Jump to content

மன்னிக்க மாட்டோம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தரையில் தமிழன்

வீழ்ந்திட்ட நாள் இது அல்ல
தன் நாடு மீட்க தன் உயிரை

தமிழன் ஈய்ந்த நாள் இது
 
மீண்டும்  நாம் நிமிர்வோம்

எப்போதும் நிமிர்ந்து நிற்போம்
 
ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில்

எமக்கானவை எல்லாம் இழந்தோம்

தன் மானத்தை மட்டும்

இழக்கவில்லை

காத்திருக்கின்றோம்

எம்மைக்கான காலம் வரும் வரை
 
செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

கொலைக்களங்கள் பல கண்டும்

கொடுமைகள் நிதம்கொண்டும்

அடிமைகளாய் வாழ மாட்டோம்....

விடுதலைத் தாகம் உண்டு...

அதற்கான குரலும் உண்டு...

கோழைகளாய் வீழ மாட்டோம்...

மீண்டும் எழுந்திடுவோம்

பீனிக்ஸ் பறவைகளாய் .....

செங்குருதி தோய்ந்து

செத்தழிந்து போனவர்கள்

கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள்

உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள்

அத்தனை பெருக்கும் வீரவணக்கங்கள்

மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை

மரணத்தின் வாசலிலும் உங்களை

மறக்க மாட்டோம்

எம்மால் முடிந்தவரை உங்கள் கரம் சேர்ந்தோம்  

ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து

அழுவதாய் மற்றவர் முன்

பாசாங்கு செய்பவர்கள்

நாம் இல்லை

எம் இதயத்தில் உம்மை இருத்தி

இழப்புக்களை வலிப்புக்களை எல்லாம்

ஒன்று சேர்த்து

மீண்டும் வருவோம்

உமக்காக உமது இரத்தத்திற்காக

நாம் மீண்டும் வருவோம்

ஆனால் இன்று.....

காத்திருக்க மட்டுமே முடிகிறது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை

மரணத்தின் வாசலிலும் உங்களை

மறக்க மாட்டோம்

மீண்டும் எழுந்திடுவோம்

பீனிக்ஸ்ப்பறவைகளாய் .....  நன்றி  பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

நன்றி...வாத்தியார் !

உங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்!

மற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

நாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை!

ஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எம்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்!

எமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன!

ஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை!

அதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

தரையில் தமிழன்

வீழ்ந்திட்ட நாள் இது அல்ல
தன் நாடு மீட்க தன் உயிரை

தமிழன் ஈய்ந்த நாள் இது

-------

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

எட்டு வருடமாகியும்... இன்னும் அதற்கான, விடிவை பெற்றுத்  தர... 
ஒரு துரும்பையும், சர்வதேச த்தை நோக்கி அசைக்காமல்.....
ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்... தமிழ் தலைமையை நினைக்க...
வெறுப்புத் தான்... ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

தன் நாடு மீட்க தன் உயிரை

தமிழன் ஈய்ந்த நாள் இது
 
மீண்டும்  நாம் நிமிர்வோம்

எப்போதும் நிமிர்ந்து நிற்போம்

வர்ணாச்சிரமத்துக்கு அடிமையாகி இவ்வுலக வாழ்வை வெறுத்து மேலுலக வாழ்வைத் தேடிய போலி வாழ்க்கை முடிவுபெறும் அடையாளமே முள்ளிவாய்க்கால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாத்தியார் said:

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம்

உங்கள் சொல்லியங்கள் மெய்நிலையடைந்து தமிழினம் மேல்மைநிலையடைவேண்டுமென்பதே வேணவா. ஆழமான வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.5.2017 at 1:50 AM, நிலாமதி said:

மன்னிக்க மாட்டோம் சிங்கள தேசத்தை

மரணத்தின் வாசலிலும் உங்களை

மறக்க மாட்டோம்

மீண்டும் எழுந்திடுவோம்

பீனிக்ஸ்ப்பறவைகளாய் .....  நன்றி  பாராட்டுக்கள் 

வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாமதி அக்கா

On 19.5.2017 at 4:20 AM, புங்கையூரன் said:

நன்றி...வாத்தியார் !

