Jump to content

மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம்


Recommended Posts

மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம்

 

இன­வாதம் தொடர்ச்­சி­யாக தலை­வி­ரித்­தாடும் இலங்­கையில் அதன் வளர்ச்­சி­வேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பார­தப்­பி­ர­த­மரின் இலங்கை விஜ­யத்தின் பின்னர் எழும் பல இன­வாத கருத்­துக்கள் இந்­நாட்டில் எப்­போதும் ஒரு சமா­தா­னத்­திற்­கான வழி இல்லை என்­ப­தற்கு எச்­ச­ரிக்கை விடுப்­ப­தாக இருக்­கின்­றது. இதன் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தென்­னி­லங்­கையில் தலை­வி­ரித்­தா­டு­கின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் உரு­வ­கித்து வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பார­தப்­பி­ர­தமரின் மலை­யக விஜ­யத்தின் போது அறி­வித்த கருத்­துக்கள் கொழும்பு அர­சி­ய­லிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பத்­தா­யிரம் வீடுகள் உட்­பட இதர சில விட­யங்­களை மலை­ய­கத்­துக்கு வழங்­கு­வ­தாக அவ­ரது அறி­வித்­தலின் பின்னர் பல இன­வா­திகள் தமது கருத்­துக்­களை கக்க தொடங்கி ­விட்­டனர். இந்­தி­யாவில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரான மலை­ய­கத்­தமிழ் மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­க­ளையும் அவர்­களின் அடிப்­படை அர­சியல் இருப்­புக்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தார்­மீக பொறுப்பும் கடப்­பாடும் இந்­தி­யா­விற்கு இருக்­கின்­றது.

மலை­யக மக்­களின் இருப்­பினை கேள்­விக்­கு­றி­யாக்­கிய ஸ்ரீமா – சாஸ்­தரி ஒப்­பந்­தத்தின் பின்னர் மலை­யகத் தமிழ் மக்கள் இந்­நாட்டில் சனத்­தொ­கையில் இரண்­டா­வது இடத்­தி­லி­ருந்து நான்­கா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்ட விடயம் யாவரும் அறிந்­ததே. அந்த ஒப்­பந்­தமே அம்­மக்­களின் அர­சியல் இருப்­பினை கேள்­விக்­கு­றி­யாக்­கி­ய­துடன் இன அடை­யா­ளத்­தையும் கேள்­விக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இம்­மக்கள் இன்று இலங்­கையில் இருந்­தாலும் இவர்கள் இலங்கைத் தமி­ழர்­க­ளாக முழு­மை­யாக இன்று அங்­கீ­க­ரி­கப்­பட்­டுள்­ளார்­களா? இப்­படி பல தரப்­பட்ட கேள்­வி­களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது இவ்­வா­றி­ருக்க பார­தப்­பி­ர­த­மரின் வரு­கையின் பின்­ன­ரான சில விட­யங்­க­ளைப்­பற்றி இக்­கட்­டு­ரையில் குறிப்­பி­டு­கின்றேன்

''பாரதப் பிர­தமர் மோடி மலை­ய­கத்­துக்கு வரு­வ­தனால் மாத்­திரம் எல்லாம் நடந்­து­வி­டுமா?''. இவ்­வா­றா­ன­தொரு கேள்வி அவர் இலங்கை வருமுன் பல­ரது மன­திலும் எழுந்­தது. அது பற்­றிய கருத்து பரி­மாற்­றங்கள் வலைத்­த­ளங்கள், சமூக ஊட­கங்­க­ளிலும் ஆதிக்கம் செலுத்­தி­ன. ஆனால், அவ­ரது விஜ­யத்தின் பின்­னரே 'மலை­யகம்' இன்று சர்­வ­தே­ச­ரீ­தியில் பேசும் அள­வுக்கு வந்­துள்­ள­தனை கடந்­த­வா­ரத்தில் இந்­தி­யாவில் உள்ள பிர­பல ஊட­கங்­களில் மலை­யகம் தொடர்­பாக வெளி­யான பல கட்­டு­ரைகள், நேர்­கா­ணல்கள் என்­பன வெளிப்­ப­டுத்­தி­ன.

