Sign in to follow this  
Followers 0
நவீனன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி முன்னேற்றம்

1 post in this topic

மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம்

மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம்
 

பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நேற்று நடைபெற்றன. அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு.

முதலாவது காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது.

இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்திhலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. 1:0 என்ற கோல் கணக்கில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய அணி வெற்றிபெற்றது.

மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் சென். சேவியர் ஆண்கள் பாடசாலை அணி மோதியது. 1:0 என்ற கோல் கணக்கில் சென். சேவியர் அணி வெற்றிபெற்றது.

நான்காவது காலிறுதி ஆட்டத்தில் அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய அணியை எதிர்த்து சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது. 5:0 என்ற கோல் கணக்கில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

7-4-1024x960.jpg

8-5-1024x888.jpg

10-2-1024x618.jpg

12-4-1024x696.jpg

14-2-1024x683.jpg

http://uthayandaily.com/story/3158.html

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0