Sign in to follow this  
நவீனன்

தடுப்பிலுள்ள ஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அனைத்துல மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

Recommended Posts

தடுப்பிலுள்ள ஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

அனைத்துல மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
 
தடுப்பிலுள்ள ஆண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்
 
இலங்­கை­யில் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும், சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆண்­கள் பலர் பாலி­யல் துன்­பு றுத்­தல்­களுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர். இவ்­வாறு அனைத்­து­லக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்­றஞ்­சாட்­டி­யு ள்­ளது.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த மனித உரி­மை­கள் அமைப்­பொன்­றின் ஆய்வு அறிக்­கை­யில் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமி­ழர்­கள் மீதான சித்­தி­ர­வ­தை­யாக, பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆண்­கள் அதி­க­ள­வில் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர். ஆனால் அது குறித்த தக­வல்­கள் வெளி­வ­ரு­வ­தில்லை. சமூ­கக் களங்­கம் மற்­றும் சட்ட ரீதி­யாக ஓரி­னச் சேர்க்­கைக் குற்­றம் என்­ப­தா­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இது­பற்றி வெளிப்­ப­டுத்த முன்­வ­ரு­வ­தில்லை.

37 வரு­டங்­கள் உள்­நாட்­டுப் போரில் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் அதி­கம் இடம்­பெற்­றன. எனி­னும், பெண்­கள் தொடர்­பான துன்­பு­றுத்­தல் வழக்­கு­க­ளைப் போலன்றி, தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தபோது தாம் அதி­கம் துன்­பு­றுத்­தப்­பட்­டோம் என்று ஆண்­கள் ஒப்­புக் கொண்­ட­னர்.

போரின் போதும், போருக்­குப் பின்­ன­ரும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக, ஆண்­கள் மீதான பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் இடம் பெற்­ற­தற்­கான பதி­வு­களை ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்­ளோம்.

ஆண்­க­ளுக்­கும், சிறு­வர்­க­ளுக்­கும் எதி­ரான பாலி­யல் வன்­மு­றை­கள் பற்­றிய முழு­மை­யாக தக­வல்­கள் தெரி­ய­வில்லை. ஆண்­கள் மற்­றும் சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் மே 2009 இல் போர் முடி­வுக்கு வந்த பின்­ன­ரும் நிறுத்­தப்­ப­ட­வில்லை, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட மற்­றும் தடுத்து வைக்­கப்­பட்ட ஆண்­கள் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ளைச் சந்­திக்­கும் சம்­ப­வங்­கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

போருக்­குப் பின்­னர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஆண் சந்­தேக நபர்­கள் கொடூ­ர­மாக, மனி­தா­பி­மா­ன­மற்ற வகை­யில் நடத்­தப்­பட்­ட­னர் – என்­றுள்­ளது.

http://uthayandaily.com/story/3473.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this