ஏன்? உள்­ளூரில் உள்ள ஆங்­கில ஊட­கங்­களில் கூட மலை­யகம் பற்­றி­ய­தான விடயம் அழுத்­த­மாக பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

எப்­ப­டியோ ஒரு பெருந்­த­லை­வரின் வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க விஜ­யத்­தினால் இவ்­வ­ளவு காலமும் 'பின்­தங்­கிய' சமூ­க­மாக பேசப்­பட்டு வந்த மலை­யகம் வெளி உல­குக்கும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

அந்த பின்­தங்­கிய சமூ­கத்தின் வளர்ச்சி குறித்து அவர்­களின் நலன் குறித்து அதி­க­ளவு கரி­சனை கட்ட வேண்­டிய இந்­தியா பல அறி­விப்­புக்­களை விடுத்­துள்­ள­மை­யா­னது இங்­குள்ள இன­வா­தி­க­ளுக்கு பெரும் வாத­மா­கவே இருந்­து­விட்­டது. இதே அறி­விப்­பினை தெற்­குக்கு அறி­வித்­தி­ருந்தால் அவர்­களின் மனம் எப்­படி குளிர்ச்­சி­ய­டைந்­தி­ருக்கும் என்று சிந்­தித்துப் பார்க்க வேண்­டிய ஒரு தேவையும் இங்கு எழு­கி­றது. ஆனால், இந்த அறி­விப்பின் பின்னர், ''தெற்­கிற்கு உத­வினால் சகோ­த­ரத்­துவம் ,மலை­ய­கத்­திற்கு உத­வினால் இன­வாதம்'' எனும் தொனியில் கருத்­துக்கள் வெளி­யா­கின்­றன. பொது­வாக தமி­ழர்­க­ளுக்கு வெளி­நா­டுகள் கரி­சனை காட்ட முனையும் போது தென்­னி­லங்கை கொதித்­தெ­ழும்­பு­வது புதி­தான விட­யமும் அல்ல.

மலை­ய­கத்­துக்­கான பத்­தா­யிரம் வீடுகள், இதர வச­திகள் வழங்­கு­வது பற்றி மோடியின் அறி­விப்பின் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கம்மன்பில கூறிய கருத்­துக்கு அமைச்சர் மனோ­க­ணேசன் விடுத்­தி­ருந்த அறிக்­கையின் ஒரு பகு­தியை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும் ''மோடி, மலை­யகம் சென்று, தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 10,000 வீடு­களை அமைத்து தர உறு­தி­ய­ளித்­துள்ளார். அதேபோல், இலங்­கையில், இந்­தியா ஏற்­க­னவே வழங்­கி­வரும் இல­வச அம்­புலன்ஸ் என்ற மருத்­துவ வாகன வச­தியை இன்னும் ஏழு மாகா­ணங்­க­ளுக்கு விஸ்­த­ரிப்­பது தொடர்­பா­கவும் அறி­வித்­துள்ளது. இவை பற்­றிய பின்­ன­ணி­களை அறி­யாமல், புரிந்­து­கொள்ள முயற்சி செய்­யாமல், இத்­த­கைய அறி­விப்­பு­களை செய்ய நரேந்­திர மோடி யார்? இலங்கை இந்­தி­யாவின் 30ஆவது மாநி­லமா? என்ற கேள்­வி­களை எழுப்பி, அதன்­மூலம் இவற்­றுக்கு தவ­றான அர்த்­தங்­களை கற்­பித்து, சிங்­கள மக்­களை தூண்­டி­விடும் முக­மாக, இன­வாத பைத்­தியம் பிடித்த நிலையில் கூட்டு எதி­ரணி எம்.பி உதய கம்­மன்­பில பேசி வரு­கிறார்'' என்று அமைச்­சரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

பார­தப்­பி­ர­த­மரின் விஜ­யத்தின் பின்னர் சிங்­கள பத்­தி­ரி­கைகள், சமூக ஊட­கங்­களில் பெரு­ம்பான்மை தரப்­பி­னரால் விடுக்­கப்­பட்ட கருத்­துக்கள் அவர்கள் எவ்­வா­றான ஆத்­தி­ரத்தில் இருக்­கின்­றார்கள் என்று எண்­ணிக்­கொள்­ளலாம். முஸ்­லிம்­க­ளுக்கு அரபு நாடுகள் வீடுகள் கட்டிக் கொடுக்­கின்­றன, வடக்கு கிழக்­கி­லுள்­ள­வர்­க­ளுக்கு டயஸ்­போரா காரர்கள் கட்டிக் கொடுக்­கி­றார்கள், மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு இந்­தியா கட்­டிக்­கொ­டுக்­கி­றது. சிங்­க­ள­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யொரு அநி­யாயம் நடக்­கி­றது என்­ப­தையும் இத்­த­ளங்­களில் சுட்­டிக்­காட்­டத்­த­வ­ற­வில்லை.

