Jump to content

மாங்குடி மைனர்


Recommended Posts

மாங்குடி மைனர் - சிறுகதை

சிறுகதை: பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம்

 

`மாங்குடி மைனர் இறந்துவிட்டார்' என்றது பேட்டை வாழ் பெருமக்களுக்கு அத்தனை மகிழ்வானதொரு செய்தியாகத்தான் இருந்தது. முக்கியமாக மைனரின் மூன்று மனைவிகளுக்கும் நெஞ்சம் குளிர்ந்து, முகம் ஒருவிதப் பூரிப்படைந்திருந்தது. தனது எண்பத்திரெண்டு வயதில் இத்தனை ஆன்மாக்களை சந்தோஷமடையச்செய்த மாங்குடி மைனர், பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தபடி முறுக்கிய மீசையில் ஜபர்தஸ்தாக காட்சியளித்்தார், அகன்று விரிந்த முகத்தில் பட்டையைப் போட்டு நடுவில் வட்டமாகப் பொட்டு வைத்திருந்தனர். டுப்பு டுப்பு என்று ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த மைனரின் புல்லட்டை பேரன்களும் பேத்திகளும் ஏறிக்கொண்டு ஓட்டுவதாகப் பாவனை செய்து கொண்டிருந்தார்கள். பேட்டையில் பெரிய சாவு என்பதால், எந்த வீட்டிலும் உலை கொதிக்கவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒப்பாரி வைக்க ஒன்பது பேர் கொண்ட குழுவை மைனரின் மனைவிமார்கள் காசு கொடுத்து நியமித்திருந்தார்கள். ஆகவே அழ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமின்றி மூன்று மனைவிமார்களும் ஈ ஓட்டிக்கொண்டு முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டார்கள். காலையிலிருந்து காபி மட்டுமே ஓடிக்கொண்டிருப்பதால், ஒப்பாரிப் பெண்களின் சுதி சுத்தப்படவில்லைதான். பக்கத்திலேயே சாவுச்சோறு தயாராகிக்கொண்டிருந்ததால், கொஞ்சம் பலத்தைக் கூட்டிக்கொண்டார்கள்.

p86a.jpg

மைனரின் தாவாங்கட்டையோடு சேர்த்து, மண்டையில் கட்டப்பட்டிருந்த முடிச்சு திடீரெனத் தளர்ந்ததில், மைனரின் வாய் தொங்கியபடி நுரைத்துக்கொண்டிருந்தது. வாய்க்குள் ஈ போய்விடக் கூடாதென்பதற்காக விசிறிக்கொண்டிருந்த மனைவிகளில் மூத்தவர், “வாயக் கட்டிப்போட்டிருந்தாலும்… அவுத்துப்போட்டுட்டு ஜொள்ளு உடுறான் பாரு கம்மினாட்டி” என்று முனகியபடியே வாயைச் சேர்த்துக் கட்டினார். மைனரின் இடது பக்கம் நின்றிருந்த மனைவிமார்களிள் கடைசியானவள், “வேட்டிய நல்லா இறுக்கிக் கட்டுக்கா… சண்டாளப்பாவி செத்துட்டான்னு இவனல்லாம் நம்பக் கூடாது” என்று சொல்ல மூவரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டு, மைனரின் வேட்டியை ஒருதடவை பார்த்துக்கொண்டார்கள். அப்போது, தாள வாத்தியங்களோடு மைனரின் குத்துச்சண்டை வாத்தியார் சதுர் சூரிய சார்ப்பட்டா பரம்பரையின் மூத்தவர் கித்தேரிமுத்துவும் சிஷ்யர்களும் ‘குத்துச்சண்டை குலவிளக்கே’ என்கிற வாசகத்தோடு ஒரு பேனரைப் பிடித்துக்கொண்டு, குத்துச்சண்டை க்ளவ்ஸையே மாலையாக எடுத்துக்கொண்டு வந்தார்கள். மைனரின் கால்மாட்டில் பேனரை வைத்துவிட்டு க்ளவ்ஸை மாலையாகப் போட்டார்கள். மைனர் நடுநாயகமாக வீற்றிருக்க, மூன்று மனைவிகளும் அழ முயன்ற முகங்களோடு போஸ்கொடுத்தனர். கித்தேரிமுத்துவின் குத்துச்சண்டை குழுவினர் புகைப்படத்துக்கு நின்றனர். பழக்கதோஷத்தில் ஸ்மைல் ப்ளீஸ் என்றான் புகைப்படக்காரன். எல்லோரும் சிரித்தனர். மைனர் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னதான் மாங்குடி மைனராக இருந்தாலும், பேட்டையில் மூத்த தலை என்பதால், கல்யாணச் சாவு என்று அறிவித்துவிட்டார்கள். “வாழ்ந்து ரசிச்ச உடம்புடா… குளிரக்குளிர அவனக் கொண்டாடிட்டு எரிக்கணும்டா…” என்று தேசிங்கு சொன்னார். வெற்றிலையை மடித்துப் போட்டுக்கொண்டார். மைனரின் எல்லா வேலைப்பாடுகளுக்கும் ஏவல் புரி பார்த்துக் கொண்டிருந்தவர். தேசிங்கு சொன்னதைப் பேட்டைப் பெருசுகளும் ஆமோதித்தனர் “சரிய்யா அப்போ நைட்டு கானாக்கு ஜிகான கூப்டுல்லாம்… சீரியல் செட்டுக்கு தாஸாண்ட சொல்லிடலாம்… அப்றம் தார்ப்பாயி போடச் சொல்லிரு…” ஊர் தலைவர் தேசப்பன் அடுக்கிக்கொண்டே போனார். அப்போதுதான் கூட்டத்திலிருந்த ஒருவன் கேட்டான். “அப்போ பேண்டுக்கு கல்யாணிக்கிட்ட சொல்லிடலாம்ல… கல்யாணிக்கா டான்சுன்னா மைனரு தெம்பா இருப்பாப்போல…” என்று இளித்தான். இப்போது, நாற்காலியில் அமர்ந்திருந்த மைனரின் முகம் ஒரு சிறுபுன்னகை பூத்தது. “கல்யாணியவே சொல்லலாண்டா… மைனரோட பொண் டாட்டிங்க மூஞ்சத் தூக்கி வச்சிப்பாளுங்கோ… அதான் யோசிக்கிறேன்…” - தேசப்பன் கொஞ்சம் தயங்கினார். “நீ இன்னா தேசப்பா யோசிச்சிக்கினு இருக்க… கல்யாணி வந்து ஒரு குத்து குத்துனாதான்… மைனரு கட்ட வேகும்ப்பா… சொல்லிவுடு தேசப்பா…” வெற்றிலைக்குதப்பலைத் துப்பிக்கொண்ட தேசிங்கு, “அப்ப சரிய்யா… கல்யாணியாண்ட சொல்லிடலாம்… டேய் அப்படியே இருவது லிட்ரு சாராயம் சொல்லிவுட்ரு…” என்றபோதுதான் மாங்குடி மைனரின் முகம் காதலாகிக் கசிந்து, கல்யாணியின் வருகைக்கெனக் காத்திருந்தது.

