Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு


Recommended Posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு
 

article_1495089174-article_1479829865-prமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம்.   
மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டுக் கலைந்து செல்வதுடன் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப்போகிறோம்(?).   

அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நாம் மேற்கொள்ள வேண்டிய கூட்டுச் சத்தியத்துக்கான கடப்பாடு எங்கு போனது? முள்ளிவாய்க்கால் என்பது நினைவேந்தலுக்கான களம் மட்டும்தானா? அதனை மீறிய கூட்டுப் பொறுப்பையும் நீதி கோரலுக்கான தார்மீகத்தையும் அது கொண்டிருக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளினால் தொக்கி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலம்.  

கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு, சில மணி நேரங்களுக்குள் முடிந்து போனது. அரசியல் தலைவர்கள் பெருமெடுப்பில் வாகனங்களில் வந்தார்கள்; அஞ்சலிச் சுடரேற்றினார்கள்; உணர்ச்சி பொங்க உரையாற்றினார்கள்; கண நேரத்தில் கலைந்து போனார்கள்.   

அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முடிந்து போனது. அங்கு பொதுமக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் கூட்டுணர்வுகளைப் பிரதிபலிக்கச் செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதுவொரு தேர்தல் கால அரசியல் நிகழ்வு போல நடந்து முடிந்தது.  

மாண்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திப் பிரார்த்திப்பது என்பது அனைவரதும் அடிப்படை உரிமை. அதுவும், பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் திட்டமிட்டு பலிகொண்ட பெரும் அயோக்கியத்தனத்துக்கு எதிராகக் கூட்டுணர்வோடு ஒருங்கிணைவதும் பெரும் கடமை. ஆனால், இவற்றோடு ஒட்டிக் கொண்டு வரும் தார்மீகம் என்பது மாண்டுவிட்ட உறவுகளுக்கு நாங்கள் செய்ய வேண்டியவை. அவை பற்றிய உரையாடலை எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது என்பது தொடர்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். 

ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்திலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் முள்ளிவாய்க்கால் காயங்களைப் பற்றி நிறையவே பேசுகின்றோம்; அழுகின்றோம்; அஞ்சலிக்கின்றோம்.   

ஆனால், முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல் பற்றிச் சிந்தித்திருக்கின்றோமா என்றால் அது ஏமாற்றமான பதில்களை முகத்தில் இறைக்கின்றது.   

ஒப்பாரிகள் வலி நீக்கிகள்; அதனை மறுக்க முடியாது. ஆனால், கடப்பாடுகளை மறந்துவிட்டு தொடர்ந்தும் ஒப்பாரிகளை வைப்பது மாத்திரம் தான் எமது வேலையா? அப்படியானால், தொடர்ந்தும் படுகுழிகளுக்குள் படுத்திருப்பதைப் பற்றித் தான் சிந்திக்கப் போகின்றோமா?  

இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகின்றன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கு நெருங்கிய காலம். மூன்று தசாப்த காலமாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் மக்கள், அதன் பாதிப்புகளில் இருந்து குறுகிய காலத்தில் வெளியேறிவிட முடியாது என்பது உண்மை. ஆனால், எட்டு ஆண்டுகள் என்பது குறுகிய காலம் இல்லை. ஆனால், அந்தக் காலப்பகுதியை மிகமிகக் குறுகிய காலம் மாதிரியே நாம் நம்பிக் கொண்டிருக்கின்றோம். அதுதான் இங்குள்ள பெரும் பிரச்சினை.  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கூட்டுணர்வோடு செய்வதற்கே நாங்கள் அல்லாட வேண்டியிருக்கின்றது. வடக்கு மாகாண சபை ஒரு பக்கமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்னொரு பக்கமும் சிவில் சமூக- சமய அமைப்புகள் சில இன்னொரு பக்கமுமாக நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றன.   

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான தார்மீகம் இந்த அமைப்புகள் அனைத்துக்கும் உண்டு. ஆனால், தனித் தனியாகப் பிரிந்து நிற்பதனூடாக வெளிப்படுத்தப்படும் செய்தி என்ன? கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு தேர்தல் கால அரசியல் நிகழ்வு மாதிரியே நடத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டுகளை யாரும் மறுக்க முடியாது.   