இது­வரை இந்­தியா இலங்­கைக்கு வழங்­கிய உதவி நட­வ­டிக்­கை­களில் மலை­ய­கத்­துக்கு எவ்­வ­ளவு வந்து சேர்ந்­தது என்று மலை­ய­கத்தில் இருந்து கேள்வி தான் எழுப்­பி­யி­ருக்­கி­றோமா...? ஆம்!!! பத்­தா­யிரம் வீடுகள் குறித்து பேசு­வ­தற்கு முன்பு இது­வரை இந்­தியா இலங்­கைக்கு எவ்­வா­றான உத­வி­களை வழங்­கி­யுள்­ளது என்­பது பற்றி குறிப்­பிட வேண்­டிய தேவையும் இங்கு எழுந்­துள்­ளது.

யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு 458 மில்­லியன் அமெ­ரிக்க டொலர், இந்­திய வீட­மைப்­புத்­திட்­டத்­திற்கு 1372 கோடி இந்­திய ரூபாய்கள். (இதில் 46,000 வடக்கு, கிழக்கு பகு­திக்கு – 4000 மலை­யகப் பகு­திக்கு) நடை­பெறும் திட்­டங்கள்,- யாழ்ப்­பா­ணத்தில் கலா­சார மத்­திய நிலையம், திருக்­கே­தீஸ்­வரம் ஆல­யத்­தினை புன­ர­மைத்தல், வடக்கு, கிழக்கு பகு­தியில் 3000 மழை நீர் சேமிப்­புத்­திட்டம், யுத்தத்தின் பின்னர் வடக்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, சுனாமியின் பின்னர் தெற்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, யாழ்ப்­பா­ணத்தில் கைவி­னைப்­பொ­ருட்­களின் உற்­பத்­தியை செய்யும் கிரா­மங்­களை விருத்தி செய்தல், மட்டு. போதனா வைத்­தி­ய­சா­லையில் சத்­தி­ர­சி­கிச்சை பிரிவு ஒன்றை அமைத்தல், இலங்கை மாண­வர்­க­ளுக்கு இந்­தி­யாவில் புல­மைப்­ப­ரிசில் பரீட்சை (இதில் சிங்­கள மாண­வர்­களும் அடக்கம்), மாத்­தளை, மகாத்மா காந்தி நிலையம், மேல்­மா­கா­ணத்­திற்கு மாத்­திரம் இந்­தியா வழங்கி வந்த அம்­புலன்ஸ் சேவைத் திட்டம் இப்­போது எல்லா மாகா­ணங்­க­ளுக்கும் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

றுஹுணு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ரவீந்­தி­ரநாத் தாகூரின் பெயரில் கேட்போர் கூடம், அம்­பாந்தோட்­டையில் கைவி­னைப்­பொ­ருட்­களின் உற்­பத்­தியை செய்யும் கிரா­மங்­களை விருத்தி செய்தல், அம்­பாந்தோட்­டை­யில் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் மற்றும் சைக்­கிள்கள் போன்­ற­வற்றை வழங்­கி­வைத்­தமை, பொல­ன­று­வையில் பல்­லின மாண­வர்கள் கற்கும் பாட­சாலை ஒன்றை விருத்தி செய்தல் இந்த திட்­டங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது மலை­ய­கத்­திற்­கான 10000 வீடுகள் என்­பது இந்­திய உத­வித்­திட்­டத்தின் சிறு பகு­தியே..

