Jump to content

முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு


Recommended Posts

முள்ளிவாய்க்கால் பாடம் கற்க மறுக்கும் தமிழர் தரப்பு

Page-01-image-74bb078934bd52b1d1cba01fa03b8be0a2da27d4.jpg

 

இலங்­கையில் தமிழ் மக்கள் மிகப் ­பெ­ரிய இன­அ­ழிப்பைச் சந்­தித்து எட்டு ஆண்­டுகள் முடிந்­தி­ருக்­கின்­றன. 2009 மே 18ஆம் திகதி முடி­வுக்கு வந்த போரின் இறு­திக்­கட்­டத்தில் முள்­ளி­வாய்க்­காலில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

ஈழத்­த­மி­ழர்கள் எதிர்­கொண்ட இந்த மாபெரும் படு­கொ­லை­களை நினை­வு­கூரும் நினை­வேந்தல் நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை முள்­ளி­வாய்க்கால் மண்ணில் நடை­பெற்­றி­ருக்­கின்­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் முள்­ளி­வாய்க்கால் மண்ணில் காலடி வைக்கக் கூட முடி­யா­த­ள­வுக்கு இறுக்­க­மான பாது­காப்பு கெடு­பி­டிகள் இருந்­தன. ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், சில கெடு­பி­டிகள், தடைகள், தடங்­கல்­க­ளுடன் வடக்கு மாகா­ண­ச­பை­யினால் நினை­வேந்தல் நிகழ்­வுகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

முன்­னெப்­போதும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் பங்­கேற்­றி­ராத இரா.சம்­பந்தன், சுமந்­திரன் உள்­ளிட்­டோரும் இம்­முறை பங்­கேற்­றி­ருந்­தனர்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் நடந்த இந்த நிகழ்வில் நாடா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், பொது­மக்கள் அர­சியல் பிர­மு­கர்கள், இந்து, கிறிஸ்­தவ, முஸ்லிம் மத­கு­ரு­மா­ருடன், பௌத்த குருமார் சிலரும் பங்­கேற்­றமை முக்­கி­ய­மா­னது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் பௌத்த குரு­மாரும் பங்­கேற்­கின்ற அள­வுக்கு நிலை­மை­களில் மாற்­றங்கள் இடம்­பெற்­றி­ருந்­தாலும், ஒரே தலை­மையின் கீழ், ஒரே நோக்­கிற்­காக செயற்­பட்­ட­வர்கள், போரா­டி­ய­வர்­க­ளான தமிழ்த் தேசிய அர­சியல் சக்­திகள் இந்த நிகழ்வில் ஒன்­றி­ணையத் தவ­றி­யமை துர­திஷ்­ட­மான விடயம்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் அர­சியல் பேதங்கள், அர­சியல் நோக்­கங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­டது. அதில் பங்­கேற்­கின்ற உரி­மையும், பங்­கேற்க வேண்­டிய கடப்­பாடும் அனை­வ­ருக்கும் உள்­ளது. யாரையும் இதில் பங்­கேற்கக் கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை. பங்­கேற்­காமல் விலகி நிற்­பதை நியா­யப்­ப­டுத்­து­வதும் தார்­மி­க­மா­னது அல்ல.

போரின் இறு­திக்­கட்­டத்தில் ஆயி­ர­மா­யிரம் தமி­ழர்கள் கொன்­ற­ழிக்­கப்­பட்­டார்கள் என்­பது உல­க­றிந்த உண்மை. அதனால் தான், இந்த விவ­காரம் ஜெனீவா வரை சென்­றி­ருக்­கி­றது. ஜெனீவா வரை சென்­றி­ருக்­கின்ற இந்த விவ­கா­ரத்தை உண்­மையைக் கண்­ட­றிந்து, நீதியை வழங்கும் நிலைக்குக் கொண்டு செல்­வ­தற்கு தமிழர் தரப்பின் ஒற்­றுமை முக்­கி­ய­மா­னது.

தமிழர் தரப்பு அர­சியல் கருத்து வேறு­பா­டு­களால் பிரிந்து நின்று நிகழ்­வு­களை நடத்­தியும் விமர்­சித்தும் கொண்­டி­ருந்தால், நீதிக்­காகப் போராடும் தமிழ் மக்­களின் குரல் உரி­ய­வாறு சர்­வ­தே­சத்தின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­ப­டாது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை வடக்கு மாகா­ண­சபை ஒழுங்கு செய்­கி­றது. தமிழ் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட வடக்கு மாகா­ண­ச­பைக்கு இந்த நிகழ்வை ஒழுங்­க­மைக்கும் உரி­மையும் இருக்­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை ஒழுங்­க­மைத்த ஒரே கார­ணத்தைக் காட்டிக் கொண்டு இதி­லி­ருந்து விலகி நிற்­பதும், வேறு­பல அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக தனித்­தனி நிகழ்­வு­களை நடத்தி, தமி­ழரின் பலத்தை வெளிப்­ப­டுத்த முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­து­வதும், தமிழர் தரப்­பி­லுள்ள மிகப்­பெ­ரிய பல­வீனம்.