ஆனால், அதனைத் தொடர அனுமதிப்பதால், யாருக்கு என்ன இலாபம்? பெரும் கூட்டுணர்வு ஒன்று சேர்க்கப்பட வேண்டியது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் களம்.  

 ஆனால், அந்தக் களம் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்தாளப்பட்டு, கூட்டுணர்வின் அதிர்வு இல்லாமல் மலினப்படுத்தப்படுகின்றது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, வடக்கு மாகாண சபை, சிவில் சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசியத் தளத்தின் முக்கிய தரப்புகள் எல்லாம் ஒருமித்துச் சங்கமிக்க வேண்டிய கனதியை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கின்றது.   

இதை தேர்தல் அரசியல் நிகழ்வாக வடிவமைப்பதிலிருந்தும் தங்களுக்கிடையிலான போட்டி மனநிலையைத் தள்ளிவிட்டு ஒருங்கிணைவதற்குமான கடப்பாட்டை வலியுறுத்தி நிற்கின்றது.   

இரா.சம்பந்தனோ, சி.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ இன்னும் யார் யாரோ, அந்த இடத்தை நோக்கி எப்போதோ நகர்ந்து இருக்க வேண்டும்.  

 ஆனால், இம்முறையும் தனித்தும் பிரிந்தும் நின்று அஞ்சலி செலுத்தப்  போகின்றோம்; ஒருவரையொருவர் குறை கூறிக் கலையப் போகின்றோம். எப்போதுமே கூட்டுணர்வின் சக்தி வழங்கும் அதிர்வு முக்கியமானது. அது, தோல்வி மனநிலையிலிருக்கும் தமிழ்த் தேசியத் தளத்துக்கு மிகவும் அவசியமானது. அதனை, முள்ளிவாய்க்காலில் இருந்தும் உருவாக்கிக் கொள்ள முடியும்.  

போர் வெற்றிகளோ, அது வடிவமைக்கும் வெற்றி வாதமோ நீண்டு நிலைப்பதில்லை. ஆனால், கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள் தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனைத் தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும்.   

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கடந்த காலங்களில் மே மாதம் முழுவதுமாக இருந்து சில வருடங்களாக ஒரு வாரத்துக்குள் (மே 12- 18) சுருங்கிவிட்டது. இதனைப் பெரியளவில் தப்பும் சொல்ல முடியாது. 30 நாட்களில் மெல்ல மெல்லச் சேரும் அஞ்சலி செலுத்துவதற்கான கூட்டுணர்வை, ஏழு நாட்களுக்குள் ஒருங்கிணைக்கும் போது, அதன் கனதி அதிகரிக்கும்.   

ஆனால், அதனைச் செயற்படுத்தும் போது, மிகவும் திட்டமிட்ட ரீதியிலும் சித்தாந்த ரீதியிலும் தெளிவாக வடிவமைக்க வேண்டும். சில இடங்களில் அஞ்சலிச் சுடர்களை ஏற்றுவதோடு, நினைவேந்தல் வாரம் என்கிற அடையாளம் பூரணமாகிவிடாது.   

இம்முறையும் செம்மணியில் ஆரம்பித்து, பல இடங்களிலும் நினைவுச் சுடர்கள் ஏற்றப்படுகின்றன. ஆனால், அந்தச் சுடர்களை ஏற்றும்போது, அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை நூறையாவது தொட்டிருக்கின்றதா என்கிற கேள்வி எழுகின்றது.   

அதிக தருணங்களில் சுடரை ஏற்றுபவர்கள் பத்துக்கும் குறைவானவர்களாக இருக்கின்றார்கள். அதைப் படம்பிடிக்கும் ஊடகவியலாளர்களின் தொகை அதையும் தாண்டியது.  

இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் மக்களை அழைத்துவர முடியவில்லை? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிக்கப் போகின்றோம் என்று ஊடகங்களில் அறிவிப்பதோடு விடயங்கள் அப்படியே விடப்படுகின்றன. மாறாக, உள்ளூர் அமைப்புகளுக்கு ஊடாகவோ, அமைப்பு ரீதியிலோ திட்டமிட்ட ஒருங்கிணைப்பும் தெளிவு படுத்தல்களும் சாதாரண மக்கள் மத்தியில் செய்யப்படுவதில்லை.   