இந்­தியா இலங்­கையில் காலங்­கா­ல­மாக தனது உரித்தை நிலை­நாட்­டவும் தனது கையை வைத்­தி­ருப்­ப­தற்கும் இலங்­கையின் பிரச்­சி­னை­களை கையாண்டு வந்­தி­ருக்­கி­றது. யுத்­தத்தின் பின்னர் இப்­போது மீண்டும் மலை­ய­கத்தில் இந்­தியா நுழைந்­தி­ருக்­கி­றது, மலை­ய­கத்­துக்கு வந்த முத­லா­வது இந்­தியப் பிர­தமர் மோடி. நேரு இலங்கை வந்­தி­ருந்த போது அவர் பிர­த­ம­ராக இல்லை என்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது. தனது பிடியை வைத்­தி­ருக்க வேண்­டு­மென்றால் முழு­மை­யாக அந்த பிரச்­சி­னையை இந்­தியா தீர்க்­கவும் விரும்­பாது. தீர்க்க விரும்­பி­யதும் இல்லை. எனவே தான் இந்­தியா மலை­யக விட­யத்­திலும் இம்­முறை நிரந்­தர அர­சியல் தீர்வு விடயம் குறித்து ஒன்றும் பண்­ண­வு­மில்லை. அதற்­கான சிறு சமிக்ஞையைக் கூட காட்­ட­வு­மில்லை. ஆனால், நிவா­ரண விட­யங்­களில் அது கவனம் செலுத்­தி­யி­ருக்­கி­றது.

காலங்­கா­ல­மாக இந்த நிவா­ரண அர­சி­ய­லுக்குள் சிக்கித் தவித்து, அடிப்­படை அர­சியல் தீர்வை அடுத்­த­டுத்த நிலைக்கு தள்­ளிய கைங்­க­ரி­யத்தை மலை­யக அர­சியல் தலை­வர்­களும் காலங்­கா­ல­மாக செய்து வந்­தி­ருக்­கி­றார்கள். “நிவா­ரண அர­சி­ய­லுக்கு” மலை­யக மக்கள் பழக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை இந்­தி­யாவும் நன்­றாக தெரிந்­துதான் வைத்­தி­ருக்­கி­றது. அது மக்கள் மத்­தியில் எவ்­வா­றான வர­வேற்பை கொடுக்கும் என்­ப­தையும் அறிந்து வைத்­துள்­ளது.

ஏன், அதற்­கான தேவையும் இருக்­கவே செய்­கி­றது. ஆனால், அதைத் தாண்டி ஏன் இந்­தி­யாவால் எதையும் செய்ய முடி­வ­தில்லை என்­பதே நமக்கு இருக்கும் அடுத்த கேள்வி. பேரி­ன­வா­த­ம­யப்­பட்ட இலங்­கையின் அர­சியல் இயந்­திரம் மலை­யக மக்­க­ளுக்கு இத்­தனை காலம் செய்து கொடுக்­கா­ததைத் தான் இன்­னொரு நாடு வந்து செய்து தந்து போயி­ருக்­கி­றது.

சிங்­கள மக்­களின் வரிப்­ப­ணத்தில் அல்ல இந்த வீடு, ஆஸ்­பத்­திரி, கல்வி போன்ற அடிப்­படை வச­திகள் செய்­து­கொ­டுக்­க­ப்ப­டு­கின்­றன என்­ப­தையும் பேரி­ன­வாத சக்­தி­க­ளுக்கு நினை­வு­றுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

மலை­ய­கத்தில் நிலவும் உயர்­தர பாடங்­க­ளுக்­கான கணித, விஞ்­ஞான பிரி­வுக்­கான பட்­ட­தாரி ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையின் கார­ண­மாக இந்­தி­யா­வி­லி­ருந்து தரு­விக்க கல்வி இராஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் கோரி­யி­ருந்தார். மோடி விஜயம் செய்த காலத்­தி­லேயே இந்த செய்­தியும் வெளி­யா­கி­யிருந்­ததால் ஒட்­டு­மொத்த இந்­திய எதிர்ப்பு வாதத்­துடன் இத­னையும் இன­வா­திகள் சேர்த்துக் கொண்­டார்கள். இந்­தி­யாவின் கால­ணி­யாக இலங்­கையை ஆக்­கி­வி­டு­வதில் மலை­யகத் தலை­வர்கள் எத்­த­னிக்­கி­றார்கள் என்றும் பிரச்­சாரம் செய்­யப்­பட்­டது.

