Jump to content

இலங்கையர் விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தில் இனவெறி ரீதியான தாக்குதல்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

18581823_1365142580238737_8030611278274899056_n-1495279003.jpg

பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய பாதையிலுள்ள Hydeway முடிவில் பயணித்த போது, அங்கு ஒரு வெள்ளைகார நபரை அவர் எதிர் கொண்டுள்ளார். குறித்த நபர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி “நீ இங்கு வர நிறைய இருக்கிறது” என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். “நிறைய இருக்கிறது” என்ற வார்த்தையின் ஊடாக என்ன கூறுவதற்கு அந்த நபர் முற்பட்டார் என சந்தேகம் எழுந்துள்ளதாக விக்ரமசிங்க அந்த நாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் கவலை மற்றும் புண்படுத்தும் வகையில் உள்ளது. நாங்கள் புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். எனினும் இந்தப் பகுதியில் எங்கள் குழந்தைகளை வளர்ப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து யோசித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் இருவரும் பிரித்தானியர்கள், மிகவும் திறமையான தொழிலை கொண்டுள்ளோம். வேலை தேடுவதற்காகவும் உலகில் வேறு இடத்தினை தேடுவதற்காகவும் போராட மாட்டோம். ஆனால் நாம் பிரித்தானியாவை நேசிக்கிறோம், இங்கு குறைபாடுகள் இருந்தாலும், வாழ்வதற்கு இங்கிலாந்து இன்னும் சிறந்த இடங்களில் ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம். “ இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தவர், கடந்த வருடம் பிரெக்ச்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் இனவாத துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வேர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் எனினும் நான் பிரித்தானியராக இருப்பது குறித்து பெருமையடைகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Welwyn Garden City என்ற பகுதியில் மனைவி ரூத்துடன் விக்ரமசிங்க வாழ்ந்து வருகின்றார்.

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138455 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கண்ட ஆளை கட்டி இருக்கிறன், நீங்கள் எல்லோரும் எண்ட மச்சான்மார் என்றமாதிரி நடந்து வந்திருப்பார்....

அடியாமல் விட்டதே பெரிய விசயம்.

ஜாதி மாறிக் கட்டினால், அங்க கொலை செய்வினம்.... 

இங்க அவன் திட்டினது, அக்குறணை டுடே வரை போட்டுது...

ஊர்ல சாதி தடிப்பு கொண்டு சன்னதம் ஆடுற ஆக்கள், இங்க வந்து, அந்த வெள்ளை, நிற வெறியன், இந்த வெள்ளை தடிப்பு பிடிச்சவன் என்று சொல்லும் போது சிரிப்பு தான் வரும்.

இதே சிங்களவர் ஊரில், தமிழர், முஸ்லிகளை எவ்வாறு நடாத்தி மதித்திருப்பார் என்பதனையும் அக்குறணை டுடே எழுதட்டும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இதுக்கு இந்தப் பொங்கு பொங்கிறாரே.. இவைட ஆக்கள் சொறீலங்காவில் தமிழர்கள் மீது செய்யும் இனவெறி.. இனப்படுகொலைக்கு.. தமிழர்கள் என்ன பொங்கு பொங்க வேண்டும். அதையேன் பயங்கரவாதம் என்றீனமோ..??! :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

நன்றாகச் சொன்னீர்கள் நாதமுனி.

இனவாதம் பிரதேசவாதம் சாதியம் என்பன எல்லாமட்டத்திலும் வெளிக்காட்டப்படுதல் வேண்டும். வெளிநாடுகளில் இனவாதம்
தொடர்பாக நிறையவே முறைப்பாடு செய்பவர்கள் நமது தேசத்தில் நம்மால் வெளிக்காட்டப்படும் சாதிவெறி இனவெறி தொடர்பாக வசதியாகவே மறந்து விடுவது நகைப்புக்கிடமானது.

எமது தேசத்தில் ஒரு ஆபிரிக்க இனத்தவர் ஒருவர் வந்து வாழுவது சாத்தியமn என்பதை நினைத்தே பார்க்கமுடியாயது.

http://www.bbc.co.uk/news/av/world-asia-india-39426219/nigerian-student-beaten-in-india-in-alleged-racist-attack

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, manimaran said:

இது வேற கதை மணி...

நைஜீரியர்கள் மிகவும் அழகாக செய்யும் ஒரே விஷயம் மோசடி.

