• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்

Recommended Posts

ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்

 
 
ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்படத்தின் காப்புரிமைAFP Image captionஜூலியன் அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை கைவிடுகிறது ஸ்வீடன்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கைவிடலாம் என ஸ்வீடனின் பொது வழக்குகளுக்கான இயக்குனர் முடிவு செய்திருக்கிறார்.

அசாஞ் மீது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட கைது வாரண்டை திரும்பப் பெறுவதாக, ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றத்தில் மேரியானே நேய் கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.

45 வயதான அசாஞ், தம்மை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பதற்காக, 2012 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் உள்ள எக்கவடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாக அசாஞ்ஜே அஞ்சுகிறார்.

அமெரிக்காவின் ராணுவம் மற்றும் தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக அமெரிக்காவில் அசாஞ் விசாரணையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

இந்த செய்தி அறிவிக்கப்பட்ட பிறகு, அசாஞ்சை கைது செய்ய கடமைப்பட்டிருப்பதாக லண்டன் மெட்ரோபாலிட்டன் போலிஸ் சர்வீஸ் கூறியுள்ளது. மேலும், அவர் நீதிமன்றத்திற்கு சரணடைய தவறியதான சிறிய குற்றச்சாட்டில் எக்கவடார் தூதரகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

'இங்கிலாந்து மீது கவனம்'

வெள்ளிக்கிழமை பிற்பகலில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அரசு வழக்கறிஞர், "ஜுலியன் அசாஞ் பாலியல் பலாத்காரம் செய்ததான சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கும் வழக்கில் புலன்விசாரனையை நிறுத்திவிட ஸ்வீடனின் பொது வழக்குகளுக்கான இயக்குனர் மேரியானே நேய் முடிவுசெய்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அசாஞ் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடன் அதிகாரிகளால் அவர் லண்டன் தூதரகத்தில் விசாரிக்கப்பட்டார்.

ஆனால், அசாஞ் தூதரகத்தில் இருந்து வெளியேறினால், லண்டன் போலீசால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார்.

மேரியானே நேய்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆகஸ்ட் 2020க்குள் ஜூலியன் அசாஞ் ஸ்வீடனுக்கு வந்தால் வழக்கு மீண்டும் தொடர வாய்ப்புள்ளது : மேரியானே நேய்

வெள்ளிக்கிழமையன்று இந்த செய்தி அறிவிக்கப்பட்டதும், "தற்போது இங்கிலாந்தின் மீது கவனம் செலுத்தப்படுகிறது" என்று தனது டிவிட்டர் செய்தியில் கூறிய விக்கிலீக்ஸ், "ஜூலியன் அசாஞ்சை ஒப்படைக்கவேண்டும் என்ற வாரண்ட், அமெரிக்காவிடம் இருந்து கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இங்கிலாந்து மறுத்துவிட்டது" என்றும் குறிப்பிட்டுள்ளது.

"மிகவும் கடுமையான குற்றத்திற்கான ஐரோப்பிய கைது உத்தரவு" என்பதன் அடிப்படையில் தனது நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக லண்டனில் உள்ள மெட்ரோபாலிடன் போலீஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மேலும், "இப்போது நிலைமை மாறிவிட்டது, ஸ்வீடன் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தங்கள் விசாரணையை நிறுத்திவிட்டார்கள், ஆனால் ஒரு சிறிய குற்றம் செய்தது தொடர்பாக அசாஞ் அவர்களுக்கு தேவைப்படுகிறார். அந்த குற்றத்திற்கு தேவையான அளவு தகவல்களை மெட்ரோபாலிடன் போலீஸ் வழங்கும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அசாஞ்சின் ஸ்வீடன் வழக்கறிஞர் கடந்த மாதம் தாக்கல் செய்த ஒரு மனுவில், அசாஞ்சின் கைது வாரண்ட் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அசாஞ்சை கைது செய்ய "முன்னுரிமை" தரப்படும் என்ற அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செசெஸின் கருத்தை சாமுவெல்ஸன் மேற்கோள் காட்டுகிறார்.

அகென்ஸ் ப்ரான்ஸ்-பிரெஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சாமுவெல்ஸன், " அமெரிக்கா நடவடிக்கை எடுக்க விருப்பப்படுவதை நாம் இப்போது நிரூபிக்கமுடியும். இதன் மூலம், கைது வாரண்டை ரத்து செய்யக் கோரலாம். பிறகு, அசாஞ்ஜே ஈக்வடர் நாட்டிற்கு சென்று அரசியல் அடைக்கலம் பெறமுடியும்" என்று சொல்கிறார்.

http://www.bbc.com/tamil/global-39976979

Share this post


Link to post
Share on other sites

பாலியல் குற்றம் சுமத்திய அதிகாரிகளை மறக்கவும் முடியாது - மன்னிக்கவும் முடியாது : ஜூலியன் அசாஞ்சே

 

 

பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றமே செய்யாமல் கடந்த 7 வருடங்களாக கைதியை போல் வாழவைத்த, சுவீடன் அதிகாரிகளை தன்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதென விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

assange.jpg

அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகை அதிர செய்த அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் உலக அரசியல் சார் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

இந்நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொள்ளவே, அவர் சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோம் நகருக்கு செல்லவே, அந்நாட்டு அரச அதிகாரிகள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி வழக்கு பதிவு செய்தனர்.

குறித்த வழக்கு காரணமாக ஏற்படுத்தப்பட்ட கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, லண்டன் சென்ற ஜூலியன் அசாஞ்சே, அங்குள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசியல் தஞ்சம் புகுந்து கைது செய்வதிலிருந்து விடுபட்டிருந்தார்.

மேலும் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கு விசாரணையை, சுவீடன் கைவிடும் முடிவை ஈக்குவடார் வரவேற்றுள்ளது. அத்தோடு அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

சுவிடனின் முடிவை தொடர்ந்து, ஈக்குவடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே,  ஈக்குவடார் செல்வதாகவும்,, பிரான்ஸில் அரசியல் தஞ்சமடைய விரும்புவதாகவும் தகவல்கள் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

WannaCry அந்த ஆட்டு ஆட்டுது போல் இருக்கு இவரின் பக்கம் இருக்கும் எதிஹோல் படையின் உதவி அவசரமாய் தேவைப்படுது போல் இருக்கு .

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this