• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

முத்தரப்புக்களதும் ஆதரவாளர்கள் குறித்து அவதானமாகச் செயற்ப்பட வேண்டும்

Recommended Posts

முத்தரப்புக்களதும் ஆதரவாளர்கள் குறித்து அவதானமாகச் செயற்ப்பட வேண்டும்

 

அர­சில் அங்­கம் வகிக்­கும் இரு­பி­ர­தான கட்­சி­கள் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள் உச்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தா­க­வும், அதன் பிர­கா­ரம் எதிர்­வ­ரும் நாள்­க­ளில் அரசு வீழ்ச்­சி­யுற நேரிக்­கூ­டும் என்ற தக­வ­லொன்று நாட்­டின் அர­சி­ய­ல­ரங்கை சூடு­பி­டிக்க வைத்­துள்­ளது.

இருப்­பி­னும் நாட்­டின் பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ள அரசு பொரு­ளா­தார ரீதி­யில் தற்­போது பார­தூ­ர­மான சிக்­கலை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­கத் தோன்­று­கி­றது.

இது அர­சின் இருப்­புக்கு அத்­தனை தூரம் ஆ­ரோக்­கி­மா­ன­தல்ல. அது­வும், இரண்­டாண்­டு­கள் என்ற குறு­கிய கால நிர்வாகத்தில் அத்தகைய பின்னடைவு ஏற்­பட்­டுள்­ளமை மேலும் சிக்­க­லைத் தோற்­று ­விக்­கும் நிலை­மை­யா­கும்.

ஐ.தே.கவின் நட­வ­டிக்­கை­யில் சந்­தே­கம்

ஐ.தே.கட்சி தனது பொரு­ளா­தார செயற்­பாட்டு முகா­மைத்­து வத்­தைத் தனி­யார் துறையினரிடம் வழங்க நட­வ­டிக்கை மேற்­கொள்­வது, நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­துக்கு நன்மை பயக்­குமா என்­பது குறித்து நாட்டு மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் நில­வு­கின்­றது.

“போர்ட் சிற்றி” திட்­டத்தை சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கி­யுள்­ள­தும், அதே சம­யம் அம்­பாந்­தோட்­டைத் துறை­முக நிர்­வா­கத்­தைத் தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் வழங்­க­வி­ருப்­ப­தும் அர­சி­யல் ரீதி­யில் இலா­ப­க­ர­மா­ன­தல்ல. கூட்டு எதி­ர­ணி­யின் நிலைப்­பாட்­டின்­படி, அது நாட்­டின் வளத்தை வெளி­யா­ருக்கு விற்­ப­தா­கக் கொள்­ளப்­ப­டும்.

அண்­மைக்­கால உலக நடை

மு­றை­யில், அரச செயற்­பா­டு­கள் தனி­யார் தரப்­புக்­க­ளு­டன் கூட்­டி­ணைந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றமை சிறப்பு அம்­ச­மா­கும். கிறீஸ் போன்ற நாடு­கள் அந்­த­வித முகா­மைத்­து­வத்­தில் தோல்வி கண்­டுள்­ளன. அந்த நடை­மு­றையை இலங்கை ஒரு விதத்­தில் செயற்­ப­டுத்த விளைந்து சிர­மத்தை எதிர்­நோக்க நேர்ந்­தது. இதுவரை அரச மற்­றும் தனி­யார் துறை­கள் இணைந்து முகாமைத்துவம் செய்த இலங்கை விமான சேவை­யில் நட்­டத்தை எதிர்­நோக்­கிய ‘டெக்­ஸாஸ் பசு­பிக் குறூப்’ என்ற நிறு­வ­னம், தான் இலங்கை விமான சேவை­யில் மேற்­கொண்­டி­ருந்த முத­லீ­டு­க­ளைத் திரும்­பப் பெற்றுக் கொண்டுள்ளது.

எந்த நாட்டு முத­லீட்­டா­ள­ரும் இலா­பத்தை நோக்­க­மா­கக் கொண்டு செயற்­ப­டு­வா­ரே­யொ­ழிய, நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத் துக்கு பங்­க­ளிப்­புச் செய்து நற்பெயரீட்ட முனைய மாட்டார். அந்த வகை­யில் தனி­யார் நிறு­ வ­னத்­து­டன் இணைந்து முகா­மைத்­துவம் மேற்­கொள்­வது குறித்து ஐ.தே.கட்­சி­யும் அதன் தலை­வர் ரணி­லும் ஒரு முறைக்கு இரு­முறை சிந்­தித்­தாக வேண்­டும்.