எப்போதுமே ஊடகங்களினூடு மாத்திரம் அரசியலையும் போராட்டங்களையும் நடத்திவிட முடியும் என்று சில தரப்புகள் நம்பிக் கொண்டிருக்கின்றன. அது, நம்பிக்கையா அல்லது களத்தில் இறங்கி வேலை செய்வதற்கான ஆர்வமின்மையா தெரியவில்லை. அதன் பிரதிபலிப்புகளையே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்துக் காட்சிகள் முன்னிறுத்துகின்றன.  

ஒரு பக்கம் ‘பேஸ்புக்’கில் சண்டை பிடித்துக் கொண்டும், உணர்ச்சி பொங்க எழுதிக் கொண்டும் இருக்கிறோம். இன்னொரு பக்கம், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக பத்திகள் எழுதப்படுகின்றன.   

ஆனால், இவையெல்லாம் மக்களை நோக்கிச் சென்றிருக்கின்றதா என்றால், இல்லை. உரையாடல்கள் என்பது சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படையானவை. ஆனால், அந்த உரையாடல்களில், பயனுள்ள பக்கங்கள் செயல் வடிவம் பெறும் போதுதான், அதன் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும்.   

ஆனால், தமிழ்த் தேசியச் சூழல் தற்போது பேசிக் கொள்ளும் அளவுக்கு செயல் வடிவங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றதா என்றால் இல்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் எதிர்கொண்டிருக்கின்றோம். அதையே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்து நாட்களும் எம்முன்னால் நிறுத்துகின்றன.  

இன்னொரு பக்கம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு சடங்காக மாத்திரம் பார்த்துக் கொள்ளும் மனநிலை புலம்பெயர் தேசத்தில் தொற்றிக் கொண்டிருக்கின்றது.   

நாம் சென்று அஞ்சலி செலுத்துவதோடு விடயங்கள் முடிந்துவிட்டன. அடுத்து மாவீரர் நாளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவோம். தமிழ்த் தேசியப் போராட்டக் கணங்கள், அவ்வளவு இலகுவான விடயங்களாக மாறிவிட்டனவா?   
அதன் எதிர்காலக் கடப்பாடுகள் பற்றிய தீர்க்கமான முடிவுகளை நோக்கி ஏன் இன்னமும் புலம்பெயர் சமூகம் நகரவில்லை. ஒப்பீட்டளவில் இந்த இடத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாகப் பெரும் ஆறுதலைப் புலம்பெயர் சமூகம் வழங்கியிருக்க வேண்டும்.   

இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகர்ந்து கொள்வதாகும்.  

முள்ளிவாய்க்காலில் நாம் செய்ய வேண்டிய சத்தியம் மிக முக்கியமானது. அதற்கு எங்களை நாங்கள் சீக்கிரமாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், காலம் எங்களை மன்னிக்காது.   

- See more at: http://www.tamilmirror.lk/196861/ம-ள-ள-வ-ய-க-க-ல-ந-ன-வ-ந-தல-க-ர-ந-ற-க-ம-கடப-ப-ட-#sthash.6coh6dV4.dpuf
Link to comment
Share on other sites

வலிகளைப் பகிர்வதுமனதுக்கு மருந்திடும்

 

போர் நிறை­வுற்று எட்டு ஆண்­டு­கள் கடந்­தோ­டி­விட்­டன ஆனா­லும் இன்­ன­மும் அந்­தப் போரின் வடுக்­க­ளோடு பலர் இன்னமும் வாழ்ந்­து­கொண்­டு­தான் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளின் வலி­மி­குந்த வாழ்வை நம்­முள் எத்­த­னை­பேர் அறிந்­து கொண்டுள்ளோம்? அல்­லது எத்­த­னை­பேர் அவர்­க­ளுக்கு ஆறு­த­லாக இருக்­கின்­றோம்?. இன்­னும் சிலர் முள்­ளி­வாய்க்­கால் நினை­வு­களைக் கதைப்­ப­தையோ பகிர்­வ­தையோ அல்­லது படைப்­பு­க­ளாக்­கு­வ­தையோ விரும்­பா­த­ வர்­க­ளா­கவே உள்­ள­னர்.

