Sign in to follow this  
நவீனன்

வெள்ளவத்தை சம்பவம் : மகனை இழந்து தவிக்கும் தந்தை : கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள் : ஹட்டனில் இருந்து வந்த இரவு பகலாக வீதியில் கிடக்கும் அவலம்

Recommended Posts

வெள்ளவத்தை சம்பவம் : மகனை இழந்து தவிக்கும் தந்தை : கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள் : ஹட்டனில் இருந்து வந்த இரவு பகலாக வீதியில் கிடக்கும் அவலம்

 

 

வெள்ளவத்தையில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தில் ஹட்டன், பத்தனையைச் சேர்ந்த 20 வயதுடைய தனது மகன் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடித் தருமாறு கோரிய போதும், அதிகாரிகள் அது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை எனவும் தந்தையொருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.wellawatte-building-collapse-missing.jpg

வெள்­ள­வத்தை சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வரவேற்பு மண்­டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்­ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்­ளனர் தெரிவிக்கப்படுகின்றது.  

 காய­ம­டைந்­த­வர்கள் களு­போ­வில - கொழும்பு தெற்கு போதன வைத்­தி­ய­சா­லையிலும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையிலும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். களு­போ­வில கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 14 பேரில் இரு­வரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக வைத்­திய சாலையின் பேச்­சாளர் அசேல குண­வர்­தன தெரி­வித்தார்.

இந்நிலையில் குறித்த கட்டடத்தில் வேலை செய்த ஹட்டன் பத்தனையைச் சேரந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்ற தனது மகன் காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

'நேற்று 11 மணியளவில் சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டேன். 

எனது மகன் வேலைக்கு வந்து ஒருமாத காலமாகின்றது. இதற்கான சாட்சியும் என்னிடம் உள்ளது.

அண்மையில் வெசாக் விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் இங்கு தொழிலுக்கு வந்து விட்டார்.

சம்பவம் அறிந்து இங்கு வந்து பார்த்த போது எனது மகனை மாத்திரம் காணவில்லை.

உரிய அதிகாரிகள் எனது மகனை தேடி தருமாறு கோரிய போதும், பார்ப்போம் பார்ப்போம் என அசமந்தமாக பதிலளித்தனர்.

வைத்தியசாலையிலும் சென்று தேடிப்பார்த்தேன். ஆனால் மகனை காணவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன்.

நேற்று முதல் இரவு பகலா இங்கே இருக்கின்றேன். இதுவரை எனக்கு இந்த கட்டடத்தின் அதிகாரிகள் உரிய பதிலை தரவில்லை.

யாருமே கவனத்தில் கொள்வது போன்று தெரியவில்லை. தேடி தருகின்றோம் என்று கூட சொல்ல மாட்டிகின்றார்கள். மகனின் கையடக்கத் தொலைபேசியும் வேலை செய்ய மாட்டிது.

காணாமல் போனவரின் நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் குறித்த மாடிக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது நேற்று கடடையில் இருந்த முகாமையாளருக்குத் தான் தெரியும். உள்ளே எத்தனை பேர் வேலை செய்தார்கள். அவர்களில் எத்தனை பேர் உயிருடன் மீட்கப்பட்டள்ளார்கள் என்ற தகவலையும் வெளியிடாமல் உள்ளார்கள்.

நான்கு பேரில் ஒருவர் காணாமல் போயுள்ளார். நான்கு பேர் மாத்திரமே உள்ளே சிக்கியுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

இந்த கட்டடத்தில் வேலை செய்தவர்கள் தற்போது உண்பதற்கு உணவின்றி இடமின்றி தவிக்கின்றார்கள்.

 

 இந்த கட்டத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை வந்து நேரில் சந்திக்கவும் இல்லை. நாங்களே இவர்களுக்கான  உணவுகளையும் வழங்கி வருகின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/20153

Share this post


Link to post
Share on other sites

வெள்ளவத்தை சம்பவம் : 'மகன எப்படியாவது மீட்டு தாங்களே சாமிங்களா.." : தாயுடன் சேர்ந்து ஊரே கதறும் சோகம் (காணொளி இணைப்பு)

Published by Pradhap on 2017-05-20 11:38:43

 

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட பத்தனை கிறேக்கிலி தோட்ட இளைஞனை மீட்டுத்தருமாறு இளைஞரது தாய் மற்றும் ஊர் மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

uuu_pu_p__.JPG

இந்நிலையில் குறித்த இளைஞனை மீட்பதில் அங்குள்ள அதிகாரிகள் அசமந்த போக்கினை காட்டுவதாக எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கிறேக்கிலி தோட்டத்தின் கொழுந்து நிறுக்கும்  இடத்தில் குறித்த இளைஞனின் தாய் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றுகூடி  இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

unnamed.jpg

குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கட்டட சரிவு சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்த பின்பும் இளைஞனை மீட்பதில் அதிகாரிகள் கவனகுறைவுடன் செயல்படுகின்றனர். இது தொடர்பில் அதிகாரிகளிடம் இளைஞனின் உறவினர்களிடம் தோட்ட முக்கியஸ்தர்களும் வினவியபோது, மீட்டு தருவதாக கூறுகின்றார்களே தவிர அதற்கான ஏற்பாடுகளை இன்னும் செய்யவில்லை என புகார் தெரிவித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

unnamed__13_.jpg

வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்பவர் கட்டட இடிபாடுக்குள் சிக்கியுள்ளதுடன், அவரை மீட்கும் பணிள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

unnamed__12_.jpg

unnamed__11_.jpg

unnamed__10_.jpg

unnamed__9_.jpg

unnamed__8_.jpg

unnamed__7_.jpg

unnamed__6_.jpg

unnamed__5_.jpg

unnamed__4_.jpg

unnamed__3_.jpg

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

http://www.virakesari.lk/article/20173

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this