதனை அதி பயங்கரமான பயங்கரவாத தாக்குதலாக போலீசார் கருதுவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

•தங்களுக்கு இத்தாக்குதல் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் வரை, இதனை தாங்கள் பயங்கரவாத சம்பவமாக கருதப்போவதாக மான்செஸ்டர் பெருநகர போலீஸ் தலைமை அதிகாரி இயான் ஹாப்கின்ஸ் தெரிவித்தார்.

•இது ஒரு பயங்கரவாத சம்பவமாக உறுதி செய்யப்பட்டால், கடந்த 2005 ஜுலையில் 56 பேர் கொல்லப்பட்ட லண்டன் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பிரிட்டனில் நடந்த மிக மோசமான பயங்கரவாத அட்டூழியமாக இது கருதப்படும்.

•ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடப்படாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

•சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் மற்றும் நட்டுகள் பரவி கிடந்ததாகவும், அவ்விடத்தில் வெடிமருந்துகளின் வாசனை மிகுந்து இருந்ததாகவும் குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

•இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் தனது பொது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் நடக்கவுள்ள அரசின் அவசர கூட்டமான கோப்ரா குழு கூட்டத்தில் தலைமையேற்கவுள்ளார்.

•குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அருகாமையில் உள்ள விக்டோரியா ரயில் நிலையத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுளனர். மேலும், செவ்வாய்க்கிழமையன்று அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

http://www.bbc.com/tamil/global-40008682

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வாசிகள் விபரத்தை தாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்வாசிகள் என்னத்தை சொல்றது...கூகுளில் அடித்தால் எல்லாம் வருதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனி ஒருவன் said:

லண்டன் வாசிகள் விபரத்தை தாங்கோ 

போற போக்கை பாத்தால் சிலோனிலை செக்கன்ட் அசூல் அடிக்கவேண்டி வரும்போலை கிடக்கெண்டு லண்டனிலை இருக்கிற என்ரை மச்சான் சொல்லுறான்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

லண்டன்வாசிகள் என்னத்தை சொல்றது...கூகுளில் அடித்தால் எல்லாம் வருதே

அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல  ஒரு இதமான மன ஆறுதல் :104_point_left:

12 hours ago, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் சிலோனிலை செக்கன்ட் அசூல் அடிக்கவேண்டி வரும்போலை கிடக்கெண்டு லண்டனிலை இருக்கிற என்ரை மச்சான் சொல்லுறான்.:cool:

நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல  ஒரு இதமான மன ஆறுதல் :104_point_left:

நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும் <_<

வெள்ளவத்தை எந்தமாகாணத்திலை இருக்கோ அந்த மாகாணத்திலையாம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெள்ளவத்தை எந்தமாகாணத்திலை இருக்கோ அந்த மாகாணத்திலையாம் :cool:

மேல் மாகாணம்  வட கிழக்கில் சேராது அண்ணை அங்கே  ஈசியா கிடைக்கலாம் பணம் இருந்தால் சரி  ஈசிtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎/‎05‎/‎2017 at 1:22 PM, தனி ஒருவன் said:

அதற்கில்லை கூகளவிட கூப்பிட்டு நலம் விசாரிக்கிறதுல  ஒரு இதமான மன ஆறுதல் :104_point_left:

நல்வரவாகுக எந்த மாகாணம் என்றால் இன்னும் நல்லா இருக்கும் <_<

 

முனி, எல்லாரும் இந்த குண்டு வெடிப்பில 8,15,22 சிறுவ,சிறுமிகள் இறந்திருக்கினம் சொல்லினம்,அவர்களுக்காக கவலைப்படினம்...உண்மையிலேயே இறந்தது அப்பாவிகள் தான்...ஆத்மா சாந்தியடையட்டும்.
 
நிற்க அந்த குண்டைக் கொண்டு போய் வெடித்தவருக்கு எத்தனை வயது...அவரும் சிறுவன் தான்...இன்னொரு திரியில லிபியாவில் இருந்து அகதியாப் போன கப்பல் முழ்கி ஆட்கள் பலி என்று போட்டு இருந்தது...அதில் குழந்தைகள் இல்லையா?
 
எல்லோரும் தங்கட நாட்டில் தங்கட வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் இப்படிப்பட்ட அழிவுகள் ஏற்படாது:rolleyes:
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.