காசிபுரத்தில் ஒரு துஷ்டி வீட்டில்தான் மாங்குடி மைனர் கல்யாணியை முதன்முதலாகப் பார்த்தார். தன் மூன்று மனைவிமார்களிடமும் இல்லாத ஏதோ ஒன்று… அல்லது தான் பார்த்த பெண்களில் இல்லாத ஒன்றை கல்யாணியிடம் பார்த்தார். தன் ஐம்பதாவது வயதில் இத்தனை மனக்கிலேசத்தை மைனர் அனுபவித்ததில்லை. சுருள்முடியோடும், அகன்று விரிந்த மார்போடும் சார்பட்டா பரம்பரையின் குத்துவீரரான மைனர் ஒரு பனித்துளியைப்போல உருகிக் கொண்டிருந்தார். மைனரின் முகம் போன போக்கைப் புரிந்துகொண்டார் தேசிங்கு. “இன்னா சண்முகவேலு… பேண்டுக்காரி மேல கண்ண வச்சிட்டப்போல… ம்…” என்று கண்ணடித்தார், மாங்குடி மைனரின் பெயரைச் சொல்லி கூப்பிடுவது தேசிங்கு மட்டும்தான். “சாராயத்த ஊத்துடா… வாயி நம நமங்குதுல்ல…” என்றவர், எதிரே உட்கார்ந்து கேனிலிருந்து சாராயத்தை ஊற்றிக்கொண்டிருக்கும் கல்யாணியை அடித்துவிடுவதைப்போல பார்த்தார். கல்யாணியும் இதைக் கவனித்தும் கவனிக்காதவாறு ஒரு கல்ப்பை அடித்துக்கொண்டு, தன் ஆட்காட்டி விரலால் இலை ஊறுகாயைச் சல்லிசாக வழித்து, நாக்கின் நடு மத்தியில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சினாள். மைனருக்கு மேனியெல்லாம் சிலிர்த்து இதயம் மேலும் கீழும் அடித்துக்கொண்டது.

திருநா ஷெனாயில் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா’ வாசித்துக் கொண்டிருந்தான். சட்டியை வார் பிடித்துக்கொண்டிருந்த பெருசு ‘டர்ர்ரம்ப்ம்… டர… டர… டர்ர்ர்ரம்ப்பம்…’ என்று ஒத்திகை பார்த்துக்கொண்டது. பேண்டையும் கொண்டைக்குச்சியால் ‘டம் டும் டம்’ என்று அடித்துச் சரிசெய்து கல்யாணியைப் பாவமாகப் பார்த்தது. பெருசுவின் கண்கள் போதைக்காக ஏங்கியதை கல்யாணி உணர்ந்துகொண்டாள். கேனிலிருந்து சாராயத்தை லோட்டாவில் ஊற்றிக் கொடுத்தாள். ஒரே மடக்கில் கல்ப்பாக ஏற்றிக்கொண்டு முராகோஸை ஜல் ஜல் என டைமிங் போட்டு கண்களை உருட்டிக் காட்டியது. சுதி ஏறிப்போன கல்யாணி எழுந்து நின்று நெட்டி முறித்தாள். சிலை வார்த்த மேனியெனச் செதுக்கியபடியிருந்தாள். புறாவின் கன்னக்கதுப்புகளில் படிந்திருக்கும் சாம்பல் நிறத்தை ஒத்திருந்தது அவள் மேனி. முந்தியை வாரிச்சுருட்டிச் சொருகிக்கொண்டாள். மைனரின் சகலமும் அவளின் முந்தியில் சொருகிக்கொண்டதாக அல்லாடிக் கொண்டிருந்தார். தன் வசத்தில் மைனர் இல்லையென்பதை அத்தனை போதையிலும் தேசிங்கு உணர்ந்து கொண்டார்.

