Sign in to follow this  
போல்

உறவுகளைத் தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கின்றோம் - நினைவேந்தல் நிகழ்வில் உறவுகள் கண்ணீருடன் ஆதங்கம்

Recommended Posts

போல்    337
01-1adfb252d1b6ec06f3eb03f7837b6e56b508375d.jpg

எமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். நிரந்­த­ர­மாக பிரிந்து விட்­டார்கள். ஒவ்­வொ­ரு­வ­ரையும் இழந்து தற்­போது நடுத்­தெ­ருவில் நிற்­கின்றோம் என நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கேற்ற உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் தெரி­வித்­தனர்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை எட்­டா­வது ஆண்­டா­கவும் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது அந்­நி­கழ்வில் பங்­கேற்­ப­தற்­காக முல்லை மண் உட்­பட தமிழர் தாய­கத்தின் நாலா­பு­றங்­க­ளி­லி­ருந்தும் வருகை தந்­தி­ருந்த உற­வுகள் தமது ஆதங்­கத்தை கண்­ணீ­ருடன் வெளிப்ப­டுத்­தினர். அந்த ஆதங்­கங்­களும் நியா­ய­மான கேள்­வி­களும் வரு­மாறு, 

01.எஸ்.லதா எனப்­படும் பெண்­மணி, நாங்கள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி இப்­போது நின்­று­கொண்­டி­ருக்கும் இந்த மண்ணில் கூனிக்­குறுகி நின்­று­கொண்­டி­ருந்தோம். அப்­போது எமக்கு யாரும் கைகொ­டுக்­க­வில்லை. அன்­றை­ய­தி­னமே நாங்கள் அனைத்­தையும் இழந்து விட்டோம். இனி இழப்­ப­தற்கு ஏதுவும் இல்லை.

அப்­ப­டி­யி­ருக்­கையில் இன்று வந்து எங்­க­ளு­டைய உயிர்­களை தொலைத்து அனைத்­தையும் இழந்து அவர்­க­ளுக்கு ஒரு ஆத்ம திருப்­திக்­காக அஞ்­சலி செய்ய முற்­ப­டு­கின்ற போது என்ன செய்­கின்­றார்கள். இந்த நிகழ்­வையும் பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­யப்­பார்க்­கின்­றார்கள்.

நாங்கள் இந்த மண்­ணுக்கு வருகை தரு­வ­தையோ அஞ்­சலி செலுத்­து­வ­தையோ தடுக்­க­வில்லை. எதி­ராக இருக்­கப்­போ­வதும் இல்லை. ஆனால் எம்மை தொடர்ந்தும் பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­து­கொண்­டி­ருப்­பதை தாங்­க­மு­டி­யா­தி­ருக்­கின்­றது. இறந்த வர்­க­ளைக்­கூட தங்­களின் இலா­பத்­துக்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள நினைப்­பது தவறு. அதற்­கா­கவே நாங்கள் எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம் என்றார்.

02. தனது பிள்­ளை­களை பறி­கொ­டுத்து தனி­ம­ரமாக நிற்கும் தாயொ­ருவர் கூறு­கையில், நான் ஒன்­றல்ல இரண்­டல்ல என்­னு­டைய பிள்­ளை­களை தொலைத்து­விட்டேன். இப் ­போது என்­னி­டத்தில் எதுவும் இல்லை. நாங்கள் கஷ்­டப்­ப­டு­கின்றோம் என்று அர­சி­யல்­வா­தி­க­ளி­டத்தில் செல்­கின்­ற­போது அங்கு எமக்கு எது­வுமே கிடைப்­ப­தில்லை.

இன்­று­வ­ரையில் எமக்கு எந்த அர­சி­யல்­வா­தி­களும் உத­வ­வில்லை. நாங்கள் அனை­வ­ரையும் நம்பி இன்று நடுத்­தெ­ரு­விற்கு வந்­து­விட்டோம். இப்­போது எங்­களின் சொந்­தங்­களை நினைவு கூர வந்தால் இங்கும் வந்து தொந்­த­ரவு செய்­கின்­றர்கள் என் கூறி கத­றி­ய­ழுதார்.

03.இதே­வேளை இறுதி யுத்­தத்தில் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்டு தற்­போது மாற்­றுத்­தி­ற­னாளி என்னும் பட்­டத்­துடன் இருக்கும் நான் என்ன சொல்வேன் என்று விம்­மத்­தொ­டங்­கிய ஒருவர், இறுதி யுத்தம் செய்­தார்கள். இந்த மண்ணில் ஒவ்­வொரு நொடிப்­பொ­ழுதும் உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு சென்றோம். எனது காலையும் இழந்து விட்டேன்.

இந்த பூமியில் மக்கள் வாழ­வில்­லையா?. இங்கு இருந்த எல்­லோ­ருமே இயக்­கமா? அப்­ப­டித்தான் அவர்கள் முத்­திரை குத்தி யுத்தம் செய்­தார்கள். எத்­தனை உற­வு­களை தொலைத்து விட்டோம் இன்று கண்ணீர் சிந்­து­கின்றோம். இதற்­கெல்லாம் நீதி கிடைக்­குமா என்று கோரி கண்ணீர் சிந்­தினார்.

04. இதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்­விற்கு வரு­கை­தந்­தி­ருந்த காண­ாமல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள், எங்­களை யாருக்­குமே கண்­ணுக்­குத்­தெ­ரி­வ­தில்லை. நாங்கள் அஞ்­சலி செலுத்­து­வதா இல்­லையா என்று கூட தெரி­யாத இக்­கட்­டான நிலை­மையில் இருந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

எங்­க­ளு­டைய உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­று ­கோ­ரி­ போ­ராட்­டங்கள் தொடர்ந்து நடை­பெ­று­கின்­ற­போதும் யாரும் அதற்கு பதி­ல­ளித்­த­தாகவோ ஆகக்­கு­றைந்­தது கருத்­தி­லெ­டுத்­த­தாகவோ இல்லை. எங்­களின் பிள்­ளை­க­ளையே தான் நாங்கள் கேட்­கின்றோம். அவர்கள் எங்கே போனார்கள். இல்­லை­யென்றால் இல்­லை­யென்­றா­வது சொல்­லுங்கள் என்று அடுத்­த­டுத்து கேள்­வி­க­ளைத் ­தொ­டுத்து கத­றி­ய­ழு­தார்கள்.

அதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தமது உற­வுகள் தொலைந்து விட்­டார்கள். மடிந்து விட்­டார்கள். இனி மீண்டு வர­மாட்­டார்கள். இன்று இருந்­தி­ருந்தால் இத்­தனை வயதில் இருந்­தி­ருப்­பார்கள். அவர்­க­ளுக்கு பிடிக்கும் விட­யங்கள் என்­னென்ன? என்­றெல்லாம் புலம்­பிக்­கொண்டு முள்ளிவாய்க்கால் திடலில் அங்கலாய்த்தவண்ணமிருந்தனர்.

அத்துடன் இழப்புக்களை சந்தித்து வறு மையின் பிடிக்குள் இருக்கும் உறவுகள் பொதுவாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் இருப்பவர்கள் தமக்கு எவ்விதமான உதவிகளையும் வழங்குவதில்லை. உதவி கோரிச்செல்கின்றபோதும் ஏதாவது கதைகளைக் கூறி காலம் கடத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-2

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this