உங்கள் கவிதையில் எனக்குப் பிடித்துக் கொண்ட வரிகள்!

மற்றும் படிக்கு....நாங்கள் மன்னிப்பதா அல்லது மன்னிக்காமல் விடுவதா என்பதில் காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

நாங்கள் மன்னிக்காவிட்டாலும்..சிங்களம் அதைப்பற்றிக் கவலைப்படுவது போலத் தெரியவில்லை!

ஆத்திரத்தையும், கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொள்வதால்...எம்மை நாமே வீணாக வருத்திக் கொள்கின்றோமோ..என்றே நான் நினைக்கிறேன்!

எமக்கான உரிமைகளை...பெறக்கூடிய தகுதியும், தராதரமும், நியாங்களும் எம் பக்கம் நிறையவே உள்ளன!

ஆனால் உரிய தலைமையும், ஒற்றுமையும் தான் எம்மிடம் இல்லை!

அதனை வளர்த்துக்கொள்வோமெனில்....எமக்கான விடிவு தூரத்திலில்லை!

நன்றி அண்ணா
இலக்கை எட்டும்வரை... அதற்கான தலைமையும் மக்களின் எழுச்சியும்.....
வரும்வரை நாங்கள் தூங்கிவிடக் கூடாதல்லவா,,,,
மக்கள் சோர்ந்து விடாமல் இருக்க வேண்டுமல்லவா...
எழுதுகோல்கள்தானே போராட்டத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.5.2017 at 4:56 AM, தமிழ் சிறி said:

எட்டு வருடமாகியும்... இன்னும் அதற்கான, விடிவை பெற்றுத்  தர... 
ஒரு துரும்பையும், சர்வதேச த்தை நோக்கி அசைக்காமல்.....
ஒப்புக்கு சப்பாணியாக இருக்கும்... தமிழ் தலைமையை நினைக்க...
வெறுப்புத் தான்... ஏற்படுகின்றது.

இன்று நம் முன்னே இருக்கும் தலைமைகளினால் மக்களுக்கு எந்த விடிவும் வரப்போவதில்லை என்பது எட்டு வருடங்களுக்கு முன்னரே தெரிந்த விடயம் சிறி அண்ணா.

மக்களின்  எழுச்சியைச் சரியான பாதையில் எடுத்துச் செல்பவனே உண்மையான தலைவன்
வரவிற்கு நன்றி சிறி அண்ணா

On 19.5.2017 at 6:16 AM, Paanch said:

வர்ணாச்சிரமத்துக்கு அடிமையாகி இவ்வுலக வாழ்வை வெறுத்து மேலுலக வாழ்வைத் தேடிய போலி வாழ்க்கை முடிவுபெறும் அடையாளமே முள்ளிவாய்க்கால். 

கருத்திற்கு  நன்றி பாஞ்ச் அண்ணா

இதற்கு ஒரு சிறிய விளக்கம் தாருங்கள்   

18 hours ago, nochchi said:

உங்கள் சொல்லியங்கள் மெய்நிலையடைந்து தமிழினம் மேல்மைநிலையடைவேண்டுமென்பதே வேணவா. ஆழமான வரிகள்.

நன்றி நொச்சியர்

நம்பிக்கையுடன் காத்திருப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற அருமையான கவிதை.....கடந்து போக முடியாது கையைப் பிடித்து இழுக்கின்றது.....!

பகிர்வுக்கு நன்றி வாத்தியார்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தேவை நாளாந்தம் கூடிக் கொண்டே போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-19 at 8:26 AM, வாத்தியார் said:

கொலைக்களங்கள் பல கண்டும்

கொடுமைகள் நிதம்கொண்டும்

அடிமைகளாய் வாழ மாட்டோம்....