ஊர்வலம் தொடங்கியது. பேட்டையில் கல்யாணியின் சாவு டான்ஸுக்கு ஈடு கொடுக்கும் பயல்கள் இனிதான் பிறக்க வேண்டும். ஆனாலும், பயல்கள் கல்யாணியோடு குத்துவதைக் கொண்டாடித் தீர்த்துக் கொள்வான்கள். ஊர்வலம் நெடுஞ்சாலைக்கு வந்தது. கல்யாணியின் அரங்கேற்றம் இதிலிருந்துதான் ஆரம்பமாகும். திருநா ஒரு லோட்டாவை லோடு பண்ணிக்கொடுக்க ஏற்றிக் கொண்டாள். “குத்துடா திருநா” கல்யாணி மதர்த்துப்போயிருந்தாள். உடல்தான் போதையில் சற்று தள்ளாடியபடி இருந்தது. அவளின் கண்கள் இந்த வாழ்வின் மீதான தனது நடனத்தை ஆடித்தீர்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் இருந்தது. ‘டர்னாக்… னாக்… னாக்… னாக்… னாக்கு… னாக்கு… டர்னாக்’ சட்டியைத் தோளில் மாட்டிக்கொண்ட பெருசு அடியை வாசித்தது. திருநா ஷெனாயில் தோதாக இழுத்து இழுத்து தம் கட்டினான். ஊர்வலத்தில் ஆடிக்கொண்டிருந்த பயல்கள் எல்லாம் வழி விட, கல்யாணி களம் இறங்கினாள், ஊர்வலத்தின் நாயகன் என்கிற முறையில் பரமசிவம் முதலியார் பிணத்துக்கு ஒரு சலாம் வைத்தாள். ஒரு மயில்போல பாவம் பிடித்து ஆடத் தொடங்கினாள். அவள் முகம் குறு குறுவென்று மயில் பார்ப்பதைப் போலவே பாவனை கொண்டாள். மைனர் வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். கல்யாணியின் வளைவு நெளிவுகளில் தன்னை சந்தனமாகக் கரைத்துப் பூசிக் கொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டார். ஆட்டம் குத்தாக மாறியது.

மயிலென பாவம் கொண்டவள் இப்போது புலியெனச் சீற்றம் கொண்டாள். எதிரே ஆடிக்கொண்டிருந்தவன் லுங்கியை வாயில் கடித்துக்கொண்டு குத்தினான். மைனரும் கல்யாணியோடு ஒரு குத்தாவது குத்திவிட வேண்டும் என நேரம் பார்த்து நடந்துகொண்டிருந்தார். கல்யாணி ஒரு மாகாளியெனத் தன்னை வரித்துக்கொண்டாள். மிகுந்த ஆவேசம் கொண்டவளாக ஆடிக்கொண்டிருந்தாள். தன் ஸ்தனங்களை வாத்தியத்துக்கு ஏற்றவாறு இங்கும் அங்கும் குலுக்கிக் குலுக்கி ஆடியது மைனரைப் பித்துப்பிடிக்கவைத்தது. எதிரே குத்தியவனுக்கு தாவு தீர்ந்து ஆட்டத்தின் சுதி குறைந்தது. தனது தோல்வியை ஒப்புக்கொண்டவனாக கல்யாணிக்கு ஒரு சலாம் வைத்தபடி ஒதுங்கிக்கொண்டான். சரியான சமயம் என்று நினைத்த தேசிங்கு மைனரை ஆட்டக்களத்தில் தள்ளி விட்டார். மைனரும் குத்துகிறேன் பேர்வழியில் ஏதோ ஆட, கல்யாணி மைனரின் தோளில் கை போட்டபடி தன் இடுப்பை மட்டும் தாளத்துக்கு ஏற்றாற்போல வளைத்து நெளித்து ஆடினாள். மைனருக்கு ஒன்றும் புரியவில்லை. இப்பிறவியின் பெரும்பயனை தான் அடைந்து விட்டதாக உணர்ந்தார். ஷெனாய் வாசித்துக்கொண்டிருந்த திருநா,  கல்யாணியை ஆச்சர்யமாக பார்த்தான். யாருடனும் அவள் இப்படி நடந்து அவன் பார்த்ததில்லை. தனது ஆட்டத்தால் எவனையும் சலாம் வைக்க வைத்துவிடும் இவள்… ஒரு நளினத்தோடு ஆடுவதை முதன்முதலாகப் பார்த்தபோது திருநாவுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