நான் கண்ட அந்­தச் சிறு­வன்

இன்று நாம் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கும் போலி­யான அமை­திச்­சூ­ழலை வைத்துக் கொண்டு முள்­ளி­வாய்க்­கால் துயரை மறைக்கவே முனை­ கின்­ற­னர். போர் நிறை­வுற்று சில ஆண்­டு­ க­ளின் பின்னர் அதற்­குள் அகப்­பட்டு மீண்­டி­ருந்த ஒரு சிறு­வ­னைச் சந்­திக்­கக் கிடைத்­தது. அவ­னது பாரத்தை இறக்கி வைப்­ப­தற்கு நான் ஏது­வா­யி­ருந்­தேன். இப்­போது அவன் சற்று அமை­தி­ய­டைந்­தி­ருக்­க­லாம்…

அது ஒரு வார­நாள். சிறு­வர்­கள் அனை­வ­ரும் பாட­சாலை சென்­று­விட்­டார்­கள். ஆனால் இன்­ன­மும் பாட­சா­லைக்­குச் சென்­றி­ருக்­கா­த­தா­லேயே அந்­தச் சிறு­வன் எனது கண்­க­ளுக்­குள்ளாய் அகப்பட்டிருந்தான். வீட்­டு­டன்­கூ­டிய தனது பெரி­யம்­மா­வின் சிறு கடைக்­குக் காவ­லாக அவன் தனி­மை­யில் இருந்­தான்.
கையில் ஒரு துடுப்­பாட்ட மட்­டை­யும் பந்­தும் வைத்­தி­ருந்­தான்.

அவ­னுக்கு 13வய­தா­கி­விட்­ட­தா­க­வும் தனது பெரி­யம்மா சந்­தைக்­குச் சென்­று­விட்­ட­தால், இன்று தனக்­குக் கடை­யைப் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்பு என்­றும் கூறி­னான். வழ­மை­யா­கப் பாட­சாலை செல்­ப­வன் என்­றும் சில சம­யங்­க­ளில் மட்­டும் இவ்­வாறு கடை­யில் நிற்­கின்­றான் என்­றும் புரிந்­தது. ஆனாலும் போரின் கோரத் தாண்­ட­வத்­தால் தனது குடும்­பத்தை இழந்து இன்று பெரி ­யம்­மா­வின் பரா­ம­ரிப்­பில் வாழ்­கின்­றான். என்­பது நான் அவ­னு­டன் உரை­யாடி ஓய்ந்த பின் வௌிப்படுத்திவிட புரிந்­தது.

அவனை ஆட்­கொண்ட வலி­கள்

முள்­ளி­வாய்க்­கால்­வரை சென்­று­வந்த அவ­னது பய­ணத்­தின் வடுக்­கள் அவன் மனதை ஆட்­கொண்­டி­ருந்­தன. எவ­ரி­ட­மா­வது அதனை கொட்­டி­வி­ட­வேண்­டு­மென்ற ஏக்­க­மும் அவ­னது கண்­ணில் தென்­பட்­டது. அவ­னது அனு­ப­வத்­தின் ரணங்­க­ளைத் தாங்­கிக்­கொள்ள நானும் என்­னைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொண்­டேன்.

அவ­னும் தாய் தந்­தை­யும், இரண்டு சகோ­த­ரி­க­ளும் முல்­லைத்­தீ­வில் வாழ்ந்து வந்­துள்­ள­னர். போர் ஆரம்­பிக்­கும்­பொ­ழுது அவ­னது ஒரு அக்கா போராட்­டத்­தில் தன்னை இணைத்­துக்­கொண்­டுள்­ளார். எப்­போ­தா­வது வீட்­டுக்கு வந்து குடும்­பத்­த­வர்­க­ளைச் சந்­தித்­துப் போவது வழக்க மாயிருந்தது. சிறிது நாள்­க­ளில் அவர் வீரச்­சா­வெய்­தி­ய­ செய்தியும் அறி­விக்­கப்­பட்­டது. அந்­தச் செய்தி அவன் குடும்­பத்­தையே சோகத்­தில் ஆழ்த்­தி­யி­ருக்­கின்­றது.இவன் தனது இரண்டு சகோ­த­ரி­க­ளி­லும் அளவுகடந்த அன்பு வைத்­தி­ருக்­கின்­றான் என்­பதை அவன் அழு­த­படியே தன்­னு­டைய அனு­ப­வத்­தைச் சொன்­ன­தி­லிருந்தே புரிந்து கொண்­டேன்.