முள்­ளி­வாய்க்­காலில் இன்னும் அதி­க­மான மக்­களை நினை­வேந்தல் நிகழ்­வு­களில் பங்­கேற்க வைப்­ப­தற்கு வடக்கு மாகா­ண­சபை முயற்­சித்­தி­ருக்­க­வில்லை. அத்­த­கைய ஒழுங்­கு­களை வரும் காலத்தில் செய்­வ­தற்கு எந்­த­ள­வுக்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் என்ற கேள்வி இருக்­கி­றது.

அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பால் பொது­வான ஓர் இடத்தில் அனை­வரும் அஞ்­ச­லி­செ­லுத்­து­கின்ற வகையில் இந்த நிகழ்வை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முள்­ளி­வாய்க்கால் என்­பது அர­சியல் கருத்­து­க­ளுக்­காக மோதிக்­கொள்ளும் கள­மல்ல என்­பதை தமிழர் தரப்பு உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்­டிய நேரம் வந்து விட்­டது என்­பதை இம்­முறை நினை­வேந்தல் நிகழ்வில் நடந்­தே­றிய விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் உணர்த்­தி­யி­ருக்­கின்­றன.

ஒரே நோக்­கிற்­காக பல நினை­வேந்தல் நிகழ்­வு­களை நடத்­து­வதை விடுத்து, ஒரே­யி­டத்தில் அனை­வ­ரையும் ஒன்று திரட்­டு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் உணர முடி­கி­றது.

எல்­லோ­ரு­டைய நோக்­கமும் படு­கொலை செய்­யப்­பட்ட மக்­களை நினைவு கூரு­வது மட்டும் தான் என்றால், எதற்­காக பிரிந்து நின்று நினை­வேந்­தல்­களை நடத்த வேண்டும் என்ற கேள்­வியில் நியா­யங்கள் இருக்­கின்­றன.

தமிழர் தரப்பில் ஒற்­றுமைக் குறை­பாடு இருப்­பது ஒன்றும் இர­க­சி­ய­மான விட­ய­மல்ல. ஆயுதப் போராட்ட காலத்தில், முரண்­பா­டான நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருந்­த­வர்கள், செயற்­பட்­ட­வர்கள் கூட பொது இலட்­சி­யத்­துக்­காக பின்னர் ஒன்­றி­ணையத் தவ­ற­வில்லை.

ஆயுதப் போராட்­டத்தின் முடி­வுக்குப் பின்னர், தமி­ழரின் விடு­தலை, அர­சியல் உரி­மைகள், படு­கொலை செய்­யப்­பட்ட மக்­க­ளுக்­கான நினை­வேந்தல் போன்ற பொது­நோக்­கிற்­காக ஒன்­றி­ணைய மறுக்கும் போக்கு நீடித்­தி­ருப்­பது, எட்டு ஆண்­டு­க­ளுக்கு முந்­திய முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லங்­க­ளுக்கு இணை­யா­னது.

தமிழர் தரப்பில் காணப்­பட்டு வந்த பிள­வு­களும், முரண்­பா­டு­களும் சிங்­களப் பேரி­ன­வாத ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கே சாத­க­மாக மாறி வந்­தி­ருக்­கி­றது. இப்­போதும் கூட, தமிழர் தரப்பில் பிரிந்து நின்று செயற்­படும் போக்கைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­போ­வதும், சிங்­களப் பேரி­ன­வாத சக்­திகள் தான்.

சிங்­களப் பேரி­ன­வாதம், தமி­ழரை ஒடுக்­குதல், தமி­ழரின் உரி­மை­களை நசுக்­குதல் என்ற பொது இலட்­சி­யத்தில் கட்சி, அமைப்பு ரீதி­யான வேறு­பா­டு­களை மறந்தே எப்­போதும் செயற்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

ஆனால், தமிழர் தரப்பில் அத்­த­கைய நிலை ஒரு­போதும் இருந்­த­தில்லை. இனி­மே­லா­வது கற்றுக் கொண்ட பாடங்­களில் இருந்து புதிய அணு­கு­மு­றை­களை நோக்கிச் செல்­வ­தற்கு தமிழர் தரப்புத் தயா­ராக வேண்டும்.