p86b.jpg

சோமு செட்டியார் தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த இரவு. பரமசிவம் கல்லறையின் மேல் ஒரு விரிப்பைப் போட்டு கல்யாணி உட்கார்ந்திருந்தாள். மைனர் அவளின் மடியில் படுத்தபடி நிலவை ரசித்துக்கொண்டிருந்தார். பௌர்ணமியின் முந்தைய நாள் இரவு என்பதால், நிலவு பொன்னிறத்தில் கனிந்து களி கூர்ந்து இருந்தது. ஹரிச்சந்திரன் சமாதியில் திருநாவும் பெருசும் சரக்கடித்துக் கொண்டிருந்தனர். மைனர் மிதமான போதையிலிருந்தார். “நேத்து மார்க்கெட்ல வச்சு… மூணு பேரும் ரவுண்டு கட்டி அந்த மாரி கேள்வி கேட்டாளுங்கலாம்… தேசிங்கு சொன்னான்… உனக்கு வாயி இல்ல… நீ நாலு கேள்வி நறுக்குன்னு கேட்க வேண்டியதுதான…” சொக்கலால் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு ஓர்  இழுப்பு இழுத்துக்கொண்டார். “மைனரே நீ இன்னா ஆளுன்னு எனக்குத் தெரியாது… அவளுகளாண்ட நீங்க கேட்டதுதாண்டி கரெக்ட்டுன்னு சொல்லியிருப்ப… இங்க வந்து கத வுட்றியா… ஆங்…” கல்யாணி இப்படிக் கேட்டதும் மைனர் இருமியே சமாளித்தார்.

“பதில் சொல்லத் துப்பில்ல… இருமி சமாளிக்கிறான் பாரு…” செல்லமாகத் தொடையைக் கிள்ளி எடுத்தாள். மைனர் வலிப்பதுபோல துள்ளி எழுந்து கல்யாணியின் பக்கத்தில் உட்கார்ந்து அணைத்துக் கொண்டார். “அது என்னமோடி… மூணு பேரும் சக்களத்திங்கதான்… ஆனா பாரு செட் ஆயிட்டாளுங்கோ… இவுளுக்கு ஒண்ணுன்னா… அவ துடிக்கறதும்… அவுளுக்கு ஒண்ணுன்னா இவ துடிக்கறதும்னு ஒண்ணும் மண்ணுமா இருக்காளுங்கோ… உன்னதான் சேத்துக்க மாட்டிங்கறாளுங்கோ… அதான் ஒண்ணும் புரியல…” மைனர் யோசிப்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டார். “புரியாத மாறியே மூஞ்ச வச்சிக்காத… என்னதான் இருந்தாலும் அவளுங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணு… ஒரே வகையறா… நான் அப்டியா… என்ன எப்டி சேப்பாளுங்கோ… மைனரே ஒண்ணு சொல்றேன் நல்லா புரிஞ்சுக்கோ… அவுளுங்களுக்கு நீ வச்சிக்கினு இருக்கறது பிரச்சன இல்ல… என்ன வச்சிக்கினு இருக்கறதுதான் பிரச்சன. அப்புறம் நீதான் என்ன வச்சிக்கினு இருக்கன்னு நெனக்கறாளுங்க... நான்தான் உன்ன வச்சிக்கினு இருக்கறனு போக்ச் சொல்லு… தாலி கட்டிக்கினு எத்தன பேர வேணா வச்சிக்கலாம்… எவனும் ஒண்ணும் சொல்ல மாட்டானுங்கோ… தனியா ஒருத்தி வாழ்ந்துடக் கூடாது…  த்தா... தனியா ஒருத்தி கவ்ரதயா வாழவே முடியாதுன்னா… நீங்க இன்னா ஆம்பளைங்கடா… உன் பொண்டாட்டிங்க பச்சையா கேக்கச் சொல்லவே வந்துச்சு…

மார்க்கெட்டாண்டயே வச்சு நாலு வாங்கு வாங்கியிருப்பேன்… உன் மூஞ்சிக்காகத்தான் உட்டேன்” மைனரின் முகம் பரவசத்துக்குள்ளாகி கல்யாணியை இறுக்கி முத்தினார். அடுத்த பரவசத்துக்குள் தாவ முயன்றபோது மைனரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள். விழிகளில் ஈரம் படிந்திருந்தது. மைனருக்கு ஏதும் விளங்கவில்லை. இத்தனை வருட பந்தத்தில் கல்யாணி அழுது மைனர் பார்த்ததில்லை.