சிறிது நேரம் மௌனித்­துப் பின்­னர் மீண்­டும் தொடர்ந்­தான். கொஞ்ச நாட்­க­ளுக்­குள் எத்­த­னையோ தட­வை­கள் அவர்­கள் இடம்­பெ­யர்ந்து பல இடங்­க­ளில் கொட்­டில்­போட்­டும், தறப்­பாள் போட்­டும் இருந்த அனு­ப­வம் அவ­னுக்கு நெருக்­கீ­டு­க­ளைக் கொடுத்­தி­ருக்­கின்­றது. கொஞ்­சம் கொஞ்­ச­மாக வீட்­டுச் சாமான்­க­ளைத் தொலைத்து இறு­தி­யில் அவர்­கள் மட்­டும் நக­ரத்­தொ­டங்­கி­யுள்­ள­னர். கடு­மை­யான எறி­க­ணைத் தாக்­கு­தல்­க­ளின் நடு­வில் பதுங்­குக் குழிக்­குள் பதுங்­கி­ய­தை­யும் பின்பு எழுந்து வேறி­டத்­துக்கு ஓடி­ய­தை­யும் தன்­னு­டைய மன­துள் ஆழப்­பு­தைத்­துக்­கொண்ட அச்ச உணர்­வாக அவன் பிர­தி­ ப­லித்­தான்.

அன்று அவ­னது தந்­தை­யும் அக்­கா­வும் சாப்­பிட ஏதா­வது கிடைக்­குமா…? என்று பார்ப்­ப­தற்கு தாயை­யும் தன்­னை­யும் விட்டு நகர்ந்த சில மணி­நே­ரத்­தின்­பின் தாயும் தந்­தை­யும் நிலத்­தில் புரண்டு அழு­த­பொ­ழுது ஏதோ நடந்­து­விட்­ட­தென்­பதை அவ­னால் உண­ர­மு­டிந்­தி­ருக்­கின்­றது. தனது அக்­காவை அப்­பா­வோடு காணா­தது அவ­னுக்கு நில­மையை உணர்த்­தி­யி­ருக்­கின்­றது.

அதன் பின்­னர் இவ­னு­டைய தந்தை தன்­னையோ தனது மிகு­திக் குடும்­பத்­தையோ பரா­ம­ரிக்­கவோ பாது­காக்­கவோ முடி­யா­த­வ­ராய் பிதற்­றிக்­கொண்டு திரிய ஆரம்­பித்­துள்­ளார். இவ்­வ­ளவு அனு­ப­வங்­க­ளை­யும் சொன்­ன­பின் அரு­கி­லி­ருந்த அத்­தி­பா­ரக் கட்­டில் போய் அமர்ந்­தான். நானும் அவ­ன­ரு­கில் அமர்ந்­தேன். அவ­னது இயல்­பான முகத்தை என்­னால் காண­மு­டி­ய­வில்லை. அவர்­க­ளின் பாசம் அவனை ஆழ­மா­கப் பாதித்­தி­ருப்­பதை உணர்ந்­தேன்.

அவன் சொல்­வதை ஒத்­து­ணர்­வோடு கேட்­ப­தற்கு மீண்­டும் என்­னைத் திடப்­ப­டுத்­தி­னேன். உண­வுத்­தட்­டுப்­பாடு அவர்­களை வாட்­டி­யது தந்­தை­யும் அதனை உணர்ந்து செயற்­பட முடி­யாத மன­நோ­யா­ளி­யா­கி­விட்­டார். மிஞ்­சிய அவ­னது குடும்­பத்­தில் அவ­னுக்­கு­மட்­டும் இருந்­து­விட்டு எப்­போ­தா­வது உணவு கிடைத்­தது. எதிர்­பா­ராத வித­மாக மீண்­டும் அவனை இன்­னோர் சோகம் தாக்­கி­யது. அது அவ­னது தந்­தை­யின் இழப்பு.

தந்தை அவர்­க­ளின் கட்­டுப்­பாட்­டில் இருக்­க­வில்லை அடிக்­கடி வில­கித் தனது கால்­போன திசைக்கு அலைந்­து­தி­ரிய ஆரம்­பித்­தார். அவ­ரைத்­தே­டிப் பிடித்­து­வ­ரு­வ­தும் அவரை கண்­கா­ணிப்­ப­துமே இவளது கடமையாவி ருந்தது. அவ்­வாறு வில­கிச் சென்­ற­வரை இறு­தி­யாக அவர்­க­ளது உற­வி ­னர்­கள் இறந்த உட­லா­கக் கொண்­டு­வந்­த­னர். பசி­யின் கொடு­மை­யா­லும் மன­நோ­யா­லும் கறை­யான்­புற்று மண்ணை எடுத்து உண்­டி­ருக்­க­லாம் என்று உற­வி­னர்­கள் கூறி­யுள்­ள ­னர் (வாயில் நிறைய மண் இருந்­துள்­ளது).