கீதா குமா­ர­துங்க விட­யம்

மறு­பு­றம் கீதா குமா­ர­துங்­க­வின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை இல்­லா­தொ­ழிக்க மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­யைக் குறிப்­பி­ட­லாம். நீதி­மன்­றத் தீர்ப்­பின்­படி நாடா­ளு­மன்ற அதி­கா­ரி­கள் தமது கட­மையை விரை­வாக முன்­னெ­டுத்தபோதி­ லும், கூட்டு எதி­ர­ணி­யின் கருத்­துப்­படி அது அர­சின் பழி­வாங்­கலே. ஆனால் அர­சுத்­த­லை­வரோ அந்த விட­யம் குறித்­துத் தாம் எது­வும் தெரிந்து கொண்­டி­ருக்க வில்லை என்ற விதத்­தில் நடந்து கொள்­கி­றார்.

அரச தலை­வர் மாகாண சபை­க­ளது செயற்­பா­டு­கள் குறித்து தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்.

அர­ச­மைப்­புத் தி­ருத்­த­ மொன்­றின் மூலம் மாகா­ண­ச­பை­கள் உரு­வாக்­கப்­பட்ட போதி­லும், 9 மாகா­ண­ச­பை­க­ளும் தத்­த­மது தீர்­மா­னங்­க­ளுக்­க­ மை­யவே செயற்­ப­டு­கின்­றன என அரச தலை­வர் குறிப்­பிட்­டுள்­ளமை முற்று முழு­தா­ன­தொரு உண்­மையே.

ஆயி­னும் மாகாண சபை­கள் குறித்து முடி­வு­களை மேற்­கொள்­ளும் அர­ச­ த­லை­வர், இந்­த­வி­தம் மாகாண சபை­கள் தத்­தம் விருப்­புக்கு ஏற்­ற­படி செயற்­ப­டு­கின்­றன என்று விமர்­சிப்­பது மட்டும் போது­மா­னதா என்­பது குறித்துச் சிந்­தித்­தாக வேண்­டும்.

சைட்­டம் தொடர்­பான பிரச்­சினை

அதே சம­யம் “சைட்­டம்” பிரச்­சினை தொடர்­பாக பணிப்­பு­றக்­க­ணிப்பு அச்­சு­றுத்­த­லு­டன் ஆரம்­பித்த வாரத்தில், குறித்த பணிப்­பு­றக்­க­ணிப்­பால் அதில் ஈடுபட்ட தரப்பினர் பல தரப்­பட்ட விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளாக நேர்ந்­துள்­ளது.

தொழிற்­சங்­க­மும் அர­சும் இந்த விட­யத்­தில் நியா­ய­மான நிலைப்­பாட்­டையே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. தமது கோரிக்­கையை வென்­றெ­டுக்க பணிப்­பு­றக்­க­ணிப்பு முடி­வைத் தவிர வேறெந்த மாற்றுவ­ழி­யும் தொழிற்­சங்­கத்­துக்கு இருந்­த­தில்லை. ஆனால் அர­சுக்கோ சைட்­டத்தை மூடி­விட விருப்­பம் கிடை­யாது.

ஐ.தே.கட்­சி­யின் கொள்கை நிலைப்­பாட்­டின்­படி தனி­யார் மயப்­ப­டுத்­த­லூ­டாக அர­சின் செயற்­பாட்­டைத் துரி­தப்­ப­டுத்­திப் பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வது சாத­க­மான பல­னைத்­த­ரு­மென அந்­தக் கட்சி நம்­பு­வ­தால் சைட்­டத்தை மூடி­விட ஐ.தே.கட்சியி னருக்கு விருப்­ப­மில்லை. ஒரு­வ­கையில் அதனை இடை­ந­டு­வில் மூடி­வி­டு­வ­தென்­பது கூடச் சிக்­கல்­க­ளுக்கு வழி வகுக்­கும்.

இது­வரை கால­மும் பெருந்­தொகை நிதி­யைச் செல­விட்­டுக் கற்­றல் செயற்­பா­டு­களை மேற்­கொண்ட மாண­வர்­கள், அநா­தை­க­ளாக்­கப்­பட்டு விடு­வர். இவற்­றை­யெல்­லாம் அவதானித்துப் பார்த்தால் இவற்­றை­யெல்­லாம் உற்று நோக்­கிக் கொண்­டி­ருக்­கும் பொது­மக்­களே நியா­ய­மற்ற தரப்­பி­ன­ரா­கக் கொள்­ளத்­தக்­க­வர்­கள் என்றாகிறது.