“பேண்டுக்காரனுக்கு பொண்ணா பொறந்தது தப்பாய்யா… அப்பன்தான் எல்லாம்… பேண்டு வாத்தியத்த கேட்டே வளந்தவ… சின்ன வயசிலயே ஷெனாய வாசிக்க ஆரம்பிச்சன்… எங்கப்பனுக்கு ஒரே குஷி… என் வாரிசு பாத்தியாடான்னு பொங்குனான்… வயசாகிப்போயி… அப்பனால வாசிக்க முடில…

தாவு தீந்துட்சி… நான் வாசிக்க ஆரம்பிச்சேன்… லுங்கியத் தூக்கிக்கினு என் முன்னாடி வந்து குத்துவானுங்க… அப்பனால அதத் தாங்கிக்க முடியல… என்ன எப்படியாவது ஒருத்தன் கைல புட்சிக் குடுத்துறணும்னு… எவ்ளோ அலைஞ்சான்… சாவுல வாசிக்கற பொண்ணுன்னு எவனும் வர்ல… இதுலயே குட்க்குட்சிச் செத்தும் போயிட்டான்… எப்பயாவது அப்பன் ஞாபகம் வரும்… யாருமே இல்லன்னு தோணும்… அப்பதான் உன்னப் பாத்தேன்… உன் மூஞ்சில எங்கப்பனப் பாத்தன்”. மைனர் ஒரு குழந்தையைப்போல குலுங்கி குலுங்கி அழுதார். ஒரே குத்தில் ஒருவனை நாக்கவுட் செய்துவிடும் மைனர், இந்த மாதிரியான விஷயங்களில் பொசுங்கிவிடுவார். தனக்காக அழுதுகொண்டிருக்கும் ஒரு ஜீவனை அத்தனைக் காதலோடு அணைத்துக்கொண்டாள். இது போதும் என நினைத்துக்கொண்டாள். தன்னைக் காதலோடு அணைத்துக் கொள்ளும் மைனருக்கு தன் ஜென்மத்தைக் கரைத்தால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் மைனரை மார்போடு இறுக்கிக்கொண்டாள். கல்யாணியின் மார்போடு புதைந்து விசும்பிக் கொண்டிருந்தவரிடம், “யோவ் மைனரு… அழாதய்யா… என்னமோ உன்னாண்ட சொல்லணும்னு தோணுச்சி… வுடு… வுடு…” என்றவள் மைனரின் தலையைக் கோதியபடியே அணைத்திருந்தாள். இப்போது கல்யாணிக்கு மைனர் தேவைப் பட்டார். முந்தியை விலக்கி இன்னமும் தோதாக மைனரின் முகத்தை அழுந்தச் செய்தாள். சமிக்ஞையின் சங்கேதம் புரிந்தவராக மைனர் குழந்தையாகிப்போனார். நடுநிசியில் நிலவு பிரகாசம் கொண்டிருந்தது. தனது நடனத்தைப் போல உக்கிரம்கொண்டவளாக மைனரைக் கீழே சரித்தாள். தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த கொள்ளி எழுந்து உட்கார்ந்து கொண்டது. தகதகவென ஒளிர்ந்த ஜுவாலையின் தீப்பொறியென வியர்வை தெறித்தது. வசமிழந்த மைனர், கல்யாணியை இறுகப் பற்றிக்கொண்டார். அவள் நெற்றியில் முத்தினார். ஜென்மம் ஈடேறிப்போனதாக இருந்தது கல்யாணிக்கு. எழுந்த கொள்ளி மீண்டும் தணலுக்குள் அடங்கியது. இருவரும் மல்லாந்து படுத்தபடி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். “கல்லு… எனக்கொரு ஆச… செய்வியா” மைனரின் மார்போடு திரும்பியவள் என்ன என்பதுபோல் பார்த்தாள். “நான் செத்துப்போயிட்டா எனக்கோசரம் அந்த மயில் டான்ஸ் ஆடுவியா… கண்ண உருட்டி உருட்டி என்னமா அழகா இருப்ப தெரியுமா நீ…” மைனரும் கண்ணை உருட்டிக் காண்பித்தார்.

“யோவ் நல்லாத்தான்யா உருட்ற நீ…” வெட்கத்தில் சிரித்தார் மைனர். “நீ இருக்கும்போதே ஆடுறவ…

செத்தா ஆட மாட்டனா… என்ன உன்னாலதான் பாக்க முடியாது…”

“நீ ஆடுனா… நான் செத்தாலும் பாப்பன் கல்லு…”. “நீ பாத்தாலும் பாப்பய்யா… நீ இன்னா மாறி ஆளுன்னு எனக்குத் தெரியாது…” என்று கண்ணடித்தாள்.

சடு வழிந்து சிரித்த மைனர்தான், தலைக்கட்டோடு வாயில் வெற்றிலை திணிக்கப்பட்டு கல்யாணியின் மயில் நடனத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

பிரியாணியைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தார் பஷீர். மைனருக்கு முன்னால் தார்ப்பாயை விரித்தார்கள். பந்தலை நட்டு சீரியல் விளக்குகளால் மைனர் ஜொலித்துக் கொண்டிருந்தார். ஜிகான் தலைமையில் கானா குழுவினரும் ஆஜராகி விட்டனர். இந்த இரவு முச்சூடும் தனது பாடல்களால் மைனரைக் குஷிப்படுத்திவிட வேண்டும் என ஜிகான் தொண்டையைச் செருமிக் கொண்டான். தபேலா அண்ணன் டகாவை ‘பும் பும்’ என்று இழுத்துக்கொண்டார். பேட்டைத் தலைவர் தன் ஜமாக்களோடு மைனரின் லீலைகளைப் பேசியபடி சரக்கை இழுத்துக் கொண்டிருந்தார். தேசப்பன்தான் ஆரம்பித்தார், “இன்னா தேசிங்கு… கல்யாணியக் காணோம்…

