• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

கூட்டு அரசின் போக்கு மாற்றம் பெறவேண்டும்

Recommended Posts

கூட்டு அரசின் போக்கு மாற்றம் பெறவேண்டும்

 
கூட்டு அரசின் போக்கு  மாற்றம் பெறவேண்டும்

 

கொழும்பு அர­சின் போக்கை அச்­சொட்­டாக, அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்­தும் விதத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது பன்­னாட்டு நெருக்­க­டி­கள் குழு­வின் அறிக்கை. மாற்­றம் என்ற முழக்­கத்துடன் 2015ஆம் ஆண்டு தை மாதம் தொடங்­கிய இந்த ஆட்­சி­யின் விறு­வி­றுப்பு படிப்­ப­டி­யா­கக் குறைந்து – கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பாகிப் போனது.

வழக்­க­மான சிங்­கள, பௌத்த அர­சியல் மாயைக் குள்ளேயே இந்த அரசும் சிக்கிக் கொண்டுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெள்­ளத் தெளி­வா­கக் குறிப்­பி­டு­கி­றது.

“அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற முதல் 9 மாதங்­க­ளில் அர­சின் சீர­மைப்­புகள் மள­ம­ள­வென்று நடந்­தே­றின. அதன் பின்­னர் வேகம் தணிந்து தவ­ளத் தொடங்­கின; அல்­லது எது­வுமே நடக்­கா­மல் போயின. இப்போது சமூ ­கப் பதற்­றம் அதி­க­ரித்து வரு­கின்­றது. அர­சின் கூட்­டுக்­குள் வெடிப்­பு­கள் தோன்­றத் தொடங்­கி­விட்­டன. புதிய அர­ச­மைப்பு, நாடா­ளு­மன்­றத்­தின் ஊடா­கவா அல்­லது பொது வாக்­கெ­டுப்பு ஒன்­றின் ஊடா­கவா உரு­வாக்­கப்­ப­டும் என்­பது தெளி­வற்­றுள்­ளது.

குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக்­கா­மல் விடும் இலங்­கை­யின் போக்­கைச் சரி­செய்­யும் வகை­யில் தேசிய பாது­காப்பு அமைப் ­பு­க­ளில் அரச தலை­வரோ தலைமை அமைச்­சரோ காத்­தி­ர­மான சில மாற்றங்­களைச் செய்தால் அது இனங்­க­ளுக்கு இடை ­யில் உட­ன­டி­யாக அமை­தி­யின்­மையை உரு­வாக்­கு­வ­து­டன் பாதிப்­பை­யும் ஏற்­ப­டுத்­து­கி­றது. “

இவ்­வாறு தெரி­விக்­கி­றது அறிக்கை. கள நில­மையை அப்­ப­டியே படம்­பி­டித்­துக் காட்­டு­வ­தைப்போன்று இருக்­கி­றது இது.

அதில் கூறப்­பட்­டி­ருப்­ப­தைப் போன்றே, இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் அரச தலை­வர் மீதும் இந்த அரசு மீதும் மக்­ க­ளுக்கு, குறிப்­பா­கச் சிறு­பான்மை மக்­க­ளுக்கு இருந்த எதிர் ­பார்ப்­புக் குறைய ஆரம்­பித்­து­விட்­டது. ஆரம்­பத்­தில் இந்த அரசு சில காரி­யங்­க­ளைச் செய்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

இரா­ணு­வத்­தின் வசம் இருந்த காணி­கள் சில விடுவிக்­கப்­ பட்­டன, காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பாக ஆராய்­வதற்­ காக அலு­வ­ல­கம் ஒன்றை அமைப்­ப­தற்­கான சட்­டம் இயற்­றப்­பட்­டது, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக முழு நாடா­ளு­மன்­ற­மும் அர­ச­மைப்பு உரு­வாக்­கச் சபை­யாக மாற்­றப்­பட்­டது, அர­சி­யல் கைதி­கள் சிலரை விடு­வித்­தது, போரில் உயி­ரி­ழந்த – விடு­த­லைப் புலி­கள் உள்­ ளிட்ட அனை­வ­ரையும் – தமது உற­வி­னர்­களை நினை­வு ­கூர்­வ­தற்­குத் தமி ­ழர்­களை அனு­ம­தித்­தமை போன்ற சில காரியங்கள் நடந்தேறின.

எனி­னும் ஆரம்­பிக்­கப்­பட்ட விட­யங்­க­ளி­லேயே முடிக்க வேண்­டியவை இன்­னும் பல. ஆரம்­பிக்­கப்­ப­டா­ம­லேயே இருப்பவையோ அதனிலும் பல. அவற்­றைச் செய்­வ­தற்கு அரசு இப்­போது தயங்­கு­கி­றது அல்­லது ஒதுங்­கு­கி­றது.

தெற்­கில் ­கி­ளம்­பும் சிங்­கள, பௌத்த பேரி­ன­வா­தத்­திற்குப் பயந்து அடி­ப­ணிந்து அல்­லது அத­னால் தமது அர­சி­யல் எதிர்­ ­காலத்­திற்­குப் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும் என்று கரு­தியே ஆட்­சி­ யா­ளர்­கள் இவ்­வாறு பின்­ன­டிக்­கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள் என்­பதை, இலங்­கை­யின் அர­சி­யல் வர­லாறு தெரிந்த எவ­ரும் மறுக்­க­மாட்­டார்­கள்.

ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­குச் சிறு­பான்மை இனங்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­தும், பின்­னர் ஆட்­சி­யைத் தக்க வைக்­க­வும் அர­சி­ய­லில் நீடிக்­க­வும் பேரி­ன­வா­தத்­தின் பிடிக்­குள் வீழ்வதை­யுமே கொழும்­பின் ஆட்­சி­யா­ளர்­கள் காலம் கால­மா­கச் செய்­த­னர். இந்­தப் போக்­கி­லி­ருந்து மாறாத வரை­யில் இலங்­கைக்கு விடிவு கிடைக்­காது.

வர­லாற்­றில் முன்­னெப்­போ­தும் இல்­லாத கூட்­டான மைத்தி ரியும் ரணி­லும் பழைய போக்­கி­லி­ருந்து நாட்டை மீட்­பார்­கள் என்ற நம்­பிக்­கை­யும் பொய்த்­துப் போயி ருப்­ப­தையே நெருக் கடி­கள் குழு­வின் அறிக்கை எடுத்­தி­யம்பு கிறது. அந்த அறிக் கையே குறிப்­பி­டு­வ­தைப் போன்று மக்க ளாட்­சி­யால் கிடைத்த பய­னைப் பாது­காக்­க­வும், நீடித்­தி ­ருக்­கக்­கூ­டிய மறு­சீ­ர­மைப்பை மீண்­டும் ஆரம்­பிக்­க­வும் சமூக மற்­றும் அர­சி­யல் பிணக்­கைத் தணிக்­க­வும் வேண்­டு­மா­னால் தற் போதைய அரசு கட்சி மற்­றும் தனி­ந­பர் அர­சி­யல் நலன்­களை ஒரு­பு­றம் ஒதுக்கி வைத்­து­விட்டு மறு­சீ­ர­மைப்பு அர­சி­ய­லுக்கு திறந்த மன­து­டன் திரும்­ப­வேண்­டும்.

http://uthayandaily.com/story/3476.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this