ஏனென்றால், ஒவ்­வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­காலில் சுடர் ஏற்றி விட்டுச் செல்­வது மாத்­திரம் தமி­ழர்­களின் கட­மை­யாக இருக்க முடி­யாது. முள்­ளி­வாய்க்கால் பேர­ழி­வு­க­ளுக்­கான நீதியைப் பெறு­வதும், இது­போன்ற அழி­வுகள் இனிமேல் நிக­ழா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­துவம் அவ­சியம்.

போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற கொடூ­ரங்­க­ளுக்கும் குற்­றங்­க­ளுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான முயற்­சிகள் இன்­னமும் வெற்றி பெற­வில்லை. சர்­வ­தேச சமூகம் காட்­டு­கின்ற நெகிழ்வுப் போக்­கினால், முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லங்­க­ளுக்கு நீதியை வழங்கும் செயற்­பாட்டில் இருந்து இலங்கை அர­சாங்கம் தப்­பித்துக் கொண்டு வரு­கி­றது.

இந்த நிலையை மாற்றி, இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக செயற்­ப­டு­வதும் கூட முள்­ளி­வாய்க்­காலில் உயிர் நீத்­தோ­ருக்­காக செலுத்­தப்­படும் அஞ்­சலி தான். அத்­த­கைய பொது­நோக்கில் தமி­ழர்கள் ஒன்­று­படத் தயா­ரில்­லாமல் இருப்­பதும் துர­திஷ்­டமே.

போர் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­க­ளா­கியும் தமி­ழ­ருக்­கான உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை தொடர்­வதும், அழி­வு­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டாத நிலை தொடர்­வதும், முள்­ளி­வாய்க்­காலில் பட்ட காயங்­களை இன்­னமும் ஆறாத நிலையில் தொடரச் செய்­கி­றது.

முள்­ளி­வாய்க்கால் பேர­ழி­வு­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான தமி­ழரின் முயற்­சிகள் ஒரு புற­மி­ருக்க, சிங்­கள மக்­களின் மனங்­களில் மாற்­றங்கள் நிகழ வேண்­டி­யதும் முக்­கி­ய­மா­னது. முள்­ளி­வாய்க்­காலில் அப்­பாவி மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள் என்ற உண்மை சிங்­கள மக்­க­ளாலும் உண­ரப்­பட வேண்டும். ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்.

இம்­முறை முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வில் சில பௌத்த பிக்­கு­க­ளா­யினும் பங்­கேற்­றதை வர­வேற்க வேண்டும். இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் அர­சி­ய­லிலும், சமூ­கத்­திலும் பௌத்த பிக்­கு­களின் செல்­வாக்கு அதிகம். அவர்­களில் பலரே அழி­வு­க­ளுக்கும் கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனாலும், மாறு­பட்ட சிந்­த­னை­யு­டைய பெளத்த பிக்­கு­களும் இருக்கத் தான் செய்­கி­றார்கள் என்­பதை மறுக்க முடி­யாது. அத்­த­கைய, உண்­மையை உணர்ந்து, தமி­ழ­ருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு மிகக் குறைந்தளவிலான பிக்குகள் முன்வந்தாலும் கூட, அது ஆறுதல் அளிக்கக் கூடியது.

இதுவரையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், எத்தகையதாக இடம்பெற்றிருந்தாலும் இனிவரப் போகும் காலங்களிலாவது தவறுகளைத் திருத்திக் கொண்டு, தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுப்பதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் தரப்பினராகட்டும், தம்மை நடுநிலையாளர்களாக காட்டிக் கொள்ளும் தரப்பினராகட்டும், அமைப்பு ரீதியாகச் செயற்படுவோராகட்டும், இந்தப் பொது நோக்கிற்காக- ஒரே ஒரு நாளில் மாத்திரம் ஒன்றாக இணைய உறுதி பூண வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இதைவிட வலுவான வழியொன்று தமிழர் தரப்பிடம் இருக்கும் எனத் தோன்றவில்லை. 

http://www.virakesari.lk/article/20200

Link to comment
Share on other sites

சாவிலும் ஒன்றுபட முடியாத சமூகம்? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒற்றுமையாக ஒரு நிகழ்வாக நடத்தமுடியாமை பற்றி சொல்கிறார்கள் – மு.தமிழ்ச்செல்வன்

mullivaikkal.jpg

கடந்த மே 18 ஆம்  திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் எனும் இறுதி யுத்தம் மிக கொடுரமாக இடம்பெற்ற இடத்தில் மாத்திரம் நான்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆதாவது வடக்கு மாகாண சபை, கஜேந்திரகுமாரின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, அருட்தந்தை ஒருவர் என நான்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
எனவே தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அழிவுநாளைக் கூட ஒற்றுமையாக ஒரு நிகழ்வாக நடத்த முடியாமை பற்றி  அரசியல்வாதிகள் சிலரிடம் கருத்து கேட்ட போது