இலங்­கையின் அர­சியல் இயந்­திரம் மலை­யக மக்­க­ளையும் சமத்­து­வ­மாக நடத்­தி­யி­ருந்தால் ஏன் இந்த உத­வி­களை ஏற்க வேண்டும். சாதா­ரண அடிப்­படை உரி­மை­க­ளுக்­கா­கவும் போரா­டிக்­கொண்டே இருப்­பதை வாழ்க்­கை­யாகக் கொண்ட மக்­களின் முன் உள்ள தெரிவு தான் என்ன. நாட்டில் சுதந்­திரக் கல்வி ஆரம்­பிக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் ஆகியும் அதன் உள்­ள­டக்­கத்தை மலை­யகம் எட்­டு­வ­தற்கு பல ஆண்­டுகள் போராட வேண்­டி­யி­ருந்­தது. இன்றும் மலை­ய­கத்­துக்கு முழு­மை­யாக போய் சேர­வில்லை. இப்­படி அடுக்­கிக்­கொண்டே போகலாம்.

பார­தப்­பி­ர­தமர் மோடியின் இலங்கை விஜயம் வெசாக் நிகழ்­வு­களை மையப்­ப­டுத்தி அமைந்­தது. மலை­யக விஜயம் இரண்­டாம்­பட்ச நிகழ்ச்­சி­நிரல் தான். இந்த பயணம் நேர­டி­யாக மலை­ய­கத்தை மட்­டுமே மையப்­ப­டுத்தி நிகழ்ந்­தி­ருந்தால். அதன் அர­சியல் விளை­வுகள் வேறு மோச­மான வடி­வத்தைத் தந்­தி­ருக்கும் என்­பதை இப்­போது எழும் இன­வாதக் கருத்­துக்கள் மூலம் அறி­யலாம்.

மோடியின் வரு­கையை ஏற்­க­னவே எதிர்க்கத் தொடங்­கி­யி­ருந்­தார்கள் இந்­திய எதிர்ப்பு பெரும்­பான்மை சக்­திகள். இந்­தி­யா­வோடு மேற்­கொள்­ள­வி­ருக்கும் ஒப்­பந்­தங்கள் உட்­பட பல­த­ரப்­பட்ட விட­யங்­க­ளையும் கறுப்பு கலரை மையப்­ப­டுத்தி கருத்­துக்­களை தெரி­வித்­தார்கள். ஆனால், இறு­தியில் நடந்தது ஒன்றுமில்லை.

இதனை கடந்த வாரங்களில் பல செய்திகள் வெளிப்படுத்தியிருந்தன. இந்த இன­வாத நோக்கம் இருக்கும் வரைக்கும் இலங்கை அர­சி­யலில் எந்­த­வொரு சமா­த­ானத்­து­வத்­தையும் உரு­வாக்க முடி­யாது. இன­வாத பேச்­சுக்­காக விஜயன் இந்­தி­யாவில் இருந்து வந்தார் என்று மகா­வம்சம் குறிப்­பிட்­டி­ருப்­ப­தையே பொய் என ஞானசார தேரர் சொல்­வ­தற்கு கூட தயங்­க­வில்லை என்­பதை அண்­மையில் அமைச்சர் மனோ­வு­ட­னான வாக்­கு­வா­தத்தில் அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

குறு­கிய அர­சியல் இலா­பத்­துக்­காக எழும் தொடர் இன­வாத பார்­வையின் கண்­ணோட்­டமே தொடர்ச்­சி­யாக இந்த நாட்டை இதே நிலை­மையில் வைத்­தி­ருப்­ப­தற்கும் சமா­தா­ன­மற்ற நாடா­கவும் ஒரு இன வன்­மு­றைக்கான அறி­கு­றி­யாக தொடர்ச்­சி­யாக தெரி­கின்­றது.

 

இந்­நி­லை­மையின் உச்ச கட்டம் கடந்த ஆட்­சியில் இருந்­த­மை­யி­னா­லேயே அந்த ஆட்சி ஆட்டம் கண்­ட­துடன் அதன் விளை­வாக மாற்­றமும் ஏற்­பட்­டது. இந்த ஆட்­சி­யிலும் இந்­நிலை தொடர்­வதை இந்­நல்­லாட்சி அனு­ம­திக்­கு­மானால் கடந்த ஆட்சியில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இந்த ஆட்சி அமையாது.

– ஜீவா சதாசிவம் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.