ஹும்… என்னதான் இருந்தாலும் அவளும் பொம்பளதான… இத்தன வருஷமா அவ முந்தானையவே மோந்துக்கினு இருந்தாரு… போக்ச் சேந்துட்டாரு, ஊரே காறி மூஞ்சாலும்… மைனர அப்பிடித் தாங்கிப் புடிச்சவ… குடுத்து வச்ச மனுசன்தாண்டா மைனரு” மட்டை ஊறுகாயைத் தொட்டுக்கொண்டவர் தேசிங்குவிடம் நீட்டினார். ஒரு லோட்டாவைச் சாத்திவிட்டு ஊறுகாயை நக்கிக்கொண்ட தேசிங்கு, “கல்யாணி தெய்வம்ப்பா… கட்ஸிக் காலத்துல சீக்கு வந்து கெடந்தப்போ, மூணு பொண்டாட்டிகளும் கழுவித்தான் ஊத்துனாளுங்கோ… இவதான் மைனரை ஒரு கொழந்தயாட்டம் பாத்துக்குனா” என்று லோட்டாவை கேன் பையனிடம் நீட்டினார் தேசிங்கு. “ஏழு குறுக்கு நாலு நெடுக்கு நான்கலாக்கில்… வாகனம்… அந்த நான்கலாக்கு வாகனத்துல நீயும் நானும் போகணும்… போயித்தானே ஆகணும்…” ஜிகானின் பாடல் பொண்டு பொடிசிலிருந்து பெருசு வரைக்கும் உற்சாகத்தை வரவழைத்தது. அப்போதுதான் யாவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கல்யாணி தனது பேண்ட் வாத்தியங்களோடு வந்திறங்கினாள்.

மைனரின் மூன்று மனைவிமார்களின் முகங்களும் அந்த இரவிலும் வியர்த்துக் கொட்டியது. கல்யாணி கையில் ஒரு மாலையோடு மைனர் அருகே வந்தாள். பக்கத்தில் திருநாவும் வந்தான். சில்லிட்டிருந்த மைனரின் உடல் ஏதோ முறுக்கேறியதைப்போல முகம் பரவச நிலையில் இருப்பதாகத் தோற்றம் கொண்டது. “எப்டி கல்லு மாதிரி வரா பாரு… கண்ணுல ஒரு கண்ணீரு இருக்கா… ஒரு கம்பல இருக்கா” மூத்த மனைவி முணுமுணுத்தாள். “கட்னவளுக்குத்தான் கட்ட வலிக்கும்… ஒட்னவளுக்கு ஒடம்பா வலிக்கும்… முண்ட” நடு மனைவி கடிந்துகொண்டாள். தேசிங்கு எழுந்து வந்து கல்யாணியோடு சேர்ந்து கொண்டார். கொண்டுவந்த மாலையை மைனருக்குப் போட்டாள். மூன்று மனைவிகளும் எரித்துவிடுவதைப்போலப் பார்த்தார்கள். அந்தப் பார்வையைத் தனக்கு ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டாள்.

ஊரறிய, மைனரின் மனைவிகள் அறிய, அவருக்கு மாலையிடுவதில் பேருவகை கொண்டாள். மைனருக்குப் பிடித்த குதிரைப் படம் போட்ட பிராந்தி புட்டியைக் கீழும் மேலுமாக தட்டி மூடியைத் திறந்தாள். மைனருக்கு படைப்பதைப்போல வைத்துவிட்டு ஒரு துளியைத் தெளித்துவிட்டு ராவாக அடித்தாள். “வெண்ணிலா முற்றத்திலே வேணு கானம்… மேல் மாடி உச்சியிலே அவளும் நானும்” பாடிக்கொண்டிருந்தான் ஜிகான்.

சட்டியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டான் அயிலு. ஷெனாயில் ஒற்ற அடியை வாசிக்கத் தொடங்கினான் திருநா. ஜிகான் குழுவினர் புரிந்து கொண்டு அமைதி காத்தார்கள். பேட்டையே சூழ்ந்துகொள்ள, கல்யாணி முந்தியைச் சொருகினாள். மைனருக்கு வணக்கம் வைத்தாள். மயில்போல ஆடத்தொடங்கினாள். வளைவு நெளிவுகளில் கொஞ்சம் வயது தெரிந்தாலும்… மினுக்கு குறையவில்லை. எல்லா சுக துக்கங்களையும் தனது நடனத்தால் சமன் செய்துகொள்கிறாள். ஒற்றஅடி இப்போது குமுக்குக்கு மாறியது. தேசிங்கும் தன்னை மறந்து ஆடினான். தீப்பிழம்பென ஆடிக்கொண்டிருக்கும் நடனத்தின் ஒவ்வோர் அசைவிலும் மைனரின் காதல் ஒளிந்துகொண்டிருந்தது. மைனரின் முகம் கனிந்து களி கூர்ந்து ஒளிர்ந்துகொண்டிருந்தது. கல்யாணியின் இத்தனை தீவிரமான நடனத்தை பேட்டை முதன்முதலாகப் பார்க்கிறது. உச்சத்தில் நடனத்தை நிறுத்தியவள் மைனர் அருகே சென்று நெற்றியில் முத்தினாள். “என்னை மனுஷியா நடத்துன ஆம்பளைய்யா நீ… போயிட்டு வா…” என்று மைனரிடம் சொல்லிவிட்டு யாரையும் சட்டை செய்யாமல் திரும்ப நடந்தாள். மைனர் ஆசுவாசம் அடைந்தார்.