இவர்கள் இலங்கையில், ஒரு பெண் இடம் 20 லட்ச்சம் வரை கூட மோசடி செய்து அண்மையில் பிடி பட்டு உள்ளனர்.

அநேகமாக டெல்லி இளைஞர்கள் அவரிடம் அல்லது அவரது நண்பர்களிடம் ஏமாந்து போய் இருக்க வேண்டும்.

எத்தனையோ ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் கல்வி பெறுகிறார்கள், காரணம், ஆங்கிலம்.. குறைவான செலவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாதா 20 லட்சம் கிடையாது 40 லட்சம் அழகு சாதன  பொருட் களுக்காக ஏமாந்து போயிருக்கிறா ஒரு பொண்ணு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனி ஒருவன் said:

நாதா 20 லட்சம் கிடையாது 40 லட்சம் அழகு சாதன  பொருட் களுக்காக ஏமாந்து போயிருக்கிறா ஒரு பொண்ணு

எமகாதகர்கள்.

ஏதோ சுத்துமாத்து விட்டு அடியை வாங்கிட்டு... உண்மையையா சொல்ல முடியும்?

இனவாதம் என்று கதை விட்டிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

எமகாதகர்கள்.

ஏதோ சுத்துமாத்து விட்டு அடியை வாங்கிட்டு... உண்மையையா சொல்ல முடியும்?

இனவாதம் என்று கதை விட்டிருப்பார்.

ம் இருக்கலாம் சிங்களவர்களில்  ஒரு சிலர் அப்படியே உதாரணம் கொழும்பில் கடை வைத்திருக்கும் சிங்களவர்கள் 

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

இது வேற கதை மணி...

நைஜீரியர்கள் மிகவும் அழகாக செய்யும் ஒரே விஷயம் மோசடி.

இவர்கள் இலங்கையில், ஒரு பெண் இடம் 20 லட்ச்சம் வரை கூட மோசடி செய்து அண்மையில் பிடி பட்டு உள்ளனர்.

அநேகமாக டெல்லி இளைஞர்கள் அவரிடம் அல்லது அவரது நண்பர்களிடம் ஏமாந்து போய் இருக்க வேண்டும்.

எத்தனையோ ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் கல்வி பெறுகிறார்கள், காரணம், ஆங்கிலம்.. குறைவான செலவு. 

ஆம் அது உண்மையாக இருக்கலாம். ஆனால் இது எல்லா சமூகத்திலும் உள்ளதே. எம்மவர்கள் இங்கிலாந்தில் எத்தனை வகையான மோசடிகளில் ஈடுபட்டு எத்தனை 
மில்லியன் பெறுமதியான பணத்தை கொள்ளையடித்தோம். வங்கி அட்டை உட்பட. அதற்காக நானோ அல்லது நீங்களோ வீதியில் போகும் போது எம்மை குறிவைத்து தாக்கினால் எவ்வாறு உணருவோம். 

ஒரு சமூகத்தில் ஒரு சிலர் செய்வதை வைத்து ஒட்டு மொத்த இனத்தையும் அதே வில்லை கொண்டு பார்ப்பது பொருத்தமற்றது. 

https://itstopswithme.humanrights.gov.au/resources/what-you-say-matters/what-racism

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, manimaran said:

அவர்கள் லெவெலுக்கு, யாராலும் முடியாது என்பது உண்மை.

youtube அல்லது google பக்கம் போய்... nigerian scam / scamers என்று போட்டுப் பாருங்கள். 

எங்கண்ட ஆக்கள் அப்பாவிகள்... என்று சொல்லுவியள். tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-21 at 0:35 AM, Nathamuni said:

இங்க அவன் திட்டினது, அக்குறணை டுடே வரை போட்டுது...

ஊர்ல சாதி தடிப்பு கொண்டு சன்னதம் ஆடுற ஆக்கள், இங்க வந்து, அந்த வெள்ளை, நிற வெறியன், இந்த வெள்ளை தடிப்பு பிடிச்சவன் என்று சொல்லும் போது சிரிப்பு தான் வரும்.

இதே சிங்களவர் ஊரில், தமிழர், முஸ்லிகளை எவ்வாறு நடாத்தி மதித்திருப்பார் என்பதனையும் அக்குறணை டுடே எழுதட்டும். :unsure:

:10_wink::10_wink::10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.