முதலமைச்சர் வடக்கு மாகாண சபை

timthumb.jpg
ஒருவேளை எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறாத காரணத்தினால்  இருக்கலாம் அடுத்தவருடம் எப்படியாவது இவர்கள் எல்லோரையும் சேர்த்து ஒரு கூட்டத்திற்குள் கொண்டுவர பார்க்கிறன். இதில் யாருடைய பலவீனமும் இல்லை  புரிந்துணர்வு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தாதப்படியால் ஆதாவது முன்னரே எங்களுக்கு சொல்லியிருந்தால் நாங்கள் எல்லோருடனும் கதைச்சு ஏதாவது செய்திருக்கலாம் நாங்கள்  தனித்துவமாக இவற்றைப் பற்றி நினைக்கிறதாலதான் இப்படிப்பட்ட விடயங்கள்  நடக்கின்றது. அடுத்தவருடம் நாங்கள் எல்லோருடனும் பேசி ஒரேயொரு நிகழ்வாக நடத்தப்பார்க்கின்றோம்.

இரா. சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவர்

tna1.jpg

இது பொது மக்களுக்கு மிக மிக முக்கியமான விடயம் பொது மக்களின் உணர்வுகளை நாங்கள் கட்சிகளோ அரசியல்வாதிகளோ அல்லது சமூகத்தை வழநடத்தக் கூடியவர்களோ ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட வேண்டும். அது அத்தியாவசியம் அவ்விதமாக செயற்படுவதற்கு  எல்லோரும் முயற்சிக்க வேண்டும். நாங்கள் பிரிந்து செயற்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல அது மக்களுடைய பலத்தை குறைக்கிறது. மக்களுடைய பலம் அதிகரிக்க வேண்டுமாக இருந்தால் மக்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால் மக்கள் சார்பில் போராட்ங்களை நடத்துகின்றவர்கள் ஒருமித்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் நாங்கள் ஒருபோதும் குழப்பமாட்டோம். அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்

மாவை சேனாதிராஜா பா.உ

mavai-senathirajah.jpg
மே 18 இல் முள்ளிவாய்க்கால்  இறுதி போரில்  பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இடம் என்பதாலும் எங்கள் மக்கள் இந்த நாளை நினைவு கூறுவது ஒரு வரலாற்று பதிவாக இருக்கின்றது. உலகத்தில் இப்படிதான் பலர் நினைவு கூர்ந்து வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சியை நாம் எல்லோரும் அழைத்தது போல் எல்லோரும் ஒரே நாளில் ஒரே இடத்தில் நினைவஞ்சலியை செலுத்த வேண்டிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் விரும்பினாலும் மக்களுடைய எண்ணம் அல்லது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பிரிந்து நின்று நினைவஞ்சலியை செலுத்துவது பாதிப்பை எங்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனினும்  மக்கள் இந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வந்து சுடரேற்றி தங்களின் அஞ்சலியை செலுத்துகின்ற நேரத்தில் எல்லோரும் தங்களின் உடன் பிறப்புகளுக்காக இறந்த அந்த மக்களுக்காக அவர்களின் சாந்திக்காக இங்கு எல்லோரும் ஒற்றுமையாக பிரார்த்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளைதான் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலும் விடுகின்றோம். வரும் காலத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இதே இடத்தில் எல்லோரும் தங்களின் நினைவஞ்சலியை செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

குருகுலராஜா கல்வி அமைச்சர் வடக்கு

kurukularajah-300x200.png
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கு மாகாண சபை உருவாக்கம்  பெறும் மட்டும் முள்ளிவாய்க்காலை கொண்டாட வேண்டும் என்று ஒருத்தரும் பெரிசா யோசிக்கவில்லை யோசிக்க முடியவில்லை அதற்கான தருணம் கிடைக்கவில்லை ஆனால் இப்ப அதற்கான தருணம் கிடைத்திருக்கிறது. எனவே ஒவ்வொன்று ஒவ்வொன்றாகதான் அணுக வேண்டும் இப்ப சென்ற முறையைவிடவும் நிறைய மக்கள் வந்திருக்கின்றார்கள் பல இடங்களிலும் இருந்து வந்;திருக்கின்றார்கள். அடுத்த வருடம் இந்த இடத்தில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு அதற்கான ஒழுங்கமைப்பை நாங்கள் முன் கூட்டியே செய்ய வேண்டும். அதனை வடக்கு மாகாண சபை செய்வதற்கு நாங்கள் தீர்மானிக்க வேண்டும். முதலமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடைய செய்தியை அறிவித்திருந்தார் எனவே அதற்கு ஊடாக மக்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் ஏற்கனவே இப்படியொரு ஒழுங்கமைப்பு இருக்கிறது அதனுடன் சேர்ந்து நாங்கள் செய்யவேண்டும் என்று உணர்ந்திருக்க வேண்டும் ஒவ்வொரும் தங்கள் தங்கள் ஊர்களில்  ஏதாவது செய்யப் போனால் அதில் ஒரு பிழையும் இல்லையே? எனவே தனித்துவமாக செய்வதனால் பிழைகள் ஒன்றும் இல்லை ஆனால் இது தொடர்பில் ஒன்று கூடுகின்ற போது அது பலத்த அர்தத்தை கொடுக்கும்.