தூரத்தில் மைனர் எரிந்துகொண்டிருந்தார், பௌர்ணமியின் முந்தைய நாள் நிலவு அத்தனை ஒளிர்வோடு மின்னிக்கொண்டிருந்தது. பரமசிவம் கல்லறையில் உட்கார்ந்திருந்தாள் கல்யாணி. மாயரூபமென மைனர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து மடியில் கிடந்து, சிரித்து பின் மறைந்தார். இனி இந்த வாழ்வில் தான் பேசுவதற்கு மைனர் இல்லை என்று உணர்ந்த தருணம் பெருங்குரலெடுத்து கல்யாணி அழத் தொடங்கினாள்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய மைனர்களின் வாழ்க்கை.... சும்மா சொல்லக் கூடாது, ஒரு ராஜா கூட அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்.... என்ன நிறைய கல்யாணிகளை உருவாக்கி விட்டிருப்பார்கள்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். 13 சக, எக்கிய ராஜ்ய என்றெல்லாம் உரையாடப்பட்ட ஓர் அரசியல் பரப்பில், இப்பொழுது ஓஸ்லோ ஆவணத்தை முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை பொது வேட்பாளர் என்ற தெரிவு ஏற்படுத்தியிருக்கின்றதா? கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அந்த ஆவணத்தை முன்வைத்து உரையாடப்படவில்லை?அதைவிட முக்கியமாக அந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்துத்தான் 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டதா ? முதலில் அந்த ஒஸ்லோ ஆவணத்தைப் பார்க்கலாம். அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம். அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த நிலைப்பாடு பின்வருமாறு…”உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு, தமது வரலாற்று ரீதியிலான, பாரம்பரிய வாழ்விடத்தில், ஐக்கிய இலங்கைக்குள், சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக இரு  ஆராய இரு தரப்பும் உடன்படுகின்றன.” அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் அந்த உடன்பாடு எத்தகைய ஓர் அரசியல் சூழலில் எட்டப்பட்டது? அது நோர்வையின் அனுசரணையோடு இணைத்தலைமை நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. அதாவது மூன்றாவது தரப்பு ஒன்றின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. இது மிக முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. உலகில் உள்ள எல்லாத் தேசிய இனப்பிரச்சனைகளும் சாராம்சத்தில்,அனைத்துலகப் பிரச்சனைகள்தான். உள்நாட்டு பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகள் தலையிடும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சிகளைப் பெறுகின்றன. எனவே தேசிய இனப்பிரச்சனைகள் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுகள்தான் உண்டு. உள்நாட்டுத் தீர்வுகள் கிடையாது. திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அதைத்தான் நிரூபிக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனைக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீட்டோடு அந்த தீர்வு உருவாக்கப்பட வேண்டும். எனவே ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை அதன் அனைத்துலகப் பரிமாணத்துக்குள் வைத்து முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் ஓர் உடன்படிக்கைக்கு வர எந்த  ஜனாதிபதி வேட்பாளர் தயார்?அவ்வாறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராவது தயாராக இருந்தால், ஒரு பொது வேட்பாளருக்கான தேவை இருக்குமா? எனவே பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கு எதிராக ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை முன்வைப்பவர்கள் அந்த விடயத்தில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் யார் ஒரு மூன்றாவது தரப்பின் மேற்பார்வையில் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயார்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மே தினத்தில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றியதுபோல, தமிழ் மக்களோடு அப்படி ஓர் உடன்படிக்கைக்கு வரக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர் தமிழ்மக்கள் மத்தியில் 100வாக்குகளை பெறலாம். ஆனால் தென்னிலங்கையில் அவர் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். 15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தமாக உள்ளது என்பது எத்துணை குரூரமானது? தமிழ் மக்களோடு மிகச்சாதாரண அடிப்படைகளில் ஓர் உடன்படிக்கைக்கு வரக் கூட எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. இப்போதுள்ள ஜனாதிபதிதான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்படுகையில் பிரதமராக இருந்தவர். அவர் இப்பொழுது என்ன கூறுகிறார்? இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகத் தந்திரமாகக் குறுக்குகிறார். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத்தான் தீர்வு தேவை என்று சூசகமாகக் கூறுகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு 13ஐத்தரலாம் என்று கூறுகிறார். அதாவது 13மைனஸ். மற்றவர் சஜித் பிரேமதாச. அவர் 13பிளஸ் என்று கூறுகிறார். ஒரு தீர்வை முன்வைத்து மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் ஒரு பன்னாட்டு உடன்படிக்கைக்கு வர அவர் தயாரா? மூன்றாவது அனுரகுமார. அவர் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை இதுவரை துலக்கமான வார்த்தைகளில் தெரிவிக்கவில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வேட்பாளர்களில் யாருமே தமிழ்மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கப்போவதில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரோடு ஏதோ ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்று கருதும் தரப்புக்கள் தமிழ்மக்களுக்குப் பின்வரும் விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான வேட்பாளராவது தமிழ் மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறாரா? அது ஓஸ்லோ ஆவணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்குமா?