இழப்­புக்­க­ளால் இப்­போ­தும் அவன் தனி­மை­யில்

இப்­போது அவ­னும் தாயும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­னர். உற­வி­னர்­க­ளின் உத­வி­யோடு இரு­வ­ரும் நகர்ந்­த­னர்.
இறு­தி­நாட்­கள் நெருங்­கிக்­கொண்­டி­ருந்­த­வேளை சர­மா­ரி­யான எறி­க­ணைத்­தாக்­கு­தல்­கள் எங்கும் பல உயிர்­கள் காவு­கொள்­ளப்­பட்­டன. பல குருதி தோய்ந்த உடல்­கள் அவ­னது பறி­போன தந்தை, அக்­காக்­களை அடிக்­கடி ஞாப­கப்­ப­டுத்தி மன­தில் வடுக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

உற­வி­ன­னர்­க­ளோடு தாயும் தானும் நடை­பி­ணங்­க­ளாக செய்­வ­த­றி­யாது அலைந்த நாட்­கள் அவ­னது பகிர்­வில் போது ஏற்­பட்ட தடு­மாற்­றத்­தில் புரிந்­தது. அவ­னி­ட­மி­ருந்து வார்த்­தை­கள்­வர சற்று நேர­மெ­டுத்­துக்­கொண்­ட­ன. பின் மெல்­லத் தான் தேக்­கி­வைத்த ஆற்­ற­மு­டி­யாத வேத­னையை பகி­ரத் தொடங்­கி­னான்.

முள்­ளி­வாய்க்­கால் முள்­வே­லிக்­குள் அவன் தன்­னு­டைய தாயோடு கழித்த நாள்கள் தான் அவை. தாய் இவ­னை­யா­வது காப்­பாற்­றி­வி­ட­வேண்­டும் என்­ப­தில் கவ­ன­மாய் இருந்­துள்­ளார். எப்­பொ­ழு­தும் தனது கைக்­குள் அவனை வைத்­தி­ருந்­துள்­ளார். எறி­க­ணை­கள் தொடர்­நது வீழ்ந்து வெடித்­துக்­கொண்­டி­ருக்க தாய் இவனை இழுத்து ஒரு பதுங்­குக் குழிக்­குள் தள்­ளி­விட்­டார். அதற்­குள் இட­மில்­லா­த­தால் தான் பதுங்­கு குழி­யின் விளிம்­பிலேயே இருந்­து­கொண்­டார்.

வெடி­யோசை ஓய்ந்­த­போது வெளியே எட்­டிப்­பார்த்­த­வன் அதிர்ந்­து­போ­னான். இறு­தி­வரை தன்­னைப் பாது­காக்­கப் போரா­டிய தாய் குரு­தி­வெள்­ளத் தில் கிடந்­த­கோ­லம் அவனை வாழ்­வின் விரக்தி நிலைக்­குக் கொண்­டு­போ­யி­ருக்­கின்­றது. அவ­னது உற­வி­னர்­கள் அவனை மீட்­டு­வந்து தற்­பொ­ழுது அவ­னது பெரி­யம்­மா­வு­டன் இணைத்­து­விட்­டுள்­ள­னர். அவ­னது இந்த அனு­ப­வம் என் வாழ்­வில் மறக்­க­மு­டி­யாத ஒன்­றா­கவே இருந்­தது. இப்­போது அவ­னு­டைய மனப்­பா­ரம் சற்றே குறைந்­தி­ருப்­ப­தை­யும் நான் உணர்­கின்­றேன்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தங்­க­ளு­டைய வலி­களை உண­ர­மு­டிந்­த­வர்­க­ளுக்கு உணர்த்­து­வது அவ­சி­யம். இந்­தப் பொறுப்பு எனக்­கு­மட்­டு­மு­ரி­ய­தல்ல உங்­கள் அனை­வ­ரு மான கட­மை­யும்­கூட.

http://uthayandaily.com/story/3285.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.