ஜங்கரநேன் விவசாய அமைச்சர் வடக்கு

Iyngaranesan.jpg
முள்ளிவாய்க்கால் பேரழிவு என்பது ஒட்டுமொத்த தமிழினத்தினதும் துயரநாள் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டது என்று சொன்னாலும் கூட ஆயுதப் போராட்டத்தின் அந்த முடிவுதான் எங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய திறவு கோல்.அந்த திறவு கோலை என்னைப் பொறுத்தவரை துரதிஸ்டவசமாக சரியானமுறையில் பயன்படுத்தப்படவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். இது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான நிகழ்வு அல்ல ஒட்டுமொத்தமாக உலகத்தில் வாழ்கின்ற  தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு துயரநாள் அதேநேரம் இந்த துயரநாள்தான் எங்களின் அடுத்தக் கட்டத்திற்கான தொடக்க நாளும் இதனை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் வளர்ச்சிக்காவும் தங்களுடைய பிரபல்யத்திற்காகவும் பயன்படுத்த முனைகின்றதனால்  உண்மையில் இந்த நிகழ்வில் அதிகளவு  இதைவிட அதிகமானவர்கள் வந்திருக்க வேண்டும் வராமைக்கு அதுவும்  ஒரு காரணம். அடுத்த முறையாவது முதலமைச்சர் குறிப்பிட்டது போன்று சாதி சமய பேத வர்க்க கட்சி பேதங்கள் கடந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நிற்பதற்கான சூழல் உருவாக வேண்டும். இந்த நினைவேந்தல் இதைவிட மிக சிறப்பாக நடந்திருக்கவேண்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்க வேண்டும் ஆனால் அது இடம்பெறவில்லை ஒற்றுமையின்மையே இதற்கு காரணம். ஒற்றுமையின்மை என்பதை விட ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதே இதற்கு காரணம்.

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சர் வடக்கு மாகாணம்

sathyalingam.jpg
உயிர்நீத்த  ஆன்மாக்களுக்கு ஏற்பாடு செய்த நிகழ்வை சில சக்திகள் வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பியிருக்கின்றனர் எனறே நான் கருதுகிறேன். அவர்கள் யார்  அவர்களின் பின்னணி என்ன என்ற விடயங்களை நாம் அறிந்துள்ளோம், மக்களும் அவர்களை அறிந்துள்ளனர் உண்மையில் இந்த நிகழ்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்துவருகின்றோம். இந்த முறை அஞ்சலி செலுத்துவதற்கான எமது உரிமை பாரியளவில் தடுக்கப்படாத நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த உறவுகளுக்கு அஞ்சலி  செலுத்துவதற்கே தீர்மானித்திருந்தோம். மேலும் இந்த முள்ளிவாய்க்கால் திடலை நாம் உறவுகளுக்கு அஞ்சலி  செலுத்துவதற்கான உரித்துடைய இடமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே பெறமுடிந்துள்ளது. இந்த இடத்தில் நிரந்தரமாக நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம் ஆனால் சில தீய சக்திகள் அதனை குழப்பிவிட்டன. எனினும் எமது மக்களுக்காக வருடாவருடம் ஏற்பாடாகும் இந்த உன்னத அஞ்சலி நிகழ்வு தொடரும்.

செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர்

selvam.jpg
அது எங்களுடைய துர்ப்பாக்கிய நிலை மாவீரர் நாள் கூட இரண்டு மூன்று என்று பிரிந்து நடக்கிறது வெளிநாட்டில் இங்கதான் போனவருடம் மாவீரர் நாளை கூட ஒற்றுமையாக  ஒன்றாக எல்லா இடங்களிலும் வடிவாக செய்தனாங்கள்.இந்த நிகழ்வு ஒரு புனிதமான நிகழ்வு ஆளுக்காள் முண்டியடித்துக்கொண்டு இந்த நிகழ்வை செய்ய நினைப்பது இறந்த மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகம் அடுத்தமுறை வருகின்ற நிகழ்வை நாங்கள் ஒன்றாக செய்ய வேண்டும் ஒன்றாக சேர்ந்து செயற்பட்டால்தான் இறந்து ஆத்மாக்கள் சாந்தியடையும் எங்களது இனத்தின் இலட்சியங்கள் நிறைவேறும்.