அல்லது 2015-2018 வரையிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபில் காணப்படும்”எக்கிய ராஜ்ஜிய”என்ற தீர்வா? இவற்றுடன் மேலும் ஒரு கேள்வியை கேட்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்த் தரப்பின் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு வேட்பாளர்-மைத்திரிபால சிறிசேனதான்-வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட, அதாவது பொறுப்புக் கூறலுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய யாப்பு ஒன்றுக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடைக்கால வரைபின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனைக் காட்டிக்கொடுத்தார். ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார். இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய மிக அரிதான ஒரு மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்தார். அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றதால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்தார். நல்லாட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன, கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் 10 ஆண்டுகால வளர்ச்சியில் அவை இயல்பாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள்தான். ஆனால்,மைத்திரியுடனான சமாதானத்தின் இதயம் என்று கூறத்தக்கது, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிதான். ஆனால் அதைத் தோற்கடித்ததே அவர்தான். இவ்வாறான ஏமாற்றுகரமான 15 ஆண்டுகளின் பின்னணியில், தமிழ்த்தரப்பின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவர் மைத்திரியைப்போல மஹிந்தவின் வீட்டில் அப்பம் சாப்பிட்டு விட்டு தலைகீழாக நிற்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேற்படி கேள்விகளுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகள் தெளிவான விடைகளை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த எந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையிலும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாத ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை இப்பொழுது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன? அதைக் குறித்து உரையாட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதுபற்றி உரையாடப்படவில்லை. தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தோடு அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2018-2021வரையிலுமான காலகட்டத்தை குறிப்பிடலாம். 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ்க்கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகளும் வெவ்வேறு தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. தவிர,தமிழ் மக்களிடமும் அது தொடர்பாகக் கருத்து அறியப்பட்டது. அந்த யாப்புருவாக்க முயற்சியைத்தான் மைத்திரி குழப்பினார். அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். தமிழ்த் தரப்பு அங்கேயும் யோசனைகளை முன் வைத்தது. இவ்வாறாக நவீன தமிழ் வரலாற்றில் தமிழ் மக்கள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த அக்காலகட்டத்தில் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தைக் குறித்து யாரும் உரையாடவில்லை. இப்பொழுது மட்டும் ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக ஏன் அந்த ஆவணம் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது? விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஒரு நிலைப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைப் பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கப்படுகின்றதா? ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைக்கும் சிவில் சமூகங்கள், தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் நம்பவில்லை என்றுதான் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலை  ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கின்றன. இது ஏறக்குறைய தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமானது. சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஆகப்பிந்திய முயற்சி. அவ்வாறு தமிழ் அரசியல் சக்தியை,தமிழ் வளத்தை,தமிழ்ப் பலத்தை,ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பது ஏன் தவறானது என்பதற்கு அதை எதிர்ப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள்?   https://www.nillanthan.com/6770/
    • சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024   சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவானது சிறிலங்கன் ஏர்லைன்சை தனியார் துறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்களை அண்மையில் கோரியதுடன், ஆறு நிறுவனங்கள் இதற்காக முன்வந்தன. AirAsia, Fitz Air, Darshan Elites Investment Holdings, Fitz Aviation, Sheriza Technologies Subsidiary Supreme Company, Treasure Republic Guardian Company மேலும் Hayleys இவ்வாறு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பிட்டு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதில் இரண்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் Hayleys இலங்கையைச் சேர்ந்தது. இது ஒரு முன்னணி பொது நிறுவனம் ஆகும். மேலும், சுப்ரீம் குளோபல் நிறுவனம் இலங்கையில் பல முதலீடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். மேலும், அந்த நிறுவனம் தனது லட்சிய முன்மொழிவை ஷெரிசா டெக்னாலஜிடம் முன்வைத்துள்ளது. இது கட்டார் நாட்டின் ஷேக்கான நயீப் பின் ஈத் அல் தானியின் முதலீடாகும். அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயங்கி வரும் இலங்கையின் தேசிய விமான சேவையானது தனது முன்னேற்றத்தையும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், இனி விமான சேவையை பராமரிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/சிறிலங்கன்-விமான-சேவையை/
    • அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/203417/  
    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.