• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

‘எடப்பாடி பழனிசாமியை ஏன் பிடிக்கவில்லை?!’ - ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்? #VikatanExclusive

Recommended Posts

‘எடப்பாடி பழனிசாமியை ஏன் பிடிக்கவில்லை?!’ - ஆட்சியைக் கவிழ்ப்பார்களா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்? #VikatanExclusive

 

எடப்பாடி பழனிசாமி

மிழக அரசை அச்சத்துடன் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த நல்ல தலைமை இல்லாததால், அமைச்சர் பொறுப்பைக் கேட்டு எம்.எல்.ஏக்கள் பலரும் நெருக்கடி கொடுக்கின்றனர். 'குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்ற தகவலால், எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில்.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில், நேற்று மாலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமையில் ரகசியக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாகவும் செய்தி வெளியானது. ‘எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில்கூட முதலமைச்சர் இல்லை. தனக்கு வேண்டப்பட்ட அமைச்சர்களை மட்டும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அனைவருக்கும் பொதுவான அரசாக இது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்காது’ என அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள். முதல்வருக்கு எதிரான இந்தக் கூட்டத்தால், அமைச்சர்கள் மத்தியில் ‘திடீர்’ கலக்கம் நிலவியது. 

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் கொங்கு மண்டல எம்.எல்.ஏ ஒருவர், “எம்.எல்.ஏக்களின் பிரச்னை என்பது ஏதோ முதல்வருடன் மட்டுமே முரண்பாடு ஏற்பட்டுள்ளதைப் போன்ற தோற்றத்தை நேற்றைய கூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. உண்மை அதுவல்ல. மாவட்டங்களில் நிலவும் அதிகாரப்போட்டிதான் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் மூல காரணம். கரூரில் எடுத்துக் கொண்டால், மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக நீதிப் போராட்டத்தையே நடத்தினார் செந்தில் பாலாஜி. அவருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையில் நேரடி தகராறு ஏற்பட்டது. தர்மபுரியில் அன்பழகனுக்கும் பழனியப்பனுக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது. ஈரோட்டில் செங்கோட்டையனுக்கும் கருப்பண்ணனுக்கும் இடையில் பனிப்போர் சூழ்ந்துள்ளது. கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.

தோப்பு வெங்கடாச்சலம்இதேநிலைதான், மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் நிலவுகிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருந்த காலத்திலேயே, பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தார் தினகரன். அதன்படி, 'தொகுதிக்குள் நடக்கும் அரசு ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை; மாதம்தோறும் மாவட்ட அமைச்சரின் கணக்கில் இருந்து அன்பளிப்பு' என எம்.எல்.ஏக்கள் மனதைக் குளிர வைத்தார். ஆனால், ஆட்சி அமைந்ததில் இருந்து தொகுதி நிதியை ஒதுக்கீடு செய்யும்படி கேட்டால், 'நிதிப் பற்றாக்குறையில் அரசு தவிக்கிறது. விரைவில் ஒதுக்கீடு செய்கிறோம்' என்கின்றனர். ஆனால், முதல்வருக்கு வேண்டப்பட்ட அமைச்சர்களின் தொகுதிகளுக்கு மட்டும் சலுகைகளைக் காட்டுகின்றனர். மாநிலம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 'தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும்' என்று நிதியைக் கேட்டால், முகத்தைச் சுழிக்கிறார் பழனிசாமி. அரசு ஒப்பந்தங்களிலும் அமைச்சர்களின் கையே ஓங்கியிருக்கிறது. எம்.எல்.ஏக்கள் பலரையும் அவர்கள் ஓரம்கட்டுகின்றனர். எனவேதான், எங்கள் எதிர்ப்பைக் காட்ட 11 எம்.எல்.ஏக்களும் அணி திரண்டோம்" என்றார் விரிவாக. 

"எடப்பாடி பழனிசாமி அரசை நகர்த்திக் கொண்டு போவது 123 எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான். கடந்த மாதம் பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ தலைமையில் அட்டவணைப் பிரிவு எம்.எல்.ஏக்கள் தனிக்கூட்டம் நடத்தினர். ‘அமைச்சர் பதவியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இவர்களை சமாதானப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அதற்குள், புதிய கூட்டத்தை நடத்தியிருக்கிறார் தோப்பு வெங்கடாச்சலம். இவர்களின் நோக்கம் எல்லாம், மீண்டும் அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தை நிறைவேற்ற தங்களுக்குச் சாதகமான எம்.எல்.ஏக்களைத் துணைக்கு அழைக்கின்றனர். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அமைச்சர் என்றால்தான், அரசு விழாக்களில் மரியாதை களைகட்டும். ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தக் கண்டிப்பான தலைமை இல்லாததால், ஆளாளுக்கு போர்கொடி உயர்த்துகின்றனர். இவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்தால், புதிதாக 50 அமைச்சர் பதவிகளை உருவாக்க வேண்டும். அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. 'பத்து எம்.எல்.ஏக்கள் கழன்றுவிட்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும்' என்ற அச்சத்தை விதைத்துக் கொண்டே காரியம் சாதிக்க நினைக்கிறார்கள். செந்தில்பாலாஜியின் மருத்துவக் கல்லூரி கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசு எதிர்ப்பு என்ற மனநிலையில் இருந்து அவர் விலகிவிடுவார். இதேபோல்தான், கூட்டம் போட்ட ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது. இவர்களை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாதானப்படுத்தப் போகிறார் என்று தெரியவில்லை" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

ரகசியக் கூட்டம் குறித்து பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசினோம். "கூட்டத்தில் (?) இருக்கிறேன். இதுகுறித்து விரைவில் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

 

'தலைவன் இல்லாத படை சிதறி ஓடும்' என்பதை தினம்தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/89644-mlas-preparing-to-bring-down-edappadi-palanisamy-s-government.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this