அருமையான காலத்திற்கு ஏற்ற பகிர்வு,தாயக மக்கள்  இன்றும் தம்மால் முடிந்தவரை போராடி வாழ்கின்றார்கள்

Link to comment
Share on other sites

19 hours ago, வாத்தியார் said:

கருத்திற்கு  நன்றி பாஞ்ச் அண்ணா

இதற்கு ஒரு சிறிய விளக்கம் தாருங்கள்   

ஆதித் தமிழர் வாழ்வுமுறையை இங்கு யாழிணையத்திலும் பலர் எழுத வாசித்து வியந்துள்ளோம். ஒரு வீரமிக்க இனமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழினத்தைத் தொழில் முறையை வைத்துக் கூறுபோட்டு, இயற்கைக்கும் பல்வேறு வடிவங்கள் கொடுத்து இவர்கள்தான் கடவுள்கள் என்று இயற்கையிலும் பிரிவினை ஏற்படுத்தியதோடு, உலகத்தை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிப் பலரை வெறுக்கவும் வைத்து, வேற்றினம் இலகுவாக அடிமைகொள்ளக்கூடிய வகையில் தமிழினத்தைக் கொண்டுவந்து வைத்துள்ளது வர்ணாச்சிரமம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

காலத்திற்கேற்ற அருமையான கவிதை.....கடந்து போக முடியாது கையைப் பிடித்து இழுக்கின்றது.....!

பகிர்வுக்கு நன்றி வாத்தியார்....!

தன்னம்பிக்கையும் தளர்வற்ற நோக்கமும் இலக்கை நோக்கி முன்னேற முக்கியமானது. வருகைக்கு நன்றி சுவி அண்ணா

13 hours ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் புலிகளின் தேவை நாளாந்தம் கூடிக் கொண்டே போகிறது.

அவர்களும் மக்களிடையே இருந்து தானே வந்தார்கள்
நன்றி ஈழப்பிரியன் அண்ணா 

12 hours ago, putthan said:

அருமையான காலத்திற்கு ஏற்ற பகிர்வு,தாயக மக்கள்  இன்றும் தம்மால் முடிந்தவரை போராடி வாழ்கின்றார்கள்

அந்தப் போராட்ட வாழ்வையும்...  தவறியும்... ஆதரிக்காத.. எமது தலைமைகள்

இல்லாது போகும் வரை..... காத்திருப்போம்
நன்றி புத்தரே

4 hours ago, Paanch said:

ஆதித் தமிழர் வாழ்வுமுறையை இங்கு யாழிணையத்திலும் பலர் எழுத வாசித்து வியந்துள்ளோம். ஒரு வீரமிக்க இனமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த தமிழினத்தைத் தொழில் முறையை வைத்துக் கூறுபோட்டு, இயற்கைக்கும் பல்வேறு வடிவங்கள் கொடுத்து இவர்கள்தான் கடவுள்கள் என்று இயற்கையிலும் பிரிவினை ஏற்படுத்தியதோடு, உலகத்தை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிப் பலரை வெறுக்கவும் வைத்து, வேற்றினம் இலகுவாக அடிமைகொள்ளக்கூடிய வகையில் தமிழினத்தைக் கொண்டுவந்து வைத்துள்ளது வர்ணாச்சிரமம்.
 
கேட்டதும் விளக்கம் தந்தமைக்கு நன்றி பாஞ்ச் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணையா நெருப்பு நமக்குள் உண்டு என்று மீண்டும் மீண்டும் உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். நமக்காக அந்தநாள் காத்திருக்கிறது. நாம்தான் எட்டுக்கால் நண்டுகள்போல போகவேண்டிய திசை நோக்கி முகம் இருந்தாலும் ஒத்துழைக்காத கால்களால் தடம் மாறி இலக்கைச் சென்றடைய முடியாமல் தத்தளிக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

அணையா நெருப்பு நமக்குள் உண்டு என்று மீண்டும் மீண்டும் உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். நமக்காக அந்தநாள் காத்திருக்கிறது. நாம்தான் எட்டுக்கால் நண்டுகள்போல போகவேண்டிய திசை நோக்கி முகம் இருந்தாலும் ஒத்துழைக்காத கால்களால் தடம் மாறி இலக்கைச் சென்றடைய முடியாமல் தத்தளிக்கிறோம். 

அருமையான உவமானம் சகோதரி......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.