சித்தார்த்தன் பா.உ.

sithar.jpg
உயிர்நீத்த ஆன்மாக்களுக்காவே நாம் அஞ்சலியை செய்கின்றோம் இதில் தனித்தனியாக என்ற பிரிவுகள் அவசியமற்றவை.அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றமை மிகவும் கவலைக்குரியது. இதுவொரு அஞ்சலி நிகழ்வாகும் அரசியல் ஆதாயம் தேடும் இடமல்ல இந்த நிகழ்வை அரசியல் சாயமற்ற ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்.ஆகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக சிவில் மற்றும் அனைத்து தரப்புக்களையும் சார்ந்த ஒரு ஏற்பாட்டுக்குழுவை அமைத்து அதனூடாக உயிர்நீத்த எமது உறவுகளுக்கான நிகழ்வாக மட்டும் முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகிறது

சரவணபவன் பா.உ.

saravanapavan.jpg
உண்மையாகவே இது மிகவும் கவலையான விடயம் ஏன்னென்றால் அவ்வளவு பேரும் தமிழ் மக்களுக்காதான் தங்களை அர்ப்பணித்தார்கள் அந்த வகையில் இந்த இடத்தில் கட்சி பேதமின்றி சகலரும் ஒற்றுமையாக நின்றிருக்கவேண்டும். இன்றைக்கு பாருங்கள் மோடி வருகைக்காக மலையகத்தில் எதிரும் புதிருமாக நின்ற கட்சிகள் ஒன்றாக நின்றார்கள் அதனால் மக்களும் வெள்ளமாக திரண்டார்கள். அதேமாதிரி நாங்களும் ஒன்றாக நின்றிருக்க வேண்டும் ஆனால் எந்த விசயத்தையும் நாங்கள் ஒன்றாக செய்தது இல்லை இதுதான் அடிப்படை. எங்களுடைய விடயங்கள் இந்தளவுக்கு பின்னடைவுக்கு செல்வதற்கு காரணம் இதுதான். நாங்கள் ஒற்றுமையாக நின்றால் பெரும்பான்மையினமும், சிங்கள் பேரினவாதிகளும் பயப்படுவார்கள். அந்த இடத்தை நாங்கள் இன்னும் உருவாக்கவில்லை. அதை உருவாக்க வேண்டும் வடக்;குமாகாண முதலமைச்சர் சொல்லியிருக்கின்றார் கட்சி பேதமின்றி அனைவரையும் வரசொல்லி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எல்லோரும் வந்திருந்தார்கள். இதுவொரு கட்சி அரசியல் இலாபம் தேடும் இடமல்ல உணர்வுபூர்வமாக சிந்தித்தால் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும்  ஒன்றாகதான்  வந்திருக்க வேண்டும். இதை வைத்து பார்த்தால் நாங்கள் ஒற்றுமையாக ஒன்றை அடைவோமாக என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை பொறுத்தவரை அவர்கள் எதை எடுத்தாலும் தனியாக செல்வது எதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பது எல்லாவற்றையும் குழப்புவது  ஒன்றுக்கும் இணங்கிபோகாமல் செல்வது வழக்கமாகிவிட்டது இது இப்படியே போனால் இனி வரும் சமூதாயமும் இதையே பின்பற்றப்போகிறது. இது தொடர்ந்தால் நாங்கள் அறுபது வருடமல்ல அறுநூறு வருடங்கள் சென்றாலும் எதையும் அடையப்போவதில்லை.

ரவிகரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்

raviharan.jpg
மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைப்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது தேசியக் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் கீழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்தான் வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டது. அந்த வடக்கு மாகாண சபையின் ஊடாக நாங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் எந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் இதை குழப்ப வேண்டும் என்ற நோக்கதோடோ என்னவோ ஆங்காங்க வேறு சிலர் நிகழ்வை செய்தது பொருத்தமற்றது. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார் ஆதாவது இன அழிப்பு தீர்மானத்தை கொண்டுவந்து ஜநா சபை வரை கொண்டு செல்லப்பட்டது இவ்வளவு தகுதிகளுமே வடக்கு மாகாண சபை நடத்துவதற்கு போதுமானது என எண்ணுகின்றேன். எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் ஓரே குரலில் ஒரே தளத்தில் எங்களுடைய அஞ்சலிகளை செலுத்துவதுதான் சாலச்சிறந்தது இது மக்களுக்கான நிகழ்வு  தனியே அரசியல் கட்சிகளுக்கானது அல்ல.

