Jump to content

மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வுக்கு போலீஸ் தடை


Recommended Posts

மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வுக்கு போலீஸ் தடை

 
 
ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடை

ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

மே 17 இயக்கம், ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த நிலையில் சனிக்கிழமையன்று காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2003ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மெரீனாவில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டங்கள் நடத்துவதோ, குழுமுவதோ சட்டவிரோதமென்றும் அதனை மீறிச் செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நாளை நினைவேந்தல் நிகழ்வைக் கண்டிப்பாக நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் தூண்டுதலால் மாநில அரசு இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஈழப் போர் தொடர்பான நினவேந்தல் நிகழ்வை மெரீனா கடற்கரையில் நடத்தத் தடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, மாநில அரசு இந்த நிகழ்வுக்கு அனுமதியளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-39987672

Link to comment
Share on other sites

மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு... !

 
 

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்துக்குப் பிறகு மெரினா கடற்கரையில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, அனுமதியின்றி அங்கு யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Marina


பின், மெரினாவில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆனாலும், போலீஸின் கெடுபிடிகள் குறையவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவாக, மே 17 இயக்கம் சார்பில், மெரினாவில் அஞ்சலி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் சட்ட விதிகளை மீறி, கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை நேற்று கூறியது.


இதற்கிடையே, திட்டமிட்டபடி, இன்று மாலை 5 மணிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து திருமுருகன் காந்தி கூறுகையில், "நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். சிறை செல்வது குறித்து எந்த கவலையுமில்லை. தடியடியை எதிர்கொள்ளவும் தயராக உள்ளோம். நிச்சயம் 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள், இன்று மெரினாவில் ஒன்று கூடுவோம். வழக்கு தொடுத்தால், நீதிமன்றத்தால் நிற்காது என்பதால், அடக்கு முறையால் மிரட்டி ஒடுக்க பார்க்கிறது காவல்துறை. 

 


இதற்கிடையே, மயிலாப்பூர் கூடுதல் ஆணையர் பாலகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், போலீசாருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/89925-high-alert-at-marina-beach.html

Link to comment
Share on other sites

தடையை மீறி ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற இளைஞர்கள் கைது

 

இலங்கையில் நடந்த ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்ற இளைஞர்கள் மற்றும் மே 17 இயக்கத்தினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயன்றவர்கள் கைது

மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த மே 17 இயக்கத்தினர் முயற்சிக்கலாம் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வாகனங்கள் செல்ல தடை Image captionவாகனங்கள் செல்ல தடை

காந்தி சிலை, விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை மற்றும் மெரீனா கடற்கரையின் பல நுழைவாயில்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

மெரீனா கடற்கரை சாலையில் பல பகுதிகளிலும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மாலை நேரத்தில் மெரீனா கடற்கரையில் கருப்பு சட்டை அணிந்து வந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பதித்த டீ-சர்ட் அணிந்து வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயன்றவர்கள் கைது

ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிபிசியிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்ட போதிலும், நினைவேந்தல் நிகழ்வைக் நடத்த தாங்கள் முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் மே 17 இயக்கத்தினரா என்று கேட்டதற்கு, மே 17 இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈழப்போர் தொடர்பான மற்ற ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி கூறினார்.

தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயன்றவர்கள் கைது

போலீஸ் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்ற திரைப்பட இயக்குனர் கெளதமனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டதால், கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த சிலர் முயன்றனர்.

தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயன்றவர்கள் கைது Image captionதடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயன்றவர்கள் கைது

முன்னதாக, ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்திருந்தது.

மே 17 இயக்கம், ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இது தொடர்பாக சனிக்கிழமையன்று காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2003ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மெரீனாவில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டங்கள் நடத்துவதோ, குழுமுவதோ சட்டவிரோதமென்றும் அதனை மீறிச் செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india-39991551

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

may.jpg

Link to comment
Share on other sites

 

''தமிழர்களின் உணர்வை காவல்துறையை கொண்டு தடுத்து நிறுத்திவிட முடியாது''

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.