நாட்டு மக்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட அர­சைக் கவிழ்க்க தொழிற்­சங்­கங்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­போ­வ­தில்­லை­யென தலைமை அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார். அதே­ச­ம­யம் அர­ச­த­லை­வ­ரும் இந்த அரசு தனது ஐந்­தாண்டுகால சேவையை மேற்­கொண்டு முடிக்­கும்வரை அதனை எவ­ரா­லும் வீழ்த்த இய­லா­து என உறு­திப்­ப­டத் தெரி­வித்­துள்­ளார்.

53 கோடிக்­கான குறை நிரப்பு மதிப்­பீடு

இவை அனைத்­துக்­கும் மத்­தி­யில் மேலும் 53 கோடி ரூபாய்­க­ளுக்­கான குறை நிரப்பு மதிப்­பீடு நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­சர்­கள், ராஜாங்க அமைச்­சர்­கள் மற்­றும் தலைமை அமைச்­ச­ரது செய­லா­ளர் ஆகி­யோ­ருக்கு வாக­னக் கொள்­வ­ன­வுக்­கான தொகைக்­கான மதிப்­பீடே அது­வா­கும். அரசு இத்­த­கைய செயற்­பா­டு­க­ளால் தறுக்­க­ணித்­துப் போயுள்ள அதே வேளை, நிதி அமைச்­சர், மின்­சா­ரக் கட்­ட­ணங்­களை உயர்த்­து­வது குறித்­துக் கவ­னம் செலுத்தி வரு­வ­தாக சமூ­க­வ­லைத்­த­ளங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மகிந்த தலை­மை­யி­லான அரசு ஊழல், லஞ்­சம், வீண்­வி­ர­யம் ஆகிய செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­தன் கார­ண­மா­கவே அதி­கா­ரத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்­டது.

இது ஐ.தே.கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள் தரப்­பின் நிலைப்­பாடு. மகிந்த அர­சின் அத்­த­கைய செயற்­பா­டு­களைத் தடுத்து நிறுத்­தும் வல்­லமை அரச தலை­வர் தேர்­த­லி­லா­யின் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­மும், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லா­யின் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­ட­மும் மட்­டுமே உள்­ள­தாக குறித்த தரப்­பி­னர் தீவி­ர­மாக நம்பி வந்­த­னர். ஆனால் மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற ஊழல் மோசடி லஞ்­சச் செயற்­பா­டு­கள் யாவும் தற்­போது தடுத்து நிறுத்­தப்­பட்டு விட்­ட­னவா? என நல்­லாட்சி அர­சுக்கு எதி­ரா­னோர் இன்று கேள்வி எழுப்பி வரு­கின்­ற­னர்.

மௌனம் காத்து வரும் மைத்­தி­ரி­ தரப்பினர்

இவை இரண்­டுக்­கும் மத்­தி­யில் மைத்­தி­ரி­பால தரப்­பில் செயற்­ப­டு­வோர் எந்­த­வித கருத்­தும் வெளி­யி­டாது வாய்­மூடி மௌனம்காத்து வரு­கின்­ற­னர். எதற்­காக அவர்­கள் அவ்விதம் நடந்து கொள்­கின்­ற­னர் எனத் தற்­போது ஊகிக்க முடி­யா­துள்­ளது.

ஆனால், அரச தலை­வரோ மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்­கள் குறித்த சிக்­கல்­க­ளில் மத்­தி­யட்ச முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார். அந்த விட­யத்­தில் மைத்திரி மகிந்த தரப்­பி­னர் உள்­ளக அதி­கா­ரப் போட்­டி­யில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இதில் எவ­ரது தரப்பு வெற்றி பெற்­றா­லும் அது மகிந்த தரப்­பி­ன­ருக்கே இலா­ப­க­ர­மாக அமை­யும். ஆத­லால் மகிந்த தரப்பு ஆத­ர­வா­ளர்­கள் மற்றும் ஐ..ேத.கட்சி ஆத­ர­வா­ளர்­கள் ஆகிய இரு தரப்பினர்கள் குறித்­தும் கவ­ன­மா­கச் செயற்­பாட்­டாக வேண்­டும்.

http://uthayandaily.com/story/3478.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this