சிவிகே. சிவஞானம் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்

sivagnanam-srilanka-net.jpg
இது எங்களுடைய இனத்தின் இயல்பு குணம். ஒற்றுமை என்பது எப்பொழுதும் இல்லை 1916 இலும் இல்லை 2017 இலும் இல்லை இதுதான் சுபாவம் இது துரதிஸ்டவசமானது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில்தான் இது நடந்தது மகிந்த ராஜபக்ஸ இருந்த 2014 இலும் நாங்கள்தான் செய்தோம்.இதில் கட்சி பேதங்கள் ஒன்றும் கிடையாது. வடக்கு மாகாண சபை என்பது கட்சி பேதங்கள் அற்ற ஒரு சபை அங்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்ற ஒரு மாகாண சபை. மாகாண சபை முறைமை என்பது இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்;ட ஒரு விடயம் இன்றைக்கு எனவே அதில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக செய்யாதது கவலைக்குரிய விடயம்.

சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்னாள் பா.உ.

4a4482542c0b570b2686b3bd59967c8e_XL.jpg
இது உண்மையாகவே  மனவருத்தப்படக் கூடிய ஒரு விடயம் இறந்துபோனவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்காக போராடியவர்களும், பொது மக்களும் ஆகவே அவர்களை நினைவு கூறவேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொரும் செய்யவேண்டிய செயற்பாடு இங்கு பிரிந்து நின்று வேறு வேறு மூளைகளில் நின்று தீபம் ஏற்றுவதோ நினைவு கூறுவதோ சரியான நடைமுறையாக இருக்காது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இதனை ஒரு நிகழ்வாக நடத்தவேண்டும் என்று கேட்டிருகின்றோம். ஆனாலும் கூட விரும்பியோ விரும்பாமலோ பலக் குழுக்களாக பிரிந்திருந்து நிகழ்வை நடத்துவதை பார்க்க கூடியதாக இருக்கிறது. இன்று நானும் அறிகிறேன் நான்கு ஜந்து அணிகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல குறைந்தப் பட்சம் அடுத்த ஆண்டிலிருந்தாவது நினைவேந்தல் நிகழ்வை ஒரு பொது நிகழ்வாக தமிழ் மக்கள் எல்லோரும் இணைந்து நடத்தும் ஒரு நிகழ்வாக மாகாண சபையோ அல்லது நினைவேந்தல் நிகழ்வை நடத்தும்  ஒரு பொது அமைப்பை உருவாக்கியோ இந்த நினைவேந்தல் நிகழ்வை நடாத்த வேண்டும் அதுதான் தமிழ் மக்களுக்கு சிறப்பாக இருக்கும்.இறந்து போனவர்கள கௌரவிப்பதாகவும் இருக்கும்

தவராசா  வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர்

thavarasa-epdp-e1450185562352.jpg
முள்ளிவாய்க்காலில் தங்களின் உயிர்களை பலிகொடுத்தவர்களை நினைவு கூறும் இந்த நிகழ்வை கூட தமிழ் மக்கள் ஒருமித்து ஒரே குரலில் அல்லது ஒருமித்த ஒரு நிகழ்வாக நடத்த முடியாமல் அரசியல்  நோக்கங்களுக்காக ஒவ்வொருவரும் பிரிந்து நின்று நடத்துவது கவலைக்குகரிய விடயம். இறந்த மக்களுக்கு உண்மையாக அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் எல்லோரும் ஒருமித்து இந்த அஞ்சலியை அவர்களுக்கு செலுத்த வேண்டும்

சார்ல்ஸ் நிர்மலநாதன் பா.உ

chanrles-nirmalanathan.jpg
எனக்கு தெரியாது இந்த நிகழ்வை ஒழுங்குப்படுத்தினவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் எனக்கு முள்ளிவாய்க்காலில் வேறு நினைவேந்தல் நிகழ்வு நடப்பது தெரியாது யார் யார் செய்கிறார்கள் என்று தெரியாது ஒருசிலர் செய்யிறது பற்றி எனக்கு தெரியாது; அவர்கள் செய்வது பற்றி சொல்லவேண்டிய தேவையும் எனக்கு இல்லை.

சிவசக்தி ஆனந்தன் பா.உ

sivashakthy-ananthan.jpg
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கூட ஒன்றாக செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.  இங்கு நான்கு ஜந்து இடங்களில் கூட  இறந்த மக்களுக்காக அஞ்சலி செய்யகின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மையில் எதிர்காலத்திலாவது கட்சி பேதங்களை விட்டு எல்லோரும் ஒன்றுபட்டு இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடத்த ஒரு பொது அமைப்பாக தாபன மயப்படுத்தப்பட்டு வருடம் தோறும் நடக்கின்ற இந்த தினங்களை அனுஸ்டிக்க வேண்டும் இதற்காக பதிவுசெய்யப்பட்ட ஒரு பொது அமைப்பை உருவாக்க வேண்டும் முதலமைச்சர்  அவர்கள் அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும்.

