Jump to content

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்குபற்ற அனுமதி மறுப்பு

Recommended Posts

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்குபற்ற அனுமதி மறுப்பு

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கும் இவ் வருட பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

sharabova

மரியா ஷரபோவாவுக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு (வைல்ட் கார்ட்) வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிச்சியதை அடுத்து விதிக்கப்பட்ட 15 மாதத் தடையின்பின்னர் மரியா ஷரபோவா மூன்று டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

எனினும் மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

‘‘உபாதையினால் பீடிக்கப்பட்ட மீண்டும் விளையாட வரும் ஒருவருக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு வழங்கலாம். ஆனால் ஊக்கமருந்து பாவனையில் சிக்கியமைக்காக தடைக்குட்பட்டு மீள்வருகை தரும் ஒருவருக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு வழங்க முடியாது’’ என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனத் தலைவர் பேர்னார்ட் ஜியூடிசெலி ஃபெராண்டினி தெரிவித்தார்.

‘‘இதனால் அவர் (ஷரபோவா) ஏமாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் போட்டியின் மகத்துவத்தையும் சந்தேகத்தைத் தோற்றுவிக்காத முடிவுகளைத் தரும் விளையாட்டையும்  காப்பாற்றவேண்டியது எனது பொறுப்பாகும்’’ என்றார் ஃபெராண்டி.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்பதை அறிந்த சொற்பநேரத்தில், உபாதையைக் காரணம் காட்டி இத்தாலி பகிரங்க போட்டிகளின் இரண்டாம் சுற்றின் மூன்றாவது செட்டில் முன்னிலையில் இருக்கையில் மரியா ஷரபோவா விலகிக்கொண்டார்.

‘‘எனது இடது கால் தசைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக நான் விலகிக்கொள்வதையிட்டு மன்னிப்பு கோருகின்றேன். இந்த உபாதை பாரதூரமானதா இல்லையா என்பது குறித்து மருத்துவ சிகிச்சைக்குள்ளாவேன்’’ என மரியா ஷரபோவா தெரிவித்தார்.

ஆல் இங்க்லண்ட் க்ளப் டென்னிஸ் போட்டியில் குருட்டு வாய்ப்பு சீட்டு கிடைக்குமா என்பதை அறிய ஜூன் 20ஆம் திகதிவரை ஷரபோவா காத்திருக்கவேண்டும்.

http://metronews.lk/?p=7921

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

open என்ற சொல்லின் தமிழாக்கம் பகிரங்கமோ ?

ரொம்ப ஆர்வமாக மொழி பெயர்கிறார் போல் தெரிகிறது.

3 hours ago, நவீனன் said:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.