சிறிதரன் பா.உ

unnamed-1006.jpg
இது தொடர்பில் நான் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை கட்சியின் தலைவர்  சம்மந்தன்  சொன்னால் சரி அதுவே என்னுடைய கருத்தும் எனவே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை

சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்

a83bfefe824fe8aa74ff4409e210e51a_XL.jpg
இது தமிழர்களிடையே இருக்க கூடிய ஒரு சாபக்கேடு இது தமிழர்களின் தேசிய துக்கநாள் இது ஒரு செத்தவீடு கலியாணவீடுகளில் நாங்கள் பிரிந்து நின்று வேறுவேறாக நிகழ்ச்சிகளை மேடைகளை அமைக்கலாம். ஆனால் இந்த தேசிய துக்கநாளில் எதிர்வரும் காலங்களிலாவது எல்லோரும் ஒற்றுமையாக ஓரே இடத்தில் கட்சி மத பிரதேச வேறுபாடுகளை மறந்து  அனுஸ்டிக்கின்ற நிலைமை உருவாகினால்தான் தமிழர்களுக்கு  எதிர்காலம் உண்டு வாழ்வுண்டு  ஓரு வாரம் என்று இருக்கின்ற போது நீங்கள் தனித்தனியாக பிரிந்து நின்று சிறு நிகழ்வுகளான செய்து கடைசி ஒரே இடத்தில் அத்தனை பேரும்  செய்யக் கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் கட்சி தலைவர்கள் உட்பட சம்மந்தப்பட்டவர்கள்  சமூக அமைப்புக்கள் மத அமைப்புக்கள்  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்

அனந்தி சசிதரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்

hqdefault.jpg

இந்த முள்ளிவாய்க்கால் துன்பத்தை சந்தித்தவள் என்ற வகையில் நாங்கள் சாவிலும் கூட ஒன்று பட முடியாதவர்களாகதான் இருக்கின்றோம் இந்து முள்ளிவாய்க்கால் அவலத்திற்குள் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் போது சாதி சமய மத பேதங்கள் பார்க்கவில்லை அவற்றுக்குள்ளிருந்துதான் நாங்கள் தப்பினோம். ஆனால் இன்றைக்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் எல்லாவற்றையும் சின்னாபின்னமாக சிதறடிச்சு அவர்கள் நினைச்ச மாதிரியான நிகழ்வுகளை செய்யினம். இது தொடர்பில் சில தவறுகள் எங்களிடம் இருக்கிறது. வடக்கு மாகாண சபையின் நிகழ்வாக ஒன்றுபடுத்தியிருந்தாலும் கூட அனைத்து கட்சியினருடனும், சிவில் அமைப்புகளுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தையை நடத்தி எல்லோரையும் ஒன்றுபடுத்தி கொண்டு வந்திருக்க வேண்டும் ஆனால் அதனை முதல்வர் தவறவிட்டுள்ளார் நிச்சயம் பேசியிருந்தால் அவர்களும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருப்பார்கள். இவ்வாறு ஒற்றுமையாக செய்ய முடியாத நிலைமையை  சாவிலும் கூட ஒன்றுபடாத இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி அடைகிற வகையில் செய்திருகின்றோம் என்பது கவலையே. ஆனால் காலப்போக்கில் நாங்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வையாவது ஒற்றுமையாக செய்யக் கூடிய சூழலை உருவாக்க வேண்;டும்

மாகாண சபை உறுப்பினர் ஒருவர்

இன்று முள்ளிவாய்;க்கால் நினைவேந்தல் அஞ்சலிக்காக நாங்கள் எலலோரும் ஒன்று கூடியிருகின்றோம். இது வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முதலமைச்சரின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. எல்லோரும் ஒற்றுமையாக இனமத பேதங்கள் இன்றி கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார் இருந்தும் பல பிரிவுகளாக இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது இது மிகவும் வருந்ததக்க விடயம்.இனிவரும் காலங்களிலாவது எல்லோரும் ஒற்றுமையாக இந்த நிகழ்வை நடத்த வேண்டும் அத்தோடு எல்லோரும் தங்களின் அரசியல் இலாபங்களை இந்த நிகழ்வில் காட்டக்கூடாது இது இன அழிப்பு சம்மந்தப்பட்ட விடயம் எனவே இனிவரும் காலங்களில் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும

http://globaltamilnews.net/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.